ATM Tamil Romantic Novels

எனக்கென வந்த தேவதையே 22

அத்தியாயம் 22

வஞ்சி,  அவனிடம் அப்படி பேசி விட்டு அறைக்குள் சென்று கதறி அழுதாள். சிறு வயதில் இருந்து தன் மாமனோடு ஈஸ்வரை பார்க் கும்போது, ஒருவித இருப்பு.  அந்த ஈர்ப்பு பெரியவளாய் ஆனதும் பிடித்தமாக மாறிப்போனது. 

 ஓரக் கண்ணால் பலமுறை ரசித்தி ருக்கிறாள்.நேரடியாக பார்க்கபயம் தர்ஷிகா,  அவனோடு சகஜமாக பேசுவது போல் தானும் பேச ஆசை தான்,ஆனால் அவனை பார்த்தா லே…. உடல் நடுக்கம் கொண்டு விடுகிறது. 

எந்த, அளவிற்கு அப்போது…   அவ னை பிடித்ததோ இப்போது வெறுப் பு, மட்டுமே மிஞ்சி இருக்கிறது தன் குழந்தையை பார்க்கும் போதெல் லாம், அவனை பார்ப்பதுபோலவே இருக்கிறது அவனை அல்லவா உறித்துவைத்து பிறந்திருக்கிறாள் அவள் செல்ல மகள். 

உறங்கும் தன் மகளைப் பார்த்தவ ள், அவள் நெற்றியில் முத்தமிட்டு எனக்கு நீ மட்டும் போதும் பாப்பா என்றாள்.

ஆகாஷ் வரும் நேரம் என்பதால் கண்களை துடைத்துக் கொண்ட வள், சமைக்க சென்று விட்டாள். 

 இங்கே, கம்பத்தில் தோட்டத்தின் கட்டிலில், அமைதியாக மேலே…. பார்த்தபடி படுத்துக் கொண்டிருந் தான் ஈஸ்வர். அவள் வேண்டாம் என்று, சொல்ல சொல்ல அவள் மேல்,  உரிமையும் ஆசையும் அதிக மாய், வருகிறது அதுவும் அவனை ப் போலவே இருந்த பிள்ளையை பார்த்ததும் சரணாகதி ஆகி விட்டான். 

அங்கியிருந்து, வந்ததிலிருந்து சரியாக சாப்பிடாமல் இளைத்துப் போயிருந்தான்.கண்களில் லேசா ன கண்ணீர். 

சுந்தரமூர்த்தியும், அவனை கவனி த்துக் கொண்டுதான் இருக்கிறார். சென்னை சென்று வந்ததிலிருந்து ஈஸ்வர அவனாக இல்லை என்று. என்ன   இருந்தாலும்  பெற்ற  பிள் ளையாயிற்றே, மனம் கேட்காமல் அருகில் போய் அமர்ந்தார்.

ஈஸ்வர் கண்களை மூடி இருந்தா னே, தவிர்த்து உறங்கவில்லை கருவிழிஅலை,பாய்ந்துகொண்டே இருந்தது. 

 சுந்தரமூர்த்தி, ஈஸ்வர் என்னப்பா ஏன் இப்படி இருக்க. சென்னையில் வஞ்சியையும் உன் பொண்ணை யும், பார்த்தியா என்றார், அவன் மனதை அறிந்தவராய், அவன் தலையை கோதி விட்டார்.

 அவர் அப்படி  கேட்டதும்   எழுந்த வன் அவரை கட்டிக் கொண்டான் ..ப்பா, வஞ்சி அவ அங்க இருக்கா பா.. என் பொண்ணு பா…. என்ன மாதிரியே… இருக்காப்பா….   என் பொண்ணு, என்ன மாமான்னு… கூப்பிடுறாப்பா, எனக்கு வலிக்குது பா… என தன் நெஞ்சை அழுத்திக் கொண்டான். சுந்தரம் அவனை தடவிக் கொடுத்தார்.

 அவ..அவ கல்யாணம் பண்ணிக்க போறாளாம்பா.. பிரதன்யாவ என் என்.. பொண்ணு… இல்லன்னு… சொல்றாப்பா…. 

 புவனாம்மா…  ஆகாஷுக்கும்… வஞ்சிக்கும், கல்யாணம் பண்ணி வைக்க போறதா… பேசுறாங்க..ப்பா என்னால முடியல… 

நான்செஞ்சது தப்புதான் மன்னிக் க,முடியாத தப்புதான். ஆனா அவ எனக்கு வேணும்பா. அவளை வர சொல்லுங்கப்பா,என ஏங்கினான்.

