ATM Tamil Romantic Novels

வானவில் வரைந்த வண்ண நிலவே 10

அத்தியாயம் 10

 இங்கே, அருண் வீட்டில் கல்பனா திருமணம் என்று அறிவித்ததோடு சரி, அருண் இதை கேள்விப்பட்டா லும், எதுவும் பேசாமல் கடந்து செ ன்று விட்டான், மிர்ணா மீது அதிக ஆர்வம் காட்டவில்லை அன்று ஞா யிற்றுக்கிழமை மதிக்கு அஞ்சுவை பார்க்கலாம், என கிளம்பி பார்க்கு க்கு  சென்றாள் ஸ்கூட்டியில் 

 பார்க்குக்கு சென்று கொண்டிருக் கும் பொழுது திடீரென,  ஒரு கார் குறுக்கே வேகமாக வந்து நின்றது மதிய ஒரு நிமிடம் பயந்து அதிர்ந் தவள், அம்மா என சடன் பிரேக் போட்டுநிறுத்தினாள்,ஸ்கூட்டியை  

 பின், அறிவில்ல.. என திட்ட வாய் எடுத்தவள் காரில் இருந்து இறங்கி  ய அருணை பார்த்ததும், கண்களி ல் பயத்துடன் இவனா,என நினை த்து, ஏன்? இப்படி கார கொண்டு வ ந்து குறுக்க நிப்பாட்டுறீங்க வழி ய விடுங்க நான் போகணும் என்றால் கோபத்துடன் மூக்கு விடைக்க 

 அருண், அவளை ரசனை உடன் அவள் அழகை பார்த்து இருந்தா ன், அழகாய் இருக்க.. Moon உன்ன பாக்கவே முடியல ரொம்ப பிசியா இருக்கியா.. என்றவன் 

 ஏன், moon அன்னைக்கு, கெஸ்ட் ஹவுஸ்க்கு வரல ரொம்ப நேரமா வெயிட் பண்ணி இருந்தேன், தெரி யுமா உனக்காக, ஐ மிஸ் யூ லாட் என்றான் கண்களால் அவள் உட லை மேய்ந்து கொண்டே 

அவன் பார்வை சகித்துக் கொள்ள முடியாதவள் ச்சீ.. என முகம் சுளித் து வழிய விடுங்க நான் போகணும் என்றவள், ஸ்கூட்டி ஸ்டார்ட் செய் ய போனாள் அருண் உடனே அவ ள் கையை பிடித்து,உன் ஞாபகமா வே இருக்கு பேபி என்னை, என்ன வோ பண்ணிட்ட,  வா இப்பவே கெ ஸ்ட் ஹவுஸ் போகலாம் என அவ கையை பிடித்து இழுத்தான். அவ ன், கையை பிடித்து இழுத்து இப் படி கூறியதும் 

 மதி அவன் அதிர்ந்து அவன் முக ம் நோக்கியவள் இப்ப கையை விட போறீங்களா… இல்லையா…, இல்ல போலீஸ கூப்பிடுவேன் என்றாள்

 அருண் சிரித்தவன் காமெடி பண் ணாத மூன் வா இப்ப கெஸ்ட் ஹவு ஸ் போகலாம், இல்ல உனக்கு பிடிச் ச இடமா… சொல்லு. அங்க உன்ன கூட்டிட்டு போறேன் என்றான் 

 மதி, விடு என் கையை என உதறி னாள் அருண் அதில் கோபம் கொ ண்டாலும், இப்பவும் நீ ரொம்ப அழ கா இருக்க.., மூன் வா போகலாம் என்றான் தாபத்துடன்

 மதி, அட…ச்சீ விடு என் கைய இது க்கெல்லாம் வேற ஆளை பாரு கா சுக்காக வரவங்க நிறைய பேர் இரு ப்பாங்க அவங்க கிட்ட போய் இப்ப டி சொல்லி கூப்பிடு… என் கையை விடு என்றாள் அவனிடம் திமிறி கொண்டு 

 அருண், என்னடி நானும் பாத்துட் டே,, இருக்கேன் பெரிய பத்தினி மா திரி, பேசுற.  இப்ப நீ எங்க வேலை செய்ற எனக்கு தெரியும்டி.. அவன் கூட அவன் வீட்ல இருக்கியே.. இன் னுமா உன்ன அவன் தொடாம இரு ப்பான் சும்மா நடிக்காதடி 

 உன் அப்பாவ,  ஜாமீன்ல எல்லாம் எடுத்து இருக்கான். ஆதாயம் இல் லாமலாயாடி..செஞ்சிருப்பான் என் றான் கோபத்துடன் அவள்கையை விடாமல் 

 மதி அவன் பேசியதில் காயப்பட்ட வள்,எப்படி அவனிடம் இருந்து தப் பிக்கலாம் என்று கண்களை சுழற் றி  யாராவது வருகிறார்களா என் று பார்த்தபடி  பயத்துடன் நின்று இருந்தாள்

