ATM Tamil Romantic Novels

முகவரிகள் தவறியதால் 20

அத்தியாயம் 20

        ஜீவிகா, அழுவதை…கண்ட மீனாட்சி, அழாத.. ஜீவிமா? இனி, இது உன் வீடு. உனக்காக, நாங்க இருக்கோம். எல்லாம்,சீக்கிரம் சரியா போயிடும்… என அவள் தலையில், ஆதரவாக தடவி கொடுத்தார். 

   சக்தி, அவள் அழுவதை, தான் பார்த்துக் கொண்டிருந்தான். 

   மீனாட்சி, சக்தி நீ அறைக்கு போப்பா..? நான் ஜீவிய மது கூட அனுப்பி,வைக்கிறேன் என்றார்.

   அவனும் அவளை பார்த்துக் கொண்டே, சரிம்மா…சீக்கிரம் பேசிட்டு, அனுப்பி விடுங்க… நான் மேல போறேன், என்றவன் அவ ளை பார்த்துக்கொண்டே, மேலே சென்றான். 

  அஜய், அம்மா நீங்க,பாத்துக்கோ ங்க…நான் நம்ப கடை வரை க்கும் போயிட்டு வரேன்.லல்லி வரேன் என்றவன், கடைக்கு சென்று, விட்டான்.

  மீனாட்சி, மதுமா… என் அறையில் அலமாரியில புது புடவை ஒன்னு இருக்கும்.அதை கொண்டு வந்து உன் அண்ணிகிட்ட, கொடு. கட்டி க்கட்டும். அப்புறமா.. அவளுக்கு நாம போய், வேற புடவை எடுக்க லாம் என்றார்.

  மதுமதி, சரிமா… என்றவள், புட வைய கொண்டுவந்து, கொடுத் தாள். மீனாட்சி,போமா.. போய்,மது அறையில புடவைய மாத்திக்க என்றார்.

    ஜீவிகா அவளுடன், சென்றவள் உடை மாற்றிவிட்டு,ஹாலுக்கு வந்தாள்.

மீனாட்சி, ஜீவிகாவை தன் பக்கத் தில், அமர்த்திக் கொண்டவர்,ஒரே ஒரு விஷயம் சொல்றேன்மா…என் புள்ள கெட்டவன், கிடையாது…?

 என் குடும்பத்தோட, குலசாமி… அவன், இத்தனை நாள், எங்களு க்காகவே வாழ்ந்திட்டான்.அப்படி யே,இருந்துருவானோன்னு,பயந்து போயிருந்தேன்.

   ஆனால் நான் கும்பிட்ட தெய்வம் என்னை கைவிடல… அவனுக்கு ன்னு ஒரு குடும்பம் இருக்கணும் னு..ஆசைப்பட்டேன். அது இப்ப நடந்துருச்சுமா…. என்றவர் கண் கலங்கினார். 

   அதைப் பார்த்த, லல்லியும், மது வும், அம்மா.. அத்தை… என் றனர். உடனே மீனாட்சி, ஒன்னும் இல்ல மா… கொஞ்சம் உணர்ச்சி வசப்ப ட்டுட்டேன் என்றவர்,

  மது, நீ அண்ணா, ரூமை காட்டு மா ஜீவிகாவுக்கு, லல்லி…நீ போய் ரெஸ்ட் எடுமா. சாப்பிட வாங்க அப்புறமா.. என்றவர் அறைக்கு சென்று விட்டார். 

  ஜீவிகா, மதுவோடு அவன் அறை யை நோக்கி, சென்றாள்.ஒருபக்கம் பயம். ஒரு பக்கம் தயக்கம். இரண் டும் பெண்ணவளை வாட்டியது. மெதுவாக, கதவினருகே சென்று, கதவை தட்டினாள். 

உடனே,உள்ளிருந்து பதில் வந்தது உள்ளே வா ஜீவி.. என்று, ஜீவிகா, மெதுவாக உள்ளே அடி எடுத்து, வைத்தாள். உடல் நடுங்கியது, வியர்க்க ஆரம்பித்தது. முந்தானை யை இறுக  பிடித்துக் கொண்டாள். தலை நிமிர்ந்து, அவனை பார்க்க வில்லை. 

 சக்தி,உள்ளே வந்தவளை மேலிரு ந்து கீழாக பார்த்தான். புடவை மாற்றி இருந்தாள். பூ வைத்திருந் தாள், காதில், குட்டி சிமிக்கி, கழுத் தில், சிறிய செயின், அதனுடன் அவன் கட்டிய தாலி.பின்,தாலியை இருக்கும் கண்டான்.மூச்சு முட்டிய து…அவனுக்கு,பழைய நினைவுக ளில்,தலை கோதிக்கொண்டான், அவன் கண்கள்,கூட அவனுக்கு சதி செய்தது.

   கண்கள், சற்றே கீழே இறங்கின, அவள் சேலை மறைத்த, இடை சற்றே விலகி,அழகாய் தெரிந்தது. அதை தொட்டுப் பார்க்க, ஆசை வந்தது அவனுக்கு. ஜீவிகா தலை குனிந்தபடி, நின்று இருந்தாள்.

