ATM Tamil Romantic Novels

எனக்கென வந்த தேவதையே 30

அத்தியாயம் 30 இறுதி அத்தியாயம்

 காலை, எல்லா வேலையும் முடித் த வஞ்சி, பிரதன்யாவை மடியில் அமர வைத்து உணவை ஊட்டிக் கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு ஆகாஷிடம் இருந்து போன் கால் வந்தது 

 அதை, அட்டென்ட் செய்தவள் ஹாய், ஆகாஷ் எப்படி இருக்கீங்க பொன்னி எப்படி இருக்கா புவனா மாவுக்கு, உடம்புக்கு  இப்ப எப்படி இருக்கு, நானும் அவரும் வீட்டுக்கு வருவதாக இருந்தோம் அதுக்குள் ள,, ஒரு சின்ன வேலை வந்துடுச்சு அதனால தான் வர முடியல என்றாள். 

ஆகாஷ் எல்லாம் நல்லா இருக்கா ங்க…வஞ்சி,  இன்னைக்கு உனக்கு பர்த் டே இல்லையா… ஹாப்பி பர்த்டே வஞ்சி… என்றான்.

 தேங்க்யூ.. சொ… மச்.. ஆகாஷ் என்றாள். 

 ஆகாஷ், வஞ்சி இன்னொரு ஒரு சந்தோஷமான விஷயம் உன்கிட்ட சொல்லணும் என்றான்.

வஞ்சி, சொல்லுங்க.. ஆகாஷ்   என் ன விஷயம்,

ஆகாஷ்,அது.. அதுவந்து.. பொன் னி  2 மந்த் ப்ரக்னட்டா… இருக்கா இப்பதான் கன்பார்ம் பண்ணிட்டு வந்தோம் என்றான். 

வஞ்சி ஏய் சூப்பர் ஆகாஷ் ரொம்ப சந்தோஷமா இருக்கு, உடனே நான் போய் அத்தை கிட்டயும் மாமா கிட்டயும் போய் சொல்றேன்.

 பொன்னிக்கும், போன் பண்ணி நான் பேசுறேன், நான் ரொம்ப… சந் தோஷமா இருக்கேன் எல்லாருக்கு ம், போய் ஸ்வீட் பண்ண போறேன் என்றாள். 

ஆகாஷ் உன்கிட்ட தான் வந்து முதல்ல, இந்த விஷயத்தை சொல் றேன்,வஞ்சி.  என் பொண்ணு பிரதன்யா கிட்ட போனை குடு என்றான்.

வஞ்சி, சிரித்தவள் போனை பிரதன்யா காதில் வைத்தாள். 

பிரதன்யா, ஆகாஷ் அப்பா.. சொல் லுங்க எப்படி இருக்கீங்க என்றாள் தன் மழழை மொழியில்,

 ஆகாஷ், நல்லா இருக்கேன்… டா என் தங்க பொண்ணு,  உனக்கு இன்னொரு பாப்பா வரப்போகுது உனக்கு சந்தோஷம் தானே என்றான். 

பிரதன்யா அய்யா…, ஜாலி மம்மி ஆகாஷ் அப்பாக்,கு பாப்பா.. வரப் போகுதாம்.  அப்ப எனக்கு  சாக்லே ட் வாங்கி.. தரீங்களா… ஆகாஷ் அப்பா என்றாள் 

ஆகாஷ் அந்த பக்கம் சந்தோஷமா ய், சிரித்தவன்.. கண்டிப்பா… என் பொண்ணுக்கு இல்லாமலா.. உன க்கு என்ன வேணும் சொல்லு டா அப்பா உனக்கு கண்டிப்பா வாங்கி தரேன் என்றான்..

பின்,  வஞ்சியிடம் ஈஸ்வர்கிட்ட சொல்லிடு…வஞ்சி நான் போய் அம்மாகிட்ட சொல்லிட்டு அப்படி யே ஆபீஸ் கிளம்புறேன் என்றான்.

வஞ்சியும் சரி ஆகாஷ் அவள பாத் துக்கோங்க, நானும் அவரும் ஒரு நாள் வந்து பாக்குறோம் என்றவள் வைத்து விட்டாள்.

