ATM Tamil Romantic Novels

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 18

“விடுங்க மச்சான் எட்டுக்கு மணிக்கு மேல ஆச்சு பெரியம்மா நான் இன்னும் எழுந்து வரலைனு பெரிய பஞ்சாயத்து வைக்கப்போறாங்கனு நானே கவலையில இருக்கேன்” என முகம் சுணங்கியவளை இன்னும் இறுக்கமாய் அணைத்து அவளது காதோரம் மீசையால் உரசிக்கொண்டு “பெரியம்மாகிட்ட நீதான் பேசி சமாளிக்கணும்டி அது உன் பாடு எனக்கு தெரியாது” என்றவனின் கைகள் இடுப்புச் சேலைக்குள் பிரவேசம் செய்தது. 

அதுக்கு மேல் என்ன நடக்குமென்று நேற்று இரவு படம் போட்டு காண்பித்துவிட்டானே ராயன். ஆழிலை வயிற்றைக் கடந்து மேல் நோக்கிச் சென்ற கைகளை தடுக்க வழி தெரியாமல் விழி பிதுங்கி நின்றவளோ “ப்ளீஸ் மச்சான் கீழ போகணும்” என்று கண்களால் கெஞ்சினாள். 

“அப்போ முத்தம் கொடுத்துட்டு போடி” என்று தன் இதழை அவளது பக்கம் கொண்டுச் சென்றான்.

அவளோ “கண்ணை மூடுங்க மச்சான் முத்தம் கொடுக்குறேன்” என்றாள் இராகத்தோடு.

“நான் கண்ணை மூடினதும் என்னை ஏமாத்தி ஓடணும்னு நினைச்சா அவ்ளோதான் டி என்னை பத்தி உனக்கு முழுசா தெரியல… நீ எங்க இருந்தாலும் அறைக்குள் தூக்கிட்டு வந்துடுவேன் யார் இருக்காங்கனு பார்க்க மாட்டேன்” என்றான் மிரட்டலாகவே.

“நா.நான் உங்களை எதுக்கு ஏமாத்த போறேன் கண்ணைமூடுங்க மச்சான்” என்றாள் கொஞ்சல் பேச்சுடன்.

ராயன் கண்ணை மூடியதும் அவள் கால் பெருவிரலால் எம்பி நின்று அவனது கன்னத்தை கடித்து வைத்ததும் அவன் அவளது போங்காட்டம் தெரிந்து கண்ணை சட்டென்று விழித்து கைகளை இடுப்பில் கொடுத்து அவளை கண்களால் உறுத்து விழித்தவன் “ஏய்” என்று அவளை செல்லமாய் அடிக்க கையை ஓங்கிக்கொண்டு வர அவளோ “போயா மச்சான் நைட் என்னை கடிச்சு வச்சில இப்போ நான் உன்னை கடிச்சிட்டேன்” என்று கட்டை விரலை ஆட்டிக்கொண்டு கதவு திறந்து சிட்டாய் பறந்து விட்டாள்.

“என்னையே ஏமாத்திட்டு போறியா நைட் என்கிட்ட வந்துதான் ஆகணும்டி அப்போ இருக்கு உனக்கு” என்றவனோ வேஷ்டி சட்டைக்கு மாறினான்.

ஹாலில் கோமளமும் அழகம்மையும் அமர்ந்திருப்பதை கண்டு ‘அச்சோ எல்லாரும் ஏன் லேட்டா எழுந்து வந்தனு திட்டுவாங்களா?’ மனதிற்குள் திக்கென்றிருந்தது அவளுக்கு. “சிவபெருமானே என்னை யாரும் திட்டக்கூடாது பிரதோஷத்திற்கு பால் அபிஷேகம் பண்ணுறேன்” என்று கடவுளை வேண்டிக்கொண்டே வந்தாள்.

கோமளமோ தயங்கிக்கொண்டே வரும் முல்லையை பார்த்தவர் “ஏன் டி உனக்கு இப்போதான் பொழுது விடிஞ்சுதா அன்னநடை போட்டு எட்டு மணிக்கு எழுந்து வர. மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க… இன்னிக்கு போனா போகுதுனு விடறேன் நாளைக்கு காலையில ஐஞ்சு மணிக்கு எழுந்து வாசல் தெளிச்சு கோலம் போட்டு சாமிக்கு விளக்கேத்தணும் சரியா” என்றார் அதட்டலாக.

