அத்தியாயம் 12
ஆதவன் தனம் இல்லாத போது மட் டும் அவளுக்கு முத்தம் கொடுப்பா ன் ஒரு நாள் தேனுவை தனம் கூப் பிட்டு உன் மனசுல என்ன நெனச்சி ட்டு இருக்க பெரிய மகாராணினு நெனப்போ.
உன் இடம் என்னன்னு தெரிஞ்சிட் டு, நீ இந்த வீட்ல நடந்துக்க உன்ன உன் ஆத்தா லட்சத்துக்கு வித்துட் டா என்கிட்ட தெரியுமில்ல.., நான் என்ன சொல்றேன்னோ அப்படி தான் நீ நடக்கணும்
என் புள்ள முந்தானைல முடிஞ்சு கிட்டு ராஜ வாழ்க்கை வாழ நினை க்காத புரியுதா.., மீறி ஏதாச்சு பண் ணுன, வீட்டை விட்டு துரத்தி விட் டுடுவேன் ஜாக்கிரதை என கோப மாய் சொல்லிவிட்டு சென்றுவிட் டார்.
தேனுவுக்கு அழுகை தாங்க முடிய வில்லை.ஓவென அழுதாள் இதை கோமதி கேட்டு கொண்டு இருந்தா ள்
அவள், பாவம் இந்த பொண்ணு இந்த பொம்பளைகிட்ட மாட்டிகிச் சி என உள்ளே சென்று விட்டாள்
மற்ற, இரண்டு பிள்ளைகளும் ம னைவி, பிள்ளைகளோடு வெளி யே செல்லும்போது அமைதியாக இருப்பவர், இவனை மட்டும் தன் கைக்குள்ளே வைத்துக் கொண்டா ர். ஆடி மாதம் முடிந்தும் இருவரை யும் சேர விடவில்லை தனம்
அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதவ ன் வீட்டில் சிறிது நேரம் இருந்தான் இரு மாதங்கள் மனைவியை தள் ளி இருந்தான்.
ஆதவன் அம்மா எல்லா வேண்டுத லும் முடிஞ்சதா மா ரெண்டு மாசம் ஆச்சு இல்ல அதான் கேட்கிறேன் என்றான் தயக்கமாய்
தனம் சிரித்தவர் சரிடா போ முடிஞ் சிருச்சு என்றார் இதை தேனு கேட்டு மனம் நொந்து அழுதாள். அவள் மனம் வலித்தது அவன் செயலில்
நந்தினி உதயனை பார்த்து என்ன ங்க இதெல்லாமா உங்க தம்பி அம் மா கிட்ட கேட்பாரு விவஸ்த்தையே இல்ல,..ச்சே என்றவள் அவனை அ ழைத்து கொண்டு சென்று விட்டா ள்
ஆதவன் மகிழ்ச்சியுடன் அறைக்கு ள் நுழைந்தான்.அங்கே தேனு அ மைதியாக அமர்ந்திருந்தாள். வந்த வன், யேய்.. தேனு செல்லம் என்றவ ன் அவளோடு அமர்ந்து அவளை கட்டிக்கொண்டான். அவள் கழுத் தில் முத்தமிட்டு இழைந்தவன் உன் ன ரொம்ப தேடினேன் தெரியுமா டி என்றான் தாபத்துடன்
ரொம்ப.., ஏங்கி போயிருக்கேன் டி தேனு, நீ என்ன மிஸ் பண்ணியா.. என்றவன் படுக்கையில் அவளோ டு சாய்ந்து, இரண்டு மாத தேடலை யும் அவளிடம் காண்பிக்க ஆரம்பி த்தான். தேனு எதுவும் சொல்லவில் லை அமைதியாக இருந்தாள்
காலை உள்ளே போனவன் மதியம் தான் வந்தான். மதியம் சாப்பிட்ட பின் அறையில் அவள் மடியில் ஆ தவன் படுத்திருந்தான். தேனு, தய ங்கி என்னங்க.. நான் ஒன்னு கேட் பேன் தப்பா எடுக்க மாட்டீங்களே என்றாள்
ஆதவன், கேளுடி என அவள் கை யில் முத்தமிட்டான்
தேனு அது.. நீங்க… எதுனாலும் உ ங்க அம்மாவை கேட்டு தான் செய் வீங்களா?
