ATM Tamil Romantic Novels

புள்ளி மேவாத மான் – 1

புள்ளி மேவாத மான்  – 1
 
நாயகன் : தனஞ்ஜெயன்
நாயகி : எழிலரசி
 
 மலையனூர்
 
   பேருக்கேற்றார் போலவே மலைகள் சூழ்ந்த ஊர் இதமான தட்பவெப்பநிலை  நல்ல மண்வளம் கொண்ட ஊர் வாய்க்கால் பாசனமும் கிணற்றுப் பாசனமும்  உண்டு என்பதால் ஆண்டு முழுவதும் விவசாயம் நடைபெறும் பசுமையான ஊர்?
அதிகாலை வேளையிலேயே அந்த வீடு பரபரப்பாக இருந்தது. வீடு என்று சொல்வதை விட அரண்மனை என்று சொல்லலாம் அந்த ஊரிலேயே அதான் மிக பெரிய வீடு சுற்றிலும் கோட்டை போன்ற மதில் சுவருடன் மிகப்பெரிய இரும்பு கேட் கேட்டிலிருந்து வீட்டின் தலைவாசலுக்கு இருநூறு அடி நீளம் தூரம் வீட்டு மதில் சுவரை சுற்றிலும் பல விதமான மரங்கள் கேட்டிற்கும் வாசலுக்கும்  இடையே ஒரு புறம் மிகப்பெரிய கட்டாந்தரை அதில் நிலக்கடலை தேங்காய் பருப்பு இன்னும் சில தானியங்கள் காய்ந்து கொண்டு இருந்தன இன்னொரு புறம் கார் ஷெட்டில் மகேந்திரா போலரோ ஸ்கார்ப்பியா ஒரு பழைய அம்பாசிடரும் நின்று கொண்டு இருந்தது?
வீட்டின் உள்ளே சலவைகற்களாலும்  தேக்காலும் இழைக்கப்பட்டு நவீன வசதிகள் அனைத்துடனும் பின்புறம் மாட்டுத்தொழுவும் காய்கறிசெடிகள் பூஞ்செடிகள் நிறைந்த மிகப்பெரிய தோட்டத்துடனும் பழமையும் புதுமையும் நிறைந்த வீடாக இருந்தது.
வீட்டின் உறுப்பினர் என்று பார்த்தால் ஒருவன் தான் நம் நாயகன் தனஞ்ஜெயன் மட்டுமே ஆனால் அந்த வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும் வீட்டு வேலைக்கும் சுற்று வேலைக்கும்  தோட்ட வேலைக்கும் ஆட்களும் ஊரின் பெரிய தனக்காரர் குடும்பம் என்பதாலும் தனஞ்செயன் ஊரின் பிரசிடென்ட்  என்பதாலும் சொந்தபந்தங்கள் அறிந்தவர் தெரிந்தவர் என யாராவது வந்து போய் கொண்டு தான் இருப்பர்?
 இன்று அதிகாலை வேளையிலேயே   வழக்கத்திற்கு மாறாக அதிக பரப்பரப்புடன் இருந்தது அந்த வீடு தனஞ்ஜெயன் அறையில் அவனை சுற்றி அவன் உயிர் தோழன் கருணாகரன்  சித்தப்பா மக்கள் வெற்றிமாறன் திருச்செல்வன்  பிரசாத் என நால்வரும்  அவனிடம் கெஞ்சி கொண்டு இருந்தனர்.
தனஞ்ஜெயன்  அவன் தந்தையை கொண்டே பிறந்தவன் சராசரி ஆண்களை விட உயரம் ஆஜானுபாகுவான உழைப்பின் காரணமாக உளைச்சதை இல்லாமல் இறுகிபோன உடல் தாய் தந்தை இருவரும் நல்ல நிறம் அவர்களின் இருவரின் நிறத்தை பெற்று தூக்கலான கலரில் இருந்தான் அவனின் உயரமான அகன்ற  உடலமைப்பே அவனுக்கு மற்றவர்களிடம் ஒரு மரியாதை பெற்று தந்தது.
“டேய் தனா ஏன்டா இப்படி அலும்பு பண்ற சொல்லறத கேளுடா இந்த சட்டையை போட்டு கிளம்பி வா” எனறான் கருணாகரன்.
