ATM Tamil Romantic Novels

எனக்கென வந்த தேவதையே 23

அத்தியாயம் 23

வஞ்சி கண்ணீரை அழுத்தி துடை த்தவள், நாங்க.. ஏழைங்க… தான் காசு பணம் இல்லாதவங்க.. தான். அதுக்காக மானத்தையும் தன்மா னத்தையும், என்னைக்கும் இழந்து வாழல மாமா…

எனக்கு, என்ன தகுதி….இருக்கு என்ன அந்தஸ்து இருக்கு பிச்சைக் கார குடும்பம் ஆச்சே மாமா.. நான். 

இப்ப.. எப்படி? என் மேல… காதல் வந்துச்சு…உங்க பிள்ளைக்கு, இப்ப வும் என்கிட்ட ஒண்ணுமே இல்லை யே,அதே வக்கில்லாத வஞ்சி தான்.

அவருக்கு தான் ஆல்ரெடி தர்ஷிகா வோட கல்யாணம் ஆகிடுச்சே…. அப்புறம், என்னை எதுக்கு கூப்பி டுறாரு.?. ஓஹோ… வப்பாட்டியா.. வச்சுக்கறதுக்கா.. என்றாள் நக்கலாய்….,

 அவள், அப்படி கூறியதும் ஈஸ்வர் அவளை பார்த்து முறைத்தான்.

உடனே சுந்தரம், வஞ்சி..மா அப்படி லாம் ஒன்னும் இல்லடா…என சொல்ல வந்தார் 

வஞ்சி, இல்ல மாமா என்னைக்கு தர்ஷிகாவ கட்டிப்பிடிச்சு நின்னு அவளைத்தான் கட்டிக்க போறேன் னு.. சொன்னாரோ? அன்னைக்கே நான் செத்துட்டேன்.  செத்த என்ன கொண்டு போய் என்ன குடும்பம் நடத்த போறாராம்..,  சொல்லுங்க…. மாமா சொல்லுங்க….. என்றாள் வேதனையுடன்.. 

 ஈஸ்வர், அவள் பேசியதை எல்லா ம் கேட்டானே.. தவிர, எதுவும் பேச வில்லை மனதில் என்ன ஓடுகிறது என்றும் தெரியவில்லை.

சுந்தரம், உடனே இல்லடா உன்மேல எந்த தப்பும் இல்லை. எங்க மேல தான் எல்லா தப்பும். தர்ஷிகாவும் அவ அம்மா மாதங்கியும் சேர்ந்து இது எல்லாத்தையும் பிளான் பண் ணி… பண்ணியிருக்காங்க. 

எல்லாத்துக்கும் அவங்க ரெண்டு பேரும் தான் காரணம், அவங்கள வீட்ட விட்டு…. அனுப்பிட்டான் ஈஸ்வர்.

வஞ்சி, உடனே “ஓ”  அவங்க தான் பண்ணாங்கன்னு  தெரிஞ்சதால தான்,தேடி வந்திருக்காரா?தெரியா மலே…போயிருந்தா அப்போ தேடி வந்திருக்க மாட்டார்.. இல்லையா? மாமா…. என்றாள்.

சுந்தரம், இல்லம்மா விஷயம் கண் டிப்பா, வெளியே தெரிந்திருக்கும். எப்படி இருந்தாலும், அவங்க… என் கிட்ட மாட்டியிருப்பாங்க.. அதுவும் இல்லாம நீ நினைக்கிற…  மாதிரி ஈஸ்வருக்கும்,  தர்ஷிகாவுக்கும்… கல்யாணம் எல்லாம் நடக்கலமா…  என்றார்.

வஞ்சி,எப்படி வேணா இருக்கட்டும் மாமா, அன்னிக்கு ஆகாஷ் மட்டும் இல்லனா.. இன்னைக்கு நானும் என் பொண்ணும்,… எங்க போய் என்ன…? ஆகிருப்போங்கறது… தெரியாது.

