ATM Tamil Romantic Novels

11 – இத இதமாய் கொன்றாயடி

11 – இத இதமாய் கொன்றாயடி

 

இரவு முழுவதும் தமிழ் தன்ராஜை எப்படி அவன் வாயால உண்மையை ஒத்துக்கொள்ள வைப்பது என்று சிந்தனை வயப்பட்டிருந்தான். அதற்கு நேர்மாறாக மகிழ் தமிழுக்கு இதுவரை என்னன்ன செய்தோமே நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் ஒருசதவீதம் கூட நன்மை செய்த மாதிரியே தெரியவில்லை. அதை எண்ண வருத்தப்பட்டாள்.

விடிந்ததும் முதல் வேலையாக அவன் காலைக் கட்டிப் பிடித்துக் கொண்டு,”இதுவரைக்கும் உமக்கு செஞ்சது பூரா தீங்கு தான். தயவு செஞ்சு எம்மை மன்னிச்சுடுங்க…” கதறி அழுதாள்.

தன் தவறை உணர்ந்து அழுபவளிடம் கோபத்தை காண்பிக்க முடியவில்லை. மாறாக அவளை எழுப்பி அணைத்து ஆறுதல் படுத்தினான். “ம்ம்ம்… சரி அழுகாதே… நீம் உம்ம தப்பை உணர்ந்து கதறி அழுகும் போது நா உம்மை மன்னிக்காம போகமுடியுமா…” லேசாக சிரித்துக் கொண்டுக் கேட்டான்.

‘நாம இவனுக்கு எவ்வளவு தொந்தரவு கொடுத்திருக்கோம். அதை எல்லாம் மறைத்துக் கொண்டு மன்னிச்சது மட்டுமில்லாமல் அதை சிரித்துக் கொண்டே சொல்கிறானே… இவன் என்ன மனிதன்’ என்று அவளால் எண்ணி வியக்காமல் இருக்கமுடியவில்லை.

தமிழ் தன் வேலையைப் பார்க்க வயலுக்கு கிளம்பிவிட்டான். கரும்புத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருக்க அவன் சிந்தனையோ முழுவதும் தன்ராஜை எப்படி உண்மையை ஒத்துக்கொள்ள வைப்பது என இருந்தது. மதியமாகியும் மகிழ்,”மாமாவோ…” அழைக்கும் வரைக்கும் தமிழ் அந்த சிந்தனையில் விடுபடவில்லை.

மகிழ்,”மாமாவோ… மதியசாப்பாடு கொண்டு வந்திருக்கேன்… கைகால் அலம்பிட்டு வாங்க… சாப்பிடலாம்…”

தமிழோ மனதுக்குள் மகிழ் சாப்பாட்டுக் கூடையோ தன்னை தேடி வந்ததை நினைத்து சந்தோஷப்பட்டாலும், அதை மறைத்துக் கொண்டு,”ஏப்புள்ள… நா வீட்டுக்கு வந்திருப்பேனுல… இந்த கத்திரி வெயில்ல உம்ம ஆரு வர சொன்னா…” சொல்லிக் கொண்டே கைகால் அலம்பிட்டு துண்டால் துடைத்துக் கொண்டே வந்தான்.

“மாமன் பசியோடு வேல செய்யும் போது, எம்மால வீட்ல சும்மா இருக்கமுடியுமா? அதான் சாப்பாடை கட்டிக் கொண்டு வந்துட்டேன்…” என்றாள் மகிழ். அவள் பதிலில் அவன் அகமகிழ்ந்துப் போனான்.

அவள் அவன் மீது நேசம் கொண்டிருக்க வேண்டும் ஆசைப்பட்டான். தன் ஆசை நிறைவேறியதில் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தான். தான் கொடுத்த ஒரு நம்பிக்கையில் தன் கவலை எல்லாம் மறந்து, தன் மேல் அன்பு செலுத்துகிறாள்.

“ஏப்புள்ள… நா பசிச்சா சாப்பிட வீட்டுக்கு வந்துடப் போறேன். உமக்கு எதுக்கு வீணாக அலைச்சல்…”

“எம்மாமனுக்கு சாப்பாடு கட்டி வரது விட்டு போட்டு அதைவிட எமக்கு வேற வேல என்ன…” புருவங்களை உயர்த்திக் கேட்டாள்.

மகிழ் கேட்ட விதத்தில் தமிழும் சொக்கிப் போனான். ஆக மொத்தில் மகிழை இஞ்ச் பை இஞ்ச்காக இரசித்திருந்தான். அவன் பார்வையைக் கண்டு அவள் வெட்கக் கொண்டாள். அவள் வெட்கத்தைக் கண்டு ஈ மொய்த்த பலாப்பழம் போல அவன் பார்வை மொய்த்தது.

