ATM Tamil Romantic Novels

6 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

     6 – புயலோடு பூவுக்கென்ன மோகம




        அன்று பௌர்ணமி… ஏகாந்தமான இரவு வேளை…. மிதமான ஏசி குளிர் அந்த அறையை நிறைத்திருக்க…. வீராவும் நிகிதாவும் தங்கள் சுயக்கட்டுப்பாட்டில் இருவருமே இல்லை.

 

          படுக்கைக்கு வரும்போது சரி வந்த பின்பும் சரி இருவரும் ஒருவரை ஒருவர் இம்மியளவு கூட இடைவெளியின்றி இணைந்து  பிணைந்து தான் இருந்தனர்.  



  வீரா அவள் இதழ் ரச போதையில் நீண்ட நேரம் திளைத்திருக்க..அவள் இதழின் தித்திப்பு எல்லாம் திகட்டி போக.. அவன் உதடுகள் நிகிதாவின் முகமெங்கும் முத்தங்களாக இன்றி இதழ் தீண்டலாக… உலா செல்ல…

 

அவனின் இதழ் தீண்டல் அவளின் காதல் உணர்வின்  முடிச்சுக்களை எல்லாம் மொட்டவிழ்க்க… நிகிதா முதன்முதலாக  காதல் என்ற உணர்வுக்குள் இழுத்து செல்லப்பட்டாள் வீராவால்.. 

 

பெண்ணவளின் தேகமோ…மலரினும் மெல்லிய தேகம்.. பார்லரின் உபயோகத்தில் மேலும் பட்டு போல வளவளக்க… கண்ணாளனுக்கோ.. மலர் தேக ஸ்பரிசமோ பித்துக் கொள்ள செய்தது

 

வீரா நிகிதாவை மெல்ல மெல்ல… மிக மிக மென்மையாக…நிதானமாக… பூவை போல… தயங்கி தாங்கி… ஒவ்வொரு அடியாக முன்னேறி அவள் அழகில்  திளைத்து… திக்குமுக்காடி… காதலாடி  கொண்டாடி  தீர்த்தான் தன் இணையை…

 

ஒவ்வொரு தீண்டலுக்கும் “அமுல் பேபி” “அமுல் பேபி” என கொஞ்சி  கொஞ்சியே காரியம் சாதித்து கொண்டான். போதைக்கு அடிமையாக  இருந்தாலும் பெண்மையை மென்மையாக தான்  கையாண்டான்.அவனின் மென்மையான நிதானமான  தொடுகையே…நிகிதாவிற்கு வீராவின் மேல் ஈர்ப்பு கூட காரணமானது.



அவனோ காமத்தின் பிடியில்… இவளோ காதலின் சுவடில்….விடிய விடிய…. மன்மத தேசத்தில் இந்திர விழா அரங்கேறியது.




மன்னவன் தான் சுய நினைவின்றி போதையின் மயக்கத்தில்… மங்கையவளோ சுய நினைவோடே மன்னவனை தாங்கி கொண்டாள்.

 

 

காதல் அவளை ஆட்கொண்ட நொடி வீராவின் மேல் அவள் கொண்ட  அபத்தம் எல்லாம் பிடித்தமாக மாறின. வீராவின் மேல் கொண்ட வெறுப்பு எல்லாம் விருப்பமாக மாறிய தருணம் அது.



“வீரா” என்று உருகியவளை “மாமா சொல்லுடி அமுல் பேபி” என படுத்தி எடுத்தான். அவளின் “மாமா” என்ற ஒவ்வொரு அழைப்பிற்கும் அவன் அணைப்பின் வேகம் கூடியது.



விடியலின் நெருக்கத்தில் பெண்ணவளை விட்டு நீங்கியவன் அமுல் பேபி அமுல் பேபி என பிதற்றி கொண்டே நிகிதாவை அள்ளி தன் மாரின் மேல் போட்டு அணைத்தவாறே உறங்கி போனான்.

