ATM Tamil Romantic Novels

வானவில் வரைந்த வண்ண நிலவே 20

அத்தியாயம் 20

 அதே நேரம் அவன் அணைப்பில் மெய் மறந்து நின்றவள்,  வேணி கூப்பிடவும், இதான் சாக்கு என்று ஓடிவிட்டாள் இங்கு விஜய் சிரித்து க்கொண்டான் 

 வேணி, அவள் ஓடி வருவதை பார் த்தவர், என்ன மதிமா நல்லா இருக் கியா, சந்தோஷமா இருக்கியா என் றார்.

மதி, நல்லா இருக்கேன்… மா எல்லா ரும் என்ன நல்லா பாத்துக்கிறாங் க என்றாள் 

அடியே, நீயும் உன்வீட்டுக்காரரும் சந்தோஷமா, இருக்கீங்களானு கே ட்டேன், என்றார்.மதியும் தலையில் லேசாக தட்டி 

 ம்ம்… ஆமாம்மா என்றால் வெட்கத் துடன், 

 வேணி அவளை நெட்டி முறித்தவ ர்,  அப்ப சீக்கிரம் எங்களுக்கு பேர னோ பேத்தியோ பெத்து கையில கொடுத்திடு  என்றார் சிரிப்புடன் 

 அப்போதுதான் அவளுக்கு புரிந்த து, அவர் எதைக் கேட்கிறார் என்று உடனே நாக்கை கடித்தவள் அம்மா நான் உங்களுக்கு, காய்கறி நறுக்கி தரட்டுமா…, என்று பேச்சை மாற்றி னாள்.  அவரும் சரி என வேலை யை பார்க்க ஆரம்பித்தனர் 

 விஜய், சின்ன…, சின்ன சீண்டல்க  ளோடு நிறுத்திக் கொண்டான். வே ணி,   இரண்டு நாட்களாக பார்க்கி றார் மதி தூங்கி எழுந்து அப்படியே வருவதை, ஆனால்…அவரிடம் சந் தோஷமாக இருக்கிறேன் என்கிறா ள் என்று நினைத்துக் கொண்டார் 

 விஜய் அங்கிருந்த மூன்று நாட்க ளும் நன்றாக கவனிக்கபட்டான் காலனி பிள்ளைகள் அவனோடு நட்பாகிவிட்டனர் அச்சுவை தவிர் த்து 

 காலனி பிள்ளைகளுக்கு விஜய் என்ன கேட்டாலும் வாங்கி கொடுத் தான். அவர்களோடு நன்றாக பழகி சிறுபிள்ளை போல் பேசிக் கொண் டிருந்தான் 

 அச்சு மாத்திரம் எதை கேட்டாலும் எதை கொடுத்தாலும்,  எதை பேசி னாலும் முறைத்த படி நின்றான் விஜய்யிடம் நெஞ்சை நிமிர்த்தி 

 மதி, இதை பார்த்து சிரித்துக் கொ ண்டாள் 

 விஜயும், அவன் சிறுவன் என்று பாராமல் அவனும் சிலிர்த்துக் கொ ண்டு சண்டைக்குப் போனான். அச் சு வேண்டுமென்றே விஜய் வெறுப் பேற்ற, அவள் மடியில் அமர்ந்து கொள்வான் அவள் ஏதாவது சாப் பிட கொடுத்தால், தேங்க்ஸ்…., மதி என கன்னத்தில் முத்தமிட்டான் விஜயை பார்த்துக் கொண்டே… 

 விஜய்யும், டேய் அவ என் பொண் டாட்டி டா…, அவன் மடியை விட்டு இறங்குடா… என கையை பிடித்து இழுப்பான்.

உடனே சின்னவன் அவள் என்மதி அவ என் கூட தான் இருப்பா என அழுது அவளை கட்டிக் கொள்வா ன் 

 மதியும் சிரித்து என்னங்க விடுங்க அவன் அழறான், பாருங்க அவன் சின்ன பிள்ளை அவன் கிட்ட போ ய் கலாட்டா பண்ணிக்கிட்டு என் பாள் 

அங்கிருந்த மூன்று நாட்களும் இப் படி தான் சென்றது கலாட்டாவுடன் மின் அனைவரிடம் விடை பெற்று க் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர் 

அன்று மழை வரும் போல இருந்த து. அருண் சாலையில் காரை ஓட் டிக்கொண்டு வந்தான். லேசாக இரு ட்ட ஆரம்பித்து இருந்தது.