 ஈஸ்வர் வஞ்சிக்கு அழைத்தான்.  வஞ்சி போனை அட்டென்ட் செய்த வள், காதில் வைத்து சொல்லுங்க ஆதி மாமா… என்றாள்

ஈஸ்வர் ஹாப்பி பர்த்டே கண்ணம் மா. ஐ லவ் யூ சோ மச்.., வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து வெளியே போகலாம் என்றான்.

 உடனே, வஞ்சி என்னால எல்லாம் வர முடியாது பா.. எனக்கு நிறைய வேலை இருக்கு, என்றவள் இங்கே சிரித்துக் கொண்டாள்..

ஈஸ்வர், ஏன்டி என்கூட வர்றத விட உனக்கு வேற, என்னடி…. வேலை இருக்கு அதெல்லாம் தெரியாது நீ என் கூட, வந்தது ஆகணும் என்றான்.

 வஞ்சி, உடனே நான் ரொம்ப கோவமா…இருக்கேன் மாமா உங்க மேல,எனக்கு நீங்க ஒரு சர்ப்ரைஸ் கூட பண்ணல, எல்லாரும் கால் பண்ணி விஷ் பண்ணாங்க என்றாள்.

 ஈஸ்வர், சிரித்தவன், சர்பிரைஸ் தானே… கொடுத்துட்டா…. போச்சு கொஞ்சம் திரும்பி பாரு என்றான் 

வஞ்சியும், திரும்பி பார்த்தாள். வாசலில் ஈஸ்வர் தான் நின்று கொண்டிருந்தான் 

வஞ்சி அவனை திரும்பி பார்த்தவ ள்,முகத்தை சுளித்து திரும்பி அமர்ந்து கொண்டாள்..

ஈஸ்வர், சிரித்துக்கொண்டவன் உள்ளே வந்து அவளை கட்டிப்பி டித்து, உதட்டில் முத்தமிட்டு, மெனி மோர் ஹாப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே பொண்டாட்டி.. என்றான்.

 இவன், வந்ததும் சுந்தரமும் கனகாவும், வஞ்சிக்கு வாழ்த்து சொல்லி விட்டு, பேத்தியை தூக்கிக் கொண்டனர்.

 அவர்கள் போனதும் வஞ்சியை தன் கையில் தூக்கிக் கொண்டவ ன் மேலே மாடிக்கு சென்றான் 

அங்கே,ஒருஅறையை திறந்தவன் அவளை இறக்கி விட்டான். அந்த அறையின் அலங்காரத்தை பார்த் த, வஞ்சி அசந்து போய் விட் டாள். அவ்வளவு அழகாக அலங்காரம் செய்திருந்தான். பூக்கள் கொண்டு,

 வஞ்சி, கண்களை விரித்து வாவ் ஆதி மாமா.. வாட்ட.. ப்ளீசென்ட்.. சர்ப்ரைஸ், எனக்கு ரொம்ப புடிச்சி ருக்கு, ரொம்ப அழகா..டெக்கரேஷ ன் பண்ணி இருக்காங்க வாவ் என்றாள் கன்னத்தில் கைவைத்து

 ஈஸ்வர், அவளை பின்னி இருந்து அணைத்தவன், ஹாப்பி பர்த்டே கண்ணம்மா.. என்றவன் ஒரு வைரம் பதித்த டாலர் செயினை அவள் கழுத்தில் அணிவித்தவன்,

அவள் கழுத்தில் முத்தமிட்டான், வஞ்சி,மாமா… ரொம்ப அழகா இருக்கு என்று சினங்கினாள்.

 பின், அவளை தன் பக்கமாய் திருப்பியவன் அவள் கைகளைப் பிடித்து அவள் விரல்களில் இருவ ர், பெயர் பதித்த மோதிரம் ஒன்றை அணிவித்தவன், அவள்  விரல்க ளுக்கு முத்தம் கொடுத்தான். 

 ஈஸ்வர், என்னடி…, புடிச்சிருக்கா என்றான்.

 வஞ்சி, ஆதி மாமா.. ரொம்ப சூப்ப ரா.. இருக்கு, எனக்கு ரொம்ப புடிச்சி ருக்கு என்றாள். 

