ATM Tamil Romantic Novels

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 11

சென்னையில் கண்ணன் தங்குவதற்காக ஃப்ளாட் ஒன்றை வாங்கிக்கொடுத்திருந்தான் வல்லவராயன். சென்னையில் ராயனுக்கு ஏதேனும் தொழில் ரீதியான வேலை இருக்கும் பட்சத்தில் அவனும் போய் தங்கிவிட்டு வருவான். கோமளம் ஒரு முறை சென்னைக்குச் சென்றவர் இந்த இடைஞ்சலான ஊருல என்னால இருக்க முடியாது குடோன் மாதிரி ரூமுக்குள்ள என்னால ஒரு நிமிசம் மூச்சு விட முடியலப்பா சாமி என்று அடுத்த நாளே சொந்த கிராமத்துக்கு ஓடி வந்துவிட்டார்.

கண்ணன் ஒரளவு சமைக்க  கற்றுக்கொண்டான். சமையலுக்கு பிரச்சனை இல்லாமல் இருந்தது. கண்ணன் ஐடி கம்பெனியில் புராஜெக்ட் மேனேஜர். தீபா அவனது டீமில் அவனுக்கு அசிஸ்டென்டாக இருக்கிறாள். தீபாவுடன் நட்பாக பழகி காதல் எப்போது மலர்ந்தது என்றெல்லாம் நினைவு இல்லை இருவருக்கும்.

தீபாவின் தந்தை இரும்பு வியாபாரம் பணபலம் உள்ளவர்தான். சென்னையில் பல இடங்களில் இவர்களது ஸ்டீல் கம்பெனி ஸ்தாபனமாகியிருக்கிறது. ராயன் வீட்டு சொத்து மதிப்பிற்கு இல்லாவிட்டாலும் அவனது அந்தஸ்த்துக்கு தகுதியானவர்கள்தான் பரமசிவம் குடும்பமும்.

தீபா கண்ணனை விரும்புகிறேன் என்று தந்தையிடம் கூறியதும் கண்ணனின் பின்புலம் என்னவென்று தெரிந்த பிறகு மகளது காதலுக்கு தடை விதிக்கவில்லை பரமசிவம். தீபாவின் தாய் மங்களம் தன் அண்ணன் மகன் சஞ்சய்க்கு தீபாவை கல்யாணம் பண்ணிக்கொடுக்க முடியவில்லையே என்று கவலை அவருக்கு.

வீக் எண்ட் என்றால் கண்ணனின் ஃபிளாட்டிற்கு வந்து விடுவாள் தீபா. அன்று முழுவதும் இருவரும் லேப்டாப்பில் படம் பார்ப்பது, மாலை பீச்சுக்கு போவது என்று ஜாலியாக பொழுதை போக்குவார்கள். 

கண்ணன் தங்களது ஊரிலிருந்து சென்னைக்கு போனதும் தீபாவுக்கு போன் போட்டு விட்டான். 

தீபாவோ “உன்னை பார்க்கத்தான் வந்துட்டே இருக்கேன்” என்று வாய்ஸ் மெசேஜ் போட்டு விட்டு அரை மணிநேரத்தில் கண்ணனின் ஃப்ளாட்டிற்குள் சென்றதும் இருவரும் காற்று புகா வண்ணம் கட்டி அணைத்துக்கொண்டனர். 

தீபாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்தவன் “தீபு ஒரு குட் நியூஸ் சொல்லப்போறேன்” என்று கண்ணைச் சிமிட்டினான் கண்ணன்.

“உங்க அம்மா நம்ம மேரேஜக்கு ஓ.கே சொல்லிட்டாங்களா!” என்று கண்களை அகல விரித்தாள் சந்தோசத்துடன்.

“ஆமாடி செல்லக்குட்டி எங்க வீட்ல அடுத்த வாரம் உன்னை பொண்ணு பார்க்க வரோம்டி” என்று அவளது இதழில் முத்தமிட்டு விலகினான்.

