ATM Tamil Romantic Novels

காதல் தானடி என் மீது உனக்கு!-20&21 (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு? 

[21]

ஹாஸ்பிட்டலில் இருந்து, டிஸ்சார்ஜ் ஆனவளை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தவனின் முகம் சற்றே சோர்ந்திருந்தாலும் கூட சோபையிழந்திருக்கவில்லை!! 

அந்த சம்பவத்தின் பின் மனைவியை கண்ணும், கருத்துமாக பார்க்க நாட்டம் கொண்டிருந்தவனோ,

இப்போது தான் மருத்துவமனையில் இருந்து வந்திருக்கும்.. அவனது காதல் மனைவி… தன்னுடைய வளைந்த இடுப்பைத் தூக்கிக் கொண்டு, கைப்பிடி வரிசையினைப் பற்றியவாறு.. 

நெடும் நெடும் மூச்சுக்களை விட்டுக் கொண்டே, ஆயாசத்துடன் மெல்ல மெல்ல மாடிப்படியேறுவது புரிந்தவனுக்கு.. 

அவள் நிலை அவன் மீது சின்ன கழிவிரக்கத்தைத் தோற்றுவிக்கலானது. 

அந்த முரடனும்.. தன் மனைவிக்கு உதவி செய்ய நாடி.. அவள் தோள்களில்.. 

இரு கைகளை இட்ட வண்ணம்.. அவளை கைத்தாங்கலாக தன்னறைக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது… 

அவன் கைகள்.. தன்னிலே பதிவது பிடிக்காதவளோ, 

அவனை முறைத்துப் பார்த்தபடி, “ என்ன ப்பண்றீங்க?”என்று கேட்டாள். 

மனைவியின் சீற்றம் அவனுள் கோபத்தை முளைவிட செய்யாமல்.. மாறாக அவளது சிவந்த முகத்தைக் காணவும்.. அது அவனுள்.. ஒரு இரசனைபாவத்தையே கிளறிவிடச் செய்தது. 

அவன் புன்னகையுடனேயே மனைவியைப் பார்க்க, அவளுக்கோ கணவனின் மொட்டுநகை வேறு எரிச்சலையே கொடுத்தது. 

அவனின் புன்னகைக்கு தானாகவே ஒரு அர்த்தம் கற்பித்துக் கொண்டவள், சினத்துடன், “என்ன சிரிப்பூஊ? என்னால முடியாதுன்னு நினைக்குறீங்களாஆ? .. என்னால யார் துணையும் இல்லாமல் தனியா ஏறி வ்வர ம்முடியும்!!” என்றவள்,

 அவனது கையை உதறித் தள்ளி விட்டு படிகளை சற்றே.. வேகத்துடன் தான் ஏற முயன்றாள். 

தன் சின்னக்கரிசனையைக் கூட ஏற்க விரும்பாத.. மனைவியின் பேச்சில் சின்ன வலி மீதூறினாலும் கூட.. அவளை.. அப்போதும்.. புன்னகை மீதூறவே பார்த்த பரிதிவேல் வீரன்.. 

அவள் பின்னாலேயே வழித்துணையாக வர நாடினான். 

ஆனால் அந்நேரம் பார்த்து.. கருவோடு மல்லாக்காக விழுந்து.. இடுப்பில் ஏற்பட்ட வலி… 

அந்நொடியும் ‘சுரீரெ’ன்று நடுவென்பில் வந்து விட்டுச் செல்ல.. இடுப்பைப் பட்டென்று பிடித்துக் கொண்டவள், 

அதரங்கள் திறந்து.. “ஆஆஆ” என்று கத்தியவள்… பின்னோக்கி சரியப் போக, .. 

அவள் நின்றிருந்த சமமான படியருகே பதறிய வதனத்துடன் வந்த தலைவன், 

“என்னாச்சு.. என்னாச்சுமா?” என்ற வண்ணம் அவளைப் பிடித்துக் கொண்டான். 

மறுநொடி தாமதிக்கவேயாமல், அவளது அடித்தொடைகளூடு கையிட்டுத் தூக்கிக் கொண்டவனாக, அநாயசமாக மாடிப்படி தாண்டி.. அறைக்கு விரைந்தான் பரிதிவேல் வீரன். 

அங்கே மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ஸ்கேனில், அவளது ‘என்புகளுக்கு ஒன்றுமில்லை’ என்று கூறப்பட்டாலும் கூட, மனைவி இடுப்பைப் பிடித்துக் கொண்டு சரிந்தது ஏனோ அவனை இம்சிக்கலானது. 

அவளை ஒரு பூப்போல மஞ்சத்தில் கிடத்திய பரிதிக்கு, என்புகள் வலுவாக பூசப்படும் தைலம் ஞாபகத்துக்கு வர.. டிராயரை நோக்கிச் சென்று.. அதை எடுத்தவனாக மனைவியை நாடி வந்தவன், 

மனைவியின் அருகே அமர்ந்து கொண்டவனாக, “இப்படி கண்ட இடத்துல.. அடிபட்றது.. இப்ப பாதிக்கலேன்னாலும் பின்னாடி தான் பாதிக்கும் ஆண்டாளு.. அதனால கொஞ்சமா இந்த தைலத்தை தேய்ச்சி விட்றேன்… வலி மட்டுப்படும் ஆண்டாளு..” என்று கனிவன்புடன் கெஞ்ச.. அவளது நீளநயனங்கள் வியப்பில் அகல விரிந்தன. 

மெய்யாலுமே அவளிடம் பணிந்து போய் கெஞ்சுவது அவளது முரட்டுப்பரிதி தானா? 

அவனுக்கு ஒரு விஷயம் ஆக வேண்டும் என்றால்.. பிறர் அனுமதி கோராமல்.. குறிப்பாக கெஞ்சாமல்.. தன் இஷ்டம் போல அனைவரையும் ஆளுகைக்கு உட்படுத்துபவன்.. இன்று.. அவளைப் பார்த்துக் கெஞ்சி நிற்கிறான்!! 

அவள் காண்பது கனவா? இல்லை நனவா?? 

இடுப்பு நடுவென்பில்.. ‘சுள் சுள்’ என்ற வலியெழுந்து வலிக்கிறது தான்.

இருப்பினும் வீம்புக்காக அவன் கையால் தைலம் தேய்க்கப்பெற மனமற்றவளாக எங்கேயோ பார்த்துக் கொண்டு, தீவிரக் குரலில், “ம்முடியாது” என்றாள் அவள். 

மனைவியின் மறுப்புக்கு உண்மை காரணமோ.. அவன் மேலுள்ள பழிவெறியும், வன்மமும் தான் என்று அறியாமல் போனவனோ,

 மனைவி தன் அருகாமையை வெறுப்பது… கருவுற்றிருப்பதால் சுரக்கும் இரசாயனச் சுரப்பிகள் தான் காரணம் என்று எண்ணிக் கொண்டு அவளிடம் இன்னும் கொஞ்சம் கனிந்து பேச நாடி, .. 

அவளது தீக்காயம்பட்ட கையினை எடுத்து மெல்ல வருடிக் கொடுத்தவளாக, “ உன்னோட தீக்காயம் கூட.. ஒரு வடு இல்லாம ஆறிப் போனதுக்கு காரணமும் இந்த தைலம் தான்.. இப்ப கொஞ்சம்.. இடுப்பில் தேய்ச்சு விட்டதும் வலி சரியாப் போயிடும்..”என்று கெஞ்ச, அவனின் இளகலான பேச்சு.. 

கொஞ்சம் கொஞ்சமாக வன்மத்தீ கனலும் அவளது இதயத்தையும் புரட்டிப் போடத் தான் செய்தது. 

மனதுக்கு இதமான அந்த மென்மையான பரிதியின்.. முகத்தை அவள்.. மிருதுவான விழிகளுடன்.. பார்த்திருந்தது எல்லாம் ஒரே ஒரு செக்கன் தான்!! 

அதற்குள் அவள் மனத்தில் கனலும் வன்மத்தீ மீண்டும் கொளுந்து விட்டெரியவாரம்பிக்க, கணவனிடம் இருந்து கைகளை பட்டென்று இழுத்துக் கொள்ளலானாள் அவள். 

அவளது விலகலில்.. இன்னும் கொஞ்சம் அவளிடம் கனிந்து போக நாடினானோ அவனும்? 

இளகிய குரலில், “முரடன்… ரொம்ப வலிக்குற மாதிரி.. தேய்ப்பான்னு பயப்பட்றியா?.. வலிக்காமல் தேய்ச்சு விட்றேன்..”என்று அவன் சொல்ல, 

‘ஐய்யோ.. இப்படி தாழ்ந்த குரலில் மென்மையா பேசுறதை முதலில் நிறுத்துறியாஆஆ???’என்று கத்த வேண்டும் போலிருந்தது அவளுக்கு. 

முகத்தில் ஒரு இறுக்கபாவம் பரவ, தன் கணவனைப் பார்த்தவள், “முடியாதூஊஊ.. முதல்ல இங்கேயிருந்து எழுந்திருச்சு போங்க பரிதீஈ..”என்று கத்தலானாள் அவேக். 

