ATM Tamil Romantic Novels

காதல் தானடி என் மீது உனக்கு!-26, 27 &28(விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு? 

[26]

அடுத்த நாளில் புலர்ந்த பகலைக் கௌவிக் கொண்ட.. அடர்ந்த இருள் சூழ்ந்த இரவினிலே.. 

தலைவனினதும், தலைவியினதும் அறையினிலே… 

நிகழ்ந்த.. காதல் தருணம் அது!! 

அவளைப் பொறுத்தவரையில் அது காதல் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் பரிதிவேல் வீரனைப் பொறுத்தவரையில்.. 

அந்த இருளின் ஒவ்வொரு செக்கனும் கூட.. உன்னதக் காதலால் நிரம்பி வழிந்தவை!! 

அன்றும் போல இன்றும்.. அறையின் டெராஸ் வழியாக… வானத்தில் தெரிந்த வெண்ணிலவை.. வெறித்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தது பரிதியின் மென்னிலவு!! 

அவளுடைய குரூரத் தாத்தா ராஜமாணிக்கத்துக்கும், ‘பொம்பளைப் பொறுக்கி’ சரவணனுக்கும்.. ஊரார் பார்வையில் கிடைத்த இழிவாகட்டும், 

சட்டத்தின் பார்வையில் கிடைத்த சிறை தண்டனையாக இருக்கட்டும்… எல்லாமே அவனால் நிகழ்ந்தது என்பதை அறிந்த போது.. 

உள்ளுக்குள் சின்ன மகிழ்ச்சி முகிழ்த்த போதிலும் கூட, இதை இரண்டு வருடங்களுக்கு முன்னரே செய்யாமல்.. 

அவளையும், அவள் காதலையும் பகடைக்காயாக வைத்து அவன் தாயம் ஆடியதை… 

என்ன தான் முயன்றும்.. மறக்கத் தான் முடியுமா? 

அவளுள் இருந்த நேசம்… அது அவனால் துரோகத்துக்கு ஆளான போதும்.. மென்னிலாவுக்குள்.. தன் ஆகாயச் சூரியன் மீது இத்தனை வன்மமும், குரோதமும் இருந்ததா என்ன? 

இல்லை சர்வ நிச்சயமாக..அப்படியேதேனும் வன்மம் இருக்கவேயில்லை அவளுள்!! 

அவனைப் பழி தீர்க்க வேண்டும் என்ற வன்மமும், அவள் அனுபவித்த அதே வலியை அவனும் அனுபவித்தே தீர வேண்டும் என்ற குரோதமும் ஆரம்பமானது எப்போதாம்?? 

இவை எல்லாமே ஆரம்பமானது அவள் சந்தித்த எதிர்பாராத இழப்பினால். அது அவளது தாயின் இழப்பு அது!!

அந்த இழப்பு அவளுள் நீங்காத ஒரு வன்மத்தை கொழுந்து விட்டு எரியச் செய்து விட்டே செல்கிறது. 

அது முன்பொருகால் நடந்த சம்பவத்தினைக் கொண்டு.. எரிதழல் மூட்டப்பட்ட… அவளது மனதை விட்டும் நீர்த்துப் போகாத தீக்கங்கு அது!!

அவளது வலியும், பழிதீர்க்கும் எண்ணமும் எத்தனைக்கு எத்தனை ஞாயமானதோ? அது போலவே பரிதியின் பக்க ஞாயங்களும்!! 

சிறுபராயத்தில், குரூரச் சித்தியின் தவறான வழிகாட்டுதலின் விளைவாக, பிழையான பாதைக்கு இட்டுச் செல்லப்பட்ட… ஒரு இளம்பிஞ்சின் இதயம் அரக்கத்தனமாய்.. முரட்டுத்தனமாக பரிணமித்து.. 

இறுதியில்.. இரு இதயங்களில் எழும் அதிர்வில் வந்து நிற்கிறது. 

அந்த அதிர்வு அபாயகரமானது. 

அந்த அதிர்வு.. ஒரு அழகிய காதலையும் அவனுக்குப் பரிசளித்து விட்டுச் செல்கிறது.

அவனுடைய புண்ணான இதயத்திற்கு மருந்தாக அமைந்ததும் கூட.. இந்த அதிர்வில் பூத்த அழகிய காதல் மலரே. 

அந்தக் காதல்.. அவளது ஆண்டாளிடத்தில் அவனுக்கு முகிழ்த்த காதல்.. 

அவனை.. ‘வானை விட்டும் தரையிறங்கி வந்த வெண்ணிலவை அடர் இருள் குகைக்குள் தள்ளிய இளவரசனின் காதல் கதை’ போல அவனையும் ஒரு இருளுக்குள் தள்ளுகிறது. 

அந்தக் காதல் இருள்.. தன் பழிவாங்கும் அரக்கத்தனத்தை மறக்கடிக்கச் செய்து.. ‘இரவெது? , பகலெது?’ என்று தெரியாத நித்யாசுகத்தில் தான் அது அவனை ஆழ்த்துக்கிறது. 

அந்த இருட்டுக் குகையும்.. அது தந்த தனிமையும், இனிமையும் அவனை காதல் என்னும் ஆழ்ந்த இருளில் தள்ளினாலும் கூட.. இன்னொரு பக்கம்.. 

அவனது எதிரி ராஜமாணிக்கம்.. வெளிச்சத்தில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கும் எண்ணமே.. அவனை அந்தக் காதல் இருளில் இருந்து வெளிவர உந்துதலையும் கொடுத்தது. 

ஒவ்வொரு இரவும் அவனுக்கு தூக்கத்தைக் கொடுக்காமல், அவனது எதிரி வெளியில் நடமாடும் எண்ணத்தின் வன்மையையே கொடுத்தது. 

அந்த எண்ணம் அதனோடு.. தன் தாய் முகம் நிழலாடும் நினைவடுக்கில் வந்து செல்ல, அவன் தன் காதலை துறந்தெரிய முடிவெடுத்தான். 

பாஞ்சாலியை வைத்து பாண்டவர்களை பழிவாங்க நாடிய துரியோதனன் போல.. தன் காதல் நிலவை வைத்து.. ராஜமாணிக்கத்தைப் பழிவாங்குவதற்கு தகுந்த ஒரு துரியோதனனாகவும் மாறிப் போனான் அவன். 

இதழ்களில் ‘பழி தீர்ப்பேன்’ என்ற ஒரு சூளுரை.. இதயத்தின் ஒரு பக்கம் வன்மம்.. மறுபக்கம் வன்மத்தால் சுட்டுப் பொசுங்கும் அவன் காதல் என இருந்தாலும் கூட.. பரிதிவேல் வீரன்.. பழிதீர்க்கத் தயாரானவனாகவே மாறினான். 

ஆனால் இன்று இது கர்மாவுக்கான காலம். 

அவன் போட்ட திட்டத்தின் அச்சுப்பிசகாத நிறைவேற்றத்தினால்.. அவன் தாய்க்கும், மென்னிலாவின் தாய்க்கும், மஞ்சுவுக்கும்.. இன்னும் ஏன் அவனது மனைவிக்கும் கூட.. நீதி கிடைத்த மகோன்னதக் காலம்!! 

காலம் அமைதியாக இருப்பினும் கூட.. அவன் பழையதை எல்லாம் மறந்து, ஒரு மழலை போன்ற வெள்ளந்தி மனதுடன்.. அவளை மனைவியாக ஏற்றுக் காதல் செய்யும் காலம்!! 

ஆனால் அவளோ? நோகடிக்கப்பட்ட மனது அல்லவா? அந்த மனவேதனையைத் திருப்பிக் கொடுக்க நாடும் காலம்!!

இதயத்தையே சூறையாடுவது போல வலியைக் கொடுத்தானே அந்த நயவஞ்சகன்? 

அதுக்கு என்ன மருந்து?? .. அதை அவனுக்கும் உணர்த்துவது தவிர..!! 

அவள் காதலித்தாள்; அவனை விட அதிகம் நேசித்தாள். காதலுக்கு ஏது எல்லை?? என்பதை நிரூபிக்குமுகமாக.. அவன் ஆட்டுவிக்கும் கைப்பாவை போலவே மாறினாள்!! 

 அவனும் காயப்பட்டான் தான். அதை விட இறுதியில் அதிகம் காயப்பட்டு நிற்பது அவள். 

அவனுக்கும் ஒரு பழியுணர்வு உண்டு தான். ஆனால் அதை விட அவள் பழியுணர்வு பலமானது. 

சிசு சுமந்து நிற்பவள்.. தன் இதயத்தில் பழிவெறியையும் சுமந்து நிற்க.. அவள் கண்கள் கூரிய கத்தியைப் போல பளபளத்தன. 

அந்த கணம்.. மேடிட்ட மணிவயிற்றில்.. இரு முரட்டுக் கரங்கள் மெல்ல ஊர்வதை அறிந்தவளின் உடலில் உள்ள கோடானு கோடி மயிர்க்கால்கள் எல்லாம் சிலிர்த்துக் கொண்டன. 

பரிதிவேல் வீரனின் மனைவி.. இரவில்.. அதுவும் தனிமையில் நின்றிருக்கும் போது.. அவளைப் பின்னிருந்து கட்டியணைத்து.. தன் வலிய உடலோடு.. அவளை சேர்த்தணைக்கும் தைரியம்.. அவளது கணவனைத் தவிர.. இங்கு யாருக்கு உண்டு? 

அவளது முதுகை மறைத்து வீழ்ந்திருந்த.. பூ மணம் கமழும் கூந்தலை எல்லாம் அள்ளி.. அவளது இடதுபக்க மார்பு மேல் இட்டவன், 

அவளது பின்னங்கழுத்தில்.. தன் மீசை அதரங்கள் குறுகுறுக்க.. குட்டி குட்டி முத்தங்களேயானாலும் கூட.. அவன் அவற்றை அழுத்தி அழுத்தி வைத்துக் கொண்டே.. கன்னம் நோக்கி முன்னேற…. 

மென்னிலா திகைப்பூண்டை மிதித்தாற் போன்று தான் ஆனாள். 

கணவனின்.. சின்னச் சின்ன முத்தங்களில்.. அழகிய தாம்பத்தியத்துக்கான அழைப்பு புரிந்து.. பாகாய் இளகுகிறது மனம் ஒருபுறம். 

மறுபுறமோ.. அவனது தீண்டலில்.. அன்றைய நினைவுகள்.. தன்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட, முதலிரவு ஞாபகங்களும் வலியும் ஞாபகத்துக்கு வர, ஒன்ற முடியாமல் தவிப்பது ஒரு புறம் என நின்றாள் மாது. 

அவனது குறுகுறுக்கும்.. ஈரம் தோய்ந்த அதரங்கள் மெல்ல மெல்ல அவளது பக்கவாட்டுக் கன்னத்தில் மேலேறி.. அவளது மென்மையான கன்னத்திலேயே பரம சுகம் கண்டாற் போன்று இழையத் தொடங்க… 

உள்ளுக்குள் அவன் மீது குரோதத்தை வளர்த்து நிற்பவளா அவனோடு கலப்பாள்?

கணவனை நோக்கி.. எந்த வித முன்னறிவிப்பும் இன்றி அவள் சட்டெனத் திரும்ப.. அவள் கூந்தல் வாசம் பிடிப்பதற்காக குனியத் தயாரானவனின் இதழ்கள்.. 

‘பச்சக்’என்று போய் மோதிக் கொண்டது.. அவளது செவ்வதரங்களுடன். 

கணவனின் ஈரமான இதழ்கள்.. அவளது காய்ந்த இதழ்களை அந்த எதிர்பாராத முத்தத்தில் குளிர்விக்க.. அதன் குளிர்மை தாங்காமல்.. தடுமாறி நின்றவள்.. தன் ஆகாயச் சூரியனின் விழிகள் பார்த்தாள். 

அதில்.. அவள் என்றுமே.. கண்டிராத இனிய தாம்பத்தியத்துக்கான காதல் இருப்பதைக் கண்டவளின் விழிகள்.. அழகாய் விரிந்தது. 

அவன் மனைவியின் இடையூடு கையிட்டு.. அவளுக்கு வலிக்கவே செய்யாது தன்னை நோக்கி இழுத்தான். 

அந்த இழுப்பில் இவள் பயந்து போய் நிற்க, காதல் சொட்டச் சொட்ட அவளது இதழ்களையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, ஒரு கட்டத்தில் காதல் வந்து மதகு உடைத்தது. 

இடையில் இருந்து மேலேறிய அவனது கை.. பின்னந்தலை கூந்தலில் நுழைந்து.. அவளைத் தன்னோடு இன்னும் நெருக்க, அவளது அதரங்களைக் கௌவிக் கொள்ளும் ஆவேசத்துடன் குனிந்தான் பரிதி. 

மென்னிலாவுக்கோ.. அவனது இந்த அண்மை.. இந்தக் காதல் அதிரடி எல்லாம்.. பயத்தைக் கொடுத்த அதே வேளை.. வித்தியாசமாகவும் இருந்தது. 

கணவன் தன் இதழ்களைக் கௌவிக் கொண்ட கணம், சட்டென வாய் திறந்தவள், “ப்பரிதிஹ்!!”என்று அவனை நிறுத்தப் போக, இதழ்களில் இருந்த கண்கள் அவளது முகத்துக்கு மேலேறியது. 

அவளுக்காக.. அவன் சேமித்திருக்கும் ஒட்டுமொத்த காதலையும்.. அன்றிரவில் அவளுக்கு உணர்த்த நாடியவன் போல, 

“ப்ளீஸ்ஸ்.. எதுவும் சொல்லாதஹ்… இந்த நிமிஷம்.. எனக்கேஹ்.. எனக்குஹ்”என்றவன்.. 

அவள் திரும்பவும்.. மறுப்பதற்கு வாயெடுத்து விடுவாளோ என்ற அச்சத்தில்.. சட்டென்று தாவி.. அவளது மேலதரங்களைக் கௌவிக் கொண்டான் தலைவன். 

அந்த ஒற்றை இதழ் முத்தம்.. அவளுள்.. உறங்கிக் கிடக்கும்.. பழைய காதல் மென்னிலவை.. எழுப்பாட்டி விடுமளவுக்கு.. ரொம்ப ரொம்ப மென்மையாக இருக்க.. ஆனானப்பட்ட முரடன் காட்டும் அந்த மென்மையில் கொஞ்சம் கொஞ்சமாக கசிந்துருகியது பெண்மணம்!! 

அவனை நம்ப வைப்பதற்காக.. அவனுக்கு முந்தி விரித்தவள் தான் மென்னிலா!! 

ஆனால் உள்ளத்தில் வன்மத்தை வைத்துக் கொண்டு எத்தனை நாள் தான்.. தலைவனுக்கு பாயாகவும் முடியும்? 

இருப்பினும்… நடிக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டவள்.. கரு சுமந்த பின்னரும் கூட.. வழிய சென்று கணவனை தாம்பத்தியத்துக்கு அழைப்பதும் அவ்வப்போது நேர்வது உண்டு!! 

அப்போதெல்லாம்.. அவளைத் தன்னோடு கட்டியணைத்து.. நெற்றியில் முத்தம் வைப்பவன், “வேண்டாம் ஆண்டாளு.. உன்னய பார்க்கும் போதே தெரியுது.. ரொம்ப சோர்ந்திருக்கேன்னு.. கர்ப்பமா இருக்க காலத்துல.. இத விட தூக்கம் தேவ.. அதனால தூங்கு” என்பவன்.. அவளை தூங்குமாறே பணிப்பான். 

அப்பேர்ப்பட்ட கணவன்.. இன்று பல மாதங்கள் கழித்த பின்னர்.. மையல் சொட்டும் கிறக்க விழிகளுடன்.. அவளை ஆளத் துடிப்பது வித்தியாசமாக இருந்தது அவளுக்கு!! 

