ATM Tamil Romantic Novels

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 14

“மச்சான் இது பொதுஇடம் இங்க வந்து” என்று அவள் சிணுங்கவும்

“எனக்கு சொந்தமான இடம்” என்று அவளது இதழில் வழிந்த ஐஸ்கீரிம் தன் இதழுக்குள் போட்டுக்கொண்டான்.

“அச்சோ மச்சான் எச்சி” என்று மூக்கை சுருக்கினாள்.

“உன் எச்சி பட்டதாலதான் இந்த ஐஸ்கீரிம் டேஸ்ட்டா இருக்கு” என்றான் ஒற்றைக்கண்ணைச் சிமிட்டி.

அவளின் சிவந்த முகம் அவனின் குறும்பு பேச்சால் செங்காந்தள் மலராக சிவந்துதான் போனது.

கோமளோ எப்போதும் மதியம் குறட்டை விட்டு தூங்குபவர் இன்றோ தூங்காமல் ஹால் சோபாவில் உட்கார்ந்து வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“எத்தனை பவுனு நகை எடுத்துக்கொடுத்தான்னு தெரியலையே நானும் கடைக்கு போறேன்னு சொன்னேன் இந்த அழகு என்னை போக விடாம தடுத்துட்டா” என்று அழகம்மையை கரித்துக்கொட்டினார் கோமளம்.

அமுதா அவர் தங்கியிருக்கும் தோட்டத்து வீட்டிற்குச் சென்றிருந்தார் அழகம்மையும் தையல்நாயகியும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

“அண்ணி பெரிய அண்ணியை பார்த்தீங்களா ரொம்ப நேரமா வாசலையே பார்த்துக்கிட்டு இருக்காங்க முல்லையோட புடவையையும் நகையையும் பார்க்காம அந்த இடத்தை விட்டு நகரமாட்டாங்க பாருங்க” என்றார் கிண்டலாக.

“சும்மா இரு அழகு அக்கா நம்மளை பார்க்குறாங்க” என்று அழகுவை எச்சரிக்கை செய்தார் தையல்நாயகி.

“பெரிய அண்ணிக்கு முல்லையை கண்டாலே பிடிக்கல அவளை எட்டிக்காயா பார்க்குறாங்க சின்ன பொண்ணு மனசை காயப்படுத்துறோம்னு கூட நினைக்கறது இல்ல அவளை வாய்க்கு வந்தபடி பேசிடறாங்க பாவம் முல்லை” என்றார் வருத்தப்பட்டு.

“என்ன பண்றது அழகு நாம கொஞ்சம் அஜஸ்ட் பண்ணித்தான் போகணும்… கோமளம் அக்காகிட்ட முல்லையை பக்குவமா நடந்துக்க சொல்லியிருக்கேன் குடும்பம் கட்டுப்கோப்பா இருக்கணும்னா விட்டு கொடுத்து போகணும்” என்றார் பெரும்மூச்சு விட்டு தையல்நாயகி.

ராயனின் கார் சத்தம் கேட்டதும் முட்டி வலியெல்லாம் எங்கே போனதோ தெரியவில்லை கோமளத்திற்கு வேகமாக எழுந்து வாசலுக்குச் சென்றார்.

ராயன் காரை விட்டு இறங்கியவன் முல்லைக்கு கார் கதவை திறந்து விட்டான்.

முல்லை சிரித்தபடியே காரை விட்டு இறங்கியதை கண்டு அமிலம் சுரந்தது கோளமத்திற்கு. வேலைக்காரிக்கு வந்த பவுசை பாரு என்று பொருமிக்கொண்டார் கோமளம்.

முல்லைக்கொடி வாசலில் நின்ற கோமளத்தை பார்த்ததும் ‘அச்சோ இந்த குண்டம்மா எதுக்கு திருஷ்டி பூசணிக்காய் போல நிற்குது ஏதாவது என்னை குறை சொல்ல காத்துக்கிட்டு இருக்கும் இல்ல முட்டி வலிக்குது தைலம் தேச்சு விடுனு சொல்லுவாங்க’ என்ற பல எண்ணவோட்டத்தோடு கோமளத்தின் அருகே சென்றதும்

“என்னடி பம்மாத்துக்காரி என் மகனை மயக்கி முந்தானைக்குள்ள போட்டு நகையும் பட்டுப் புடவையுமாய் வாங்கிட்டு வந்துட்ட போல ஒன்னுமில்லாதவளுக்கு பட்டை கட்டதும் பளீர்னு சிரிப்பு வருதோ புருசன் கூட ஒட்டிக்கிட்டு வந்து இறங்குற” என்றார் எகத்தாளமாக.

