ATM Tamil Romantic Novels

வானவில் வரைந்த வண்ண நிலவே 18

அத்தியாயம் 18

 ஒரு வாரம்  சென்றிருந்தது,  வண் ணமதிக்கு புடவை நகை எடுக்க சென்றனர், கயலுக்கும் சேர்த்தே எ டுத்தனர். கயலுக்கு முதலில் நகை எடுத்தனர், பின் மதிக்கு, 

 பொன் தாலி, வளையல், மெட்டி கொலுசு ஜிமிக்கி ஆரம் என விஜய் வீட்டு சார்பாக எடுக்கப்பட்டது 

 ஏன் இவ்வளவு எவ்வளவு  என்று மறுத்தும் விஜய் வாங்கி கொடுத்தா ன் வண்ணமதிக்கு 

 பின்,  தங்கள் பட்டு ஆலைக்கு செ ன்று அவர்கள், கைத்தறி பட்டை அவள் கலருக்கு, ஏற்றார் போல் தே ர்வு செய்து பிரத்தியேகமாக தங்கத் தில் பட்டுப் புடவை நெய்ய சொல் லிவிட்டு வந்தனர் 

 கயலுக்கும், அதே போல் அவளுக் கு பிடித்தமானதை வாங்கி கொடு த்தார். 

மதி, நாச்சிமா ஏன் இவ்ளோ எல்லா ம், எனக்கு சிம்பிளா தான் கட்ட பிடிக்கும் என்றாள் 

 நாச்சி, மதியிடம் அதை விஜய் கிட் ட,போய் சொல்லு என்றார். உடனே மதி, என்னமா…., நீங்க அவர்கிட்ட போய் என்னை கேட்க,  சொல்றீங்க அவரைப் பார்த்தாலேஎனக்கு பேச் சேம். வரமாட்டேங்குது என்றாள் பதட்டத்துடன் 

 நாச்சி, அப்புறம் எப்படி டி எனக்கு பேரம் பேத்தி பெத்து கொடுப்ப இப் படி பயந்துட்டே கிடந்தா என்றார்

 அவர் கூற்றில் வெட்கியவள்,  போ ங்க நாச்சிமா….,என்றாலள் முகம் சிவந்து 

 விஜய், என்ன என் பேரு அடிபடுது என தன் தாயின் பக்கத்தில் வந்த வன், தான் மதியை பார்த்துக் கொ ண்டே.. 

 மதி கண்களால் ,..ம்மா, வேணாம் என கெஞ்சினாள். விஜய் அதை பார்த்துவிட்டு,  சிரித்துக் கொண் டான் 

 அன்று, ஆறு மணி ஆகியும் வண் ணமதி வீட்டுக்கு கிளம்பவில்லை விஜய், நாச்சியிடம் வந்தவன் என் மாம், மதி, இன்னும் வீட்டுக்கு கிள ம்பாம இருக்கா… என்றான் 

 நாச்சி, அதுவாடா மேரேஜ் இன்வி டேஷன் வைக்க அவ அம்மா, அப் பா இரண்டு பேரும் ஊருக்கு போய் இருக்காங்களாம், செந்தில்நாதன் போன் பண்ணி கொஞ்சம் பாத்து க்க முடியுமான்னு… கேட்டாரு 

 நானும் சரின்னு சொல்லிட்டேன் என்றார். விஜய் கண்களை விரித் து, அப்ப அவ இங்கதான் தங்க போறாளா…மாம் என்று கேட்டான் 

 நாச்சி ஆமா விஜய் ஏன் ரூம்ல தா ன் தங்க போறா.. என்றார்.  உடனே விஜய் ஆர்வத்தில் அப்ப நானும் உங்க கூட தங்கிக்கிறேன் என்று விட்டான் 

 நாச்சி, அதிர்ந்து, என்னது!.. நீ என் கூட தங்குறியா… என்றார்.  விஜய் நாக்கை கடித்தவன்,  சாரிமா தெரி யாம.. என தலையை கோதியவன் எழுந்து சென்று விட்டான் வெட்கத் துடன்

 நாச்சி சிரித்துக் கொண்டார் இரவு உணவை அவள்தான் அனைவரு க்கும் சமைத்து பரிமாறினாள்.