“ச.சரிங்க பெரியம்மா நாளைக்கு நேரமே எழுந்து வேலையை பார்த்துடறேன்” என்றாளே தவிர வேறொன்றும் பேசவில்லை.

“ஆமா உன் முகத்துக்கு ஏதாவது க்ரீம் பூசுனியா முகம் பளபளனு ஜொலிக்குது” என்றார் கோமளம் அவளது முகப்பொலிவிற்கான காரணத்தை அறியாமல். 

“கஸ்தூரி ம.மஞ்சள் மட்டும்தான் பூசுவேன் பெரியம்மா க்ரீம் என் முகத்துக்கு ஒத்துக்காது” என்றவளிடம் 

“கல்யாணத்துக்கு முன்ன எங்கவீட்டு வேலைக்காரியா இருந்த நாங்க சாப்பிட்டது போக மிச்சத்தை சாப்பிட்டு வத்தலும் தொத்தலுமா இருந்த இப்போ நாங்க சாப்பிடற சாப்பாட்டையே சாப்பிட்டு கொழுக்மொழுக்குனு நல்லா பப்பாளிப்பழம் போல பளபளனு ஆகிட்ட” என்று அவளை தேள் கொடுக்காக வார்த்தையால் கொட்டினார். 

முல்லைக்கு அழுகை வந்துவிட்டது கண்ணீரை வெளியே விடாமல் இழுத்து வைத்துக்கொண்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “நான் ஒன்னும் வத்தலும் தொத்தலுமா இல்லைங்க  பெரியம்மா கல்யாணத்துக்கு முன்ன எப்படி இருந்தேனோ இப்பவும் அப்படியேதான் இருக்கேன். கல்யாணம் ஆனதும் பொண்ணுங்க எதனால பளபளனு ஆகுறாங்கனு உங்களுக்கு தெரியும்தானே” என்று அழுகையை மறைத்து கோமளத்திற்கு பதிலடி கொடுத்தாள். 

“புள்ள பூச்சிக்கு கொடுக்கு முளைச்சுடுச்சு வெட்டி விடுறேன் பாருடி” என்றார் மிரட்டலாக. 

முல்லையோ அதிகம் பேசக்கூடாதென அமைதியாய் கையை கட்டிக் கொண்டு நின்றாள்.  

அழகம்மையோ “அண்ணி கல்யாணம் ஆன அன்னிக்கு முதல் இரவு வேணாம் முல்லை படிச்சு முடிக்கட்டும்னு ராயன் சொல்லியிருந்தான்ல முல்லை பரீட்சை எழுதி முடிச்சிட்டா நேத்துதான் ரெண்டு பேருக்கும் முதலிரவு நடந்திருக்கும் போல அதான் முல்லை முகம் ஜொலிப்பா இருக்கு நீங்க அவளை வெட்கப்பட வைக்காதீங்க” என்று கோமளத்தின் காதில் மெதுவாய் கூறியதும் 

கோமளமோ ‘நாம இந்த விசயத்தை யோசிக்காம விட்டோமே’ என்று அவரது குறை மூளையை தட்டிக்கொண்டிருந்த வேளையில் 

“முல்லை ராயனை அழைச்சிட்டு வந்து சாப்பிடுங்க மணி ஒன்பது ஆகப்போகுது” என கோமளத்திடமிருந்து முல்லையை தப்பிக்க வைத்துவிட்டார் அழகம்மை.

முல்லையோ ‘அச்சோ நான் மறுபடியும் மாடிக்கு போய் அவரை சாப்பிட கூப்பிடணுமா நான் மாட்டேன் சாமி மச்சான் கையில சிக்குனா பிரியாணி போட்டுருவாரு’ என்று கண்ணை விரித்தவள் “அவங்க சாப்பிட வரேன்னு சொல்லிட்டாங்க அம்மா நான் டிபன் எடுத்து வைக்குறேன்” என்று டைனிங் டேபிளுக்கு ஓடிவிட்டாள் முல்லை.

ராயன் கைகாப்பை ஏத்தி விட்டு மாடிப்படிகளிலிருந்து வேகமாக இறங்கி டைனிங் டேபிளுக்கு வந்தவன் மனைவியை தேடினான்.

சமையல்கட்டில் அமுதாவிடம் பேசிக்கொண்டிருந்தது அவன் காதில் அச்சு பிசகாமல் கேட்டது. 

“என்னடி எதாவது பெயின் இருக்கா ஹாஸ்பிட்டல் போகலாமா சொல்லுடி?” என்றார் மகளின் கழுத்தில் இருக்கும் காயத்தை பார்த்து பரிதவிப்போடு.