ராயனோ கோமளம் முல்லையிடம் பேசுவதை கண்டவன் “பெரியம்மா கொடி டயர்டா இருக்கா அவளை வீட்டுக்குள்ள போக விடுங்க குளிச்சிட்டு வந்து புடவையும் நகையையும் காண்பிக்க சொல்லுறேன்” என்றான் ராயன்.

“என்கிட்ட இல்லாத நகையா ராயா… நான் சும்மா காத்தாட வெளியே உட்கார வந்தேன்ப்பா உன் பொண்டாட்டி புடவையையும் நகையையும் பார்க்க காத்திருக்கல” என்றார் முகத்தை தாடையில் வெட்டிக்கொண்டு.

“முல்லை நீ போய் குளிச்சிட்டு ஹாலுக்கு வா” என்றதும்

‘அப்பாடா குண்டம்மாகிட்டயிருந்து தப்பிச்சிட்டேன்’ என்று வேகமாய் வீட்டுக்குள் வந்தவள் சந்தோசத்துடன் மாடிப்படிகளில் ஏறினாள்.

ராயனோ தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ரங்கனை கையசைத்து கூப்பிட்டான்.

“சொல்லுங்க தம்பி” என கையை கட்டி பணிவாக நின்றார்.

“அண்ணே நான் உங்களுக்கு பல முறை சொல்லியிருக்கேன் என் முன்னாடி இப்படி கையை கட்டி நிற்காதீங்கனு” என்றான் சிறு கோபத்துடன் ராயன்.

“தம்பி அது நீங்க எனக்கு சம்பளம் கொடுக்கற முதலாளி அதான்” என்றார் தயங்கிய படியே.

“நீங்க வேலை பார்க்குறீங்க அதுக்கு நான் சம்பளம் கொடுக்குறேன் நீங்க என்னை விட வயசுல பெரியவங்க என்கிட்ட இனிமே கையை கட்டி நிற்காதீங்க… காருக்குள்ள பட்டுப்புடவைகள் இருக்கு வீட்டுக்குள்ள எடுத்துட்டு வாங்க அண்ணா” என்றவனோ நகைகள் இருந்த பையை மட்டும் அவனது கையில் எடுத்துக்கொண்டு கோமளத்தை தாண்டி வீட்டுக்குள் சென்றான்.

ராயனின் கைப்பையிலிருந்த நகைப்பெட்டிகளை பார்த்தவர் நெஞ்சடைத்துப்போனது. நகை கடையில் இருந்த பாதி நகையை இவனே வாங்கிட்டு வந்துட்டானா என்கிட்ட இருக்க நகையை விட அதிகமாக வாங்கிக்கொடுத்துட்டானா ராயன் என்றவருக்கு ரங்கன் தூக்கி வரும் புடவைகளை பார்த்து அவருக்கு மயக்கமே வந்துவிட்டது.

இந்த வீட்டுல எல்லா பொம்பளைகளுக்கும் புடவை எடுத்து வந்துட்டானா இல்லை இந்த அப்பன் பேர் தெரியாத அனாதைக்கு இத்தனை புடவையும் எடுத்துக் கொடுத்து கூட்டிவந்திருக்கானா என்று அவரது வயிறு எரிய ரங்கன் பின்னாலேயே வந்தவர் ராயனை கண்டதும் டீபாய் மேலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீரை குடித்தவர் “வெயில் ரொம்ப அதிகமா இருக்கு அந்த ஏசியை கொஞ்சம் போட்டு விடு” என்று ராயன் பக்கம் உட்கார்ந்தார் பெரும்மூச்சுவிட்டு கோமளம்.

ராயனும் ஏசியை போட்டுவிட்டான்.

தையல்நாயகி அழகம்மை அமுதா மூவரும் வல்லவராயன் பக்கம் வந்து நின்றுக் கொண்டனர்.