வெளியே ரம்மியமாக இருந்தால் காரை ஓரமாக நிறுத்தியவன்,  லே சாக வெளியே எட்டிப் பார்த்தான்.

சில்லென காற்று, முகத்தில் வந்த மோதியது. எதிலும் மனம் காய்க்க வில்லை 

திடீரென, அவன் அமர்ந்திருந்த ம றுபக்கம் யாரு பலமாக காரைத் தட் டும் சத்தம் கேட்டது. பெரிதாக ரோ ட்டில் யாரும் இல்லை 

சத்தம் கேட்டு, அருண் கண்களை சுருக்கி, தனக்கு எதிர்ப்புறம் கண் ணாடியில் யார்? என்று அவன் கெம்பீர குரலில் கேட்டான் 

 22 வயது,  இளம் பெண் ஒருத்தி கையில் குழந்தையுடன் முகத்தில் கலவரத்துடன், அழுது தோய்ந்த மு கத்துடன், அவனைப் பார்த்து சார் சார்,என்னை காப்பாத்துங்க..சார் 

 அஞ்சு பேர் என்னை தொரத்திட்டு வாராங்க…, ப்ளீஸ்…. சார் என கை யெடுத்து கும்பிட்டாள் அழுகையு டன் 

 முதலில், அவன் நம்பவில்லை ஏ தோ ஏமாற்று கும்பல் என்று நினை த்துக் கொண்டான் 

அவள், அப்படி இப்படியும் திரும்பி பயத்துடன் பார்த்து சார், ப்ளீஸ்.. எ ங்கள, காப்பாத்துங்க… என கை யடுத்து கும்பிட்டாள்

 சிறிது, நேரத்தில் அவள் சொன்ன து போலவே,  ஐவர் வேகமாக ஓடி வந்தனர். அவளை நாலாபாக்கமு ம் தேடி வெறியுடன் 

 அதைக் கண்டவன் டோரை ஓப்ப ன் செய்து விட்டான். உடனே, அவ ள் மூச்சு வாங்க உள்ளே அமர்ந்து கொண்டாள். குழந்தையுடன் அவ னைப் பார்த்து ரொம்ப நன்றி சார்

ஒரு உதவி பண்ண முடியுமா.. என் றான் அவன் என்ன என்னும் படி யாக பார்த்தான் 

அவள் எங்களை ஏதாவது ஒரு அ னாதை ஆசிரமத்தில் சேர்த்து விட முடியுமா…,  சார் நான் வேலைக்கு போய் உங்க காசு கொடுத்துடறேன் என்றாள் கையெடுத்து கும்பிட்டு 

 அந்த நாலு பேரோடு ஒருவன் கட் டை உடம்புடன், அவளை விடாதீ ங்கடா இன்னைக்கு அவள பிடிச்சி கசாப்பு போடுறேன் சிறுக்கிமவளே சிக்குடி, என்கிட்ட உனக்கு இருக்கு என நாக்கை கடித்து சத்தமாக பேசி னான்அவள் இருந்த காரில் சற்று தள்ளி நின்று,

அருணுக்கும் அது நன்றாகவே கேட்டது,

 ஒருவன் அண்ணாத்த உன் கொழு ந்தியா, எங்கேயோ ஓடிப்போய் ஒளி ஞ்சிகிச்சு எப்படியோ இன்னைக்கு ள்ள, கண்டுபிடிச்சிடுறேன் இங்க எங்கேயாச்சும் தான் இருப்பா.. என் றான் உடனே 

 அவன், அடியே என்கிட்ட இருந்து தப்பிக்கலாம்னு நினைக்காதடி.. இ ப்ப ஓடி இருக்கலாம் ஆனா உன்ன கண்டுபிடிச்சு கண்டதுண்டமாக வெட்டு வேண்டி என கத்திக்கொ ண்டே, நகந்தான் தன் நாட்களுட ன் 

 அருண் அவன் போனதும் இவன் யாரு? ஏன் உன் மேல இவ்வளவு கோவமா இருக்கான் என கேட்டா ன் 

 அவள், அது ஏன் அக்கா புருஷன் என்றாள் அருண், நீ யாரு உன் பே ரு என்ன என்றான்.