அவனுக்குமே… அவளிடம் பணிந்து வந்து பேசுவது வேலைக்கு ஆகாது என்று தோன்றியிருக்க வேண்டும்! 

அவனது இளகிய முகம்.. கொஞ்சம் கொஞ்சமாக இறுக ஆரம்பிக்க.. 

தன்னுடைய வழமையான இரும்புக் குரலில், “இப்ப நீ…தைலம் தேய்க்க ஒத்துக்கப் ப்போறியா.. இல்லை நானாகவே உன் கைகால கட்டிவிட்டு தேய்ச்சி விடவா??” என்று கேட்டதும் தான் தாமதம், 

அந்தக்குரலில் பழைய முரட்டுப் பரிதி மனக்கண் முன் தோன்றி… உள்ளுக்குள் பக்கென்றானது அவளுக்கு. 

இவன் இங்கிருந்து தனக்கு தைலம் தேய்த்து விடாமல் நகரப் போவதில்லை என்று தெள்ளத் தெளிவாகப் புரிந்து விடவே, 

கண்கள் தோல்வியில் சோர்வுற்று குனிந்து கொள்ள, அனிச்சை செயல் போல மஞ்சத்தில் இருந்து சாய்ந்தமர்ந்து கொண்டவள், மெல்ல திரும்பி… அவனுக்கு இடுப்பு காட்டியவளாக,சற்றே சிடுசிடுக்கும் குரலில், 

“உங்க கிட்ட கொஞ்சம் கூட.. அந்த முரட்டுத்தனம் மாறவே இல்லை..”என்று சொல்ல… 

அவனும் கோதையர் மனம் கொய்ய நகைக்கும் நவீனக் கண்ணன் போல புன்னகைத்துக் கொண்டே..மனைவி இடுப்புக்குத் தைலம் தேய்த்து விடலானாள். 

முரட்டுப் பரிதியின் கரம் அந்நேரம்.. ஒரு மென்மையைத் தான் அவளது மிருதுவான இடுப்பில் பிரயோகித்தது. 

அவனது கைகள் தந்த சூடு… உள்ளுக்குள் ஒரு கிறக்கத்தை தோற்றுவித்தாலும் கூட… 

அந்த கிறக்கத்தை வளரவிடாமல்.. கீழுதடு கடித்து.. உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு நின்றவளுக்கு,

 விழிகள்.. அவளையும் சொக்கத் தான் செய்தது. 

அவனது கை வன்மையில்.. மெல்ல மெல்ல.. வலி மட்டுப்படுவது போல இருக்க.. முற்றாக தைலம் தேய்த்து விட்ட பின்னரே மனைவியை விட்டவனுக்கு, அவளது முகத்தில் பரவியிருந்த சுகமான இதம்.. அவனையும் ஆட்கொள்ளத் தான் செய்தது. 

அவள் தலையணையில் ஓய்வாக சாய்ந்து.. பெருமூச்சு விட.. அவளே எதிர்பார்த்திராத நேரம்.. அவளது சிவந்த பாதங்கள் தனை.. மெல்லத் தூக்கி தன் மடி மீது வைத்துக் கொள்ளப் போக, அவனது செயலில் பெரிதும் பதறிப் போனாள் அவள்!! 

அவனிடமிருந்து தன் பாதங்களை விடுவித்துக் கொள்ள முயன்றவளாக, 

“என்ன பண்றீங்க பரிதீஈ?? .. முதல்ல என்னை விடுங்க.. எனக்கு தூக்கம் வருது..”என்று சொல்ல, அவனோ அவளது பாதங்களை இறுதி வரை விடுவதாகவே இல்லை!! 

அவளைக் காதல் சொட்டச் சொட்ட பார்வை பார்த்தவன், “சரி நீ படுத்துக்க.. நா… நான் உன் காலை பிடிச்சு விடறேன்..”என்ற வண்ணம்.. காலை இதமாகப் பிடித்து விடவும் செய்தான். 

அவளுக்கோ அந்த முரடனின் புது அவதாரம், உள்ளுக்குள் ஏதோ செய்ய.. மனதினை இரும்பாக்கிக் கொண்டு,

 “வேண்டாம் தயவு செஞ்சு வெளியே கிளம்பிப் போனால் போதும்.. உங்களுக்கு வேற வேலையே கிடையாதாஆஆ.?? .”என்று தாறுமாறாகக் கத்தவே செய்தாள் மென்னிலா. 

அவனோ.. கத்தும் மனைவியின் முகத்தை பாராமல்.. அவளது கால்களினை பிடித்து விட்டுக் கொண்டே,

 “இது தான் என் வேலையே.. என் வேலய பார்க்கவிடு ஆண்டாளு..” என்றவன்…அவளது கத்தல் மொழிகளையெல்லாம் காதிலேயே வாங்கிக் கொண்டது போல தோன்றவேயில்லை. 

அவன் நில்லாமல் கால்களைப் பிடித்து விடத் தொடங்க… அவன் கைகள் பிரயோகித்த இதத்திலேயே.. கொஞ்சம் கொஞ்சமாக அவள் வெறுப்பு மட்டுப்படவே செய்தது. 

மென்னிலா.. தன் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருக்கும் தன் மன்னவனைப் பார்த்தாள்.

 தென்னந்தோப்பில் அவன் அணிந்திருந்த அதே ஆர்ம்லெஸ் பெனியனுடனும், தோட்டியுடனும்… இன்னும் வேற்றாடை புனையாமல் அப்படியே நின்றிருந்தான் அவன்!! 

அவனது பக்கவாட்டு முகத்தைப் பார்த்த போது.. மருத்துவமனையில் தன் கைகளில் முகம் புதைத்து.. அழுத அந்த முரடனுக்குள்ளும் இருக்கும் ஈரம் நினைவு வரலானது. 

அதேசமயம்.. அவளைத் தள்ளிவிட்ட.. பார்வதியம்மாளை.. கொலைவெறி சிந்தும் கண்களுடன்.. அவள் கழுத்தை இறுக்கிப் பிடித்ததும் ஞாபகம் வந்தது அவளுக்கு!! 

அவளுக்கு ஒன்று என்றதும்.. பார்வதியின் கழுத்தை நெரிக்க முன்வந்தவன், ஏன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மாத்திரம் மௌனமாக.. அத்தனையையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தானாம்?

 சின்ன கேள்வி எழுந்து.. அவளது மனதை அலைக்கழிக்கலானது. 

அவளது கண்கள்.. அவளையும் மீறி.. அந்த வலிமையாளனின் உடல் எங்கணும் அணுஅணுவாகப் பதிந்து நோட்டம் விட ஆரம்பித்தது!! 

அலைஅலையான கேசம்.

அவனது பரந்த நெற்றியை பாதியாக மறைத்து வீழ்ந்திருக்க, அவனது அடர்ந்த தாடி கூட.. அவனது வலுவான கன்னத்தாடையை.. இன்னும் கொஞ்சம் கம்பீரமாகவே காட்டிக் கொண்டிருந்தது. 

கழுத்து நரம்புகள் ஓடும்… வியர்வை வழியும் கழுத்துவளைவு.

 அதனை அண்டினாற் போன்று.. யாழ் இரண்டினைப் பூட்டி செய்தாற் போன்றிருந்த செதுக்கிய மார்புகள். 

முறுக்கேறிய தோள்புஜங்கள்!! 

ஆகியவற்றைப் பார்க்கும் போது இவன் முரடனாக இருந்தாலும் அழகன் என்று சொல்லியது மனம்!! 

அவனது தோள்புஜத்தினோரம்.. பெரிய சிவந்த தடம் தெரிய.. மெல்ல சுருங்கியது அவளது விழிகள்!! 

அனிச்சைச் செயலாக.. அவள் கைகள் மேலெழுந்து.. மெல்ல.. அந்த சிவந்த தடத்தை வருடிக் கொடுக்க, 

அந்த சிவந்த தடத்துக்கான காரணம்.. ‘தென்னங்குலை தந்த காயம்’ என்று பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது அவளுக்கு. 

அவளையும், குழந்தையையும் காக்கத் தானே.. ஓடோடி வந்து.. தன்னுடலையே கேடயம் போல ஆக்கி.. அந்த காயத்தை அவன் வாங்கிக் கொண்டான்?? 

குழந்தையைக் காத்தவன் என்பதில் சின்ன கழிவிரக்கம் உள்ளுக்குள் முகிழ்க்க, மெல்ல எழுந்தவள்.. 

அவனது முறுக்கேறிய தோள்புஜத்திற்கு.. ஒரு முத்தமும் வைக்க, பரிதிவேல் வீரனின் காதல் உள்ளம் மெல்ல மலர்ந்தது. 

உள்ளுக்குள் ஏதேதோ… தீய எண்ணங்கள் மீண்டும் அவள் மனதினுள் முகிழ்க்க, மயக்கும் மாய விழிகளுடன்.. அவனை நோக்கி, 

“எனக்கு தைலம் தேய்ச்சு விட்டீங்க.. ஓகே…. நீங்க எதுவும் தேய்ச்சிக்கலையா மாமாஹ்…?”என்று கேட்டதும் தான் தாமதம், 

அவளுக்காக எதையும் செய்யக் காத்திருக்கும் உன்னதப் பரிதியின் முகம்.. அழகாக விகசித்தது. 