“எதுக்கு ஹாஸ்பிட்டல் போகணும் எனக்கு எங்கயும் வலி இல்ல மச்சான் சாப்பிட வந்துடுவாரு தள்ளி நில்லும்மா” என்றவளோ  இட்லி இருந்த ஹாட்பாக்ஸை கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததும் டேபிளில் சாப்பிட உட்கார்ந்து விட்டான் ராயன்.

ராயனை பார்த்ததும் வெட்கம் வந்துவிட்டது அவன் முகம் பார்க்கவில்லை ஆனாலும் அவளது இதழ்களில் புன்னகை தவழ்ந்துக் கொண்டிருந்தது.

தட்டு வைத்து இட்லியை வைத்து கொத்தமல்லிச் சட்னியை ஊற்றி “சாப்பிடுங்க மச்சான்” என்றாள் இப்போதும் அவன் முகம் பார்க்காமல்.

ராயனோ “இப்ப என் முகத்தை நீ பார்த்தா தான் சாப்பிடுவேன்” என்றவனோ குமட்டில் கைகொடுத்து முல்லையை பார்த்துக்கொண்டிருந்தான்.

இப்போது ராயனை பார்க்கவில்லையென்றால் சாப்பிடமாட்டான் என்று அவனது முகத்தை பார்த்து “மச்சான் இப்ப சாப்பிடுறீங்களா?” என்று கண்ணை சுழட்டினாள். 

“ம்ம் அப்படி வழிக்கு வா” என்றவனோ இட்லியை சாப்பிட்டுக்கொண்டே “எதுக்கு என்னை ஏமாத்தி ஓடி வந்த அதுக்கு இன்னிக்கு நைட் பனிஷ்மெண்ட் தருவேன்” என்றான்  வட்டிக்கு பணம் கொடுத்தவன் போல கறாராக நின்றான் ராயன்.

“கொஞ்சம் மெதுவா பனிஷ்மெண்ட் கொடுங்க” என்றாள் பயந்த விழிகளுடன்.

ராயனுக்கோ சிரிப்பு வந்துவிட்டது. “என்னால மெதுவா பனிஷ்மெண்ட் கொடுக்க முடியாது வேகமாத்தான் பனிஷ்மென்ட் கொடுப்பேன்” என்றவனுக்கு விக்கல் வரவும் “பார்த்து மச்சான் பேசிட்டு சாப்பிடாதீங்க” என்று அக்கறையாக தலையை தட்டி தண்ணீரை எடுத்துக்கொடுத்தாள்.

தண்ணீரை குடித்து அவளை விழுங்குவது போல பார்த்துக்கொண்டு சாப்பிட்டு முடித்தவன் தட்டில் கை கழுவி முல்லை இடுப்பில் சொருகியிருந்த முந்தானையை இழுத்து வாய் துடைத்தான்.

“யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க மச்சான்?” என்று அவனை கடிந்தும் கொண்டாள்.

“என் பொண்டாட்டி முந்தானையில தானே துடைக்குறேன் யாரு தப்பா நினைப்பாங்க அவங்கள என்கிட்ட பேச சொல்லு” என்றவனின் குரல் உயர்ந்து வரவும்

“அப்பா சாமி நான் என்ன பேசினாலும் குத்தமா இருக்கு இப்ப மேல போலாமா உங்களுக்கு உதட்டு முத்தம் கொடுத்துடறேன் நைட் வந்து நீங்க என்ன பண்ணுவீங்கனு  எனக்கு  திக்திக்குனு இருக்கும்” என்றாள் படபடப்புடன். 

அவளை ரொம்ப பயமுறுத்துகிறோமோ என்று நினைத்தவன் தட்டை எடுத்து வைத்து இட்லியை போட்டு “சாப்பிட்டு மேல வா உனக்காக காத்திருக்கேன் உதட்டு முத்தம் வாங்காம பால்பண்ணைக்கு போகமாட்டேன்!” அடம்பிடித்த குழந்தையாக மாறிவிட்டான் வல்லவராயன்.

ராயன் மாடிப்படிகளில் ஏறிச் சென்றதும் ‘ஏன் டி முல்லை உனக்கு இது தேவையா மச்சான் முத்தம் கேட்டதும் முத்தம் கொடுத்துட்டு வந்திருக்கணும் அதைவிட்டு அவரோட கன்னத்தை கடிச்சிட்டு வந்தா சும்மா இருப்பாரா இப்போ எங்கே கடிப்பாரோ தெரியலையே?’ என்று புலம்ப வைத்துவிட்டான் ராயன். 

