ATM Tamil Romantic Novels

எனக்கென வந்த தேவதையே 14

அத்தியாயம் 14

 அன்று சுந்தரமூர்த்தி வீட்டில் இல்லை மாட்டுத் தீவனம் வாங்கும் விஷயமாக பக்கத்து ஊரு வரை சென்று இருந்தார். ஞாயிற்றுக்கிழ மை, என்பதால் மற்றவர்கள் வீட்டில் தான் இருந்தனர்.

 பகல், நேரத்தில் ஒரு  11மணி அள வில், பாட்டிக்கு பால் கொடுப்பது வழக்கம், இன்று வஞ்சி வீட்டில் இருந்ததால், அவள் தான்  பால் கொண்டு சென்றாள்.

 அப்போது, திடீரென ஓடி வந்த மாதங்கி, வஞ்சி கையில் இருந்த பாலை தட்டிவிட்டார்,அவர் தட்டி விட்டதில்,

வஞ்சி ஏன் இப்படி பண்ணீங்க? என்றாள்.அதிர்ச்சியாய்!

 சத்தம் கேட்டு, அனைவரும் ஓடி வந்தனர். ஈஸ்வர்,படியில் இருந்து இறங்கினான் கண்களை சுருக்கி, உடனே, மாதங்கி மாப்ள… இந்த… பால்ல…, விஷம் கலந்து இருக்கு. சமையல் கட்டு குப்பை தொட்டில விஷம், பாட்டில் பார்த்துட்டு தான் நான் ஓடி வந்து தட்டி விட்டேன், என்றவர் கனகா கையில் இருக்கும் டம்ளரை,  பார்த்து கத்தியவர் ஐயோ! அண்ணி உங்க கையில என்ன?! பாலா! கேட்டவர்,

 முதல்ல, அதை கீழே ஊத்துங்க.. உங்களையும் கொல்ல பாக்குறா ளா? இந்த சண்டாள பாவி…, என நடித்து ஆர்ப்பாட்டம் பண்ணினா ர்.

 அவர், அப்படி கூறியதும், வஞ்சி அதிர்ந்து நின்று விட்டாள். 

 ஈஸ்வர் விறுவிறுவென சமையல றைக்குள் நுழைந்து குப்பை தொட்டியில் இருந்த பாட்டிலை கையில் எடுத்து வந்தான். அது வீரியமிக்க விஷமா இருந்தது. 

 ஈஸ்வர், கண்களில் சிவப்புடன் அனல் தெறிக்க பல்லை  கடித்தவ ன்,வஞ்சியை நோக்கி வந்தவன் அவள் கையைப் பிடித்து, ஏன்? இப்படி?…. பண்ணினா……நீயும்.. கொலைக்காரினு.. நிரூபிச்சிட்ட இல்ல… என்றவன் பளீரென.. அவ ளை அறைந்தான். 

 யாரும் அவளை தூக்கவில்லை. 

வஞ்சி, நடுக்கத்துடன் இல்ல, இல்ல நான் ஒன்னும் பண்ணலங்க… எனக்கு… இது… எப்படி? அங்க… வந்துச்சுன்னு தெரியாது என்றாள் கன்னத்தில் கை வைத்துக்கொண் டு தேம்பலுடன், 

மாதங்கி, உடனே ஏய்! பொய் சொல் லாத,நீதான சமைக்கிற,மகாராணி  போல சமையல் கட்டையே சாம்ரா ஜ்யம்,பண்ணிட்டு இருந்த நீ உன்ன தவிர யாருடி? கலக்கி இருப்பா…? சொல்லுடி… சொல்லு என்றார் கோபமாய்,

 ஈஸ்வருக்கு, கோபம் கண்களை மறைத்தது. தன் அம்மா அன்று சொன்னது போல், நடந்து விட்டத ல்லவா.. அவள் முடியை பிடித்து தூக்கியவன். உன் புத்தியை காட்டி ட்டல்ல, பிச்சைக்கார குடும்பத்தில் பெண் எடுத்தா, அதுவும் தராதரம் இல்லாத,  குடும்பத்தில் பெண் எடுத்தா.. என்ன ஆகும்னு காட்டி ட்டடி… என பல்லை கடித்தவன்,

 என் அம்மா, அப்பவே சொன்னா ங்கடி.. உங்கள பத்தி, நான் தான் கேட்கல.. பணத்துக்காக தானடி… நாடகம் ஆடி என்னை கட்டிக்கிட்ட அதுக்கு, நைட்ல ரோட்ல போய்… என்ன சொல்ல வந்தவன், அவள் பார்த்த பார்வையில்….

 ச்சீ…உன்னை எல்லாம் பார்க்கவே பிடிக்கலடி என் அப்பா சொன்னது க்காகத்தான் இவ்வளவு நாள்  உன் னை இந்த வீட்டுக்குள்ள வெச்சி இருந்தேன். இனி உன் மூச்சு காத்து கூட இந்த வீட்ல, படக்கூடாதுடி என்றவன்,,

அவளை, இழுத்து வந்து வெளியே தள்ளினான். அப்போது அவன் கட்டிய தாலி வெளியே வந்து விழுந்தது. 