“என்னடா நிஜமா சொல்லுறியா உன் அம்மா நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்களா?” என்றாள் அதிர்ச்சியுடன். 

“அம்மாகிட்ட நம்ம லவ்வை பத்தி சொன்னதும் தாம் தூம்னு குதிச்சாங்க ஆனா ராயன் அண்ணா அம்மாகிட்ட பொண்ணு குடும்பத்தை பத்தி விசாரிச்சிட்டேன்னு சொன்னதும் அம்மாவால அண்ணன் பேச்சுக்கு மறுபேச்சு பேச முடியலை… இருந்தாலும் பொண்ணை பார்த்துட்டு தான் சொல்லுவேன்னு சொல்லிட்டாங்க. அதான் அடுத்த வாரம் உன்னை முறைப்படி பொண்ணு பார்க்க என் குடும்பத்தோட உன் வீட்டுக்கு வரோம். உன் அப்பா அம்மாகிட்ட சொல்லிடு” என்றான். தங்களது காதல் பயணம் கல்யாணம் வரை வந்துவிட்டதென உற்சாகத்தில் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்.

“அடேய் விடுடா என்னோட எலும்பு உடைஞ்சிடப்போகுது” என்று அவனிடமிருந்து விலகியவள் “நான் இப்பவே வீட்டுக்கு கிளம்புறேன் அப்பாகிட்ட நம்ம கல்யாணத்தை பத்தி பேச கண்ணன் வீடு வரப்போறாங்கனு சொல்லணும் பாய்” என்று சோபாவில் போட்ட ஹேன்ட் பேக்கை எடுத்து தோளில் மாட்டினாள்.

“ம்ம் ஏய் இன்னிக்கு தான் ஊர்லயிருந்து வந்துருக்கேன் கொஞ்ச நேரம் இருந்துட்டு  போடி” என்றவனோ அவளை அணைப்பிலேயே வைத்துக்கொண்டான் கண்ணன் காதல் பெட்ரூம் வரை போகவில்லையென்றாலும் முத்தம் தாண்டி அவர்கள் காதல் எல்லை மீறாமல் சென்றுக் கொண்டிருந்தது.

கண்ணனின் கைகள் தீபாவின் மேனியில் அத்து மீறியதும் “டேய் கண்ணா சும்மா இரு எல்லாம் கல்யாணத்துக்கப்புறம்தான்” என்று அவனது கையை தட்டிவிட்டதும் “கல்யாணத்துக்கு முன்னே ஒரு ரிகர்சல் பார்த்துடலாமா?” என்று அவளது கழுத்தில் வளைவில் முகம் புதைத்தான்.

அவனது உச்சி முடியை பிடித்து தள்ளிவிட்டு எழுந்து நின்று தன் டாப்பை சரிசெய்து “உன்னோட ஒழுக்கத்தை பார்த்துதான் உன்னை லவ் பண்ணியிருக்கேன்டா மடையா பெரியவங்க கல்யாணம் பேசி முடிவு பண்ணி என் கழுத்துல தாலி ஏறியதும் என்னை மொத்தமா உனக்கு தருவேன்” என்றாள் கண்டிப்பு வார்த்தையுடன்.

