ATM Tamil Romantic Novels

ஆடி அசைந்து வரும் தென்றல் – 7

பார்த்த அனிவர்த் அவமானமாக உணர்ந்தான். இவனை விட நான் எந்த வித்தில் குறைந்துவிட்டேன். என் அழகு அந்தஸத்தில் கால்வாசி கூட இல்லை. என்னை நிராகரிப்பதா… என்ன தான் காதல் என்றாலும் தன்னை இப்படி ஒருத்தனுக்காக நிராகரிப்பதா..என கோபமே அதிகரித்தது.

 

கங்காவால் இதை எல்லாம் பார்க்க முடியவில்லை. தன் மகனை சம்மதிக்க வைக்கப பட்டபாடு… எவ்வளவு போராடி இவ்வளவு தூரம் கொண்டு வந்தார். இனி மறுபடியும் முதலில் இருந்தா.. என ஆயாசமாக இருந்தது.  இனி இதற்கு பிறகு மகனின் செயல் எப்படி இருக்குமோ.. மகனின் கல்யாணம் வாழ்நாள் கனவாகவே ஆகிவிடுமோ…நினைக்கையில் உண்மையாகவே நெஞ்சுவலி வருவது போல இருந்தது.

 

ரெங்கு “சாரே… நீங்க சொல்லுங்க.. என்ன செய்யனும்..”

 

என்ன தான் நேர்மையாக தொழில் செய்தாலும் ஒருவன் தொழிலில் வளர்ந்து வருகிறான் என்றால் அவன் வளர வளர எதிரிகளும் அதிகரிக்கவே செய்கிறார்கள். எதிரிகளை சரிகட்ட.. பணம்.. அரசியல் செல்வாக்கு..சில சமயம் இது போன்ற அடியாட்களின் உதவியும் தேவைப்படுகிறது.

 

ரெங்கு இந்த மாதிரியான ஆள் தான்.ஆனால் கேட்பவர்களுக்கு அவர்கள் சொல்லும் ஆட்களை தூக்கி வந்து இரண்டு தட்டு தட்டி மிரட்டி அனுப்பிவிடுவான். அதற்கான கூலி வாங்கி கொள்வான். அவசியமின்றி வேற எந்த அடிதடிக்கும் செல்லமாட்டான். அப்படிபட்ட பழக்கம் தான் அனிவர்த்துக்கு ரெங்கு…

 

அவர்களை அனுப்பி விடு என கை அசைத்தான். அவர்களை அழைத்து வந்ததது  போலவே.. அழைத்து சென்றுவிட்டான் ரெங்கு…

 

அசோக்கிடம்”இங்கு எல்லாம் செட்டில் பண்ணிட்டு வா..”

 

“ப்பா.. போகலாம்….” என பெற்றவர்களை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். வீடு வந்தவன் எதுவும் பேசாமல் தன் அறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டான்.

 

கங்கா அயர்ந்து போய் சோபாவில் பொத்தென அமர்ந்தார். கங்கா முகத்தை பார்த்ததும சிதம்பரம் பக்கத்தில் உட்கார்ந்து கங்காவின் கையை தட்டி கொடுத்து…

 

“கங்காம்மா… கவலைப்பட்டு உடம்ப கெடுத்துக்காத.. விடு பார்த்துக்கலாம்..”

 

“இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி பேரன் பேத்திகள பார்க்க ஆசைப்பட்டேன்.. அது ஒரு தப்பா.. எனக்கு அந்த கொடுப்பினை இல்லையா… நான் வச்சிருக்கறது ஒரு பையன் அவனுக்கு கல்யாணம் பண்ண எவ்வளவு போராட வேண்டி இருக்கு..  இனி இவன்கிட்ட இதைப் பத்தி பேசவே முடியாதே.. மறுபடியும் இவன் பார்ட்டி..பொண்ணுங்கனு ஆரம்ப்பிச்சிடுவானே.. எனக்கு நினைச்சாலே நெஞ்சுவலிக்கற மாதிரி இருக்கு..” என சொன்னவர் அழுக ஆரம்பித்து விட..

 

சிதம்பரம் தனது தோளில் சாய்த்து தட்டி கொடுக்க… கங்கா அழுகை நின்றதே தவிர.. மனம் நிலை கொள்ளவில்லை.