 

 

கணவனின் ஆளுமை  நிகிதாவின்  மனதிற்கு நிறைவாக பூரிப்பாக  இருக்க… இது நாள் வரை ஆண் பெண் பேதமின்றி எல்லோரிடமும்  விகல்பமில்லாமல் பழகியவளுக்கு… தன் ஆண் தன்னிடம் கொண்ட மோகம் எல்லாம் புதிதாக இருக்க.. பிடித்தும் இருந்தது.  அவனோடு ஒன்றி இறுக அணைத்து களைப்போடு  உறங்கினாள்.



விடிந்து வெகுநேரம் ஆன போதும் இருவரும் கீழே இறங்கி வராததால் பெரியவர்கள் இருவரும் கவலையுடன் மாடியையே பார்த்து கொண்டு இருந்தனர்.

 

எப்பவும் நிகிதா நேரம் கழித்து தான் எழுந்து வருவாள். வீரா விடியலில் எழுந்து தனது உடற்பயிற்சி முடித்து குளித்து தயராகி தனது அலுவலை பார்க்க சென்று விடுவான். இன்று அவனும் வராததால் இரவு அவன் எப்போது வந்தான் என்பதும்  தெரியாததால் பாட்டி தான் மிகவும் கவலை கொண்டார்.

 

 மங்களம் பாட்டி எப்பவும் வீரா விசயத்தில் மிகவும் கவனமாக இருப்பார். விருப்பமில்லாமல் தான் இங்கு இருக்கிறான்.. எதையும் அவனாக கேட்கமாட்டான்… எனவே அவனுக்கு எந்த ஒரு சவுகரியம் குறைவான.. சங்கடமான  நிலை ஏற்படகூடாது என்பதில் தெளிவாக இருந்தார்.



வீரா விழித்து எழுந்த போது வழக்கம் போல நிகிதா அவனை அணைத்து படுத்திருக்க…அவளை பிடித்து  தள்ளிவிட்டான். அதில் உறக்கம் கலைந்து எழுந்தவள்.. இருவரின் நிலை கண்டு நாணம் கொண்டு அவசரமாக திரும்பி அமர்ந்து கொண்டாள்.

 

அப்போது தான் வீராவும் கவனித்தான் இருவரையும்…படுக்கையும்… நடந்ததை ஊகித்தவன் தன் மேலேயே எரிச்சல் கொண்டான்.இரவு என்ன நடந்தது என்று யோசிக்க.. யோசிக்க…தலைவலி மண்டையை பிளக்க ஆரம்பித்தது.

 

தலையை கையில் தாங்கியவாறு உட்கார்ந்திருந்தவனை கண்ட நிகிதா…அவனின் தலைவலிக்கான காரணம் அறிந்து.. தன் உடையை சரிபடுத்தி கொண்டு கீழே வேகமாக சென்றாள்.



இவர்களின் அறையையே பார்த்து கொண்டு இருந்த பாட்டி நிகிதா வேகமாக இறங்கி வந்து கிச்சனுக்கு செல்வதை பார்த்தவர்.. என்ன என தெரியவில்லையே 

பதறி பின்னோடு சென்றார்.

 

அங்கு நிகிதா லெமன் ஜீஸ் செய்து  கொண்டு இருப்பதை கண்டவர்.. புரியாமல்..

 

“என்ன  பண்ணிட்டு இருக்க..  எதுக்கு காலங்கார்த்தால  லெமன் ஜீஸ்..”

 

என்ன சொல்வாள். சொன்னால் அவ்வளவு தான்.. தொலைத்துவிடுவார்கள். செல்ல பேரன் அவனை குடிக்க வைத்தது தெரிந்தால்.. போச்சு  வசமாக மாட்டிக் கொண்டேன் என பதட்டத்துடன் நின்றாள்.

 

“கேட்கிறேன்ல.. சொல்லு” என அதட்டி.. அவள் முகம் பார்க்க…  அவளோ பார்வையை தழைத்து  கொண்டு எங்கோ பார்த்தாள்.