கண்ணனோ அவளின் உதாசீனத்தை கண்டு முகத்தை தூக்கி வைத்து நின்றதும் அவனை பின்புறம் இருந்து அணைத்துக்கொண்டு “கண்ணா உங்க குடும்பம் பாரம்பரியமானதும் உங்க ஊர் கிராமத்தில இருக்கறதுனாலயும்தான் உன்னை லவ் பண்ணவே ஆரம்பிச்சேன்டா எப்போ உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த சிட்டி வாழ்க்கையை விட்டு கிராமத்துக்கு போவோம்னு காத்திருக்கேன். உன் கையை பிடிச்சிக்கிட்டு வயல்காட்டுல சுத்தணும் வேலைக்காரவங்களை அதிகாரம் பண்ணி வேலை வாங்கணும் கிராமத்துலதான் நம்ம லைஃப்பை ஆரம்பிக்கணும்னு ஆசையா இருக்கேன்டா கண்ணா அதுக்குள்ள உனக்கு பொசுக்குனு கோபம் வந்துடும்” அவன் முன்னே சென்று அவனது கன்னத்தை பிடித்து “ஐ லவ் யுடா கண்ணா” என்று அவனது இதழில் முத்தம் கொடுத்ததும் அவனது கோபம் எல்லாம் பறந்துவிட்டது. இருவரின் முத்தமும் முடிவுக்கு வர நெடுநேரம் ஆனது. 

தீபா மூச்சுக்கு ஏங்கவும் அவளை விட்டு பிரிந்து “நீயும் நான் கேட்டவுடன் உன்னை கொடுக்காம கட்டுப்பாடா இருக்க பாரு நீதான் எங்க வீட்டுக்கு ஏத்த மருமக” என்று அவளது கன்னத்தில் கிள்ளினான்.

“நீ விட்டா என்னை கொஞ்சிக்கிட்டே இருப்ப நான் கிளம்புறேன்டா பை” என்று அங்கிருந்து கிளம்பியவள் தந்தையின் முன்னே நின்றவள் “டாடி கண்ணன் வீட்டு பெரியவங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்களாம் நெக்ஸ்ட் வீக் பொண்ணு பார்க்க வரேன்னு சொல்லியிருக்காங்க” என்றவள் கண்களில் ஆனந்தம் கூத்தாடியது.

“நீ அதிர்ஷ்டக்காரிடா தீபா வல்லவராயன் வீட்டுக்கு நீ மருமகளா போறது எனக்கு பெருமைதான் அந்த வீட்டு சொத்துமதிப்பு நம்ம வீட்டை விட பல மடங்கு நீ கண்ணனை கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த சொத்துல பாதி உனக்கு வந்துடும். வல்லவராயன் குடும்பத்துல சம்பந்தம் பண்ண இருக்கேன்னு என் பிரண்ட்ஸ் கிட்ட பெருமையா சொல்லிப்பேன்டா தங்கம். ஆமா கண்ணனுக்கு ஒரு தங்கச்சி இருக்கறதா சொன்னில்ல அந்த பொண்ணு ஏதோ டிகிரி முடிக்கபோறானு சொல்லிட்டிருந்தல்லமா” என்றவுடன்

“ஆமாப்பா ஆர்ட்ஸ் காலேஜ் பி.ஏ தமிழ் ஃபைனல் இயர்னு கண்ணன் சொல்லியிருக்காரு” என்றாள் தந்தையின் எண்ணம் புரியாமல்.

“உன் தம்பி பிரனேஷ்க்கு கண்ணன் தங்கச்சியை பொண்ணு கேட்போமா? சொத்து எங்கயும் போகாது பாரு” என்றார் பிஸ்னஸ்மேனாக.

“சூப்பா டாடி உங்க ப்ளான் செமதான் போங்க ஆனா கண்ணாவோட அம்மா அவங்க பொண்ணை நம்ம வீட்டுக்கு மருமகளா அனுப்ப சம்மதிப்பாங்களானு தெரியலையே” என்றாள் சந்தேகத்துடன் இதழ் பிதுக்கி.

“உன் தம்பி பிரேன்ஷ் நம்ம கம்பெனியை பார்த்துக்குறான். அவனை யாருக்கும் பிடிக்காம போகாது கண்டிப்பா மாப்பிள்ளையோட அம்மாகிட்ட நான் பேசுற விதத்துல பேசுறேன்” என்றார் கோமளத்தை பற்றி தெரியாமல் பரமசிவம்.