 

அனிவர்த் தனது அறையில் புலியாக உறுமிக் கொண்டு இருந்தான். ஒரு நாள் உறவுக்கு வரும் பெண்களே அழகாக நளினமாக இருப்பார்கள். வாழ்நாள் உறவாக வரும் பெண் அழகாக இல்லை என்றாலும் பார்க்கும் அளவிற்காகவது ஒரு பெண்ணை பார்த்திருக்கலாம்.அதை விட அழகு படிப்பு அந்தஸது எதிலும் தனக்கு ஒரு சதவீதம் கூட பொருந்தாத் ஒருவனுக்காக தன்னை நிராகரித்ததை தான் தாங்கிக் கொள்ள முடிவில்லை அனிவர்த்தால்… எனக்கா இப்படி… இதை போல ஒரு அவமானம் எதுவும் இல்லை. எல்லாம் இவர்களால் தான்.. நான் தான் வேண்டாம்னு சொன்னனே… கேட்டாங்களா.. இனி கல்யாணம் கருமாதினு பேசட்டும் இருக்குது…என கோபம் முழுவதும் தன் தாயின் மேல் திரும்பியது.

 

அனிவர்த்துக்கு ஒன்று தெரியவில்லை… புரியவில்லை..எல்லா பெண்களும் அழகுக்கும்  பணத்திற்கும் மயங்கமாட்டார்கள். மதிப்பு கொடுக்கமாட்டார்கள்..

 

அந்த பெண்ணின் தகப்பன் தான் வசதி வாய்ப்பிற்கு ஆசைப்பட்டாரே தவிர.. அந்த பெண் தன்னை காதலிப்பவனே  வாழ்க்கை துணையாக வரவேண்டும் விருப்பம் கொண்டாள்.



அதன் பிறகு அனிவர்த் தனது அம்மாவிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டான். ஏற்கனவே பேச்சு குறைவு தான் இப்போது சுத்தமாக பேசுவதில்லை. எதுனாலும் சிதம்பரத்திடம் மட்டுமே அவனின் பேச்சு இருக்க… கங்காவிற்கு மகனின் வாழ்க்கையை நினைத்து மனதளவில் ரொம்ப காயப்பட்டு இருக்க.. அனிவர்த்தும் பேசாமல் இருக்க… பெரிய மன உளைச்சலுக்கு ஆளானார்.

 

அனிவர்த்திடமும் பெரிய மாற்றம்… ஆபிஸ் வீடு என தன் வட்டத்தை சுருக்கி கொண்டான். வீக் எண்ட் கிளப் பார்ட்டி டேட்டிங் என எல்லாத்தையும் விட்டுட்டான்.. விட்டுட்டான் என்ன.. அதில் எல்லாம் ஆர்வம் போய்விட்டது தொழிலை தவிர.. எதிலும் ஒரு பிடிப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. வார விடுமுறை நாட்களிலும் வீட்டிலேயே இருந்தான்.

 

மகனின் மாற்றம் சிதம்பரத்திற்கு நம்பிக்கையை கொடுத்தது. ஆனால் கங்காவிற்கோ மகனுக்கு வாழ்க்கை மேல் பிடிப்பு இல்லாமல் இப்படியே தனித்து நின்றுவிடுவானோ.. என பயந்தார்.

 

சிதம்பரம் தனது நம்பிக்கையை சொல்ல… கங்காவிற்கு அந்த நம்பிக்கை எல்லாம் இல்லை.. அதை சிதம்பரத்திடம் சொல்லி அவர் நம்பிக்கையை குலைக்க விருப்பாமல் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டார்.

 

ஒருநாள் மாலை சிதம்பரமும் கங்காவும் டிவி பார்த்து கொண்டிருந்தனர்.ஆபிஸில் இருந்து வந்த அனிவர்த தனது தந்தையிடம் இரண்டாயிரம் தாள்கள் அடங்கிய சில கட்டு பணத்தை கொடுத்தவன்…

 

“ப்பா.. இதுல ஒரு கோடி இருக்கு.. அந்த ப்ளாட்ட வித்துட்டேன்.. இந்தாங்க.. நீங்க பார்த்து எதுனாலும் செஞ்சுக்குங்க…” என சொல்லி விட்டு  தனது அறைக்கு சென்றுவிட்டான்.