 விஜய் சாப்பாட்டை, விழுங்கினா னோ.. இல்லையோ.. பார்வையால் வண்ணமதியை,  விழுங்கிக் கொ ண்டிருந்தான் 

 ஆனால் அவள் தான் கண்டு, கொ ள்ளவில்லை நாச்சியவன், போன தும், மதிமா…,என் பையன் பாவம் அவன் நீ அவன பார்ப்பேன்னு எப் படி பாத்துட்டு இருக்கான் நீ அவன திரும்பி கூட, பாக்காம கொடுமை பண்றியே… என் புள்ள பாவமா… என்றார் 

 மதி, அது..அது.. வந்து நான் எனக் கு அவர் பாக்குறது தெரியுதுமா ஆ னா… உடம்பெல்லாம் ஏதோ பண் ணுது, கூச்சமா இருக்கு என்றவள் ஓடி விட்டாள்.

 நாச்சி, ரொம்ப கஷ்டம் டா மவனே என்றவர், வாய்விட்டு சிரித்து விட் டார் 

மறுநாள், மாலை கிளம்பிவிட்டார் வண்ணமதி தன் வீட்டிற்கு 

 இதோ அவர்கள் திருமண நாளும் வந்தது, காஞ்சிபுரத்தில் புகழ்பெற் ற,  கோவிலில் காலை திருமணம் நடந்தது.அவன் அவளுக்கு என்ன பிரத்தியேகமாக நெய்தப் பட்டு புட வையில் தேவதையாக நடந்து வந் தாள்.

 விஜய்யால்,  அவளை விட்டு கண் களை எடுக்க முடியவில்லை, மந்தி ரத்தை,  தவறாக உச்சரித்து ஐயரிட ம் மாட்டிக் கொண்டான்.

 ஐயர், மாப்பிள்ளை… தம்பி இங்க பாத்து மந்திரத்தை சொல்லுங்கோ, நான் கொடுக்கிற பொருளை அக் னி குண்டத்துல போடுங்கோ.. கீழே போடுறேள் பாருங்ககோ  என்றவர்  அப்புறம் அங்க பாத்துக்கலாம் என்றவர்,

மந்திரத்தை பிழை இல்லாம  சொல் லுங்கோ.., என்றார் 

 இதைக் கேட்ட பக்கத்தில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர் விஜயும் வெட்கத்தில் நாக்கை கடி த்துக் கொண்டான் 

மதி  வெட்கத்துடன் நடந்து வந்து அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.  அ வளை இப்படியே எங்காவது தூக் கிக் கொண்டு ஓடி விட வேண்டும் போல் இருந்தது விஜய்க்கு 

அவள் வந்ததும் அவளை ஒட்டி அமர்ந்து கொண்டான். விஜேந்திர ன். மதிக்கு தான் கூச்சமாய்.. போய் விட்டது. நெளிந்து கொண்டே, அம ர்ந்திருந்தாள் அவன் அருகில் 

 ஒரு வழியாக மந்திரம் சொல்வது  முடிந்து பெரியவர்கள் உற்றார் உற வினர்கள் நாச்சியின் ஆசிர்வாதத் துடன் வண்ணமதி கழுத்தில் மூன் று முடிச்சுட்டான் விஜேந்திரன். அ வளைப் பார்த்துக் கொண்டே…மதி திருமதி வண்ணமதி விஜயேந்திர ன் ஆகிவிட்டாள்.

 பின் அக்னி குண்டத்தை சுற்றி வந்தவர்கள் அம்மி மிதித்து அருந் ததி பார்த்து, அவள் காலில் மிஞ்சி யை மாட்டி அவன் முகம் பார்த்தா ன், இவளும் அவன் முகம் பார்த்தா ள்

 விஜேந்திரன், கண் சிமிட்டி.., உதடு குவித்து லவ் யூ என்றான்அவளை ப் பார்த்து உதடு அசைத்து 

 அவன், அப்படி கூறியதும் வெட்க த்துடன் முகம் சிவந்து நின்றாள் வண்ணமதி.