சற்றே தலை திருப்பி.. தன் தோள்புஜத்தைப் பார்த்தவன், அலட்டல் நிறைந்த முகபாவனையுடன், “இது ரெண்டு நாள்ல சரியாகப் போயிரும்.. நீ கேட்டதே போதும் ஆண்டாளு..”என்றவன்…அவளைக் காதல் மல்கப் பார்த்தான். 

தன் ஒற்றைப் பார்வைக்கே… துவண்டு தடுமாறும்.. கணவனின் செய்கை… 

அந்த தென்னந்தோப்பு சம்பவத்தின் பின்னர் நடிப்பாகத் தோன்றவில்லையாயினும் கூட… அவனது அந்த காதலும், இளகலும்.. ரொம்பவே பிடித்திருந்தது அவளுக்கு!! 

இதே போன்ற ஒரு மனோநிலையில் தானே… மென்னிலாவும் பரிதி மேல் உயிராக இருந்தாள்!! 

ஆனால் அவள் காட்டிய தூய அன்பை.. சுயநலத்துக்காக பயன்படுத்திக் கொள்ளவில்லை அவன்?? 

அதே போல… அவனது அன்பையும் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ள.. இதயம் துடிக்க, அவனிடம் எழுத்தில் சொல்லொணா பாசம் முகிழ்ப்பது போல நடித்தவள், 

காதலுடன் கடிந்து கொள்ளும் குரலில், “அது வரை ஒரு ஒயின்மென்ட் கூட தடவாம அ‌ப்படியே இருக்கப் போறீங்களா?? எனக்கு அடிபட்டா மட்டுமில்ல வலிக்கும்.. உங்களுக்கு அடிபட்டாலும் வலிக்கும் தான் மாமா.. நீங்க கொஞ்சம் சும்மா இருங்க…”என்று கணவனை அதட்டியவள், 

அறைக்குள் அங்கணம் நுழைந்த சமையல்காரம்மாளை நோக்கி, “சுடுதண்ணியும், துணியும் கிடைக்குமா..?”என்று கேட்க, 

சமையல்காரம்மாளுக்கும் கூட.. உள்ளூற, “சுடுதண்ணியும், துணியும் கொண்டா” என்று அதட்டாத மென்னிலாவின் இதமான தன்மை பிடித்திருக்கவே, 

மகிழ்ச்சியுடனேயே, “இதோ..”என்ற வண்ணம்.. கீழே ஓடினாள் சமையல்காரம்மாள். 

மனைவியின் அதட்டலில் நெஞ்சமெல்லாம் உருகிப் போக, “ஐய்யோ.. அதெல்லாம் தேவையில்லை ஆண்டாளு… அது.. கையை.. இப்படி.. ஒரு உலுக்கு உலுக்கி விட்டா சரியா போயிடும்..”என்றவன் காயம்பட்ட கையை காற்றில்.. ஒரு உதறல் உதற, அவளது விழிகளில் வன்மத்தின் பளபளப்பு இன்னும் அதிகமானது. 

அந்நேரம் பார்த்து சமையல்காரம்மாளும் அவள் கேட்ட ஆவனவற்றுடன் வர, துணியை சுடுநீரில் முக்கிப் பிழிந்து..

அவன் கையை இழுத்துப் பிடித்து வைத்து.. அவன் காயத்துக்கு வைத்து மெல்ல மெல்ல ஒத்தடமிடத் தொடங்கினாள் அவள். 

“ஐயோ.. இதெல்லாம் வேண்டாம் ஆண்டாளு.. நீயே ஹாஸ்பிட்டலில் இருந்து வந்த டயர்ட்ல இருப்ப.. நீ படுத்துக்க.. நானே ஒத்தடம் வைச்சுக்குறேன்” என்று அவள் நலனை அப்போதும் சிந்தித்தவனாகத் தான் சொன்னான் அவன். 

அவளோ.. சிறுபிள்ளைகள் போல அடம்பிடிக்கும் பிடிவாதக் குரலில், 

“நீங்க மட்டும்.. நான் சொல்லும் போது விட்டீங்களா? இல்லைல? அப்புறம் நான் மட்டும் எதுக்கு விடணும்?? நான் ஒத்தடம் கொடுத்து.. முடிக்கும் வரைக்கும் பேசாம இருங்க மாமா”என்று அதட்டி.. 

அவனை வாய் திறக்கவிடாமல் செய்தவள், அவனுக்கு மன முரண்டலுடனேயே ஒத்தடம் கொடுக்கலானாள். 

கொஞ்ச நாளாக எரிந்து எரிந்து விழும் மனைவி.. இன்று காட்டும் கரிசனை.. அவனை… வானத்தில் உயர உயர பறப்பது போல சுகத்தைக் கொடுக்க, 

கைகளை அவளிடம் ஒப்படைத்து விட்டு அமைதியாகவிருக்கலானான் பரிதி!! 

அவன் முகமோ.. அன்றலர்ந்த தாமரையின் முகம் போல.. புத்துணர்ச்சியுடன் இருக்க.. இதழ்களிலே அரும்பியது இளநகை!! 

ஒத்தடம் வைத்துக் கொண்டே.. கிறக்கம் மல்கும் குரலில், “மாமா?..”என்றாள் அவள். 

“ம்..?” என்றபடி அவளை நோக்கித் திரும்பினான் அவன். 

கண்களில் போலிக்காதல் இழையோட, “என்னை நீங்க எவ்வளவு காதலிக்குறீங்க..?”என்று கேட்டாள் அவள். 

அந்தக் கேள்விக்கு சற்றும் யோசியாமல்..தான் ஒரு வளர்ந்த ஆண்மகன் என்பதையும் மறந்து, ஒரு சின்னப்பையன் அளவு சொல்வது போல, தன் வாளிப்பான கைகளை காற்றில், அகல நீட்டியவன், 

“நெறய்ய்ய்யயயய…… காதலிக்குறேன் ஆண்டாளுஹ்.. என் உசுர விட உன்னய தான் காதலிக்குறேன்..”என்று சொல்ல.. அவளது கண்களில்.. கூரிய கத்தியின் பளபளப்பை ஒத்து.. மிளிரவாரம்பித்தது. 

சுடுதண்ணீர் கலத்தை சற்றே எட்டி டிராயர் மீது வைத்தவள், அவனது தாடி அடர்ந்த கன்னத்தை இரு கைகளில் ஏந்தியவாறு, உயிர் கரைக்கும் குரலில், “நெஜமாவா மாமா..?? அப்படீன்னா.. அதை ப்ரூவ் பண்ணுங்க..”என்று கேட்க,

 இதயத்தில்.. ஏதாவது செய்து அதை உணர்த்தி விடும் வேகம் பிறந்தது அவளுக்கு!! 

கைவிரல்களை மடித்து மடித்து திறந்தவாறு அலைப்புறுதல் மீதூற அவளைப் பார்த்தவன், “எப்படி ஆண்டாளு..?”என்று கேட்டான் அவனும். 

இது தான் சந்தர்ப்பமென்று.. பழிவெறியில் ஊறிப் போயிருந்தவளின் மூளையும் அறிவுறுத்த, தயக்கம் என்பது கொஞ்சமுமின்றி, 

அவனை நெருங்கி அமர்ந்து.. அவனது வலிய மார்புகளோடு தன் கொங்கைகள் அழுந்தப் பதிய,அவனைக் கட்டியணைத்தவாறு, 

அவனை ஆசை மீதூறப் பார்ப்பது போல அண்ணாந்து பார்த்தவள், “உங்க சொத்த என்பேர்ல.. எழுதி தந்துடுங்க மாமா..!!”என்றாள். 

என்ன தான்.. எடக்குமடக்காக கேள்வி கேட்டுவிட்ட பின்னரும் கூட.. அவளது இதயம் தாறுமாறாகத் தான் அடித்துக் கொண்டிருந்தது. 

‘சொத்துக்காகத் தான் இத்தனை இளக்கமா? .. ச்சீ’ என்று சொல்லி உதறித் தள்ளிவிட்டு சென்று விடுவானா என்ற பதற்றமும் அவளுள் புரையோடிப் போயிருந்தது. 

ஆனால் அவள் நினைத்ததுக்கு எல்லாம் நேர்மாறாக, வெள்ளந்தியாகப் புன்னகைத்தவன், “இதோ.. இப்பவே?”என்றவனாக அவளை விட்டும் எழுந்தவன், 

வாட்ரோப் லாக்கரை நாடிப் போய், அதிலிருந்து ஒரு வெல்வட் துணியால் ஆன ஒரு பெட்டகத்துடன்.. அவளை நோக்கி வந்தான். 