அவளது இதழ்களில் கனிந்த அத்தனை தேனையும்.. காதலுடன் உறிஞ்சிப் பருகியவன், 

ஓரிரு கணப்பொழுதுகள் ஆன பின்பும் கூட.. அவளது இதழ்களை நீங்க விருப்பப்படாதவன் போல தொடர்ந்து முத்தமிட்டுக் கொண்டே போனான். 

அந்த முத்தத்தில் இருந்த காதல்.. அவள் பூண்டிருக்கும் வன்மாவதாரத்தை சிறுகச் சிறுக.. களைக்க, அவள் கைகளில் ஒன்று மேலெழுந்து.. அவனது தோள்புஜங்களில் ஆழப் பதிந்தது தான் தாமதம்!! 

மனைவியின் உள்ளம் இனிய தாம்பத்தியத்துக்கு ஆயத்தமானதை அறிந்து கொண்டவன், அவளது அதரங்களை தன்னிலிருந்தும் விடுவித்தான். 

அப்போதும் கூட விழிகள் மூடி.. முத்தத்துக்காக தவித்து நிற்கும்.. மனைவியின் முகத்தில்.. புது உற்சாகம் பிறந்தது அவனுக்கு. 

முத்துமூரல்கள் தெரிய.. அழகாக சிரித்துக் கொண்டே.. தன் மனைவியை.. இரு கைகளில் ஏந்திக் கொண்டவன்.. நொடியும் தாமதிக்காமல் மஞ்சம் தேடிப் போய்.. அவளைக் கிடத்தினான் பரிதி. 

அவன் முகம்.. நிலவைக் கண்ட முல்லை மலர் போல விகசித்திருந்தது. 

இவள் மனமோ.. குழந்தையோடு இருக்கையிலே.. ‘தாம்பத்தியம்’ என்ற பெயரில்.. ‘என்ன முரட்டுத்தனத்தை உபயோகிக்கப் போகிறானோ?’ என்று ஐயுற்றது. 

அவளது ஐயத்தை.. முகம் வழியாகப் படித்தது போல.. இன்னும் பளபளத்தது அவன் கண்கள்!! 

அத்தோடு நில்லாமல்.. தான் அணிந்திருந்த ஆர்ம்லெஸ் உள்பெனியனை.. தலைவழியாகக் கழற்றி.. வெற்றுமேனியுடன்.. மனைவியைப் பார்த்தவன், “நீஹ்.. பயப்பட்றதுஹ் போஹ்லஹ்.. எதுவுமேஹ் நடக்காதுஹ் ஆண்டாளுஹ்” என்றவன்.. 

தன் உடலின் ஒட்டுமொத்த பாரத்தையும் கட்டிலுக்கே கொடுத்து.. அவள் மீது படர்ந்தான். 

மெல்ல அவள் நெற்றியில் முத்தமிட்டவன், ‘இந்த முத்தம் அவளுக்கு பிடித்திருக்கிறதா?’ என்பது போல அவளது விழிகள் பார்த்தான். 

அவளது கண்கள்.. காதலின் உஷ்ணம் தாங்காமல் சிவந்திருப்பதை ஆசையோடு பார்த்தவன், அவள் கண்களுக்கு முத்தமிட்டான். 

திரும்பவும் முன்பு போல ‘இந்த முத்தம் அவளுக்கு பிடித்திருக்கிறதா?’ என்பது போல அவளது விழிகள் பார்த்தான். 

இப்படியாக மூக்கு, கன்னம்.. தாடை என முத்தங்களை மென்மையாகப் பதித்தவன்… ஒவ்வொரு முத்தத்தின் முடிவிலும், ‘இந்த முத்தம் அவளுக்கு பிடித்திருக்கிறதா?’ என்பது போல அவளது விழிகள் பார்த்தான். 

கணவன் எப்போதும் மஞ்சத்தில் நடந்து கொள்ளும் அதிரடியிலிருந்து விலகி.. இன்று வித்தியாசமாக நடந்து கொள்வதையும், அடிக்கடி அவளது முகத்தைப் பார்ப்பதையும் கண்டவள்.. 

அவள் சிக்கியிருந்த உணர்ச்சிகளின் பிடியில் இருந்து வாய் திறக்க மனமற்று, “ம்?”என்று இருபுருவங்கள் உயர்த்தி என்னாச்சு என்பது போல கேட்டாள் அவள். 

அவளது இதழில்.. மென்மையாக தன் இதழ்களை ஒற்றி எடுத்தவன், காதலில் வருந்துபவன் போல, “என் சந்தோஷத்த விட.. உன் சந்தோஷம் தான் முக்கியம் ஆண்டாளுஹ்… உனக்குப் பிடிச்சிருக்குல்லஹ்..?”என்று ஏக்கத்துடன் கேட்ட அந்த ஒற்றைக் கேள்வியில்.. ஏதோ பட்டாம்பூச்சிகள் வயிற்றில் பறப்பது போல உணர்வெழுந்தது அவளுக்கு. 

அவன் மீதுள்ள வன்மத்தை அந்நொடி அறவே மறந்தவள், கணவனை பழைய மென்னிலாவாக உருமாறி.. காதல் சொக்கும் விழிகளுடன் பார்த்திருக்க.. 

அவளது ஒற்றைப் பார்வையில் உந்தப்பட்டவன்.. மீண்டும் இரண்டாம் முறையாக.. அந்த இதழ்களைக் கௌவி உறிஞ்சலானான். 

எப்போதும் அவன் உறிஞ்சலில் காட்டாற்று வேகம் இருக்கும்; அவன் பற்களில் சிக்கும் இதழ்களுக்கு வலிக்கவும் செய்யும்!! 

ஆனால் இன்றோ.. அந்த முரடன் காட்டும் இதயத்தை இளக வைக்கும் மென்மையில்.. கரைந்துருகிப் போனாள் அவள். 

எப்போதும் வன்மத்தோடு கணவனுடன் கலக்கும் போது… கணவனைக் கட்டியணைக்கத் தோன்றாமல்.. படுக்கை விரிப்பை இரு உள்ளங்கைகளிலும் அதக்கிக் கொள்பவள்.. 

இன்று அவளையும் மீறி.. அவனைக் கட்டியணைத்திருந்தாள். 

இதழ்களைத் துறந்த… முரட்டு அதரங்கள்.. கழுத்தை விட்டும் கீழிறங்கி.. அழகிய மலைமுகடுகளை நிகர்த்த முன்னெழில்களை நாடிப் போய் தஞ்சமடையவும் தூக்கிவாரிப் போட்டது நிலாவுக்கு. 

அவளே மென்மையை பிரயோகிக்கும் அவளது அந்தரங்கப் பிரதேசத்தில்.. கணவனின் அதரங்கள்.. பட்டும் படாமலும் பயணிக்க… அவனது கழுத்தோடு இறுக்கிக் கையிட்டு.. தன் நெஞ்சாங்கூட்டோடு சேர்த்து அணைத்திருந்தாள் மென்னிலா. 

மனைவியை சந்தோஷப்படுத்துவது ஒன்றே இன்றைய தாம்பத்தியத்தின் குறிக்கோளாகக் கொண்ட முரட்டுக் குழந்தை.. 

அவளின் சந்தோஷ மனநிலையை.. அவளது அணைப்பு உணர்த்த.. தானும் சந்தோஷத்தில் உள்ளம் தடுமாறிப் போனான். 

அவன் இதழ்கள் அதன் பின்.. அவளது பூவுடலில் எங்கெல்லாமோ பவனி வர, ஒவ்வொரு மென்மையான தீண்டலுக்கும் பிறகு அவன் கேட்ட கேள்வி, 

“இது..இது..பிடிச்சிருக்காஹ் ஆண்டாளுஹ்” என்று தான். 

மஞ்சத்தில்.. மனைவியை திருப்திப்படுத்த நாடும் ஒரு அழகான காதல் கணவன், தன் ஒவ்வொரு தீண்டலின் பின்னரும் கூட “இது பிடிச்சிருக்கா?” என்று நின்று நிதானித்து கேட்கிறானாயின் என்ன அர்த்தம்? 

அவனது உணர்ச்சிகளை விடவும்.. மனைவியின் மகிழ்ச்சியொன்றையே முதன்மையாகக் கொள்கிறான் என்று தானே அர்த்தம்? 

அந்த இனிய தாம்பத்தியம்… அவளுள் முகிழ்த்திருக்கும் அத்தனை பழிவெறியையும் காற்றோடு காற்றாக கரைப்பது போல இருந்தது அவளுக்கு. 

சிற்றின்பத் தேடல்கள் எல்லாம் முடிந்து.. பேரின்பக் கூடலுக்கு அடியெடுத்து வைக்க நாடும் போது கூட.. அந்த மன்னவன், 

“ஆண்டாளுஹ்… கொஞ்.. கொஞ்சம்.. வலிச்சுதுன்னாலும் சொல்லு.. நிப்பாட்டுறேன்… எனக்கு உன் சந்தோஷம் மட்டும் தான் முக்கியம் ஆண்டாளுஹ்.. ” என்றவன், 

அவளது நெற்றிக்கு முத்தமிட்ட வண்ணமே தான்.. தன் அசைவைத் தொடங்கவும் செய்தான் அவன்.

அவனது கேள்வி.. ஒவ்வொரு அசைவுக்கும் தன் ஆண்டாளின் மனநிலை அறிய.. ‘வலிக்கிறதா? பிடிக்கிறதா?’என்று அவன் பார்த்த பார்வை.. என எல்லாமும் அவளை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருந்தது. 

இதுநாள் வரை.. மஞ்சத்தில்.. ராட்சசனாகவே நடந்து கொள்ளும்.. முரட்டுப் பரிதி இன்று… இனிய தாம்பத்தியத்தில்.. அவளை ஒரு மகாராணியைப் போலவும், இவன் மகாராணிக்கு சேவை செய்யும் ஒரு அடிமையைப் போலவும் உணர வைத்தான். 

யாருக்குமே பணிந்து போகாத.. இம்முரடனையும் பணிய வைத்தது எது? 

அது அவள் மேல் கொண்டிருக்கும் அளவற்ற காதல்!! 

தன்னை நேசிக்கும் ஆண்டாளுக்காக.. எதையும் செய்யத் துணிந்தவன்…. அன்று தன் எதிராளிக்கு வெற்றியைக் கொடுத்து.. அந்த வெற்றிக்களிப்பில் அவள் மகிழ்ந்து திளைத்ததைக் கண்ணுறுகையில்.. உள்ளம் குழைந்தது அவனுக்கு. 

ஒற்றை வார்த்தையில் சொல்லப் போனால்..அது ‘அழகிய கூடல்’. 

 எந்தவிதமான உள்க்காயங்களும் அற்ற.. எப்போது நினைத்தாலும் தித்திக்கும், காதலின் கூடல்!! 

அன்றைய கூடலின் முடிவில்.. அவள் நெஞ்சாங்கூட்டுக்குள் கன்னங்கள் பிதுங்கி நிற்க.. தூக்கம் கொண்டிருப்பவனின் முகத்தை… அவளையும் மீறி காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மென்னிலா!! 

அவளது கைகளோ… அவனது அலைபாயும் கேசத்தில் கையிட்டுத் துலாவ எத்தனித்து.. அதை நோக்கி கையினைக் கொண்டு சென்றவளுக்கு… 

இந்தப் பொல்லாத வன்மமும் எங்கிருந்து தான் மீள ஞாபகம் வந்ததுவோ? 

கூடலின் களைப்பில் உறங்கிக் கொண்டிருந்த கணவனை.. தன் நெஞ்சாங்கூட்டில் இருந்தும்.. ஈவிரக்கமே பாராது தள்ளிவிட்டாள் மென்னிலா. 

அந்தத் தள்ளலில்.. தலை போய் மஞ்சத்தில் மோத.. மனைவிக்கு என்னாச்சோ ஏதாச்சோ என்று பதறிப் போய் எழுந்த அந்த வெள்ளந்தி குழந்தை, 

“என்.. என்னாச்சுமா?வ்..வலி..எடுத்துருச்சாஆ என்னஹ்”என்று அவளுக்கு பிரசவ வலி எடுத்து விட்டதோ என்று தான் கேட்டான். 

தூக்கக் கலக்க விழிப்பிலும்.. அவள் நலனை விசாரிக்கிறான் என்றான்.. அந்த மன்னவன்.. தன் மென்னிலா மீது எத்தனை காதல் கொண்டிருக்க வேண்டும்? 

அது பற்றி சிறிதும் சிந்திக்காதவளுக்கு.. மனக்கண் முன் இறந்த தாய் முகம் வந்து போக.. கணவனைப் பாராமல் எழுந்து கொண்டவள், “எனக்கு வாஷ்ரூம் போகணும்” என்றவளாக எழுந்து கொள்ள, 

அப்போதும் அவள் கணவன்.. தூக்கத்தை துச்சமாக மதித்து எழுந்து கொண்டவனாக, “ந்நீ.. ரொம்ப சோர்ந்து போய் தெரியுற?? .. நானும் கூட வரட்டாஆ ஆண்டாளுஹ்”என்று தவிப்புடன் கேட்டான். 

இவளோ.. அவனது விழிகளை இறுதி வரை தவிர்த்தவள், “இ.. இல்ல வேண்டாம்.. நா.. நானே பார்த்துக்குறேன்”என்றவளாக குளியலறைப் பக்கம் செல்ல, 

மனைவியின் உப்பித் தெரிந்த வயிற்றையே காதலுடன் பார்த்திருந்தான் மன்னவன். 

*****

அடுத்த நாள் முற்பகல் வேளை, 

அன்றைய கூடலின் நினைவுகளுடனேயே… தன் வழமையான வேலைகளைச் செய்து கொண்டிருந்தவளுக்குள் பழைய காதல் மென்னிலாவும், 

அவன் இழைத்த துரோகத்தின் பின் முற்றிலும் மாறிப் போன வன்னிலாவும்… மாறி மாறி வந்து போக.. ஒரு சின்ன மனப் போராட்டத்துக்குள் தள்ளப்பட்டாள் அவள். 

அவள் எடுத்திருக்கும் முடிவு சரியா?? 

நேற்றைய கூடலில் அவனது ஒவ்வொரு தீண்டலும் உணர்த்திய காதல் போலியானதல்லவே? 

அப்படியானால்.. நிஜமாகவே அவள் கணவன் மனம் திருந்தி விட்டானா? என்று சிந்தித்தவளுக்கு, 

நடு மண்டையிலேயே சுத்தியல் விழுந்தாற் போன்று, அன்றும்.. அவளை நடுத்தெருவில் கொண்டு வந்து விட்டு மானபங்கப்படுத்த முன்னர்.. 

அவளோடு அவன் இரண்டறக் கலந்த பின்னர் தானே துரோகம் புரிந்தான்? 

அன்று போலத் தான்.. இன்றும் நடந்து கொள்ள நாடி… அவளோடு இரண்டறக் கலந்து இன்பம் துய்த்தானோ அவளது கணவன்? என்ற கேள்வி பிறக்க.. பகீரென்றானது அவளது இதயம்!! 

நடுக்கூடத்தில்… அங்குமிங்குமாக இரண்டெட்டு நடக்க எத்தனித்த போதே.. இடுப்பில் கிடுக்கிப்பிடி போட்டாற் போன்று ஒரு சின்ன வலியெடுத்து மறைய, 

ஒரு கணம்.. தலை சுற்றி நின்றது போல தோற்றப்பாடு தோன்றி மறைந்தது அவளுக்குள்!! 