 விஜேந்திரனுக்கு அவளை இப்ப வே அள்ளி அணைத்துக்கொள்ள கைகள் பரபரத்தது 

    சுற்றி சொந்தங்கள் இருப்பதால் தன்னை கட்டுப்படுத்திக் கொண் டு இருந்து விட்டான், விஜேந்திரன் ஆனால் தன்னவளை பார்ப்பதை நிறுத்தவில்லை 

 பின் கோவிலுக்கு சென்று வழிபட் டு விட்டு வீடு திரும்பினர். மதியமா ய் அனைவரும் வீடு வந்து சேர்ந்த னர் 

வண்ணமதி ஆரத்தி எடுத்து அந்த வீட்டின் மருமகளாக உள்ளே கால டி எடுத்து வைத்தாள். சாப்பிட்டு அனைவரும் ரெஸ்ட் எடுக்க சென் றனர். மதி இன்னும் வர வில்லை அவன் அறைக்கு,

 விஜய் தன், தாயின் அறைக்கு செ ன்றவன், மாம், வண்ணமதி  எங்க, அவ ஏன்?  இன்னும் வரல என் அ றைகக்கு,

 அவளை கூட்டிட்டு போகத்தான் வந்தேன் மாம் என்றான் 

அப்போது அவர் அறையில் எதிர் ப்புறம் கண்ணாடி அருகே நின்று  அனைத்தையும் கழட்டிக் கொண் டு இருந்தாள் வண்ணமதி 

அவளை பார்த்த அந்த நொடி,  மெ ய்,  மறந்து அவளை பார்த்தபடி நி ன்றான். நாச்சி தலையில் அடித்து க் கொண்டவர் சுற்றி முற்றிப் பார்த் தவர் 

 டேய்.., விஜய்… மானத்தை வாங்கி வைக்காத.. அவன் நைட்டு தான் ரூமுக்கு வருவா அதுவரை என் கூ ட தான் இருப்பா என்றார்,மெதுவா க அவன் காதில் 

 விஜய், அம்மா… இது அநியாயம் இப்ப அவ என் பொண்டாட்டி, அவ என் கூட தானே இருக்கணும்.

நிறைய பேசணும் மாம் அவகிட்ட என்றான் விஜய்

 இதையெல்லாம் கேட்டுக் கொண்டி ருந்த வண்ணமதி, உடல் சிவந்து உதடு கடித்து…  திரும்பி அமர்ந்து கொண்டாள். நாச்சி அதெல்லாம் நைட்டு பேசலாம் விஜய், நல்ல நேர ம், பார்த்து தான் அனுப்புவாங்க நீ போய் ரெஸ்ட் எடு என்றார்

விஜய், தன் காலை உதைத்தவன் இதெல்லாம் டூ மச் மாம்…, என் பொ ண்டாட்டிகிட்ட பேச எனக்கே டைம் பிக்ஸ் பண்றீங்க, தாலி கட்டினதும் அவளை,  கூட்டிட்டு ஹனிமூன் போய் இருக்கணும் தப்பு பண்ணிட் டேன், என்றான் தலையசைத்து 

 நாச்சி டேய், போடா போடவா என அனுப்பி வைத்தார் சிரிப்புடன் 

 உள்ளே வந்தவர், மதி….மா விட்டா என் பையன், உன்னை இப்பவே… தூக்கிட்டு எங்கேயாவது ஓடிப் போ யிடுவான் போலடா, உன்மேல அவ் வளவு ஆசையா இருக்கான் என அவளை நெட்டி முறித்தார் 

 அவள்,  வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டாள், நாச்சி மதி என் புள் ளைய நல்லா பாத்துக்கடா… நிறை ய ஏமாற்றங்கள் நம்பிக்கை துரோ கம்னு பார்த்து வளர்ந்தவன், 