அவளோ.. அவனது செய்கை அறியாமல் விழி பிதுங்கி நிற்க, இவனோ, அந்த வெல்வட் பெட்டகத்தை திறந்தவாறே, 

“ இந்த உலகத்துலேயே.. நான் என்னைக்குமே சேர்த்து வைச்ச சொத்த சொத்தா நினைச்சதில்ல.. ஒண்ணுமே இல்லாம வந்தவன் தான் இந்த பரிதி.. மில்லு, பார்ம், டிராவல்ஸ்.. எல்லாம் எனக்குன்னு ஒரு.. சமூக அந்தஸ்த உருவாக்கிக்குறதுக்காக சேர்த்தது.. நாளைக்கே ஒண்ணு கெடக்க.. ஒண்ணு ஆச்சுன்னா… எல்லாமே கைவிட்டுப் போயிடும்.. ஆனால் தான் என்னைக்குமே பெருசா நினைக்குற சொத்து ஒண்ணு இருக்கு.. அது என் அம்மாவுடைய முத்து மாலை…”என்றவனாக பெட்டகத்தில் இருந்து முத்துமாலை எடுத்தவன், 

“இது தான் நான் பெருசா நெனக்குற சொத்து.. இனி மேல் இது உன்னோடது…”என்று மனம் கொள்ளா புன்னகையுடன் சொன்னவன்… அதை தன் மனைவிக்கு அணிவித்து விடவும் செய்தான்!! 

தாய் அணிந்திருந்த மாலையை.. தன் ஆண்டாள் அணிந்திருப்பதைப் பார்க்கப் பார்க்க.. பூரிப்பில் நிறைந்து போனது அவனது உள்ளம்!! 

அவளோ அவனது செயலில் உணர்ச்சியற்ற பாவத்துடன் நின்று விட, அவளது முகத்தை வைத்து.. அது ‘களைப்பு’ என்று தப்புக் கணக்கு போட்டவன், 

அவளை தலையணையில் சாய வைத்தவளாக, “ ரொம்ப அசதியா இருக்கே ஆண்டாளு.. கொஞ்சம் படுத்துக்க.. நான் இப்போ நம்ம டிராவல் ஏஜென்சி பக்கம் போக வேண்டியிருக்கு.. அப்புறம் வந்து பார்த்துக்கறேன்..”என்றவன்.. 

அவளது வரண்ட இதழ்களில்.. மின்னல் அடித்தது போல.. “பச்சக்” என்று.. சின்ன இதழ் முத்தம் ஒன்றை பரிசளித்து விட்டு.. உடைமாற்றிக் கொண்டே..கதவை சத்தமின்றி பூட்டிவிட்டு வெளியே செல்ல, 

அவளுக்கோ.. அவன் செய்கையில் உடம்பெல்லாம் திகுதிகுவென பற்றியெரிவது போல இருந்தது. 

முன்பொரு நாள் அவன் கட்டிய தாலியை.. அவனே ஊர்க்கோயில் தெருவில் அனைவர் முன்பாகவும் பறித்துப் பிடுங்கிச் சென்றது வேறு.. சமயாசந்தர்ப்பமே பாராது ஞாபகம் வர, அவன் அணிவித்த முத்துமாலைக் கழுத்து… அனல் பட்டது போல காந்தியது அவளுக்கு. 

அதிலும், ‘உலகத்திலேயே பெரிதாக மதிக்கும் சொத்து.. அது இது’ என்று அவன் டயலாக் விட்டதில்.. இன்னும் கொஞ்சம் வெறுப்பு மீதூற, 

“ய்யாருக்கு வ்வேணும்.. இந்த ம்முத்துமாலை?? அவனும், அவனோட பெரீய்ய்யஅஅஅ.. சொத்தும்!!” என்றவள், 

அவன் காதலோடு தந்த மாலையை ..பிடுங்கி விட்டெறிந்தாள் வெறும் தரையில்!!

அந்த மாலையில் கோர்க்கப்பட்டிருந்ததோ.. வெள்ளை முத்துக்கள் அல்லவா?? 

அவள் விசிறி அடித்த வேகத்தில்.. அறை எங்கணும் சிதறி ஓடின அவை!! 

அந்த நேரம் தான் அவள் எதிர்பார்த்திராத ஒரு நிகழ்வு நடந்தேறியது!! 

மருத்துவமனையில் இருந்து வீடு வந்திருப்பவளின் நலம் விசாரிப்பதற்காக.. கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த வாசு மாமா.. அவளது சொற்களையும், அவளது முத்துமாலை விசிறியடிப்பையும் பார்த்து ஸ்தம்பித்து நிற்க, 

அப்போது.. அவர் பாதத்தில் தட்டுப்பட்டு நின்றது.. உருண்டோடி வந்த ஒரு முத்து. 

மென்னிலாவுமே..எதிர்பாராமல் நுழைந்த வாசு மாமாவின் பிரசன்னத்தில்.. திடீரென்று கலங்கி நின்றது எல்லாம் ஓரிரு கணங்களுக்குத் தான்!! 

அதன் பின்.. அவரைக் கண்டால்.. அவளுள் முகிழ்க்கும், அலட்சிய பாவம் தலைதூக்கலானது அவளுக்குள். 

முத்தைக் குனிந்து, பொறுக்கி எடுத்தவர் கண்கள்..அதை கண்கள் இடுங்க ஆராய.. அது தன் மரித்த தமக்கை அணிந்திருந்தது என்பதை கண்டு கொண்ட கணம்.. கண்கள் வலியில் சிவந்தும் போனது. 

பொறுக்கி எடுத்த ஒரு முத்துடன்.. மென்னிலாவை நோக்கி ஓரெட்டு எடுத்து வைத்தவராக, 

சோகம் இழையோடும் குரலில், “இந்த மாலய நீ புடுங்கி எறியுறதை.. எம்.. மாப்ள மட்டும் கண்டிருந்தான்னா… ரொம்ப வேதனப்பட்டிருப்பான்மா.. அவன் உலகத்துலேயே பெருசா மதிச்ச சொத்து.. இது தான்.. ரொம்பப் பெரிய கஷ்டம் வந்தப்பவும்.. ஆருக்குமே குடுக்காத அவங்க அம்மா மாலைய உனக்கு குடுத்திருக்கான்னா… நீ அவனுக்கு எவ்வளவு முக்கியமானவள்’னு புரிஞ்சுக்க வேணாம்?? ”என்று அவர் சொல்ல, 

அதைக் கேட்டும் கேளாதவள்.. விட்டத்தை வெறித்துப் பார்த்தவளாக மஞ்சத்தில் அமர்ந்திருந்தாள் மென்னிலா. 

அவளது அலட்சிய பாவனையை சட்டை செய்யாமல் தொடர்ந்து சொல்ல நாடியவர், “உன்னய காதலிச்ச மாதிரி அவன் நடிச்சது தப்பு தான்.. அதுக்காக நீயும் நடிக்குறதூஊஊஊ.. ”என்று அவர் இழுக்க, 

இதுவரை அவரது முகத்தைத் திரும்பியே பார்க்காதவள், தன்.. குட்டு வெளிப்பட்டதில்.. உடல் வெளவெளக்க.. அவரைத் திரும்பிப் பார்த்தாள். 

அவரோ..தன் வசனத்தை பாதியிலேயே விட்டு விட்டு தீர்க்கமான குரலில், “நீ காதலிக்கற மாதிரி நடிக்கிறேன்னு தெரியும்!! உன் அடிமனசுல பழிவெறி கொளுந்து விட்டு எரிஞ்சிட்டிருக்குன்னும் தெரியும்.. ஆனால் அவன்… உன்னய.. இப்பவரை.. உயிரா நெனக்குறது தெரியுமா..?”என்று கேட்க, அப்போதும் விட்டேற்றியாகப் பார்த்துக் கொண்டு நின்றாள். 

ஆனால் அவரோ சற்றே உணர்ச்சி வசப்பட்டவராக, அடுத்து கேட்ட அடுக்கடுக்கான ‘தெரியுமா?’க்களில் ஆடிப்போய் நின்று விட்டாள். 

அப்படி அவள் ஆடிப்போய் நிற்குமளவுக்கு என்ன தான் கேட்டார் அவர்!! 

இதோ இவை தாம்! 

“அவன் தாய்… வள்ளியம்மைக்காக உன்னய பழிவாங்குறான்னு தெரிஞ்ச உனக்கு.. வள்ளியம்மை ஆருன்னு தெரியுமா? ..”

“வள்ளியம்மைக்கும், உனக்குமான சம்பந்தம்.. என்னான்னு தெரியுமா..?”

“அக்கா ஏன்.. உன்மேல் இப்படி கிறுக்குத்தனமா நடந்துக்குறான்னு தெரியுமா..?”

“நீ போன ரெண்டு வருஷத்துல இங்கன.. என்ன என்னெல்லாம் நடந்ததுன்னு தான் தெரியுமா?” என்று கேட்டுக் கொண்டே போக, 

தன் அலட்சிய பாவத்தை ஒதுக்கி வைத்தவள், ஒருவித தவிப்பு வதனத்தில்.. மிளிர வாசு மாமாவைப் பார்க்கலானாள் மென்னிலா. 

காதல் தானடி என் மீதுனக்கு? 

(பதில் விரைவில் நவில்வாள்.)

காதல் தானடி என் மீதுனக்கு? 

[22]

 

உலகின் முதுபெரும் காப்பியங்களான ‘மகாபாரதமாக’ இருக்கட்டும், ‘ராமாயணமாக’ இருக்கட்டும், இன்னும் ஏன் தென்னிந்திய காப்பியங்களான சிலப்பதிகாரமாகவே இருக்கட்டும்!! 