அவள் அது என் பேரு தாரணி அந் த ஆளு என் அக்கா வீட்டுக்காரரு என் ஊரு விழுப்புரத்தில்  ஒரு சின் ன கிராமம் 

 அம்மாவும் அப்பாவும் விவசாயி அக்கா என்னைவிட எட்டு வயசு பெரியவங்க அக்கா வாணி பத்தா வது, வரை தான் படிச்சாங்க,  என க்கு அப்ப 17 வயசு முடிஞ்சு 18 ஆரம்பம்

 ஸ்காலர்ஷிப் மூலமா காலேஜ்ல சே ர்ந்து படிச்சேன் ஹாஸ்டல்ல தான் இத்தனை நாளும் இருந்தேன் 

அக்காவுக்கு  25 வயசுல கல்யாண ம் நிச்சயம் பண்ணாங்க, அந்த ஆ ளோட,  அவன் குடிகாரன் சூதாடு வான், வேலைக்கே போக மாட்டா ன்,, அப்படிப்பட்டவனை என் அத் தை என் அப்பாகிட்ட அழுது பேசி அக்காவ கட்டிக்க சம்மதம் கேட்டுச் சு 

அப்பாவும் எங்க அத்தை அழுததா ல வேற, வழி இல்லாம கல்யாணத் துக்கு சரி சொல்லி அக்காவுக்கு பிடி க்காம தான் இந்த கல்யாணம் நடந்துச்சு 

கல்யாணத்துக்கப்புறம் அவன் டெ ய்லி குடிச்சிட்டு வந்து அக்காகிட்ட யும், வீட்டிலேயே ரொம்ப ரகளை, ப ண்ணுவான் பத்தாதுக்கு  

 ஊர்ல பொம்பள சகவாசம் வேற அக்கா கேட்டதுக்கு அக்காவ போட் டு அடிச்சான்

 அத்தையும் அவங்க பிள்ளைக்கு தான் சப்போர்ட். மூணு வருஷம் அக்காவுக்கு குழந்தை இல்ல  அது க்கும் போட்டு அடிச்சான் அந்த பா வி

அக்கா வந்து சொல்லி ஓ னு அழு வா, எனக்கு அந்த ஆள் கூட வாழ பிடிக்கலைன்னு அம்மா என்கிட்ட போன்ல சொல்லி அழுவாங்க 

 அப்புறம் நான் படிப்ப முடிச்சுட்டு ஊருக்கு வந்தேன்,  நான் வந்தது தெரிஞ்சுக்கிட்ட என் மாமா நீ அக் கா கிட்ட சண்டை போட்டு என்ன அவனுக்கு கட்டி வைக்க கேட்டிருக் கான் 

 அவ முடியாது…, நான் படுறது போ தாதுன்னு,  என் தங்கச்சி உனக்கு வேணுமா?னு  கேட்டதுக்கு அக்கா வ ரொம்ப முரட்டுத்தனமா தாக்கி இருக்கான் 

 அதுல,  அக்கா.. மூச்சுப் பேச்சு இல் லாம ஆகிட்டா…,  அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க சொல்லி நாங்க ஓடி ப்போய்,  பார்த்தோம் பார்த்து ஹா ஸ்பிடலில் சேர்த்தோம் 

அப்பதான் அக்கா கர்ப்பமா இருக் குற விஷயம் எங்களுக்கு தெரிஞ்ச து, எங்க அம்மா அவளை திரும்ப எங்க மாமா வீட்டுக்கு அனுப்பவே இல்ல 

அத்தை வந்து கேட்டதுக்கு இதோட முடிச்சுக்கலாம்னு எங்க அப்பாவும் சொல்லி அனுப்பிட்டாரு 

 அக்கா எங்க கூட ஒன்பது மாசம் சந்தோஷமா இருந்தா, பிரசவ வலி அக்காவுக்கு வந்தப்போ ஹாஸ்பி டல் போய் சேர்த்தோம் 

 குழந்தையும் பொறந்துச்சு ஆனா.. ஆனா.. என வாய் புத்தி அழுதவள் என் அக்கா பிள்ளைய பெத்து கை யில கொடுத்துட்டு இறந்து போயிட் டா சார் என ஓவெ ன அழுதாள் 

 அருணுக்கு அவள் நிலைமை பார் த்து கஷ்டமாக இருந்தது,  தாரணி தண்ணீரை,   குடித்தவள் கொஞ்ச நாள் வராம இருந்தான்.  என் அக் கா வீட்டுக்காரன். திரும்பவும் என் வீட்டுக்கு வந்து பிரச்சனை பண் ண ஆரம்பிச்சான் 