 சுந்தரம், அதிர்ந்துவிட்டார் தன் ஈஸ்வரா!இப்படி பேசுவது என்று, அவன் ஆளுமையை, பார்த்திருக் கிறார். சிங்கம் போல்….  சிலுப்பிக் கொண்டு திரிவான். சீக்கிரம் இறங் கி போக மாட்டான், எந்த ஒரு விஷ யத்திற்கும். அப்படிப்பட்டவன் இப்படி பேசுவது, அதிசயமாக இரு ந்தது சுந்தரமூர்த்திக்கு. 

 அவனிடம், பேசி சிறிதாக அமைதி ப்படுத்தி இருந்தார். 

இங்கே உதயன்பன் வீட்டில் தர்ஷி கா, அவனை புரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.ஆரம்பத்தில் அவ னை, பொருட்டாக..   எண்ணவில் லை. ஆனால்,  அன்பன் தனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என தெரி ந்து கொண்டு, அதையே செய்தான் ஆனால்… இவ்வளவு…  பட்டும் மாதங்கி திருந்தவில்லை. பணம் சுருட்டவே மனம் போனது. 

 தாஸ்,  அவர் வீட்டிற்கு சென்று விட்டார். சில மாதங்களுக்கு பிறகு ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு தாம்பத்ய வாழ்வில் அடி எடுத்து வைத்தனர். அவன் காதலை ஏற்று க்கொண்டு அவனோடு வாழ ஆரம்பித்தாள் தர்ஷிகா.

 ஒரு கட்டத்தில், மாதங்கின் தொல் லை, பணத்திற்காக எல்லை மீறிய தை,பார்த்த தர்ஷிகா தன் வாழ்க் கை திரும்பவும் ஏதாவது ஆகிவி டக்கூடாது, என நினைத்து மாதங் கியை வீட்டை விட்டு அனுப்பி விட்டாள். 

ஈஸ்வர் இப்படி… மனவேதனையில் இருப்பது கவலையாக இருந்தது. சுந்தரமூர்த்தி, ஈஸ்வரிடம் வஞ்சி கிட்ட தான் சமாதானம் பேசி வை ப்பதாக, கூறி சென்னைக்கு அவனை அழைத்துச் சென்றார்.

 சென்னையில்  இன்று ஆகாஷ் வீட்டில் வெள்ளிக்கிழமை என்ப தால், காலையிலேயே வஞ்சி கை வண்ணத்தில் சமையல் நடந்து கொண்டிருந்தது. குழந்தையை புவனா வைத்திருந்தார்.

 ஆகாஷ், கிளம்பி கீழே ஹாலில் வந்து அமர்ந்து, பிரதன்யா வை தூக்கி போட்டு விளையாடிக் கொண்டிருந்தான்.

 பிரதன்யா, அப்பா.. அப்பா.. என கிளுக்கி சிரித்துக் கொண்டிருந்தா ள். 

வீடே சாம்பிராணி மற்றும் ஊது பத்தி… உபயத்தில் மணத்தது. புவனா, ஆகாஷ் பொண்ணுங்க ஜாதகம்,  ரெண்டு வந்து இருக்கு. ஜாதகமும்பொருந்தி,போறதுபோல இருக்குப்பா, பேசவா என அவனிட ம் கேட்டுக் கொண்டிருந்தார்.

 ஆகாஷ்,  அம்மா.. இப்பத்திக்கு இதெல்லாம் வேணாமா…. அப்புறம் பாத்துக்கலாம்….    தோணும்போது சொல்றேன் என்றவன் பிரதன்யா வோடு விளையாட ஆரம்பித்து விட்டான்.

அதேநேரம் வஞ்சி சமையலறையி ல், இருந்து தீபாராதனை தட்டோடு வந்தவள்,புவனா அம்மாவிடம் தட்டைநீட்டி, ஏம்மா ஆகாஷ்கிட்ட,  கேட்டுட்டு…..இருக்கீங்க என்றவள் அவர் தொட்டு…. கும்பிட்டதும் ஆகாஷ் இடம் வந்தவள் 

 அதெல்லாம், பண்ணிக்கலாம் நேரம் கூடி வருது, அவர் பண்ணி க்குவாரு, நீங்க ஜாதகம் பாருங்க செட் ஆச்சுன்னா உடனே கல்யா ணம் முடிச்சிடலாம், என்றவள், 

 பிரதன்யா, நெற்றியில் திருநீரை வைத்தவள், ஆகாஷை பார்த்து கன்சிமிட்டினாள் 

 பிரதன்யா அம்மா… அப்பா என அவன் நெற்றியை காட்டினாள்.