எல்லா காப்பியத்திலும் ஓர் அவலநிலைக்குள்ளான சூழ்நிலைக் கைதி என்ற பெயர் தாங்கும் கதாபாத்திரம் என்பது நிச்சயம் உண்டு!! 

மகாபாரதத்தில்.. ‘விதூரன்’ எப்படி.. தர்மத்தை சூது கவ்வும் போது.. முடக்கப்பட்டாரோ?

 இராமயணத்தில் ‘தசரதச்சக்கரவர்த்தி’ எப்படி… ‘இரு வரங்கள்’ கொடுத்து.. கையாலாகாத நிலைக்கு தள்ளப்பட்டாரோ? 

சிலப்பதிகாரத்தில், பாண்டி மன்னனின் மனைவி… தன் கணவனின் நீதிதவறியது கண்டு.. கையறு நிலைக்கு ஆட்பட்டாளோ?? 

அதே போலத் தான்.. இந்த வாசுமாமாவும்.. காலமும், பழி தீர்க்கும் வன்மமும் ஆடிய சடுகுடு ஆட்டத்தில்.. ஒரு அவலநிலை பாத்திரமாகவே ஆனார்!! 

தர்மநெறி அறிந்தும், பாஞ்சாலியை மானபங்கப்படுத்திய துச்சாதனனை… கடிந்து கொள்ளாமல்.. விதூரன் எப்படி ஊமையாக நின்றானோ?? 

அதே போலத் தான் வாசுமாமாவும்… மென்னிலா..பரிதியால் மானபங்கப்படுத்தப்பட்ட போதும்.. அதர்மத்தை தடுக்க முடியாத ஊமையாகித் தான் போனார்!! 

அப்படியாப்பட்ட வாசு மாமா.., ‘பெரிதாக… என்ன தான் கூறி விட முடியும்?’ என்ற இளக்கமான பார்வை அவளில் அப்பட்டமாக படர, வாசு மாமாவை கண்ணுக்கு கண்.. நேர்கொண்ட பார்வை தான் பார்த்தாள் மென்னிலா. 

அவருக்கும்.. தன் மருமகனின் மனைவி தன்னை ‘அசட்டை’செய்யும் அலட்சியப்பார்வை பார்ப்பது புரிந்தாலும்,தான் சொல்ல வேண்டியவனவற்றை.. தெளிவாக சொல்லி விட நாடியவர், 

உறுதியான குரலில், “நீ.. நெனச்சிட்டீருக்குற மாதிரி.. உன் தாத்தா ராஜமாணிக்கத்துக்கு ஒரு பொண்ணும், ஒரு பையனுமுன்னு.. இரண்டு பிள்ளைங்க கிடையாது… ராஜாமணிக்கத்துக்கு மெய்யாலுமே மூணு பிள்ளைங்க.. மூத்தது இரண்டும் ஆம்பள…கடைசியா ஒரு பொண்ணு.. அவங்க தான் உன் அம்மா சிவகாமி.. அதில் மூத்த பையனுக்கு பொறந்த ஒரே மகன் தான் என் மாப்ள.. ‘பரிதி வேல் வீரன்!!’ ”என்று சொன்ன கணம், 

‘பரிதிக்கும்-தனக்குமான உறவு ‘திருமண பந்தத்துக்குள்’ நுழையாமலேயே ஸ்தீரமானது’ என்பதை அறிந்து.. அவள் சற்றே ஸ்தம்பித்துப் போய் தான் நின்றிருப்பாள் என்று.. நீங்கள் கணித்திருப்பின் அது தவறு!! 

மாறாக ஒற்றைப் புருவம் மாத்திரம்.. சின்னதாக மேலுயர, “இஸ் இட்?” என்பது போல அலட்சியமாக நின்றிருந்தாள் மென்னிலா!!

பரிதியை மனதளவில் முற்றாக வெறுத்து ஒதுக்குபவளுக்கு… ‘பரிதியின் கதை’ என்ன.. ‘ராமகதை’ போல மிகவும் இனிக்குமா என்ன? என்ற இகழ்ச்சி வேறு அவளுள் தோன்றவும் செய்தது. 

மென்னிலாவின் முகம் காட்டும் அத்தனை அலட்சியங்களும், தான் உரைக்கப் போகும் விடயத்தைக் கேட்டு முடித்த பின்னர், நிச்சயம் மாறும்!! என்று தனக்குத் தானே நம்பிக்கை பூண்டவராக, தொடர்ந்து சொல்லலானார் வாசுமாமா. 

“அவன் ஏன்… உன்னய ஆசயா ‘மாமா மாமா’ன்னு வாயாற கூப்புட சொன்னான்னு இப்ப புரியுதா? .. ஏன்னா நீ சரவணனுக்கு மட்டும் மொறப்பொண்ணு கிடையாது.. பரிதிக்கும் நீ மொறப்பொண்ணு தான்!!” என்று சொன்ன போது… பழிவெறி ஊறிப் போயிருந்தவளுக்கும் கூட.. 

சரவணனை அவள் மாமா என்றழைக்கும் போது.. பரிதியில் மிளிரும், ‘பொஸஸிவ்னஸ்’ நினைவடுக்குகளில் வந்து.. போகத் தான் செய்தது. 

அவளது சிந்தனையை கலைக்கும் வண்ணம், தீவிரமான தொனியில், “உன் தாத்தா ராஜமாணிக்கம்.. அவரோட மூத்தபையன், ‘சந்திரசேகர்’, மேல அளவில்லாத அன்பு வைச்சிருந்தாரு.. பரிதியோட அப்பாவும்.. நல்லா படிச்சதால.. மேற்படிப்பு படிக்க.. உன் தாத்தா ‘சிலாப’த்துக்கு அனுப்ச்சாரு..

 சிலாபத்துல தான் என் அக்காவும்… பரிதியோட அப்பாவும் முதல் முறையாக சந்திச்சுக்கிட்டாங்க..பழகவும் செஞ்சாங்க.. காலப்போக்கில்.. இரண்டு பேரும் உயிருக்குயிரா காதலிச்சாங்க.. 

இந்த நெலமையில என் அக்கா கர்ப்பமானா.. எங்க வீட்ல தெரிய வந்து.. பெரிய பிரச்சனையா.. அது வெடிச்சது.. அப்போ நான் ரொம்ப சின்ன பொடியன்.. இன்னும்… என் அக்கா.. அப்பா திட்டத் திட்ட… அவர் முன்னாடி ‘கண்ண கசக்கிட்டு நின்னது ஞாபகம் இருக்கு..” என்ற போது.. நிஜமாகவே.. 

எண்பதுகளின் இறுதியில்.. அந்தக்கால இளசுகள் பெரிதும் விரும்பிய, ‘நடிகை நதியா’ ஸ்டைலில்.. சுடிதார் அணிந்து.. அடர்ந்த கூந்தலை பின்னி.. அதில் சாமந்திப்பூச் சூடி… தேவதை போல.. கண்ணை கசக்கிக் கொண்டு நின்ற தமக்கையின் முகம் ஞாபகம் வந்து போனது வாசுவுக்கு. 

அடுத்துப் பேசும் போதெல்லாம் அவர் முகம் இறுகிவாடியது போல கருக்க, 

“அந்த காலத்துல ‘காதல்’ன்றது சும்மா இல்லமா.. கொலையே பண்ணது போல தான்.. காதலிச்சவங்களை பார்த்தாங்க.. காதல்ன்றது அவங்கள பொருத்தவரையில.. பெரிய்ய்ய பாவம் போல நெனப்பு.. அதுல என் அக்கா கல்யாணமாறதுக்கு முன்னாடி.. கர்ப்பமானது வேற.. பெரிய்ய குழப்பமா போயிருச்சு.. அக்காவ ஏத்துக்க விரும்பாத அப்பா.. என் அக்கா வள்ளியை.. வீட்ட விட்டே அனுப்பிப் போட்டாரு… 

அதுக்கு மேல தன்னோட காதல் விவகாரத்த மறைச்சு.. வைக்க விரும்பாத பரிதியோட அப்பா என் அக்காவ.. முறைப்படி தாலிகட்டி.. அவர் ஊருக்கு கூட்டிப் போனாரு..”என்று சொல்ல, அசிரத்தையாக கேட்டுக் கொண்டிருந்தவளின் விழிகளும் மெல்ல இடுங்கத் தான் செய்தது. 

அதன்பிறகு தானே.. இரு தலைமுறைப் பெண்கள் அவதியுறும் அத்தனை சூட்சுமக் கட்டங்களும் வழிவகுக்கப்பட்டன!! என்று தோன்றியதோ??

 இல்லை வேறேதேனும் காரணமோ, அவற்றை சற்று உன்னிப்பாகக் கேட்கலானாள் மென்னிலா. 