அவள் கண்களோ.. நடுக்கூடத்தில் மாட்டப்பட்டிருந்த நாட்காட்டியில் பதிய, ‘பிரசவத்திற்கு இன்னும் நாள் இருக்கிறது’ என்று அதைப் பார்த்து தெளிவு படுத்திக் கொண்டவளுக்கு, அசதியில்.. 

சேலையின் ஜாக்கெட்டில் எல்லாம் முத்து முத்தாக வியர்க்கத் தொடங்கியது!! 

மேற்கொண்டு நடுக்கூடத்தில் இருக்கப் பிரியப்படாதவள்..தன் முட்டை வயிற்றைத் தூக்கிக் கொண்டு.. மெல்ல மெல்ல மாடிப்படியேறி.. தன்னறையை அடைந்த நேரம்.. அவள் கண்களில் விழுந்தான்.. இன்னும் அலுவலகம் சென்றிருக்காத அவளுடைய கணவன்!! 

அலுவலகம் கிளம்பத் தயாரானவன் போல வெள்ளை வேஷ்டி மற்றும் சட்டையிலேயே அவன் நேர்த்தியாக நின்றிருந்தாலும் கூட, 

அன்று அவள் பிடுங்கி எறிந்த முத்தொன்றைக் கையில் வைத்தவனாக.. அதையே சிவப்பேறிய கண்களுடன் உணர்ச்சி துடைத்த பார்வை பார்த்துக் கொண்டேயிருந்தவனுக்கு, 

மனைவி அறைக்குள் வந்தது கூட புரியவேயில்லை. 

கழுத்தில் அரும்பி வழிந்த வியர்வையை சேலைத்தலைப்பால் துடைத்துக் கொண்டே, மெல்ல வந்து கணவனின் பக்கத்தில் அமர்ந்தவள், “என்ன நீங்க.. இன்னும் கிளம்பிப் போகலையா?”என்று கேட்க, 

அந்தக் குரலில் தான்.. தன் தாய் அணிந்திருந்த முத்துமாலையில் இருந்து உதிர்ந்த முத்தை விட்டும், கண் அகற்றி.. தன் மனைவியைப் பார்த்தான் பரிதி. 

அவனது முகத்தில்.. ஒரு செக்கனுக்கும் குறைவான வலியோடிணைந்த நமுட்டுப் புன்னகை தோன்றியதை அவள் அவதானிக்காமல் போனது அவளது அறியாமை!! 

கணவன் கையில் இருக்கும் முத்து.. அது அவன் உயிரினும் மேலாக மதிக்கும் சொத்து என்பதை உணர்ந்திராதவளுக்கு.. அந்த முத்து.. தான் பிய்த்து எறிந்த முத்து என்பது கூட ஞாபகத்தில் நில்லாமல் போனது அவளுக்கு. 

முத்தை எடுத்து.. அது உருண்டு போகாத வண்ணம்.. மஞ்சத்தின் பக்கத்தில் இருக்கும் டிராயர் மீது வைத்தவன், 

புன்னகை முகமாக மனைவியை நோக்கித் திரும்பி, காதலுடன், “கொஞ்சநேரம் உன் கூட இருக்கணும்னு தோணுச்சுஹ்.. அதாஹ். ன்” என்று சொன்னவன், அவளது விழிகளையே குறுகுறுவென்று பார்க்கலானான். 

அந்த குறுகுறுப் பார்வை அவளது இதயம் வரை ஊடுருவிச் சென்று.. அவளது கள்ளத்தனத்தையெல்லாம் கண்டுபிடித்து விடும் போல இருக்க.. படபடப்புடன் கண்ணிமைகளை அசைத்துக் கொண்டாள் மென்னிலா. 

மனைவியின் நயன படபடப்பையும் இரசித்துப் பார்த்தவன்.. காதலோடு கேட்டான், 

“ஆண்டாளுஹ்.. உனக்கு நிறைவேறாதஹ் ஆசைன்னு ஏதாவதுஹ் இருக்காஹ் என்னஹ்..?”என்று. 

காதலிக்கும் காலத்தில் கூட.. இப்படியொரு கேள்வியைக் கேட்டிராதவன்.. இன்று கேட்பது ஏனோ.. அவள் மனதைப் பிசைவது போல இருந்தது. 

“ஏன் கேட்குறீங்க மாமா?..”- இம்முறை நடிக்கவே செய்யாமல், நிஜமாகவே புரியாமல் கேட்டாள் அவள். 

அவனோ மஞ்சத்தில் அவளை நெருங்கி அமர்ந்து, அவளது கைகளை தன்னதற்குள் அடைக்கலமாக்கியவனாக, உறுதியான குரலில், “சொல்லு.. எதுன்னாலும் சொல்லு.. அத நான் நெறவேத்தி வைப்பேன்..”என்று சொல்ல, தன் கணவனையே உணர்ச்சியே வெளிக்காட்டாத பார்வை பார்த்தாள் மென்னிலா. 

‘ஆம், நிறைவேறாத ஆசையொன்று அவளிடம் உண்டு தான். ஆனால் அதை அவளும் எப்படி சொல்வாள்..? அப்படி சொன்னாலும் தான் அந்த ஆசை நிறைவேறுமா? அப்படி நிறைவேற்றி வைக்கத் தான்.. அவனால் முடியுமா?’என்று பற்பல கேள்விகள் தோன்றி மறைய… மறந்தும் கூட அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல நாடவேயில்லை அந்தப் பாதகத்தீ. 

அதை விட்டு வேறேதோ சொல்லி.. அவனை அங்கிருந்து கிளப்ப நாடியவள், “அதையெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.. இப்ப நேரமாச்சுல? .. கிளம்புங்க.”என்று சொல்ல.. 

தன் கேள்விக்கு பதில் சொல்ல விளையாத மனைவியைப் பார்த்து, மீண்டும் ஒருமுறை வலியோடிணைந்த ஒரு புன்னகை.. சிந்தினான் அவன். 

அந்தப் புன்னகை.. கண்களில் வலி ததும்ப அவன் சிந்தும் புன்னகையை இம்முறை அவள் கண்டு கொள்ள, 

‘கண்டது பொய் தானோ?’என்பது போல வெகு வெகு பிரகாசமாக மாறியது அவன் முகம்!! 

வெள்ளந்தியாக மனைவியைப் பார்த்து புன்னகைத்தவன், “அது சரி.. நான் தந்த அம்மா மாலை எங்க? கழட்டி வைச்சு போட்டியா..?”என்று கேட்க, அவள் வயிற்றுக்குள் திடீரென புளியைக் கரைப்பது போல ஒரு உணர்வு தோன்றியது. 

அந்நேரம் அவள் சிந்தனையில் மாலை பிய்த்தெறிந்த போது.. அறைக்குள் வந்த வாசு மாமா ஞாபகம் வந்து போக, ‘நடந்ததை எல்லாம் கிழவன்.. இவனிடம் எடுத்துரைத்திருப்பானோ?’ என்ற பயம் வேறு வந்து போனது அவளுக்கு. 

வாசு மாமா.. எதை சொல்லி கோள் மூட்டியிருக்கிறார் என்பதை அறியாமல், தானாகவே எதையும் உளறிக் கொட்ட மனமற்று, “அது.. அதூஊஊ… வ.. வந்தூஊ..”என்று அவள் இழுக்க, 

மனைவி பதில் சொல்வதற்கு சிரமப்படுவதைக் கூட சகிக்க முடியவில்லை அன்புக் கணவனுக்கு. 

குறுநகையோடு, “சரி அதை விட்டுப்போடு…”என்றவனாக எழுந்தவன், தன் லாக்கரைத் திறந்து.. அதிலிருந்து சில பல பத்திரங்களை எல்லாம் எடுத்து வந்து மனைவியிடம் நீட்டியவன் முகம், 

அந்த ஆகாயச் சூரியனைத் தோற்கும் அளவுக்கு, வண்ணமயமாக ஒளிர்விட்டுக் கொண்டிருந்தது. 

‘இவை என்ன பத்திரங்கள்?’ என்று மென்னிலா புரியாமல் விழிக்க, 

அவனோ.. அவள் கேட்டால் இந்த உலகத்தையே ஜெயித்து காதலி காலடியில் சமர்ப்பிக்கும் வெறியுடன், “இது உனக்காக.. உன் மேல நான் வைச்சிருக்க அன்பை ப்ரூவ் பண்ண.. இது தான் ஒரே வழின்னா.. இந்தா நீ கேட்ட சொத்து.. எல்லாமே உன் பேர்ல மாத்திட்டேன்.. இனி எல்லாமே உன்னோடது ஆண்டாளுஹ்…”என்றவன் சொல்ல, 

நம்ப முடியாமல் கணவனைப் பார்த்தவள், அவன் கைகளில் இருக்கும் பத்திரத்தை பறித்து வாங்கிக் கொண்டவள்..

 ஒவ்வொரு பக்கம் பக்கமாகத் திருப்பி.. தன் பேருக்கு மாற்றப்பட்ட சொத்து விபரங்களைத் தான் பார்த்தாள் மென்னிலா. 

கணவன்.. இப்படியான ஒரு காரியத்தைச் செய்வான் என்று கனவிலும் எதிர்பார்த்திராதவனுக்கு, ‘நிஜமாகவே கணவன்.. அவள் பூண்டிருக்கும் அன்பை நிரூபித்துக் காட்டத் தான் இப்படிச் செய்தானா?’ என்ற கேள்வி பிறக்காமல் இல்லை!! 

ஆனால் பரிதிவேல் வீரனோ.. அவளிடம் வேறெதையோ எதிர்பார்த்தான் போலும். 

‘சொத்து வேண்டாம்.. நீ தான் வேண்டும்’ என்ற ஒற்றை வசனம்.. அவனது ஆண்டாள் நாவில் இருந்து உதிர வேண்டும் என்று எதிர்பார்த்தான் போலும். 

வதனம் கறுத்து வாட.. சொத்துப் பத்திரங்களை ஆவலுடன் விழிகள் அலைபாயும் மனைவியை… யோசனையோடு பார்த்தவன், 

தன் குழந்தை வயிற்றை நோக்கி மெல்ல குனிந்து.. அவள் வயிற்றோடு கட்டியணைத்து முத்தமிட, கணவனின் மென்மையில் இயம் ஜிலீரிட பத்திரங்களில் இருந்து கண்ணெடுத்து, தலைவனைப் பார்த்தாள் தலைவி. 

அவன் முகம் வழமைக்கும் மாறாக… அடிபட்டாற் போன்று சோர்ந்து போயிருந்தது. 

மையலோடு மனைவி முகம் பார்த்தவன், தொண்டையை அடைத்த துக்கத்தை விழுங்கிக் கொண்டு, 

விழிகள் சற்றே கலங்க, மெல்லிய குரலில், “இது என் குழந்த ஆண்டாளுஹ்.. இந்தக் குழந்தக்கு… அப்பா பரிதிவேல் வீரன்.. குழந்தய பத்திரமா பார்த்துக்க ஆண்டாளு…?” என்று சொல்ல… அவனது செயல்களும் சரி, வார்த்தைகளும் சரி ரொம்ப ரொம்ப வித்தியாசமானதாகவே பட்டது அவளுக்கு. 

அப்போதும் பத்திரங்களை கீழே வைக்காமல், கணவனின் கன்னங்களை ஏந்தாமல்.. அவளைப் பார்த்தவன், “இன்னைக்கு என்ன புதுசா.. திடீர்னு?”என்று கேட்க, அவன் முகம் சிறுகச் சிறுக மாறியது. 

வழிய வரவழைத்த குறுஞ்சிரிப்பை முகத்தில் தவழ விட்டவனாக, “இல்ல டெலிவரி டேட் நெருங்கிடுச்சுல? அதாஆஆன்.. பயமா இருக்குஹ்மாஹ்”என்று சொல்ல, கணவனின் கரிசனையில் அணுவளவு கசிந்தது அவள் உள்ளம். 

வன்மத்தீ கொழுந்து விட்டெரியும் அவளது உள்ளத்தில் இருந்து.. முதன் முறையாக உண்மையாக வெளி வந்தது வார்த்தைகள். 

பத்திரத்தை மஞ்சத்தில் வைத்தவள், தன் நிறைமாத வயிற்றில் கை வைத்து..குழந்தையை அணைத்துப் பிடித்தாற் போன்று, “இது நானும் சேர்ந்து ஏத்துக்கிட்ட குழந்த தான்… பத்திரமா பார்த்துக்க தெரியும்..பரிதி”என்று சொல்லத் தான்.. கொஞ்சம் ஆசுவாசம் எய்தியது அவன் கண்கள். 

குழந்தை பற்றிய கேள்வி வந்ததன் பின்னர் கணவனின் சின்ன கண்ணிமைத்தலையும் கூட, ரொம்பவும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கையிலே, சோர்ந்த முகத்துடன் அவன் கேட்டான், 

“எனக்காக ஒண்ணு பண்ணுவியா..?”என்று. 

“என்னஹ்? எ.. என்னஹ்?? பண்ணூஊஊனும்?”என்று.. சற்று படபடப்பு மீதூறவே கேட்டாள் அவள்.

பின்னே படபடப்பு மீதூறாதா என்ன? தலைவனின்.. தலையும் அற்ற வாலும் அற்ற பேச்சில் கலங்கி நிற்பது அவளாச்சே? 

அவனோ.. அவளது செவ்வரலி மொட்டைப் போன்ற மென்மையான பாதங்கள் எடுத்து.. தன் மடி மீது வைத்தவனாக, அன்றொரு நாள் அவன் காதலுடன்.. குறுந்தீவில் பரிசளித்த.. தங்கக் கொலுசை.. அந்த நாள் நினைவுகள் மீதூறப் பார்த்தான். 

பின்பு மனைவியைப் பார்த்தவன், “இந்த கொலுசு வேணாம்.. கழட்டிடு ஆண்டாளு..”என்று சொல்ல, 

அவனது ஒவ்வொரு வார்த்தைக்கும் பின் குழம்பித் தவித்தவள், இந்நொடியும் தவித்தவளாக, “ ஏன் என்னாச்சு..?” என்று கேட்க, அவளது அனுமதி வரும் வரை காத்திருக்கப் பிரியப்படாதவனாக, 

தானாகவே.. தங்கக் கொலுசுகளை.. அவளது சிவந்த பாதங்களில் இருந்தும் கழற்றியவனாக, 

வருத்தத்தோடு தன் ஆண்டாள் முகம் பார்த்த கண்ணன், “உனக்கு எப்படீன்னு தெரியல.. ஒவ்வொரு வாட்டி இந்த கொலுசு மணியோசை கேட்கறப்பவும்.. எனக்கு அந்தப் பழைய கொடூர.. பரிதி ஞாபகம் வர்றான் ஆண்டாளு.. அந்த நாள் ஞாபகம்.. உன்னோட கண்ணீர்.. என்னோட கேவலமான செய்கை.. எல்லாமேஹ்.. ஞாபகம் வருதுஹ்.. அதனால.. இது.. வேண்டாம்மா..”என்றவன் கொலுசை கழற்றி முடித்த வேளை, அவன் கண்கள் ஏகத்துக்கும் கலங்கியிருந்தது. 

கொலுசினை எடுத்து தன் சட்டை பாக்கெட்டில் இட்டு இதயப் பக்கத்தில் பத்திரப்படுத்திக் கொண்டவன், மனைவியை மையல் ததும்பும் ஆசை விழிகளுடன் நோக்கி, “ஒருவாட்டி உன்னய கட்டிபிடிச்சிக்கட்டா..?”என்று கேட்டவன், 

அவள் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி அணைப்பை மறுத்து விடுவாளோ என்று பயந்தவன், அவள் அனுமதி தர முன்னமே.. அவளைத் தன் இதயத்தோடு சேர்த்து அணைத்திருந்தான். 

