ATM Tamil Romantic Novels

Author name: Jiya Janavi

எங்கு காணினும் நின் காதலே… 19

19   ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம்.. நாம் முதல்முறை நிவேதிதாவை பார்த்த அதே பப் தான்!!     அன்றும் தங்கள் வார விடுமுறையை செலவழிக்கவென்று கும்பல் கும்பலாக மக்கள் குவிந்திருந்தனர். இணையுடனும்.. இணை இல்லாமலும்.. நண்பர்களுடனும் என்று வயது வித்தியாசமின்றி அனைவரும் தங்களை மறந்த ஆட்டத்தில் கொண்டாட்டத்தில் களித்து இருந்தனர்.   தமிழ் பாட்டு காதைக் கிழித்துக் கொண்டு இருந்தது… அதை விட அந்தப் பாட்டுக்கு நம்ம ஊர் ஆட்டத்தை ஆடிக்கொண்டிருந்தனர் அவ்வூர் மக்கள்.. என்னது? […]

எங்கு காணினும் நின் காதலே… 19 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 18

18     வெற்றி நடை போட்டு வெற்றியை விட்டு பிரிந்து சென்றாள் நிவேதிதா!!   ஆனால் அவள் மனதிற்குள்ளே பெரும் பாரம்.. அது அவனை பிரிந்ததினால் அல்ல.. பாவைக்கு அவன் மீதான காதலினால்.. ஆம்!! காதலே தான். எங்கே? எந்த புள்ளியில்? அந்த காதல் பற்றி கொண்டது என்று கேட்டால் அவளுக்கு தெரியாது!!   காதலில் பொது விதியே அது தானே!! எப்போது யார் மீது யாருக்கு தோன்றும் என்று யாரால் கணிக்க முடியும்??  

எங்கு காணினும் நின் காதலே… 18 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 17

சொக்கன் தன்னை சொக்க வைத்த சுந்தரியான மீனாட்சியை கைபிடிக்கும் நன் நாளில் மதுரை மாநகரமே பெருங்கோயிலில் கூடி இருந்தது. ஒரு பக்கம் சுமங்கலிகள் அந்நாளில் தங்கள் தாலிக்கயிற்றை புது மஞ்சள் கயிற்றில் மாற்றிக் கொண்டிருந்தனர். மற்றொரு பக்கம் தங்கள் கணவன் நெடுநாள் வாழ வேண்டி தாலி கயிறு மஞ்சள் குங்குமம் அடங்கிய சிறு சிறு பாக்கெட்டுகளை சுமங்கலிகள் மற்ற சுமங்கலிகளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தனர்..      மனிதர்களின் திருமணத்திற்கே மொய் எழுதும்போது மகேசனின் திருமணத்திற்கு இல்லையா என்ன?

எங்கு காணினும் நின் காதலே… 17 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 16

  16     நிவேதிதாவை அனுப்பி வைத்து விட்டு காரில் சாய்ந்த நின்றவனின் காதுகளில் ரீங்காரமாய் நீங்காமல் ஒலித்துக்கொண்டிருந்தது அவளின் வார்த்தைகள்!! அதிலும் அந்த மாமிச மலைகள் சொன்னதாக அவள் சொன்ன வார்த்தைகள்.    உண்மைதானே!! அன்று இவனே அவளை அப்படித்தானே பஞ்சாயத்தார் முன்னிலையில் சொல்லி வழக்கை திசை திருப்பி விட்டான். இன்று மற்றவர்கள் சொல்லும் போது ஏனோ வலித்தது. அதுவும் அவள் நிலையில் இருந்து பார்க்கும்போது இன்னுமே வலித்தது வெற்றிக்கு!!     வெளிநாட்டில்

எங்கு காணினும் நின் காதலே… 16 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 15

15     நிவேதிதாவை இடைமறித்த இரு ஆட்களும் அவளை ஆட்டோவில் தள்ளி அங்கிருந்து பறக்க.. “டேய் யாருடா நீங்க எல்லாம்? எங்கடா கடத்திட்டு போறீங்க? நான் யாருனு தெரியுமா? எங்க பெரியப்பா யாருன்னு தெரியுமா? எங்க அண்ணனுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது உங்களை எல்லாம் பாண்டி கோயிலுக்கு பிரியாணி ஆக்கிடுவாருடா.. ஒழுங்க என்னை விட்டுட்டு ஓடி போய்டுங்க!!” என்று அந்த மாமிச மலையை தாக்க முடியாமல் வார்த்தைகளால் அவனை தாக்கி கொண்டிருந்தாள்.    