ஆதவன்,ஆமா டி சின்ன வயசுல இருந்து அப்படியே பழகிடுச்சு அம் மாக்கு நானா ரொம்ப பிரியம் என க்காக நிறைய பண்ணி இருக்காங் க, என சொல்லியவன் அவங்க எது கேட்டாலும் இல்லைன்னு சொல்ல மாட்டேன்
தேனு அப்போ உங்க அம்மா என்ன வேணாம்னு சொல்லிட்டாங்கனா என்ன பண்ணுவீங்க என்ன கேட் டாள்
அவள், அப்படி கேட்டதும் அவள் முகம் பார்த்தவன் அப்படி எல்லாம் நடக்காது தேனு அது நடக்கும் போ து பார்த்துக்கலாம் என்றவன் இப் ப நல்ல மூட்ல இருக்கேன், வாடி எ ன அவளை இறுக அணைத்துக் கொண்டான்
தேனுவுக்கு, அவன் பேச்சில் அழு கையாய் வந்தது. பேச்சுக்கு கூட, எ னக்கு நீ வேணும் உன்ன விட்டு தர மாட்டேன்னு சொல்லலையே.. என மனம் குமுறினாள்
அதன் பிறகு மூன்று மாதங்களுக் குப் பின், திரும்பவும் கரு நின்று மூன்று நாளில் கலந்து விட்டது தே னுவுக்கு. மன வேதனைப்பட்டாள் ஆனால் தேன் இதை கவனித்தாள் தன் மாமியார் ஒருமுறை கூட தன் னிடம், ஏன் நான் தள்ளி போகல என்று கேட்கவில்லையே என
குழந்தை நின்று கலைந்ததற்கும் அவளிடம் துக்கம் விசாரிக்கவில் லை. அவள் நினைத்துக் கொண் டாள். அவள் அன்று பேசியதை வைத்து அவருக்கு என்னை பிடிக் கவில்லை என அறிந்து கொண்டா ள்
அதன், பிறகு வந்த நாட்களில் அடி க்கடி தனம் இவர்கள் அறையில், ப டுக்க ஆரம்பித்தார். காரணம் கேட் டதற்கு, ஃபேன் ஓடவில்லை என் றார் ஒரு முறை. மறுமுறை தனியா க படுத்தால் கெட்ட கனவு வருகிற து என்றார்
தேனு, தலைக்கு ஊற்றிக் கொள் ளும் போது அந்த நாளில் இருந்து பத்து நாட்களுக்கு, மேல் ஏதாவது காரணம் சொல்லி பிரித்து படுக்க வைத்து விடுவார், இல்லையேல் இ வர் அவர்கள் அறைக்கு வெளியே பாயை, போட்டு கதவை திறந்து வைக்க சொல்லுவார். கேட்டால் சாமி மீது பழியை போடுவார்.
ஆதவனும் ஏதும் கேட்டுக்கொள்ள மாட்டான் தாயின் மீறி எதுவும் செ ய்யவும் மாட்டான்
அன்று தேனுவின் ஞாபகம் பாடா ய்படுத்தவே சீக்கிரம் வீடு வந்தான் ஆதவன். ஆசையோடு வந்தவன் அறையில் நுழைந்து குளித்து விட் டு வெளியே வந்தான். வந்தவன் சமையலறை எட்டிப் பார்த்தான்.