முல்லை குளித்து முடித்து சுடிதாருக்கு மாறி ஹாலுக்குள் வந்தவளை “இப்படி வந்து உட்காரு கொடி” என்றான் ராயன்.

“நாயகி பெரிய மாமியார் முன்னால உட்கார கூடாதுனு நீ சொல்லிகொடுத்துடு” என்றார் இறுமாப்பாக.

ராயனோ “கொடியும் இந்த வீட்டோட மூத்த மருமகதானே பெரியம்மா அதுவும் என்பக்கம்தான் அவளை உட்கார சொன்னேன் எந்த காலத்துல இருக்கீங்க நீங்க!” என்று காட்டமாய்தான் பேசினான்.

தையல்நாயகி அழகம்மை அமுதா மூவரும் நின்றிருப்பதை பார்த்த ராயனோ “ஏன் மூணுபேரும் நிற்குறீங்க உட்காருங்க” என்று தனக்கு எதிரே இருந்த சோபாவை காண்பித்தான்.

தையல்நாயகியும் அழகம்மையும் உட்கார்ந்துவிட்டனர் அமுதாவோ “நான் நிற்குறேன் தம்பி” என்றார் கோமளத்தை பார்த்தபடியே

“உட்காருங்க அக்கா” என்றான் அழுத்தமான குரலில்.

தையல்நாயகியோ “உட்காரு அமுதா” என்று அமுதாவின் கையைபிடித்து தன் பக்கம் உட்காரவைத்துக்கொண்டார்.

கோமளமோ “வேலைக்காரவங்க எல்லாம் எனக்கு சரிசமமா உட்கார்ந்தா எனக்கு என்ன மரியாதை” என வாய்க்குள் முணகினார்.

அமுதாவிற்கு கேட்கவில்லையென்றாலும் ராயனுக்கும் முல்லைக்கும் அவர் பேசுவது கேட்டுவிட்டது.

முல்லையின் முகம் வாடிப்போய்விட்டது. ராயனோ முல்லையின் கையை பிடித்து அழுத்தம் கொடுத்தான்.

“அத்தை நதியா எங்க போனா பாப்பாவையும் வரச்சொல்லுங்க” என்று நதியாவின் அறையை பார்த்தான்.

“நதியா தோட்டத்துக்கு போயிருக்காப்பா” என்றார் அழகம்மை.

“சரி அவ வீட்டுக்கு வந்த பிறகு பார்த்துக்கட்டும்” என்றவனோ புடவை இருந்த பெரிய பையை பிரித்ததும் கோமளம் வாயை பிளந்துவிட்டார்.

இப்போது வந்த புது டிசைனில் வந்த காஞ்சிபுரம் பட்டு. போச்சம்பள்ளி பட்டு என புது புது ரகங்களில் ராயன் வாங்கி வந்த புடவைகளை கண்டு வாயடைத்துப்போனார் கோமளம்.

தையல்நாயகியோ “எல்லா புடவைகளும் நம்ம முல்லைக்கு பொருத்தமாக இருக்கும்ல அழகு” என்றவர் ஒரு ஒரு புடவையாக எடுத்து பார்த்தார்.

அழகம்மையோ “ஆமா அண்ணி எல்லா புடவை கலரும் கண்ணுல ஒத்திக்கணும்போல இருக்கு நம்ம ராயன் செலக்சன் எப்பவும் சோடை போகாது” என்றார் கோமளத்தை ஒரு பார்வை பார்த்தவாறே.

“என்னத்த நல்லாயிருக்கு நான் பார்க்காத புடவையா கண்ணன் கல்யாணத்துக்கு காஞ்சிபுரத்துல போய் பட்டு எடுக்க போறேன்” என்றார் சலித்துக்கொண்டு.

ராயனோ “இந்த புடவையெல்லாம் பிரத்யேகமா காஞ்சிபுரத்துல இருந்து வரவச்சது பெரியம்மா” என்றான் நெற்றியை தேய்த்துக்கொண்டு.