பால்பண்ணையை சுற்றி பார்த்து விட்டு “உங்க புராடக்ட்ஸ் எல்லாம் எங்களுக்கு பிடிச்சிருக்கு உங்களோட நாங்க டை அப் வச்சிக்க சம்மதம்” என்று அவர்கள் ஆங்கிலத்தில் பேசவும் 

ராயனும் சில கண்டிசன்களுடன் அச்சிட்ட பாண்ட் பேப்பரை அவர்களிடம் கொடுத்து “இந்த கண்டிசன்களுக்கு உங்களுக்கு உடன்பாடு என்றால் நாம பிஸ்னஸ் பண்ணிக்கலாம்” என்றான் புன்னகையுடன்.

அவர்களோ ராயன் கொடுத்த பாண்ட் பேப்பரில் கையெழுத்திட்டு ராயனுடன் கரம் குலுங்கிக்கொண்டனர். மதிய விருந்து முடித்து மாலை வரை அவர்களுடன் தங்களது பிஸ்னஸை பற்றி பேசிக்கொண்டிருந்தான் ராயன். 

வல்லவராயன் உங்களை எங்களுக்கு பிஸ்னஸ் மேனாக மட்டுமல்ல தனிப்பட்ட முறையில் பழக்கவழக்கத்திற்கு நல்ல மனிதனாக உங்களை பார்க்கிறோமென்று வல்லவராயனை அணைத்து விடுவித்துச் சென்றனர் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர்கள்.

அவர்கள் சென்ற பிறகு தன்னுடையை வேலைகளை முடித்து வர இன்றும் பத்து மணியாகிவிட்டது ராயனுக்கு. பரீட்சை எழுதி முடித்த களைப்பில் உறங்கியிருந்தாள் முல்லை. அவனது அறைக்குள் நுழைந்தவன் மீன்குஞ்சு போல இதழ் பிளந்து உறங்கும் தன் மனைவியை கண்ணெடுக்காமல் பார்த்தபடியே சட்டை பட்டனை கழட்டிக்கொண்டிருந்தான். அவள் புரண்டு படுக்க சட்டென்று துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்துவிட்டான்.

அவன் குளித்து வந்தபோதும் அவள் உறக்கம் களையவில்லை தூங்கட்டும் என்று சாப்பிடச் சென்றவனுக்கு தையல்நாயகி அவனுக்கு பிடித்த பனியாரத்தை தட்டில் பரிமாறவும் “இன்னிக்கு உங்க மருமகளுக்கு நேரமே சாப்பாடு கொடுத்துட்டீங்கல்ல” என்றான் சாப்பிட்டபடியே.

“எட்டு மணிக்கெல்லாம் பனியாரம் சுட்டு கொடுத்துட்டேன் தம்பி” என்றார் தட்டில் சட்னியை ஊற்றியடியே.

சாப்பிட்டு எழுந்தவன் “பெரியம்மா சாப்பிட்டு தூங்கப் போயிட்டாங்களா?” என கோமளத்தின் அறையில் லைட் எரிகிறதாவென்று பார்த்தான்.

“அக்காவுக்கு இன்னிக்கு முட்டி வலி அதிகமா இருக்குனு நேரமே படுத்துட்டாங்க தம்பி எதாவது பேசணுமா?” என்றார் அவனுக்கு கை துடைக்க துண்டை எடுத்துக்கொடுத்தார்.

“சாய்ந்தரமா கண்ணா போன் பண்ணியிருந்தானுங்கம்மா பொண்ணு வீட்டுல அடுத்த வாரம் பொண்ணு பார்க்க வரோம்னு பேசிட்டானாம் அடுத்த வாரத்துல நம்மளயே நல்ல நாள் பார்த்து வரச்சொல்லிட்டாங்கனு சொன்னான் பெரியம்மாகிட்ட ஒரு வார்த்தை பேசிடலாம்னு பார்த்தேன் சரி காலையில பேசிக்கலாம் மா” என்று எழுந்தவனிடம்.