தேனு, இரவு உணவை சமைத்துக் கொண்டு இருந்தாள். யாரும் இல் லை, என்றதும் மெதுவாக பூனை போல் நடந்து சென்று பின்னால் அவளை அணைத்து கொண்டா ன்
கத்த போனவள், தன்னவன் ஸ்ப ரிசம்பட்டு, என்னங்க.. என்ன இது விடுங்க யாராவது வரப்போறாங்க நீங்க போங்க என்ன சிணுங்கினா ள். ஆதவன் அவள் வெற்றிடையி ல், தன் முரட்டு கரம் கொண்டு அழு த்திப் பிடித்தவன், அவன் அவள் கழுத்தில் முத்தமிட்டு கூசினான். அதில் சிலிர்த்தவள் மாமா விடுங்க கூச்சமா இருக்கு என்றாள்
அவளை அப்படியே திருப்பியவ ன், தன் இதழோடு அவள் இதழை பொருத்திக் கொண்டான். நீண்ட இதழ் முத்தம், மூச்சுக்கு ஏங்கவே இ ருவரும் பிரிந்தனர். சிறிது நேரம் கழித்து ஆதவன் சமையலறையில் இருந்து உதட்டை துடைத்தபடி பிட ரியை, வருடிய படி வெளியே வந் தான்
அவன் பின்னாலையே உதடு வீங் கி சிறு இரத்த கசியுடன் தேனுவும் வந்தாள் வெட்கத்துடன்
அதைக் கண்ட தனத்திற்கு கொதித் தது. நான் அவ்வளவு சொல்லியும் என் பிள்ளைய முந்தானை ல முடி க்க முடியலம்னு பாக்குறியாடி உன க்கு இருக்குடி, இப்படியே…, விட்டா என் புள்ள என்ன விட்டு, போயிடு வான் என வஞ்சத்துடன் யோசித்த வர் வெளியே சாதாரணமாக முகத் தை வைத்துக் கொண்டார்
மறுநாள், காலை உணவு பரிமாறு ம் போது தனம் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டவர், ஆதவா அம்மாவா கை விட்டிட மாட்டியே.., மத்த ரெண்டு பிள்ளைங்க தான் என்ன கண்டுக்கவே மாட்டாங்க. பொண்டாட்டி புள்ளைங்கன்னு அவங்க தனியாவே இருக்கானுங்க
நீயாவது,என்ன பாத்துப்பியாப்பா என்றார்,சோகமாய் முகத்தை வை த்துக் கொண்டு
ஆதவன் ஏம்மா இப்படி சொல்றீங் க, அது எப்படி உங்கள விட்டுடுவே ன்.
தனம்,இல்லப்பா வெளியே எல்லா ரும், பாரு தனம் இன்னும் கொஞ்ச நாள்ல உன் ஆசை புள்ளயும் உன் ன விட்டுட்டு, பொண்டாட்டி முந்தா னைய பிடிச்சுட்டு போயிடுவான்.. நீ நடு தெருவில் தான் நிக்கணும், அப்படின்னு.., கேலி பண்றாங்கப் பா.. என்னை. என வராத கண்ணீ ரை வர வைத்து, துடைத்து கொ ண்டார்
ஆதவன், அம்மா.. என்ன இது பேச் சு இது. கண்ண, தொடைங்க யார் என்ன சொன்னா என்ன. எனக்கு நீங்க தான் முக்கியம் ஏன் பொண் டாட்டியை விட எனக்கு நீங்க தான் முக்கியம்
நீங்களா அவளான்னு வந்தா என க்கு நீங்கதான், முக்கியம்னு சொல் லுவேன். அதனால.. கண்ண கசக் காம சாப்பாட்டை வைங்க என்றா ன். அவன் அப்படி சொன்னதும் அ ங்கு நின்று கொண்டிருந்த தேனை பார்த்து நக்கலாக தனம் சிரித்தார். தேனு உள்ளே சென்று விட்டாள். ம ன வேதனை உடன், அழுது கொ ண்டே…
இப்படியே, ஒரு வருடம் ஓடி இருந் தது. அன்று தன் அன்னைக்கும் தேனுக்கும் புடவை எடுத்து வந்தி ருந்தான் ஆதவன்
பொங்கலுக்கு, ஒரு வாரம் தான் இருந்தது. அன்று நிறைய கூட்டம் கடையில் குறிப்பிட்ட மளிகைபொ ருள் முக்கியமான ஒன்று இரண்டு நாள் ஆகியும் வரவில்லை. அந்த சூட்டில், எல்லாரிடமும் காய்ந்து கொண்டிருந்தான் ஆதவன். தேனு விடம் கூட சரியாக பேசவில்லை லேட்டாக தான் வீடு வந்தான்.
தொடரும்…
கமெண்ட்ஸ் ப்ளீஸ்
Abortions ku thanam than karanama erukuma?