ATM Tamil Romantic Novels

என் உயிரே நீ விலகாதே 15

அத்தியாயம் 15 

 மறுநாள் காலை அவள் அத்தை தான்  வந்து எழுப்பினார் ஆராத னாவை, அவர் கதவை தட்டியதும் ஆராதனா எழுந்தவள் புடவை கட் ட தெரியாமல் போர்த்திக் கொண்டு வந்து கதவைத் திறந்தாள் 

 அவளைப் பார்த்ததும் அவளின் அத்தை, வாயில் கை வைத்து சிரி த்தவர், அடி பெண்ணே கதவை தட் டினதும் இப்படியேவா எழுந்து வரு வ என செல்லமாய் கடிந்தவர் 

 ஆனா, இப்படியும் அழகா தாண்டி இருக்க ஆரா என நெட்டி முறித்தா ர் 

 ஆரா அவர் அப்படி சொன்னதும் அழகாக சிரித்தவள் கன்ன சிவப் புடன் குனிந்து கொண்டாள் 

 அதில், சிரித்தவர் வாடி அப்புறம்  வெட்கப்பட்டுக்கலாம் பூஜை இருக் கு என்றவர்,அவளை அழைத்துக் கொண்டு வேறு அறைக்கு சென் றார் 

 அவளும் தலையாட்டி அவர் பின் னாடியே சென்றாள். 

காலையிலேயே தான் இருக்கும் வீ ட்டிற்கு சென்று விட்டாள் குழந் தையுடன் தேன்மதுரா 

 அவள் பிடிவாதத்தை அறிந்தவன் அவள் போக்கிலேயே விட்டுவிட் டான். ரவிச்சந்திரன் 

 ஆரா வந்து  தேன் மதுராவை கேட் டதற்கு ரவி  அவள் அங்கே போய் விட்டதே கூறினான். ஆரா ஏங்க இங்க இருக்கலாம் இல்ல அவகிட்ட நிறைய பேசணும்னு நினைச்சேன் என்றாள் 

ரவி, ம்ம்.., புரியுதுடி ஆனா நிறைய பட்டுடா பாவம் சின்ன பொண்ணு வாழ வேண்டியவ, வாழாம இருக் கா அதான்,  ஒரு சில விஷயங்கள பிடிவாதமா இருக்காடி,  சீக்கிரம் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கணும் என்றான் 

 ஆரா, என்னங்க இப்படி சொல்றீங் க, அப்ப அவ வீட்டுக்காரர் கூட சே ர்த்து வைக்க மாட்டீங்களா? தேனு இதுக்கு ஒத்துக்குவாளா என கேட் டாள் 

 ரவி, ஒத்துக்க மாட்டா தான் ஆரா, பிள்ளையகாட்டி தான் வாழ்க்கை சீர்படுத்தனும் 

 ஆரா, ரவி அப்படின்னா அவ புரு ஷன்  வரமாட்டார்னு சொல்றீங்க ளா? அவ கூட வாழ மாட்டான்னு சொல்றீங்களா? என கேட்டாள் 

என்ன கேட்டா நான் அப்படித்தா ன் சொல்லுவேன், ஆமா அவன் வ ரமாட்டான் தான் நினைக்கிறேன் இத்தனை வருஷமா மாறாதவன் இனிமேல மாறுவான்னு நினைக் கிறியா, இது வரைக்கும் தேடியும் வரல அவன் அம்மா புள்ளடி.

 உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஆரு, நம்ம கல்யாணத்துக்கு அவ ன் வந்திருந்தான்.ஆரா அப்படியே ரவி, நான் பார்க்கவே இல்லையே அவர 

ரவி ஆமா ஆரு நான் அவன பார்த் தேன். அவன் அம்மாவ கல்யாணத் துல விட்டுட்டு போக வந்தான் போ ல, எப்படியும் தேனுவ கண்டிப்பா பார்த்து இருப்பான் அவன் மனசுல தேன் இருந்திருந்தா அவளை பார் த்ததும் சந்தோஷப்பட்டு இருக்கனு ம் ல, ஆனா…  அப்படியே மண்ணு மாதிரி நிக்கிறான் டி 

 ஆரா அப்படி யா அவரு இத்தனை வருஷத்துல மாறலன்னு சொல்றீ ங்களா, அவங்க அம்மா இருந்ததா ல,,  கூட அமைதியா இருந்திருக்க லாம் இல்லையா என கேட்டாள் 

