ATM Tamil Romantic Novels

என் ஆசை மச்சானே 5

அத்தியாயம் 5

 பூங்குழலி தன் தாத்தா பாட்டியை பார்த்துவிட்டு தன் வீட்டிற்கு நுழை ந்தாள். மாணிக்கம் சேரில் அமர்ந் து டிவியில் நியூஸ் பார்த்துக் கொ  ண்டிருந்தார். குழலி கை கால் அல ம்பிய உடன் அப்பா என்றாள்

மாணிக்கம் என்னம்மா எங்க போ யிருந்தாய் என்றார். குழலி அப்பா பக்கத்துல, கோவில் வரைக்கும் போயிட்டு வந்தேன்பா இந்தாங்க பிரசாதம் என அவரிடம் நீட்டினா ள் 

 அவரும் அதை எடுத்து தன் நெற் றியில் பூசிக்கொண்டு குழலிக்கும் பூசினார். பின் குழலி தன் அம்மா வை,  காண அடுக்களைக்குள் நு  ழைந்தாள். மங்கை,  தன் மகளை பார்த்து என்னடி இவ்ளோ நேரம் உங்க அப்பா,  வந்ததும் என் பொ ண்ணு எங்க ஏன் அவளை தனியா கோவிலுக்கு அனுப்பினனு நச்சரி க்க ஆரம்பிச்சுட்டாரு டி.

உன் அப்பத்தா,  சொல்லவே வே ணாம், புலம்பி தள்ளிடுச்சு. சரி அ தை விடு என் அப்பனயும் ஆத்தா ளும் பாத்தியா, என்ன சொன்னாங் க, நல்லா இருக்காங்களா.. என கே ள்விகளை கேட்டுக்கொண்டே சென்றார் 

 அதில், அவரை அமைதி படுத்திய குழலி, அம்மா உன் எல்லா கேள்வி க்கும் இந்த போட்டோ பதில் சொல் லும் பாரு என்று விட்டு தன் தாத் தா பாட்டியோடு எடுத்த போட்டோ செல்பி என அனைத்தையும் தாயி டம் காட்டினாள்.

அதில் மங்கை தடுமாறியவராக எல்லாரும் நல்லா இருக்காங்கல்ல பூவு என்றார். எல்லாரும் நல்லா இ ருக்காங்க அம்மா. எல்லா சீக்கிரம் சரியாயிடும் மா என்றாள். அது சரி டி, பூவு.. வேலண்ணா பையன் அ தாண்டி உன் மச்சான் மாறன பாத் தியா என்றார் 

அதில் ஒரு கணம் பதட்டமான பூவு மச்.., பார்த்தேன்  என்று சொல்ல வந்தவள் அவங்களை பார்த்தேன் என்று விட்டு தன் அறைக்கு சென் று அன்று நடந்ததை யோசித்துப் பார்த்தாள் 

 பூங்குழலி ஐந்தாம் வகுப்பு வந்திரு ந்தாள், மாறனும் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

பள்ளி வகுப்பறையில் மாறனின் தோழர்கள், ராசு ஜோசப் கோவிந்த ன் மூவரும் ஒரு திட்டம் தீட்டினர் அது என்னவென்றால் வரும் சனி க்கிழமை பள்ளியில் சிறப்பு வகுப் பு இருக்கிறது.

அதை கட் செய்து விட்டு சினிமா போவது என முடிவு செய்தனர். இத ற்கு மாறன் சிறிது தயங்கினான்.

ராசு, டேய் மாறா ப்ளீஸ்…டா எங்க ளுக்காக வாடா இந்த வருஷத்தோ ட, பள்ளிக்கூடம் முடிஞ்சிடும் நம்ம அதுக்கப்புறம் சந்திப்போமான்னு தெரியல சனிக்கிழமை தலைவர் ப டம் போடுறாங்கடா..நீதான் நல் லா படிக்கிற பையன் ஆச்சே அதனால வீட்ல அன்னைக்கு பள்ளிக்கூடத் தில ஸ்பெஷல் கிளாசு னு சொல்லி ட்டு வாடா, இரண்டரை மணி நேரத் துல,  வீட்டுக்கு போயிடலாம் என் றான் 

 மாறன், உடனே இல்லடா பயமா இ ருக்கு வீட்ல தெரிஞ்சா அடி விழும் நான் வரலை என்றான்.

கோவிந்தன், உடனே டேய்.. சும்மா வாடா இதுக்கப்புறம் போக வேண் டாம் என அவனை ஒரு வழியாக சம்மதிக்க வைத்தனர் 

அன்று சனிக்கிழமை காலை வீட்டி ல் சொல்லிக்கொண்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு டவுனில்,  உள் ள சினிமா தியேட்டருக்கு சென்றா ன் சிறுபயத்துடன்,

அதே நேரம் அன்று வேலை ஏதும் இல்லாததால் மாணிக்கம் தன் பிள் ளைகளை, கூட்டிக்கொண்டு சினி மா பார்க்க வந்திருந்தார் மாணிக்  கம்.