“அப்படியா அப்போ உன் பொண்டாட்டிக்கு எடுத்தது போல எனக்கும் பட்டுபுடவைகள் வரவச்சிடு நான் பார்த்து எடுத்துட்டு மீதியை அழகுக்கும் உங்கம்மாவுக்கும் கொடுத்துடறேன் அப்புறம் இத்தனை புடவையும் உன் பொண்டாட்டியா கட்டப்போறா நதியாவுக்கும் கொஞ்ச புடவைகளை எடுத்துக்குறேன்” என்று புடவையை கை வைக்கப்போக “நம்ம நதியாவுக்கு புடவைகள் தனியா கொண்டு வரச் சொல்லியிருக்கேன் பெரியம்மா இந்த புடவைகள் எல்லாம் கொடிக்கு மட்டும்தான்” என்றவனோ புடவைகளை பாக்ஸில் போட்டு வைத்து வைத்துவிட்டு நகைபெட்டிகளை எடுத்து வெளியே அடுக்கி வைத்தான்.

அமுதாவிற்கோ ஆனந்தகண்ணீர் கண்ணில் வழிந்தது முல்லையை பார்த்தவர் “நல்லாயிருடி” என உதடசைத்தார்.

வைரம் முத்து என நகைபெட்டிகளை பார்த்த கோமளத்திற்கு அங்கே உட்கார முடியவில்லை. இந்த நகைபெட்டிகளை தான் எடுத்து சென்றுவிடலாமா என்று கூட அல்ப ஆசை வந்தது கோமளத்திற்கு.

தோட்டத்திற்குச் சென்று வீட்டுக்குள் வந்த நதியாவோ நகைகளை பார்த்தவள் “வாவ் செமயா இருக்கு அண்ணா காலையில முல்லை அண்ணியை தோட்டத்துக்கு போலாம்னு கூப்பிட்டேன் ஆனா முல்லை அண்ணி உங்க கூட வெளியே போறேனு சொன்னா நகை வாங்கத்தான் போனீங்களா! எல்லா நகையும் முல்லை அண்ணிக்கு பாந்தமா இருக்கறது போல வாங்கியிருக்கீங்க அண்ணா” என்றாள் சந்தோச புன்னகையுடன்.

“உன் அண்ணன் பொண்டாட்டிக்கு நகை வாங்கிக்கொடுத்திருக்கான் என்ன இருந்தாலும் நீ என்னோட பொண்ணுதானே ராயன் கூட பொறந்தவளா இருந்தா இன்னேரம் உனக்கும் நகை வாங்கிட்ட வந்திருப்பான்” என்றார் முக சுளிப்போடு.

“அம்மா அண்ணா எனக்கு எத்தனை நகை வாங்கிக்கொடுத்திருக்காரு அத்தனை நகையும் பீரோவுல தூங்குது இதே கண்ணா அண்ணா இதுவரைக்கும் எனக்கு ஒரு கொலுசு கூட வாங்கித்தந்தது கிடையாது” என்றவுடன்

எனக்கு விரோதி வீட்டுக்குள்ளயே இருக்காங்க என புகைந்து கொண்டவர் “எனக்கு முட்டி வலிக்குது நான் செத்த படுத்து ரெஸ்ட் எடுக்குறேன்” என்று அவரது அறைக்குள் சென்றுவிட்டார் கோமளம்.

முல்லையோ “நதி உனக்கு இந்த நகையில என்ன பிடிக்குதோ அதை எடுத்துக்கோடி” என்றாள் மலர்ந்த புன்னகையுடன்.

“இதுபோல நிறைய நகைகள் அண்ணா வாங்கிக்கொடுத்துக்காரு முல்லை” என்றவளோ “சாரி அண்ணி வரமாட்டேன்ஙகுது” என்று நாக்கை கடித்தாள்.

“ஏன்டா பாப்பா உனக்கு ஏதாவது பிடிச்சிருந்தா எடுத்துக்கோ” என்றான் தங்கையின் மனம் வாடக்கூடாதென கேட்டுவிட்டான் ராயன்.

“இல்லை அண்ணே எனக்கு வேணாம் எனக்குதான் நிறைய வாங்கிக்கொடுத்திருக்கீங்கல்ல” என்றாள் சிரித்தபடியே.

“சரி ரெண்டு பேரும் நகையையும் புடவைகளையும் எடுத்துட்டு போய் அடுக்கி வைங்க நான் பால்பண்ணைக்கு போய்ட்டு வந்துடறேன்” என்றவனோ முல்லையிடம் கண்ணைக்காட்டி கிளம்பிவிட்டான்.