 முதல்ல, குழந்தையை கொடுக்க சொல்லி தொந்தரவு பண்ணுனா ன். அப்புறம் நான் பொண்டாட்டி இல்லாம ரொம்ப கஷ்டப்படுறேன் அதனால ஏன் மச்சினிச்சியை கட் டி கொடுங்க, அவ தான் என்னை யும் என் புள்ளையயும் நல்லா பாத் துக்க முடியும்னு 

 கொஞ்ச நாள் திருந்திட்டதா நல்ல வன் வேஷம் போட்டான்.  அவன் என்ன பாக்குற பார்வையே வக்கிர பார்வையா தான் இருக்கும்,

ஒரு நாள் குழந்தைக்கு உடம்பு முடி யலன்னு டவுன் ஹாஸ்பிடலுக்கு போயிட்டு,  வரும்போது என்ன இ டை,  மறிச்சி அசிங்க, அசிங்கமா… பேசி என்னை கைய புடிச்சு இழுத் து கலாட்டா,பண்ணினான் நானும் முடிஞ்சா அளவு போராடினேன் முடியல 

 அதையும் மீறி  எனக்கு தாலி கட்ட வந்ததும் அவனை தள்ளி விட்டுட் டு, காஞ்சிபுரம் போற பஸ் கண்ணு ல பார்த்தேன், உடனே அதுல ஏறி உட்காந்து வந்துட்டேன் 

 ஆனா.. ஆனா திரும்பவும் காலை யில என்னை,  திரும்ப இங்க  பாத் துட்டு காலைல இருந்து துரத்திட்டு வரான் 

ப்ளீஸ் சார் அவகிட்ட இருந்து என் னை எப்படியாவது காப்பாத்துங்க என ஓவென அழுதாள் தாரணி 

 அவள் பேசி முடித்ததும் தண்ணீ ரை குடிக்க கொடுத்தான். அவளும் அதை வாங்கி தான் குடித்தவள் பிள்ளைக்கும் கொடுத்தாள். வண் டி அங்கிருந்து புறப்பட்டது 

 காரை, ஒரு உணவு கடையில் நிப் பாட்டி சாப்பாடு வாங்கி கொடுத்தா ன்

 அவள் வேண்டாம் என்று கூறியும் கையில்,  திணித்து விட்டு காரை கிளப்பினாள். அவளுக்கும் பசி கு டலை இறுக்கவே, குழந்தைக்கு ஊ ட்டி விட்டு தானும் சாப்பிட்டாள்

அப்போது அவனுக்கு ஒரு கால் வ ந்தது எடுத்து பார்த்தான். கல்பனா தான் பண்ணி இருந்தார்

சலிப்பாக போனை காதில் வைத்த வன் சொல்லுங்க… என்றான் 

 அருண், எங்கப்பா இருக்க உன்ன பார்த்தா மிர்ணா வந்து இருக்கா என்றான் 

 அருண் அவர் கூறியதும் பல்லை கடித்தவன் எதுக்கு அவள வீட்டு க் குள்ள விட்டீங்க நான் வரும்போது அவன் அங்க இருக்க கூடாது என கெர்ஜித்தான் 

கல்பனா நான் எவ்வளவு சொல்லி ட்டேன்பா அவ கேட்கவே,  மாட்டே ங்குறா.. என்றார். உடனே அருண் தன் காரை வேகமாக நிறுத்தியவ ன் 

பின்னாடி அமர்ந்திருந்தவளை பா ர்த்து உன்னால எனக்கு ஒரு காரிய ம் ஆகணும், முடியுமா.. என்றான் 

 அவன் அப்படி கூறியதும் புரியாத தால் தாரணி மலங்க மலங்க முழி த்தாள் 

 அதைக் கண்ட அருண், பெருசா ஒன்னும் இல்ல என்றவன் மிர்ணா வந்திருப்பதை மட்டும் கூறியவன் தான் பேசும்போது நீ அமைதியாக பக்கத்தில் நின்றால் போதும் என் றான் 

 அவளும் சரியென தலையாட்டி சார் ஆசிரமதுக்கு, போகலையா? என்றாள் 

 அருண் அதை நாளைக்கு பாத்து க்கலாம், இப்ப இந்த உதவி மட்டும் எனக்கு பண்ணு என்றவன் காரை ஓட்டினான் 

 அரை மணி நேரத்தில் அருண் வீடு வந்து சேர்ந்தான் 

 

தொடரும்

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 

 

 

4 thoughts on “வானவில் வரைந்த வண்ண நிலவே 20”

Leave a Reply to Zuha_Banu ♥️ Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top