“அண்ணா நேரமாகுது நல்ல நேரத்துல  அங்க இருக்கனும் இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும்”
“வெற்றிண்ணா  அப்பா போன் போடறாரு என்ன சொல்ல” என்ற திருவிடம் “அவரையே  வர சொல்லுடா” என்றான் வெற்றி.
பிரசாத் தனஞ்ஜெயனிடம் “அண்ணா என்னோட பெர்ப்யூம் எடுத்துட்டு வரவா போட்டுகறிங்களா” என கேட்டதும்…
 ஏற்கனவே எதுவும் பேசாமல் எல்லோரையும் பார்த்து முறைத்து கொண்டு இருந்தவன் பிரசாத்தை தீப்பார்வை பார்த்தான்  தனஞ்ஜெயன். 
கருணா பிரசாத்தின் தலையில் தட்டி “அடேய் அவனே முறுக்கிட்டு நிக்கறான் நீ வேற இன்னும் கொஞ்சம் உசுப்பேத்தி விடற  ஏன்டா சும்மா இருடா “
 “டேய் நா சொன்னா சொன்னது தான் எங்கயும் வரல சும்மா என்னய நச்சரிக்காம போய் வேலய பாருங்க” என்ற தனஞ்ஜெயனை நால்வரும் ஒருமணி நேரம் போராடி களைத்து போன இயலாமையுடன் பார்க்க…
அப்போது அங்கு வந்த வெற்றி , திருவின் அப்பா சுந்தரம் “என்ன தம்பி இன்னும் கிளம்பலயா நேரமாவுதுல்ல” என்க…
“இதோ சித்தப்பா” என்றவன் கருணாகரனின் கையில் இருந்த சட்டையை வெடுக்கென பிடுங்கி போட்டு தயாரானான். சித்தப்பா அவ்விடம் விட்டு நகர்ந்ததும் மற்றவர்களை முறைத்துக் கொண்டே எல்லாம் ஒன்னு கூடி ரவுண்டு கட்டறிங்களா எவ்வளவு தூரமுனு பார்க்கறேன் வந்து சம்மந்தபட்டவகிட்டயே  பிடிக்கலைனு சொல்றேன் பிடிக்கலைனு சொன்ன புறவு எவ தான் கட்டிக்க சம்மதிப்பா  என சந்தோஷமாக திட்டமிட்டான்.
ஆம் தனஞ்ஜெயனுக்கு பொண்ணு பார்க்க செல்வதற்கு தான் அவன் இத்தனை அழிசாட்டியம். தயாராகி வந்தவன் வழக்கம் போல் சாமியறைக்கு சென்று தெய்வங்களையும் தெய்வங்களாகி விட்ட தன் தாய் தந்தையையும் வேண்டி திருநீறு இட்டு வந்தான்.
சாமியறையில் இருந்து வந்த தனஞ்ஜெயனை இருளாயி பாட்டி “எஞ்சாமி” என கன்னம் வழித்து நெட்டி முறிக்க “வரேன் ஆயா”என கிளம்பினான்.
வாசலில் நிற்க வைத்து சகுனம் பார்த்துவிட்டு காரில் ஏற சொல்ல இவனோ நடக்காத கல்யாணத்திற்கு இதெல்லாம் மிச்சமா இல்ல என நினைத்து கொண்டு டிரைவர் இருக்கைக்கு செல்ல அங்கே திரு அமர்ந்திருந்தான். அவனை பார்த்து பல்லை கடித்துக் கொண்டே “டேய் இறங்குடா” என கடுப்புடன் சொல்ல அவன் காரின் அருகே நின்ற தன் தந்தையை பார்க்க…
அவரும் இவர்களை தான் பார்த்துக்  கொண்டு இருந்தார் “தம்பி இன்னைக்கு ஒரு நாளு திரு ஓட்டட்டும் நீ பின்புறம் உட்காருய்யா” எதுவும் சொல்ல வழியின்றி நடு இருக்கையில் அமர்ந்தான்.
