காதல் தருவாயா!!!
அத்தியாயம் 1 மங்கள வாத்தியங்கள் ஒருபுறம் தடபுடலாக முழங்கிக் கொண்டிருக்க, திருமண அரங்கமெங்கும் சொந்த பந்தங்களின் ஆனந்த சலசலப்புகளின் ஓசை இனிய நாதங்களாக காற்றில் மிதந்து கொண்டிருந்தது. மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டுப் பெரியோர்களின் கால்தடங்கள் அவ்வரங்கம் முழுவதும் பதிந்தபாடாய் இருக்க, இரு உள்ளங்கள் மட்டும் வெவ்வேறு அறையில் உலைக்களமாய் கொதித்துக் கொண்டிருந்தன. “நாழியாகிறது.. மாப்பிள்ளைய அழைச்சுண்டு வாங்கோ..” என்ற ஐயரின் உத்தரவிற்கிணங்க பட்டு வேஷ்டி பட்டு சட்டையுடன் கம்பீரமாக நடந்து வந்து […]

