ATM Tamil Romantic Novels

மோகவிழியால் எனை தைக்காதே

14. மோகவிழியால் எனை தைக்காதே 
 
கலைவாணியும், பிரபுவும் தங்கமீனாவை பார்க்க சென்றுவிட ஐ.சி.யுவிற்குள் போன ஈஸ்வரியை கண்ட அருள் புருவம் சுருக்கி.. “என்னம்மா இந்த நேரத்துல வந்திருக்க.. என் அக்காவும், பிரபுவும் எங்க வெளியில இருக்காங்களா” அவனுக்கு, அவர்கள் பணம் புரட்ட எங்காவது போயிருப்பாங்களா.. நான் தான் கிருஷ்ணா டாக்டரிடம் சொல்லியிருந்தேனே பில் நாளைக்கு கட்டுவதாக.. என்று நினைத்து கலைவாணியையும், பிரபுவையும் கேட்க.
 
முதலில் ஈஸ்வரிக்கு என்ன சொல்வது என்று தடுமாற்றமாக இருந்தது.. அடுத்த நொடியே “உங்கக்கா காலையில வந்தாங்க.. நீங்க அசந்து தூங்கிட்டிருந்தீங்க.. அவங்க வரும் போதே ரொம்ப சோர்வா இருந்தாங்க.. ஏன்னு கேட்டேன்.. நைட் புல்லா என் தம்பி நியாபகமா இருந்துச்சு தூங்கம் வரலம்மா.. இப்போ ரொம்ப தலைவலியா இருக்குன்னு சொன்னாங்க” 
 
நான் தான் அவங்கள வீட்டுக்கு கட்டாயப்படுத்தி போக வைச்சேன் சார்.. ஆனா உங்கக்காவ சமானியத்துல என்னால அனுப்ப முடியல.. என்று கட்டுக்கதையாக கூறினாள்.. இதற்கே அவளுக்கு மூச்சு முட்டியது.. பேசி முடித்ததும் திரும்பி நின்று அப்பாடா.. என்று கண்ணை மூடிதிறந்து பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.
 
இந்தப் பொண்ணு என்ன தீடீரென திரும்பி நின்னிடுச்சு.. என்ன ஆச்சு என்று புருவம் சுருக்கிப் பார்க்க.. ஈஸ்வரியோ அடுத்து என்ன எந்த கேள்வியும் கேட்கக் கூடாது ஆண்டவா.. என்னால இதுக்கு மேல பொய் பேச முடியாது.. என்று கழுத்தில் போட்டிருந்த மெல்லிய டாலரை திருகிக்கொண்டிருந்தாள்.
 
ஆனால் அருள்.. “பிரபு” என்று ஆரம்பிக்க.. 
 
அச்சோ பிள்ளையாராப்பா என்னைக் காப்பாத்து என்று கண்ணை மூட..
 
அறைக்கதவை திறந்து கொண்டு டாக்டர் ரமேஷ் வர.. ஸ்ஸ்ப்பா என்று நிம்மதிகொண்டாள் ஈஸ்வரி.
 
அருளை பரிசோதித்த ரமேஷ் “இப்ப எப்படி இருக்கீங்க அருள்”.. என்று அவன் நாடி பிடித்து செக் பண்ணிக்கொண்டே கேட்க..
“லேசா பெயின் இருக்கு டாக்டர்”
 
“காயம் கொஞ்சம் ஆழம் அருள்.. ஒருவாரம் ரெஸ்ட் எடுங்க சரியாகிடும்” 
 
“சார் இவருக்கு என்ன ஆகாரம் கொடுக்கலாம்” என்று ரமேஷ் முன் நின்று ஈஸ்வரி கேட்க.
 
“இட்லி கொடுங்கம்மா மதியம் காரம் இல்லாத சாப்பாடு கொடுங்க.. எதுவும் ஹெவியா வேணாம்” என்று கூறிச்சென்றான் ரமேஷ்.
 
“நீ டிராவல்ஸ்க்கு கிளம்புமா.. பிரபு எங்கயிருக்கான் அவன இட்லி வாங்கிட்டு வரச்சொல்லுறேன்” என்று எழுந்து உட்காரப் பார்க்க.
 