வாசு மாமாவும், இளகிய குரலில், “படிக்கப் போன மகன்.. வாயும் வயிறுமா.. கருவை சுமந்துக்கிட்டு இருக்குற ஒரு பொண்ணோட வந்து நிக்குறானேன்னு ராஜமாணிக்கமும் எல்லா அப்பாக்களையும் போல கோபப்பட்டாரு.. ஆனா தன் மகன் மேலேயுள்ள பாசத்தால.. ரெண்டு பேரயும் மன்னிச்சு ஏத்துக்கிட்டாரு.. என் அக்கா வள்ளியம்மையும் அங்க சந்தோஷமா தான் வாழ்ந்தா.. ஆனால் எல்லாமே கொஞ்ச காலத்துக்கு தான்!! எல்லாமே அந்த விஷயம் தெரிய வரும் வரைக்கும் தான்!!!”என்றவரின் கண்கள்.. இமைகளோரம் இலேசாக பனித்திருந்தன. 

அடுத்த நொடி.. அவர் முகம் கொஞ்சம் விகாரமாக மாற, “அப்போ தான் ஒரு விஷயம் தெரிய வந்தது.. வள்.. ளி.. யம்ம ராஜமாணிக்.. கத்தோட.. ஜாதியில்லைன்றதூஊ!! .. ஜாதியவே பெருசா நினைக்கிற மனுஷன் உன் தாத்தா ர்ராஜ்ஜம்மாஆணிக்கம்!!..”என்றவர் சட்டென நிறுத்தினார். 

தொண்டையில் அடைத்த அந்த நாள் நினைவுகளின் பாரத்தில், நாவு இயல்பாகவே தழுதழுக்க,

 “பரிதியோட அப்பா.. ஒரு சின்ன யாவாரம் விஷயமா.. (வியாபாரம்) வெளியூர் போயிருந்த நேரம்.. தன் வீட்டு வாரிச.. கருவுல சுமந்துக்கிட்டு.. நிக்குற.. பிள்ளைத்தாச்சின்னு கூட பார்க்காமல்.. அவள.. நடுரோட்டுல நிறுத்தி…”என்று சொல்லிக் கொண்டிருந்த கணம்.. பட்டென்று இடையிட்டுக் கேட்டது மென்னிலாவின் எகத்தாளமான குரல்!! 

வாசுவை மேலிருந்து கீழ் வரை.. விழிகளில் இகழ்ச்சியோட பார்த்தவள், 

“எனக்கு நடந்த மாதிரியே.. வள்ளியம்மையை.. நடுத்தெருவில் நிறுத்தி.. அவமானப்படுத்தினாரு.. அதானே….??”என்று இலகுவாகக் கேட்டாள் மென்னிலா. 

ஓர் கர்ப்பிணிப் பெண்… ‘ஜாதிவெறி’ என்னும் கொடும் அரக்கனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதை.. அவர் உணர்ச்சிபூர்வமாக சொல்லிக் கொண்டே இருக்க, மனமே இளகாமல் பேசுகிறாளே இவள்?? என்று வியந்து தான் பார்த்தார் வாசு மாமா. 

ஆனால் மென்னிலாவுக்குமே.. அடிநாவில் துடித்துக் கொண்டிருந்த.. இன்னும் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் பாக்கி இருந்தது. 

தன் மிடுக்கான தோரணையில் நிமிர்ந்தவள், போலியாக இளகுவது வெளிப்படையாக தெரிய, 

“என் தாத்தா ராஜமாணிக்கம்.. ஒரு குழந்தய சுமந்து நின்ன..உங்க அக்காவ ஈவிரக்கமேயில்லாம மானபங்கப்படுத்தி… விரட்டியடிச்சாரு.. ஆனால் உங்க மாப்ள?? அப்படி.. ஏதும்.. ரொம்ப எக்ஸ்ட்ரீமா பண்ணாம… தாலி கட்டின மறுநாளே… தாலிய பறிச்சு மானபங்கப்படுத்தி.. விரட்டினான்.. குழந்த வர்ற வரைக்கும் காத்திருந்து என்னை மானபங்கப்படுத்தலை.. அதனால.. அவன் கொஞ்சம் இரக்கமுள்ள கெட்டவன்னு சொல்ல வர்றீங்களா மிஸ்டர். வாசு?”என்று கேட்க,

அவளிடம் என்ன சொல்லிப் புரிய வைப்பது என்று புரியாமல் நின்றார் வாசு. 

இயலாமை நிறைந்த குரலில், “யம்மாஆ.. நான் அவன் நல்லவன்னு சொல்ல வரல.. நீ பரிதியோட நிலையில் இருந்து சிந்திச்சு பாருமா’ன்னு தான் சொல்ல வரேன்.. அத ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குற?உனக்காவது..ஒரு அநியாயம் நடந்தப்போ.. உன்னய ஆதரவா தோள் தாங்கிக்க உன் அம்மா இருந்தாங்க.. ஒரு குடும்பம் இருந்தது.. ஆனால் என் அக்காவுக்கு??பரிதிக்கு?”என்று சொன்ன வாசு மாமா, வாயிலிருந்து, 

அப்போதா ‘ஆதரவா தோள் தாங்கிக்க உன் அம்மா இருந்தாங்க..’என்ற வசனமும் வெளிவர வேண்டும்!! 

‘அம்மா’ என்ற ஒற்றை சொல்லில்.. பழைய வன்மங்கள் எழுந்து.. அவளது மனத்தின் கசையடிகளை மீண்டும் உயிர்ப்பித்து விட்டுச் செல்ல, சிவந்த நயனங்களுடன்.. அவரையே வெறித்துப் பார்த்தாள் அவள். 

அவளுடைய மனவோட்டங்களை அறியாத வாசு மாமா, “வள்ளி அக்கா.. அந்த ஊர்மக்கள் முன்னாடி தலகுனிஞ்சு நின்ன அவமானத்துல.. அந்த ஊர விட்டு வந்துட்டாங்க.. அக்கா எங்க கிட்டேயும் வரல.. பரிதியோட அப்பாவ தேடியும் போகல.. தனியா.. வயித்துல பிள்ளையோட.. எங்க போனாங்க’ன்னு ஆருக்குமே தெரியல… 

அப்புறம் பத்து வருஷம் கழிச்சு அம்மா, அப்பா இறந்தப்புறம்.. பார்வதி அக்காவும், நானும்… வள்ளி அக்காவ தேடி.. சிறுத்தோப்பு கிராமத்துக்கு வந்தோம்.. பரிதியோட அப்பா..யாவாரம் விஷயமா வெளியூர் போனப்பவே கார் ஆக்ஸிடென்ட்ல போய் சேர்ந்தது எங்களுக்கு தெரிய வந்தது..

அப்புறம் அக்காவ பத்தி விசாரிச்சு பார்த்ததுல.. ஊர்மக்கள் மூலமா நடந்தது தெரிய வந்து.. நாங்க அக்காவ.. தீவிரமா தேடிப் போனப்ப..அவங்க புத்தளத்துல இருக்குறதா தகவல் வந்தது.. 

அங்க.. ஒரு சின்ன குடில் வீட்டுல… தன்ன சுத்தி நடக்குறது என்னான்னே தெரியாத.. மனசு பாதிக்கப்பட்ட.. என் அக்கா.. வ தான் நான் பார்த்தேன்…”என்றவரின் கண்கள்.. தன் வயதினை மீறி.. ஒரு சின்னப் பெண் முன்னிலையில் அழுவதைப் பற்றி சட்டை செய்ய முடியாதளவுக்கு அழுகை பொங்கியது!! 

‘எண்பதுகளின் இறுதியில்.. நடிகை நதியாவை நிகர்த்த அழகுடனும், ஸ்டைலுடனும் வளைய வந்த.. வாசுவின் அழகான தேவதை அக்கா… மனம் பிறழ்ந்த நிலையில்… தன் சொந்த தம்பியைக் கூட.. அடையாளம் காண முடியாதவாறு… 

குடிசைக்குள் நுழைந்த வாசுவைக் கண்டு.. சுவரோடு சுவராக பல்லி போல அச்சத்தில் ஒன்றிய வள்ளியம்மையின் ஞாபகம் வந்து.. அவரது நெஞ்சைக் குத்திக் கிழித்தது!! 

வள்ளியம்மைக்குத் தெரிந்த ஒரே ஜீவன்.. ஒரே உறவு… ஒரே உலகம்.. அது அவரது குழந்தை பரிதி!! அவனைத் தவிர.. யாரைக் கண்டாலும்.. ஒருவித அச்சம் சூழ… ஒடுங்கிப் போனார் தேவதை வள்ளியம்மை!! 

விரல்களால் கண்களைக் கசக்கியவாறு, நிமிர்ந்து அவளைப் பார்த்தவர், “பரிதிய நாங்க கண்டெடுத்தப்போ.. பரிதிக்கு அப்ப பத்து வயசு… பரிதிக்கு மத்த குழந்தைங்க மாதிரி கொழந்தப் பருவம் அமையல.. பத்து வயசு பையனுக்கு.. என்ன என்ன தெரியக் கூடாதுன்னு.. பெத்தவங்க.. குழந்தங்க கிட்டேயிருந்து மறைப்பாங்களோ..அது அத்தனயும் அவனுக்கு தெரிஞ்சிருந்தது…” என்றவரின் இதயம் இறுகி வாடியிருந்தது. 

அடுத்து வாசு மாமா சொன்னதில்.. மென்னிலாவின் கல் நெஞ்சம் கூட… பரிதியின் நிலையை எண்ணி கசிந்துருகத் தான் செய்தது. 

