ATM Tamil Romantic Novels

ஆடி அசைந்து வரும் தென்றல் – 8

8- ஆடி அசைந்து வரும் தென்றல்



                “ஏன்டா.. மா..”என்றான் வாட்டமாக..

 

அதற்குள் அவளின் மாமா அருகில் வந்துவிட்டான். மாமனை பார்த்தவள் திரும்பி அனிவர்த்திடம்…

 

“தெரியாதவங்க எது கொடுத்தாலும் சாப்பிடகூடாதுனு மம்மி சொல்லியிருக்கறாங்க..”

 

“நான் உனக்கு தெரியாதவனா..” என கேட்டான் ஏமாற்றமாக…



“எக்ஸ்கியூஸ் மீ.. நீங்க யாருனு எனக்கு தெரியல… பட் ஷாஷி உங்கள இதுக்கு முன்னாடி பார்த்திருக்காளா.. அவ அப்படி தான் சட்டுனு பழகிடுவா… தேங்க்ஸ்..”

 

“வா ஷாஷி போகலாம்..”

 

“பை அங்கிள்..”என ஷாஷிகா சென்றுவிட… சட்டென அனிவர்த்தின் உலகம் வானிநிலை தவறிய வானமாக மாறியது..

 

வீட்டிற்கு வந்த பிறகும் அன்று முழுவதும் ஷாஷிகாவே அனிவர்த் மனதை நிறைத்திருக்க.. அனிவர்த்தின் மனமும் இதமான மனநிலையில் இருந்தது. அவனின் வெறுமையை பூரணமாக ஷாஷிகாவின் நினைவுகள் ஆக்ரமித்து கொண்டது.

 

ஒரு சின்ன குழந்தையால் தன் மனதை நிறைக்க முடியுமா… அப்படி எனில்  தான் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாமா.. என யோசித்தான். காலையில் பெற்றவர்களிடம் இதை பற்றி பேசவேண்டும் என முடிவு செய்தவன் நிம்மதியாக தூங்கினான்.

 

தத்து எடுப்பது பற்றி முடிவு செய்துவிட்டானே தவிர அவனுக்கே ஷாஷிகா இன்றி வேற குழந்தையை பிடிக்கும் என்று தெரியவில்லை. தன் அம்மா சொல்வது போல கல்யாணம் செய்து கொள்ளலாம் என்றால் அதிலும் ஈடுபாடு வரவில்லை. ஏனோ எந்த பெண்ணுடனும் உறவு வைத்து  கொண்டாலும் ஆதாரம் ஆதாயம் என்று வருபவர்களிடம் இயற்கையாகவே ஒரு இணக்கமான உறவாக அது இல்லை. இவன தரும் பொருளுக்காக அவனை சந்தோஷப்படுத்தும் முயற்சியில் எல்லாம் மிகையாகவே செய்தனர். அது அவனுக்கு ஒரு வெறுப்பையே கொடுத்தது.



அனிவர்த்தின் மனதையும் ஒருத்தி நெருங்கி இருந்தாள் தான். அப்படி ஒரு காதலோடு… சுயநலமில்லா அர்ப்பணிப்போடு… அவனை ஒரு ராஜகுமாரனாக தன் நேசத்தால் உணர வைத்திருந்தாள். அதையும்  எப்பவும் போல தனது கலவி களியாட்டங்களில் ஒன்றாக நினைத்து கடந்து வந்துவிட்டான். ஆனால் காரிகையின் நேசம் அவனையறியாமலே அவனின் ஆழ்மனதில் தங்கிவிட்டது.



