ATM Tamil Romantic Novels

பிறை முகமதில் வீழ்ந்தேனடி -20

அத்தியாயம் 20  

 

 

வூர்ர்ர்ர் என்று பரத்தின் கைகளில் கார் பறந்தது…

 

அனா ரேயானோடு மெக்ஸிக்கோ செல்லப் போவதாக அவளை வளர்த்த அனாதை விடுதியின் உரிமையாளரால் தெரிய வந்ததும்… நொடியும் தாமதிக்காமல் விரைந்தான்…

 

நமக்கு தான் ஏற்கனவே தெரியுமே கண்மண் தெரியாமல் வண்டி ஓட்டுவதில் பரத் வித்தகன் என்று பாவம் அவனை பற்றித் தெரியாமல் நம்பி இரண்டு ஜீவன்கள் பொறிக்குள் மாட்டிய எலியாக மாட்டிக்கொண்டு உருண்டு தவித்தனர்…

 

வேற யார் கிரிதரனும் அவன் சக தர்மினியும் அனாவை தேடுவதற்கு உதவி செய்ய வான்டெட் ஆக வந்து மாட்டிய பலியாகும் அப்பாவி ஜீவன்கள்…

 

“ஐயோ கடவுளே இவன் குடும்பம் ஒன்னு சேர என் குடும்பத்தை காவு வாங்காம விட மாட்டான் போலயே…டேய் கண்ணா ராசா வண்டிய ஒரு ரெண்டு செகண்ட் ஓரம் கட்டினா கூட போதும்டா நானும் இவளும் இப்படியே குதிச்சு பொடி நடையா கூட போய்க்குவோம்… கொஞ்சம் கருணை காட்டுடா” என கிரிதரன் முன்னால் உட்கார்ந்துக் கொண்டு கெஞ்ச…

 

பரத் கைகளில் தாறுமாறாக ஓடிய காரின் முன்னால் வேகமாக ட்ரக் ஒன்று மோத வர… 

 

“டேய் எதிர்ல வண்டிஇஇஇ…” என மற்றவர்கள் பதற… எதிரில் வந்த வண்டியை மோத விடாமல் ஒடித்து திருப்பியதில் வண்டி குலுங்கி விட…

 

“அடேய் அவசரத்துக்கு பொறந்தவனே கொஞ்சம் மெதுவா தான் ஓட்டி தொலையேன்டா” என கத்திய கிரிதரனை டீலில் விட்டு திலோத்தமாவிடம் திரும்பியவன் 

 

“ஹே திலோ ஆர் யூ ஓகே… இங்க பக்கத்துல ஒரு ஹாஸ்பிடல் இருக்கு அங்க போலாமா…!!” என பதட்டத்துடன் கேட்டான் பரத்… அதற்கு காரணம் அவள் வயிற்றில் இருக்கும் நான்கு மாத கருவால்… அதிகம் அவளை அலைக்கழிக்க வேண்டாம் என்பதால் இந்தியாவிற்கு கூட அனுப்பாமல் கிரி தன்னுடனே வைத்து இருக்கிறான்… இந்த நேரத்தில் இப்படி அவள் பயணிப்பது யாருக்கும் விருப்பம் இல்லை தான்… சொன்னால் எங்கே கேட்கிறாள்…

 

“அதெல்லாம் எனக்கு ஒன்னும் இல்லை பரத் அண்ணா நீங்க போங்க அனா ஃபிலைட் ஏறுவதற்குள் பிடிச்சாகணும் சீக்கிரம் போங்க” என திலோ உந்த என்ன சொன்னாலும் கேட்க போவதில்லை என்பதால்… வண்டியை மீண்டும் அவசரம் அவசரமாக ஓட்டி வந்து ஏர்போர்ட் முன்னாடி நிறுத்தியவன் வண்டியை அப்படியே விட்டு விட்டு உள்ளே ஓடிச் சென்று அனா டிபார்ச்சர் ஆகும் முன் அவளையும் ரேயானையும் அழைத்து வந்து விட்டான்…

 

பரத்தோடு செல்ல மறுத்து அனா ரோட்டிலே முரண்டு செய்ய…

 

இது சரிப்பட்டு வராது என்று உணர்ந்தவன் “டேய் மச்சான் கொஞ்சம் கீழ இறங்கு திலோ நீயும் தான்…

 

மச்சான் ரேயானையும் திலோவையும் கூட்டிக்கிட்டு நீ வீட்டுக்கு போ… நான் அப்புறம் வரேன்…” என்று விட்டு ரேயானிடம் வந்தவன்…