“நீயே யோசிச்சுப் பாரு.. இளமையான.. மனசு பாதிக்கப்பட்ட அம்மா, ஆண்துணையில்லாத குடிச வீடு.. வயித்துக்கு லோல்பாடு.. ஆண்துணையிருக்கற இந்த சமுதாயத்துலயே.. கண்ணாலயே..துகிலுறிக்குற துச்சாதனங்க பல பேருனா… என் அக்கா நெலம?? பத்து வயசு பரிதியோட நெலம?? அந்தச் சின்ன வயசுல அம்மாவ.. பொறுக்கி பசங்க கிட்டயிருந்து காக்குற தாயுமானவனா ஆனான் எம் மாப்ள..!! தன் அம்மா வயித்தையும், அவன் வயித்தையும் நிரப்புறதுக்காக… சின்ன வயசுல வேலைக்கு போனான்மா.. ஒரு பக்கம் தாய காத்துக்கிட்டு.. வேலைக்கும் போய்க்கிட்டு.. நாங்கலாம் கனவுலயும் நெனச்சிப் பார்க்க முடியாதளவுக்கு.. அவனோட ஒவ்வொரு நாளும் போராட்டமானதா தான் கழிஞ்சது..”என்று தன் சோகத்தை உள்ளுக்குள் பொசுக்கிக் கொண்டு… அங்கு நேர்ந்த கொடுமைகளை… 

அப்பட்டமாக விளக்காமல்.. மென்னிலா துல்லியமாக அவற்றைப் புரிந்து கொள்வாள் என்று கணித்து.. சற்றே நாகரிகமாகவே சொன்னார் வாசு மாமா. 

ஆனால் இதைக்கேட்டுக் கொண்டிருந்த மென்னிலாவுக்கோ.. சிந்தனையில் வந்து போனது எல்லாம் வேறு விஷயம்!!

பரிதி கெட்டவனேயானாலும் கூட, சரவணனைப் போல பரத்தைப் பெண்களைத் தேடிப் போகாதிருந்தமையும் சரி, மஞ்சுளாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு.. முதன்மையாக குரல் கொடுத்த போதும் சரி.. 

தாலி கட்டிய பின் தான் அவளைத் தொட்ட போதும் சரி…ஆக மொத்ததில்.. ‘ஒரு பெண்ணை அத்துமீறி தொடாததற்கு காரணம்’ 

அதனால் ஒரு பெண் அடையும் வலியை’ தன் தாய் வாயிலாக அவன் சின்ன வயதில் இருந்து.. பார்க்க நேர்ந்ததுவா காரணம்?? என்றே எண்ணத் தோன்றியது அவளுக்கு!! 

சரிவரக்கிடைக்காத குழந்தைப்பருவம்.. போராட்டமாக கழிந்த குழந்தைப் பருவம் கொண்ட பரிதியை.. அள்ளி அணைத்து.. நெஞ்சாங்கூட்டில் புதைத்து.. ஆறுதல் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் பிறக்க, திகைப்பூண்டை மிதித்தது போல ஆனாள் அவள்!! 

எதிரியின் மேல் கழிவிரக்கம் கொள்வதா?

 கூடாது.. கூடவே கூடாது!! தனக்குத் தானே உரைத்தவள்.. மனதை அதட்டி அடக்கிக் கொள்ளலானாள்.

வாசு மாமாவோ “ அதுக்கப்புறம் நானும்..அக்காவும்.. வள்ளியக்காவ.. ஒரு நல்ல டாக்டர்ட்ட கூட்டிப் போனோம்..பரிதிய எங்க கிட்ட ஒப்படைக்கத் தான்.. வள்ளியக்காவும்.. உயிர கையில பிடிச்சிட்டிருந்தாங்களோ என்னவோ?.. கொஞ்ச நாள்லேயே வள்ளியக்கா போய் சேர்ந்துட்டாங்க.. அப்புறம் பரிதிய கட்டுக்குள் கொண்டு வர்றது ரொம்ப கஷ்டமா ப்போயிருச்சு.. ரொம்ப முரடனா ஆனான் பரிதி.. ஆர் பேச்சும் கேக்க மாட்டான்.. எல்லார் கூடயும் அடிதடி சண்டக்கு போனான்.. ஸ்கூல்ல சேர்த்து விட்டோம்…அங்க வாத்தியார் அடிச்சாருன்றதுக்கா.. இவன் திரும்பி அடிச்சு தகராறு ஆக.. அதுவும் சரி!!… ஒரு நாள் மட்டும் பள்ளிக்கூடம் போன பையன்னா அது பரிதி தான்.. பார்வதி அக்கா.. அவன் சேட்ட தாங்க முடியாம அடி வெளுத்த நாட்களும் உண்டு.. ” என்று சொல்ல… அன்றொரு நாள் அப்படியொரு தருணம்.. 

மாட்டுக் கொட்டில் வைக்கோல் மீது படுத்துக் கொண்டே.. எண்ணெய் தேய்த்தவாறு.. ஆண்டாள் கதை சொன்ன நினைவுகள் எழுந்தது வாசுவுக்குள். 

 என்ன தான் முயன்றும் மென்னிலாவின் இதயம்.. அந்த முரடனின் பால் இளகத் தான் செய்தது!! 

********

ஆனால்.. அங்கே..இதே சமயம்.. தன்னுடைய டிராவல் ஏஜென்சியின்.. தலைமைக் காரியாலயத்தில் பழைய நினைவுகளின் அலைக்கழிப்பில் அமர்ந்திருந்தவனுக்கு, பார்வதியம்மாளின் ஞாபகம் வந்து போனது. 

இந்த அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமான.. அதே குரூரி பார்வதியம்மாள்!! பிஞ்சு மனதில் வன்மம் விதைத்த பார்வதியம்மாள்!! 

தன் தாயின் தமக்கை.. உருண்டு திரண்ட பெரிய அதரங்களில் பழிவெறி மின்ன.. பதினோரு வயதான பரிதியை நாடி வந்து, 

“நீ.. ம்முரடனா இருக்கலாம் தப்பில்லைய்ய்.. ஆனா அந்த முரட்டுத்தனத்த.. உன் அம்மாவயும், உன்னயும் இந்த நெலமைக்கு ஆளாக்கினவங்க கிட்ட காட்டூஊஊ… ப்பரிதீஈஈ…”என்று சொல்ல, சிறுவனுக்கு அப்போது ஒன்றுமே புரியவில்லை. 

பாவம்.. சிறுவனல்லவா?? அந்தக் குரூரி பார்வதியம்மாளை.. மலங்க மலங்கத் தான் பார்த்தான் பரிதி!! 

பார்வதியின் முகத்தில்.. தன் இளமையை அனுபவிக்க முடியாத அளவுக்கு.. தன் நேசம் வைத்திருக்கும் ஒரே தமக்கையின் நினைவுகள் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தன. 

தாயாய் நினைத்த தமக்கையின் வாழ்க்கையை பாழடித்த ராஜமாணிக்கத்தையும்.. அவன் குடும்பத்தையும் பழிதீர்க்கும்… எரிக்கும் வன்மங்கள் வந்து போக…, 

பழிதீர்ப்பதற்கென்றே வாழ முடிவு செய்த அந்த மனித ஜந்து, பரிதயின் தோளில் கையிட்டவளாக,

 “நான் என்ன சொல்றேன்னு ய்யோசிக்குறீய்யாஆஆ… நீ ர்ராஆஆஜாஆ மாதிரி வாழ வேண்டியவன்.. உன்னய இந்த நிலமைக்கு ஆளாக்கினது ஆஆஆர்னு தெரியும்மோஓஓ பரிதிக் கண்ணாஆஆ…?? உன் அம்மா ஆத்மா சாந்தியடைய வேணாம்?? உங்க அம்மா ஆத்மா சாந்தியடைய என்ன செய்யணும்னு நாஆன் சொல்லித் தரேன் பரிதிக் கண்ணாஆஆ…” என்று அவள் உரைத்த அந்தப் ‘பரிதிக் கண்ணா’.. அது அவனது தாய் உரைக்கும் ‘பரிதிக் கண்ணா’.. அதில் சர்வமும் கரைந்துருக நின்றான் முரட்டுப் பரிதி!! 

பார்வதியோ, சூட்சுமப் புன்னகை தவழ, விழிகள் பழிவெறியில் அகல விரிய, “.. உன்ன இந்த நெலமைக்கு ஆளாக்கினவங்கள.. எப்படீஈஈ… உன் அம்மாவும், நீயும் அடைஞ்ச அதே வேதனைய அடைய்ய்ய.. வைக்கிறதுன்னு.. ந்நாஆன்.. உனக்கு சொல்லித் தர்றேன் பரிதிக்கண்ணாஆஆ” என்ற வண்ணம்.. ஒரு தீய பாதைக்கு இட்டுச் சென்றது தான்… 

ஒன்றுமில்லாதவன்.. பழிவெறி ஒன்றையே மூச்சாகக் கொண்டு, தன் இளமை காலத்துக்கேயுரிய ஆசாபாசங்கள் துறந்து.. மிகப்பெரும் செல்வந்தனாக முன்னேறி.. தன் பழிவெறியைத் தீர்த்துக் கொண்டான் தான்!! 