அவருக்கு,, நான் என்னைக்கும்…. கடமை பட்டு இருக்கேன். என் மேல ஆசைப்பட்டேன்ற ஒரே காரணத்து க்காக,இதுவரைக்கும் எல்லாத்தை யும், எங்களுக்காக செஞ்சிட்டு இரு க்காரு,…இன்னைக்கு…வரைக்கும்… கல்யாணமும் பண்ணிக்காம… இருக்காரு,

 எனக்கு என் பொண்ணு மட்டும் போதும் மாமா. உங்க பையனுக்கு அவர் தகுதிக்கும், அந்தஸ்துக்கும் ஏத்த பொண்ணா.. பார்த்து கட்டி வைங்க.. என கையெடுத்து கும்பி ட்டாள்.அவள் பேசிய அத்தனையு ம், நூற்றுக்கு நூறு… உண்மை. 

 சுந்தர மூர்த்தியால் எதுவும் பேச முடியவில்லை. 

ஈஸ்வர், அழுந்த முகத்தை துடைத் தவன், அவளையும் குழந்தையும் ஒரு முறை, ஆழ்ந்து பார்த்தவன் சென்று விட்டான்.சுந்தரமூர்த்தியும் விடை பெற்றுக்கொண்டார் அவர் களிடம்.

அவர்கள் போனதும் ஓடிப்போய் அறைகதவை மூடி கதறி அழுதாள் வஞ்சி, அவள் மனதில் இருந்த அத் தனை பாரமும், இறங்கியது போல் இருந்தது. அவளை யாரும் தொந்த ரவு..செய்யவில்லை. 

இங்கே, ஈஸ்வர் ஊருக்கு எப்படி? வந்தான்.. என்று தெரியவில்லை அவள் பேசியது அனைத்தும் உண்மை. 

 அவர்களை வாசலில் பார்த்ததும் கனகா ஓடி வந்தார். ஈஸ்வர் யாரிட மும், பேசாமல்… விறுவிறுவென.. அறை சென்று விட்டான். 

கனகா சுந்தரத்திடம், என்னங்க… போன விஷயம், என்ன ஆச்சு? என்றார். மெதுவாக..

 ஏற்கனவே, கோவத்தில் இருந்தவர் கனகாவை, பார்த்ததும் இன்னும் கோபமாகி,கன்னத்தில் விட்டார்… ஒரு அறை, அம்மா…. என்றபடி… தூரப் போய் விழுந்தார் கனகா. 

அவர் தாய், வடிவம்மாள் நின்று கொண்டுதான் இருந்தார்.போய் தூக்கவில்லை. 

சுந்தரம், கோபத்துடன்… பல்லை… கடித்தவர், உன்னால..?  தான்… டி இவ்ளோ,  பிரச்சனையும் அவள் என்புள்ள, கூட வாழ மாட்டேன்னு சொல்லிட்டா.. அவன குற்றவாளி ஆக்கி.. அவனை கூட்டு…. சேர்த்து அவன் வாழ்க்கையே கெடுத்துட்டி யேடி..இவ்வளவு பண்ணி  என்னத் தடி…, கண்ட 

சோறு கண்ட இடம்… சொர்க்கம்னு உன்கூட இருந்த எல்லாரும் உன்ன விட்டு, போயிட்டாங்க…, நீயும் உன் புள்ள, மருமக குடும்பம்னு இருந்தி ருந்தா…,  இப்படி எல்லாம் நடந்திரு க்குமாடி….,

இனி, என் முகத்தில் முழிக்காத…, உனக்கும் எனக்கும் ஒன்னுமில்ல இந்த வீட்ல,  இருக்க..  பொருளும், நீயும் ஒன்னு.., என்றவர் சென்று விட்டார். வீட்டு வேலை செய்பவர் கள், அனைவரும்,அவரையே பார் த்திருந்தனர். கனகாவுக்கு அவமா னமாக, இருந்தது. எழுந்து அழுது கொண்டே…, சென்று விட்டார் 

 இங்கே, உதயன் வீட்டில் அறையில் அன்புடன் உறங்கிக் கொண்டிருந் தான். தர்ஷிகா,  காலையில் தான் தனக்கு கர்ப்பம் உறுதியாகி இருப் பதை, தெரிந்து கொண்டாள். 

அதை சொல்ல அவன் அறைக்கு சந்தோஷமாக வந்தாள்.அவள் வந் து அமர்ந்ததும், அவள் வாசத்தில் நகர்ந்து,  அவள் மடியில் படுத்து அவளை கட்டிக் கொண்டான். 

 தர்ஷிகா, அவன் சிகையை கோதி கொடுத்தாள், சிரிப்புடன்… 

 தர்ஷி, என்னங்க…,என்றாள்.