   சக்தி, வா ஜீவி ஏன்?..அங்கேயே நிக்கிற வந்து,இங்கே உட்காரு.. என்றான்.

  ஜீவிகா,மனதில் எப்படி இவரால் என்னிடம், உரிமையா.. பேச… முடியுது. செய்ததற்கு மன்னிப்பு கூட கேட்கவில்லை.என் அனுமதி இல்லாமல், என் கழுத்தில் தாலி கட்டி இருக்கிறார்.

என் குடும்பத்தின் முகத்தை, எப்படி நான் காண்பேன். என்று நினைத்தாள்.அவள் கண்களில் கண்ணீர்.

  சக்தி,அவள் நினைவை கலைத் தவன், ஜீவி,”ப்ளீஸ்”….. அழாத…!இந்த   கல்யாணத்தில், உனக்கு, விருப்பமில்லைன்னு…. எனக்கு தெரியும். உன் அனுமதி இல்லாம.. உனக்கு தாலி வேற கட்டி இருக்கே ன்.எனக்கு வேற வழி தெரியல டி..?  

  வீட்ல,கேட்டு உங்கிட்ட,சொல்ற துக்குள்ள…உனக்கு,வேற இடத்தில் மாப்பிள்ளை பார்க்குறாங்கனு என்று கேள்விப்பட்டேன். உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க, மனசு வரல டி…

  எல்லா விஷயத்திலும் யோசித்து.. முடிவு பண்ற நான்,உன் விஷயத் துல,என்னால எதுவுமே யோசிக்க முடியல…நீ வேணும்னு… மட்டும் தான்டி தோணுச்சு. இந்த நாலு மாசத்துல, எங்க? எந்த இடத்துல?உன் மேல காதல் வந்துச்சுன்னு தெரியல?… என்றான்.

   ஜீவிகா,அழுதபடி…திரும்ப, இது மாதிரி நடக்க வேணாம்னு தானே கேஸ்,வாபஸ் வாங்கிட்டு, ஊருக்கு போனேன்.ஏன்? என்கிட்ட கேட்கா ம? என் கழுத்துல தாலி கட்டுனீங்க ஏன் வீட்லையும்,என் ஃப்ரெண்ட் ஸ் கிட்டயும், எப்படி??நான் பேசு வேன்….என்றவள் மடங்கி அமர்ந்தாள்.

   சக்தி, சாரிடி…! சாரி…அன்னைக்கு ஸ்டேஷன் வாசல்ல,நீ சொன்னப் பாரு, என் கைய, அறுத்ததுக்கு பதிலா..? நீங்க என், கழுத்தை அறுத்து இருக்கலாம்னு…, அங்கே யே, என் ஆணவம்,அழிஞ்சி உன் காலடியில, விழுந்துருச்சு….? 

   என்னையே, நான் வெறுக்க ஆரம்பிச்சிட்டேன். நீ என்னை பார்த்து யார்? நீங்கனு,கேட்ட பாரு. எனக்கு அவ்ளோ கோவம் வந்து ச்சு… உன் புருஷன்டின்னு கத்தி.. சொல்லணும்னு தோணிச்சு ஜீவி.

   அப்பவே, முடிவு பண்ணிட்டேன். நீ தான், என் பொண்டாட்டினு…. அவன் அப்படி கூறியதில், ஜீவிகா அவனை நிமிர்ந்து பார்த்தாள். 

சக்தி, அவள் கரத்தை பற்றியவன், திரும்பவும் கேட்கிறேன், என்னை மன்னிச்சிருடி..எவ்ளோ!?… வேணா அடிச்சுக்கோ…,ஆனா!.. என்னை விட்டுட்டு…. மட்டும் போகாதடி… ரொம்ப வருஷம் கழிச்சு, ரொம்ப சந்தோஷமா?.. இருக்கேன். சீக்கிரம் என்ன புரிஞ்சுக்க டி?! ஜீவிமா, என்றான்.

   இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே,கீழே,மீனாட்சி அழைக்கும் சத்தம் கேட்டது. சக்தி, அம்மா,சாப் பிட கூப்பிடுறாங்க வா..என்றான். ஜீவிகா, எதுவும் பேசாமல், அமை தியாக அவனுடன் சென்றாள். 

   தடல் புடலாக, சமையல் செய்து வைக்கப்பட்டிருந்தது. ஜீவிக விற்கு…, மனசு  வெறுமையாக இருந்தது. என்னதான்… அவன் பேசியிருந்தாலும், உடனே அதிலி ருந்து, அவளால் வெளியே, வர முடியவில்லை. நினைத்தாலே உடல் நடுங்கியது.. அணைத்துக் கொள்ள தோள் தேடினாள்.

மீனாட்சி,கூச்சபடாம,சாப்பிடுமா…,  பாக்கியம், நல்லா..அள்ளி வை என்றார். 