இடைவெளி நேரத்தில் ஸ்னாக்ஸ் என்று,  பூவு அடம்பிடித்ததால் மா ணிக்கம் பூவை கூட்டிக்கொண்டு பலகாரம்,  விற்கும் இடத்திற்கு அ ழைத்து வந்தார் அவளுக்கு பலகா ரம் வாங்கி கொடுத்தவர்

தெரிந்தவர் ஒருவரை கண்டு அவ ரிடம் பேசிக் கொண்டிருந்தார். சாப் பிட்டுக் கொண்டிருந்தவள் எதேச் சையாக திரும்பினாள். அங்கே மா றன் தன் நண்பர்களுடன் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

பூவும் மெதுவாக அவனிடம் சென்  று அவன் கைகளை சுரண்டினாள் மாறன் யார் என்று பார்த்து அதிர்ந் து விட்டான் 

மாறன், ஏய்.. குழலி நீ எங்க இங்க யார் கூட வந்த என்றான் பயத்தில்,

குழலி சிரித்துக்கொண்டே அப்பா கூட வந்தேன் மச்சான் என்றாள்.

மாறனுக்கு, வயிற்றில் புளியை க  ரைக்க ஆரம்பித்து விட்டது.குழலி இடம் குனிந்தவன் குழலி நான் இங் க வந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்லக்கூடாது சரியா என அவ ளிடம் சத்தியம் வாங்கினான்.

ஆனால் மாணிக்கம் பார்த்ததை இவன் அறியவில்லை 

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை குழலி தன் அம்மாவுடன் ராஜதுரை வீட்டி ற்கு வந்து கொண்டிருந்தாள்

மாறனுக்கு பயம் ஏற்பட்டாலும் சத் தியம் வாங்கியதால் பிள்ளைகளு டன் விளையாட சென்றான்.

வழக்கம்,  போல குழலி ராஜதுரை மடியில் அமர்ந்து கதை அளக்க ஆ ரம்பித்தாள். நேற்று பார்த்த சினிமா வைப்பற்றி சொல்லிக் கொண்டிரு ந்தாள். தண்ணீர் குடிக்க வந்த மாற னின் காதில் இது விழுந்தது பின் அவன் விளையாட சென்று விட் டான் 

 12 மணி அளவில் கோபத்துடன் வீடு வந்தார் வேல்முருகன். சாந்தி சாந்தி.. எங்க உன் பையன் என்றா ர். சாந்தி  பதட்டத்துடன் என்னங்க என்ன ஆச்சு என்றார்.

வேல்முருகன், உன் பையன படிக்க அனுப்புனா.. ஐயா நம்ம கிட்டயே பொய் சொல்லிட்டு தியேட்டருக்கு போய் படம் பார்க்க போயிருக்காரு அவனை பார்த்தவங்க சொன்னா ங்க என்றார் 

அப்போது விளையாடி முடித்த மா றன் வீட்டுக்கு வந்தான் வேல்முருக ன் அவனை பிடித்து பளார் என அ ரை விட்டவர், உன்ன படிக்க அனு ப்பினா.அய்யா தியேட்டருக்கு போ ய் படம் பார்த்துட்டு வரிங்களோ…  என எகிறினார்.

சத்தம் கேட்டு அனைவரும் நடுக்கூ டம் கூடினர் மாறனுக்கு அவமான மாய் போனது மங்கைதான் அண் ணனை சமாதானம் பண்ணி உள் ளே அனுப்பினார் மாறன் கோபத் துடன் தன் அறைக்கு  சென்றான் 

அறையில், மாறன் நான் அவ்வள வு சொல்லியும் அப்பாகிட்ட சொல் லிட்டல.. என கோபத்துடன் அமர் ந்திருந்தான்.

மாறன், மதியம் சாந்தி சாப்பிட அ ழைத்தும் செல்லவில்லை.  அனை வரும் உணவருந்தி விட்டு உறங்கி க் கொண்டிருந்தனர்.  மாறன் தன் னறை,  ஜன்னலில் இருந்து பார்த்  தான் பார்த்தால்,பின்பக்க தோட்ட ம் தெரியும். அங்கு எப்போதும் போ ல்,,  மலர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் குழலி 

 அவனுக்கு பசி எடுக்கவே எழுந்து செல்லலாம்,  என கட்டிலை விட்டு இறங்கினான் அப்பொழுது தோட் டத்து பக்கம் சத்தம் கேட்கவே இறங் கி வந்து எட்டிப் பார்த்தான்.