 

அவள் முகத்தில் கழுத்தில் சில இடங்களில் வீராவின் பல் தடயங்கள்.. அவளின் உடல்மொழி எல்லாம் வேறு சொல்ல… நடந்தவற்றை ஒருவாறு யூகம் செய்தவர் மேற்கொண்டு அவளை எதுவும் கேளாமல் “சரி போ..”என்றிட..

 

விட்டால் போதும் என அடித்து பிடித்து ஓடி வந்துவிட்டாள்.வீராவிடம் லெமன் ஜீஸை நீட்ட..என்ன என்பது போல அவளை நிமிர்ந்து பார்த்தான்.

 

“இல்ல.. உங்களுக்கு கொஞ்சம் ஹேங்ஓவர் ஆகிடுச்சு.. அதான் லெமன் ஜீஸ் எடுத்து வந்தேன்”என தயங்கியவாறு சொல்ல…

 

சடாரென வேகமாக எழுந்தவன்”ஏன்டி என்னை உசுப்பேத்தி குடிக்க வச்சதும் இல்லாம.. இப்ப லெமன் ஜீஸ் வேற தரீயா…என்ன நெஞ்சழுத்தம்டி உனக்கு..”

 

அவன் கோபமாக எழுந்த போதே பயத்தில் ஓரடி பின்னால் நகர்ந்தவள் பயத்துடனே..

 

“இது குடிச்சா… சரி.. ஆகிடும்..” சொல்ல…அவளிடம் இருந்து பிடுங்கி ஒரே மிடறாக குடித்து முடித்தான்.



டிரிங்க்ஸா இருந்தாலும்.. ஜீஸா இருந்தாலும் கல்ப்பா தான் அடிப்பாரா.. என அவனை ஆவென வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்தாள்.

 

  குடித்திருந்த ஜீஸ் அவனை கொஞ்சம் தெளிய வைத்திருக்க..நடந்தது எல்லாம் ஓரளவுக்கு நிழலாக அவனுக்கு தெரியப்படுத்த… ச்சே நானா இப்படி இவளை பிடிக்கலைனு சொல்லிட்டு இவகிட்டேயே இப்படி நடந்து இருக்கேனே…  என தலையில் அடித்து கொண்டான்…. ஏற்கனவே கோபத்தில் கனன்று கொண்டு இருந்தவனுக்கு அவள் பார்வை மேலும் தூபம் போட…



எல்லாம் இவளால் தானே..இவள் தானே அந்த கருமத்தை வீடு வரைக்கும் கொண்டு வந்தாள். வந்தது மட்டுமில்லாமல் என்னிடம் சண்டை போட்டு என்னையவே குடிக்க வைத்துவிட்டாள் என தன் இயலாமையை எல்லாம் கோபமாக அவள் புறமே திருப்பினான்.



“என்னடி என்னை அப்படி பார்க்கற.. என்னையும் உன்ன மாதிரி குடிகாரனா ஆக்கிடலாம். அப்ப தான் உனக்கு வசதியா இருக்கும்னு பார்க்கறியா…”

 

“இல்ல.. அப்படி எல்லாம்..” அவளை பேசவிடாமல்..

 

“இல்லைனா.. எதுக்குடி அதை  ரூம் வரைக்கும் எடுத்திட்டு வந்த.. எனக்கு தெரியும் என்கிட்ட சண்டை போட்டதே என்னை குடிக்க வைக்கத் தான..”

 

ஐயோ  கண்டுபிடிச்சிட்டானே.. திரு திருவென முழித்தாள்.

 

“என்னடி முழிக்கற.. அப்ப எல்லாமே ப்ரீ பிளேனிங்கா தான் செஞ்சிருக்க.. என்னை குடிக்க வச்சு.. என்னை மயக்கி… உன் இஷ்டத்துக்கு என்னை ஆட்டி படைக்க பார்த்திருக்க..” 

 

அடப்பாவி நானாடா உன்னை மயக்கினேன்.. நீ தானடா இங்க வலிக்குதுனு நெஞ்ச தொட்டு  புலம்பின.. வலிக்கு ஒத்தடம்  கொடுத்தது ஒரு குத்தமாடா என நினைத்து அவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.