 அதே நேரம், அன்று இரவு அவள் பேசியிலிருந்து நேரமே வீட்டுக்கு வ ந்து, விடுகிறான். விஜய் நாச்சிக்கு முக்கியமான மாத்திரை வாங்கிக் கொண்டு,  வீடு திரும்பிக் கொண்டி ருந்தவன் எதிர்ப்புறம் இருவரும் நிற்பதை முதலில் புருவம் சுருக்கி பார்த்தவன், மதி அழுவதையும் அ ருண், ஏதோ கோவமாக கேட்டுக் கொண்டு இருப்பதையும்,  பார்த்த வன் அவசரமாக காரை விட்டு இற ங்கியவன் எதிர்ப்புறம் சென்றான் இருவரையும் நோக்கி, 

விஜய், கோபத்துடன் பல்லை கடித் தவன் என்ன நடக்குது இங்க, என் ன ஆச்சு மதி என்றான் அருணை முறைத்துக் கொண்டே… 

 மதி  விஜய் பார்த்ததும் கண்களை துடைத்துக் கொண்டு தைரியமாய் சார், தேவையில்லாமல் இவரு வழி மறித்து என்கிட்ட பிரச்சனை பண் றாரு சார் இன்னும் என்னென்ன வோ, அசிங்க அசிங்கமா பேசுறாரு சார் என அழுதாள் 

விஜய்,அவனிடம் இருந்து மதியை பிரித்தவன் இப்ப எந்த பிரச்சனை யும் வேணாம், நீ வீட்டுக்கு போ..மதி நான் அவனை பார்த்துக்கொள்கி றேன் என்றான். 

 உடனே, அருண் டேய்..என்னடா.. பாத்துக்குவ அவளுக்கும் எனக்கு ம், நடுவுல நீ யாருடா.., ஏய்.. நீ வாடி என மதியின் கையை பிடித்து இழு க்கப் போனான் 

 உடனே விஜய் கோபம் கொண்டவ ன், அவன் நெஞ்சில் கை வைத்து தடுத்தவன், ஏய்..அவ மேல கை பட் டுச்சு கைய ஒடச்சிடுவேன் டா.. மதி நீ போய் என் கார்ல ஏறு என் எதிர் ப்புறம் கண்ணை  காட்டினான்

 டேய் உனக்கு என்னடா அவளை அவளை கூப்பிட்டா உனக்கு என் னடா வந்தது? உன் வேலையை பா ர்த்துவிட்டு போடா.. என்றவன் இந் நேரம் நீ எவ மடியிலயாவது இருக்க ணுமே.. என்ன இந்த பக்கம் எவளு  ம் கிடைக்கலையா…. என வேண்டு மென்றே மட்டம் தட்டி பேசினான்

விஜய்,டேய்…நான் என்ன பண்ணி னா உனக்கு என்னடா.. உங்கள மா திரி ஏமாத்தி எதையும் அபகரிக்கல அதுக்கு என்ன, பண்றது அம்மா புத்தி தானே வரும் என்றான் எகத் தாளமாய்  அதில் இன்னும் கோபம் கொண்ட அருண் என்னடா சொன் ன, என்றவன் எகிறி கொண்டு,  அ வன் காலரை பிடித்தான் 

 இருவரும், நடுரோட்டிலேயே முட்டி க்கொண்டு நின்றனர் மதிக்காக அதைக் கண்ட மதி அதிர்ந்து பின் சுதாரித்து விஜயை இழுத்துக் கொ ண்டு

 அருண் மதி விஜயின் கையை பிடி த்துக் கொண்டு போவதை பார்த்து இன்னும் வெறியானான்,  பேனட் டை ஓங்கி…ஒரு அடி அடித்தான் கோபத்தில், என்கிட்ட வசமா ஒரு நாள் மாட்டுவடி அப்ப உன்னை வச்சிக்கிறேன் என்றவன் 

 காரை எடுத்துக் கொண்டு புயல் வேகத்தில் சென்று விட்டான்,

 அவனைப் பொறுத்தவரை விஜய் நன்றாக இருக்கக் கூடாது அதற்கா க, என்ன வேண்டுமானாலும் செய் வான், ஆனால் அதையும் மீறி மதி யை அருணுக்கு பிடித்திருந்தது.