எங்கு காணினும் நின் காதலே… 15 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 14

14   இளங்காலை வேளை.. அவர்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்த மரங்களின் நடுவே நடந்து கொண்டிருந்தாள் நிவேதிதா!! அவள் மனம் முழுக்க குழப்பங்கள் மேகங்களாக சூழ்ந்து மழையென பொழிந்துக் கொண்டிருந்தது.     தந்தையின் இந்த திடீர் விஜயம் தன்மேல் உள்ள பாசத்தினால் என்று தெரிந்தாலும் அதற்கு மேலே ஏதோ ஒன்று இருக்கிறது என்று அவளுக்குப் புரிந்தது. சாதாரணமாக இருக்கும்போது கூட அவளையே கண்களால் தொடர்ந்து கொண்டிருந்தார் மேகநாதன். சிறிது நேரம் அவள் வீட்டில் இல்லை என்றாலும்

எங்கு காணினும் நின் காதலே… 14 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 13

13     தன் முன்னால் வாகாக அமர்ந்து இருந்தவளை காதல் கூறிய அடுத்த கணமே இதழ்களை கவ்விகொண்டான் கதிர்.   இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை பத்மா..  கைகால்கள் எல்லாம் உதறல் எடுக்க.. அவன் இதழ்களிலிருந்து தன் இதழ்களை வம்படியாக பிய்த்துக் கொண்டு, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை பார்த்து முறைத்தாள்.   கதிரோ அவள் காதலாக பார்ப்பது போல பாவித்து இதழ்களை விரித்தவன், ஒற்றை விரலால் அவளது முகவடிவை அளந்தான் காதலாக.. அவளோ

எங்கு காணினும் நின் காதலே… 13 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 12

12     காணொளியை பார்த்த கணம் முதல்  தன்னிலையில்லை மேகநாதன். மனம் வலிக்க.. கனக்க.. இருந்தார்.   தன்னிலை மறந்து மன உளைச்சலில் உழன்று கொண்டிருந்ததார் அவர். எவ்வளவு சீக்கிரம் இந்தியா செல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சென்றாக வேண்டும் என்று இதுவரை காதல் மொழி தவிர வேறு எதுவும் பேசாத மனைவியிடம் கட்டளையிட்டார்.   அவருக்கே தெரியும்!! கண்டிப்பாக குடும்பத்தில்.. அவரின் காதல் வாழ்க்கையில் ஒரு பிளவை ஏற்படுத்த போகிறது என்று.. அதுக்காக.. அதுக்காக

எங்கு காணினும் நின் காதலே… 12 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 11

11     நிவேதிதா, தன்னிடம் வெற்றி வரம்பு மீறி நடந்து கொள்வதை தாங்க மாட்டாமல், கழிவறையின் சுவற்றில் சற்று நேரம் சாய்ந்து நின்றிருந்தாள். அவளால் இதை ஏற்க முடியவில்லை.. உள்ளுக்குள் தகித்தது அவனது தொடுகை எல்லாம்!!   அதன்பின் வேறு யாரும் வந்தால் அது வேற பேச்சுக்கு ஆளாக வேண்டும் என்று இவள் வெளியே வர..   வசீகரன் அதன் வாயிலில் நின்றபடி இவளை பார்ப்பதை பார்த்தவள்.. “நான் என்ன சின்ன குழந்தையா? வரமாட்டேனா நான்?

எங்கு காணினும் நின் காதலே… 11 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 10

  10       பத்மா கதிர் கை பிடித்த அடுத்த நொடி “திருடன்.. திருடன்னு” என்று கத்த..    அதில் பயந்து போன கதிரோ.. “நானில்ல.. நானில்ல” என்று கத்த..   அவர்களின் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த மரத்தை நோக்கி ஓடி வர..     ‘ஏற்கனவே இப்போதுதான் வெற்றியினால ஒரு பஞ்சாயத்து முடிஞ்சது.. இங்கே இந்த பெண்ணோடு நம்மை பார்த்தால் கண்டிப்பாக ஏதேனும் பிரச்சனையாகும்.. பிரச்சனை கூட வேணாம்

எங்கு காணினும் நின் காதலே… 10 Read More »

error: Content is protected !!
Scroll to Top