 

“ரிஷி மை பாய் அங்கிள் கூட சமத்தா இருங்க அப்பாவும் அம்மாவும் சீக்கிரம் வந்திடுவோம்…” என்று அவன் நெற்றியில் முத்தம் வைத்து அனுப்ப…

 

“டாட்…” என்று பரத்தின் கையை பிடித்து நிறுத்தியவன்…

 

அவன் என்ன என்பது போல் பார்க்க…

 

“அம்மா கூட சண்டை போடாதீங்க அம்மா பாவம்” என்று மழலையாக சொல்ல… இந்த வயதில் இத்தனை பக்குவம் பெற எத்தனை துன்பங்களை பார்த்து இருப்பான் என்று நினைக்கும் போதே தன்னை அறியாமல் ஒரு பாரம் கூடி போனது பரத் மனதில்…

 

“சண்டை போட மாட்டேன் ப்ராமிஸ்” என்று மகன் தலையை வாஞ்சையாக கோதி விட்டவன் அவர்களிடம் இருந்து விடை பெற்றுச் செல்ல…

 

“டேய் மச்சான் எங்களை விட்டு தனியா எங்கடா போற…??” என கிரிதரன் கேட்டதற்கு…

 

“உனக்கு மருமகளை ரெடி பண்ண போறேன்” என்று கண்ணடித்து விட்டு போக…

 

“அடப்பாவி…” என்று வாய் பிளந்து நின்றவன் அருகே ரேயானோடு திலோ வந்து நிற்க…

 

“ம்ஹும் அவனுக்கு அமையுது எனக்கு ம்க்கும்” என்று லேசாக மேடிட்டா வயிறுடன் நிற்கும் மனைவியை பார்த்து ஆதங்கமாக சொல்ல…

 

“சின்னப் பையன் முன்னாடி என்ன பேச்சு அத்தான் இது…”

 

“அடி போடி அவனும் பையன் தான் என் கஷ்டம் அவனுக்கு புரியாமலா போய்டும் என்னடா மருமகனே வாடா உங்க அப்பா உனக்கு அடுத்த தம்பி பாப்பா ரெடி பண்றதுக்குள்ள உனக்கு ஒரு ஜோடியை நாம தேடுவோம்… உனக்கு இந்த வெள்ளைக்காரிங்க வேணாம்டா மாப்பிள்ளை இந்த மாமா உனக்கு ஒரு நல்ல தமிழ் பொண்ணா பார்த்து கட்டி வைக்கிறேன் சரியா… ஆமாம் உனக்கு பொண்ணுங்களை உஷார் பண்றது எப்படினு நான் சொல்லி தரேன் வா…” என்றவாறு ரேயானை அழைத்துச் செல்ல…

 

“விவஸ்த்தை கெட்ட மனுஷன்… சின்னப் பையனையும் சேர்த்து கெடுத்துடுவாரு போல… அத்தான் நில்லுங்க நானும் வரேன்…” என்று அவன் பின்னாலே திலோவும் சென்றாள்…

 

*****

 

பசுமை அடர்ந்த அந்த அமைதியான பள்ளத்தாக்கு… அதில் புன்னகையுடன் பூத்து குலுங்கும் டேன்டலின் மலர்கள்… காற்றின் மெல்லிசைக்கு ஏற்ப தலையை அசைத்து ரசித்தன கை தேர்ந்த ரசிகனாக…

 

புல் தரையில் பாதச் சுவடுகள் பதிய நடந்துச் சென்றாள் அனா அவள் பின்னாலே பரத்தும் செல்ல… அருகருகே இருவரின் கால் தடமும் ஜோடியாக பதிந்தது தான் எத்தனை பொருத்தம்…

 

அடர்ந்த வானம் கீழே விரிந்த மஞ்சள் சோலையில் வந்தாடும் பட்டாம் பூச்சிகளை ரசிக்க ஓர் ரசனை படைத்த உள்ளம் நிச்சயம் வேண்டும்…

 

அனாவின் தோற்றம் இயற்கையை ரசிப்பது போல் இருந்தாலும்… அவளது வெறித்த விழிகள் வேறு கதை சொன்னது…

 

அவளருகில் வந்து நின்ற பரத் பேச வாய் எடுக்கும் முன்… 

 