இங்கு காரி ல் ஸ்டேடியங்கை, அழு  த்தி பிடித்து, தலைக்கு கோதி வேக மாக,காரை ஒட்டிக் கொண்டு இரு ந்தான் விஜய்

 மதிக்கு,  ஒரு பக்கம் அவன் கார் ஓட்டியதில், பயமாக இருந்தாலும் வாய் திறந்து சொல்லவும் முடியவி  ல்லை, அவ்வளவு வேகமாக ஓட்டி சென்றான் காரை

 பின், அவளை எதுவும் சொல்லாம ல் அவள் வீட்டில், இறக்கி விட்டவ ன் மின்னல் வேகத்தில் காரை எடு த்துக் கொண்டு சென்றிருந்தான் 

 ஸ்கூட்டி ஒரு மணி நேரத்தில் அவ ள் வீட்டு வாசலில் நின்றது அதை பார்த்து பெருமூச்சு விட்டவள் உள் ளே சென்று விட்டாள் 

உள்ளே நுழைந்ததும் வேணி என் னடி பிரெண்ட பாக்க போறேன்னு சொல்லிட்டு போன இவ்வளவு சீக் கிரமா வந்துட்டே என்றார்,மதி இல் லம்மா… அவளுக்கு ஏதோ அர்ஜெ ண்டான வேலை வந்திருச்சாம்… அ தான் சீக்கிரம்,  வந்துட்டேன் இன் னொரு நாள்,  பார்த்துக்கலாம்னு வந்துட்டேன் என்றவள் அறைக்கு ள் செல்வதற்கு முன் 

 அம்மா, எனக்கு ஒரு காபி கிடைக் குமா என்று அறைக்குள் நுழைந்து கொண்டாள் 

 அருண், அவன் வீட்டிற்குள் கோப மாக உள்ளே நுழைந்தான்.  கல்ப னா, அதை பார்த்து,  என்ன.. கண் ணா இவ்வளவு கோபமா வர என் ன ஆச்சு என்றார் 

 மிர்ணா அமர்ந்து ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தாள் அருண் வேகமா க வந்து பூச்செடியை தள்ளி விட்ட வன் நான் அவன கொன்னுடுவே ன்..  கொன்னுடுவே…ன் மம்மி என் விஷயம் எல்லாத்துலயும் தலையி டுறான் என்றவன் நடந்ததை கூறி யவன், அவளும் அவன் கையை பிடிச்சிட்டு போறான் மம்மி என்ன பல்லை கடித்தான் 

 கல்பனா, என்ன மை சன் விட்டுத் தள்ளு இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கும், மிர்ணாவுக்கும் கல்யா ணம் நடக்க போகுது எல்லாத்தை யும் மறந்து அதுல கான்சன்ட்ரேட் பண்ணு என்றார். அவர் அப்படி கூறியதும்,  அவன் நல்லா இருக்க க்கூடாதுன்னு தான் அவன்கிட்ட இருந்து இவளை பிரிச்சி கூட்டிட்டு வந்தேன் 

 ஆனா அவன் இப்போ ரொம்ப சந் தோஷமா இருக்கான் எல்லாத்தை யும் மறந்துட்டு என்றான் 

 மிருணா மெதுவாக அவன் பக்கத் தில் போய் அமர்ந்தவள், டார்லிங்..  உனக்காக தானே அவனை விட்டு ட்டு, உங்ககிட்ட  வந்தேன் சீக்கிரம் கல்யாணம் பண்ணி அவன வெறு ப்பேத்தலாம், இப்ப… வா.. அருண், நான் உன்ன கூல்.. பண்றேன் என் றவள், அவன் சட்டையில் கை வைத்தாள் 

 அருண், உடனே அவள் கையை தட்டி விட்டவன், நோ மூட் மிர்ணா என சத்தமாக சொன்னவன் எழுந் து சென்று விட்டான் 

 மிர்ணா அவன்,அப்படி கூறியதும் அதிர்ந்துஅமர்ந்து விட்டாள்.  இவ னும் தன்னை, கழட்டி விட்டு விடு வானோ என பயந்து, இந்த பணம் ஆடம்பர வாழ்க்கை எல்லாம் கை விட்டு, போய்விடும்என நினைக்க நினைக்க மண்டை வலியே வந்து விட்டது மிர்ணாவுக்கு,

மிர்ணா, மீண்டும் அவளாக சென் று அவனிடம் குழைந்தாள் அருண் அசரவே இல்லை மிர்ணாக்கு பயம் பிடித்து  க் கொண்டது

 அதேபோல், விஜய் வீட்டுக்கு வந்த வன், விருவிருவென தன் அறைக் கு  சென்று, மதுபாட்டிலை எடுத்து மது வை அதை கிளாஸில் ஊற்றி குடிக்க போனான் அப்போது,  மதி அன்று சொன்ன வார்த்தை ஞாபக ம் வந்தது, ஒரு நிமிடம் மன கண் ணில் வந்து போனாள் மதி

குடிக்கப் போனவன் அதை அப்படி யே வைத்துவிட்டு கட்டிலில் விழுந் தான். 

 

தொடரும்…

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 

6 thoughts on “வானவில் வரைந்த வண்ண நிலவே 10”

  1. I have been exploring for a little for any high-quality rticles or bkog posts on this kind of house .
    Exploring in Yahoo I finally stumbled upon this website.
    Reading this informatioin So i am happy too express that I have an incredibly just right
    uncanny feeling I found out exactly what I needed.
    I so much indubitably will make suree to don?t disregard this website aand provises
    it a look regularly.

    Have a look att my web-site :: Custom-Made Headstone

Leave a Reply to Custom-Made Headstone Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top