 அம்மா நின்னா என்னடி பொண்  டாட்டி வேணும்னா வந்து பேச வே ண்டியதுதானே? அம்மா முக்கியம் தான் ஆனா பொண்டாட்டியும் முக் கியம் தானே அந்த அம்மாவை பா ர்க்க பார்க்க எனக்கு செம கோவம் வந்துச்சு 

 ஆரா எல்லாம் என் சித்திய சொல் லணும் என்றான் கைகளை தொ டையில் குத்தி 

 உடனே ஆரா அமைதியா இருங்க ரவி விடுங்க அவர் அப்படியே அவ ளை தேடி வரலைன்னா நாமலே ந ல்ல வாழ்க்கை அமைச்சிக் கொடு ப்போம் நம்ம தேனுவுக்கு, என அவ ன் கையை பிடித்துக் கொண்டாள் 

 ரவி இல்ல ஆரு தேனு இதுக்கு ஒத் துக்குவாலானு தெரியல ஆனா க ண்டிப்பா அவளுக்கு நல்லது நட ந்தா முதல்ல சந்தோஷப்படுற ஆள் நானா தான் இருப்பேன் ஏன்னா அவளை எனக்கு ரொம்ப பிடிக்கு ம் 

 அவ,  ரொம்ப குட்டி பொண்ணா இருக்கறதிலிருந்தே என் வீட்ல தா ன் அதிகமா இருப்பா. அண்ணா அண்ணா னு என்னை சுத்தி வரு வா 

 அரசி பெரிசா இங்க என் கூட வந் து ஒட்ட மாட்டா. அவ அம்மா கூட வே தான் இருப்பா, அது இல்லாம அவளுக்கு,  அடிக்கடி உடம்பு சரி இல்லாம போகும், அதனால சித்தி அவளை இங்க அனுப்ப மாட்டாங் க 

 தேனு நல்லா துரு துருனு இருப்பா நல்லா படிப்பா பசிக்குதுன்னு கூட வாயைத் திறந்து கேட்க மாட்டா ஆ ரு, அப்படியே தூங்கிடுவா நான் தான் எழுப்பி அவளுக்கு ஊட்டி விடுவேன் 

ஆனா சித்தப்பாக்கு தேன் மேல தா ன் பாசம் அவர் இருந்த வரைக்கும் அவளுக்கு ஒன்னும் தெரியல அவ ளை நல்லா பார்த்துப் பாரு. அவர் இறந்ததும்தான் இவ தனியாகிட்டா சித்திக்கு  பெரியவளை கவனிக்க வே நேரம் சரியா இருந்துச்சு 

 தேனு, வந்து என்கிட்ட அழுவா. அண்ணா அம்மா காலேஜ் பீஸ் கட் ட காசு கேட்டா அடிக்குதுன்னு சொ ல்லி,  வருத்தமா இருக்கும்.. அப்ப நான் டியூஷன்,  எடுத்துட்டு இருந் தேன் அதுல இருந்து அவளுக்கு காசு எடுத்து கொடுப்பேன்

 அவ பெரியவ ஆனதும், ஹாஸ்ட ல்ல இருந்து  வீட்டுக்கு வரும்போது எல்லாம் இங்க ஓடி வந்துருவா கே ட்டா அக்காவ பொண்ணு பாக்க வந்தாங்க அண்ணா, அப்ப அவங் க, ஏதோ சொன்னாங்க அம்மா உட னே என்ன அடிக்க ஓடி வந்தாங்க  நான் பயந்துட்டு ஓடி வந்துட்டேன் னு அழுவா 

 அம்மா கிட்ட கேட்ட அப்ப பெரிய  வள பொண்ணு பாக்க வர்றவங்க எல்லாம்,  இவளை  கேக்குறாங்க  ளான்டா அதனாலதான் சரசு கோ  பப்பட்டு அடிச்சி இருக்கா,  அதான் இவ இங்க ஓடி வந்துட்டா அப்படி ன்னு அம்மா என்கிட்ட ஒரு தடவ சொன்னாங்கடி 

ஒரு நாள் ஏதோ ஒரு பையன் இவ ளோட வீடு வரைக்கும் கூடவே தே டி வந்துட்டான் போல, அதுக்கு சித் தி, அவன கேட்காம,  இவ கால்ல சூ டு வச்சுட்டாங்க, அப்ப தேன் அழு துகிட்டே,  என்கிட்ட வந்து அண் ணா எனக்கு வலி தாங்க முடியல நான் தப்பு பண்ணல அண்ணா அம்மா அடிச்சிட்டே இருக்கு 

