ATM Tamil Romantic Novels

எனக்கென வந்த தேவதையே 6

அத்தியாயம் 6

 ஆதி குலசேகரன் வடிவம்மாள் இவர்களுக்கு இரண்டு பிள்ளை கள் முதலில் பிறந்தவர் சுந்தர மூர்த்தி, இரண்டாவது அழகம்மை அழகம்மை பேருக்கு ஏற்றார்போல் அழகாக இருப்பார் பெண்பிள்ளை என்பதால் வீட்டில் பொத்தி பொத் தி வளர்க்கப்பட்டாள் அழகம்மை. 

எங்கு சென்றாலும் அவருக்கு காவல்க்கு இருவர் கூடவே இருந்தனர் சுந்தரம் தொழில்களை பார்க்கும் அளவுக்கு படித்தார். ஆதிகுலசேகருக்கு அழகம்மை என்றால் உயிர். வயதுக்கு வந்தது ம், அழகம்மை படிக்க அனுப்பவில் லை. ஆனால் அவருக்கு டீச்சர் ஆக ஆசை, அது நிராசை ஆகி போனது. 

இப்படியான ஒரு நாளில் அந்த ஊருக்கு மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்டு, ஆதி குலசேகரரால் திறந்து வைக்கப்பட்டது. நிறைய புதிய ஆசிரியை, ஆசிரியர்கள் புதியதாக வந்திருந்தனர். 

 அதில் ஒருவர் தான் சந்தானம். அவர் இளமை தோற்றத்துடன் அந்த வயதுக்குரிய அழகுடன் இருந்தார். ஒருநாள் தலைமை ஆசிரியரோடு சேர்ந்து சந்தானம் மற்றும் இன்னும் இரண்டு ஆசிரிய ர்கள்,  ஆதி குலசேகரை பார்க்க வந்திருந்தனர். பள்ளிக்கு சில பொருட்கள் வாங்கும் விஷயமாக, 

ஆதி குலசேகர் வாங்க வாங்க எல்லாரும் என்ன விஷயமா என்ன பார்க்க வந்துஇருக்கீங்க உட்காருங்க, என்றவர் அழகுமா தண்ணி கொண்டு வாமா எல்லா ருக்கும் என்றார் உள்ளே பார்த்து 

 தலைமை ஆசிரியர், ஐயா நம்ம பள்ளில இப்ப நிறைய மாணவர் கள், படிக்கிறாங்க. அவங்களுக்கு நிறைய அடிப்படை தேவைகள் இருக்கு. நல்ல பாத்ரூம் இல்ல பின் னாடி முள்புதரா இருக்க இடத்துல சுத்தம் பண்ணிகொடுத்தீங்கன்னா பசங்க விளையாட வசதியா இருக்கும்.நிறைய விளையாட்டுப் போட்டிகள் எல்லாம் கொண்டு வர ஆசைப்படுறோம். நீங்க மனசு வச்சீங்கன்னா நிறைவேற்றி வைக்கலாம்யா என்றார்.

 ஆதிகுல சேகர்,அதுக்கு என்ன பசங்க படிப்பு விஷயமா.. கேக்கு றீங்க, முடியாதுன்னு எப்படிப்பா சொல்ல முடியும். அதனால அடுத்த வாரம் வாங்க கண்டிப்பா நீங்க சொன்னதெல்லாம் செஞ்சு கொடுத்துடுறேன் என்றார்.

அப்போதுதான் அழகம்மை அமைதியாக வந்து தண்ணீர் கொடுத்துவிட்டு போனார். சந்தானம் அவளைப் பார்த்தார் இளமை கூறிய ஆசை தானே 

அழகமையும் எதேச்சியாக பார்த்த வர்,சந்தானம் தன்னைபார்ப்பதை பார்த்துவிட்டு வெட்கம் கொண்டு அவசரமாக ஓடிவிட்டார். 

 உள்ளே சென்றவர் கதவருகே மறைந்து நின்று கொண்டார். பேசும் போது தான் சந்தானம் ஒரு ஆசிரியர் என அறிந்துகொண்டார் 

அழகாம்மை மனதில் இனம் புரியா உணர்வு. சிறிது நேரம் பேசிவிட்டு சென்றனர் அனைவரும் 

மறுபடியும் ஒரு வாரம் கழித்து பள்ளி விஷயமாக காசு வாங்க பள்ளி சார்பாக சந்தானம் தான் வந்திருந்தார். அப்போது  பணத் தை அழகம்மை தான் கொண்டு வந்து கொடுத்தார்,தன் தகப்பன் இடம். பார்வை பரிமாற்றம் இருவ ருக்கும், இரண்டாம் சந்திப்பு

இந்த சந்திப்பு அடிக்கடி. தொடர்ந் தது. கோவில் சந்தை திருவிழா என, இருவரும் தனியாக சந்தித்து பேசவில்லை என்றாலும் இருவரு க்கும், ஒருவருக்கொருவர் மீது கொண்ட காதல், மட்டும் வளர்ந்து கொண்டே சென்றது. நாட்கள் நகர ஆரம்பித்திருந்தது..