அதன்பிறகு எந்த பெண்ணுடனான உறவிலும் அவனுக்கு திருப்தி இல்லை. அவன் எதை எதிர்பார்க்கிறான் என அவனுக்கே புரியவில்லை. வருடங்கள் செல்ல செல்ல..  சலிப்பு தட்டி… நாட்டம் குறைந்து… சுத்தமாக நின்றுவிட்டது. அதன் பிறகு மனதில் ஒரு வெற்றிடம்.. ஷாஷிகாவுடனான நட்பு வெற்றிடத்தை கொஞ்சம் ஈட்டு நிரப்பியது. ஷாஷிகாவை பார்க்கும் போது அப்படி ஒரு பரவசம்.. பேசும் போதும்..  பழகும் போதும்… மனதிற்கு நெருக்கமாக உணர்ந்தான்.

 

பலவற்றையும் நினைத்து வெகு நேரம் கழித்தே உறங்கினான்.இருந்தபோதிலும் காலையில் வழக்கமாக அலுவலகம் செல்லும் நேரத்திற்கு கிளம்பி வந்தவன்… டைனிங்கில் இருந்த பெற்றவர்களிடம் சென்றான்.  

 

சிதம்பரம்”என்ன அனிவர்த் ஆபிஸ்கு கிளம்பிட்டயா..”

 

“ஆமாம்பா…” என்று தந்தையிடம்  பதில் சொன்னாலும் பார்வை எல்லாம் தாயிடம் தான்… அவனுக்குமே இவ்வளவு நாட்களாக பேசாதிருந்தது என்னவோ போல இருக்க.. இப்பொழுது பேச நினைத்தாலும்  ஒரு சிறு தயக்கம்.. 

 

கங்காவோ மகன் கல்யாணம் நின்றது மட்டும் அல்லாமல்  உறவினர்களின் ஏச்சு பேச்சிற்கு ஆளாக நேரிட்டுவிட்டதே… அதுவும் மகனை அவமானப்படுத்திவிட்டார்களே… எல்லாம் தன்னால் தானே என்ற குற்ற உணர்வில் இருந்தவர்… நாளாக குற்றணர்வு வருத்தமாக மாறி… வருத்தம் கோபமாக மகன் மேல் திரும்பியது.

 

நான் என்ன எல்லா அம்மாவை போல மகனுக்கு ஒரு கல்யாணம் தானே செய்ய ஆசைப்பட்டேன். அந்த இடத்தில் இவனின் ஒழுக்க கேடான செயல் தான் பேச்சிற்கு இடமானது. இவனால் நாங்கள் தான் அசிங்கப்பட்டோம். இவன் பேசாமல் இருப்பானா.. இனி நான் பேசப் போவதில்லை என கோபத்தை மகன் மேல் திருப்பிக் கொண்டு.. முறுக்கிக் கொண்டு இருந்தார்.

 

ஆனால் அனிவர்த்கு அப்படி இல்லையே… 

 

“மாம்.. ம்மா..”என்றான் தாயைப் பார்த்து…

 

கங்கா கண்டு கொள்ளாமல் கிச்சன் உள்ளே செல்ல.. பின்னாலயே சென்றான். 

 

“ம்மா.. என்கிட்ட பேசுங்க.. இங்க பாருங்க…” என தன் அம்மாவின் முகத்தை  தனபுறம் திருப்பினான். 

 

கங்கா அனிவர்த்தின் முகம் பார்த்து “நீ தான் என்கிட்ட பேசாம இருந்த..”

 

“அதான் இப்ப பேசறேன்ல..”

 

“இப்ப நீ வந்து பேசினா.. நான் பேசிடனுமா..”

 

“சாரி மாம்.. வெரி சாரி..”

 

“சாரி கேட்டா எல்லாம் சரியாகிடுமா.. உன்னோட அந்த ஜெர்மன் பழக்கம் எல்லாம் இங்க சரி வராதுனு எவ்வளவு தூரம் சொன்னேன் கேட்டியா… இப்ப பாரு இதனால உனக்கு கல்யாணம் எங்களால செய்யமுடியுதா.. எத்தனை பேர் எத்தனை கேட்டாங்க.. எவ்வளவு அசிங்கமா பேசினாங்க.. செய்யறது எல்லாம் நீ கோவிச்சுகிட்டு என்கிட்ட பேசாம இருப்ப.. நான் பேசனுமா.. முடியாது போடா…” என இவ்வளவு நாள் அனிவர்த் செய்ததற்கு நன்றாக திருப்பிக் கொடுத்தார்.

