அத்தியாயம் 9
அவள், அவன் கேட்டதும் தலை குனிந்து கொண்டாள் ரவி உடனே சொல்லு தேனுமா என்றான்.
தேனு இல்லனா நான் இங்கனவே இருந்துக்கிறேன் யாருக்கும் பாரமா இருக்க விரும்பல
உங்க கல்யாணத்துக்கு கூப்பிடுங் க கண்டிப்பா வரேன் என்றாள்
ஆரா ஏன் இப்படி பேசற தேனு வா போகலாம் என்றாள்
ரவி எழுந்து கொண்டவன் இன்னு ம் ஒரு மாசம் டைம் உனக்கு அடுத் த மாசம், நம்ம ஊருக்கே எனக்கு மாற்றல் ஆகுது.
என்கூட நீ வர அ வ்வளவுதான் என்றவன் எல்லாரி டமும் சொல்லி க் கொண்டு குழந் தையிடம் கட்டு ப்பணத்தை திணித்தவன் ஆராவு டன் கிளம்பி விட்டான்
ரவி அப்படி சொன்னதும் தேனும் அப்படியே நின்று விட்டாள்.
அவளுக்கு அடுத்து என்ன செய்வ தென்று தெரியவில்லை. என்ன மு டிவு எடுப்பது என்றும் தெரியவில் லை
இங்கு, கோயம்புத்தூரில் அன்று முழுவதும், ஆதவன் சாப்பிடவில் லை. யாரும் ஒரு வார்த்தை கூட அவனை கேட்கவில்லை மழையி ல் நனைந்தது வேறு ஜுரமாய் அடி த்தது
தனம், காய்ச்சல் லா என்றவர் அ னைவருக்கும் செய்த உணவை தா ன் அவனுக்கும் கொடுத்தார் காய்ச் சலில் உடம்பு வலித்தது
ஆறுதலான வார்த்தையும் தலை சாய மடியும் கேட்டது அவன் மன து
காய்ச்சலுடன் கண் மூடினான் கன வில் அவன் மதுரா என்னங்க ரசம் வச்சி தரவா தைலம் தேச்சி விடவா என் மடியில படுத்துக்கோங்க என அவன் கேசம் வருடினாள்
ஆதவன், தேனு என அவள் மடியி ல் தலை சாய்த்து படுத்தவன் அவ ளை வயிற்றோடு கட்டிக் கொண் டான் கனவில் நினைவில் தலைய ணையை கட்டிப்பிடித்தான்
இங்கு கொடைக்கானலில் ஆதவ ன் தன்னை இறுக கட்டி அணைப் பது போல தேனு என்று கூப்பிட்ட து போல இருந்தது. திடுக்கிட்டு எழுந்த அமர்ந்தாள்
தேனு கனவில் இருந்து முழித்தவ ள், தன்னை சுற்றி முற்றி பார்த்து யாரும் என்னை கூப்பிட்ட மாதிரி இருக்கே , அதுவும் அவர் குரல் மா திரியே.., இருந்துச்சே என யோசித் தாள்..
ஒருவருக்கொருவர் மாறி மாறி தங் களை நினைத்துக் கொண்டனர். இவர்கள் எப்படி பிரிந்தார்கள் என பார்க்கலாம் வாருங்கள்.
