ATM Tamil Romantic Novels

எனக்கென வந்த தேவதையே 7

அத்தியாயம் 7

 வஞ்சி அந்த வீட்டிற்கு வந்து இரண்டு வாரங்கள் கடந்து இருந்தது. அன்றைக்கு அவனை அப்படி பேசியதிலிருந்து வஞ்சி கீழே தனி அறையில் தங்கிக் கொள்கிறாள். ஈஸ்வரும் அவளை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

அன்று தர்ஷிகாவின் பிறந்தநாள் வீட்டில் பெரிய அளப்பரையே பண்ணிக் கொண்டிருந்தார் மாதங்கி. தர்சிகாவிற்கு இன்றோடு 26 முடிந்து 27 ஆரம்பிக்கிறது.

வீடு முழுவதும் அலங்காரம் பார்ட்டி  ட்ரிங்ஸ், ஆட்டம் என ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது  சுந்தரமூர்த்திக்கு இதில் துளியும் விருப்பமில்லை.

வஞ்சி எப்போதும் போல் தன் வேலைகளை செய்து கொண்டிரு ந்தாள்.சாதாரண புடவையில் தான் இருந்தாள்.மாலை ஆனதும் ஈஸ்வர் வந்திருந்தான் வீட்டுக்கு. அவனை கண்ட தர்ஷிகா ஓடிப் போய் ஈஸ்வரரை கட்டிக் கொண் டாள்.

ஈஸ்வர், லேசாக சிரித்தவன் ‘ஹாப்பி பர்த்டே’ தர்ஷி என்றவன் அவள் கையில் ஒரு பரிசு பொரு ளை  கொடுத்தான்.

தர்ஷி ஆர்வமா அதை பிரித்துப் பார்த்தாள்.அதில் டைமன் டாலரு டன் ஒரு செயின் இருந்தது. அதை கண்ட தர்ஷி கண்களை விரித்தவ ள்,வாவ் ஈஸ்வர் செமையா இருக்கு இத நான் எதிர்பார்க்கவேயில்லை “ஐ அம் சோ ஹாப்பி”என திரும்ப வும் அவனை கட்டிக் கொண்டு முத்தமிட சென்றாள்.

 முத்தமிட வந்தவளை தடுத்த ஈஸ்வர்  லேசாக சிரித்து உனக்கு இந்த கிப்ட் புடிச்சிருக்கா தர்ஷி என்றான். தர்ஷிகா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்றாள்.

அதே நேரம்,  சமையல் கட்டில் இருந்து, வஞ்சி தன் அறைக்கு போகவெளியே வந்தாள்.ஈஸ்வரை தர்ஷி கட்டிப்பிடித்துக் கொண்டு, நிற்பதை பார்த்தவள் கண்களில், சிறு அதிர்ச்சி. அவள் பார்ப்பதை கண்ட தர்ஷி, இன்னும் அவனை நெருங்கி நின்று, நக்கலாக வஞ்சி யை பார்த்தாள். 

ஈஸ்வர்,ஒரு நிமிடம் வஞ்சியை திரும்பி பார்த்தவன் திரும்பிக் கொண்டான். எதுவும் சொல்லாம ல்,, உடனே மாதங்கி மாப்ள இந் நேரம் உங்களுக்கும், தர்ஷிக்கும் கல்யாணம், ஆகி இருந்தா ரெண்டு பேரும் சேர்ந்து இந்த பங்ஷனை சந்தோஷமா.. கொண்டாடி இருப்பீ ங்க, ம்ம்…, அதுக்கு கொடுப்பினை இல்லாம போச்சே.. மாப்ள என வராத கண்ணீரை துடைத்தார். 

உடனே கனகா, ஏன் நீ அப்படி சொல்றீங்க?  எப்ப இருந்தாலும் தர்ஷி தான் இந்த வீட்டு மருமக, இதை யாராலும் மாற்ற முடியாது என்றார். மாதங்கி ம்ம்..உங்க வாய் வாக்கு பலிக்கட்டும் கனகா என்றவர், கேக் கட் பண்ண சென்று விட்டார்.

சுந்தரம் அந்த இடத்தில் இல்லாத தால், இவர்களை இப்படி பேசிக் கொண்டனர். பங்க்ஷன் முடியும் வரை தர்ஷி, அவன் தோளில் தூங்கிக் கொண்டே இருந்தாள்.

அதுவும் அவள் உடை, முகம் சுளிக்கும் அளவிற்கு சிறிதாக இருந்தது. சரக்கு ஆட்டம் பாட்டம் என ஈஸ்வர் வீட்டு பணத்தை தண்ணியாக…செலவழித்தாள் தர்ஷி. இதை எல்லாம் மாடியில் இருந்து சிறிது நேரம் பார்த்த வஞ்சி அறை யில், போய் உறங்கி விட்டா ள்.

மறுநாள், வெள்ளிக்கிழமை மாதங்கி அழைத்ததின் பெயரில் வேண்டா வெறுப்பாக கோவிலுக் கு வந்திருந்தாள் தர்ஷிகா. சாமி கும்பிட்டவர்கள், கனகா மாதங்கி சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து விட்டனர்.

தர்ஷி, போன் வந்ததன் பெயரில் எழுந்து சென்று பேசிக் கொண்டு இருந்தாள்.

 திடீரென, அவள் கையை பிடித்து யாரோ இழுத்ததும் அதில் கத்த போனவள், யார்? என பார்த்ததும் முதலில் மிரண்டவள் பின், அவன் அவன் வாயை மூடியதும், ம்ம்..ம்ம் என வாயை அசைத்தாள். 

