ATM Tamil Romantic Novels

என் உயிரே நீ விலகாதே 3

அத்தியாயம் 3 

இங்கே,, சென்னையில் இரண்டு நா ள், ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த தேன்மதுரா மனம் கேட்காமல் கடித ம் எழுதி வைத்துவிட்டு வீட்டை வி ட்டு வெளியேறி விட்டாள். எங்கு போனாள் என யாருக்கும் தெரிய வில்லை. 

காலையில் எழுந்த ரவிச்சந்திரன் கடிதத்தை படிக்கும் போது பஸ்ஸி ல் மலையேறிக் கொண்டிருந்தாள் தேன்மதுரா 

கடிதத்தில், ரவி அண்ணா…, என்ன மன்னிச்சிடுங்க நாலு மாசமா உங்க வீட்ல எனக்கு அடைக்கலம் கொடு த்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணா 

நான் உங்களை விட்டு ரொம்ப தூ ரம் போறேன், பெரியம்மா சொன்ன மாதிரி நீங்க உங்களுக்கு பார்த்த பொண்ண,  கல்யாணம் கட்டிக்க ணும், அவங்கள உங்களுக்கு பிடிக் கும்னு எனக்கு தெரியும், அவங்கள கட்டிக்கிட்டா நான் ரொம்ப சந்தோ ஷப்படுவேன்,  என் வாழ்க்கை தா ன் முடிஞ்சு போச்சு என்னால உங்க வாழ்க்கை கெடவேண்டாம் 

 பெரியம்மாவை திட்டாதீங்க அப்பு றம் பக்கத்துல இன்னொரு லெட்ட ர் இருக்கு, அதை உங்கள கட்டிக்க போறவங்க கிட்ட குடுங்க 

அதை நீங்க படிக்க வேண்டாம் சரி அண்ணா நான் போறேன் என கடி தம் முடிந்திருந்தது, பார்த்தவன் கண்களில் கண்ணீர்.

 ஏன் தேனு அண்ணா மேல நம்பிக் கை இல்லாம போயிட்டியா.., அண் ணா உன்னை பார்த்துக்க மாட்டே ன்னு நினைச்சிட்டியா தேனு என கண் கலங்கினான்.

 இங்கே கொடைக்கானலில் காலை பொழுது குளிருடன் விடிந்தது.

கொண்டு வந்த ஸ்வட்டரயும் காதி ல் மப்பலரையும், அணிந்தவள் ப ஸ்சை விட்டு  இறங்கி மலைப்பகு தியில் உள்ள ஒரு சிறு வீட்டில் கத வை தட்டினாள்.

 காலை 9:00 மணி ஆகிவிட்டது அவள் இங்கே வருவதற்கு 

 9 மணி அளவில் அவள் வயதை ஒத்தபின் வந்து கதவை தெரிந்தவ ள், ஆச்சரியத்துடன், ஏய்…, மதுரா என்னடி, எப்ப கூப்பிட்டாலும் வர நேரமில்லைனு சொல்லுவ எப்படி விட்டார் உன் ஆத்துக்காரர் என கண் அடித்தாள் 

மதுரா லேசாக சிரித்தவள் மொத்த மா போனு விட்டுட்டாரு டி, என்றவ ள் ரொம்ப தாகமா இருக்கு மைதிலி கொஞ்சம் தண்ணி தரியா என்றா ள். 

உடனே,மைதிலி அச்சோ நான் ஒரு பைத்தியக்காரி, உன்ன வெளியே நிக்க, வெச்சே உன்ன பேசிட்டு இரு க்கேன். வா உள்ளே என்றவள்,

தண்ணீரை அவளுக்கு பருக கொ டுத்தாள், மதுராவும் அதை வாங்கி தாகம் தீரும் வரை குடித்தாள்.