“ஏன் மாமா… இப்படி பார்க்கறிங்க…” என சிணுங்கியவாறே சொன்னாள். அவள் சிணுங்கிளில் போரில் யானைப்படையை சேனைப்படையை வெற்றிக் கொண்டதுப் போல் மீசையை முறுக்கிவிட்டான்.

“அம்மணி சிணுங்கியது போதும்… எமக்கு சாப்பாடு போடற எண்ணமில்ல…” என கிண்டலாக்க் கேட்டான்.

மேலும் வெட்கங்கொண்டவளாக தலையை குனிந்துக் கொண்டு உணவை பரிமாறினாள். ஆண் அன்னபட்சியை காண பேடை நாணம் கொண்டு நின்றது போல இருந்தது.

அவளை பார்வையால் பருகிக் கொண்டே உணவை புசித்தான். கை அலம்ப எழவும் அவனுக்கு முன்னால் அவள் எழுந்து கை அலம்ப சொம்பு நீரை நீட்டினாள். அவன் சிரித்துக் கொண்டே அவள் கைத் தொட்டு சொம்பை வாங்கினான். அவள் கையை உருவிக் கொண்டு,”அச்சோ மாமா…” சிணுங்கினாள். அவன் உரிமையாக அவள் இடுப்பில் சொருகியிருந்த முந்தானை சேலையை எடுத்து கைகளை துடைத்தான்.

பிறகு அவன் சாப்பிட்ட பாத்திரங்களை கூடையில் அடுக்கியவாறே,”நா வரேன் மாமா…” சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டாள். அவன் உல்லாசமாக விசிலடித்தபடியே சரி எனும் விதமாக தலையை ஆட்டினான்.

இப்பொழுது தமிழ் தொட்டால் மகிழ் வேண்டாம் என சொல்லமாட்டாள். ஆனால் தன்ராஜிக்கு ஒரு முடிவைக் கட்டிவிட்டு பிறகு மகிழோடு சந்தோஷமாக வாழவேண்டும் எனபதில் தமிழ் உறுதியாக இருந்தான்.

அவனின் உறுதியை உடைக்கும் விதமாக தன்ராஜ் மகிழிடம் அவள் கணவனைப் பற்றி தப்புத் தப்பாக சொன்னான். அவனை நம்பாமல்,”போதும் நிறுத்து… புளுகறதுக்கு ஒருஅளவு வேண்டாம். கேக்கறவ கேனச்சியா இருந்தா நீம் உம்ம இஷ்டத்துக்கு பேசிட்டு போவியா… ஆரு பார்த்து என்ன பேச்சு பேசற… நாக்கு இழுத்து வச்சு அறுத்திடுவே… ஜாக்கிரதை…” சத்தம் போட்டாள்.

உடனே தன்ராஜ் உசராகிவிட்டு பேச்சை மாற்றி பேசினான். முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு,”எனக்கு என்ன தெரியும். என் காதுபடவே ஊருக்குள்ளே உன் புருஷனை தப்பு தப்பாக பேசறாங்க… மனசு கேக்காம நா அத கேட்டு வந்து சொல்றேனு…” நடித்தான்.

“ஊருக்குள்ளே ஆயிரம் பேசுவாங்க… உமக்கு உம் அண்ணன பத்தி தெரியாதா… பேசறவங்க வாய் மேல நாலு போடு போட தெரியாதா…”

‘ஏதுடா வம்பா போச்சு… என்ன தான் தீடிரென்று உன் புருஷன் மேல பாசம் வந்துட்டாலும் அதுக்குனா இப்படியா.. உனக்கு பாசம் எல்லாம் வரக்கூடாதே… ஆபத்தாச்சே…’ அவனுடைய மைண்ட் வாய்ஸ்.

“என்ன பேச்சய காணோம்… நானா இருந்தா அவங்கள என்ன சேதினு கேட்டிருப்பே… நீ சும்மா விட்டுட்டு வந்தியா…”

‘இவ ஓவரா பேசறாளே… இவள கொஞ்சம் அடக்கி வக்கனுமே…’ நினைத்தவாறே,”இவ்வளவு நாளா உன் புருஷன் மேல் இல்லாத அக்கறை என்ன இப்ப தீடிரென்று வந்திருக்கு…”

மகிழ் ‘இப்படி மாட்டிக்கிட்டோமே… என்ன சொல்லி தப்பிப்பது’ என்று முழித்தாள். ‘ச்சே… இவனக் கண்டு நாம பயப்படுவதா…’ தைரியம் வரப் பெற்றவளா,”ஆமாம் எம் புருஷன ரொம்ப விரும்பறேனு… இத சொல்ல எமக்கு என்ன பயம்… ஆர கண்டு நா பயப்பட தேவையில்ல…” உண்மையை உரக்கச் சொன்னாள்.