குழலி தனியாக விளையாடிக் கொ ண்டிருந்தாள்.  யாராச்சும் இருக்கி றார்கள் என்று பார்த்தான். யாரும் இல்லை,  என்ற உடனே வேகமாக கீழே  இறங்கி தோட்டத்து பக்கம் வந்தான் 

 வந்தவன் விளையாடிக் கொண்டி ருந்த,  குழலியை பிடித்து இழுத்து ஏய். ராங்கி உனக்கு எவ்வளவு திமி ர் இருந்தா.. நான் அவ்வளவு சொல் லியும் அப்பா கிட்ட என்ன மாட்டி விட்டிருப்ப உன்னை என்ன பண் றேன் பாரு என்றான்.

அதில், பயந்த குழலி பயத்துடன் திக்கிக்கொண்டே கண்களில் நீரு  டன் மச்சான்.. மச்சான்.. நான்… மா  மா கிட்ட சொல்லல மச்சான் நான் மாமாவை,  பார்க்கவே இல்ல தாத் தா கூட தான் பேசிட்டு இருந்தேன் 

 மாமாக்கு எப்படி தெரியும்னு எனக் கு தெரியாது என அழுதபடி உதடு பிதுக்கினாள் அதில் அவளை நம் பாதவன் பொய் சொல்லாத அங்க என்ன பார்த்தது நீ மட்டும் தான் உன்னை தவிர வேற யாரும் சொல் லி இருக்க முடியாது.

அப்புறம் என்ன மச்சான் கூப்பிடா  தனு எத்தனை தடவை சொல்றது உனக்கு அறிவே கிடையாதா இனி மச்சான்னு கூப்பிட்ட நான் மனுஷ னாவே இருக்கமாட்டேன் என் மூஞ் சில முழிக்காத என்று அவளை த  ள்ளி விட்டு சென்றான் 

 அவன் தள்ளியதும் அங்கிருந்து கல்லின் மீது மோதி நெற்றியில் இ ருந்து ரத்தம் வந்து வழிந்தது.  குழ லி, அம்மா.., என்று கத்தினாள்.

அவளின், சத்தம் கேட்டு காமாட்சி ஓடி வந்தார், காமாட்சி என்ன கண்  ணு, என் ராசாத்தி என்னம்மா ஆச்  சு என பதறிய படி ஓடி வந்தார் 

குழலி விம்மிய படி பாட்டி தலையி ல அடிபட்டுருச்சி என தலையில் இ ருந்து கை எடுத்தாள். கூரான கல் லில் நெற்றி பட்டதால் அரை இன்ச் அளவிற்கு ஆழமாக வெட்டியிருந் தது, அதை கண்ட காமாட்சி ஐயோ வேலா.. மங்க.. எல்லாரும் சீக்கிரம் வாங்க பிள்ளைக்கு இப்படி ரத்தம் போதே என குரல் கொடுத்தார் 

 மங்கையின் வேல்முருகனும் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர் மங்கை அழுதேவிட்டார். சாந்தி புட வை கிழித்து அவளுக்கு நெற்றியி ல் கட்டி விட்டார். சாந்தி என்னங்க ரத்தம் நிறைய போறது போல இரு க்கு சீக்கிரம் ஆஸ்பத்திரி கொண்டு போங்க என்றாள்.

உடனே, காரை எடுத்த வேல் முருக  ன்,அவளை கூட்டிக் கொண்டு ஆ  ஸ்பத்திரி சென்று கட்டுப்போட்டு கூட்டி வந்தார்.. ஹாலில் அனைவ ரும் அமர்ந்திருந்தனர் 

 குழலி ஓடிப்போய் தன் தாத்தாவை கட்டிக்கொண்டாள்.ராஜதுரை அவ ள் தலையை வருடி ரொம்ப வலிச் சுதா ராசாத்தி என கேட்டார்.

பூவு,ஆமா தாத்தா என்றவள் அப்ப டியே அவரிடம் பேசிக்கொண்டே உறங்கிப் போனாள் அவர் மேல் 

அதன்பிறகு அவள் மாறனை காட் டிக் கொடுக்கவில்லை அந்த காயம் நெற்றியில் தழும்பாகி போனது.

அதை நினைத்த அவளின் கை தா னாக நெற்றி தடவியது.தன் தாயிட ம் வம்பு இழுத்தவள்  சாப்பிட்டு உற ங்கி விட்டாள்  இப்படியே ஒரு வார ம் சென்றது.

தொடரும் 

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 

1 thought on “என் ஆசை மச்சானே 5”

Leave a Reply to sowmi Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top