அவன், என்னடி ஜாங்கிரி நேத்து உனக்கு பிறந்தநாள். இந்த மாமனு க்கு ஒன்னும் இல்லையா அவனை மட்டும் கட்டிப்பிடிப்பியா? என்ன எல்லாம் கட்டி பிடிக்க மாட்டியா? என்னடி? ஒன்னும் சொல்ல மாட்ற என்றவன்,

 “ஓ” சாரி டி, என் ஜாங்கிரி.  இப்ப சொல்லு என்றான் அவள் வாயில் இருந்து கையை எடுத்து, 

அதில் தர்ஷி மூச்சு வாங்கியவள் you bleddy scoundrel, bleddy இடியட், எவ்வளவு தைரியம் இருந்தா என் கையை பிடிச்சு இழுப்ப. நான் யார் தெரியுமா ஈஸ்வர் கிட்ட சொன்னா உன்னை என்ன பண்ணுவாருனு தெரியுமா? என்றாள் ஆங்காரமாய்

அவள் அப்படி கூறியதும் சிரித்த வன்’ஆஹா’ ‘ஹா’என்னடி காமெடி பண்ற, அவனால என்னை  என்ன பண்ண முடியும், என சீரியஸாக கேட்டவன் இதையும் போய் அவன் கிட்ட சொல்லுடி…., என்றவன்

அவள் எதிர்பாராதநேரம் அவளை இழுத்து அவள் இதழில் இதழ் பொருத்தி விட்டான். 

அவனுக்கு இது முதல் முத்தம். அதுவும் பிடித்த பெண்ணுடன், முத்தத்தில் மூழ்கி விட்டான். கோவில் என்றும் பாராமல், அவன் சிறிது இளகிய நேரம், அவனை தள்ளிவிட்டவள், இழுத்து மூச்சு விட்டாள்..

அவள் இதழில் சிறிதாக ரத்தம் கசிந்தது. இவனும் தன் பொருள் பறிக்கப்பட்டதை போல் பரிதாப மாக பார்த்து, மூச்சு வாங்கினான். 

இதையும் போய், உன் மாமாகிட்ட சொல்லுடி  ஜாங்கிரி என்றவன், அவளைப் பார்த்து கண்ணடித்து விட்டு சென்று விட்டான்.

தர்ஷிகா அவன் விட்டு சென்று  இடத்தில் அப்படியே நின்று இருந்தாள்.சிறிது நேரம் கழித்து மாதங்கி, அவள் தோளில் அடி போட்டு, ஏண்டி எங்கடி போன? எவ்ளோ நேரம் தேடுறது, இங்க நின்னு என்னடி பண்ணிட்டு இருக்க.. வாடி போகலாம் என அவளை அழைத்து சென்றார் 

இது அடிக்கடி நிகழும் நிகழ்வுதான் அடிக்கடி அவளிடம் வம்பு இழுப் பான். ஆனால் இன்று முதல் முறை தன்னையும் மீறி முத்தமிட்டு விட்டான் அன்பன்.

வீட்டுக்கு சென்ற தர்ஷிகா சரியாக சாப்பிடவில்லை பசிக்கவில்லை என்றாள்.  அறைக்கு சென்று படு த்துக் கொண்டாள். கண்கள் மூடி படுத்தால், அவன் முத்தமிட்ட ஞாபகம் தான்.  இதழில் வேறு குறு குறுவென இருந்தது. தன் இதழை அழுந்த துடைத்தாள்.  கொட்ட  கொட்ட முழித்தபடி படுத்து இருந் தாள். எப்போது உறங்கினால் என அவளுக்கே தெரியவில்லை..

அதன் பிறகு, ஒரு வாரம் தர்ஷி எங்கும் செல்லவில்லை. இரண்டு நாட்கள் ஜுரம் வேறு இருந்தது அவளுக்கு,

தர்ஷிகாவிற்கு முத்தம் கொடுத்தது வேறு யாரும் அல்ல, உதயன்பன் தான், ஆம் அவனே தான். அவனு க்கு தர்ஷிகாவை மிகவும் பிடிக்கும் கடந்த இரு வருடங்களாக அவ ளை காதலித்து வருகிறான். சாதாரணமாக அவளை சீண்ட ஆரம்பித்து, இன்று காதலில் வந்து நிற்கிறது. 

முதல் முறை அவளை கோவிலில் வைத்து தான் பார்த்தான். படியில் இருந்து இறங்கும் போது, தவறுத லாக இடித்து விட்டாள் தர்ஷிகா. அன்பன் அப்போதுதான் அவளை தாவணியில் பார்த்தான். அன்பனி டம், சாரி சொன்னவள், பின்னால்  வந்த ஈஸ்வர் கையை பிடித்துக் கொண்டு இறங்கி நடந்தாள்.

 அதைப் பார்த்ததும் அன்பனுக்கு தன்னையறியாமல் கோபம் வந்த து, அவன் கையை பிடித்தது. அதை மறந்து போக நினைத்தான் ஆனால்,  மறுபடியும் அவள் ஞாப கம். நிறைய யோசித்தவன் முடிவெ டுத்து, அவளை காதலிக்க ஆரம்பி த்தான் அவளை மறக்கமுடியாமல்,

அதை அவளிடம் சொல்லாது அவள் போகும், இடமெல்லாம் தர்ஷிகாவை பின்தொடர ஆரம்பித்தான். 

தொடரும்…

 

 

 

 

4 thoughts on “எனக்கென வந்த தேவதையே 7”

  1. Займы онлайн с удобным графиком погашения – комфортные условия для каждого клиента
    взять займ [url=http://www.vsezajmyonline.kz]http://www.vsezajmyonline.kz[/url] .

Leave a Reply to proekty_nypn Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top