அவனது இதயம்.. எப்போதும் சீராக துடிக்கும் அவனது இதயம்.. இன்று சின்ன இடைவெளி விட்டு விட்டு துடிப்பதை துல்லியமாகக் கேட்டவளுக்கு.. உள்ளே ஏதோ செய்தது.

மெல்ல அவளை விட்டும் எழுந்து.. அறைக்கதவு வரை போனவனுக்கு உள்ளத்திலே என்ன தோன்றியதோ.. அசுர வேகத்தில் திரும்பி வந்து.. அவளைத் தாவிக் கட்டியணைத்துக் கொண்டவன், 

அவளது பட்டுக்கன்னங்களை இரு கரங்களில் ஏந்தி.. அவள் வதனம் எங்கும் ஒரு அணுவளவு இடைவெளி விடாது.. மீசை குத்தக் குத்த.. முத்தமழை பொழிந்து கொண்டே போனவன், 

சட்டென அவளை விலக்கி நிறுத்தி, தழுதழுக்கும் குரலில், “கக்.. கக்.. கடைசியா ஒரு கேள்வி கேட்கிறேன்.. காஹ்.. காதல் தானடிஹ் என் மீதுனக்குஹ்?”என்று கேட்க, அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது திக்குமுக்காடிப் போனாள் அவள். 

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அவன் மீது வஞ்சம் சுமந்து நிற்பவள் எப்படி அந்தக் கேள்விக்கு பட்டென பதில் சொல்ல முடியும்? 

அந்தக் கேள்விக்கான பதில் அவளது திருட்டுத்தனமான உள்ளம் நன்கறிந்திருந்தும், 

கனகச்சிதமான போலிப்புன்னகை உதிர்த்தவள், “இதுலென்ன சந்தேகம்??”என்று சொன்னதும் தான் தாமதம்.. அவள் பதிலை அதற்கு மேலும் கேட்க மனமற்றவள் போல.. இதழ்களை நோக்கிக் குனிந்தவன்.. வலி நிறைந்த கண்களுடன் மென்மையாக முத்தமிட்டான். 

அவளை விட்டுப் பிரியவே மனமில்லாதவன் போல.. ஏந்திய கன்னங்களுடன்.. அவள் கண்ணோடு கண் கலக்க நின்ற.. அந்த முரட்டுக் குழந்தையோ.. 

இன்று அப்பாவிக குழந்தைகள் போல, நப்பாசையுடன், “எப்ப திரும்பி வருவீங்க மாமான்னு கேட்க மாட்டீயா..?”என்று கேட்க, 

அவளும் மனதுக்குள், ‘இதேதடா புதுத் தொல்லை?’ என்று எண்ணிக் கொண்டாலும் வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல், 

அவன் கேட்பது போலவே கேட்டுத் தொலைத்து விட நாடி,பெருமூச்சுடன், வேண்டா வெறுப்பாக, “எப்பஹ்…”என்று கேட்டதும் தான் தாமதம்,சட்டென அவளது இதழ்கள் மூடி பேசவிடாமல் தடுத்தான் அவன். 

அவளாகவே உணர்ந்து காதல் ததும்ப கேட்க வேண்டிய கேள்வியை.. அவன் சொல்லி.. மனைவி கேட்பது பிடிக்காமல் போனதுவோ அவனுக்கும்?? 

கவலை விழிகளில் சொக்க, “இல்லை.. தேவையில்ல.. டைமாச்சு நான் கிளம்புறேன்..”என்றவன்,இறுதியாக அவளது நெற்றியில் கண்கள் மூடி அழுந்த முத்தமிட்டு விட்டே அகன்றான். 

அவன் அறையை விட்டுக் கிளம்பித் தொலைத்ததும் தான் ‘ஹப்பாடா’என்று இருந்தது அவளுக்கு!! 

அவனும், அவனது புரியாத கேள்விகளும், புதிரான நடத்தைகளும்…!!! 

அவன் அருகே நெருங்க நெருங்க ஏன் இப்படி அவஸ்தையும் நேருகிறது? 

நேற்றிரவில் இல்லாத தடுமாற்றம்.. உள்ளத்தை சூழ்ந்து கொள்கிறது?? 

வாசு மாமா வருவதைப் பாராமல்.. அந்த முத்து மாலையைப் பிடுங்கி எறிந்தது எத்துனைப் பெரும்பிழை? 

அதனை.. சரியான தருணத்தில் பற்ற வைத்து விட்டானோ அந்தக் கிழவனும்?? என்று அவள் கணவனின் உண்மை அன்பை அறியாமல், அறிந்து கொள்ள பிரயத்தனமும் எடுக்காமல், மஞ்சத்திலேயே எத்தனை மணிநேரம் வாளாமல் அமர்ந்திருந்தாளோ அவளும் அறியாள். 

வெகுநேர யோசனைக்குப் பிறகு .. அவளது சிந்தனையைக் கலைக்கும் முகமாக ஒலித்தது பரிதியின் செல்லின் ரிங்டோன். 

சுற்றுமுற்றும் தலை திருப்பிப் பார்த்தவளுக்கு, பரிதிவேல் வீரன் சார்ஜில் செல்லைப் போட்டு விட்டு, அதை அப்படியே மறந்து விட்டுச் சென்றிருப்பது புரிந்தது.

ஒளிரும் தொடுதிரைக்கு அருகே சென்று பார்த்த போது வாசு மாமாவின் சிரிக்கும் புகைப்படம் ஒளிர்வதைக் கண்டவளுக்கு, அழைப்பை ஏற்று, 

‘பரிதியிடம் பற்ற வைத்து விட்டாயா கிழவா?’என்று தாறுமாறாக கத்த வேண்டும் போல இருந்தது. 

அதனால் உடனடியாக அழைப்பை ஏற்றவள், கடுப்புடனேயே, “ஹல்லோ..”என்றதும் தான் தாமதம், வாசு மாமாவும் தன் மகளிடம் கனிவான குரலில், 

“யம்மா.. அவன் ஃபோன வைச்சு போட்டுப் போயிட்டான் போல கெடக்கு.. அதுல முக்கியமான கான்டாக்ட் நம்பர்ஸ் இருக்குமா.. ஸ்டாஃப் கையில குடுத்து அனுப்பச் சொல்லவும் பயமா இருக்கு.. கொஞ்சம் சிரமம் பாராம.. நீயே.. கொணர்ந்து தர்றீயாம்மா..?”என்று கெஞ்சிக் கேட்க, 

அவளுக்கும் வாசு மாமாவிடம் நேரடியாக கேட்க வேண்டிய கேள்வி பாக்கி இருப்பதால், அவளே கொண்டு போய் கொடுக்க முடிவெடுத்து, 

கறாரான குரலில், “எங்க வரணும்..?”என்று கேட்டாள். 

காதல் தானடி என் மீதுனக்கு? 

(பதில் விரைவில் நவில்வாள். ) 

காதல் தானடி என் மீதுனக்கு? 

[27]

 

பரிதி, வீட்டில் விட்டுச் சென்ற செல்லை.. எடுத்துக் கொண்டு வாசு மாமா சொன்ன இடத்தை நோக்கி.. பயணப்பட்டுக் கொண்டிருந்தாள் மென்னிலா. 

சொகுசு கார் பயணமாக இருந்த போதிலும் கூட.. அன்று உடலுக்கு அதீதபட்ச அயர்வும், அசதியும் இருப்பதை உணர முடியுமானதாகவே இருந்தது அவளுக்கு. 

இறுதியாக வாசு மாமா அவளுடன் பேசும் போது, ‘அதுல முக்கியமான கான்டாக்ட் நம்பர்ஸ் இருக்குமா.. ஸ்டாஃப் கையில குடுத்து அனுப்பச் சொல்லவும் பயமா இருக்கு..”என்று சொன்னது ஞாபகம் வர, 

அப்படி அவளுக்குத் தெரியாமல்.. ‘கொண்டானின் செல்லில் என்ன இரகசியம் இருக்கிறது?’ என்று பார்த்து விடும் ஆர்வம் பிறந்தது அவளுக்கு. 

அதனால்.. கணவனின் செல்லேயானாலும் கூட, கணவனின் அனுமதியின்றி, ‘அவனறியாமல் பார்க்கிறோமே’ என்ற கூச்சவுணர்வு கொஞ்சம் கூட இன்றி.. 

பரிதியின் செல்லை விட்டேற்றியாக எடுத்துப் பார்த்தவளின் விழிகளில் விழுந்தது ‘லாக் ஸ்க்ரீனில்’ அவளும், அவனும் என புன்னகைத்த முகமாக இருக்கும் அவர்களது கல்யாணப் புகைப்படம்!!

வீட்டின் நடுக்கூடச் சுவரில்.. அவனுடைய வலிய கையணைப்பில்.. அவள் பாந்தமாக அடங்கி நிற்கும் அதே கல்யாணப் புகைப்படம்!! 

அந்தப் புகைப்படத்தை முன்னாடி திரையில் வைத்திருப்பது வேறு யாராவது மூன்றாவது மனிதன் அல்லவே. 

அவளைத் தொட்டுத் தாலி கட்டி, தாம்பத்தியம் நடத்தும் கணவன் தானே? 

இருப்பினும் கூட அந்த திருமணப் புகைப்படத்தை காணுங்கால்.. 

அவனது காதல் அனைத்தும் போலியானது என்றறியாமல்.. அவனையே உலகாளும் பெருமாளாகக் கொண்டு.. அவன் அணைப்பில் சொக்கிப் போய் நின்ற தருணங்கள்.. ஞாபகம் வர

அவள் ஆழ்மனதில் கொழுந்து விட்டெரியும் வன்மத்தீயில்.. எண்ணெய் ஊற்றியது போல.. அவளை கிறுகிறுக்கச் செய்ய, 

 வஞ்சம் கொண்ட பெண்ணவளுக்கோ.. எரிச்சல் முளைக்க ஆரம்பத்திருந்தது. 

உடனேயே அதனை நீக்கி விட நாடி கைவிரல்கள் பரபரக்க, லாக் ஸ்க்ரீனின் லாக்கினை உடைத்து உள்ளே சென்றவளுக்கு, ஹோம் ஸ்க்ரீனிலும் கூட அவள் புகைப்படமே. 

சின்னக் குழந்தைகள் போல அவள்.. மஞ்சத்தில் சுருண்டு படுத்திருக்க,

 அவள் வதனத்துக்கு நேரெதிராக.. தன் வதனம் வைத்து.. அவனும் கண்கள் மூடி துயில்வது போல படுத்திருப்பது போல ஒரு புகைப்படம் அது!! 

அவளறியாமலேயே.. அந்த செல்ஃபீயை கிளிக்கியிருக்க வேண்டும் என்பது புரிய.. 

‘இவனெப்படி.. அவளறியாமல்.. அவள் துயிலும் நேரம் புகைப்படம் எடுக்கலாம்?’ என்ற சிறு கோபமும் பிறந்தது அவளுக்கு. 

இந்த நவீன யுகத்தில்.. ஓர் உறுப்பு போல மாறிவிட்டிருக்கும் செல்லில்.. 

கணவன் தன் புகைப்படத்தை வோல்பேப்பராக வைத்திருக்கிறான் என்றால்.. ‘எஞ்ஞான்றும் அவள் முகத்தைக் காண வேண்டும்’ என்ற ஆசை அவனுள் மலை போல கொட்டிக்கிடக்கிறது என்பது தானே அர்த்தம்? 

அதைக் கூட யோசிக்க முடியாதளவுக்கு.. அவன் மேல் அவள் கொண்ட வஞ்சம்.. அவளை அலைக்கழிக்க.. அடுத்த நிமிடம்.. அவனது ஒட்டுமொத்த புகைப்படக் களஞ்சியத்தையும் பார்த்து விட நாடியவள், 

படபடவென்று அவனது கேலரிக்குள் நுழைந்த மென்னிலாவின் கண்கள் ஆச்சரிய அதிர்ச்சியில் அழகாக விரிந்தது. 

நிஜமாலுமே..அங்கிருந்தது அனைத்துமே ஆச்சரியமே தான். பெரும்பாலும், சினிமா பிரபலங்கள் அறியாமல்.. ‘பெப்பராட்சி’என்னும் ஒருவகை புகைப்படக் கலைஞர்கள்.. பிரபலங்களை படம் எடுப்பது வழமை… 

ஆனால் இங்கோ… மென்னிலாவின் கணவனே.. ஒரு ‘பெப்பராட்சி’ போல உருமாறி… அவளறியாமல்.. அவளது சின்னச் சின்ன முகபாவனையையும் கூட அழகாக ‘கேப்ச்சர்’ செய்திருக்கும் புகைப்படங்கள் கொண்டு நிரம்பி வழிந்தது அவனது கேலரி. 

அவள் சாப்பிடும் போது, மொட்டை மாடியில் நின்று நிலவை இரசிக்கும் போது, குளித்து விட்டு வந்து மஞ்சத்தில் அமர்ந்து பாடிலோஷன் பூசும் போது, இரவு துயிலும் போது என அவளறியாமலேயே.. அவளது ஆயிரத்தெட்டுப் புகைப்படங்கள் கேலரியில் தஞ்சமடைந்திருந்தன. 

அவள் அநேகமாக டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடும் போது.. அவளுடனேயே அமர்ந்து கொள்பவன்.. உடனேயே உணவில் கை வைக்காமல்.. கொஞ்சம் செல்லில் தலையை புதைத்து விட்டே சாப்பிடும் அவன் முகம் அடிநெஞ்சில் வந்து போனது. 

மொட்டை மாடியில் நின்று நிலவை இரசித்துக் கொண்டிருக்கும் தருணங்களில் எல்லாம்.. அவள் எதேச்சையாக திரும்பி.. கணவனை சந்திக்க நாடும் போதெல்லாம்.. கையில் இருக்கும் செல்லை பட்டென்று வேஷ்டி பாக்கெட்டில் போட்டுக் கொண்டே.. சிரித்த முகமாக அவளை நாடிவரும் கணவன் முகம் ஞாபகம் வந்து போனது. 

குளித்து விட்டு வந்து.. மேனியில் டவலை கட்டிக் கொண்டு அவள் மஞ்சத்தில் அமர்ந்து.. தன் அழகிய பருத்த தொடைகளுக்கு பாடிலோஷன் பூசிக் கொண்டிருக்கும் நேரம்.. செல்லும், கையுமாக உள் நுழையும் கணவன்.. அவள் பார்த்து விட்டால், 

‘ஸாரி.. தப்பான நேரத்தில் வந்துட்டேன்.. அப்புறம் வர்றேன்’என்று சொல்லிக் கொண்டே.. சொக்கும் விழிகளை கட்டுப்படுத்திக் கொண்டு செல்லும் அவன் முகம் சிந்தையில் வந்தது. 

அவன் செல்லும், கையுமாக நின்ற அத்தனை தருணங்களிலும் கணவன் அவளையறியாமல் அவளை புகைப்படம் எடுத்திருக்கிறான் என்று தெள்ளத் தெளிவாக புரிந்தது இன்று. 

பரிதியைப் பொறுத்தவரையில்.. அவளோடு அவன் கழித்த ஒவ்வொரு நொடியும் அவன் அனுபவித்து வாழ்ந்தவை!! அனைத்தும் பொக்கிஷங்கள்!! 

அவற்றை மனக்கண் நிறுத்திக் கொள்வதோடு நில்லாமல்.. தன் கேமராவின் கண் நிறுத்திக் கொள்வதும் கூட.. ஒருவித இன்பத்தையே அவனுக்குக் கொடுக்க, 

மனைவிக்கு ‘பெப்பராட்சி’ வேலை பார்ப்பதை இறுதிவரை செய்தான் அவன். 