தன்ராஜ் இனி நடிக்க தேவையில்லை முடிவு செய்து தன் முகத்திரையை கிழித்தான்.

‘எவ்வளவு தகிரியமிருந்தா இத என்கிட்டய சொல்லுவா…’ எண்ணியவாறே… “ஆர கண்டு உமக்கு பயமில்ல அப்படியா… ஆனா இந்த தன்ராஜை கண்டு பயப்படனுமே… ஏன்னா நா உன் மேல ஆசப்படறேனு… அதனால உன்ன எப்படியாவது அடச்சேன் தீருவேன்… நா உம் புருஷன பண்ற டார்சர்ல நீயே கதறிக்கிட்டு என்கிட்ட ஓடி வந்து வேற வழியில்லாம என்கூட படுப்ப பாரு… இது தன்ராஜின் சபதம்… எழுதி வச்சுக்கோ… நடக்குதா இல்லயா பாரு…” தைரியமாக சவால்விட்டான்.

“நீரும் எழுதி வச்சுக்கோ… அப்படி ஒன்னு நடக்க போறதில்ல… ஒருவேளை அப்படி நடக்கற மாதிரி இருந்தா நா உசுர விட்டுவேன தவிர உம்கூட படுப்பபேனு பகல் கனவு காணாதே…” பதிலுக்கு இவளும் சவால்விட்டாள்.

“அதையும் பார்க்கறேன்டி…” என்றான். “பாரு… பாரு…” பதிலுக்கு என்றாள் மகிழ்.

“வரேன்டி செல்லம்…” சிரித்துக் கொண்டே மகிழ் கன்னத்தைத் தட்டிச் சென்றான். “வராத… அப்படிய எங்காவது போயிடு…” கோபத்துடன் மகிழ் காற்றோடு கத்திக் கொண்டிருந்தாள்.

மகிழோ தன்ராஜை வாய்குள்ளே முணுமுணுவென்று திட்டிக் கொண்டிருந்தாள். தமிழ் வந்தது கூட அறியாமல் அவள் பாட்டிற்கு திட்டிக் கொண்டிருந்தாள்.

“என்ன மகிழ் ஆரை இப்படி வஞ்சுட்டிருக்கே…” கேட்டான்.”வேறு ஆரை வயப் போறேன்… அந்த தன்ராஜை தான்…”

“ஏன் ஏதாவது உம்மகிட்ட வம்பு பண்ணினான…”

“அப்படி வம்பு பண்ணியிருந்தா… நா சும்மா விட்டிருப்பேனா…”

“இப்படி வயறயே… அதான் கேட்டேன்.”

தமிழ் அப்படி கேட்டதும் மகிழ் மனதில் உள்ள ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தாள். “அவன் அப்படியா சொன்னான். இரு அவனை இரண்டு ஒன்னுல பார்க்கறேன்…”என வேஷ்டிய மடித்துக் கொண்டு சண்டைக்கு கிளம்பினான்.

மகிழ்,”இருங்க… இருங்க… இது சண்ட போடற நேரமில்ல… பொறுமையா இருந்து ஜெயிக்கனும்…” தடுத்தாள். தமிழும் வேறு வழியில்லாமல் உர்உரென்று பொருமிக் கொண்டிருந்தான்.

தன்ராஜ் அமைதியாக இருப்பானா… அவன் சித்து வேலையை ஆரம்பித்துவிட்டான். ஊருக்குள்ளே போய் மகிழுக்கு தனக்கும் தவறான தொடர்பு இருக்கிறது என வதந்தி பரப்பிவிட்டான். முதலில் நம்பாதவர்கள் ஒருவேளை அப்படியும் இருக்குமோ… என்று சந்தேகப்பட்டனர். காரணம் தமிழும் மகிழும் இணைந்து கூடத் தெரியாமல் இருவரும் பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டவர்கள் இப்பவும் அப்படித் தான் இருக்கிறார்கள் என நினைத்தனர்.

ஊருக்குள்ளே இப்படி பேச்சு அடிபடுறது தெரியாமல் தமிழும் மகிழும் இருந்தனர். ஊரில் மகிழைப் பார்த்து அனைவரும் முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.