 அம்மாக்கு என்ன பிடிக்கல போல அண்ணா நான் செத்து போயிட்டா அம்மாவால அப்ப என்ன அடிக்க முடியாதுல எனக்கும் வலிக்காதுல னு,அழுதாடி தேனு. எனக்கு நெஞ் செல்லாம் பதறுடிச்சி ஆரு..,  என க ண்கலங்கினான் 

 ஆரு, விடுங்க ரவி என அவன் கண்களை துடைத்து விட்டாள்

 இல்லடி அவ பாவம் அப்புறம் நா ன் போய் சித்தியை திட்டிட்டு வந் தேன், அவளை அடிக்காதீங்கன்னு கொஞ்சநாள் அமைதியா இருந்தா ங்க, அப்புறம் நான் எக்ஸாம் எழுதி பேங்க்ல எனக்கு வேலை கிடைச்சி ருச்சு,அதுவும் சென்னையில.

நான் இங்க இல்லாத நேரமா பார்த்  து அவளை மிரட்டி 2 1/2 லட்சம் அ ந்த அம்மா கிட்ட வாங்கி  ஆதவன் வீட்டில இவளை கட்டி கொடுத்து இருக்காங்க. அந்த காசுல தான் அர சிக்கு வைத்தியம் பார்த்து இருக்கா ங்க சித்தி 

 அவ நல்லா வாழ்ந்து இருந்தா கூட நான் சந்தோஷப்பட்டு இருப்பேன் ஆரு… ஆனால் ஒரே வருஷத்துல வாழாம வெளிய  வந்துட்டா அவ அங்க பட்ட கஷ்டத்தை என்கிட்ட சொல்லும் போது ஒரு அண்ணனா நான் ரொம்ப துடிச்சு போயிட்டேன் ஆரு, ரொம்ப கஷ்டப்பட்டுட்டா

இனிமேலாவது அவ நல்லா இருக் கணும், அதுக்கு நான் என்னால மு டிஞ்சது செய்வேன் நீயும் என் கூ ட இருப்ப ல ஆரு என்றான், அவள் கைகளை பிடித்துக் கொண்டு 

 ஆரா ரவி என்ன இது கண்டிப்பா நான் உங்க கூட இருப்பேன் என அவனை கட்டிக் கொண்டாள் 

தேனு,  மாலை நேரங்களில் பிள் ளைகளுக்கு டியூஷன் எடுக்க ஆர  ம்பித்தாள். ரவி ஏன் என கேட்டதற் கு, பொழுது போகலணா கொடை க்கானலில் டியூஷன் தான் எடுப் பேன் வீட்டுக்கு வந்துட்டு அதான். எனக்கு நேரம் போகல  என்று விட்டாள் 

 அதன் பிறகு ரவி அவளை எதுவு ம் கேட்கவில்லை அன்று குழந்தை க்கு தடுப்பூசி போடலாம் என ஹா ஸ்பிடல் வந்திருந்தாள் தேன் மது ரா 

 தனியாக தான் வந்திருந்தாள். டா க்டரை பார்க்க,  அனுமதி வாங்கி காத்துக் கொண்டிருந்தாள். அதே மருத்துவமனையில்,திரு தன் ம னைவியை கூட்டிக்கொண்டு  வந் திருந்தான்

 கனகாவிற்கு நாட்கள் தள்ளி போ யிருப்பதால் செக்கப் பண்ண வந் திருந்தான் இவள் சேரில் குழந்தை  யோடு அமர்ந்திருப்பதை முதலில் கனகா தான் பார்த்தாலள். கனகா கிருவை பார்த்து என்னங்க அங்க பாருங்களேன்..,  தேனு தனியா உக்  காந்துட்டு இருக்கா…,  கைல குழந் தையோட என்றாள் 

 அவள்,  சொன்னவுடன் திரு அவ ள் காட்டிய திசையை பார்த்தான்.  அங்கு சொன்னது போலவே தேனு சேரில், கையில் பிள்ளையோடு அ மைதியாக அமர்ந்திருந்தாள்

 

தொடரும் 

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 

3 thoughts on “என் உயிரே நீ விலகாதே 15”

Leave a Reply to Maha Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top