 

ஒரு ஞாயிறு அன்று தனக்கு சில உடைகள் எடுக்க வேண்டும் என தந்தையிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான். தான் வழக்கமாக எடுக்கும் ப்ராண்டட் ஷோரும் சென்று தனக்கு தேவையானதை வாங்கி கொண்டு வெளியில் வந்தவன் ஐஸ்கிரீம் பார்லரை பார்த்தவுடன்.. அதனுள் நுழைந்தான். தனக்கு ஒரு கேசர்பிஸ்தா ஐஸ்கிரீம் ஆர்டர் சொல்லிவிட்டு அமர்ந்திருந்தான்.

 

“மாமா.. யூ ஆர் சீட்டிங் மீ..” 

 

மழலையின் குரலை கேட்டதும் ஷாஷிகா என தெரிந்து கொண்டவன்.. தனக்கு எதிரில் இருந்த டேபிளில் பார்க்க… அங்கு ஷாஷிகா ஒரு இளைஞனிடம் சண்டையிட்டு கொண்டு இருந்தாள்.

 

“நோ.. நோ.. பேபி..”

 

“மாமா..மா..ஆ..”

 

“ஓகே.. ஷாஷிகா.. ஓகே..”

 

“நீ எனக்கு பைவ் ஐஸ்கிரீம் வாங்கி தரேனு சொன்னல்ல.. இப்ப டூ ஐஸ்கிரீம் தான் வாங்கி தந்திருக்க.. இரு.. இரு.. உன்ன பாட்டிகிட்டயே மாட்டிவிடறேன்.. நீ தக்சாவ பார்த்து கண்ணடிச்சில்ல… அத பாட்டிகிட்ட சொல்லாம இருக்க.. பைவ் ஐஸ்கிரீம் வாங்கி தரேனு சொல்லி இப்ப டூ தான் வாங்கி கொடுக்கற…” என விரல் நீட்டி மிரட்டிக் கொண்டு இருந்தாள்.

 

ஷாஷிகாவின் உடல்மொழியும் வாய்மொழியும் அப்படி ஒரு அழகோவியமாக இருந்தது. அனிவர்த்தின் மனதை மணக்கச் செய்தது.

 

“ஷாஷி.. ரிமைனிங் ஐஸ்கிரீமை நெக்ஸ்ட் வீக் வாங்கி தரேன்.. கோல்ட் வந்திடும்… குட்டில்ல.. செல்லம்ல்ல.. பாட்டிகிட்ட சொல்லகூடாது. ப்ராமிஸா வாங்கி தரேன் ப்ளீஸ் “என கெஞ்ச…

 

“ஓக்கே.. ஓகே.. பட் சீட்டிங் பண்ணனும் நினைச்ச.. பாட்டிகிட்ட சொல்லிடுவேன்..” என மீண்டும் மிரட்டினாள்.

 

“சரி வா போகலாம்..” என அவன் ஷாஷிகாவை அழைத்து கொண்டு செல்ல.. எங்கே ஷாஷிகாவோடு பேச முடியாமல் போய் விடுமோ என… அனிவர்த் வேகமாக “ஷாஷிகா..”என அழைத்தான்.

 

திரும்பி பார்த்த ஷாஷிகா.. அனிவர்த்தை பார்த்ததும் முகம் எல்லாம் பூவாக மலர.. தன் மாமனின் கையை உதறிக் கொண்டு அனிவர்த்திடம் ஓடி வந்தாள்.

 

“ஹாய் அங்கிள்..”

 

“ஹாய் ஷாஷிகா..”

 

“ஐஸ்கிரீம் சாப்பிட வந்திங்களா..”

 

“ம்ம்ம்..”

 

அப்போது தான் தனக்கு வந்த தான் சாப்பிடாமல் இருந்த ஐஸ்கீரீமை காட்டி “ம்ம்ம் சாப்பிடறியா…” என்றான்.

 

கேசர்பிஸ்தா ஐஸ்கிரீம்… நல்லா குங்கும்ப்பூ பாதாம் பிஸ்தா பருப்பு பன்னீர்ரோஜா இதழ்கள்  எல்லாம் மேலே அழகாக டாப்பிங்ஸ் செய்யப்பட்டு இருந்ததை பார்க்க ஷாஷிகா நாக்கை சுழட்டி சப்பு கொட்டினாள் குழந்தை.

 

அவள் செயலில் வசீகரிக்கப்பட்ட அனிவர்த் தன் உள்ளங்கையில் வைத்து நீட்ட…  மறுப்பாக  தலை அசைத்தாள் இளையாட்டி..

 

8 thoughts on “ஆடி அசைந்து வரும் தென்றல் – 7”

Leave a Reply to Shaahithya Srinivasan Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top