 கனகவல்லி,உடனே என் பையனே உன்ன வேண்டாம்னு…. சொன்ன பிறகு, அவன் கட்டிய தாலி எதுக்கு உனக்கு,அதைகழட்டி கொடுத்துட் டு, போய்டு…. என்றார் முகத்தை திருப்பி,

உடனே,வஞ்சி,விழுக்கென நிமிர்ந் து, ஈஸ்வரை பார்த்தாள்…. அவன் கல் போல நின்று  கொண்டிருந்தா னே,தவிர,எதுவும்சொல்லவில்லை 

மாதங்கி, உடனே வஞ்சத்துடன் ஒன்பது பவுன் அண்ணி..,  அன்ன காவடிக்கு கொடுக்க மனசு வரல போல,.. இத வச்சு தான் வாழ்க்கை யே, நடத்தலாம்னு முடிவு பண்ணி இருப்பா… என்றார் ஏளனமாய்,

 தர்ஷி, ஏய் ஒழுங்கு மரியாதையா என் ஈஸ்வர், கட்டின தாலியை… கழட்டி கொடுடி, என்றவள் ஈஸ்வர் இவ கொடுக்கறது, போல இல்ல… நானே கழட்டிறேன்… என   வஞ்சியி ன் அருகில் சென்றால் திமிராய் 

வஞ்சி, அவன் பேசியதிலேயே பாதி மரித்து விட்டு இருந்தாள். இதில் தாலியையும், கேட்கிறார்கள். ஈஸ்வர் எதுவும், சொல்லாமல் இரு க்கிறான் மூச்சு முட்டியது.கண்ணீர் நிற்கவில்லை.

வஞ்சி, இல்ல…,  இல்ல…., வேணாம் நான்…, நானே…, கழட்டி…தரேன் என்றவள், வார்த்தை   தொண்டை யில் சிக்கி கொண்டது.

 ஒருமுறை தன்நெஞ்சை அழுத்தி பிடித்தவள், கைகளில் நடுக்கத்து டன், தாலியை கழட்டினாள், உடல் உதறியது அவளுக்கு.

மாதங்கி, வெடுக்கென…. கையில் இருந்த, தாலியை பிடுங்கிக் கொண்டாள் சிரிப்புடன், 

 தர்ஷி வஞ்சியின் எல்லா பொருட் களையும்,கொண்டு வந்து, வெளி யே,போட்டுவிட்டு, போடி வெளியே இங்கிருந்து என்றாள்.

 வஞ்சி ஈஸ்வரி பார்த்தால் அவன் என்றெடுத்து விட்டு அசையவே இல்லை 

 தர்ஷி, ஈஸ்வர்… வாங்க… உள்ள போகலாம், சனியன் ஒழிஞ்சது. வீட்டை கழுவிவிடனும் என்றவள் அவன் கையைப் பிடித்து இழுத்தா ள்.

 வஞ்சி அழுது கொண்டே.. எல்லா வற்றையும் எடுத்துக் கொண்டு வெளியே, செல்ல கிளம்பினாள். ஈஸ்வர், போகும் அவளை  சொடக் கு,போட்டு அழைத்தவன், 

 தர்ஷியை, தன் கை வளைவில் வைத்துக்கொண்டு, ஏய்!… இப்ப கேட்டுக்க…, இவள தான்…  நான்.. கொஞ்ச நாள்ல கட்டிக்க போறேன். என் பணத்திற்கும் அந்தஸ்துக்கும் தகுதிக்கும் ஏத்தவ.. இவ.. மட்டும் தான்,என்றவன், இப்ப நீ  போகலா ம், என வாசலை காட்டினான்.

 வஞ்சி, அவன் கைவளைவில் நின்ற,  தர்ஷிகாவை பார்த்தவள் அழுதபடி தலைகுனிந்து கொண் டாள்.

தர்ஷி, இவளை பார்த்து ஏளனமா ய் சிரித்தாள். என்றைக்கு அவன் தாலியை கழட்ட சொல்லி, தர்ஷி தான் வேண்டும் என்று சொன்னா னோ..அந்த நிமிடமே உணர்வின்றி மறுத்து(மரித்து ) போய்விட்டாள் வஞ்சி,

 கண்ணீரைத் துடைத்தவள் தன் உடைமைகளை, எடுத்துக்கொண் டு, வீட்டை விட்டு..  வெளியேறி விட்டாள். இங்கே அறையில் தர்ஷி மம்மி பிளான் சக்சஸ் இனி ஈஸ்வர் எனக்கு தான் என குதூகலமாய் இருந்தாள்.

வீட்டைவிட்டு,வெளியே வந்தவள் தன் வீட்டிற்கு கூட செல்லாமல் சென்னை பஸ்ஸில் ஏறி அமர்ந்த வள், கண்மூடி சாய்ந்து  கொண்டா ள். வீட்டில் இருந்த பெண்களுக்கு சுதந்திரமூர்த்தியை… நினைத்து… பயம் வந்தாலும் ஈஸ்வர் பார்த்துக் கொள்வான் என்று நம்பிக்கை யோடு இருந்தனர்.

சுந்தரமூர்த்தி,  அன்று மாலையே வீடு திரும்பியிருந்தார். வஞ்சியின் அறையில் விளக்கு எரியவில்லை காலை கேட்டுக்கொள்ளலாம் என நினைத்தவர் அவளுக்கென  வாங் கி,வந்த தேன்மிட்டாயை பார்த்தார் அவர் உதடு தானாக விரிந்தது. என் சின்ன சிட்டு என்றவர் போய் உறங்கி விட்டார்.

 

தொடரும்..

 

 

 

 

 

6 thoughts on “எனக்கென வந்த தேவதையே 14”

Leave a Reply to Sk Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top