அருள் எழுந்து உட்கார தடுமாற.. அவனை தாங்கிப்பிடித்து “பார்த்துங்க” என்று அவன் தோளை தொட்டு அணைத்து பிடித்திருக்க.. இருவரது முகம் நெருங்கி இருக்க..  சங்கடமாக இருந்தது இருவருக்கும்.. தங்கமீனாவையே இன்னும் அருள் உரிமையாக தொடவில்லை.. அப்படியிருக்கும்போது பார்த்து நாலு நாள் கூட ஆகாத பெண் தன்னை தொடும் பொழுது அவனுக்கும் சங்கடம் ஏற்பட.. “நீ விடுமா நான் பார்த்துக்குறேன். பிரபு வெளியே எங்காவது போயிருக்கானா” என்று அருள் அதையே அவளிடம் திரும்பத் திரும்ப கேட்டிருக்க.
 
“சார் பிரபு காலேஜ் வரை போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போனாரு” என்று எதையாவது உளறி வைத்தாள்.. பிரபு காலேஜ் போறானா என்று கூட அவளுக்குத் தெரியாது.. குத்து மதிப்பாக அவனிடம் கூற.
 
“ஓ அப்ப சரி” என்று தன் பக்கத்திலிருந்த போனை எடுத்து பழனிக்கு கூப்பிட்டான்.
 
“சொல்லுங்கண்ணே.. இப்ப உடம்பு எப்படியிருக்கு”
 
“பழனி நீ எங்க இருக்க.. எனக்கு  இட்லி வாங்கிட்டு ஹாஸ்பிடல் வர முடியுமா?
 
“அண்ணே நான் சவாரி வந்துட்டேன்.. கஸ்டமர்க்கு வெயிட் பண்ணுறேன்” அவன் தயங்கி கூற
 
“சரி பழனி.. நீ சவாரி முடிச்சுட்டு ஹாஸ்பிட்டலுக்கு வந்துடு” என்றான் அருள்.
 
“சரி அண்ணே வந்துடறேன்” என்று போனை அணைத்துவிட்டான்.
ஈஸ்வரி இன்று வீட்டில காலை உணவுக்கு இட்லி தான் அவித்திருந்தாள்..  காலையில் சாப்பிட நேரம் இல்லாததால் மூணு இட்லியை மட்டும் டிபனில் போட்டு எடுத்து வந்திருந்தாள். இப்போது அருளிற்று சாப்பிட கொடுக்க வசதியாய் போனது.. 
 
டிபன் பாக்ஸை திறந்து “அருள் சார் நான் இன்னிக்கு இட்லி தான் கொண்டு வந்தேன். இதை சாப்பிடுங்க.. பழனி வந்ததும் மதியம் சாப்பாடு வேணா கடையில வாங்கிக்கிலாம்” என்று கூற.
 
“நீ சாப்பிட்டியாம்மா”
 
ஏனோ சாப்பிட்டேன் என்று அவளால் பொய் உரைக்கமுடியவில்லை அவனிடம்.
 
“இல்லை” என்று அவள் தலையாட்ட..
 
“அப்புறம் எனக்கு இட்லிய கொடுத்துட்டு நீ பட்டினி கிடக்க போறியா” என தன் வாலட்டிலிருந்து பணம் எடுத்து அவள் கையில் கொடுக்க.. 
 
“எனக்கு இப்ப பசிக்கல..அப்புறம் வேணா உங்கிட்ட காசு வாங்கிட்டுப்போறேனே” என தயங்கிப்பேச.
 
“ம்ப்ச்.. இப்ப நீ இந்த காசை வாங்கலைனா உன்னோட இட்லியை நான் சாப்பிட மாட்டேன் பார்த்துக்கோ”
 
அவன் கொடுத்த காசை வாங்கிக் கொண்டு.. “இப்ப சாப்பிடுங்க” என்று டிபன் பாக்ஸை அவனிடம் கொடுக்க.. வலது கையில் வென்பிளான் போட்டிருக்க அவனால் டிபன் பாக்ஸை பிடிக்க முடியாமல் தடுமாற.. அருள் சிரமப்படுவதைக் கண்டு “சார் உங்களுக்கு சிரமம் இல்லைனா நான் ஊட்டவா?” என்று அவனை கண்கள் படபடக்க கேட்டாள்.
 
ஒருநிமிடம் அவள் பார்வையில் தான் கட்டுண்டுதான் போனான்.. ஏன் இவளப்பார்த்தா நமக்கு ஹார்மோன்ஸ் எகிறி குதிக்குது.. நம்ம தங்காவ பார்த்தா வேற மாறித் தோணுமே.. இவளப்பார்த்தா எனக்கு வேற மாதிரி ஆகுதே.. என்று காலை நீட்டி சமமாக உட்கார்ந்தான்.
 