கோயம்புத்தூர் கரிச்சான் பட்டி சர ஸ்வதி பாலாஜி தம்பதியர் இவர்க ளுக்கு, தேன்மதுரா, விண்ணரசி என இரண்டு பெண் பிள்ளைகள்
பாலாஜி ரைஸ் மில் வேலை, சரஸ் வதி வயல் வேலைக்கு செல்வார் விண்ணரசிக்கு படிப்புஏறவில்லை பத்தாம் வகுப்போடு பள்ளி படிப் பை நிறுத்திக் கொண்டாள்
அதுவுமில்லாமல் அவள் நோய் கோழி அடிக்கடி உடல்நிலை சரியி ல்லாமல் போகும். சரஸ்வதி அரசி யை தான் கவனிப்பார் எல்லா சத் தான உணவையும் அவளுக்கு தா ன் கொடுப்பார். ஆனால் உடம்பு ஏறாது
ஆனால் தேன் மதுரா இருப்பதை சாப்பிடுவாள். அது வேணும் இது வேணும் என கேட்க மாட்டாள். நன்றாக படிப்பாள் அவள் அப்பா செல்லம்
விண்ணரசி மாநிறமாக இருப்பா ள்,தேன்மதுரா மஞ்சள் நிறத்தழகி
தேன்மதுரா பாலாஜியின் அம்மா வைப் போல இருப்பதால் அவருக் கு அவள் மேல் அலாதி பிரியம்
விண்ணரசியும் அன்பாக பார்த்து க் கொள்வார் சரஸ்வதிக்கு விண் ணரசி தான் பிடிக்கும். அவள் அம் மா அம்மா என அவளையே ஒட்டி க்கொண்டு திரிவாள். பாலாஜிக்கு 55 வயது இருக்கும் போது திடீரென மாரடைப்பில் இறந்து விட்டார்
தேனுக்கு தான், தான் தனியாக இ ருப்பது போல ஆனது குடும்பத்தி ல் வருமானம் குறைந்தது. அவருக் கு மில்லில் இருந்து வந்த பணம் ஒரே வருடத்தில் தீர்ந்து போனது
அரிசிக்கு அடிக்கடி உடல்நிலை ச ரியில்லாமல் போனது. அப்போது தான் தேனு காலேஜ் கடைசி வருட ம் படித்துக் கொண்டிருந்தாள்.
அவளோடு ஹாஸ்டலில் தங்கி படி த்தவள் தான் மைதிலி
கொடைக்கானலை சேர்ந்தவள், ந ல்ல தோழி. தேனு வீட்டில் இருந்து கொண்டு வரும், உணவை அவ ளோ டு பகிர்ந்து கொள்வாள். விடு முறையின் போது இரு முறை அவ ள் வீட்டுக்கு சென்று இருக்கிறாள் தேன்மதுரா.
ஒரு நாள் விண்ணரசி மயக்கம் போட்டு விழவே அவளை அழை த்துக் கொண்டு மருத்துவமனை சென்றார் சரஸ்வதி
விண்ணரசி இந்த நிலையில் கண் ட சரஸ்வதி பதறிவிட்டார். ஏற்கன வே கணவன் வேறு இல்லை இவள் பிடித்த மகள், அவளுக்கும் ஏதாவ து ஆகிவிடுமோ, என பயந்து அழு தார்.
அவளை பரிசோதித்த டாக்டர் அர சிக்கு இதயத்தில் சிறு ஓட்டை இரு க்கிறது.அதனால்தான் உடல்நிலை அடிக்கடி சரி இல்லாமல் போகிறது என அவரிடம் கூறினார்
அதைக் கேட்டு சரசுக்கு மயக்கமே வந்துவிட்டது. இதை கேள்விப்பட் ட மதுராவுக்கு அழுகையாக வந்த து. ஆபரேஷன் பண்ண இரண்ட ரை லட்சம் கேட்டனர் மருத்துவம னையில்
இதைக் கேட்ட சரஸ்வதி அதிர்ந்த வர்,இவ்வளவு பணம் எப்படி பிரட் ட முடியும், சோர்ந்து போய் அமர்ந் து விட்டார் சரஸ்வதி.
அதே நேரம் கோயம்புத்தூரில் அ தே ஊரில் சற்று வசதி படைத்தவர் தனலட்சுமி. சொத்து பத்து நிறைய இருந்தது. இரண்டு மகன்களுக்கு திருமணம் முடித்து இருந்தார் தன ம். கடை குட்டி ஆதவன் 29 வயது அவனுக்கு. தாய் சொல்லை தட்டா தவன்
ஆதவன் சிறுவயதிலிருந்தே அதிக நேரம் தாயிடம் தான் இருப்பான். மற்ற பிள்ளைகள் ஓடி விளையா டினாலும் இவன் தாயின் பக்கத்தி லேயே அமர்ந்திருப்பான். அவர் சொன்னால் மட்டுமே செய்வான் அ ப்படி பழகி இருந்தார் தனலட்சுமி.