அந்த அத்தனை தருணங்களிலும்.. அவளது கொண்டான்.. அவளறியாமல்.. அவளை புகைப்படம் எடுத்திருக்கும் தருணம் என்பது தற்போது புரிய… அவள் முகம் உணர்ச்சி துடைக்கப்பட்டதாக மாறியது. 

ஆசைக் கணவனாக இருந்தால்.. கணவனின் செய்கைகளை அவள் இரசித்திருக்கக் கூடும். 

வேண்டாத கணவனின் செய்கைகளை அவள் எப்படி இரசிக்கவும் கூடும்?

கேலரியை கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்து கொண்டு போன போது தான் எதேர்ச்சையாக அவள் விழிகளைக் கவர்ந்தது ஒரு சின்ன வீடியோ!! 

அந்த வீடியோவின் முகப்பில் அவள் முகம் தெரிய.. அவளது விழிகள் இலேசாக இடுங்கியது. 

‘உள்ளுக்குள் இது என்ன வகையான வீடியோ?’ என்று மனம் பதைபதைக்க, வீடியோவை தொட்டாள் மென்னிலா. 

அந்த ஒற்றை வீடியோ.. அம் முரட்டுக் குழந்தை.. தன் ஆண்டாள் மீது வைத்திருக்கும் அன்பு.. எத்தனை உன்னதமானது என்பதை பறைசாற்றுவதாக இருக்க… அது அவனது உள்ளங்கவர்ந்தாளின் இதயம் தொட்டதா என்பதே இங்கு கேள்விக்குறியே? 

அங்கே நிறைமாத கர்ப்ப வயிற்றுடன்.. ஏகாந்தமான நிலவொளி அவள் வதனத்தில் பட்டுத்தெறிக்க.. உலகம் மறந்து அவள் துயின்று கொண்டிருக்க, 

அரவமே எழுப்பாது திருடன் போல அவளை நாடி வந்தவன்.. அவளது துயில் கலையாத வண்ணம் மெல்ல.. அவள் அணிந்திருக்கும் டீஷேர்ட்டை உயர்த்தலானான்

இன்று.. அதை படபடக்கும் விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, 

அவள் துயிலும் வேளை கணவன் செய்யும் ஈனமான செயலில்… அவளில் பட்டென்று ஓர் வெறுப்பு வந்து போனது உண்மை.

‘ ச்சீ.. என்ன மாதிரியான மனிதன் இவன்?.. மனைவி துயிலும் நேரம் கூட.. அவளறியாமல் அவளை நாடும் கேவலமான காமுகன்!!’ என்று திட்டித் தீர்த்தவளுக்கு.. அடுத்து அவன் செய்த செயலில் இதயம் இளகலாயிற்று. 

அப்படி அவளுள் முகிழ்த்த வெறுப்பபெல்லாம் இருந்த இடம் தெரியாமல் மாறும் அளவுக்கு, அவளது டீஷேர்ட் உயர்த்தி அவளை நாடி வந்தவன்.. 

மென்மையாக.. அவளது சிசு சுமந்த வயிற்றில் முத்தமிட..குழந்தைக்கான கணவனின் அன்பில்.. அவளையும் மீறி நெகிழ்ந்து போனது அவளது உள்ளம்.

அவள் கணவனின் மீதுள்ள வெறுப்பில் ஒரு போதும் வயிற்றைத் தொட அனுமதித்ததே இல்லை. அதனால் தான் அவன்.. அவள் துயிலும் வரை காத்திருந்து திருட்டுத்தனமாக முத்தமிட்டிருப்பது தெள்ளத் தெளிவாக புரிய.. 

அந்த முரட்டுக் குழந்தையின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக புலப்படுவது போலவும் இருந்தது அவளுக்கு. 

இத்தனையும் பார்த்தவளுக்கு கணவன் நடிப்பதாக தோன்றாமல் போக.. அவளுள் இருக்கும் பழைய மென்னிலா தலைதூக்கிப் பார்த்தாள். 

ஆயிரம் தான் இருந்தாலும் கணவனுக்கு, ‘குழந்தைக்கான உரிமைகளை கொடுத்திருக்கவும் வேண்டுமோ?’ என்ற கேள்வியும் பிறந்தது அவளுக்கு. 

‘நிஜமாலுமே நீ என்னை காதலிப்பதானால்.. நீ திருந்தி விட்டாயானால்.. ஏன் என் தாய் முகம் பார்க்க நீ அனுமதிக்கவில்லை பரிதி?’

‘அது என் மனதில் ஏற்படுத்தும் அனல் தாக்கங்களை நீ அறிவாயா? அவரைப் பார்க்கத் தானே அங்கிருந்து.. உன் முகம் பார்க்கவே கூடாது என்ற சபதம் துறந்து வந்தேன்.. 

இறுதியில் அவர் முகத்தைக் கூட பார்க்கவிடாமல் செய்து விட்டாயே பாவி’ என்று வன்மம் கமழும் விழிகளுடன் எண்ணியவளுக்கு, 

அவற்றைப் பார்க்கும் போது மிளிரும் கழிவிரக்கத்தை இல்லாமல் செய்யும் வகையில்.. உள்ளே எட்டிப் பார்த்தது வஞ்சம். 

அந்த வஞ்சத்தின் விளைவால்.. அவன் சேமித்து வைத்திருக்கும் அத்தனை பொக்கிஷத்தையும்..

 அவன் மனம் இதை அறிந்தால், ‘என்ன பாடுபடும்?’ என்று ஈவிரக்கமே கொள்ளாமல் அத்தனையையும் ‘டிலீட்’ செய்தாள் மென்னிலா. 

பழிவெறி மின்னும் கோர விழிகளுடன் தனங்கள் ஏறி இறங்க மூச்சு வாங்கிக் கொண்டு.. கணவனின் செல்லையே பார்த்துக் கொண்டிருந்த வேளை, 

தன் முதலாளியம்மாளை நோக்கித் திரும்பிய கார் டிரைவர், உரிய இடம் வந்த பின்னும் இறங்காத முதலாளியம்மாளை வியப்பு மீதூறப் பார்த்துக் கொண்டே, 

“அம்மா.. இது தான்மா நீங்க சொன்ன அட்ரஸ்? ஐயாவோட ‘மென்னிலா பாஸ்தா ஃபேக்டரி..”என்று சொல்ல, அவளுள் சின்ன ஆச்சரியம் மீதூறியது.

‘என்ன அவள் பெயரில் ஒரு தொழிற்சாலையா?’ என்ற கேள்வி பிறக்க, 

வாசு மாமா குறுந்தகவல் மூலம் அனுப்பியிருந்த விலாசத்தையும், அங்கே பதாகையில் எழுதப்பட்டிருந்த விலாசத்தையும் சரிபார்த்துக் கொண்டே, காரில் இருந்து இறங்கியவள் ஆச்சரியப்பட்டுத் தான் போனாள். 

வாசு மாமா கூட செல்லில்.. விலாசத்தை சொன்னாரே ஒழிய.. அந்த விலாசத்தில்.. அதுவும் அவள் பெயரில் ஒரு கம்பெனி இருப்பதை சொல்லவேயில்லை. 

அவள் முன்னே வெள்ளி நிறத்திலான ஆங்கில எழுத்துக்களில், ‘மென்னிலா பாஸ்தா பிரைவேட் லிமிடெட்’ என்று பொறிக்கப்பட்டிருக்கும் பதாகை உயரத்தில் மினுமினுத்துக் கொண்டிருந்தது. 

அவள் காண்பது கனவல்ல. நிஜமாகவே.. அது அந்த தொழிற்சாலை அவள் பெயரைத் தாங்கித் தான் இயங்கிக் கொண்டிருந்தது. 

அழகான இரு பாதைகள்.. பிரதான நுழைவாயிலில் இருந்து.. தொழிற்சாலைக் கட்டிடத்தை நோக்கி சென்றிருக்க, 

அந்த இரு சாலைகளின் இணைவின் நடுமத்தியில்.. அழகான டால்பின் வாயிலில் இருந்து தண்ணீர் கசியும் நீரூற்றும், அதைச் சுற்றியிருந்த அலங்கார தாவரங்களும் கூட.. அந்த இடத்துக்கு அதிகப்படியான இரம்மியத்தைக் கொடுப்பதாகவே இருந்தது. 

சுற்றுமுற்றும் கண்களை ஓடவிட்டவளுக்கு, நீலநிறத்தில் சேலை அணிந்த பெண்கள் ஒரு சின்ன டிராலியில் இருபது இருபத்தைந்து பெட்டிகளை அடுக்கிக் கொண்டு.. வேலையில் இலயித்துப் போன முகத்துடன் தொழிற்சாலை கட்டிடத்துக்குள் வரிசையாக நுழைந்து கொண்டிருப்பது புரிந்தது அவளுக்கு. 

அத்தனையையும் ஆச்சரியம் சிந்தப் பார்த்தவளின் மூளையில் தடுக்கியது.. அங்கிருந்த காவலாளி முதற்கொண்டு.. சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் வரை.. அனைவருமே பெண்களாக இருப்பது. 

அவள் பெயர் தாங்கிய இந்தத் தொழிற்சாலைக்குள்.. அனைவருமே பெண்களாக இருப்பது கண்டு ஆடிப் போனவள், இதில் யாரிடம் போய் அவள் கணவனையோ அல்லது வாசு மாமாவையோ விசாரிப்பது என்று சற்று திண்டாடித் தான் போனாள். 

செல்லை உரியவனிடம் ஒப்படைப்பது ஒரு காரியமாக இருந்தாலும் கூட, வாசு மாமாவிடம் ‘என்ன எட்டப்பன் வேலை பார்த்தாயிற்றா?’ என்று நேரில் நாக்கைப் பிடுங்குவது போல நல்லதாக நான்கு கேள்வி கேட்கத் தானே அவளும் வந்தாள்? 

ஆகையால்.. அதை செயலாற்ற எண்ணி.. வாசு மாமாவுக்கு.. அவள் அழைப்பெடுக்க நாடிய போது தான்.. அவள் வாழ்க்கையில் எஞ்ஞான்றும் நினைத்துப் பார்த்திராத அந்த சம்பவம் நடந்தேறியது. 

இந்தச் சின்ன நிகழ்வு.. தன்னை.. தான் எடுத்த முடிவை அடியோடு புரட்டிப் போடும் என்று இதற்கு ஒரு செக்கன் முன்னாடி அவள் கூறியிருந்தால் கூட அவள் நம்பியிருக்கவே மாட்டாள். 

ஆனால் அந்த சம்பவத்தின் பின்னர் நடந்தது எல்லாமே தலைகீழ்!! 

வாசு மாமாவுக்கு அழைப்பெடுத்து… ஓரிரண்டு ரிங்குகள் போய்க்கொண்டிருக்க, வாசு மாமா அழைப்பை எடுக்கும் வரை காத்திருந்தவளின் பின்னாடியிருந்து கேட்டது ஒரு பெண்ணின் அதிமதுரமான குரல். 

“அட நீங்க.. திருமதி. மென்னிலா பரிதிவேல் வீரன் தானே..?”என்று கேட்ட அந்த தேன்குரலில், மெல்லத் திரும்பிப் பார்த்தவளுக்கு, 

அங்கே ஒரு ஃபைலை தன் மார்புக்கு கேடயம் போல ஆக்கி.. கைகள் அதனை இறுக்கிப் பிடித்திருக்க, நீலநிற சேலையில்.. கூந்தல் முழுவதையும் பின்னந்தலையில் கொண்டை போட்டவண்ணம், 

முகத்தில் எந்தவிதமான ஒப்பனையும் இல்லாது.. இயற்கையான அழகுடன்.. தெளிந்த முகத்துடன் நின்றிருந்த ஒரு பெண்ணையே காணக்கிடைத்தது. 

யாரிவள்? என் பெயரை எப்படி சரியாக சொல்கிறாள்? 

இந்த பெண்ணை முன்னே பின்னே பார்த்தது கூட இல்லையே? அப்புறம் எப்படி தான் தான் மென்னிலா என்று சரியாக அறிந்தாள்? இதற்கு முன் தெரிந்தவளோ?

 இன்று பல வருடங்கள் கழித்து பார்க்கவும் மென்னிலா தான் இந்தப் பெண்ணை மறந்து நிற்கிறாளோ? என்று பற்பல கேள்விகளுடன்.. அந்த நீலநிற சேலை பெண்ணையே ஏற இறங்கப் பார்த்தாள் மென்னிலா. 

அந்தப் புதுப் பெண் யாரென்று புலப்படாவிடினும் கூட, அவள் அணிந்திருக்கும் நீலநிற சேலை.. இவள் இந்த தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பெண் என்பதை சொல்லாமல் சொல்லியது. 

மென்னிலா புரியாமல் பார்ப்பதையே சின்ன புன்னகையோட பார்த்தவள், “நான் யாருன்னு பார்க்குறீங்களா? ரொம்பல்லாம் யோசிக்காதீங்க.. இது தான் நம்மோட ஃபர்ஸ்ட் மீட்டிங்க்..நான் வசுந்தரா பானு.. இந்த ஃபேக்டரியோட சூப்பர்வைசர்.. நீங்க பரிதி சாரோட வன் என்ட் ஒன்லி ஆண்டாள் தானே?”என்று கேட்க, 

நிஜமாகவே அந்த பெண், ‘இது முதல் சந்திப்பு’ என்று சொன்னதன் பின்பு தான் ஆசுவாசம் அடைந்தது மென்னிலாவின் இதயம். 

பின்னே தன்னை வசுந்தரா என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பெண், அவளை நன்கறிந்தது போல பேச.. 

‘வசுந்தரா இதற்கு முன் பார்த்து பழகிய நபர் தானோ?’என்று நிச்சயமாக குழம்பிப் போய் நின்றிருப்பாள் மென்னிலா. 

அதிலும் அவள் உரைத்த ‘பரிதி சாரோட வன் என்ட் ஒன்லி ஆண்டாள்’ என்ற வாசகம்.. மென்னிலாவின் புருவங்களை இலேசாக இடுங்கச் செய்ய, 

இவளெப்படி பரிதியின் ‘ஆண்டாள்’நான் தான் என்பதை அறிந்தாள் என்ற கேள்வியும் பிறந்தது பரிதியின் அழகான ஆண்டாளுக்கு. 

இருந்தாலும் தான் தான் அது என்று தன் அடையாளத்தை உறுதிப்படுத்த நாடியவள், “ஆமா…உங்களுக்கு எப்படீஈஈ.. என்னை.. தெரியும்?”என்று அவள் தன் சந்தேகத்தை கேட்க, 

அதற்கும் வசுந்தராவிடம் இருந்து சின்னப் புன்னகையே முதலில் பதிலாகக் கிடைத்தது. 

அப்போது தான் உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்த வெயில், சரியாக கரு சுமந்து நிற்கும் மென்னிலாவின் முகத்தில் பட்டுத் தெறித்து.. அவளது கண்களை கூசச் செய்ய, 

அதனைப் பொறுக்கமாட்டாத வசுந்தரா, “வாங்களேன் மென்னிலா மேடம்.. ஃபேக்டரிக்குள்ள காலாற நடந்துக்கிட்டே பேசலாம்” என்று அழைக்க, 

‘இல்லை எனக்கு வாசு சித்தப்பாவை பார்க்க வேண்டியிருக்கு’ என்ற வண்ணம்.. அந்தப் பெண்ணிடம் இருந்து கழன்று கொள்ளத் தான் எத்தனித்தாள் மென்னிலாவும். 

இருப்பினும் முன்னே பின்னே அறியாத பெண்ணுக்கு எப்படி என்னைத் தெரியும்? என்ற கேள்விக்கு விடை அறிய அவள் உள்ளம் தவிக்க, ஏதும் மறுத்துப் பேசாமல்.. அமைதியாக வசுந்தராவுடன் இணைந்து நடந்தாள் மென்னிலா தொழிற்சாலையை நோக்கி. 

