ATM Tamil Romantic Novels

என் உயிரே நீ விலகாதே 7

அத்தியாயம் 7

 திருவின் திருமண நாளும் வந்தது ஆதவன் வீட்டில் இருந்து அனைவ ரும் திருமணத்திற்கு வந்திருந்தன ர் குடும்பத்துடன், ஆதவன் மட்டும் தனியாக தன் அம்மாவுடன் வந்தி ருந்தான். 

தனம் கழுத்தில் அவ்வளவு நகைக ள் இருந்தது. அத்தனையும் ஆதவ ன் சம்பாத்தியம். தனம் எல்லாரிட மும் என் புள்ள வாங்கி கொடுத்தா ன் என  பெருமையாக சொல்லிக் கொண்டார் 

 அவர், அந்த பக்கம் சென்றதும் ஒரு சிலர், இதோ.. போறா… பாரு டி மருமகளை வீட்டை விட்டு வெளி யே அனுப்பிவிட்டு, புள்ள கூட வந் து இறங்குறா..,சின்ன பொண்ணு மாதிரி மினிக்கிட்டு 

மற்றொருவள், பாவம் டி  அந்த பொண்ணு அந்த ஊர்ல இல்லை யாம் அந்த பாவம் இவ குடும்பத்த சும்மா விடும்ங்குற என்ன பேசிக் கொண்டனர் 

ஆதவன், கடையிலிருந்து  தான் பொருட்கள் வந்து இறங்கியது திரு வின் திருமணத்திற்கு 

  பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் திரு கனகா திருமணம் நடந்து முடி ந்தது, ஆதவன் கடைசி வரை கூட வே இருந்தான். அவன் அண்ணன் இருவரும் ஜோடியாக வந்திருந்த னர். இவன் மட்டும் தனியாக அமர் ந்திருந்தான் 

 கூட்டத்தில், யாரோ ஒருவர் தேனு அம்மா தேனு.. இங்க வாடா என அ  ழைத்தார்.அந்த பெயர் கேட்டது ஆ தவன் சட்டென குரல் வந்த திசை யை பார்த்தான். அங்கே மூன்று வயது குழந்தை அவரை நோக்கி அழகாக நடந்து வந்து கொண்டிரு ந்தது 

 ஆதவன் இதழில் சிரிப்பு 

இங்கு கொடைக்கானலில் தேன்ம துராவுக்கு குழந்தை பிறந்து மூன் று நாட்களுக்கு பிறகு மைதிலி வீட் டுக்கு சென்றாள் ரவி எங்கு தேடியு ம் தேனு கிடைக்கவில்லை சோர்ந் து  போனான் 

 பேப்பர் பத்திரிகை விளம்பரத்தில் தன்னை கண்டுபிடித்து தரும்படி நியூசை பார்த்தாலும் போக விரும் பவில்லை என மைதியிடம் கூறியி ருந்தாள்.  அவள் இருக்கும் இடத் தை அறிவிக்கவும் இல்லை குழந் தை பிறந்து மூன்று மாதங்கள் ஓடிவிட்டது 

மைதிலி யோடு வேலைக்கு சென்று வர ஆரம்பித்தாள், தேன்மதுரா குழ ந்தையை மைதிலி அம்மா தான் பார்த்துக் கொள்கிறார் 

 ரவிச்சந்திரன் ஆராதனனுக்கு செ ன்னையில் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது ரவிக்கு தேனுவின், நி னைவுதான் இருந்தது. அன்று கட ற்கரையில், இருவரும் சென்று கட ல் அலையில் கால் வைத்து சிறிது நேரம் நின்றவர்கள் மண்ணில் வந் து அமர்ந்து பேசிக் கொண்டிருந்த னர் 

 அப்போது youtube ஓப்பன் செய்து பார்த்துக் கொண்டிருந்தாள் ஆரா அதில்,  ஒரு youtuber ஒருவர் கொ டைக்கானலில்,  உள்ள பிரபல டீ எஸ்டேட் கடைகள் சாக்லேட் பற்றி வீடியோ எடுத்து போட்டுக் கொண் டிருந்தார்

அதை பார்த்துக் கொண்டே வந்த வள் ஆச்சரியத்துடன் ரவி.., ரவி இங்க பாருங்களேன் உங்க தங்கச்சி தேன் மாதிரியே இந்த பொண்ணு இருக்கா இல்ல என அவனிடம் காட்டினாள் 

  ரவியும், சட்டென அவளிடம் போ னை வாங்கி பார்த்தான் ஆம் அதி லிருந்து தேன் மதுரா தான் ரவிக்கு கண்கலங்கி விட்டது 

 ரவி,ஆரு.., இது. தேன் தாண்டி என் தங்கச்சி கிடைச்சிட்டா… தேங்க்யூ…. சோ மச் என்றான் அவளை கட்டிப் பிடித்து முத்தமிட்டு ஆராவும் அவ னை அணைத்துக் கொண்டாள் 

 தேனு அந்த சாக்லேட் ஃபேக்டரில் பில் செக்ஷனில் நின்று கொண்டிரு ந்தாள். ஒல்லியான தேகத்துடன் முகம் களை இழந்து இருந்தாள்