அன்பன், ம்ம்..சொல்லுடி என்றான் இன்னும் நெருங்கிப்படுத்து, தர்ஷி அதில்,  சிணுங்கியவள் ம்ம்ச்.. என் னங்க….,  எந்திரிங்க…, உங்க கிட்ட ஒன்னு சொல்லணும், என்றாள்.

 அன்பன், இப்படியே… சொல்லுடி… என் ஜாங்கிரி, என அவள் வயிற்றி ல், லேசாக கடித்தான்..

தர்ஷி ஸ்ஸ்ஆ… என்றவள் வெட்க த்துடன், அவன் காதில் தன் கர்ப்ப மாக.. இருக்கும் விஷயத்தை,  கூறி னாள். அடுத்த  நொடி அவள் அவ னுக்கு கீழே இருந்தாள்.

அன்பன் அவள், உதட்டில் முத்தமி ட்டு… உண்மையாவாடி என்றான். அவளும் கண்களை மூடி திறந்து ம்ம்… என்றாள், அவ்வளவுதான் அவள் முகம் முழுவதும் முத்தமிட் டு, ரொம்ப ஹாப்பியா இருக்கேன் டி,, அப்ப என் அம்மா திரும்ப என் கிட்ட,  வந்துடுவாங்கல்ல என்றவ ன் கண் கலங்கினான்.

உதய்,அழாதீங்க, கண்டிப்பா உங்க அம்மா, உங்க கிட்ட வந்துருவாங்க என அவனை மார்போடு அணைத் துக்கொண்டாள். 

அன்பன்,  ஜாங்கிரி… நான் ரொம்ப சந்தோஷமா… இருக்கேன் டி…. அதனால….?

 தர்ஷி,  அதனால?…

அன்பன், என் ஜாங்கிரிய கடிச்சு திங்க போறேன்..என்றவன்…அவ ளை,  அணைத்து முத்தமிட்டு…. அவளோடு இணைந்தான். 

சென்னையில் இருந்து வந்தவன் அறையில் இருந்து வெளியே வர வேயில்லை.., சிறிது நாட்களாக,  சரியாகவும்… சாப்பிடவில்லை, தொழிலையும் கவனிக்க  செல்ல வில்லை 

எதையோ யோசித்துக் கொண்டே இருந்தான். சிறுவயதிலேயே பிசின ஸில், இறங்கி விட்டதால், தன்னை யே, இறுக்கமாக்கிக் கொண்டான். யாரிடமும் இரண்டு வார்த்தைக்கு மேல்,பேச மாட்டான். அவன் அதிக மாக, பேசியது திட்டியது எல்லாம்.. வஞ்சியிடம் மட்டும் தான்…

சுந்தரமூர்த்தி,  இரண்டு, மூன்று நாட்களாக அவனை பார்க்காததா ல்,பார்க்க சென்றவருக்கு மன அழு த்தம், சோர்வு சாப்பிடாமல் இருந்த தால், எல்லாம் சேர்ந்து… மயக்கம் ஆகி இருந்தான் ஈஸ்வர்.

சுந்தரமூர்த்தி, ஈஸ்வரை..எழுப்பி னார். எழும்பவில்லை. உடனே பத றி, அடித்து டாக்டரை அழைத்தார். கனகாவும் அழுது கொண்டே ஓடி வந்தார், தன் மகனை பார்க்க,

டாக்டர் ஈஸ்வரை,பரிசோதித்தவர் சுந்தரத்திடம் இரண்டு மூனு நாளா சாப்பிடாம…, இருக்காரு போல. மனசில எதையோ வெச்சிக்கிட்டு சொல்லாம கஷ்டப்படுறாரு.டிரிப் ஸ்,போட்டு இருக்கேன்.முடிஞ்சதும் சாப்பிட குடுங்க. அவகிட்ட மனசு விட்டு பேசுங்க.

அவர் மனசுல என்ன அழுத்திட்டு இருக்குன்னு… கேளுங்க.. ட்ரெஸ்.. ரொம்ப ஆபத்தானது. மாத்திரை எழுதி இருக்கேன் பார்த்துக்கோங்க என்றவர் விடைபெற்று சென்று விட்டார். 

