ATM Tamil Romantic Novels

எனக்கென வந்த தேவதையே 13

அத்தியாயம் 13

அன்று, எப்போதும்போல் பள்ளி க்கு கிளம்பி கொண்டு இருந்தாள் வஞ்சி. பள்ளிக்கு போக தாமதமா கி கொண்டு இருந்தது, அதிகநேரம் உறங்கி விட்டதால்.

ஈஸ்வர் கீழே இன்னும் வரவில்லை 

வஞ்சி, அவன் அறையும் மணியை யும், மாறி, மாறி பார்ப்பத்தை… பார்த்த, சுந்தரம் வஞ்சி என்னமா ஸ்கூலுக்கு, லேட் ஆகிட்டா.. நீ வேணா.. போம்மா.. நான் சொல்லி க்கிறேன் அவன்கிட்ட என்றார் .

 வஞ்சி, மாமா.. அது.. வந்து அவர் இன்னும் சாப்பிடல என்றாள்.

 அதில் சிரித்த சுந்தரம், அவன் வர லேட்டாகும் போலாமா?  நீ போ.. நான்  சொல்லிக்கிறேன் அவன் கிட்ட என்றார் மறுபடியும் 

 அவர், சொல்லி முடிக்கவில்லை ஈஸ்வர் வந்து உணவு மேஜையில் அமர்ந்தான். இருவரும் அவனை எதிர்பார்க்கவில்லை.  ஈஸ்வர், தந்தையை ஒரு பார்வை பார்த்த வன், வஞ்சியின் முகத்தை பார்த் தான். அதில் பதறியவள் தட்டை  வைத்து அவனுக்கு உணவை பரிமாறினாள். 

சாப்பிட்டு, முடித்தவன் அப்போது தான் கவனித்தான், அவள் சுடிதார் அணிந்திருப்பதை,தனக்கு பயந்து தான் சுடிதார் அணிந்து இருப்பாள் என நினைத்துக் கொண்டான். இரண்டு நாட்களும் சுடிதாரில் தான் இருந்தால் புடவை அணிய வில்லை. 

அவன் வீட்டிற்கு வருவதற்கு முன் உறங்கி விடுகிறாள் அவள் அறை யில் விளக்கு எரிவதில்லை.

ஈஸ்வர், படுக்கையில் படுத்தாலே வஞ்சி கனவில் வருகிறாள் அவன் உடல் முறுக்கி நிற்கிறது ஆசை யில்,

ச்ச…என்ன இது?அவ நினைப்பா வே.. இருக்கு,  முதல்ல அவள நினைக்கிறதை நிப்பாட்டனும். அவபக்கமே தலை வெச்சி படுக்கக் கூடாது என தனக்குத்தானே சொல் லிக் கொண்டு உறங்கி விட்டான்.

 ரெண்டு நாள்,கழித்து ஈஸ்வர் தன் தாயைக் காண அவர் அறைக்கு சென்றான்.

 ஈஸ்வர், அம்மா என்றான் 

 கனகா, வா… ஈஸ்வரா இப்பதான் அம்மா உன் கண்ணுக்கு தெரிஞ்ச னா? இத்தனை நாள் நீ என்னை கண்டுக்கவே.. இல்லையே நான் உனக்கு வேண்டாதவளா போயிட் டனா.. என அழுதார்.

 ஈஸ்வர், அம்மா ஏம்மா.., இப்படி எல்லாம் பேசுறீங்க.. அழாதீங்க மா வேலை, கொஞ்சம் ஜாஸ்திமா. அதான் உங்களை வந்து பார்க்க முடியல, பேச முடியல, என்ன மன்னிச்சிடுங்கமா… என்றான். 

 கனகா, அமைதியாக இருந்தார் 

 ஈஸ்வர்,..ம்மா நாளைக்கு உங்களு க்கு பிறந்த நாள்ல அதனால நான் உங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன், பாருங்க என ஒரு பெட்டியை,அவரிடம்கொடுத்தான். 

 அதில் ஒரு வைர கம்பல் இருந்தது கனகா வாங்கி பார்த்தவர் எதுவும் சொல்லவில்லை.அதை வாங்கி பக்கத்தில், வைத்துக் கொண்டார்.

 ஈஸ்வர்… ம்மா இது உங்களுக்கு பிடிக்கலையா? வேற என்ன வேணும் சொல்லுங்க வாங்கி தரேன் என்றான்.

 கனகா, நான் என்ன கேட்டாலும் தருவியா என்றாள் குத்தர்க்கமாய் 

 ஈஸ்வர் அம்மா என்னம்மா இப்படி சொல்லிட்டீங்க, என்ன வேணும் சொல்லுங்க, இப்பவே…. உங்க காலடியில,வைக்கிறேன்,என்றான் 

கனகா சிரித்தவர், வஞ்சி.. இந்த வீட்டை விட்டுப் போகணும். அவ உன் வாழ்க்கையை விட்டே போக ணும். என்னைக்கு அவ இந்த வீட்டுக்குள்ள.. வந்தாலோ? உங்க அப்பா..என்ன விட்டு விலகிப் போயிட்டாரு,நீயும் நிறைய மாறிட் ட, தனிமையா இருக்க போல இருக்கு ஈஸ்வரா என்றார்.