உடனே, வஞ்சி, சிரித்தவள்  கடவு ளே… சீக்கிரம் ஆகாஷுக்கு இந்த வருஷத்துக்குள்ள… கல்யாணம் முடியனும்.  அதுக்கு நீங்கதான்… உதவி பண்ணுனும் என சொல்லி சிரித்துக் கொண்டே திருநீரை அவன் நெற்றியில் வைத்தாள்.

 ஆகாஷ், அவளை பார்த்தவன் அந்த பொண்ணு, உன்ன மாதிரி வேணும்னு… வேண்டிக்க வஞ்சி, என்றான். அவளை அழுத்தமாக பார்த்து பார்த்துக்கொண்டே..

 அங்கே, அதில் அதிர்ந்து நின்றது வஞ்சி மட்டும் அல்ல, புவனாவும் தான்.

அதேநேரம் வாசலின் நிழலாடியது யார் என நிமிர்ந்து பார்த்தாள் சுந்தரமூர்த்தி ஈஸ்வர் நின்றிருந்த னர்.

 வஞ்சி அவனைக் கண்டு இன்னும் அதிர்ச்சியானாள்.ஈஸ்வர் அவள் விரலையே பார்த்துக் கொண்டிருந் தான். 

சுந்தரமூர்த்தி பேசியதும் நினைவி ற்கு வந்தவள், கையை இறக்கிவிட் டு, வாங்க என கூறி சமையலறை சென்று விட்டாள். 

போகும் அவளையே அவன் பார் வை தொடர்ந்தது. ஆகாஷ் ஈஸ்வ ரை பார்த்தவன் வா மச்சான் வந்து உட்காரு, வஞ்சி…. எல்லாருக்கும், டிபன் ரெடி பண்ணு என்றான்.

உள்ளிருந்து சரி… என்று மட்டும் குரல்  வந்தது,  புவனா வந்தவர்க ளை, அமர வைத்து நலம் விசாரித் துக் கொண்டிருந்தார்.   உணவு மேஜையில் அமர்ந்து உணவு உண்டனர்.

சாப்பிடும் வரை, எதுவும் பேசவில் லை பொதுவான விஷயங்கள் பொதுவான… பேச்சுகள் தான் இருந்தது. ஈஸ்டர் மட்டும் தான் வஞ்சியை பார்த்துக் கொண்டே இருந்தான்.

வஞ்சிக்கு அவன் பார்ப்பது கூச்ச மாக இருந்தாலும் அமைதியாக பரிமாறினாள். சாப்பிட்டு முடித்த வன் உரிமையாய் அவள்   முந்தா னையை பிடித்து வாயை…. துடை த்தான். வஞ்சி ஒரு நிமிடம் அதிர்ச் சியாகிவிட்டாள்.

வஞ்சி,என்ன பண்றீங்க?விடுங்க என்   முந்தானையை…    என சீறினாள் 

ஈஸ்வர் முடியாதுடி…, வா வீட்டுக்கு போகலாம் என்றான்.

வஞ்சி, விடப்போறிங்களா..? இல்ல யா, விடுங்க..என தன் முந்தானை யை பிடுங்கிக் கொண்டாள். 

 ஆகாஷ், டேய் என்னடா..பண்ற மச்சான், வஞ்சி…சாரி அவன் ஏதோ தெரியாம.. என முடிப்பதற்குள்..

ஈஸ்வர்,உரிமை இருக்கு பிடிச்சேன் எவன் கேட்பான் என்னை?  என் பொண்டாட்டி, முந்தானை பிடிக்க என்ன தவிர, வேற யாருக்கு….. உரிமை இருக்கு? என்றான் கோவமாய்…

 ஆகாஷ், அதிந்தவனாய்,என்ன? மச்சான்! என்ன சொல்ற?வஞ்சி.. உன்… என்றவனுக்கு அதற்கு மேல் பேச்சு வரவில்லை.

திரும்பி வஞ்சியை,  பார்த்தான் வஞ்சி அவனைப் பார்த்தவள் கண்ணீருடன், ஆம்…. என்றாள். ஆகாஷ் ஒரு நிமிடம் உடைந்து விட்டான். 

சுந்தரம்,வஞ்சிமா, ஈஸ்வர் உன்ன கூட்டிட்டு, போக வந்திருக்கான்டா. அவனை மன்னிச்சி… வீட்டுக்கு வாம்மா…,  நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா…  வாழனும்மா….என் றார்.