மகிழ்,”அத்தாச்சி…” அண்ணி முறையாகும் ஒரு பெண்ணை அழைத்தாள். உடனே அப்பெண்ணோ,”நா உம்மகிட்டே நின்னு பேசினா எம்மயும் நடத்தை கெட்டவனு சொல்லிடுவாங்க… எமக்கு அந்த பேரு எதுக்கு…” வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டுப் போனாள்.

அப்பொழுது தான் ஊரில் தன் பேரை தாறுமாறாக சொல்லி கெடுத்து வைத்துள்ளான் என்பது புரிந்தது. என் மனுஷன் இவன். இவனுக்கு அடங்கி போகலைனா என்ன வேணுமால் சொல்லுவான். அதை இந்த ஊர்மக்களும் நம்பிடுவாங்களா…

‘இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த எம்ம நம்பாம… அசலூர்காரன் சொல்வதை கேட்டு நம்புகிறார்களே’ வெறுப்புடன் நினைத்தாள். அதே வெறுப்புடன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தாள். தனராஜிக்கும் மகிழுக்கும் இடையே உள்ள பிரச்சனை தெரியாத வசந்தா,”ஏன் மூஞ்சிய இப்படி தூக்கி வச்சிருக்கவ… ஆராவது ஏதாவது சொன்னாங்களா…” கேட்டாள்.

வசந்தா இப்படி கேட்கவும் கண்ணில் நீர் முட்டிக் கொண்டு வந்தது விட்டால் அழுதுவிடுவாள் போல…

“ஏன் ஆராவது ஏதாவது புரணி பேசினாங்களா சொல்லு… அவங்கள உண்டு இல்லனு பண்ணிடறேன்.” ஆத்திரப்பட்டார்.

“தனராஜ் தான் ஊருக்குள்ள எம்ம பத்தி இல்லாதயும் பொல்லாதயும் சொல்லியிருக்கான்…”

“அதயும் ஊர் நம்புமா… ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய விரட்டுச்சாம்… அந்த கதயெல்லா இருக்கு… இந்த ஊரில பொறந்து வளர்தவ உம்ம பத்தி தெரியாத..” கோபத்தில் பொரிந்துத் தள்ளினார்.

இதை சொல்லவும் மகிழின் கண்களில் இருந்து பொல பொலவென கண்ணீர் வந்தது. தேம்பி தேம்பி அழுதாள். மருமகள் அழுவதைப் பார்க்க பிடிக்காமல்,”கிளம்பு… கேட்போம்…” மகிழ் கையைப் பிடித்தவாறே வசந்தா ஆவேசத்துடன் கிளம்பினார்.

இருவரும் ஊர் மந்தைக்கு வந்தார்கள். “எவடியவ எம் மருமகள பத்தி தப்பு தப்பாக பேசினது… பேசின நாக்கு இழுத்து வச்சு அறுத்தா சரியா போயிடும்…” ஆக்ரோஷத்துடன் கர்ஜித்தார்.

ஊர் மக்கள் கூடி கூடி தங்களுள்ளாகவே குசு குசுவென பேசிக் கொண்டனர். “தகிரியமிருந்தா சத்தமா பேசுங்க… அத விட்டுப் போட்டு உமக்குள்ள என்ன குசு குசுவென பேசிக்கறிங்க…”

அதில் ஒருபெண் தைரியம் வரப் பெற்றவளாக,”எமக்கு என்ன பயம்… நெருப்பில்லாத புகையாது… அதான் சம்மந்தப்பட்டவனே சொல்லும் போது உண்மயில்லாம இருக்குமா…”

ஆண்களும் பெண்களும் வரிசையாக அபத்தமாக பேசினர். “இந்த ஊரிலேய பொறந்து வளர்ந்தவ அவள பத்தி உங்களுக்கு தெரியாதா… ஏதோ ஒரு வெளியூர்காரன் பேச்ச கேட்டு எம்மருகள பத்தி பேசினிங்கனிங்க… பேசின வாய் புழுத்து போயிடும் நாபகம் வச்சுங்க…” வசந்தா சாபமிட்டார்.

“போதும் நிறுத்துங்க… நா நடத்தவ கொட்டவளாகவே இருந்துட்டு போறேன்.. வாங்க அத்த இனி இந்த ஊருக்கு சொல்லி புரிய வக்கமுடியாது…” கோபத்துடன் மாமியார் அழைத்துக் கொண்டு போய்விட்டாள்.

ஊர்மக்கள் எப்போது தான் உண்மையை புரிந்துக் கொள்வார்களோ…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1 thought on “11 – இத இதமாய் கொன்றாயடி”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top