“ராயா மருமகளுக்கு கொஞ்சம் நகை வாங்கணும் பட்டுப் புடவைகள் எடுக்கணும் உனக்கு தெரியும்தான் இருந்தாலும் உனக்கு இருக்க வேலை பளுவுல இதை பத்தியெல்லாம் யோசித்திருக்கமாட்டனு ஞாபகப்படுத்தினேன்பா” என்றார் சிறு தயக்கத்துடன்.

“கொடிக்கு நகை செய்ய சொல்லியிருக்கேன்மா அவளுக்கு பீரியட்ஸ் முடியட்டும் நானே அவளை பட்டுப்புடவை கடைக்கு அழைச்சிட்டு போய் புடவை எடுத்து தந்துடறேன் உங்க மகன் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருந்தாலும் பொண்டாட்டியை கவனிக்காம இருக்கமாட்டான்மா” என்றான் லேசான இதழ் புன்னகையுடன்.

“நீ மறந்துட்டியோனுதான் சொன்னேன் தம்பி” என்றார் பெரும்மூச்சுவிட்டு.

“நேரமாச்சு தூங்குங்க அப்பாவையும் மாமாவையும் காலையில எங்கயும் கிளம்ப வேண்டாம்னு சொல்லுங்க கண்ணன் கல்யாணம் விசயம் பேசும்போது வீட்டு பெரியவங்க இருக்கணும்ல” என்றவாறே மாடிப்படியேறினான்.

“நான் சொல்லிடறேன் தம்பி” என்றார் தையல்நாயகி.

அறைக்குள் வந்து கதவுக்கு லாக் போடவும் சட்டென கண்திறந்த முல்லையோ எழுந்து உட்கார்ந்தவள் “எ.எப்போ வந்தீங்க சின்னய்யா சாப்பிட்டீங்களா?” என்று கொட்டாவி விட்டபடியே அவிழ்ந்து கிடந்த கூந்தலை அள்ளி கொண்டை போட்டாள்.

அவனோ அவளது செயலில் மூச்சடைத்துப்போனான் ராயன். 

“நாளையிலிருந்து பத்து நாள் காலேஜ் லீவு” என்றாள் தோளைக்குலுக்கி.

“அப்போ வீட்ல இருந்து என்ன பண்ணப்போற?” என்றபடியே போட்டிருந்த டீசர்ட்டை கழட்டி ஹாங்கரில் மாட்டிவிட்டு அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்ததும் முல்லை தள்ளி உட்கார்ந்தாள்.

ராயனோ அவளது கையை பிடித்து அவள் பக்கத்தில் நெருங்கி அவளது தோளோடு உரசி உட்கார்ந்து அவளது தோளில் கையை போட்டு “உன்னை நாளைக்கு வெளியே அழைச்சிட்டு போகலாம்னு இருக்கேன்” என்றதும்

அவன் கோவிலுக்குதான் அழைத்து போகப்போகிறான் என்று நினைத்து “ஐஞ்சு நாளைக்கு கோவிலுக்கு போக முடியாதுங்க” என்றாள் சோகமாக.

“அப்போ நீ தலைக்கு குளிச்சு முடிச்சதும் வெளியே போகலாம்” என்றவனோ இன்றும் அவளது நெற்றியில் முத்தம் கொடுத்தான்.

“நான் என்ன பாப்பாவா நெத்தியில முத்தம் கொடுக்க” என்று மனதிற்குள் பேசுகிறோம் என்று நினைத்து வாய் திறந்து பேசிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டாள்.

“எ.என்ன சொன்ன இன்னொரு முறை சொல்லு” என்று அவளது கன்னத்தை தாங்கி பிடித்தான்.

“நான் ஏ. ஏதோ சும்மா” என்று அவள் பேச திணறியதும் 

“அப்போ கன்னத்துல முத்தம் கொடுக்குறேன்” என்று அவளது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டதும் அவளது கண்களை மூடிக்கொண்டாள் வெட்கம் கொண்டு.