 தந்த நிற ஸ்கார்ப்பியோ கேட்டை தாண்டி வெளியே வந்ததும் அடுத்தடுத்த இருந்த இவன் சித்தப்பாக்களின் வீட்டிலிருந்தும் இதே போல கார்கள் வெளியே வர “டேய் பொண்ணு தான பார்க்கப் போலாமுனிங்க  அதுக்கு எதுக்குடா இத்தனை பேரு வேற ஏதாவது பிளான் பண்றிங்களடா” வெற்றியை பார்த்து கேட்க… அவன் என்ன சொல்லுவான். உண்மையை சொன்னா நைய புடைச்சுருவாங்களே திருதிருவென முழித்தான்.
“என்னடா முழிக்கற சொல்லுடா இல்லை பல்ல பேத்துருவேன்”
ஆமாம் சொல்லைனா இவரு பேத்துருவாரு… சொன்னா மொத்த குடும்பமும் ஒன்னு கூடி குனிய வச்சு கும்மிடுமே என நொந்தவாறே கருணாவை பார்க்க… வெற்றியின் முகத்தை கொண்டே மனதை படித்தவன் கண்களால் நான் பார்த்துக்கிறேன் என சமிக்ஞை காட்டி விட்டு
“மாப்பிள்ள அது ஒன்னும் இல்ல உன் சித்தில்லாம் பொண்ண பார்க்கனும்னு  ஆசைபட்டாங்க அதான்”
எதுவும் சொல்லாமல் அவன் அமைதியாகி விட அப்பாடா தப்பிச்சோம் என வெற்றி நினைக்க அருகில் வண்டி ஓட்டிக்  கொண்டு இருந்த திரு “டேய் அண்ணா ரொம்ப சந்தோஷப்படாத  கீரனூர் போனதும் வண்டி வண்டியா அண்ணன் கொடுக்கும் வாங்கிக்க தயாரா இரு” என முனுமுனுக்க…
“எனக்கு மட்டுமாடா எல்லோருக்கும் சேர்த்து தான கொடுக்கும்” என்றான் கிசுகிசுப்பான குரலில்..
கீரனூர்  கிராமத்துக்கு உண்டான அத்தனை அம்சங்களை கொண்ட அழகான ஊர் விவசாயமே பிரதான தொழில் தனஞ்ஜெயன் வண்டி ஒரு வீட்டின் முன் சென்று நின்றது 
தனஞ்ஜெயன் இறங்கி வீட்டை பார்த்தான் வீடு பழைய கிராமத்து பாணியில்  முன்வாசல் முற்றம் பின்கட்டு  என சற்று பெரியதாக இருந்த மச்சுவீடு.
முன்வாசலில் பந்தல் போட்டு உறவினர்கள் அமர்ந்திருக்க பார்த்தவனுக்கு பொண்ணு பார்க்க இவ்வளவு பேர் எதுக்கு இவன் மனதில் எச்சரிக்கை மணி.. உறவினர் கூட்டத்தில் இவன் உறவினர்களும்  இருக்க  தம்பிகளை பார்த்து முறைத்தான்.
“மாப்பிள்ளை வந்தாச்சு” என குரல் கொடுத்தவாறே நெடு  நெடுவென வளர்த்தியாக உழைத்து முறுக்கேறிய உடம்புடன் வந்து  “வாங்க மாப்பிள்ளை” என வரவேற்றவரை பார்த்து லேசாக அதிர்ந்தவன்.
திரும்பி தன் சித்தப்பாக்களை பார்த்தான் அவர்கள் இவனை பார்த்து லேசாக சிரிக்க “வா தம்பி உள்ள போகலாம்” என அவனின் இளைய சித்தப்பா கண்ணன் அழைக்க..
சரி எல்லாம் ஒரு முடிவோட தான் வந்திருங்காங்க என அவனுக்கு புரிந்தது. எதுவும் பேச வழியின்றி உள்ளே சென்றான். வந்தவனை குடும்பத்தினர் வரவேற்க  “உட்காருங்க மாப்பிள்ளை” என அமர வைத்தார் முத்துக்குமார். தனஞ்ஜெயனின் தந்தை மாணிக்கவேலின் பால்யகால நண்பர் வந்தவுடன் இவரை பார்த்து தான அதிர்ந்தான் தனஞ்ஜெயன்.