“சார்.. என்று நான் ஊட்டவா” என்றாள். 
 
“ம்ம்” ஊட்டுங்க என்றதும். 
 
அவளோ இட்லியை துண்டு துண்டாக பிய்த்துப்போட்டு சாம்பாரில் நனைத்து ஸ்பூன் எடுத்து இட்லியை ஊட்டப்போக.
 
அவனோ “என்னது இது உங்க ஊர்ல இட்லியை ஸ்பூன்ல சாப்பிடுவாங்களா”
 
“இல்ல.. நான் உங்களை தாங்கிப்பிடிச்சதும் உங்க முகம் ஒரு மாறி போச்சு.. இப்ப இட்லியை உங்க உதடு தொட்டு கொடுக்கணும்.. எனக்கும் சங்கடமாயிருக்கு.. அதான் ஸ்பூன்ல ஊட்டுறேன்”
 
அருளிற்கும், அவள் சொல்வது சரியென்று பட “சரி ஊட்டு” என்று வாயைத் திறக்க.
 
இட்லியை ஊட்டி முடித்து தண்ணீரை எடுத்துக்கொடுக்க அதற்கும் அவன் சிரமப்பட.. அவளே அவனுக்கு தண்ணீரை குடிக்க உதவி செய்தாள்.
 
“உனக்கு ரொம்ப சிரமம் கொடுக்கறேன்ல”
 
“இல்லங்க சார் ஒருத்தருக்கு உதவி செய்தா.. நாம கஷ்டப்படும்போது நமக்கும் நாலு பேர் உதவிசெய்வாங்க” என்று எங்கப்பா எனக்கு சொல்லி கொடுத்துருக்காரு அவள் லெக்சர் கொடுக்க.
 
“ம்ம்.. புத்திசாலியாத்தான் பேசுற.. சரி நீ கிளம்புமா.. நான் பார்த்துக்குறேன்” என்று அவளை அனுப்புவதில் குறியாக இருக்க.
 
“உங்க அக்கா வரும்வரை நான் இங்க இருக்கேன்” என்று அருள் சாப்பிட வேண்டிய மாத்திரைகளை நர்ஸ் எடுத்துக்கொடுத்துவிட்டு போயிருக்க.. அந்த மாத்திரையை அருளிற்கு கொடுத்தாள்… 
 
அருள் மாத்திரையை சாப்பிட்ட பிறகு சிறிது தலைவலிப்பது போலிருக்க.. வலியில் லேசாக முகம் நெற்றி சுருக்க.. 
 
அவன் நெற்றி சுருக்கத்தைக் கண்டு பதட்டப்பட்டவள்.. “ஏன் சார் ரொம்ப தலைவலிக்குதா.. நான் வேணா டாக்டர கூப்பிடட்டுமா” என்று வெளியே போகத் திரும்ப.
 
இந்தப் பொண்ணு என்ன.. என் மேல இவ்ளோ அக்கறையாயிருக்கு என்று எண்ணியவன்.. 
 
“ஈஸ்வரி இப்ப வலியில்லமா.. நீ கொஞ்ச நேரம் பதட்டப்படாம சேர்ல உட்காரும்மா” என்றதும்.
 
ஷாலை திருகிக்கொண்டு சேரில் அமர்ந்தாள்.. இதற்கு மேல் இருவரிடமும் பேசுவதற்கு ஒன்றுமில்லை.. அருள் கண்ணை மூடி தூங்குவது போல் படுத்துக்கொண்டான்.
 
ஈஸ்வரி போனை எடுத்து நோண்டிக்கொண்டிருக்க.. அவளது அம்மா போன் செய்தார்.
 
என்னமோ ஏதோவென்று போனை எடுத்து “சொல்லுங்கம்மா”என்றாள்.
 
“ஈஸ்வரி.. எனக்கு நெஞ்சு அடைக்கிறது போல இருக்கு.. கொஞ்சம் வீட்டுக்கு வரியா”
 
“ஹா அம்மா இதோ இன்னும் 10 நிமிசத்துல நான் வந்துடறேன்” என்று போனை வைத்தாள்.
 
அருள்.. ஈஸ்வரி பதறி பேசும் போதே கண்விழித்துவிட்டான்.
 