முல்லை அமுதாவை பார்த்தாள் “நல்லாயிருடி” என்று கண்ணீரை துடைத்துக்கொண்டார்.

“அமுதா முல்லையோட அறைக்கு நீயும் போய்ட்டு வா” என்றார் தையல்நாயகி.

“வாம்மா” என்றாள் முல்லையும்.

அமுதாவோ கோமளம் அறையை பார்த்தார்.

அழகம்மையோ “அண்ணி எழுந்து வர ரெண்டு மணிநேரம் ஆகும் அமுதா நீ போய்ட்டு வா” என்றார் புன்னகையுடனே.

அமுதாவோ தயங்கிக்கொண்டே நின்றார்.

தையல்நாயகியோ “நாங்களும் வரோம் வா அமுதா” என்று பெரியவர்களும் முல்லையோடு மாடிக்குச் சென்று ராயனின் அறையில் பட்டுப்புடவைகளை அடுக்கி வைக்க முல்லைக்கு உதவி செய்து விட்டு வாட்ரோப்பில் நகைகளை வைத்த தையல்நாயகியோ “நகைகளை பத்திரமாக வைச்சுக்கணும் முல்லை” என்று நகை இருந்த லாக்கரின் சாவியை முல்லையின் கையில் கொடுத்தார் தையல்நாயகி.

சாவியை வாங்கி பத்திரமாக ஓரிடத்தில் வைத்துக்கொண்டாள் முல்லை.

அன்றிரவும் முல்லை மெத்தையில் படுத்திருந்தாள் தூக்கம் வரவில்லை ராயனின் போன் எண்ணை அவளது போனில் போடுவதும் டெலிட் பண்ணுவதுமாய் இருந்தாள் முல்லை.

ராயனின் கார் சத்தம் கேட்டதும் அறை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துவிட்டு மீண்டும் வந்து மெத்தையில் கண்ணைமூடிப்படுத்துக்கொண்டாள் முல்லைக்கொடி.

பாலாஜியுடன் வெளியேச் சென்றிருந்தவன் இரவு சாப்பாட்டை வெளியே சாப்பிட்டு வந்துவிடுவேன் எனக்காக யாரும் காத்திருக்க வேணாம் தையல்நாயகியிடம் கூறியிருந்தான் தன்னவளுடன் இன்னும் போனில் பேசவில்லை.

தன்னிடமிருக்கும் சாவியை கொண்டு கதவை திறந்து உள்ளே வந்த ராயனோ கையில் பார்சலோடு மாடிப்படிகளில் ஏறியவன் தன் அறைகதவை மெதுவாய் திறந்தான்.

முல்லையோ ‘அச்சோ மச்சான் வந்தாச்சு’ என்று குஷியில் இருந்தாலும் உறங்குவது போல கண்ணைமூடிப்படுத்திருந்தாள்.

கண்விழித்திருந்தால் முத்தம் கொடுக்குறேன் அங்க தொடவா இங்க தொடவானு என்னை ஒரு வழி பண்ணிடுவாரு என்று மனதிற்குள் பேசிக்கொண்டே படுத்திருந்தாள்.

ராயனோ அறைக்குள் வந்தவன் அதுக்குள்ள தூங்கிட்டாளா நான் வருவேனு காத்திருக்க வேண்டாமா என்று சட்டைபட்டனை கழட்டியவாறே முல்லையை பார்த்தான் அவளது கருமணிகள் அசைவதை கண்டவன் ஓ மேடம் ஆக்டிங் கொடுக்கறாங்களா இருடி குளிச்சிட்டு வரேன் என்று துண்டை எடுத்து தோளில் போட்டு குளிக்கச் சென்றவன் அவரசமாக குளித்து விட்டு வெளியே வந்தபோது சட்டென கண்ணைமூடிக்கொண்டாள்.

நான் நீ படிச்ச ஸ்கூலில் ஹெட்மாஸ்டர்டி என்று மீசையை திருகியவன் மெதுவாய் நடந்துச் சென்று அவளது கால்பக்கம் உட்கார்ந்து முல்லையின் காலை தூக்கி தன் தொடையில் வைத்துக்கொண்டதும் “அச்சோ என்ன பண்ணுறீங்க மச்சான்” என்று அடித்துப்பிடித்து எழுந்து உட்கார்ந்து விட்டாள்.