அவளின் முறைப்பு மேலும் கோபத்தை தூண்ட.. நிதானம் இழந்து வார்த்தையை தவறவிட்டான்

 

“எவ்வளவு திமிரா  முறைக்கிற.. என்ன குடிக்க வச்சு.. காரியம் சாதிச்சுகிட்டே இல்ல.. நானும் புத்தி கெட்டு போயி.. உன்னைய தொட்டு இருக்கேன் பாரு.. நினைச்சாவே அருவருப்பா இருக்கு…”என தோளை குலுக்கி கொண்டு சொல்ல… 

 

பங்குனி மாதத்தில் பூக்கும் வேப்பம்பூ சிறியதாக இருந்தாலும் அதன் வாசனை அதிகமாக இருக்கும் அதுபோல பெண்ணவளின் மனதில் பூத்திருந்த காதல் ஒரு இரவில் பூத்ததாக இருந்தாலும்..மனம் முழுவதும் வியாபித்து  மணம் பரப்பிக் கொண்டு இருந்தது.



வீராவின் அருவருப்பு என்ற வார்த்தையிலும்… பாவனையிலும் அவளின் மண(ன)ம் நிறைந்த காதல் அடி வாங்கியது. 

 

அவள் கண்களில் கரகரவென கண்ணீர் இறங்கியது. இது நாள் வரை கண்ணீரே அறியாத  அவள் கண்கள் வெந்நீரை சிந்தின..

 

அதையும் நடிப்பு என அவளை சாடினான். “என்னடி நீலி கண்ணீர் வடிக்கற..அழுதா நல்லவனு நம்பிடுவேனா..” என அவளை பிடித்து தள்ளி விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.



குளித்து அலுவலகம் செல்ல  தயராகி வந்தவன் அவளை திரும்பியும் பாராமல் வேகமாக சென்றுவிட்டான். 

 

அவன் தள்ளிவிட்டதில் படுக்கையில் குறுக்காக விழுந்தவள் அழுது கொண்டு இருக்க.. அவன் தன்னை பாராமல் சென்றதில் மேலும் அழுகை கூடியது.

 

வீரா சாப்பிட டைனிங்கிற்கு வரவும் பாட்டி பரிமாற சென்றார். அருகே அமர்ந்து அவனுக்கு பரிமாறியவர் அவனையே கூர்ந்து பார்த்து கொண்டு இருந்தார்.

 

காலையில் பேத்தியை கவனித்ததில் அவர் மனதில் ஏற்பட்ட சந்தோஷம் வீராவின் முகத்தில் தெரிகிறதா… என பார்க்க.. அவன் முகம் இறுகி கடுகடுப்பாக இருக்க…



என்ன என தெரியாமல்..குழம்பி.. அவனை எதுவும் கேட்டு சங்கடபடுத்தாமல் அமைதியாக அவனுக்கு பரிமாறினார்.

 

எப்பவும் பெரியவர்களிடம் சொல்லி விட்டு கிளம்புபவன்.. தான் நடந்து கொண்டதை நினைத்து குற்றவுணர்வில் இருந்தவன் சொல்லாமலயே சென்றுவிட…

 

சொக்கலிங்கம் பேரன் சொல்லாமல் செல்வதை கண்டவர் மங்களத்திடம்

 

“மங்களா.. என்னாச்சு பேராண்டி சொல்லாம கிளம்பிட்டான். முகமே சரியில்லை..”என கேட்க…

 

மங்களம் கணவரின் அருகே அமர்ந்து மெல்லிய குரலில் காலையில் பேத்தி வந்ததையும்.. வீராவின் கடுகடுப்பையும் சொல்லி தான் ஓரளவு நடந்ததை கணித்தவர்

 

“நடந்தது சந்தோஷமான விசயமா இருந்தாலும்.. இருவரும் சந்தோஷமா இல்லை.. என்ன சொல்ல.. புரிஞ்சுகாத புள்ளைகளா இருக்காங்களே..”என சலிப்பாக பெருமூச்சு விட்டார்.

