அத்தியாயம் 21
ஈஸ்வர்,ஆகாஷ் இவ உன் பொண் ணா.., எனக்கு தெரியாம உனக்கு எப்படா.. கல்யாணம் ஆச்சு என் றான்.
ஆகாஷ் டேய், இவ வஞ்சியோட பொண்ணுடா, பேரு பிரதன்யா என்றான். இவன் பேசிக் கொண்டி ருக்கும் போதே… , பிரதன்யா தன் மழலை மொழியில்
…ப்பா…ப்பா,…பவூ ..த்தா…. த்தா என்றாள், தன் கையை நீட்டி விரித் து, அவள் பேசுவது அவ்வளவு அழகா இருந்தது. ஈஸ்வரால் அவ ளை, விட்டு கண்களை எடுக்க முடியவில்லை.
ஆகாஷ், என்னடா வேணும் என் பொண்ணுக்கு, பலூன் வேணுமா வா வாங்கலாம், என்றவன்,பிரதன் யாவிற்கு,பலூன் வாங்கி கையில் கொடுத்தான்.
ஈஸ்வர், டேய்…. உன் பொண்ணு இல்லன்ற, ஆனா குழந்தை உன்ன அப்பான்னு…, கூப்பிடுதே டா என் றான்.
உடனே,ஆகாஷ் சொந்தபொண் ணா… இருந்தா தான். அப்பானு…, கூப்பிடனுமா? என்ன என் பொண் ணு, மொத மொத அப்பான்னு என்னதான்டா, கூப்பிட்டா.. என சிலாகித்தவன் அப்பவே…. நான் அவளுக்கு அப்பா…. ஆகிட்டேன். அவ எனக்கு பொண்ணா… ஆகிட் டா என்றவன்,
வஞ்சிக்கு சம்மதம்னா பிரதன்யா வ சொந்த பொண்ணா ஏத்துக்கிட் டு, வஞ்சியை கல்யாணம் பண்ணி க்கவும், நான் ரெடி தான் மச்சான் என்றான்,வெட்கத்துடன்
ஆகாஷ் பேசியதை கேட்ட ஈஸ்வரு க்கு, நெஞ்செல்லாம் வலித்தது. தன் உயிரை யாரோ தன்னிடம் இருந்து பறிப்பது போல வலித்தது.
அப்போது ஈஸ்வர், குழந்தையை…, உற்றுப் பார்த்தான். அவனுக்கு இடது காதில், மச்சம் இருப்பது போல் அவளுக்கும் இருந்தது. அதிர்ந்து விட்டான் ஒரு நிமிடம் இது எப்படி சாத்தியம் என்று,
அதேநேரம், வஞ்சி ஆகாஷிற்கு அழைத்திருந்தாள். ஆகாஷ் டைம் ஆச்சு, மச்சான். இன்னொரு நாள் பார்க்கலாம், வீட்டுக்கு, வாடா…. அம்மா பார்த்தா சந்தோஷபடுவா ங்க, வஞ்சி கால் பண்றா நான் வரேன் என்றவன்,
பிரதிமா, மாமாவுக்கு… பாய்.. சொல்லுங்க என்றான்
குழந்தையும் பாய் மாமா.. என ஃபிளையிங் கிஸ் கொடுத்தவள் வெட்கப்பட்டு ஆகாஷ் தோளில் புதைந்துக் கொண்டாள்,
அவள், அப்படி… கூறும் போது ஈஸ்வருக்கு நெஞ்சில் முள் குத்திய து, போல் வலி எடுத்தது. தன்னை தாண்டிச் சென்ற அவர்களையே… பார்த்துக் கொண்டு நின்றான்.
எப்படி வீட்டுக்கு வந்து சேர்ந்தான் என்பது கடவுளுக்கு தான் வெளிச் சம்.