“என்னாச்சு ஈஸ்வரி”
 
“சா. சார் அம்மாக்கு உடம்பு சரியில்லை”
 
“நீ கிளம்பும்மா நான் பார்த்துக்குறேன்.. ஆட்டோல போம்மா” என்று வாலெட்டிலிருந்து பணம் எடுத்து அவளுக்கு கொடுக்க.
 
அவள் அதை மறுத்துவிட.. “சம்பளத்துல பிடிச்சிக்குறேன்” என்று சொல்ல ஈஸ்வரி அவன் கொடுத்த பணத்தை வாங்கினாள்.. இருவருக்கும் முதலாளி தொழிலாளி என்ற உறவேயிருக்க அவனிடம் உரிமையாக பணம் வாங்க ஈஸ்வரி சங்கடப்பட்டாள்.
 
ஈஸ்வரிக்கு, அருளை விட்டு போகவே மனம் இல்லை.. அம்மாவை போய் பார்க்க வேண்டுமே? இன்று பக்கத்து வீட்டு பாட்டியும் அவரது பேத்தியை பார்க்க சென்றுவிட்டார்.. அவர் இருந்தால் கூட அம்மாவை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வரச்சொல்லியிருக்கலாம்.. என்று நினைத்துக்கொண்டே ஐ.சி.யுவை விட்டு வெளியே வந்தாள்.. எதிரே வந்த நர்ஸிடம் “சிஸ்டர் அருள் சார் பக்கத்துல யாரும் இப்ப இல்ல.. நானும் போக வேண்டிய சூழ்நிலை.. அவரை கொஞ்சம் பார்த்துக்குங்க” என்று அருள் மீது அக்கறையாய் பேச.
 
“நீங்க போங்கம்மா நான் பார்த்துக்குறேன்.. அது என் டியூட்டியும் கூட” என்று சிரித்தபடி கூறினார்.. ஐ.சி.யுவை திரும்பி திரும்பி பார்த்தபடி ஹாஸ்பிட்டலை விட்டு வெளியே வந்தாள்.. அம்மாவ இந்த ஹாஸ்பிட்டலுக்கே கூட்டிட்டு வரணும் என்று எண்ணி ஆட்டோ பிடித்து வீட்டுக்குச் சென்றாள்.. ஆட்டோ டிரைவரிடம் “அண்ணா ஐஞ்சு நிமிஷம் இருங்க நான் வந்துடறேன்” என்று வீட்டுக்குள் போக.
 
அங்கே ஈஸ்வரியின் அம்மா பரிமளா மூச்சு விட சிரமப்பட்டுக்கொண்டிருந்தாள்.. “அம்மா என்னாச்சு” என்று அவருக்கு இன்கேலரை எடுத்து பரிமளாவுக்கு புஷ் பண்ணக் கொடுக்க அவரும் இன்கேலரை வாங்கி வாய்க்குள் புஷ் பண்ண இப்போது மூச்சுவிட சிரமம் குறைந்தது.
 
“அம்மா வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம்”
 
“வீண் செலவு எதுக்கும்மா இப்ப கொஞ்சம் மூச்சு விட முடியுது.. என்னால நீ சிரமப்படறது தாங்கமுடியலை ஈஸ்வரி.. எப்படியும் நான் இன்னும் கொஞ்ச நாள்ல மேல போக போறேன்.. உன்ன ஒருத்தன் கையில பிடிச்சு கொடுத்துட்டு போயிட்டா நிம்மதியாயிருப்பேன்” என்று பரிமளா கண்ணீர்விட.. அவருக்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டது.
 
 
“என்னை நினைச்சு கவலைப்படாதம்மா.. அப்பா எனக்கு துணையாயிருப்பாரு.. இப்ப ஹாஸ்பிட்டலுக்கு நீ வர” என்று அவரை கைப்பிடித்து கூட்டிட்டு வெளியே வர.. ஆட்டோகாரர் “அம்மா சீக்கிரம் வாங்க” என்று பறக்க.
 
“இதோ வரோம் சார்” என்று ஆட்டோவில் ஏறினர் இருவரும்.
 
கலைவாணி காரில் வரும்பொழுது “பாவி மக இப்படி பண்ணிட்டாளே” என்று அழுது கரைந்து “அவ நல்லாவேயிருக்க மாட்டா” என்று தங்கமீனாவுக்கு சாபம் விட்டுக்கொண்டே வர.. 
 