கனகா டாக்டர் சொன்னதைக் கேட் டவர் ஓவென கதறி அழுதார். ஈஸ்வரா என்ன மன்னிச்சிடுப்பா.. என்னாலதான்பா, உனக்கு இப்படி ஆயிடுச்சு.. நான் பாவி நான் பாவி என தலையில் அடித்துக் கொண்டு அழுதார். 

அரைமணி நேரம் கழித்து ஈஸ்வரு க்கு, முழிப்பு தட்டியது. ப்பா..,ப்பா.. வஞ்சி போகாத… சொல்லுங்கப்பா பசிக்குது பா… என்றான். 

 சுந்தரமூர்த்தி தன் மகனின் நிலை யை,பார்த்து கணகலங்கி விட்டார். ஓடிப்போய்.. அவனிடம் அமர்ந்து தலையை தடவி கொடுத்தார். 

 ஈஸ்வர் அவர் கையைப் பிடித்துக் கொண்டான்.சுந்தரம்தான் அவனு க்கு, உணவை ஊட்டிவிட்டு பார்த் துக் கொண்டார் ஈஸ்வரின் உடல் நிலை சற்று தேறியது. ஆனால்… எதையோ யோசித்தபடி இருந்தான் 

கண்கள், அடிக்கடி… கலங்கியது இரண்டு நாட்கள் நன்றாகத் தேற்றி இருந்தார். சுந்தரம்,

ஆனால் மறுபடியும் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. காய் ச்சல் விட்டு விட்டு வந்தது. உடல் இளைத்து சரியாக சாப்பிடாமல் இருந்தான். 

சுந்தரத்திற்கு,தாங்கமுடியவில்லை ஈஸ்வரை…இப்படி.. பார்க்க, திரும் பவும் டாக்டரை அழைத்து அவனு க்கு பரிசோதித்தார். 

 டாக்டர், இல்ல சுந்தரமூர்த்தி உங்க பையன் ரொம்ப மன அழுத்தத்தில் இருக்கிறார்.  முன்னாடி விட நாலு கிலோ குறைஞ்சி இருக்காரு.., இது ரொம்ப டேஞ்சர். இப்படியே விட்டா என்ன வேணா.. நடக்கலாம். ஜுரமு ம், விடவே…. மாட்டேங்குது. மனசு நல்லா… இருந்தா…  தான்.  உடம்பு என்ன சாப்பிட்டாலும்,ஏத்துக்க்கும் நான்கொடுக்கிற மருந்தும் வேலை செய்யும். 

 சோ, அதுக்கான தீர்வை தேடுங்க, கொண்டு வந்து…, அவர் முன்னாடி நிறுத்துங்க. தானாக சரியாகி… அவர் உடம்பும்.. தேறிடும் என்றார்.

 சுந்தரமூர்த்தி.. சரிங்க… டாக்டர் என்றார். வேதனையுடன் 

 டாக்டர், அப்புறம் அவர் ஏதோ பேர் சொல்லிட்டே இருக்காரு குயிக்கா.. அந்த பர்சன்கிட்ட பேசி வர வைங் க… அவங்கள.அப்ப நான் வரேன் சுந்தரம் என்றவர் கிளம்பினார். 

சுந்தரமூர்த்தி, அப்படியே மடங்கி அமர்ந்து விட்டார். என்ன சொல்லி அழைத்து வருவது, வேண்டாம் என்று கூறியவளை, எப்படி.. என தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார். 

 கனகா,  அவர் அருகே வந்தவர் என்னங்க.. நான் வேணா வஞ்சி கிட்ட பேசி பார்க்கவா… என்றார். அழுகையுடன்

சுந்தரமூர்த்தி பார்த்த பார்வையில் மிரண்டவர், அழுதபடி சென்று அமர்ந்து கொண்டார்.

 

தொடரும்..

 

 

 

 

8 thoughts on “எனக்கென வந்த தேவதையே 23”

  1. So finally neengalum Matha writers maari Eshwar than hero nu solli vanji ya avan kuda Jodi sekka poringa right sister

  2. Грузовой пропуск на МКАД «под ключ»: Проверка ТС по базе ГИБДД перед подачей заявки
    пропуск на мкад [url=http://propusk-na-mkad-v-moskvu1.ru/]http://propusk-na-mkad-v-moskvu1.ru/[/url] .

Leave a Reply to Zuha Banu Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top