சென்னையில் இரு நாட்கள் தங்க வேண்டி… இருந்தது, மறுநாள் வேலையை துரிதமாக முடித்தவன் 12 மணிஅளவில், ஆகாஷ் வீட்டுக் கு வந்தான்.வீட்டில் யாரும்இல்லை புவனா அம்மா மட்டும்தான் இருந் தார்.
புவனா அம்மா ஈஸ்வரி வரவேற்று காபி கொடுத்தார். ஈஸ்வர் வீட்டை சுற்றி பார்த்தவன், அம்மா வீட்ல யாரும் இல்லையா?.. என்றான்.
இல்லப்பா, ஆகாஷ் வேலைக்கு போயிட்டான் குட்டி பொண்ணுக்கு மருந்து காலி, அதனால வஞ்சி வாங்க போய் இருக்கா…, குட்டியும் கூட போயிருக்கா என்றார்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே,வஞ்சி உள்ளேநுழைந்தாள் புவனாம்மா,இந்த குட்டி ரொம்ப சேட்டை பிடிச்சவளா….மாறிட்டா சாக்லேட் வாங்கி தரலைன்னு, என் கன்னத்தை கடிச்சிட்டாமா வலிக் குது… பாருங்க…
அவ அப்பா வந்ததும் கம்ப்ளைன் ட், பண்ணலாம்…சரியா மா…. என பேசிக்கொண்டே வந்தவள், ஹாலி ல், ஈஸ்வரை பார்த்ததும் அப்படி யே நின்று விட்டாள்.
திருமணம் செய்யும்போது, பார்த்த தற்கும், இப்போது பார்ப்பதற்கும் நிறைய…, மாற்றம் அவளிடம், குழந்தை பெற்றதில் கூடுதல் அழ கோடு இருந்தாள் வஞ்சி.
ஈஸ்வர், அவளை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தான் வஞ்சி அவன் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் நகரப் பார்த் தாள்.
அதேநேரம் பிரதன்யா அம்மா..ங்கா ..ங்கா என அவள் புடவையை பிடித்து இழுத்தாள்.
புவனா,வஞ்சி போமா குழந்தைக் கு பசிக்குது போல ரூமுக்கு போ என அனுப்பி வைத்தார்.
புவனா, ஈஸ்வரிடம், பாவம் பா…, இந்த பொண்ணு புருஷன் விட்டு ட்டான் போல, கஷ்டமா இருக்கு. ஆகாஷும் பிடி கொடுக்க மாட்டே ங்கிறான், இந்த பொண்ண எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு டா கல்யாண ம், பண்ணிக்க டா னா எதுவும் சொல்ல மாட்றான் பா..
குணமான பொண்ணுபா யாருக்கு த்தான் ஆசை வராது சொல்லுப்பா என்றார்.
ஈஸ்வருக்கு, அதற்கு மேல் அங்கே இருக்க முடியவில்லை, ஏதோ.. காரணம் சொல்லி புறப்பட்டிருந் தான்
அவன் அறையில் சிந்தனையில் என்ன பேசுவது, அவளிடம் எப்படி பேசுவது, எவ்வளவு பெரிய தவறு செய்து இருக்கிறேன், பேசக்கூடாத வார்த்தைஎல்லாம் பேசிநோகடித்து இருக்கிறேன் செய்யாத தவறுக்கு, தண்டனை கொடுத்து இருக்கேன், என்றவன் வேதனையில் தன் கை களை சுவற்றில் குத்திக் கொண்டா ன்.
இரண்டு நாள், கழித்து மீண்டும் ஆகாஷ் வீட்டுக்கு சென்றான். கிளம்புவதை சொல்ல இது ஒரு சாக்கு அவளை பார்க்க,
ஹாலில் குழந்தை விளையாட்டு கொண்டிருந்தாள் புவனாம்மா இல்லை, வஞ்சி, குழந்தைக்கு உணவு கொண்டு வரவும் இவன் வந்து அமரவும் சரியாக இருந்தது
குழந்தை இவனைப் பார்த்ததும் ஒரு பொருளை கொண்டு வந்து கொடுத்து,
மாமா., ..ந்தா…ந்தா என்றது அது வே அவனுக்கு முதலடி.