“ம்மா அக்காவுக்கு சாபம் கொடுக்காத.. அந்த டாக்டர்தான் அக்காவ கட்டாயப்படுத்தி தாலிகட்டினாரு.. அவ என்ன பண்ணுவா” என்று தங்கமீனாவுக்கு பரிந்து பேசினான் பிரபு.
 
“டேய் இனிமேல் உன் அக்காவ பத்தி என்கிட்ட ஒருவார்த்தை பேசக்கூடாது” 
 
கோழி மிதிச்சு குஞ்சு சாகாது என்ற பழமொழி உண்டு.. அதுபோல கலைவாணியின் சாபம் தங்கமீனாவை ஒன்றும் செய்யாது.
 
மடிந்து விழுந்த தங்கமீனா எழும்பவில்லை.. அவளுக்கு கலைவாணி பேசிவிட்டு போனதில் மயக்கமே வந்துவிட்டது.. அனைவரும் சென்று விட கிருஷ்ணாவும், குருமூர்த்தியும் நின்றிருந்தனர்.
 
“தம்பி நீ செய்த தப்பு இப்ப எந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கு பார்த்தியா” என்று சோபாவில் அமர்ந்தார். 
 
குருமூர்த்தி பேச்சு கிருஷ்ணாவின் காதில் விழவில்லை.. தங்கமீனாவின் அருகே சென்று அவள் தோளை தொட அவள் சரிந்து விழுந்தாள்.
 
“ஏய் கோல்ட் என்னாச்சு”.. என்று அவளைத் தூக்கியவன் 
 
“மணி அண்ணா” என்று சத்தம் போட.
 
வெளியே நின்றிருந்த மணி.. “என்னங்க தம்பி” என்று உள்ளே வர.
 
“அண்ணா.. ஐய்யா கூட இருங்க.. நான் தங்கமீனாவை என்னோட அறையில படுக்க வைச்சுட்டு வரேன்” என்று குருமூர்த்தியை ஒரு பார்வை பார்த்துச்சென்றான்.
 
அறைக்குச்சென்று கதவை ஒருக்களித்து லாக்செய்து விட்டு படுக்கையில் படுக்க வைத்து அவளுக்கு சாதாரண மயக்கம் தான்.. என்று தண்ணீர் தெளிக்க மெல்ல கண்விழித்து பார்த்தாள்.. அந்த அறையின் பிரமாண்டத்தை  பார்த்ததும் அவளுக்கு மீண்டும் மயக்கம் வருவது போலிருந்தது.
 
மெல்ல எழும்ப பார்க்க “ஏய் படு கோல்ட் இதோ வரேன்” என்று அறையில் இருந்த ப்ரிட்ஜில் வைத்திருந்த பழச்சாறு எடுத்து அவள் கையில் கொடுக்க..
 
“எனக்கு வேண்டாம்” என்று அவள் முகத்தை திரும்ப..
 
“இப்ப நீ குடிக்கலைன்னா நான் எப்படி குடிக்க வைப்பேன்னு உனக்கு தெரியும்ல” என்று ஒரு அதட்டல் போட.
 
“இப்ப என்ன இதை குடிக்கணும் அவ்ளோதான”
 
அவனோ “ஆமாம் குடி” என்று பழச்சாறை நீட்டினான்.
 
வாங்கி குடித்துவிட்டு “போதுமா.. என்னோட நிம்மதிய கெடுத்துட்டீங்கள்ள.. இப்ப அடுத்து என்ன என்னை முழுசா எடுத்துக்கணும் அப்படித்தான.. வாங்க வந்து …டுங்க” என்று அவள் முந்தானையில் கை வைக்க..
 
“ஏய் நிறுத்துடி” என்று கையை ஓங்கிவிட்டான்.. அவள் கண்ணை மூடிக்கொள்ள என்ன நினைத்தானோ ஓங்கிய கையை மரக்கட்டிலில் குத்தி விட்டு “இன்னொரு முறை இப்படி பேசின.. வாயில பல்லு ஒன்னு கூட இருக்காது பார்த்துக்கோ” என்று விரல் நீட்டி எச்சரித்து விட்டு லைட் ஆப் பண்ணி
 
“ஒழுங்கா தூங்கற வழிய பாரு.. நான் ஐய்யாவ பார்த்துட்டு வரேன்” என்று கீழே சென்றான்.
 
சாவித்ரி.. கிருஷ்ணாவின் வீட்டின் முன் நின்றிருந்தாள்.
 
ஹாய் பிரண்ட்ஸ் உங்க லைக்ஸ் எனக்கு பூஸ்ட்
 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top