 

“விடு மங்களா..எல்லாம் சரியாகும்.. வீரா எல்லாம் சரி பண்ணிடுவான்”என சமாதானம் செய்தார் சொக்கலிங்கம். வீராவை தான் சரி பண்ணனும் என அவருக்கு தெரியவில்லை பாவம்.

 

அழுது கொண்டு இருந்தவள் மதிய உணவுக்கு கூட கீழே இறங்கி வரவில்லை.நிகிதா வராததால் மங்களம் பாட்டி அவளை பார்க்க அவர்கள் அறைக்கு சென்றார்.

 

நிகிதா அழுதழுது கண்கள் சிவந்து முகம் எல்லாம் வீங்கி ரோஜா நிறத்தில் கன்றி போய் இருக்க.. தேம்பிவாறு குப்புற படுத்திருந்தாள்.

 

பார்த்ததும் கோபம் தான் வந்தது பாட்டிக்கு.. என்ன பெண் இவள் என…

 

“ஏய் நிகிதா.. எதுக்கு இப்படி அழுதுகிட்டு இருக்க… எந்திரி முதல்ல..” என்றார் அதிகாரமாக..

 

எப்பவும் பாட்டியின் அதிகாரத்தில் சிலிர்த்து கொண்டு நிற்பவள்.. எழுந்து அமைதியாக அமர்ந்தாள்.

 

“என்ன நடந்துச்சுனு இப்படி அழுதுகிட்டு இருக்க…”

 

“கேட்கறன்ல பதில் சொல்லு”

 

அதற்கும் அவள் அமைதியாக இருக்க…

 

இவளுக்கு பிடிக்காமல் பேரன் வலுகட்டாயமாக ஏதாவது செய்து விட்டானா..அப்படி செய்யகூடியவன் இல்லை.என்ன நடந்தது என தெரியலையே இப்படி அழுகறாளே.. எப்படி கேட்பது..என யோசித்தவர்….

 

“வீரா.. உன்கிட்ட.. உனக்கு பிடிக்காம.. தப்பா நடந்துகிட்டானா..”என தயக்கமாக கேட்க…

 

இல்லை என தலை அசைத்தாள்.

 

“அப்புறம் எதுக்கு அழுகற..இப்ப என்ன நடந்துச்சுனு சொல்ல போறியா இல்லையா..” என்று சத்தமிட..

 

பயத்துடன் தலை குனிந்து ரூபேஷ் ட்ரிங்ஸ் வாங்கி கொடுத்தது.. வீட்டுக்கு கொண்டு வந்தது.. வீராவிடம் வம்பு செய்து அவனை குடிக்க வைத்தது.. என எல்லாம் சொன்னவள்.. அதற்கு மேல் நடந்தவற்றை சொல்ல தயங்கி..

 

“ம்ம்..அப்புறம் அவங்க.. என்கிட்ட..”

 

இதை எல்லாம் கேட்ட பாட்டிக்கு கோபம் தாறுமாறாக ஏற..

 

“ஏய் உனக்கு எவ்வளவு கொழுப்புடி.. அவனை குடிக்க வச்சிருக்க.. குடிச்சிட்டு அவன் தப்பா நடந்துகிட்டானு புகார் வாசிக்கறியா.. உன்னை.. “என அடிக்க கை ஓங்கி கொண்டு போக..

 

சட்டென அவரை கட்டி கொண்டு “தப்பா எல்லாம் நடந்துக்கல.. எனக்கு பிடிச்சிருக்கு.. மாமாவ எனக்கு பிடிச்சிருக்கு..” என தோள் சாய்ந்து அழுக…

 

அவள் சொன்னது புரிய ஓரிரு நிமிடங்கள் ஆக… புரிந்ததும் கோபம் போய் அடக்கமாட்டாமல் உல்லாசமாக சிரிக்க…

 

“கீரேனீ நான அழுதுகிட்டு இருக்கேன்.. நீங்க சிரிக்கறிங்க..”என சிணுங்கினாள்.