 ஈஸ்வர், அப்ப என்ன பிடிக்கலை யா டி….என்றான். அவள் கண்களில் முத்தமிட்டு

 வஞ்சி, உங்களை,  எப்படி மாமா பிடிக்காம இருக்கும். நீங்க தான் என் உசுராச்சே… என்றாள் கண்கள் சிமிட்டி… 

அவள் அப்படி சொன்னதும்,  அவ ள் இதழில் முத்தமிட்டவன் அவ்வ ளவு பிடிக்குமா!?…டி என்னை என்றான். 

 ஆமா… ஆதி மாமா… எனக்கு தேன் மிட்டாய்,  எவ்வளவு பிடிக்குமோ அதே அளவுக்கு உங்களையும் பிடிக்கும் என்றாள் 

 ஈஸ்வர், அவள் உதட்டை பிடித்து இழுத்தவன், அடிப்பாவி… கடைசி வரை அந்த தேன்மிட்டாய் விடவே மாட்ட போல என்றவன் கை நிறை ய தேன்மிட்டாயை அவள் கையில் வைத்தான். 

 வஞ்சி, அதில் சிரித்தவள், சோ… ஸ்வீட்.. மாமா என்றவள் அவன் கொடுத்த தேன் மிட்டாயை தன் வாயில் போட்டுக் கொண்டாள் 

 ஈஸ்வர், அவளை தாபமாக பார்த் தவன், வஞ்சிமா.., இந்த மாமாக்கு எந்த ட்ரீட்டும்… இல்லையா என்றா ன். 

ஏன்.. மாமா இல்ல… கண்டிப்பா.. ட்ரீட்டு தரேன், உங்களுக்கு என்ன ஸ்வீட் பிடிக்கும்னு…சொல்லுங்க நானே என் கையால செஞ்சு தரேன் என்றாள். 

ஈஸ்வர், அவள் உதட்டை பார்த்துக் கொண்டே,எனக்கு வேறஎந்த ஸ்வீ ட்டும், வேணாம்..டி  எனக்கு.. இந்த ஸ்வீட், மட்டும் போதும் என்றவன்,   அவள், இதழை தன்  இதழோடு பொருத்திக் கொண்டான்.

அதன் பிறகு அங்கே வார்த்தைக்கு வார்த்தைக்கு இடம் எது, முத்தம் சத்தம் மட்டுமே அந்த அறையை நிலைத்திருந்தது.

காலை போனவர்கள் மதியம் ஆகியும் கீழே இறங்கவில்லை.

ஈஸ்வர் களைத்துப் போயிருந்த அவளை அவளின் முடியை ஒதுக்கி விட்டவன், தன் மார்பில் சாய்த்து கொண்டான்.

 வஞ்சி, உனக்கு இந்த சர்ப்ரைஸ் புடிச்சிருக்கா… டி என்றான்.

 ரொம்ப.. புடிச்சிருக்கு மாமா உங்க கையால… எனக்கு ஒரு முறை பூ வாங்கி கொடுத்தாலும் எனக்கு அது ஒரு பெரிய பொக்கிஷம் தான், என்றவள் எட்டி அவன் உதட்டில் முத்தமிட்டாள்.

 ஈஸ்வர், உன்ன ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்….இல்ல வஞ்சி எல் லாரும், என்ன விட்டு போனதுக்கு அப்புறம் தான் உன் நினைப்பு அதிகமாக என்ன பாதிச்சதுடி. நீ பேசுனது எல்லாம் மூளைக்கு ஏறு ச்சு,உன்கூட அன்னைக்கு போதை யில…  ஒண்ணா இருந்திருக்கேன். அது கூட எனக்கு தெரியல பாரேன் கனவு நினைச்சேன்… டி அத, 

அதுக்கு, பிறகு உன்னை பார்க்கும் போதெல்லாம் அந்த உணர்வு வரு ம், நானே என்னை கட்டுப்படுத்தி க்கிட்டு இருந்துக்குவேன். அந்த மருந்தை கலக்கி கொடுத்து மாதங்  கி ஆண்ட்டி தான் 

 எவ்வளவு, கேவலமான வேலைய தன் பொண்ணுக்காக பண்ணேன் னு சொன்னாங்க தெரியுமா

ஆனா,நான் அவ்ளோ போதைல யும், உன்ன தாண்டி தேடி வந்திருக் கேன், பாரேன் என்றான். 