 தங்கமான, பையன் ஆனா அந்த ஒரு வருஷம் மட்டும், அவன வேற மாதிரி ஆக்கிடுச்சு. எனக்காக என் பிள்ளையை மன்னிச்சு ஏத்துக்க மதிமா என்றார் அவள் கையைப் பிடித்து 

 மதி, நாச்சிமா என்ன இது? என்கிட் ட போய் மன்னிப்பு எல்லாம் கேட்டு ட்டு, கண்டிப்பா… அவரை நல்லா பார்த்துப்பேன் என்றாள் 

மாலை, இருவருக்கும் பெரிய ரெசா ர்ட்டில்,  வரவேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது,  லோக்கல் டிவிலயும், ஒரு சில நியூஸ் சேனல்லயும் லைவ், டெ லிகாஸ்ட்,  செய்யப்பட்டது.  இதை யெல்லாம் டிவியில் பார்த்துக் கொ ண்டிருந்த கல்பனாவிற்கு வயிறு எரிந்தது 

 ஜெயப்பிரதாப் பக்கத்தில் தான் இருந்தார். ஆனால்,  அவர் எதுவும் சொல்லவில்லை அமைதியாக வி ஜய்யின் வரவேற்பு நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார் 

மேடையில் இருவரும் அழகாய் நிற் கவைக்க பட்டு இருந்தனர். மதிக்கு விஜய் பிங்க் வித் கோல்டன் கலரில் ரிசெப்ஷன் கவுன் வாங்கி கொடுத் திருந்தான் அதில் இன்னும் அழகா ய் இருந்தாள்

அதே கலரில் செர்வாணியில், விஜ ய் நின்றிருந்தான். பார்க்கவே அவ் வளவு அம்சமாக இருந்தது. ஜோடி பொருத்தம், நாச்சி…கண்கலங்கி பார்த்துக் கொண்டிருந்தார் 

 பெரிய தொழிலதிபர்கள் கோடீஸ் வரர்கள், நண்பர்கள் தோழிகள் எ ன,அந்த இடமே கலைகட்டி இருந்த து 

 ஒரு பக்கம் விருந்து பார்ட்டி ஆட ல் பாடல் என கலைகட்டி இருந்தது அவள் காலனி,  பிள்ளைகள் எல் லாம்,  வந்திருந்தனர் குடும்பத்தோ டு 

 அவள்,  காலனி பிள்ளைகள் மே டை ஏறினார் குட்டி வா ண்டு ஒருத் தி, என்ன மதி? இனி வீட்டுக்கு, வர மாட்டியா நான் யார்கிட்ட சண்டை போடுவேன் நீ இல்லனா என்றாள் 

 உடனே மதி என்னடி, வாயாடி.. நா ன் இல்லன்னா என்ன என்கிட்ட சண்டை போடணும்னு தோணுச்சு ன்னா, ஆட்டோ புடிச்சு என் வீட்டுக் கு வந்துடு, ரெண்டு பேரும் நல்லா சண்டை போடலாம் என்றாள் அவ ள் கன்னம்  கிள்ளி

 சில, குட்டிகள் மதிக்கா அப்ப.. நீ தாத்தா வீட்டுக்கு இனி வரமாட்டி யா..நீ என் கூட விளையாட மாட்டி யா.. என சோகத்தோடு முகத்தை வைத்துக் கொண்டாள்

 இதையெல்லாம் விஜய் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான்.

 ஆனால், அச்சு மட்டும் அவளி டம் பேசாமல் திரும்பி கைகட்டி நின்றி ருந்தான்.மதி அவனை அழைத்தத ற்கு, தலையாட்டி வரமாட்டேன், எ ன்று திரும்பி நின்று கொண்டான் 

 மதியவனை பிடித்து இழுத்தவள் என்,  அச்சுக்கு…, என் மேல என்ன கோபம் சொன்னாதானே தெரியும் என்றாள் கன்னம் கிள்ளி 