 

அச்சோ இந்தம்மா மலை ஏறிட்டாங்களே.. என நினைத்தவாறே…

 

“மாம்… என் செல்லம்ல… கங்காம்மா.. கருணை காட்டுங்க.. கங்காம்மா.. “

 

நீ பேசுடா இதுக்கு எல்லாம் மயங்குவேனா…என இருக்க…

 

“கங்காம்மாவின் ஒரே மகனுக்கு வந்த கஷ்டத்தப் பார்த்திங்களா.. கடவுளே…” என மேலே இரண்டு கைகளையும் தூக்கி தலையை உயர்த்தி புலம்ப…

 

அவனின் செயலில் கங்கா சட்டென சிரித்துவிட்டார். தாயின் சிரிப்பை கண்ட அனிவர்த் கங்காவை அப்படியே தனது தலைக்கு மேல் தூக்கி சுற்ற.. 

 

“டேய் விடுடா.. கீழ போட்டு இடுப்ப ஒடிச்சுறாத.. இன்னும் பேரன் பேத்திகளை கூட இடுப்புல தூக்கல..”என கத்த.. தன் அன்னையை கீழே இறக்கி விட்டவன்.. தாயின் கன்னத்தில் முத்தம்  வைத்தான்.

 

கங்கா கன்னத்தை துடைத்தவாறே…”இங்க பாரு இப்படி எல்லாம் முத்தா வைக்காத.. அந்த ரைட்ஸ் எல்லாம் என் சிதம்பரத்திற்கு மட்டும் தான்..”என்றார்.

 

மனைவியின் பேச்சை ரசித்தவர் மகன் முன் என்ன இதெல்லாம் என பார்வையால் கண்டிக்கவும் செய்தார.

 

மனைவி மகனின் சேட்டைகளை அமைதியாக ரசித்துக் கொண்டு இருந்தார் சிதம்பரம். 

 

ஒருவாறு மலையிறக்கினான் கங்காவை… 

 

“அப்பாடா.. மாம் சமாதானமாகியாச்சு…” என்றான் சிதம்ரத்திடம்

 

உடனே கங்கா மகன் இளகி இருக்கும் நேரம் இது தான் சரியான தருணம் என நினைத்து…

 

“அனிவர்த் கல்யாணத்துக்கு பார்க்கவா..”என மெதுவாக கேட்டார்.

 

அனிவர்த் முகம் இதுவரை இருந்த இளகு பாவம் நீங்கி இறுகி போனது. பேசாமல் அமைதியாக இருக்க… கங்காவோ சிதம்பரத்திடம் பேசுங்க என கண்களால் உத்தரவிட…

 

“ம்ம்.. என்ன சொல்லு அனிவர்த்..”சிதம்பரம் கேட்க..

 

“ப்பா…சொன்னா புரிஞ்சுக்குங்க… எனக்கு கல்யாணம்.. அதுல அவ்வளவு இன்ட்ரஸ்ட இல்ல… “

 

“இப்படி சொன்னா எப்படிப்பா… காலம்  பூரா இப்படியே இருந்திட முடியாது. வயசாகும் போது மனசு ஒரு துணையை தேடும். யாரும் எப்பவும் தனித்து வாழ முடியாது. ஆணோ.. பெண்ணா ஒரு துணை அவசியம் தேவை அனிவர்த்”என ஒரு தகப்பனாக பொறுமையாகவே எடுத்து சொன்னார்.

 

சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக ஏதோ சிந்தனையில் இருந்தவன் ஒரு பெருமூச்சோடு…

 

“எனக்கு தோனும் போது நானே சொல்றேன்பா…”என சொல்லி விட்டு சாப்பிடாமல் கூட கிளம்பிவிட்டான்.