 வஞ்சி, உடனே மாமா அதுக்கான பதிலை நான் ரெண்டு நாளுக்கு முன்னாடியே..சொல்லிட்டேனே…..என்றாள் கைகளை கட்டிக்கொண் டு, அவனைப் பார்த்து. ஈஸ்வரும் அவளை தான் பார்த்தபடி   இருந் தான். 

சுந்தரம்,  வஞ்சி…  இந்த மாமாக்கா வாது…. வரலாம்ல என்றாள்.

 அன்னைக்கும்,உங்களை நம்பி தான் மாமா வந்தேன் என்றாள்.

 சுந்தரம், அவன் உன்னை விரும்பி அழைச்சிட்டு போக வந்திருக்கான் மா.., இனி எந்த தப்பும் நடக்காது டா… வா வீட்டுக்கு போகலாம் என்றார். 

 அவ்வளவுதான், வஞ்சிக்கு எங்கி ருந்து…அவ்வளவு கோபம்…. வந்த தோ, அருகில் இருந்த பூச்சாடியை ஆவேசமாய்,தள்ளிவிட்டவள் வா.. வா… னா எங்க வர சொல்றீங்க? மாமா… எந்த உரிமையில் வர அந்த வீட்டுக்கு,

அங்க வந்ததிலிருந்து வேலைக்கா ரியா… தானே பார்த்தாரு. என்னை க்காவது மனைவி என்கிற உரிமை கொடுத்து இருப்பாரா? 

அன்னைக்கு ஆகாஷ் வீட்டுக்கு வந்து என்னை யாருன்னு கேட்டப் ப.. தர்ஷிகா,  வேலைக்காரின்னு…. சொன்னா.. அது கூட பொறுத்து க்கிட்டேன். ஆனா அவ புருஷன் ஓடிபோயிட்டான் தாலிய கட்டிட்டு, நாங்கதான்,வெச்சி சோறு…. போடு றோம்னு, சொல்லி சிரிக்கும் போது எதுவும் சொல்லாம, அமைதியா… தானே… இருந்தாரு மாமா, அப்ப எங்க போச்சு உரிமை?

வார்த்தைக்கு, வார்த்த, உன்னை … பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லும் போது, எத்தனை தடவை உடைஞ் சி, அழுது இருக்கேன் தெரியுமா?

டிவோர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போடும்போது, கூட அமைதியா… தானே.. மாமா இருந்தாரு. அப்ப  எங்க போச்சு இவரோட உரிமை? 

தாம்பத்தியங்கிறது….  புருஷன் பொண்டாட்டிகுள்ள…..நடக்குற அழகான ஒரு காதல். ஆனா…என க்கு.. என அழுதவள், அன்னைக்கு அன்னைக்கு, போதையில்… நான் எவ்வளவு கெஞ்சியும், தடுத்தும்… என வாய்ப்பொத்தி அழுதவள், 

அவர் பண்ண காரியத்தால…. இன் னைக்கு இதோ இருக்காலே… என் பொண்ணு வயித்துல வந்துட்டா.. எங்க அதை, சொல்ல போய் என் கற்ப அசிங்கப்படுத்தி….. பேசிடப் போறார்னு…..எனக்குள்ளவே மறச்சிட்டேன்.

துணிஞ்சி, அன்னைக்கு…. சொல்ல லாம்னு நினைக்கும்போது வீட்ல இருக்குறவங்க,பிரச்சனைபண்ணி கொலைகாரி.. பட்டம் கட்டி தகாத வார்த்தை எல்லாம் பேசினாங்க, 

 இதோ, உக்காந்துட்டு இருக்காரே ஈஸ்வர் சார், நான் தப்பு செய்யல… னு எவ்வளவு சொல்லியும், என்ன என் கேரக்டரை, அசிங்கமா பேசி.. அடிச்சு,  என், க… கழுத்துல இருந்த தாலி… ய… என்றவளுக்கு மூச்சு வாங்கியது. 

 அழுகையில், நெஞ்சை பிடித்துக் கொண்டவள், கழட்டி கொடுக்கச் சொன்னாரு, இந்த கையால தானே மாமா, அதை கழட்டி கொடுத்தேன். என இரு கைகளாலும் முகத்தில் அடித்துக் கொண்டு அழுதாள்.

 புவனா, ஓடிப்போய் அவளைப் பிடித்துக் கொண்டார்.அழாதமா… என்று அவர் கண்களிலும் கண்ணீர். 

ஆகாஷ் கண்களும் கலங்கியிருந் தது, வஞ்சி, இன்றே…. எல்லாத்தை யும், பேசி விட வேண்டும் என்ற முடிவோடு,

 

தொடரும் 

 

7 thoughts on “எனக்கென வந்த தேவதையே 22”

Leave a Reply to Vithya. V Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top