வஞ்சி, அதாங்க எனக்கும் புரியல நான் அவ்வளவு தடுத்தும் பேசியு ம், அடிச்சும், தர்ஷி பெயர சொல்லி யும், நீங்க என்ன விட்டுட்டு… போக வே.. இல்ல, நீதான்னு..தெரியும்..டி னு அவ்வளவு போதையிலயும் சொன்னீங்க, மாமா அதுக்குபிறகு என சொல்ல, வந்தவள் நிறுத்தி… அவன் முகம் பார்த்தாள்.

 ஈஸ்வர்,வஞ்சியைத்தான் பார்த்து க் கொண்டிருந்தான் ஆசையுடன் 

வஞ்சி, எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் மாமா…சின்ன வயசுல இருந்தே, ஒரு கட்டத்தில் அது காத லா.. மாறிடுச்சு, ஆனா என் தகுதி யை பார்த்து அமைதியா மனசுக்கு ள்ளே.. புதைச்சுக்கிட்டேன். என்ன பிடிக்கலைன்னு.. நீங்க ஒவ்வொரு முறையும் சொல்லும் போது இங்க ரொம்ப… வலிக்கும் மாமா… என நெஞ்சைத் தொட்டு காட்டினாள் 

 சாரிடி கண்ணம்மா இனிமேல் என் உசுரு இருக்கிற வரைக்கும் உன்ன விட்டு எங்கேயும்.. போறதா இல்ல.. உன்ன எங்கேயும் அனுப்புறதாவும் இல்ல… என திரும்பவும் அவளை கீழே படுக்க வைத்து அவளை ஆளுகை செய்ய ஆரம்பித்தான் 

 இரவு தான் இருவரும் கீழே இறங்கி வந்தனர். இரவு மேலே வந்த வஞ்சி ஈஸ்வரிடம் என்னங்க உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? பொன்னி முழுகாம இருக்காளாம்… ஆகாஷ் காலைல என்கிட்ட சொன்னாரு போன் பண்ணி என்றாள்.

எனக்கும் போன் பண்ணி.. சொன் னான், டி ஒருநாள் போய் நம்ம பாத்துட்டு வரலாம் என்றான்.

 பின், கனகா விடவும் சுந்தரத்திட மும் விஷயத்தை கூறினார்கள் அவர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி, சுந்தரமும் கனகாவும் கனகாவும் பழைய மாதிரி பேச ஆரம்பித்திருந் தனர். 

மாதங்கி பழையபடி பேசி திரும்ப வும் வர பார்த்தார். ஆனால் கனகா உங்களிடம், உறவு கொண்டாட எனக்கு விருப்பமில்லை என கண்டிப்பாக சொல்லிவிட்டார் 

 இப்படியே, ஒரு வருடம் சென்றிரு ந்தது. இன்று ஆகாஷ் பொன்னி மகனுக்கு முதல் பிறந்தநாள் விழா சென்னையில் பெரிய மண்டபத்தி ல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந் தது. அனைவரும் கிளம்பி கொண் டிருந்தனர் விழாவிற்கு வஞ்சி ஆறு மாத கருவை தாங்கி இருந்தாள்

 சென்னையில், ஆகாஷ் வீட்டில் தான் அனைவரும் தங்கி இருந்த னர். அவர்கள் அறையில் என்ன ங்க பாப்பாவுக்கு டிரஸ்,நகை பழம் எல்லாம் எடுத்து வச்சுட்டேன். பிரதன்யா பாப்பா, மாமா அத்தை கூட கிளம்பிட்டாங்க, அப்பாவும் அம்மாவும்,  கூட கிளம்பிட்டாங்க ளாம்… நாம தான் லேட், என்றாள் இடுப்பில் கை வைத்து, தன்  மேடி ட்ட வயிற்றை பிடித்துக் கொண்டு 