பின்,என்ன மதுரா இத்தனை மாச ம் வராதவ திடீர்னு வர என்ன கார ணம் சொல்லு, அங்க ஏதாவது பெரிய பிரச்சனையா மதுரா 

 போன தடவை போன் போடும்போ து கூட, சந்தோஷமா இருக்கேன்னு தானே சொன்ன என்றாள் 

மதுரா, மைதிலி இப்ப என்கிட்ட  எ தையும் கேட்காதடி…,  எனக்கு ஒரு வேலையும், தங்க இடமும்  ஏற்பாடு  ண்ணி கொடுக்க முடியுமா.., என்ற வள்,  தன் காதில் அணிந்திருந்த கம்மலை கழட்டி கொடுத்தாள் 

 அதில் கோபம் கொண்ட மைதிலி அடியே.. ஏன்டி இப்ப இத கழட்டின, போடுடி காதுல, என்ன விஷயம்னு சொல்ல மாட்றநான் என்னடி பண் ணட்டும்.

அம்மா வேற இப்ப வீட்ல இல்ல நா ளைக்கு தான் வருவாங்க. ஒரு கல் யாண வேலையா போயிருக்காங்க சரி வா நம்ம சாப்பிடலாம் என அழைத்து சென்றாள் 

பயணக் களைப்பு வாட்டி வதைக் கவே பாய் போட்டு கீழே படித்தவள் அப்படி உறங்கி இருந்தாள் 

தேன் மதுராவும் மைதிலியும் கோய ம்புத்தூர் காலேஜில் ஒன்றாக படித் தவர்கள் நல்ல தோழிகள் பிசினஸ் மேக்ஸ் மைதிலிக்கு சரியாக வராது மதுரா தான் சொல்லிக் கொடுப்பா ள்,  மைதிலி ஹாஸ்டலில் இருந்த தால், தான் கொண்டு வரும் உண வை அவளோடு பகிர்ந்து கொள் ளுவாள் 

இருமுறை அவள் வீட்டிற்கு வந்தி ருக்கிறாள் கல்லூரி படிக்கும் கால த்தில். மைதிலி, மதரா ரெஸ்ட் எடு நான் பக்கத்துல இருக்குற பேக்ட்ரி க்கு வேலைக்கு போறேன், இந்தா… என் போன், ஏதாவது வேணும்னா  இந்த நம்பருக்கு போன் பண்ணு நான் எடுப்பேன் என்றவள் கிளம் பி விட்டாள்

மதுரா தன் பர்சை திறந்தாள். அதி ல் ஆயிரம் ரூபாய் இருந்தது. பக்கத் தில், ஒரு புகைப்படம் தன் தாயும் அக்காவும் தானும் இருக்கும் படம் பார்த்து கண் கலங்கியவள் 4 மாத த்துக்கு,  முன் நடந்தது கண் முன் னே வந்து போனது 

கோயம்புத்தூர் சின்னாளப்பட்டி, அவள் தன் அம்மா வீட்டிற்கு   வந் து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது கணவன் வீட்டில் பிரச்சனை நடந் து வீட்டை விட்டு வெளியே வந்த வள் தன் வீட்டிற்கு வந்து விட்டா ள் 

அம்மா சரஸ்வதி அக்கா விண்ணர சி, அப்பா காய்ச்சல் வந்து காலமா கிவிட்டார். 

அன்று ஹாலில் கவலையாக அம ர்ந்திருந்தாள் தேன்மதுரா . நாள் த ள்ளிப் போய் இருந்தது. என்ன மல டினு சொல்லும்போது வராத குழந் தை, இப்போது களங்கம் துடைக்க வந்திருக்கிறது அதுவும் விண்ண ரசிக்கு,  கல்யாணம் முடிவான தரு ணத்தில். மூன்று மாதங்கள் இப்படி ஓடிவிட்டது 

 சரஸ்வதி, என்ன.., தேனு எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கிறதா உத்தேசம், நானும் டெய்லி இதை கேட்கிறேன் பதில் பேசாம இருந்தா என்ன அர்த்தம் 

 மூணு மாசமா இங்க வந்து உட்கார் ந்துட்டு இருக்கிற,  நானும் டெய்லி இதை கேட்கிறேன் வாய தொறந்து பேச மாட்டேங்குற 

பெரியவளுக்கு,  முன்னாடி நீ கல் யாணம் கட்டிக்கிட்ட, என்றவரை தேனு முறைத்தாள் 

 சரசு, இல்ல.. இல்ல…  நாங்க தான் கட்டி வச்சோம் குடும்பம்னா சண்ட சச்சரவு, வரத்தான் செய்யும் தேனு அதுக்காக இப்படி இங்கே இருந்தா என்ன அர்த்தம் 