ஆனால் அதன் பின் அவன் அடைந்த வலி?? 

தன் மேல் உயிரையே வைத்திருந்த ஆண்டாள் மீது நேசம் வைத்திருந்தும்… நடிப்பது போல நெருங்கிய போது நெஞ்சோடு உண்டான குற்றவுணர்வு வலி?? .. 

ஒரு அபலைப் பெண்ணை மானபங்கப்படுத்திய வலியை.. இப்போதும் சுமந்து நிற்க வேண்டியதாகப் போயிற்று!! 

******

அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லியவர், தன் மருமகன்.. அவள் பால் பூண்டிருக்கும் அன்பை சொல்லிக் காட்ட நாடி, 

“சின்ன வயசுல அவன் மன ஆறுதலுக்காக.. நான் சொன்ன ஆண்டாள் கத.. அவன் மனசுல.. ஆழமா பதிஞ்சு போயிரும்னு நான் கனவுல கூட நெனக்கல.. ‘எனக்கான ஆண்டாள் கண்டிப்பா வருவா மாமா’ன்னு அவன் ஆணித்தரமா நம்பினான்மா….

 ஒருதடவ உன் ஸ்கூல் ஃபங்க்ஷன்ல வைச்சு உன்னய ஆண்டாள் வேஷத்துல பார்த்ததும்.. நீ தான் அவனோட எதிரி.. ராஜமாணிக்கத்தோட பேத்தின்றது தெரியாமலேயே.. உன்னய தன் ஆண்டாளா நெனக்க ஆரம்பிச்சிட்டான்… 

அவன் உன்னய பழிவாங்குறதுக்காக காதலிச்ச மாதிரி நடிச்சேன்னு நெனச்சிட்டிருக்கீயா?? அதுதான் இல்ல.. நீ ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி.. அவன பார்க்க.. ராத்திரியில் வீடு தேடி வந்தப்போ.. உன்னய ஊர்க்கோயில் தெரு முன்னாடி விட்டுப்போட்டு வந்துட்டு… பால்கனியில நின்னு..அவதியில நின்னுட்டிருந்த அவன் முகம் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு!! 

அப்போ நான், ‘ஏன் மாப்ள.. நீ அவள காதலிக்கிறேல்ல?ன்னு கேட்டேன்’.. அப்போ அவன் மனசுல காதல் இல்லாமல் இருந்திருந்தா.. ‘எல்லாமே நடிப்பு தான் மாமா’ன்னு சொல்லியிருக்கலாம்… 

ஆனால் அவன் என்ன சொன்னான் தெரியுமா.. ‘காதல் மனுஷன பலவீனமாக்கும்.. நான் என்னய பலவீனமாக விட மாட்டேன்’னு சொன்னான்… உன் மேல அவன் வைச்சியிருக்குற காதல்.. எங்கே அவன பலவீனமாக்கி..அது ராஜமாணிக்கத்த பழிவாங்க விடாம பண்ணிருமோன்னு ரொம்ப பயந்தான்…”என்றவர்,

அவஸ்தை நிறைந்த குரலில், “ அவன் நெஜமாலுமே உன்னய காதலிச்சான்மா..”என்று முக்கியமான விடயத்தை சொல்ல வாய் திறந்த போது.. அதற்கு விடாமல்…. அவர் முன்னாடி இரு கை கூப்பி நின்றிருந்தாள் மென்னிலா. 

அவளது நாசி நுனியோரம் செக்கச் செவேலென சிவந்து, கண்களில் உவர்நீர் கருக்கட்ட, நா தழுதழுக்க, “ப்ளீஈஈஸ்ஸ்.. இப்.. போ.. ஒ.. ந்.. நான் எதையும் கேட்கிற நிலை.. மையில் இல்லை.. உங்க பழைய பஞ்சாங்கத்துல பாதி.. என் அம்மா ஏற்கனவே சொன்னது தான்.. ப்போதும் நிறுத்து.. ங்க!!… நீங்க எவ்வளவு சொன்னாலும், ‘அவன் செய்தது தப்பில்லை’ன்னு ஆகாது..அதுக்காக என் தாத்.. தா.. செய்ததை நான் சரின்னு சொல்ல வரலை.. ஆனா நான் உங்க அக்கா வள்ளியம்மைக்கும் சரி.. பார்வதிக்கும் சரி.. என்ன பண்ணேன்..?? நான் பரிதி மேல வைச்ச.. சுயநலமி… ல்லாத காதல்.. அது என்ன பண்ணுச்சு?? .. அதுக்காக அவனோட வலியை.. பழிவெ.. றியை.. என் மேல திணிச்.. சது எந்த வகையில் ஞா… ஆஆய்யம்..??” என்று சொல்ல, 

சிசு சுமந்து நிற்பவள் அழுவது.. மன வருத்தத்தைக் கொடுத்தது வாசுவுக்கு. 

இருப்பினும் இறுதியாக முயன்று பார்க்க நாடியவர், “அதில்லமா..நீ போன இரண்டு வருஷத்துல..”என்று மீண்டும் தொடங்க, 

“ப்ளீஈஈஸ்ஸ்.. இப்போ நான் எதையும் கேட்குற மூட்ல இல்லை.. நிம்மதியாஹ்.. இருக்கஹ் விடுங்கஹ்.. ப்ளீஈஈஸ்” என்றபடி திறந்திருந்த கதவினைக் காட்ட.. இங்கிதம் தெரிந்த வாசு மாமாவும்.. அமைதியாக தலையைக் குனித்துக் கொண்டே வெளியேறலானார். 

அவர் கதவைத் தாண்டியதும் தான் தாமதம்… முகத்தில் அடிப்பது போல கதவு அறைந்து சாத்தியவளுக்கு, மனதுக்குள் அழியாத எரிமலைக் குழம்புகள் தீப்பற்றியெரியவாரம்பித்தது. 

அதன் வெம்மையில் உடல் முழுவதும் எழுந்து தகிக்க, கதவிலேயே முதுகு சாய்த்து.. நின்றவளுக்கு.. பீறிட்டுக் கொண்டு வந்தது அழுகை!! 

கதறி அழுதவளுக்குள்ளே, ஆயிரத்தெட்டு எண்ணங்கள் உள்ளே உதிக்கலாயிற்று!! 

விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டே முணுமுணுக்கும் குரலில், “காதல் இருந்துட்டு…. ப்பழி.. வ்வாங்குறதுக்கு பேர் தான் காதலாஆஆ பரிதீஈஈ..? உன்னோட தாயே வந்து உனக்காக பரிஞ்சு ப்பேசினாஆஆலும்.. என் உடம்புல கடைசிச் சொட்டு உசுர் இருக்குற வ்வரை..நீ பண்ண துரோகத்தை மன்னிக்க ம்மாட்டேன் பரிதீஈஈ”என்று கண்களில் வன்மம் தெறிக்க சொன்னவள்.. 

அன்று சற்றே நிதானித்து, என்ன தான் அவன்மேல் கோபம் இருந்தாலும் கூட, அவள் இலங்கையை விட்டுச் சென்ற இருண்டு.. இரண்டு வருடங்களில், ‘என்ன நடந்தது?’என்று, வாசு மாமா சொல்ல வருவதை… கொஞ்சம் காது தாழ்த்தி அவள் கேட்டிருக்கலாம்!! 

அப்படி கேட்காமல் போனதுவும் கூட.. அவளது துரதிர்ஷ்டம்!! 

காதல் தானடி என் மீதுனக்கு? 

(பதில் விரைவில் நவில்வாள்.) 

 

 

14 thoughts on “காதல் தானடி என் மீது உனக்கு!-20&21 (விஷ்ணுப்ரியா)”

  1. Мы предлагаем оформление дипломов ВУЗов по всей Украине — с печатями, подписями, приложением и возможностью архивной записи (по запросу).
    Документ максимально приближен к оригиналу и проходит визуальную проверку.
    Мы гарантируем, что в случае проверки документа, подозрений не возникнет.

    – Конфиденциально
    – Доставка 3–7 дней
    – Любая специальность

    Уже более 2118 клиентов воспользовались услугой — теперь ваша очередь.

    [url=http://inforepetitor30.ru/]Уточнить здесь[/url] — ответим быстро, без лишних формальностей.

  2. Купить новогодние украшения для дома в Москве легко через интернет магазин. С помощью таких покупок ваш дом станет более уютным и нарядным.
    [url=https://novogodnij-dekor.ru/]Новогодние украшения для дома интернет магазин[/url]
    Интернет-магазины предлагают широкий ассортимент новогодних украшений, начиная от гирлянд и заканчивая елочными игрушками. Это позволяет легко выбрать именно то, что вам нужно для вашего дома.
    Не забывайте, что многие интернет-магазины предлагают выгодные акции и скидки на новогодние товары. Приятные скидки на новогодние товары делают шопинг еще более привлекательным.
    Доставка украшений из интернет-магазинов упрощает процесс, так как вам не нужно выходить из дома. Просто выберите все необходимое в интернет-магазине и закажите доставку.

Leave a Reply to Uma Stalin Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top