இவனின் அருகில் வர பயந்து எச்சரிக்கையாக கருணா ,வெற்றி, திரு, பிரசாத் எல்லோரும் தள்ளி அமர்ந்து கொண்டனர். இருவீட்டு உறவினர்களும் ஏற்கனவே மாமன்மச்சான் கூட்டம் என்பதால் எல்லாம் உறவினர்களாக இருக்க பேசி கொண்டு இருந்தனர்.
 இவனோ எப்படி தட்டி கழிப்பது என யோசித்து கொண்டு இருந்தான். உறவுமுறை இல்லாமல் வெளிசுற்றில் பெண் இருக்கும் சுலபமாக மறுத்து விடலாம் என நினைதிருந்தான். இவனின் எண்ணம் தெரிந்தே தான் இவனின் சித்தப்பாக்கள் இருவரும் வகையாக சிக்க வைத்தனர் இவனிடம் யார் என்ன என சொல்லாமல்,
கூட்டத்தில் ஒரு பெரிசு “ஏப்பா பேசிக்கிட்டே இருந்தா எப்படி நல்ல நேரம் போறதுகுள்ள சட்டுனு வேலையை முடிங்க” என்றார் பிரசாத் திருவிடம் “ஏண்ணே எல்லா விசேஷ வீடுகள்ல இந்த மாதிரி பெருசுங்க  ஒன்னு இருக்கும் போல ன”  
“இப்ப இது ரொம்ப முக்கியம் உன் சந்தேகத்த தனாண்ணா தீர்த்து வைக்கும் சொல்லவா” என தீர்த்துவில் ஒரு அழுத்தம் கொடுத்து திரு  சொல்ல “விட்டுட்டுண்ணே வேணாம் அண்ண இருக்குற காண்டுல செவினிய காட்டி இரண்டு உட்டுடும்”  “இனி ஏதாவது கேட்ப” என திரு கேட்க  வாயை இருக்க மூடி  இல்லை என தலையாட்டினான்.
பிரசாத்தின் செயலில் திரு சிரித்து விட “டேய்.. மாப்பிள்ளைகளா இந்த ரணகளத்துலயும் உங்களுக்கு குதூகலமாடா உங்க அண்ணன பார்த்தான் தோல உரிச்சு தொங்கவிட்டுவான்” என்றான் கருணாகரன்.
முத்துக்குமார் தன் மனைவி கற்பகத்திடம் “கற்பகம் அரசிய கூட்டிட்டு வா”
கற்பகமும் சில உறவு பெண்களும் எழிலரசிய கூட்டிட்டு வர வந்தவள் சபையினரை வணங்கி தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டாள். வந்ததிலிருந்து தனஞ்ஜெயனையே கண் இமைக்காமல் பார்த்தாள் கண்கள் வழியாகவே அவனை கபளீகரம் செய்து விடுவது போல அப்படி ஒரு பார்வை..
எழிலரசியை அளவிடுவது போல பார்த்தான் மாநிறத்திற்கும் சற்று குறைவான நிறம் கருப்பு என்று சொல்லமுடியாது  பெரிய விழிகள் அதில் கோலி குண்டு போல கருமணிகள் களையான வட்டமுகம் மாதுளை பூ நிறத்தில் மிக மெல்லிதான உதடுகள் பெண்களிலேயே சற்று உயரம் அளவான உடலமைப்பு  சாந்தமான அழகுடன் இருந்தாள்.
எழிலரசியின் விடாத பார்வையை எதிர் கொள்ள முடியாமல் சட்டென்று எழுந்துவிட்டான் எல்லோரும் கேள்வியாக பார்க்க “நான் பொண்ணுகிட்ட கொஞ்சம் பேசனும்”   அவனின் செயலில் அனைவரும் சிரித்துவிட்னர்.
அவனின் சித்தப்பா சுந்தரம் “போய் பேசிட்டு  வாய்யா” என்றார்.
“அரசி மாப்பிள்ளையை தோட்டத்துக்கு கூட்டிட்டு போம்மா” என்றார் முத்துகுமார். எழிலரசியோடு தோட்டத்திற்கு சென்றவன் அவள் முகம் பார்த்து எப்படி சொல்ல என தெரியாமல் தடுமாற “சொல்லுங்க மாமா” என்றாள் எழிலரசி.