உன் புருஷனை போய் பார்த்து பே சினா தானே ஏதாவது தீர்வு கிடை க்கும்

 பெரியவளுக்கு இப்பதான் நேரம் கூடி வந்திருக்கு, இப்ப நீ புருஷன் இல்லாம வயிற்றில் பிள்ளையோட இங்க வந்து  உட்கார்ந்து இருந்தா என்ன டி பதில் சொல்றது வெளிய அக்கம்பக்கத்தில் இருக்கிறவங்க ளுக்கு பதில் சொல்ல முடியலைடி,

ஏன் உன் பொண்ணு புருஷன் வீட் ல வாழாம இங்க வந்து உட்கார்ந்து ட்டு இருக்கானு கேக்குறாங்க. அது வும் இல்லாம இப்போ அவன் புள் ளய வயித்துல சுமந்துட்டு வந்து உட்கார்ந்துட்டு இருக்க 

இவள கட்டிக்க போறவரு,  வேற உ ன் தங்கச்சி, ஏன் தனியா இங்க இரு க்கா,  ஏன் அவ வீட்டுக்காரர் வரல யான்னு கேட்டுட்டே இருக்காராம் டி என்றதும் 

 தேனு,  விண்ணரசி யை நிமிர்ந்து பார்த்தாள், அவள் எதுவும் கூறாம ல், தாயின் பக்கத்தில் நின்று இருந் தாள் 

சரசு, ஏண்டி அவள பாக்குற ஏற்க னவே கணவன் கைவிட்ட நிலையி ல்  தாயாவது ஆறுதலாக இருப்பார் என்று நம்பி வந்தவளுக்கு விஷய ம், தெரிந்ததும் அவர் இப்படி பேசி யதும் மனம் உடைந்தவள், 

தேனு, இப்ப என்னம்மா… உன் பொ ண்ணு, கல்யாணம் நடக்க நான் பாரமா இருக்கேன் அப்படிதானமா   நான் இங்க இருந்தா அரசிக்கு நல் லது நடக்காம போயிடுமோன் னு பயப்படற இல்ல 

 சரசு, அப்படி இல்லடி… என்றார்.

அப்புறம் எப்படிம்மா இப்படி பேசு ற அப்ப நான் யாருமா உனக்கு? நா னா உன்னை கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி கேட்டேன் 

இல்ல காதல் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேனா சொல்லுமா… சொல்லு.

 செத்துடுவேன் சொல்லி என்னை சம்மதிக்க வச்சி என்ன அங்க அனு ப்பி வச்சிட்ட. உனக்காகவும் உன் பொண்ணுக்காகவும் அவர் முகத் த பாக்காம கூட தாலியை வாங்கிக் கிட்டேன்.

இதோ நிக்கிறாளே உன் பொண்ணு இவ ஹார்ட்ல ப்ராப்ளம் இருக்குன் னு, ஆபரேஷன் பண்ண பணம் வேணும்னு வந்த விலைக்கு என் ன, கல்யாணம் பண்ணி இல்ல.. இ ல்ல பணத்துக்காக வித்துட்ட அந்த வீட்டில 

 என்னடி, இப்படி எல்லாம் பேசுற உன் அக்காக்காக தானடி செஞ்ச 

 தேனு, ஆமாமா நான் அரசிக்காக தான் செஞ்சேன் ஆனா இப்ப உங்க ரெண்டு பேருக்கும் பாரம் ஆயிட்டே ன், இல்ல. அதானமா உண்மை. நா ன் போய்ட்டா உன் பொண்ணு, நல் லா இருப்பானு நினைக்கிற அப்ப டித்தானே,

உனக்கு தெரியுமா மா, என்ன பத்து ரூபாய்க்கு கூட மதிக்க மாட்டாங்க அந்த வீட்ல, இந்த ஒரு வருஷமும் நான் பட்ட கஷ்டம் எனக்கு மட்டு ம்தான் தெரியும் 

கட்டின புருஷனாவது ஆதரவா இருப்பான் நம்பி இருந்தேன், அது வும் இல்லனு தெரிஞ்சப்ப  மனசு விட்டு  போச்சு என அழுதாள் 

 

தொடரும் 

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 

4 thoughts on “என் உயிரே நீ விலகாதே 3”

Leave a Reply to sowmi Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top