மற்ற இருவரும் பெரியவர்களான தும், அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்தனர். ஆனால் இவன் மட் டும் அம்மா.., அம்மா என்று அவர் பின்னாடியே சுற்றிக் கொண்டிருப் பான். அவரைக் கேட்டு தான் எல் லாவற்றையும் செய்வான்
ஒருமுறை ஆதவனுக்கு 17 வயது இருக்கும் போது அம்மை போட்டு விட்டது. தனம் அவனுக்காக வே ண்டிக் கொண்டு மடிப்பிச்சை, கே ட்டு மண் சோறு சாப்பிட்டார்
அதைக் கேள்விப்பட்ட ஆதவனுக் கு தன் அம்மாவின் மேல் இன்னும் பாசம் அதிகமாகி விட்டது
மற்ற, இருவருக்கும் திருமணம் ஆனதும் சுத்தமாக மனைவி பக்க ம் சாய்ந்து விட்டனர். வீட்டுக்கே கொடுக்கும் பணமும் குறைந்துவி ட்டது.
சாமிக்கண்ணு இருக்கும்போதே மூன்று பிள்ளைகளுக்கும் சொத் தை பிரித்துக் கொடுத்திருந்தார்
தனத்திற்கு, இந்த வீடு என எழுதி யிருந்தார். அவருக்கு பிறகு பிரித் துக் கொள்ளலாம் என எழுதி இரு ந்தது. சாமி கண்ணு சின்ன மளி கை கடை ஒன்றை வைத்திருந்தா ர்
அவர் இறந்த பிறகு அதை நடத்த ஆள் இல்லை, அப்போது ஆதவன் ஒரு தனியார் கம்பெனியில் மேனே ஜராக வேலை பார்த்துக் கொண்டி ருந்தான். தனத்திற்கு வருமானம் குறையவே, உடனே அழுது நடித்து ஆதவனிடம் கடையை பார்த்துக் கொள்ள சொன்னார்
முதலில் யோசித்தவன் பின் தாய்க் காக, கடையை எடுத்துக் கொண் டான். அவனின் உழைப்பில், மளி கை கடை ஹோல்சேல் கடையாக மாறி நின்றது பெரிய கடை அது
இரண்டு வருடங்களிலேயே பெரிய அளவில் லாபத்தை சம்பாதித்து கொடுத்தான் ஆனால் சம்பாதிக்கு ம் அனைத்தையும் தனத்திடம் கொ டுத்து விடுவான் அந்த அளவிற்கு கைக்குள் வைத்திருந்தார் தனம்
அவனுக்கும் தாய் என்றால் பிடிக் கும் தவறு செய்தாலும் அமைதியா க போய்விடுவான் நிறைய இடங் களில் அவனுக்கு பெண் பார்த்தார் தனம்
எல்லாம் நல்ல இடம் ஆனால் பெ ண்ணை பார்த்து விட்டு வேண்டா ம் என்று சொல்லிவிடுவார் தனக்கு கீழ் இருக்கும் மருமகளை தான் எ திர்பார்த்தார் தனலட்சுமி
வசதியான வீட்டுப் பெண்ணாக இருந்தால் தனக்கு அடங்க மாட்டா ள் என தெரிந்து கொண்டவர் தான் தான் அடங்கி போக வேண்டும் எ ன்பதால், தனக்கு கீழ் வசதி குறைந் த இடமாக பார்த்துக் கொண்டிருந் தார். பிள்ளையும் தன்னை விட்டு போக மாட்டான் அல்லவா
அப்போது ஒரு நாள் தனம் கோவி லுக்கு சென்று இருந்தார். அங்கே தனக்கு தெரிந்த ஒருவரை பார்த்து பேசிக் கொண்டிருந்தார்.
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்
super sis next epi pls….
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