 விஜய் இவ்வளவு நேரம் சிரித்துக் கொண்டிருந்தவன் அச்சு வந்ததும் முகம் மாறிவிட்டது 

அச்சு, முகத்தை ஒரு தூக்கி வைத் துக் கொண்டவன் நான்தான் உன் ன கல்யாணம் பண்ணிக்கிறேன்.. னு சொன்னனே மதி,நான் பெருசா கி.. பெரிய வீடு கட்டி, கார் வாங்கி உன்னை கல்யாணம் பண்ணிக்கி றேன் சொன்னேன்ல 

 அதுக்குள்ள,  நீ ஏன்?  இவரை கல் யாணம் பண்ணிக்கிட்ட இவர் என் ன விட அழகா இருக்காரா… என்ன நீ தானே சொல்லுவ நீ மட்டும்தான் அழகு, நான் உன்னை மட்டும்தான் கட்டுவேன்னு,… எனக்கு ப்ராமிஸ் எல்லாம் பண்ணியே..மதி என அழுதான் 

 மதிக்கு அவனை என்ன சொல்லி சமாதானம் படுத்துவது என தெரி யவில்லை அவன் பெற்றோர் சங்க டமாக மதியும் விஜயும் பார்த்தனர் 

 மதி அச்சு என அவனை அணைத் து கொண்டவள், நீ அச்சு குட்டில எப்பவும் அழக்கூடாது என கண் ணை துடைத்தவள் இப்ப நீ நல்லா படிக்கணும், படிச்சு பெரிய பெரிய வேலைக்கு போனாதான், வீடு கார் எல்லாம் வாங்க முடியும், அப்புறம் நீ பெரியவன் ஆகும் போது என்ன விட அழகான பொண்ணு உனக்கு வருவா பாரு,

அப்ப நீ என்னெல்லாம் மறந்திடுவ என்றாள், பாவமாக முகத்தை வை த்து, அச்சு சற்று சமாதானம் அடை ந்தாலும், மதி ஆனாலும் உன்னை மாதிரி எல்லாம் கிடைக்க மாட்டா ங்க இல்ல என அவள் இடுப்போடு கட்டிக் கொண்டான் 

 மதி சங்கடமாக விஜய பார்த்தாள் பின் சமாதானம்பண்ணி அவனை அழைத்து சென்றனர் 

 விஜய்  மதியையும் அச்சுவை மாறி மாறி கூர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தான் 

 மதி, சாரி சார் குழந்தைல இருந்து என்கிட்டயே.. வளர்ந்துட்டான்,  அ தான் அப்படி, என்றாள். விஜய் ஏது ம் சொல்லாமல் அவளை இழுத்து தன் கைவளைவிற்குள் வைத்துக் கொண்டான் 

 அவன் அவளை இறுக்கிப்பிடித்த திலேயே தெரிந்தது விட்டுத்தர மாட் டேன் யாருக்கும் என்பதாய் 

 மதி அதிர்ந்து, அவன் முகம் நோக் கியவள், வலிக்குது என நெளிந்தா ள் அவன் கைகளில் 

 விஜய் கைகளை லேசாக தளர்த்தி னானே.. தவிர அவளை  விடவில் லை.

 அவள் கல்லூரி மற்றும் பள்ளி படித்த தோழிகள் அனைவரும் வந்து அவர்களை வாழ்த்தி இருந்தனர். 

 பின் அனைவரும் சாப்பிட்டு ஆடி பாடி மகிழ்ந்து மேடடை ஏறி பரிசு கொடுத்து, விடைப்பெற்று சென்ற னர். அரை மணி, நேரம் போட்டோ கிராபர் இருவரையும் நிறுத்தி வை த்து போட்டோ எடுத்தார்.

எல்லாம்  முடிந்து வீடு வந்து,  சேர வே 11 மணி தாண்டி இருந்தது. மதி சோர்ந்து போய் காணப்பட்டாள்

ஆனால் விஜய் உற்சாகம் குறையா மல் இருந்தான். இன்று இரவு மதி உடனான,  முதல் இரவை கொண் டாட காத்திருந்தான், சந்தோஷமா ய் 

தொடரும்

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 

 

3 thoughts on “வானவில் வரைந்த வண்ண நிலவே 18”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top