மாமவா ம்ஹும் இது சரியில்லையே என நினைத்தவன் “எனக்கு உன்ன கட்டிக்க இஷ்டமில்ல” என்றதும் முகத்தில் இருந்த சிரிப்பு மாறாமல் “என்னய கட்டிக்க இஷ்டமில்லயா இல்ல யாரையுமே  கட்டிக்க இஷ்டமில்லயா” 
“எனக்கு நீயினு இல்ல யாரையும் கட்டிக்க இஷ்டமில்ல” 
“ஏன் மாமா உங்க மனசுல இன்னும் பூங்கொடிக்கா நினைப்பு இருக்கா”
“ச்சீ என்ன பேசற அவ எப்ப அடுத்தவனுக்கு உடமையானாலோ அதுக்கு பிறகு அவள நினைச்சிட்டு இருந்தா அசிங்கம்”
“அப்புறம் என்ன மாமா”
“ஏய் இதுல்லாம் உனக்கு எப்படி தெரியும்”
“என்னை விட உங்கள பத்தி தெரிஞ்சவங்க யாரும் இருக்கமாட்டாங்க மாமா”
“என்ன சொல்ற புரியற மாதிரி சொல்லு”
“அது ஒன்னும் இல்ல மாமா அப்பா சின்ன வயசுல இருந்தே உங்கள பத்தி மாமா அத்தை பத்தி நிறைய சொல்லி இருக்காங்க அதான் உங்கள எனக்கு பிடிக்கும் மாமா”
தனஞ்ஜெயன் ஒன்றை யோசிக்க மறந்தான் எந்த தகப்பனும் வயசு பெண்ணிடம் ஊரில் நடக்கும் காதல் விவகாரங்களை சொல்லமாட்டான் என்பதை…
 கல்யாணத்தை நிறுத்தவேண்டும் என வந்தவனுக்கு இவளின் பேச்சுக்களை கேட்ட பிறகு என்ன செய்வது என புரியாமல் குழம்பி போனான். ஆனால் அவளிடம் பேசிய பின் மனசுக்கு இதமாக இருந்தது. அது இன்னும் குழப்பத்தை அதிகமாக்கியது.
குழம்பிய மனதோடு கூடத்திற்கு வந்தவனிடம் யாரும் சம்மதம் கேட்கவில்லை இவனை பார்த்ததும் சுந்தரம் “மச்சான் தட்ட மாத்திக்கலாம்” என்றார்.
சுந்தரம் திலகவதி தம்பதியராக தனஞ்ஜெயன் தாய் தகப்பன் ஸ்தானத்தில் இருந்து முத்துக்குமார் – கற்பகம் தம்பதியரிடம் தட்டை மாற்றி கல்யாணத்தை உறுதி செய்தனர்.
 தனஞ்ஜெயனை  பெண் பார்க்க செல்வது போல் அழைத்து சென்று அதிரடியாக திருமணத்தை உறுதி பண்ணி விடவேண்டும் என குடும்பத்தினர் முடிவு செய்து இருந்தனர் .
சுந்தரமும் மகளின் விருப்பம் தெரிந்திருந்ததாலும், தனஞ்ஜெயனை சிறுவயதில் இருந்தே பார்த்து இருந்ததாலும், தன் ஆருயிர் சிநேகிதனின் மகன் என்பதாலும் இத்திட்டத்திற்கு சம்மதித்தார்.
தனஞ்ஜெயன் எப்போது திருமணத்தை பற்றி பேசினாலும் ஏதாவது ஒன்று சொல்லி தள்ளி போட்டு கொண்டே இருந்தான். சுந்தரத்திற்கும் கண்ணணிற்கும் எங்கே அண்ணன் மகன் தனித்து நின்று விடுவானோ என்ற பெரிய கவலை. அப்படி ஆகிவிட்டால் தங்களை தாய் தந்தையாக வளர்த்த அண்ணன் அண்ணி ஆத்மா தங்களை மன்னிக்காது என தவித்து போய் அதிரடியாக கல்யாணம் நிச்சயம் செய்தனர்.

2 thoughts on “புள்ளி மேவாத மான் – 1”

Leave a Reply to Shaahithya Srinivasan Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top