“பரத் ப்ளீஸ் நீங்க என்னை காதலிச்சீங்க நான் உங்களை அளவுக்கு அதிகமாகவே காதலிச்சேன்… ஆனால் இந்த காதல் நம்ம ரெண்டு பேருக்குமே வலியையும் வேதனையையும் மட்டும் தான் கொடுத்துச்சு… போதும் பரத் இந்த காதலால் நாம இழந்தது போதும்… இதுக்கு மேலையாவது நாம நமக்காக வாழ்வோம் வேண்டாம் இந்த காதலே நமக்கு வேண்டாம்… அதுனால நாம பிரி…. ம்ம்ம்” என அதற்கு மேல் அனாவை பேச விடாமல் அவள் அருகில் வந்து அவள் இதழ் மேல் ஒற்றை விரலை வைத்து நிறுத்தியவன்…

 

“ஷ் பேசாதே… பொதுவா எல்லாரும் என்னை தான் அவசரக்காரன்னு சொல்லுவாங்க அனா… ஆனால் இன்னைக்கு நீ என்னை விட ரொம்ப அவசரப் படுற…

 

உன்கிட்ட எதை சொல்லி எப்படி புரிய வைக்க போறேன்னு தெரியல… 

 

என்னோட சின்ன வயசுல இருந்தே அடுத்தவங்க விருப்பப்படி தான் வாழ ஆரம்பிச்சேன்…ஒரு வயசு வரைக்குமே எனக்குனு ஒரு மனசு இருக்கு அதுக்கு என்ன ஆசை இருக்குனு கூட எனக்கு தெரியாது… அதுநாள் வரைக்குமே நான் மற்றவங்களோட கனவையும் கெளரவத்தையும் செருக்கையும் மட்டும் தான் சுமந்து வாழ்ந்துட்டு இருந்தேன்…

 

எப்போ நான் உன்னை முதல் முறை பார்த்தேனோ அன்னைக்கு வந்தது என் மனசுல ஆசை எனக்காக ஒரு வாழ்க்கையை வாழணும் என்கிற ஆசை… நான் சொன்னா நம்புவியா தெரியல…

 

உன்னை பார்த்த நொடி எனக்குள் தோன்றிய ஒவ்வொரு உணர்வும் வேற எந்த பொண்ணுக் கிட்டயும் தோன்றியதே இல்லை… எது உன்னை என்கிட்ட ஈர்த்தது தெரியல உன்னோட அடக்கமான அமைதி குணமா இல்லை எளிமையான தோற்றமா என்னவோ ஆனால் உன் முகத்தை விட்டு என் பார்வை நொடிக் கூட அகலவே இல்லை…

 

என்னைக்கு இந்த பிறை முகத்தை பார்த்தேனோ அன்று விழுந்தது என்னோட நான் என்ற கர்வம்…

 

நீ காணாமல் போன போது தான் தெரிஞ்சது நீ இல்லா நொடியும் நரகம் தான்னு… ஒவ்வொரு நாள் உன்னை தேடி வரும் போதெல்லாம் ஒரு முறையாவது உன்னை பார்த்து விட மாட்டோமானு எவ்வளவு தவிச்சு இருப்பேன் தெரியுமா…

 

எரிக் உன்னை பற்றி தப்பா சொன்னப்ப கூட நான் நம்பலை… ஆனால் அவன் எப்போ நம்ம ரெண்டு பேருக்கு மட்டுமே தெரிஞ்ச என் அந்தரங்கத்தை பற்றி சொன்னானோ அப்போவே எனக்குள்ள இருந்த குற்ற உணர்வு தான் உன்னை விட்டு போக காரணமா இருந்தது பின்னாடி யோசிக்கும் போது தான் தெரிஞ்சது…

 

ஆனால் உன்னை விட்டு வந்தேனே ஒழிய என் மனசு முழுக்க உன் கிட்டையே தான் இருந்தது… உன்னை விட்டு விலகணும்னு நினைச்ச மாதிரி உன்னை மறக்கணும்னு ஒருநாளும் நான் நினைச்சதே இல்லை… உன் நினைவுகளோடவே வாழ்ந்திடலாம்னு தான் முடிவு பண்ணி இருந்தேன்… நான் திலோவை ஏன் தெரியுமா கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சேன் அதுவும் உனக்காக தான்…

 

என்ன அப்படி பார்க்கிற…?? உன்னால நம்ப முடியலையா ஆனாலும் அது நிஜம்” என்று கேலியாக பரத் சொல்லவும்…

 

ஊடல் கொண்டு விலகிச் சென்றது பெண் மான்…

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top