  ஜீவி,அது…அத்தை..நான் நிறைய சாப்பிட மாட்டேன். எனக்கு அவ் ளோ…,வேண்டாம் என்றாள் மெது வாக…,

   மீனாட்சி, ஜீவி? பாரு… எவ்ளோ ஒல்லியா? இருக்க,நல்லா சாப்பிடு . அப்பதான்…. உடம்பு புடிக்கும் என்றார். மனக்கவலையில், சற்று    இளைத்து, காணப்பட்டாள் ஜீவிகா. 

 அஜய், அண்ணி! அங்க பாருங்க? மது இலையை. செஞ்ச…..எல்லா பதார்த்தமும், அவை இலையில தான் இருக்கு. எப்படி? கூச்சமே இல்லாம வெளுத்து கட்டுறா?பாருங்க?..நீங்களும், கூச்சப்படாம, சாப்பிடுங்க என்றவன், 

  அண்ணி, நாம அவளை பத்தி தான், பேசுறோம்னு தெரிஞ்சும், கவலைப்படாம, என்ன வெட்டு வெட்றா…பாருங்க?!..  என்றான். 

   மதுமதி, அம்மா என் இலையில் இருந்த, முட்டையை காணோமா?!.. என்றாள்.

   அஜய், “அடியே!” இப்பதாண்டி? அத, வாய்க்குள்ள… போட்ட?… என்றான். மது, அது முட்டையா?? நான், பணியாரம்னு….நினைச்சு, வாயில போட்டுட்டேன். முட்டை சின்னதா, இருந்துச்சு, அதான் ஒரு ஸ்மால், கன்ஃபியூஷன்… என்றாள் வழிந்து கொண்டு, 

   இதை, கண்ட ஜீவிகா,மதுவை கண்டு, லேசாக சிரித்தாள்.அனை வரும் சிரித்தனர். சக்தி ஜீவிகா சிரிப்பதையே, பார்த்திருந்தான். அவள் சிரிப்பில் உயிர்பில்லை.

    ஞாயிற்றுக்கிழமை, என்பதால் அனைவரும், வீட்டில் இருந்தனர். மீனாட்சி,சக்தி ஜீவிகாவுக்கு, நம்ம   ஜவுளி கடையில் இருந்து, புடவை, நைட்டி, அப்புறம்…. அவளுக்கு, தேவையானது எல்லாம், எடுத்து ட்டு, வந்துருப்பா…பாவம் புள்ள, நாளைக்கு வரைக்கும், இதையே போட முடியாதுல, என்றார்.

   அப்புறம், பிளவுஸ் எப்படி? தைக் கணும்னு..கேட்டுக்க. நம்ம டெய்லர் ராஜாவ, வரச்சொல்லி, அளவு எடுக்க, சொல்றேன்பா கொஞ்சம் போன் போட்டு கொடு என்றார்.

   சக்தி உடனே அம்மா,.. டைலர் எல்லாம் வேணாமா?!.. நானே அளவு சொல்லிடுறேன் என்றவன், ஜீவிக்காவை பார்த்தான், அவளு ம், அவனை பார்த்தாள்.

   மீனாட்சி, உனக்கு முன்னமே அளவு தெரியுமா?… அவ கிட்ட  முன்னாடியே கேட்டு வெச்சிட்டியா, என்றார் 

   அதில், வெட்கப்பட்டு சிரித்தவன், ஆமாமா.. முன்னமே….பார்த்து வச்சுட்டேன் என்றான், அவளை தாபமாய்… பார்த்துக் கொண்டே,

    அவன் பார்வையை உணர்ந்த, ஜீவிகா சட்டென, கீழே குனிந்து கொண்டாள், உதடு கடித்து. 

  மீனாட்சி, என்னது.. பார்த்து வெச்சிட்டியா? என்னப்பா…. சொல்ற?

அவர், அப்படி…கேட்டதும், சமாளி த்த சக்தி, ம்மா.. ‘ஆ’ அது… அது வந்து… கேட்டு வச்சுட்டேன்னு, சொல்றதுக்கு பதிலா? பார்த்து வெச்சிட்டேன்…னு சொல்லிட்டேன் ம்மா…, என்றவன் தன் தலையில், தட்டிக் கொண்டான் சிரிப்புடன்.

   ஜீவிகாவிற்கு, அவன் கூற்றில் இன்னும், வெட்கமாய் போனது. அவனை, ஒரு பார்வை பார்த்தவ ள், திரும்பவும்,தலை குனிந்து கொண்டாள்.

 

தொடரும்….

   

  

  

   

 

 

2 thoughts on “முகவரிகள் தவறியதால் 20”

  1. Выгодные цены на фронтальные погрузчики от ведущих производителей
    фронтальный погрузчик цена [url=http://www.xn—-7sbkqfclcqchgmgkx0ae6eudta.xn--p1ai/]http://www.xn—-7sbkqfclcqchgmgkx0ae6eudta.xn--p1ai/[/url] .

Leave a Reply to sowmi Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top