மெல்ல மெல்ல மென்னிலாவுடன் சேர்ந்து நடந்தவாறு புன்னகை முகமாக, “ எனக்கு எப்படி உங்களை தெரியும்னு பார்க்குறீங்களா மேடம்?? .. எனக்கு மட்டுமில்லை.. இங்கே வேலை பார்க்குற எல்லாருக்கும்.. பரிதி சாரோட அழகான ஆண்டாள் நீங்க தான்னு தெரியும்.. உங்களுக்கு நேர்ந்த கொடுமையும் தெரியும்.. ”என்று சொல்ல, 

ஒரு மூன்றாவது மனுஷி தன் கதை அறிந்திருப்பதை எண்ணி.. உள்ளுக்குள் அலைக்கழிப்பாக உணர்ந்தாள் மென்னிலா.

மென்னிலாவின் அவஸ்தையை சரியாக கவனித்த வசுந்தராவும், பரிதியின் ஆண்டாளின் பதகளிப்பை போக்க நாடி, 

சட்டென தன் நடையை பாதியில் நிறுத்தி விட்டு, 

மென்னிலாவை, ‘அதிர்ஷ்டசாலி.. கொடுத்து வைத்தவள்’ என்பது போல பரவசப் பார்வை பார்த்தவளாக, 

“பரிதி சாரோட துரோகத்தால .. அவரை விட்டும் போன மென்னிலா மேடத்தை.. ஒருநாளாவது நேரில் பார்க்கணும்னு ரொம்ப நாள் ஆசை.. இன்னைக்கு என் ஆசை நிறைவேறிடுச்சு.. நான் மென்னிலா மேடத்தை பார்த்துட்டேன்..”என்று சொல்ல, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் நின்றாள் மென்னிலா. 

பரிதியின் கீழே வேலை பார்க்கும் ஒரு பெண்.. பரிதி அவளுக்கு இழைத்த துரோகத்தை அறிந்திருக்கிறாள்!! 

அதிலும் பரிதியை விட்டுப் பிரிந்த ஆண்டாளை ஒருநாளாவது பார்த்து விட வேண்டும் என்று ஆவலும் கொண்டிருக்கிறாள்!! 

கேட்கக் கேட்க புதுமையாகவும், வியப்பாகவும் இருந்தது மென்னிலாவுக்கு. 

மீண்டும் மென்னிலாவுடன் இசைந்து நடந்து தொழிற்சாலைக்குள் நுழைந்த வசுந்தரா, மென்மையான குரலில்,

 “இந்தவுலகத்துல தப்பு பண்றவங்க அதிகம்.. செஞ்ச தப்ப.. திரும்பத் திரும்ப பண்றவங்க இன்னும் அதிகம்.. ஒருமுறை பண்ண தப்புக்காக மனசு வருந்தி.. திருந்துறவங்க ஆயிரத்துல ஒருத்தவங்க தான்.. பரிதி சார் ஆயிரத்துல ஒருத்தர்” என்று சொல்ல, 

முதலில் மென்னிலாவுக்கு ஒன்றுமே புரிபடவில்லை. 

அவளது உள் மனதில் ஓடியது எல்லாம், ‘இவள் ஏன் இதையெல்லாம் என்னிடம் சொல்கிறாள்? ஒருவேளை பரிதி இந்த வசுந்தரா பெண்ணுக்கு காசு கொடுத்து.. தன்னைப் பற்றி தன் மனைவியிடம், ‘பில்டப் பண்ணு’ என்று கேட்டுக் கொண்டாளா?’ என்பது தான்!! 

ஆனால் பரிதிவேல்.. இன்னுமொருவனிடம் தன்னை ‘பில்டப் பண்ணு’ என்று கூறும் ரகம் அல்ல என்பதை அவள் நன்கறிவாள். 

தன்னை எப்போதும் ‘கெட்டவன்’ என்று தைரியமாக பறைசாற்றிக் கொள்ள பிரியமானவனும் கூட அவளது கணவன்!! 

இவையனைத்தும் இந்தப் பெண் வசுந்தராவாகவே உணர்ந்து சொல்கிறாள் என்பது தெள்ளத் தெளிவாகவே புரிந்தது மென்னிலாவுக்கு. 

அதுவொரு மாப்பொருள் கொண்டு ‘பாஸ்தா’ தயாரிக்கும் ஒரு நிறுவனம் என்பது பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது அவளுக்கு.  

மென்னிலாவைக் கண்ட சந்தோஷத்தில்.. அவளது முத்து மூரல்கள் பளிச்சிட்டுத் தெரிய, உற்சாகமான குரலில், 

“என்னைக்காவது ஒருநாள் நீங்க.. இங்கே வரமாட்டீங்களான்னு .. ஒரு.. ஏக்கம் இருந்தது .. அது இன்னைக்கு நிறைவேறிடுச்சு.. நீங்க வந்தது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..?” என்று கேட்க, மென்னிலாவும் தன்னுள் எழும் ‘ஒருமாதிரியான பதகளிப்பை’ சமாளிக்க.. அவஸ்தையுடன் புன்னகைத்து வைத்தாள். 

இந்த இடத்திற்கு வந்த மென்னிலா.. சாதாரணமாக இருப்பதை விடுத்து, அசாதாரணமாக இருப்பதைக் கவனித்த வசுந்தராவுக்கு, பரிதிவேல் வீரன்.. ‘இந்த இடத்தைப் பற்றியும், தொழிற்சாலை பற்றியும்’ எந்தவிதமான தகவலையும்.. மென்னிலாவுடன் பகிர்ந்து கொண்டதேயில்லை என்பதை தெளிவாகப் புரிந்தது. 

இடுங்கிய விழிகளுடன், “நீங்க.. அன்கம்பர்டபிளா இருக்குறத பார்த்தா.. பரிதி சார்.. இந்த ஃபேக்டரிய பத்தி உங்க கிட்ட சொன்னதேயில்லை போல இருக்கே?” என்று வாய் விட்டு கேட்க, 

மென்னிலாவும் சின்ன அலைக்கழிப்புடன், “இல்லை.. அப்படியெல்லாம் இல்லை.. நான் தான் அவர் பிஸினஸ் மேட்டர்ஸ் பத்தி தெரிஞ்சிக்க.. அவ்வளவா இன்ட்ரஸ்ட் காட்டினதில்லை.. அதனால சொ.. சொல்லாம விட்டிருக்கலாம்”என்று மெல்ல சமாளித்தாள் மென்னிலா. 

பல நாள் பழக்கப்பட்டவள் போல.. மென்னிலாவின் கையை உரிமையோடு பற்றியவளாக, 

“இப் யூ டோன் மைன்.. ப்ளீஸ் என் கூட வாங்களேன்.. நான் உங்களுக்கு ஒண்ணு காட்டணும்.”என்று கைப்பிடித்து இழுக்க, மென்னிலாவும் வேறு வழியின்றி.. நீலநிற சேலைப்பெண்ணுடன் செல்லும் படியாயிற்று. 

வசுந்தரா அழைத்துச் சென்றது என்னமோ.. அந்த பாஸ்தா தொழிற்சாலையின்.. வேலைகள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் உட்பகுதிக்கு. 

எல்லாமே அழகிய இடங்கள்.சுத்தத்திலும்,நேர்த்தியிலும் ஒரு பிழை சொல்ல முடியாத அழகிய இடங்கள் அவை. 

‘பரிதி க்ரெய்ன்ஸ்’ என்று பெயர் அச்சிடப்பட்ட மா மூட்டைகளை எல்லாம்.. வரிசையாக எடுத்து வந்த பெண்கள், பெரிய இயந்திரப் பாத்திரத்தில் கொட்டிய வண்ணம் இருக்க, சரியான ப்ளேவர்களும், கலவைகளும் தானாக அந்த இயந்திரத்தில் கொட்டுப்பட்டு.. கலக்கப்படும் ஒலி.. நாராசமாக கேட்டுக் கொண்டேயிருந்தது. 

இன்னொரு பக்கத்தில், ‘பாஸ்தா’ க்கள் எல்லாம் ஒவ்வொரு அமைப்பில் வரத் தேவையான அச்சுக்கள்.. பாரிய சத்தத்துடன் இயங்கிக் கொண்டிருக்க, 

அதிலிருந்து விதவிதமான அமைப்பில் சின்ன சின்னத் துண்டாக வெட்டப்பட்டிருக்கும் பாஸ்தாக்கள் வந்து விழுந்த வண்ணம் இருந்தன. 

அப்படி வந்து விழுந்த பாஸ்தாக்களை.. பெருந்தட்டில் பரத்தி.. சரியான உஷ்ணத்தில் காய வைப்பதற்காக.. பயன்படுத்தப்பட்டவர்கள் கூட பெண்களே!! 

இறுதியில் காய்ந்த பாஸ்தாக்கள்.. ஒரு இயந்திரத்தில் வந்து.. அளவான பொலித்தீன் பையில் கொட்ட.. அந்த பையின் திறந்த வாயை மூடக் கூட.. பெண்களே பணிக்கு அமர்த்தப்பட்டிருந்ததைக் கவனித்தாள் மென்னிலா. 

அவளது பெயரில்.. கணவன் ஒரு பாஸ்தா தொழிற்சாலை நடத்துவதே ஒரு ஆச்சரியம் என்றால், அதில் பணிபுரிபவர்கள் அனைவரும் பெண்களாக இருக்க.. இன்னும் கொஞ்சம் அதிர்ந்து தான் நின்றாள் அவள். 

இயந்திரச் சில்லுகள் இயங்குவதையே கணவனின் யோசனை மீதூறப் பார்த்துக் கொண்டிருந்தவளின் சிந்தனையை கலைக்குமுகமாக கேட்டது வசுந்தராவின் குரல். 

எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் வசுந்தராவைக் காணுகையில், ‘இந்தப் பெண்ணுக்கு வாழ்வில் சோகமே கிடையாது போலும்.. புன்னகைத்த முகமாகவே இருக்கிறாள். அன்பான கணவன், குழந்தைகள் என்று திருப்தியான வாழ்க்கை போலும்.. கொடுத்து வைத்தவள்’என்று மென்னிலாவுக்கு எண்ணத் தோன்றினாலும், 

மெய்யாலுமே ஒருவர் முகத்தில் நிலவும் புன்னகைக்கும், அவர் தம் வாழ்வுக்கும் சம்பந்தம் ‘லேது’ என்று, வசுந்தராவாகவே சொல்லும் வரை.. மென்னிலாவுக்கு புரியவில்லை. 

அங்கிருந்த அத்தனை பெண்களையும் கையால் சுட்டிக்காட்டிய வசுந்தரா , “இங்கே இருக்குற அத்தனை பேருக்கும்.. ஒரே வாழ்வாதாரமாக இருக்குறது.. இந்த பாஸ்தா ஃபேக்டரி தான்… எங்க முகத்துல உறைஞ்சிருக்குற புன்னகைகளை பார்த்துட்டு… நாங்கலாம் ‘கணவன், குழந்தைங்க குடும்பம்’னு திருப்தியான வாழ்க்கை வாழ்றதா தான் பலரும் நினைக்குறது உண்டு… ஆனால் அப்படியில்லை.. இங்க இருக்குற ஒவ்வொருத்தரும் கணவனை இழந்தோ.. இல்லை கணவனால கைவிடப்பட்டோ… புனர்வாழ்வு அளிக்கப்பட்டவங்க.. இங்க இருக்குற ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கதை இருக்கு..”என்று ஓர் பெரும் உண்மையை சொல்ல ஆடிப் போய் நின்றிருந்தாள் மென்னிலா. 

வசுந்தரா உரைத்த, “.. இங்க இருக்குற ஒவ்வொருத்தரும் கணவனை இழந்தோ.. இல்லை கணவனால கைவிடப்பட்டோ… புனர்வாழ்வு அளிக்கப்பட்டவங்க.. இங்க இருக்குற ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கதை இருக்கு”என்று சொன்ன வாசகமே திரும்பத் திரும்ப.. அவள் காதுகளில் கேட்டுக் கொண்டேயிருந்தது அவளுக்கு. 

மென்னிலாவின் விழிகள் மெல்ல நிமிர்ந்து… கருமமே கண்ணாயினாற் போல.. தன் வேலையில் கண்ணும், கருத்துமாக செய்து கொண்டிருக்கும் பெண்களை சுற்றிவரப் பார்த்தது. 

அனைவரும் கணவனை இழந்தோ அல்லது கணவனால் கைவிடப்பட்டோ புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களா?? 

அங்கிருந்த பெண்கள் நிலையும், இரண்டு வருடத்திற்கு முன்னால்.. பரிதியின் துரோகத்துக்கு ஆளான அவள் நிலையும் ஒன்று என்று தோன்ற… அந்தப் பெண்களின் துயரங்களை அவளால் உணர முடிந்தது. 

மென்னிலாவின் இரங்கும் விழிகளைப் பார்த்தவாறே மற்றவள், 

அவர்களை கடந்து மா மூட்டையுடன் சென்ற ஒரு இளவயது பெண்ணை சுட்டிக்காட்டி, 

“இதோ போறாள்ல?? இவ புத்தளத்தை சேர்ந்தவ பேரு ரெமிலா… வீட்டுல வறுமை காரணமா படிப்பை நிறுத்திட்டு.. பெத்தவங்க.. ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க.. அவனோ ஒரு குடிகாரன்.. கல்யாணம் பண்ண கொஞ்ச நாளில்.. வாலை சுருட்டிட்டு ஒழுங்கா இருந்திருக்கான் அவ புருஷன்..

 ஆசை அறுபது நாள்.. மோகம் முப்பது நாள் இல்லையா?? அவ மேலிருக்குற ஆசை தெளிஞ்சதும்.. திரும்பவும் பாட்டிலும், கையுமா அலைய ஆரம்பிச்சிருக்கான் அவன்.. 

எடுத்து சொன்னா.. தினமும் சண்ட, அடி, தடி இரத்தம்… எத்தனையோ தடவை.. அவன் கூட வாழ முடியாதுன்னு.. அவங்க அம்மா வீட்டுக்குப் போயிருக்கா.. வீட்டிலேயோ, ‘ஆம்பளைங்க அப்படி தான் இருப்பாங்க.. நாங்க தான் அட்ஜஸ்ட் பண்ணி போகணும்’னு பழைய பஞ்சாங்க அட்வைஸ்.. 

ஒரு தடவை வீட்டுக்கு இன்னொருத்தியை கூட்டி வந்து.. இவ கண் முன்னாடியே குடும்பம் நடத்த.. தட்டிக் கேட்டவளை.. ஈவிரக்கமேயில்லாம.. அடிச்சு.. வீட்டை விட்டே விரட்டி விட்டுட்டான் அந்த படுபாவி… 

வாழ்க்கையே வேணாம்னு தற்கொலை பண்ண போனவளை.. கண்டுபிடிச்சு கூட்டி வந்தது பரிதி சார் தான்.. 

அப்போ அவளுக்கு தெரியாமலேயே அவ வயித்துல மூணு மாசம்.. சின்னப்பொண்ணு இல்லையா.. பதினெட்டு வயசுலேயே கர்ப்பமானது கூட தெரியலை… அப்புறம் ‘ஆண்டாள் ரிஹேபிலிடேஷன் சென்டர்’ புனர்வாழ்வு அளிக்கப்பட்டு..” என்று அவள் பெயரில் அமைந்திருக்கும் புனர்வாழ்வு மையத்தின் பெயரைச் சொல்ல, விழிகள் இரண்டும் அகல விரிந்தன அவளுக்கு. 

என்ன? அவள் பெயரில் ஒரு புனர்வாழ்வு மையமா? 