பட்டாம்பூச்சி ரோஜா செடிமேல் முத்தமிடுமே அதுபோல மெதுமெதுவாய் அவளது படபடக்கும் இமைகுடைகளுக்கு முத்தமிட்டான் ராயன்.

“சி.சின்னய்யா” என்று அவள் மீன்குஞ்சு வாயை திறந்ததும் மெதுவாய் அவளது இதழுக்கு முத்தமிட்டு விலகி விட்டான்.

அவளுக்கோ இதழில் முத்தமிட்டு விலகியதும் மூச்சே நின்று விட்டது. சட்டென்று அவனது மார்பில் சாய்ந்து ஒளிந்துக் கொண்டாள் வெட்கப்பட்டு.

“ஏய் இந்தா கொடி என்னை பாரேன்” என்றான் கொஞ்சலாக.

அவளோ “நா.நான் பார்க்கமாட்டேன் எனக்கு வெட்கமா இருக்கு” என்றாள் சிணுங்கலாக அவளது இதழ்கள் அவனது வெற்று மார்பில் உரசிக்கொண்டிருந்தது.

“சரி இப்படியே உட்கார்ந்தே தூங்கலாமா! உன்னை நெஞ்சுல சாய்ச்சுக்கிட்டே தூங்கறதுக்கு எனக்கு சந்தோசம்தான்” என்று அவளை அணைத்துக்கொண்டு சுவற்றில் சாய்ந்துக் கொண்டான்.

அவளோ அவன் உரமேறிய நெஞ்சில் சாய்ந்திருக்கணும் என்று எத்தனை நாள் ஆசைப் பட்டிருந்தாளோ என்னவோ “விடியும் வரை என்னை நெஞ்சுல தாங்குவீங்களா சின்னய்யா” என்றாள் அவன் அணைப்பிலிருந்தவாறே தலையை மட்டும் நிமிர்ந்து பார்த்து காற்றுக்கும் கேட்காத குரலில்.

“இந்த ஜென்மம் முழுக்க உன்னை என் நெஞ்சுல சுமக்கத்தான் உன் கழுத்துல மூணு முடிச்சு போட்டிருக்கேன் கொடி” என அவளது நெற்றியில் மெதுவாய் இதழ் பதித்து “இன்னிக்கு உனக்கு எனக்கு முத்தம் கொடுக்க தோணலையா?” என்றான் கிசுகிசுப்பு குரலில்.

“அ.அது எனக்கு ஆசைத்தான் ஆனா வெட்க வெட்கமா வருதே” என்றாள் கீச்சுக் குரலில்.

“ஒரு முத்தம் மட்டும் கொடு” என்று அவன் விடலை பையன் போல கன்னத்தை காட்டினான் வல்லவராயன்.

அவளோ “ஒரு முத்தம் தான் தருவேன் மறுபடி கேட்க கூடாது சின்னய்யா” என கண்டிசன் போட்டாள்.

“ம்ம் ஒரு முத்தம் போதும் ஆனா மொத்தமா எனக்கு கொடுக்கும்போது வட்டியோட வாங்கிப்பேன்” என்றான் மந்தகாச புன்னகையுடன்.

“போங்க சின்னய்யா நீங்க ரொம்ப மோசம்” என்று அவனது நெஞ்சில் குத்தினாள் பிஞ்சு விரலால்.

“சும்மா கதை பேசி நேரத்தை வீணாக்காதே கொடி முத்தம் கொடு” என்று கறாராய் நின்றான்.

இதழ் குவித்து அவன் கன்னத்தில் மெதுமெதுவாய் தன் வெல்வெட் இதழை பதிக்க போன நேரம் அவள் இதழோடு இதழை லபக்கென்று கவ்விக் கொண்டான் வல்லவராயன்.

2 thoughts on “கடுவன் சூடிய பிச்சிப்பூ”

Leave a Reply to Vithya. V Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top