இட்லியை அவசரமாக பிய்த்து சாப்பிட்டு விட்டு தண்ணீரை குடித்து விட்டு எழுந்த நேரம் அமுதா வந்ததும் அவரை இடித்துவிட்டு சிங்கில் சாப்பிட்ட தட்டை கழுவி வைத்துவிட்டு சேலையை சுருட்டி பிடித்துக்கொண்டு மாடிப்படிகளில் வேகமாக ஏறினாள்.

ராயனோ மெத்தையில் சட்டையை கழட்டி வைத்து கால்மேல் கால்போட்டு முல்லையின் வரவிற்காக காத்திருந்தான்.

‘என்ன இது சட்டையை கழட்டி உட்கார்ந்திருக்காரு ஒருவேளை இப்போவும் எல்லா நடக்குமா? இல்ல இல்ல நடக்காது கீழே எல்லாரும் இருக்காங்க மச்சான் நல்லவரு என்னை தொந்தரவு பண்ணமாட்டாரு முத்தம் மட்டும் கொடுத்துட்டு கீழே ஓடிறலாம்’ என்று பல வண்ண யோசனையோடு மெல்ல நடந்துச் சென்று சேலை நுனியை திருகிக்கொண்டு நின்றாள் ராயன் முன்னால்.

அவளது கையை பிடித்து இழுத்து தன் மடியில் உட்கார வைத்துக்கொண்டு “என்னை ஏமாத்திட்டு ஓடுறியாடி முதல் முறை முத்தம் கேட்டவுடன் முத்தம் கொடுத்திருந்தா நானா விட்டிருப்பேன் இப்போ மொத்தமா எடுத்துக்கபோறேன்” என்றவனோ அவளது கழுத்தில் முகம் பதித்தான்.

“வீட்ல எல்லாரும் இருக்காங்க மச்சான் விடுங்க” என்று சிணுங்கினாள்.

“இப்ப யாரும் வீட்ல இல்ல எல்லாரும் கோவிலுக்கு போயிட்டாங்க உங்கம்மா மாட்டுத்தொழுவத்துக்கு போயிடுவாங்க நாம குஜாலா இருப்போம் என் மக்கு பொண்டாட்டி” என்று அவளது கன்னத்தில் பச்சக்கென்று முத்தம் கொடுத்தான்.

“பெரியம்மா வீட்ல இருப்பாங்க இந்த நேரம் அவங்க காலுக்கு தைலம் தேய்ச்சு விடணும் மச்சான்” என்று அவனிடமிருந்து தப்பித்து போக பார்த்தவளின் இதழைக் கவ்விக்கொண்டான்.

முத்தமிட்டுக்கொண்டே அவளை தன் வசம் கொண்டு வந்து மெத்தையில் படுக்க வைத்தான்.

அவளோ “வேணாம் மச்சான்” என்று தலையை ஆட்டி எழும்ப பார்த்தாள். அவளது கைகள் இரண்டையும் பிடித்து சிறைவைத்து அவளது இதழில் முத்தமிட ஆரம்பித்தான் முத்தக் கள்ளன்.

அவளோ அவன் கொடுக்கும் மாய முத்தத்தில் மயங்கி கண்சொருகினாள். அவளது இமைகளில் முத்தம் வைத்து அவளது கன்னத்தில் லேசாய் கடித்து வைத்ததும் கண்விழித்து “பழிக்கு பழி வாங்குறீங்களா மச்சான்?” என்றாள் அவன் கண்களை பார்த்தபடியே.

“ஆமாடி பழிக்கு பழி வாங்குவேன் இந்த கட்டிலில் இருக்கும் வரை” என்றவனோ அவளது மார்புக்குழிக்குள் முகத்தை புதைத்துக்கொண்டான் ஆடைகளுக்கு மேலாக அவளது அங்க வளைவுகளில் ஏறி விளையாடி பெண்மையை மீண்டும் மலரச்செய்தான்.

அவளது மாராப்பை எப்போது விலக்கினான் சோளிகளுக்கு எப்போது விடுப்பு கொடுத்தான் என்றெல்லாம் முல்லைக்கு தெரியவில்லை. அவனது இதழ்கள் தாமரை மொட்டுகளில் முத்தம் வைத்ததும்தான் அவளுக்கு என்ன நடக்கிறதென்று தெரிந்தது அவளை தன் மாய வலையில் சிக்க வைத்துக்கொண்டான் ராயன். அவனது விரல் பட்டு மாணிக்க முத்துக்கள் சிவந்து போனது. அவனது இதழ்களும் ஓயாமல் இதழில் முத்தமிட்டு சிவந்து போனது. அவளது கைவளையல்கள் அவனது வேகத்தில் உடைந்து போனது.