மென்னிலாவின் முகத்தை அச்சொட்டாகப் படித்தது போல வசுந்தராவும், 

“ஆமா.. உங்க பெயர்ல தான் அந்த புனர்வாழ்வு நிலையம் இயங்கிட்டிருக்கு… உங்களுக்கு அவர் பண்ண துரோகத்துக்கு, அந்தக் கொடிய தப்புக்கு பிராயச்சித்தம் பண்ணத் தான்.. பரிதி சார்.. உங்க பெயர்லயே அந்த புனர்வாழ்வு மையத்தை ஆரம்பிச்சாரு”என்று சொல்ல, 

அதைக்கேட்டு திகைப்பூண்டை மிதித்தாற் போன்றானாள் மென்னிலா. 

என்.. என்ன அவளுக்கு செய்த தப்புக்கு பிராயச்சித்தமாக.. அவளைப் போலவே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ ஒரு புனர்வாழ்வு மையம் ஆரம்பத்திருக்கிறானா அவள் கணவன்?? 

இத்தனையும் செய்தானா அவள் கணவன்?? 

அ.. அப்படியானால் இது.. இதுவொன்றும் நடிப்பு இல்லையா? நிஜமாகவே மனந்திருந்தியவனா அவள் கணவன்?? என்ற எண்ணம் தோன்ற.. 

இனம்புரியாமல் இதயத்தில் எழுந்த கலக்கம்… அவளது விழிகளைத் தாக்கி.. செந்நிறம் கொள்ளச் செய்தது. 

வசுந்தராவோ தான் விட்ட இடத்தில் இருந்து சொல்ல நாடி, “இந்த பேக்டரியில பரிதி ஐயா தான் வேலை போட்டுக் கொடுத்தாரு.. இப்போ அவளோட மூணு வயசு மகனையும் பார்த்துக்கிட்டு, தன்னைப் போல வாழ்விழந்து வர்றவங்களுக்கு, ‘ஆண்டாள் ரிஹேபிலிடேஷன் சென்டர்’ல.. கவுன்சிலிங் கொடுக்குறா.. பரிதி சாரும்.. இவளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுக்க ட்ரை பண்ணாலும்.. தன்னோட மகனும் இந்த வேலையும் கடைசி வரை போதும்னு வாழ்ந்துட்டிருக்கா.. இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கதை இருக்கு.. என்னோடதும் சேர்த்து தான்”என்று சொல்ல, மென்னிலாவில் முதன் முறையாக.. கணவனைப் பற்றிய நெஞ்சார்ந்த எண்ணங்கள் முகிழ்க்கவாரம்பித்தது. 

ஏன்.. ஏன் இதையெல்லாம் அவன் செய்ய வேண்டும்?? அப்படி செய்ததையும் ஏன் அவளிடம் இருந்து இதுகால் வரை மறைத்தும் வைக்க வேண்டும்?? 

வசுந்தராப் பெண்ணோ, ‘ஆண்டாள் புனர்வாழ்வு நிலையத்தை’ப் பற்றி மேலும் சொல்ல நாடியவளாக,

 “ஆண்டாள் புனர்வாழ்வு மையம்.. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி..பரிதி சாரோட மனதுக்கு இனிய பெண்ணான உங்க பேர்ல ஆரம்பிக்கப்பட்டது… கணவனை இழந்த.. அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது.. இங்கே வர்றவங்க பல பேர் மனசு ரீதியா பாதிக்கப்பட்டவங்களா தான் இருந்தாங்க… கணவனால.. இல்லை.. கணவனை சார்ந்தவர்களால தினம் துன்புறுத்தப்பட்றதால… ‘நாங்க தப்பானவங்க’ன்ற குற்றவுணர்வு.. எந்த தப்பும் பண்ணாமலேயே அவங்களுக்குள்ள மலையளவு கொட்டிப் போனவங்களா தான் இங்கே வர்ற பல பெண்கள் இருப்பாங்க..

 ‘இது எதுக்குமே நீங்க காரணமில்லை.. இதுக்கு வேதனைப்பட வேண்டியது நீங்க இல்லை… உங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கினவங்க தான்’னு புரிய வைச்சு.. கவுன்சிலிங் கொடுத்து.. அவங்களை பழைய நிலைமைக்கு மாத்துறது சவாலான விஷயமா இருக்கும்… 

அந்த மாதிரி சில பெண்கள்.. அந்த நினைவுகளின் தாக்கத்தால.. ‘ட்ரோமடைஸ் ஆனவங்களா பிஹேவ் பண்ணும் போது.. பரிதி சாரோட கண்கள் ரொம்ப கலங்கிப் போயிருக்கும்.. ஆரம்பத்தில் சாரோட இந்த ‘நடத்தை’க்கு காரணம் என்னான்னு புரியலை.. அப்புறம் வாசு சார் மூல்யமா தான்.. சாரோட கண் கலங்கலுக்கு காரணம் புரிஞ்சுக்கிட்டேன்.. தன்னால கைவிடப்பட்ட.. எங்கே இருக்கான்னே தெரியாத அவரோட மனைவியான உங்களை நெனச்சு தான்.. அவர் கண்கள் கலங்குறதை நான் தெரிஞ்சுக்கிட்டேன்.. இது அவ்வளவுமே அவர் பண்ண தப்புக்கு பிராயச்சித்தம்னும் புரிஞ்சுக்கிட்டேன்.. ”என்று சொல்ல, 

அந்த வன்னிலாவின் முகத்திலோ உணர்ச்சி சுத்தமாக துடைக்கப்பட்ட பார்வை எழுந்து பரவலானது. 

நிஜமாகவே.. அவள் கணவன்.. அந்தப் பெண்களின் நிலையில் வைத்து.. அவளை எண்ணிப் பார்த்து கலங்கினானா? 

அப்படியானால்.. அவள் உயிருக்கு உயிராக கண்ட நாள் முதலாக நேசிக்கும் அவளது பரிதி.. அவளைப் போலவே.. அவனும் நேசிக்கிறானா?? 

அவள் எங்கிருக்கிறாள்? எப்படியான வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்று எண்ணி எண்ணி நித்தமும்.. பரிதவித்திருக்கிறானா? 

வாழ்க்கையிம் பாடங்களை அனுபவித்தாற் போன்ற மெல்லிய குரலில், 

“ஆரம்பத்துல.. இங்கே வர்ற ஒவ்வொரு பெண்ணுக்கும் புனர்வாழ்வு கொடுத்து.. வேலையும் கொடுத்து.. பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவி, ஒத்தாசை செய்ற பரிதி சார்.. அதே போல நிலைமையில்.. கணவனால கைவிடப்பட்ட பெண்ணான எனக்கு தெய்வமாக தான் தெரிஞ்சாரு.. அதுக்கப்புறம் அவரும் கூட.. அவர் மேல உயிரையே வைச்சிருந்த ஒரு அப்பாவிப் பொண்ண ஏமாத்தியிருக்காருன்னு தெரிய வந்ததுக்கு பின்னாடி அவர் மேல இருந்த மரியாதை போய்… கோபம் வந்ததது..

 ஆனால் இது எல்லாத்துக்கும் காரணம்.. சார் உங்களுக்கு பண்ண தப்பு தான்.. அவரை விட்டுப் போன நீங்க..எங்கே இருக்கீங்கன்னு தெரியாது? என்ன மாதிரி சூழ்நிலையில் தவிச்சிட்டு இருக்கீங்கன்னும் தெரியாது… 

அவர் கிட்ட மிஞ்சியிருந்தது உங்க மேல அவர் வைச்ச காதல் மட்டும் தான்.. அந்த காதல் தான் அவரை இந்தளவு தூரத்துக்கு இழுத்துட்டு வந்திருக்கு… தன்னோட ஆண்டாள் நிலைமையில இருக்குற ஒரு பொண்ணை… கணவனால கைவிடப்பட்ட ஒரு பொண்ணை அவர் பார்த்துக்கிட்டா… கடவுள்.. அவரோட ஆண்டாளை நல்லா பார்த்துப்பான்றது பரிதி சாரோட எண்ணம்!!” என்று சொல்ல, 

கணவன் வாய் விட்டு சொல்லாததை எல்லாம்.. இந்தப் பெண் வாயிலாகக் கேட்டு ஸ்தம்பித்துத் தான் நின்றாள் மென்னிலா. 

இது அத்தனையும் அவன் செய்தது.. அவளுக்காக என்றது புரிந்தது அவளுக்கு. 

அவனது கண்மறைவில் இருக்கும் ஆண்டாள் எந்தவிதமான குறையும் இல்லாமல் இருக்க, மென்னிலாவின் மனநிலையில் இருக்கும் பல பெண்களின் குறையைத் தீர்த்து வைக்க நாடியிருக்கும் இந்த முரடன் எப்பேர்ப்பட்ட அழகிய ஆண்மகன்?? 

அவள் இல்லாமல் கழிந்த இரண்டு வருடங்களில்.. ஒவ்வொரு செக்கனும் கூட.. அவளைப் பற்றி எண்ணி எண்ணியே வாழ்ந்தும் இருக்கிறான் அந்த ஆகாயச் சூரியன்!! 

மௌனமாக.. அவளது இடது விழியில் இருந்தும் வழிந்தது ஒற்றைத் துளிக் கண்ணீர். 

அடுத்து வசுந்தரா சொன்ன விஷயத்தில் பொறாமையோடு சின்ன அசூயையும் மீதூறத் தான் செய்தது பரிதியின் ஆண்டாளுக்கு. 

அப்படி என்னதான் சொன்னாள் அவள். 

இதோ அவள் சொன்னவை எல்லாம் இவை தாம். 

மென்னிலாவை வருத்தம் தோய பார்த்தவளாக, “இன்னும் ஏன் ஒரு கட்டத்துல அவர் மேல எனக்கு காதலும் வந்தது.. தப்பு செய்றவங்க மத்தியில்.. செஞ்ச தப்புக்காக பிராயச்சித்தம் தேடுற உண்மையான ஜென்டில்மேன் பரிதி.. என் ஆசையை மனசு விட்டு கேட்டும் இருக்கேன்..”என்று சொல்ல, 

அந்நொடி மீண்டும் பிறந்திருந்த பழைய காதல் மென்னிலாவுக்கு, வசுந்தராவின் காதல் சின்ன ‘பொஸஸிவ்னஸ்’ஸைக் கொடுக்கத் தான் செய்தது. 

‘அடுத்தவள் புருஷன் மீது ஆசை வைக்க வெட்கமாயில்லை’ என்ற கேள்வியும் நுனிநாவு வரை வந்து போக.. கைவிரல்ககை அழுந்தப் பற்றிக் கொண்டு, தன் அவசரத்ததை மறைத்து நின்றாள் அவள். 

வசுந்தரா மென்னிலாவின் உணர்ச்சிகளைப் படித்தாலும், எதையும் ஒழிக்காமல், மறைக்காமலேயே அனைத்தையும் சொல்ல எத்தனித்து, 

“ ‘உங்கள விட்டு போன ஆண்டாளு.. இதுக்கப்புறமும் திரும்ப வருவாள்னு நீங்க எதிர்பார்க்குறீங்களா? நிச்சயமாக அவங்க திரும்ப வரப்போறதில்லை… உங்க ஆண்டாளா.. நான் மாறக்கூடாதா?..’ன்னு மனசு விட்டு கேட்டும் இருக்கேன்.. அதுக்கு பரிதி சார் என்ன சொன்னாரு தெரியுமா? ‘என்னைக்குமே என் ஆண்டாளு.. என் ஆண்டாளு தான்..அவ ஏத்துக்கிட்டாலும், ஏத்துக்கலைன்னாலும் இந்த ஜென்மத்துல அவ ஒருத்திக்கு தான் இந்த பரிதி… என் மேல அவ வைச்சிருக்க காதல்.. அவளை திரும்ப என்கிட்ட கொண்டு வந்து சேர்க்கும்.. உன் மனசை கலைக்குற மாதிரி நடந்துக்கிட்டிருந்தா என்னய மன்னிச்சிடு’ன்னு சொன்னவரு.. அதுக்கப்புறம் அவர் இங்கே வர்றதையே நிறுத்திட்டாரு..”என்று கூற, 

பரிதியின் அந்த சொற்கள், “..அவ ஏத்துக்கிட்டாலும், ஏத்துக்கலைன்னாலும் இந்த ஜென்மத்துல அவ ஒருத்திக்கு தான் இந்த பரிதி”என்ற அவனுடைய சொற்கள்.. காலம் கடந்த பின்.. அவள் காதில் திரும்பத் திரும்ப ரீங்காரமிடத் தொடங்கியது. 

இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே… அவளுக்காக.. அவள் வருகைக்காக காத்திருந்திருக்கிறான் அவளது தலைவன்!! 

அதிலும் அவள் வருவாள் என்று ஆணித்தரமாக நம்பியிருக்கிறான் என்றால்.. பரிதியின் காதல் எத்தகையது? 

வசுந்தராப் பெண்ணோ.. ஒரு பெண்ணுக்குள் தோற்ற காதல் உணர்வுகள் இழையோட மெல்லிய குரலில், “ அவரோட மறுப்பை தாங்க முடியாம.. ‘உங்க ஆண்டாளு.. அங்கேயே ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக்கிட்டிருந்தா என்ன பண்ணுவீங்க? அவளை நினைச்சு உங்க வாழ்க்கையை பாழாக்கிக்கப் போறீங்களா?’ன்னும் நான் கேட்டேன்.. அப்போ அவர் என்ன சொன்னாரு தெரியுமா?.. 

‘அவளால நிச்சயமா அப்படி முடியாது.. என்னை நேசிச்ச இதயத்துல.. எனக்கான வெறுப்புக்கு வேணா இடமிருக்கும்.. ஆனா இன்னொருத்தருக்கு இடம் இருக்காது…. அவ திரும்பி வருவா.. அப்படி அவ திரும்பி வரும்போது.. என் தப்ப உணர்ந்துட்டேன்னு நிரூபிக்கத் தான் இது எல்லாமே..’ன்னு சொன்னாரு..” என்று பகர, 

அப்போதே அவள் மனதை கணித்திருக்கும் கணவன்.. அவளை எந்தளவுக்கு புரிந்து வைத்திருக்கிறான் என்றெண்ணி விழி விரித்துத் தான் நின்றாள்.

 ‘என்னை நேசிச்ச இதயத்துல.. எனக்கான வெறுப்புக்கு வேணா இடமிருக்கும்.. ஆனா இன்னொருத்தருக்கு இடம் இருக்காது’ என்று சரியாக கூறியிருப்பவன்… அவளுள் ‘வெறுப்புக்கு இடமுண்டு.. இன்னொருத்தனுக்கு இடமில்லை’ என்பதை அறிந்திருந்தானாயின், 

அந்தக் காத்திருப்பு.. அவள் எப்போது வருவாள் என்று தெரியாமலேயே காத்திருந்த அவனுடைய காத்திருப்பு.. அது பரிசுத்தமானது அல்லவா?? 

 அன்று அவள் ‘கடலுக்குள் மீனா இல்ல’ என்ற போது ஆத்திரம் கொண்டு அடித்தது கூட.. அவனுள் மீதூறிய உரிமைக் கோபத்தினாலா? 

அவனது அன்பு எல்லாம் சிறுகச் சிறுகப் புரிந்தது அவளுக்கு. 

அவள் முகத்தில் புன்னகை காண வேண்டும் என்பதற்காக, காக்கையிடம் கொத்து வாங்கி.. பூனைக்குட்டியைக் காப்பாற்றிய அவனது நிராதரவான குழந்தை முகம் வந்து போனது. 