கனகா இவையெல்லாம்  பேசும் போது அவர்கண்களில் அத்தனை கோபம்.

 ஈஸ்வர்,  கனகாவை அதிர்ந்த முகத்தோடு பார்த்தான்..

 கனகா, அவ குடும்பத்தால தான் உன் ரெண்டு தாத்தாவும் இன்னை க்கு, இல்ல. அன்னைக்கு…., உன் ரெண்டு தாத்தாவை கொலை பண்ணவங்க,நாளைக்கு என்னை யும், உன் அப்பாவையும் கொல்ல மாட்டாங்கன்னு.. என்ன நிச்சயம்.

அதனால…, அந்த குடும்பத்து பொண்ணு வஞ்சியை எனக்கு பிடிக்கல, அவள வீட்டை விட்டு அனுப்பிடு…,  என்றவர் படுத்துக் கொண்டார்.

 ஈஸ்வருக்கு என்ன பேசுவது என்று, தெரியவில்லை கலங்கிய குட்டை போல் மனம் அல்லாடியது. இளைப்பாற இடம் தேடினான்.

கனகாவின் குடும்பம்,  நடுத்தர குடும்பம். அவரின் அம்மா அப்பா அண்ணனிடம் நான்குபேர். அப்பா மளிகை கடை வைத்திருந்தார் அம்மா குடும்பத் தலைவி அண்ண னுக்கு வேலை சரியாக அமையவி ல்லை. கனகா பத்தாவது படித்து விட்டு வீட்டில் தான் இருந்தார்.

 அதே நேரம், அவருக்கு ஆதிகுல சேகரன் வீட்டிலிருந்து சம்பந்தம் வந்ததும், மிகவும் மகிழ்ச்சி அடை ந்தார். சுந்தரத்திற்கு பெரிதாக எதிர் பார்ப்பு எதுவுமில்லை.கல்யாணம் நல்லபடியாக முடிந்தது.

கனகா சுந்தரத்தின் வீட்டில் ராணி யாக வலம் வந்தார். தன் அண்ண னுக்கு வாழ்க்கை நன்றாக, அமை ய வேண்டும் என எண்ணி அழகம் மையை பெண் கேட்டார்.

 அதுவும் இல்லாமல், அழகம்மை அவரைவிட  அழகாக இருப்பதால் பொறாமை,இருந்தது.தனக்குகீழ் வைத்து கொள்ள ஆசைப்பட்டார். ஆனால் நடந்தது எல்லாம் தலை கீழ்.

ஆதி குலசேகரன், வீட்டில் பெண் எடுக்க போகும் தைரியத்தில் கன காவின் அப்பா கடையை விரிவு படுத்த ,நிறைய இடத்தில் கடன் வாங்கி,கடையை,விரிவுபடுத்தினார்.

திருமணமும் நடக்கவில்லை கடையிலும், நஷ்டம். கடனை சமாளிக்க முடியாமல் திணறியவர் நெஞ்சுவலி வந்து இறந்துவிட்டார் 

 ஆனால் அவர்,  அண்ணனும் அம்மாவும் அவரிடம் வேறு மாதிரி திரித்துப் பேசி, அழகம்மை மீது பழியை போட்டனர். இதனால் இன்னும் வன்வத்தை வளர்த்துக் கொண்டார் கனகவல்லி.

அதன்பிறகு சாதாரண குடும்பத்தி ல், இருந்து பெண் எடுத்தனர் அவர் தான் மாதங்கி, கனகவள்ளியை, தன் கைக்குள் போட்டுக்கொண்டு, எல்லா வேலைகளும் செய்து கொண்டிருக்கிறார். இதுவரை 

     +++++++++++++++++++++++++

அறைக்கு சென்ற ஈஸ்வருக்கு உறக்கம் வரவில்லை. அன்னை பேசியது, அவள் முகம் பாராமை என அவனை மிகவும் அழுத்திய து.என்ன முடிவெடுப்பது என குழம்பிப் போயிருந்தான்.

அவள் கையெழுத்து  போட்டுக் கொடுத்துவிட்டாள். ஆனால் அதை இந்நாள் வரை, கோர்ட்டில் சமர்ப்பிக்கவில்லை, மனமும் வரவில்லை ஈஸ்வருக்கு,

 கண்களை மூடினால் அவள்தான் வருகிறாள். பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. இப்படியே இரு மாதங்கள் கடந்து இருந்தது.வஞ்சி நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாட்டியோடு சென்று பேசுவாள் பல கதைகள் பேசி சிரித்து கொள் வார்கள். 

 சிறிது நாட்களாகவே, வஞ்சிக்கு உடல் சோர்வாகவும், அசதியாகவும் காணப்பட்டது. சரியாக வேலை செய்ய முடியவில்லை. உடலில் தெம்பு இல்லை,என்று நினைத்துக் கொண்டாள்.ஏனோ தாய் தந்தை யை, பார்க்க வேண்டும் போல் இருந்தது.

 

தொடரும்.

 

 

3 thoughts on “எனக்கென வந்த தேவதையே 13”

Leave a Reply to Maha Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top