‘ஓ இதுக்குத்தான் கைநிறைய வளையல் போடுனு சொன்னாங்களா மச்சான்?’ என்று பெரும் சிந்தனைக்கு போனவளின் இடுப்பை வருடியதும் அவள் சுயம் வந்து அவனை கட்டியணைத்துக்கொண்டாள். அதற்கு மேல் அவனது விரல்கள் அவளது மேனியை வீணையாக மீட்டியது. அவன் ஆசானாய் கற்றுக்கொடுத்தான் அவளோ மாணவியாய் கலவிப்பாடத்தை கற்றுக்கொண்டு குருவை மிஞ்சினாள் இப்போது.

ராயனோ அவளது காதில் ஏதோ இரகசியம் பேச “ச்சீ நான் மாட்டேன் மச்சான்” என்று கண் மூடி சிணுங்கினாலும் அவன் கேட்டதை செய்ய ஆரம்பிக்க “புள்ள கொடி” என்று அவளது மார்புக்கூட்டில் தஞ்சம் அடைந்தான். பெண்மையை மென்மையாக கையாளும் வித்தை கொண்டவனிடம் தன்னை ஒப்புவித்தாள் மங்கை. பூவிற்குள் தேன் எடுக்கும் வண்டு போல பெண்மைக்குள் நுழைந்திருந்தான். அவளது கால் கொலுசொலி சத்தமும் அவனது அனல் மூச்சும் அந்த அறையை நிரப்பியது. கூடல் முடிந்து எழுந்தவளை அள்ளி அணைத்து நெஞ்சில் போட்டுக்கொண்டான். 

“தூங்குடி கோவிலுக்கு போனவங்க வர மதியத்துக்கு மேல ஆகும்” என்றான் அவளது நெற்றியில் முத்தம் கொடுத்து.

“இப்ப தூக்கம் வரல மச்சான்” என்றாள் கண்களை சிமிட்டிக் கொண்டு அவனது மார்பு முடியை விரலால் சுருட்டிகொண்டு.

“அப்போ இன்னொரு ரவுண்டு போகலாமா?” என்றான் ஒற்றைக்கண்ணைச் சிமிட்டி.

“அச்சோ நான் தூங்கிட்டேன் மச்சான்” என்று கண்ணைமூடிக்கொண்டாள் முல்லைக்கொடி. 

அவள் உறங்கியதும் தலையணையில் படுக்க வைத்து விட்டு குளித்து வந்தவன் “கொடிமா” என்று அவளது கன்னத்தில் தட்ட “தூக்கம் வருது மச்சான் உடம்பெல்லாம் வலிக்குது” என முகம் சுருக்கியவளை கண்டு. 

அவனுக்கு ஏதோ போலாகியது போனை எடுத்து “பாலாஜி நான் இன்னிக்கு பண்ணைக்கு வரல பார்த்துக்கோ நாளைக்கு கண்ணாவுக்கு பொண்ணு பார்க்க போக கொஞ்சம் வேலையிருக்கு பார்க்கணும்” என்று தங்களது அந்தரங்கத்தை நண்பனிடம் கூறாமல் பேசி வைத்துவிட்டான் ராயன்.

கோமளமோ கோவிலில் சாமி கும்பிட்டு அமர்ந்திருந்தவரின் மனதில் ‘ஆமா கண்ணனுக்கு கல்யாணம் ஆகும் முன்னே முல்லை கர்ப்பம் ஆகிடுவாடுளே இந்த தலைமுறையிலயும் என் மகனின் மகன் ராயன் மகன் பேச்சை கேட்டு நிற்கணுமே இல்ல முல்லையை கர்ப்பம் அடைய விடமாட்டேன்’ என அவரது மூளை மழுங்கிப்போய் கெட்டபுத்தி அவரை ஆட்கொண்டது.