ஈஸ்வர் அவளைப் பார்த்து கண் ணடித்தவன், இதோ இப்ப கிளம்ப லாம்டி, கண்ணம்மா…..,  என்றவன் அவள் வயிற்றில் முத்தமிட்டு பாப் பா.. பங்ஷன் போலாமா…. ரெடி ஆயிட்டீங்களா… என்றவன், 

ஏன்டி,பொறுமையா பேசு வயித்து ல பாப்பா இருக்குல, எப்படி மூச்சு வாங்குது பாரு… இன்னும் நேரம் இருக்கு போகலாம் என்றான். அவள் புடவை மடிப்பை சரி செய்து கொண்டே…

 ஏழு மணி அளவில் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது அந்த இடமே சந்தோஷமாக இருந்தது. விழாமுடிந்து ஒரு நாள் ஆகாஷ் வீட்டில் அனைவரும் தங்கி விட்டு, ஊருக்கு கிளம்பி விட்டனர்..

 அடுத்த, மூன்று மாதத்தில் வஞ்சி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். ஈஸ்வருக்கு சந் தோஷம் தாங்க முடியவில்லை, முதல் குழந்தையை தான் கையில் வாங்க முடியாமல் போய்விட்டது. ஆனால் இரண்டாவது குழந்தை பிறக்கும்போது அவளோடு பிரசவ வார்டில் தான் அவனும் இருந்தான் அவள் எவ்வளவு கஷ்டப்பட்டால் என்று கூடவே இருந்து அறிந்து கொண்டான்.அவளை விட அவன் தான் அதிகமாக துடித்துப் போனான். 

 அவள், கேட்பதற்கு முன்பாகவே அனைத்தையும் அவளுக்கு செய் து விடுகிறான். அன்று அவளை வேண்டாம்.. வேண்டாம்.., என்று சொன்னவன் தான் இன்று  அவள், மட்டும் தான் வேண்டும் என்று அடம் பிடித்து அவளோடு வாழ்ந் து கொண்டிருக்கிறான்.

பிரதன்யா எப்போதும் போல தாத் தா பாட்டியோடு சென்று உறங்கி விட்டாள். அறையில் வஞ்சி குழந் தைக்கு பால் கொடுத்து கொண்டு இருந்தாள். ஈஸ்வர் அவள் முதுகி ல்,முகம் புதைத்து மீசை கொண்டு உரசிபடி படுத்திருந்தான். 

 ஒரு கை குழந்தையின் தலையை வருடிக் கொண்டிருந்தது, ஒரு கை அவள் இடையை தடவிக் கொண் டிருந்தது 

வஞ்சி, நெளிந்தவள்,ஆதி மாமா.. அமைதியா இருங்க… எனக்கு.. கூசுது 

 ஈஸ்வர், அடியே… தேன்மிட்டாய் நீ பிள்ளைய பாருடி, நான் உன்ன பார்க்கிறேன், என்றவன் அவள் இடையே இறுக்கி பிடித்தான் தாபமாய்,,

வஞ்சி தான் அவன் செயலில் கண் மூடி  உதடு கடித்தாள். 

ஈஸ்வர், அவளின் காதுமடலில்       லேசாக கடித்தவன்,வஞ்சி.. பசிக்கு துடி, என்றான் கழுத்தில் முத்தமிட் டு.. 

 அதில் சிலிர்த்தவள் பிள்ளையை தொட்டில் போட்டுவிட்டு, அவன் அருகில் வந்தாள். அடுத்த நொடி அவன் ஆளுகையின் கீழ் இருந்தா ள். வஞ்சி, அவளை தன் பசிக்கு உணவாக எடுத்துக் கொண்டவன் அவளை வாரி சுருட்டி கொண்டா ன் ஆதீஸ்வர்.

அன்று அவளை பிடிக்கவில்லை என்றவனுக்கு இன்று அவள் மட்டு மே… உலகமாகி போனாள்.  

அவர்கள் இன்று போல் என்றும் வாழ வாழ்த்தி விடை பெறுவோம் நன்றி🙏

முடிந்தது.

 

 

 

 

 

9 thoughts on “எனக்கென வந்த தேவதையே 30”

Leave a Reply to sowmi Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top