ஒரு நாள் சந்தானம் கோவிலுக்கு வந்திருந்தார். அழகம்மையும் வந்திருந்தார் சந்தானம் இன்றை க்கு,  எப்படியாவது அழகம்மை இடம் பேசிவிட வேண்டும் என்ற முடிவுடன், இருந்தார்.சிறப்பு பூஜை முடிந்து கோவிலை சுற்றி வந்தனர் குடும்பத்தோடு,

 திடீரென அழகம்மையை ஒரு கை இழுத்துக் கொண்டு மறைவான இடத்திற்கு சென்றது. 

அதுவேறு யாருமல்ல சந்தானம் தான் தன்கை இழுப்பட்டதில் பயந் த அழகு, கத்த போனவர் சந்தான த்தை பார்த்து கண்களை விரித்து நீங்களா?!… என்ன இது கோவிலில் வைச்சி…கையை.. பிடிக்கிறீங்க!? அப்பா பார்த்தா உங்களை வெட்டி போட்டுடுவாரு.. விடுங்க.. என் கை யை என்றாள்.

 சந்தானம், ப்பா…, இப்பவாச்சும் பேசுனியே…, உங்க அப்பா வெட்டி போட்டாலும் பரவால்ல, என்னை காதலிக்கிறாயானு? உன் வாயால சொல்லிட்டு போ அழகு என்றார். 

அழகு அவர் கேட்டதில் வெட்கம் கொண்டாலும் ஒரு பக்கம் பயந்தா ள், தன் வீட்டை நினைத்து 

சந்தானம் விடாமல் கேட்டதால் அவர் மேல் இருந்த காதலில் நானு ம் உங்களை காதலிக்கிறேன் என  சொல்லிவிட்டு ஓடிவிட்டாள் சந்தானத்துக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. 

இதே நேரம் சுந்தரமூர்த்திக்கு கனகாவுடன் திருமணம் முடிந்தது கனகாம்பாள் நல்ல மருமகள். ஆனால், அழகம்மை மீது சிறு பொறாமை அவள் அழகில்

ஒரு வருடத்தில் சுந்தரம் கனகாவி ற்கு குழந்தை பிறந்து விட்டது. அவனுக்கு குலசேகர் ஆதி ஈஸ்வர் என பெயரிட்டார்.

ஈஸ்வர் பிறந்து அழகம்மை கையி ல்தான் அதிகம் இருப்பான். ஆதிக் கு, மூன்று வயது இருக்கும், கனகா தன் அண்ணனுக்கு அழகம்மை யை, பெண் கேட்டாள்.ஆனால் ஆதி குலசேகர் மறுத்துவிட்டார். அதை மனதில் வைத்துக் கொண் டாள் கனகா.

அழகம்மைக் கேட்டு பெரிய ஜமீன் வீட்டிலிருந்து சம்பந்தம் வந்தது. தட்டு மாற்றப்பட்டு திருமணம் நிச்சயக்கப்பட்டது.அழகு வீட்டில் சிறை வைக்கப்பட்டார்.

 விஷயம் அறிந்த சந்தானம் மனம் உடைந்து போனார். எந்த வழியிலு ம் அழகம்மை பார்க்க முடியவில் லை. திருமண நாளும் நெருங்கி விட்டது. சந்தனத்தை மறக்க முடி யாதவர், அன்று இரவு வீட்டை விட்டு தாண்டி, ஓடிய அழகம்மை சந்தானத்தை, திருமணம் முடித்து போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்தார்.

இதைக் கேட்டு ஆதிகுல சேகர் படுக்கையில் விழுந்தவர் நோய் வாய்ப்பட்டார். எந்திரிக்க முடியா மல், வீடே களை இழந்து போய் விட்டது.

சுந்தரமூர்த்தி, கோபம் கொண்டு இருவரையும் வெட்டவே போய் விட்டார். இருவரும் மேஜர் என்ப தால் ஒன்றும், செய்ய முடியவில் லை, குடும்பத்தையும் அதன் பிறகு அவர்தான் எடுத்து நடத்த ஆரம்பித்தார் 

 வடிவம்ம்மாள்,அறையிலேயே முடங்கி விட்டார். இதை எல்லாம் நினைத்தவர் கண்கலங்கினார் வேதனையில்,

இதே வேதனையான நினைவுக ளை சந்தானத்தோடு பேசி அழுது கொண்டிருந்தாள் அழகம்மை. சந்தானம் விடு அழகு, அழாத என சமாதானப்படுத்திக் கொண்டிருந் தார். அழகு இல்லைங்க.. ரொம்ப வேதனையா இருக்கு ஆசைப்பட்டு தான் உங்க கூட வந்துட்டேன். ஆனா பண்ணாத தப்புக்கு தண்டனை அனுபவிக்கிறேன். 

இப்ப என் பொண்ணு அங்க போய் என்ன கஷ்டத்தை அனுபவிக்கி றான்னு… தெரியல, செய்யாத தப்பு க்கு, அவ  ஏங்க..? தண்டனையை அனுபவிக்கணும், என முகத்தை மூடி அழுதார், சந்தானமும் கண் கலங்கி விட்டார்.

என்ன தப்பா இருக்கும் அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம் 

 

தொடரும்..

 

 

 

3 thoughts on “எனக்கென வந்த தேவதையே 6”

  1. Лучшие тренажеры Матрикс для кардиотренировок и силовых упражнений с высокой результативностью
    матрикс тренажер [url=http://www.matriks-trenajeri.ru/]http://www.matriks-trenajeri.ru/[/url] .

Leave a Reply to matriks_trenazhery_uvkn Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top