மாலை வரை பால்பண்ணையின் வேலைகளை லேப்டாப்பில் பார்த்து முடித்தவனுக்கு நேற்று இரவு முழுக்க உறக்கம் இல்லாமல் இருக்க அவனது கண்கள் தூக்கத்துக்கு சுழண்டது. லேப்டாப்பை அணைத்து விட்டு முல்லையின் பக்கம் நெருங்கிபடுக்கவும் “மச்சான்” என்று அவனது கற்பாறை நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு தூக்கத்தை தொடர்ந்தாள். அவனோ “அழகு பொண்டாட்டி” என்று அவளது நெற்றியில் முத்தம்கொடுத்து உறங்கிவிட்டான்.

கோவிலுக்குச் சென்றவர்கள் வீட்டுக்கு வந்து விட்டனர் ராயனின் கார் வீட்டில் நிற்பதை கண்டு கோமளத்தின் முகம் தான் மாறியது. ‘கல்யாணம் பண்ணாம பிரமச்சாரியாய் இருந்துடுவான்னு இருந்தேன் ஆனா இவன் கல்யாணம் பண்ணி பொண்டாட்டி முந்தானைக்குள்ள ஒளிஞ்சு கிடப்பான்னு நான் எதிர்ப்பார்க்கலையே தொழிலே கதினு கிடக்கறவன் கல்யாணம் ஆனதும் ஆளே மாறிட்டானே’ என்று பொருமிக்கொண்டார் கோமளம்.

நீலகண்டனும் அழகம்மையும் மருமகனின் காரை கண்டு சிரித்துக்கொண்டனர்.

நதியாவோ “அதிசயமா இருக்கு அண்ணாவோட கார் வீட்டுல இருக்கே அண்ணா பால்பண்ணைக்கு போகாம இருக்காரு நான் போய் பார்க்குறேன்” என்று ஓடியவளின் கையை பிடித்த தையல்நாயகியோ “கண்ணு நாளைக்கு காலையில கண்ணனுக்கு பொண்ணு பார்க்க போறோம்ல மல்லிக்கைப் பூ பறிச்சு ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்கேன் கட்டி வச்சிடுமா” என்று நதியாவை சமையல்கட்டுக்குள் அழைத்துச்சென்று பூவை எடுத்து கொடுத்தார். 

நதியாவோ பூவைக்கட்டிக்கொண்டு ‘இந்நேரம் வரை நம்ம நண்பி அறையை விட்டு வெளியே வராம இருக்கமாட்டாளே என்னவா இருக்கும்?’ என்று யோசித்தவளின் மூளையில் மணி அடித்தது.

‘ஓ சித்தி காரணமாத்தான் என்னை அண்ணா அறைக்கு விடலையா என் நண்பி சந்தோசமா இருந்தா நானும் சந்தோசம் ஆவேன்’ என்று புன்னகையுடன் பூவை கட்டினாள் நதியா.

அடுத்த நாள் காலையில் அனைவரும் பொண்ணு பார்க்க கிளம்பி நின்றனர். கோமளமோ பட்டுப் புடவையில் ரெடியாகி மாமியார் தோரணையில் வந்து நின்றார்.

அரக்கு பச்சை நிறத்தில் காஞ்சிபுர பட்டுப் புடவையில் ரெடியாகி மல்லிகைச் சரத்தை ஐந்தாக மடித்து தலையில் வைத்துக்கொண்டிருந்தவளின் கன்னத்தில் முத்தமிட்டான் ராயன்.

பூவை வைத்து முடித்து அவளும் அவனது கன்னத்தில் முத்தம் கொடுத்து “போலாமா மச்சான்?” என்றாள் புருவத்தை உயர்த்தி. 

அவனோ அவள் கன்னத்தை தாங்கி அவள் மையிட்ட கண்ணை காதலோடு பார்த்தவன் “ரொம்ப அழகா இருக்கடி அப்படியே கடிச்சு திங்கணும் போல இருக்கு” என்றவனோ அவளது இதழில் முத்தமிட ஆரம்பித்தான். 

கோமளமோ “நேரமாச்சு இன்னும் ராயணும் முல்லையும் வரலையே” என்று மேலே ராயன் அறையை நிமிர்ந்து பார்த்தார். 

ராயனும் முல்லையும் சேர்ந்து நடந்து வருவதை கண்டு ‘ரெண்டு பேரையும் கூடிய சீக்கிரம் பிரிச்சு வைக்குறேன்’ என்றார் விஷம் கொண்ட எண்ணத்தில்.

வல்லவராயன் வீட்டு ட்ராவல்ஸ் சென்னைக்கு கிளம்பியது.

2 thoughts on “கடுவன் சூடிய பிச்சிப்பூ”

Leave a Reply to sowmi Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top