“நீ தூங்கலனு எனக்கு தெரியும்டி உன் காலை பிடிச்சதும் நீ எழுந்துப்பனு தெரிஞ்சுதான் உன் காலை தொட்டேன்” என்றான் அவளது விழிகளை பார்த்தவாறே.

“அச்சோ என் காலை தொட்டுக்கிட்டு விடுங்க மச்சான்” என்று சிணுங்கியவளை பார்த்த பார்வையில் அமைதியாகிவிட்டாள்.

“காலம் முழுக்க பொண்டாட்டி காலை பிடிக்கறது தப்பு கிடையாதுடி” என்றவனோ அவளது காலில் போட்டிருந்த சன்னமான கொலுசை கழட்டி வைத்துவிட்டு அவன் வாங்கி வந்திருந்த முத்துக்கள் வைத்த கொலுசை கையில் எடுத்து காட்டி “பிடிச்சிருக்கா?” என்றான் புருவம் தூக்கி.

“காலையில அவ்ளோ நகை வாங்கிக்கொடுத்தீங்க கொலுசையும் அப்பவே ஏன் வாங்கிக்கொடுக்கல?” என்றாள் அவனது தோளில் இடித்து.

“நீ தூங்கின நேரம்தான் கொலுசை போட்டு விடணும் காலையில எழுந்து பார்த்தா உன் காலுல இருக்க கொலுசை பார்த்து நீ படற சந்தோசத்தை நான் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன்டி ஆனா நீ முழிச்சிக்கிட்டுதான் இருந்த கொலுசை போட்டு ஒரு முத்தத்தை உன்கிட்ட வாங்கிடலாம்னுதான்” என்றபடியே கொலுசு இரண்டையும் அவளது காலில் போட்டு “இன்னும் ஒரு ஸ்பெஷல் இருக்கு” என்று கண்ணைசிமிட்டியவன் முத்து வைத்த மெட்டியை அவளது விரலில் போட்டு மெட்டியில் முத்தம் பதித்தான் அவனது முத்தத்தில் கண்சொருகினாள் பெண்ணவள்.

“ஏய் புள்ள கொடி மெட்டி பிடிச்சிருக்கா?” என்றான் அவளது பாதத்தில் முத்தமிட்டு.

அவளது பாதத்தில் அவனது இதழ் பட்டதும் கண்விழித்தவள் “ரொம்ப பிடிச்சிருக்கு” என்று கையை ராஜாளி போல விரித்தாள்.

அப்படியா என்றபடியே அவளது பக்கம் நெருங்கி வரவும் வெட்கம் வந்துவிட்டது முல்லைக்கொடிக்கு.

அடுத்து என்ன பண்ணுவான் என்ற எதிர்பார்ப்பில் இருந்தாலும் அவனது நெஞ்சில் சாய்ந்துக் கொள்வது அவளுக்கு பிடித்தமான ஒன்று.

அடுத்த நொடி அவனது நெஞ்சில் சாய்ந்துக் கொள்ளவும் அவன் தானாக அவளது இடுப்பில் கைப்போட்டு இறுக்கினான்.

“ம்ம் சும்மா இருங்க மச்சான்” என்று அவனது கையை தட்டிவிடவும்

அவனோ அவளது கையை பிடித்துக்கொண்டு அவளது கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.

“மச்சான் தூங்கலாமா?” என்றாள் அவனது நெஞ்சு சுருள் முடிகளை விரலால் அளந்தபடியே.

“தூங்கலாம் ஆனா அதுக்கு முன்ன” என்றவனோ அவளது கன்னத்தை தாங்கி அவளது விழிகளை தன் விழிகளுடன் கலக்க விட்டான்.

அவளோ அவனது காந்த விழிகளின் விசைகளை பார்க்க முடியாமல் கண்களை மூடினாள்.

அவனது இதழ் குவித்து உஃப் என்று அவளது இமைகுடைகளை நோக்கி ஊதினான்
அவளோ மெல்ல இதழ்களை திறக்கவும் அவளது இதழை கவ்விக்கொண்டான் ஆக்டோபஸாய்.

2 thoughts on “கடுவன் சூடிய பிச்சிப்பூ”

Leave a Reply to Rilwaniya Azeez Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top