 

“அடியே ராஜாத்தி…இப்ப தான் பார்க்க அழகா இருக்க..” நெட்டி முறித்து திருஷ்டி கழிக்க…

 

“எது.. நா..அழுது வீங்கி இருக்கறதா..” என பொய் கோபம் கொண்டு முறைக்க..

 

“அதான் உன் மாமன.. பிடிச்சிருக்குல்ல.. அப்புறம் எதுக்கு அழுகறவ..”

 

“எனக்கு பிடிச்சிருக்கு..ஆனா மாமா.. என்னை பார்த்து அருவருப்பா இருக்குனு சொல்லி.. தள்ளிவிட்டு போய்டாங்க..” என மீண்டும் தேம்பி கொண்டு அழுக..

 

“முதல்ல அழுகையை நிறுத்து.. நீ செஞ்ச வேலைக்கு வச்சு கொஞ்சுவானா.. “என திட்டியவர் பின்பு கொஞ்சம் பொறுமையாக..

 

“நீ செஞ்சது தப்பு தான.. அத நீ தான் சரி பண்ணனும். உனக்கு அவனை பிடிச்சிருக்குனு நீ தான் அவனுக்கு புரிய வைக்கனும்” என சொல்ல..

 

“புரிஞ்சுப்பாங்களா.. மாமாவுக்கும்  என்னை பிடிக்குமா..கீரேனீ” என ஏக்கமாக கேட்க..

 

“எங்க போயிடறான். எல்லாம் புரிய வைப்போம். நீ மட்டும் நான் சொல்றபடி கேட்டு செய்.. அவன உன் வழிக்கு கொண்டு வந்திடலாம்” என்றார். 

 

உடனே அவரை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் ஒன்று வைத்து.. “என் செல்ல கீரேனீ” என்றாள்.

 

அவளின் முத்தத்தில் கூச்சம் கொண்டு “சீ.. எச்சில் பண்ணிகிட்டு.. பாரு  படுக்கை எல்லாம் அலங்கோலமா கிடக்கு.. நீயும் எப்படி இருக்க பாரு.. ஆள அனுப்பி வைக்கறேன். எல்லாம் சுத்தம் பண்ண சொல்லிட்டு நீயும் குளிச்சிட்டு ரெடியாகி அவன் மதிய சாப்பாட்டிற்கு வரங்காட்டி வா..”

 

“புடவை கட்டிட்டு வா..”

 

எனக்கு சேரி கட்ட தெரியாது கீரேனீ” என்றாள் பயத்துடன்..

 

“உன்னை சொல்லி குத்தமில்லை.. எல்லாம் உன் அம்மாவ சொல்லனும்.. சரி இனி பேசி என்னாக போகுது.. நல்ல சுடிதாராவது போட்டுகிட்டு வா..” என சொல்லி சென்றார்.

 

நிகிதாவும் பாட்டி சொன்னது போல குளித்து நல்ல காட்டன் சுடிதார் அணிந்து வழக்கமான மேக்கப் செய்து கீழே சென்று பாட்டியோடு அமர்ந்து வீராவின் வருகைக்காக காத்திருந்தாள்.

 

ஆனால் வீராவோ இவள் முகம் பார்க்க பிடிக்காமல் உணவை தவிர்த்து வீட்டுக்கு வரவில்லை.



மாயவன் செய்த மாயங்கள் எல்லாம்

 

மங்கை நெஞ்சை கொள்ளை கொள்ள..

 

கள்வனாய் உள்ளம் கவர்ந்தது தெரியாமல்..

 

கள்ளியின் நேசத்தை அறியாமல்..

 

பேதையை  தள்ளி நிறுத்தி எட்டி நின்று

 

வாட்டி வதைப்பானோ.. 

 

இந்த மாய கண்ணன்…. 

 

4 thoughts on “6 – புயலோடு பூவுக்கென்ன மோகம்”

Leave a Reply to sowmi Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top