 

“என்னங்க…  இப்படி சொல்லிட்டு போறான்”என்றார் கங்கா கலக்கமாக…

 

“விடும்மா.. பார்த்துக்கலாம்.. “என்று சொன்னாலும் அவருக்கும் மகனின் பேச்சில் கலங்கி தான் போனார்.

அன்று அலுவலகத்தில் கூட வேலையில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தான் அனிவர்த்.. ஏற்கனவே இருந்த மன குழப்பம்…தன் தந்தை சொன்னது… எதிலும் கவனம் செல்லவில்லை. ஏனோ ஷாஷிகாவைப பார்க்கனும் போல இருக்க… அவள் வழக்கமாக வரும் பூங்காவிற்கு அவனாகவே தேடிச் சென்றான்.

 

இவன் போன போது ஷாஷிகா வந்திருக்கவில்லை. அவளுக்காக காத்திருந்தான். சற்று நேரத்தில் வந்தவள் அனிவர்த்தை கவனிக்கவில்லை. தன நண்பர்களோடு விளையாடி கொண்டிருந்தாள். அனிவர்த்தும் அவளை அழைக்காமல் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்தே அவளையே பார்த்துக் கொணாடிருந்தான்.

 

பார்க்க.. பாரக்க.. அவன் மனம் அலைப்புறுதல் அடங்கி.. சாந்தம் கொள்ள.. அதை சிந்தனை ஏதுமின்றி அனுபவித்துக் கொண்டு இருந்தான். 

 

விளையாடி கலைத்துப் போய் அனிவர்த் அமர்ந்திருந்த பெஞ்சில் வந்து அமர்ந்தவள் அப்போது தான் அனிவர்த்தை கவனித்தாள்.

 

அவனை பார்த்ததில் அப்படி ஒரு ஆனந்தம்.

 

“அங்கிள்… எப்ப வந்திங்க.. வாக்கிங் வந்திங்களா..”

 

“இல்லை..ஷாஷி.. சும்மா வந்தேன்..”

 

“ஓ.. நான் விளையாட வந்தேன்..”

 

“தினமும் வருவியா..”

 

“இல்ல.. குவிக்கா ஹோம்வொர்க் முடிச்சிட்டா… மம்மி விளையாட விடுவாங்க..”

 

“உங்க வீடு இங்க தான் இருக்கா..”

 

“ம்ம்.. அதோ.. அது தான்.. டி தேர்டி…”என சற்று தள்ளி எதிரில்  இருந்த அப்பாரட்மென்டை காண்பித்தாள்.

 

 அனிவர்த் ஷாஷிகாவோடு பேசிக் கொண்டு இருந்தான். அனிவர்த் பேச்சுக்கள் ஓரிரு வார்த்தையில் இருக்க.. ஷாஷிகா தான் வாய் ஓயாமல் பேசினாள். இளையாளின் பேச்சுக்களை காதில் வாங்கி மூளையில் பதிவு செய்ய… அவளின் முகம் காட்டும் நவரசங்களை… பரவசங்களை.. மனதில் பதிவு செய்ய.. தனியொரு  உலகில் வாழ்ந்து கொண்டிருந்தனர் இருவரும்…

 

“ஷாஷி.. வா.. லேட்டாகிடுச்சு..”என்ற குரல் இவர்களின் உலகில் உத்தரவின்றி உள்நுழைய… அனிவர்த் மனம் சுணங்க.. கூப்பிட்ட தோழனை கண்டு ஷாஷிகா…

 

“இருடா.. டீனு.. வரேன்”என கையாட்டி சொன்னவள்.. அனிவர்த்திடம்…

 

“பை அங்கிள்…” என சொல்லி விட்டு பட்டாம்பூச்சியாக பறந்துவிட்டாள்.

 

1 thought on “ஆடி அசைந்து வரும் தென்றல் – 8”

Leave a Reply to Babubuvana 1982@gmail.com Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top