இரண்டாவது ஹாலில் மாட்டி இருந்த ஆகாஷ் போட்டோவை காட்டியவள், ..ப்பா டூர்.., ..ப்பா, ஆபி என்றாள்
அப்போதுதான் குழந்தையை மிக அருகில் பார்த்தான். அப்படியே அவனை உரித்து வைத்து பிறந்தி ருந்தாள்,அவன் மகள். ஆகாஷை காட்டி அப்பா என்றதும் உடைந்து போய்விட்டான் ஈஸ்வர்.
அவனுக்கு தண்ணீர் கொண்டு வந்த வஞ்சியின் கையைப் பிடித் தான் ஈஸ்வர்.
அவன் அவள் கையை பிடித்ததும் அதிர்ந்தவள், பின் தைரியமாய் கையை விடுங்க.என்னை தொட்டு பேச யார் உங்களுக்கு உரிமை கொடுத்தது.
இப்ப, நீங்க… விடலனா ஆகாஷ் வந்ததும், சொல்ல வேண்டி வரும் என்றாள் கோபமாய்
ஈஸ்வர் அவள் கூறியதில் பல்லை கடித்தவன் யாரு டி அவன் நான் ஏண்டி ஆகாஷ் கிட்ட பேசணும் என்றான்.
உடனே, வஞ்சி நக்கலாய் சிரித்தவ ள், என்னை கட்டிக்க போறவர் அவர் தானே, அப்ப அவர்கிட்ட தானே கேட்கணும்.அப்ப என் மீது உரிமைப்பட்டவரும் அவர்தானே என்றால் கையை அவனிடமிருந் து உதறி,
ஈஸ்வர் அவள் அப்படி சொன்னது ம், தன் தலைகோதி கோபத்தை கட்டுப்படுத்தியவன், திரும்பவும் அவளை முகத்துக்கு நேராக… கொண்டு வந்தவன் ஏய் உரிமை பட்டவன் நான் இங்க குத்து கல்லா ட்டம் நிக்கிறேன்.நீ அவனை உரிம பட்டவன்னு…. சொல்ற,
இவ, என் பொண்ணுடி நான் இல்லாம எப்படி இவ வந்திருப்பா சொல்லுடி… சொல்லு என்றான் கோபமாய்…
வஞ்சி, நீங்க மட்டும்தான் காரண மா.. இருக்க முடியுமா? என்ன சார். ரோட்ல போய் நின்னு கை காட்டி னாலும், அவன் கூட போய்… என்றவளை,
ஏய்! இதுக்குமேல பேசின கொன்னு டுவேன்டி உன்னை, பேசாதடி வாய மூடிட்டு இரு டி என்றான்.
வஞ்சி, சார் இந்த அதிகாரம் எல்லா ம், உங்க பணக்கார பொண்டாட்டி கிட்ட, காட்டுங்க. உங்க உரிமை… நான் விவாகரத்து பேப்பர்ல கை யெழுத்து போடும்போதே முடிஞ்சி டுச்சு..சோ நீங்க போகலாம்.
உங்களுக்கும் என் பொண்ணுக்கு ம், எந்த உறவும் இல்ல, உரிமையும் இல்ல போகலாம் என்றவள். பிரத ன்யாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.
அன்று அவன் பேசிய அத்தனை வார்த்தையும், இன்று திரும்ப அவனுக்கு அடிக்கிறது எதுவும் பேச முடியாமல் சென்று விட்டான் ஊருக்கு.
தொடரும்…
super sis sema kocham big epi kodugga sis plss appuram next epi eppo poduvigga…….
Morning da
Ok sis
👌👌👌👌👌👌👌👌👌👌👌
super story Mam morning epi ku waiting
Yen mrng epi poda matrenga, yevalo nerama wait panrenu theriuma
இதோ போடுறேன் டா
Thanvinaithannaisudum.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