 ஆதவன், வீட்டில் சாப்பிட்டுக் கொ ண்டிருந்தான். தனம் ஏயா.. ஆதவா இரண்டாவது அண்ணி முழுகாம இருக்கலாம் ரெண்டாவது தடவை

கடையிலிருந்து கொஞ்சம் பாதாம் முந்திரி, கிஸ்மிஸ் பழம் எல்லாம் எடுத்துட்டு வந்துருப்பா புள்ள ஆ ரோக்கியமா.. பிறக்கணும் இல்ல எ ன்றார். கையில் வைத்திருந்த பெ ண் குழந்தையை கொஞ்சியபடி 

 ஆதவன் சாப்பிட்டவன் எதுவும் சொல்லாமல் சென்று விட்டான். தனம் என்ன இவன் சொன்னது காதுல விழலயா, சரி போன் பண் ணி சொல்லிக்குவோம் என சென் று விட்டார் 

கடைக்கு வந்த ஆதவன் கடை பை யன் என்று லீவு என்பதால் ஒரு வீ ட்டுக்கு இந்த மளிகை பொருட்கள் டெலிவரி செய்ய வேண்டும் என்ப தால் அவனே பொருட்களை எடுத் துக் கொண்டு அந்த இடத்தை நோ க்கி சென்றான் 

அவன் பொருட்களைக் கொண்டு போகும் தெருவின் முனையில் தா ன் தேன்மதராவின் வீடு.  அதைத் தாண்டி செல்லும்போது அவன் பா  ர்வை தானே அந்த வீட்டை தொட் டு மீண்டது 

அந்த சந்து சிறிதாக இருந்ததால்,  வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு பொருட்களைக் கொண்டு சென்று அந்த வீட்டில் வைத்துவிட்டு திரு ம்பி நடந்தான்.

வாசலில் இரு பெண்கள் பேசும் குரல் கேட்டது யார் என பார்த்தா ன் 

அப்போது இரு பெண்கள் அதோ போறாள்ங்க.., பாரு ரெண்டு பேரு என்றால் முதலாமவள். யாரடி சொ ல்ற என்றாள் மற்றொருவள் 

முதலாமவள் அதை போறாளே சர சு அவ தாண்டி, பெத்த பொண்ண வீட்டை விட்டு வெளியே அனுப்பி ட்டாளாம்டி பாவம் அந்த பொண் ணு, அப்பவே அந்த பொண்ண ச ரியா கவனிக்க மாட்டா.

பெரிய பொண்ணு நோய் கோழி னு பாசம் எல்லாம் அந்த பொண்ணு மேல தான் 

 மற்றொருவள் ஆமாடி நான் கூட கேள்விப்பட்டேன்,  அந்த பொண் ணு கல்யாணம் பண்ணவனும் சரி யில்ல போல வாழாம வந்துருச்சு. இங்க வந்தா, இவளுங்களும் அந்த பொண்ண வாழ விடவில. சண்ட போட்டு அனுப்பிட்டாளுங்க

 முதலாமவள், ஆமாமா… விஷயம் தெரியுமா உனக்கு, பெரிய பொண் ணுக்கு இதய நோய் குணமாக்க  சி ன்ன பொண்ணு, வாழ போன இட த்தில இரண்டு லட்ச ரூபாய் வாங் கிட்டு இந்த பொண்ண அடிமையா அனுப்பிட்டாடி சரசு எங்கேயாவது அடக்குமாடி 

முதலாமவள் ஐயோ அப்படி யாடி இது எனக்கு தெரியலையே.., 

மற்றவள், ஆமாடி…,அந்த பொண் ணு வீட்டை விட்டு போகும்போது மூணு மாசம் முழுகாம இருந்துச்சா ம். புள்ளதாச்சுனு…,  கூட பாக்காம துரத்தி விட்டாளுங்க ரெண்டு பேரு ம்,

இப்ப அந்த பொண்ணு கல்யாணம் கட்டி, நல்லா பாத்துக்குறா.. சரசு. ஆனா பாவம் அந்த ரெண்டாவது பொண்ணு எங்க கஷ்டப்படுதோ இல்ல செத்து கித்து போச்சோ என் றவர்கள் விலகி சென்றுவிட்டனர் 

இதையெல்லாம்,  திரும்ப வண்டி யை எடுக்க வந்த  ஆதவன் கேட்டு விட்டு அப்படியே ஷாக் அடித்தது போல் நின்று விட்டான். என்ன மா திரியான மனநிலைமையில் இருந் தான் என்றே தெரியவில்லை,  எப் படி கடைக்கு வந்தான் என்றும் தெரியவில்லை.

 அவனால் கடையில் அமர முடிய வில்லை . கல்லாவை பூட்டி எடுத்த வன் கடையை சீக்கிரம் அடைக்கு  ம்படி கூறிவிட்டு வீடு வந்து சேர்ந் தான் அவன் எண்ணமெல்லாம் தேனு தான் நிறைந்திருந்தாள் 

தொடரும் 

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 

2 thoughts on “என் உயிரே நீ விலகாதே 7”

Leave a Reply to sowmi Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top