அன்று அவள் பால்கனியில் வைத்து ‘இளவரசனும், நிலாவும்’ கதை சொன்ன போது கூட, 

‘நிலாவை விட்டுப் பிரிய மனமில்லாமல், ‘நான் அந்த இடத்தில் இளவரசனா இருந்திருந்தா.. அந்த குகையோட சின்ன இடைவெளி கூட தெரியாதளவுக்கு அதை அடைச்சிருப்பேன்.. அப்போ நிலாவும் என் கூடவே இருந்திருப்பா” என்று காதல் தவிப்பு மீதூற சொன்னவனின் முகம் வந்து போனது. 

கொடுத்த கடனை திருப்பித் தர வேண்டிய கடன்காரனிடம், கறாராக நடந்து கொண்ட பரிதி.. அவளது வேண்டுதலுக்காக, அந்தக் கூலித் தொழிலாளியை ஏதும் செய்யாமல் விட்ட அந்த நாளும் நினைவில் உதித்து போனது. 

இத்தனை ஞாபகங்களின் முடிவிலும் அவளுள் தீவிரமாக தோன்றியது எல்லாம், ‘எல்லாம் அவளுக்காக’ என்பதே! 

மென்னிலாவின் மன ஓட்டங்களை அறியாத, வசுந்தரா தொடர்ந்து சொன்னாள். 

“நிச்சயம் என் ஆண்டாளு திரும்ப வருவான்னு சொன்னாரு.. அவர் நம்பிக்கை பழிச்சிருச்சு.. அவர் சொன்ன மாதிரி நீங்க வந்தீங்க.. ஆனால் அவர் நிருபிக்க தேவையே இல்லாமல் அவரை நீங்க மனமார ஏத்துக்கீட்டிங்க..அவர் அன்பை விட.. அவரை ஏத்துக்கிட்ட உங்க அன்பு தான் என்னை மெய்சிலிர்க்க வைக்குது..”என்று அவள் சொல்லி முடித்த கணம், கண்மணிகள் இரண்டும் உவர்நீரில் கலங்கி.. விம்பங்கள் எல்லாம் இரண்டிரண்டாகத் தெரிய.. அமைதியாக நின்றிருந்தாள் மென்னிலா. 

அவன் நிரூபிக்கத் தேவையே இன்றி.. அவனை மனமார ஏற்றுக் கொண்டாளா அவள்? 

இல்லவே இல்லை.. நிச்சயமாக இல்லை. மனமார ஏற்றுக் கொண்டது போல.. பழிவெறி மீதூற.. நடிக்கத் தானே செய்தாள் அவள்?? 

இங்கே அவள் காலடி பட்டுக் கொண்டிருக்கும் பூமியும்.. அந்த பூமியில் இருக்கும் ஒவ்வொரு துகள் மண்ணும்.. 

இன்னும் ஏன்.. அந்த தொழிற்சாலை கட்டிடமும், கட்டிடத்தை தாங்கியிருக்கும் ஒவ்வொரு கல்லும்.. பரிதிவேல் வீரன்.. தன் தவற்றை உணர்ந்து திருந்தியவன் என்பதற்கு ஓர் பெரும் சான்று!! 

ஆனால் அவள்?? அவன் தன்னோடு இழைவது போலியான நடிப்பு என்று எண்ணி.. இத்தனை காலம் அவனோடு இழைந்து தாம்பத்தியம் நடத்தி.. கருவில் ஒரு குழந்தையையும் வாங்கியிருப்பதற்கு பேர் என்னவாம்?? 

அவன் செய்தது துரோகம் என்றால்.. இவள் செய்ததற்கு பெயர் ‘பரத்தைத்தனம்’ அல்லவா?? 

அவன்.. தப்புக்கு வருந்தியிருக்கிறான்!! அவள் நிலை எத்தகையது என்று அறியாமல் ஏங்கியிருக்கிறான்!! 

இன்னும் ஏன்.. இத்தனை நாளும் அவனது காதல் நடிப்பல்ல..அது உண்மையான காதல் என்றறிந்தும் இளகிப் போயிற்று அவள் உள்ளம். 

பழிவெறிக்காக.. கணவனோடு மஞ்சம் பகிர்ந்தது ஒழுக்கமுள்ள நன்மாதர் செய்யும் அறமா?? 

அவள் உள்ளம் அவளைக் காறித் துப்புவது போல ஒரு தோற்றப்பாடு எழுந்து அவளை இன்னும் அலைக்கழிப்புள்ளாக்கியது. 

அவள் விழிகள் நிமிர்ந்தது… கணவனைக் கண்டு விடும் ஆவல்.. அவள் செய்த கேவலமான செயலுக்கு.. அவனது பாதங்கள் வருடி.. மன்னிப்புக் கேட்டு விடும் வெறி முகிழ்க்க.. கண்களாலேயே கணவனைத் துலாவினாள் பெண். 

வசுந்தரா.. மென்னிலாவின் கண்ணீர் கண்டு பதறி நின்ற நேரம்.. அவ்விடத்துக்கு சமயாசந்தர்ப்பம் பார்த்து வந்தார் வாசு மாமா. 

மெய்யாலுமே.. மென்னிலாவை இங்கே வரவழைத்து, வசுந்தராவுடன்.. அவளை உரையாட விட்டது எல்லாமே சாக்ஷாத் வாசு மாமாவின் திட்டமே!! 

மருமகனோ.. மனைவியை சுறா மீனிடம் இருந்து காப்பாற்றியதில் இருந்து, மென்னிலாவுக்கு தன் உத்தமத்தனத்தை நிரூபிக்கத் தேவையேயின்றி.. மனமார ஏற்றுக் கொண்டு விட்டாள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். 

ஆனால் இந்த பழிவெறிப் பெண்ணோ… மருமகனால் குழந்தை ஏற்ற பின்பும் கூட.. தாய்மைக்கு மதிப்பளித்து.. பழியுணர்வை தூக்கிப் போட்டு விட்டு.. பரிதியின் உண்மை அன்பை உணராது பழிவாங்க காத்திருக்கிறாள். 

என்ன செய்வது என்று கையாலாகாத தனத்துடன் நின்றவர் முடிவெடுத்தது தான் இது. 

வசுந்தராவும் வாசு மாமாவைக் கண்டதும் சின்ன புன்னகையுடன், ‘விஷயத்தை சொல்லியாயிற்று’ என்பது போல தலையசைத்து விட்டு நகர்ந்ததையோ, வாசு மாமாவும் அதற்கு மறுபதிலாக தலையாட்டியதையும் அறியாது.. தன் உணர்ச்சிப் பிடியில் சிக்கிக் கொண்டிருந்தாள் மென்னிலா. 

அவளை நோக்கி நடந்து வந்த வாசு மாமா, மென்னிலாவின் விழிகள் ஏக்கத்துடன் பரிதியைத் தேடுவதை அப்பட்டமாக கண்டு கொள்ள, 

“வாம்மா.. என்ன தேட்ற? .. பரிதிவேல் வீரன் எங்கேன்னா? முதல்ல என்னய மன்னிச்சிடுமா.. பரிதி இங்கன இல்ல.. பரிதி வீட்டுல போன வைச்சிட்டுப் போனது கூட எனக்கு தெரியாது..”என்று ஒரு பெரும் இரகசியத்தைச் சொல்ல, தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு வாசு மாமாவைப் பார்த்தாள் மென்னிலா. 

“என்ன?”

தன் கை விரல்களை கோர்த்துக் கொண்டே, மெல்லிய குரலில், “ஆமாம்மா.. நான் போன் பண்ணது பரிதிக்குத் தான்.. ஆனால் உன் குரல் கேக்கவும்.. பரிதி வீட்டுல இல்லன்னு ஊகிச்சுக்கிட்டேன்.. அதான் உன்னைய.. இங்கே வரவழைக்கணும்ன்றதுக்காக.. உன்னைய.. ஃபோன நீயே கொணர்ந்து தர்றீயான்னு கேட்டு வரவழைச்சேன்…. கர்ப்பமா இருக்குற உன்னய அலைய வைச்சதுக்கு இந்த சித்தப்பன மன்னிச்சிடுமா.. நீ உண்மைய அறியணும்னா வேற வழி தெரியலமா..”என்று சொல்ல, 

‘இது எல்லாமே வாசு மாமா வேலை தான்’ என்று புரிந்து விட.. அவரையே உணர்ச்சியற்ற பார்வை பார்த்துக் கொண்டே நின்றவளுள் ஓடிய கேள்வி எல்லாம், 

‘பரிதி இங்கே இல்லாட்டி.. அப்புறம் எங்கே?’ என்பது தான். 

அவரோ தொடர்ந்து சொல்ல எத்தனித்தவராக, “நான் ஒண்ணு விடாம எல்லாத்தையும் பரிதிக்கிட்ட போட்டுக் குடுத்துட்டேன்னு நினைச்சிட்டிருக்கீயா…? இப்ப வரைக்கும் உன் மனசு மாறும்னு நம்பிக்கையில நான் அதை பண்ணல.. இனிமேலும் அமைதியா இருக்க என்னால முடியாது.. சுறா மீன் தாக்குதலில் இருந்து உன்னய காப்பாத்துனல இருந்து.. நீ அவன மனசார ஏத்துக்கிட்டதா நினைச்சிட்டிருக்கான் அவன்..”என்றவருக்கு அடுத்து பேசும் போது ஏகத்துக்கும் கண்கள் கலங்கத் தொடங்கியது. 

நாவு தழுதழுக்க, “அவன் காதலி.. ச்ச.. ஆண்டா.. ளு நீ இல்.. ல… நீ வேற மென்னிலா.. அவன ஏமாத்திட்டிருக்க.. மென்.. னிலான்னு தெரிஞ்சது.. அவன் செத்துடுவான்.. மாஆ”என்று சொல்ல, 

வயிற்றில் புளியைக் கரைத்தது போல ‘பகீர்’ என்றது மென்னிலாவுக்கு. 

சட்டென தன் கண்களை துடைத்து விட்டுக் கொண்ட வாசு மாமா, அவளை இறுகிய முகத்துடன் நோக்கி, 

“அவன் நெனச்சிருந்தான்னா.. நீ இல்லாத இந்த இரண்டு வருஷத்துல.. நாளுக்கு ஒருத்தியோட குடும்பம் நடத்தியிருக்க முடியும்.. ஆனால் என் மாப்ள அப்படி பண்ணலை.. தெனம் தெனம் உன்னய நெனச்சுட்டு வாழ்ந்தான்மா.. அவனோட அம்மாவை அந்த நெலமைக்கு ஆளாக்கினவங்க பழிவாங்கணும்ன்ற வெறியில.. தப்பான போதனையில அவன் உனக்கு துரோகம் பண்ணியிருக்கலாம்.. ஆனால் அவன் உன்னைய உண்மையா உசுருக்குசுரா நேசிச்சான்… உன் நெனப்புல பைத்தியக்காரன் மாதிரி திரிஞ்சான்மா அவன்.. 

அவன் எனக்கு கிடைக்காம போயிருவானோன்ற பயத்துல, ‘அவ திரும்பி வரும்போது நல்லவனா மாறி இருக்கப் போறியா..இல்லை இதே குத்தவாளியா நிக்கப் போறியா..?’ ன்னு கேட்ட கேள்விக்கு பதில் தான் இந்த புனர்வாழ்வு மையமும், பேக்டரியும்..” என்று சொல்ல, அவளுக்கோ சர்வமும் ஆட்டம் கண்டு போனது. 

வாசு மாமாவோ.. இத்தனை நாளாக மென்னிலாவின் மனம் காயப்படும் என்று எந்த உண்மையை பரிதி மறைத்து வைத்தானோ அதை சொல்லத் துணிந்தவராக, 

“உன்னோட அம்மா முகத்தை இறுதியா பார்க்க விடலைன்னு தானே அவன் மேல இத்தனை பழிவெறி வச்சிட்டு திரியுற..??நீ சிவகாமியம்மாளுக்குப் பிறந்த மகளே இல்ல.. அது தெரியுமா உனக்கு??”என்று விடயத்தை போட்டு உடைக்க, 

பட்டென்று விழிகள் நிமிர்த்தி வாசு மாமாவை திகைப்பூண்டை மிதித்தாற் போன்று பார்த்தாள் மென்னிலா. 

அவரும் சற்றே உச்சஸ்தாயியில், “ சிவகாமியம்மாளுக்கு.. குழந்த சுமக்குற பாக்கியமேஏஏஏ கிடையாதூஊஊ.. தன்னோட புருஷனோட.. அதாவது உன் அப்பாவோட இரண்டாவது தாரத்துக்கு பொறந்த பொண்ணு தான் நீயீஈஈ..”என்று சொல்ல, நெஞ்சமெல்லாம் நெருஞ்சி முள் குத்தினாற் போன்ற வலியுடன் நிமிர்ந்தாள் மென்னிலா. 

உணர்ச்சி மிகுதியில் சட்டென்று வாசுவின் கைகளைப் பற்றிக் கொண்டவள், கண்களில் அவை பாட்டுக்கு நீர் வழிய, திணறிய குரலில், 

“எ.. என்ன சொல்றீங்க சித்தப்பாஆஆ.. நீங்க சொல்றது உண்மையா? ”என்று கேட்டாள் அவள். 

அவரும் சற்றே உணர்ச்சி வசப்பட்ட குரலில், “ஆமாஆஆ உண்மை தான்.. எந்த உண்மை தெரிஞ்சா உன் மனசு கஷ்டப்படும்னு எல்லாத்தையும் என் மாப்ள மறைச்சானோ.. அதை சொல்றேன்.. நீ உன் அப்பாவோட இரண்டாவது தாரத்துக்கு பொறந்த பொண்ணு தான் நீஈஈ… பிரசவத்துலயே உன் அம்மா இறந்துட.. உன்னய தன் மகள் போல பார்த்துக்கிட்டா சிவகாமியம்மாள்.. ராஜமாணிக்கம் ஏன்.. உன்னய ஒரு மனுஷியா கூட மதிக்கலைன்னு இப்ப புரியுதாஆஆ??.. ஏன்னா நீ அவர் மகள் வயித்து பேத்தியில்லைன்ற ஒரு காரணத்துக்காகத் தான்..” என்று நவில, 

அப்போது தான் அன்றொரு நாள் அவள் கணவன், ‘இந்த உலகத்துல நீ அறியாத பல மர்மங்கள் இருக்கு.. அதை அறியாத வரை உனக்கு நல்லது.. உன் நிம்மதிக்கு நல்லது’ என்று கணவன் பூடகமாக உரைத்தது ஞாபகம் வந்தது. 

இதையா கணவன் சாடை மாடையாக சொல்ல வந்தான்?? 

அவரோ, தன் சட்டைப்பையில் இருந்த செல்லை எடுத்து, அவள் கையில் திணித்தவராக, “உன் அம்மா சாவுக்கு காரணம் பரிதி அவங்களுக்கு கொடுத்த மனவலின்னு நினைச்சிட்டிருக்கேல்ல?அது தான் இல்ல!! உங்க அம்மா சாவுக்கு காரணம் ராஜமாணிக்கமும்.. சரவணனும் தான் .. அதுவொரு கௌரவக் கொலை… தன்னோட எதிரி..அதாவது உன் புருஷன் பரிதி வீட்டுப்படியேறி வந்ததுக்காக.. அடிச்சு கொன்னாங்க அந்த படுபாவிங்க.. அதுக்கான ஆதாரம் தான் இதுல இருக்கு… இது மஞ்சுவோட அம்மா எடுத்த வீடியோ.. நீயே பாரு.. உண்ம புரியும்”என்றுரைக்க, 

வீடியோவை நடுக்கம் எய்தும் கையுடன் ஓடவிட்டவளுக்கு, ஆரம்பத்திலேயே.. ராஜமாணிக்கம், தன் மகளுக்கு அடித்த அடியில்.. தாயின் நெற்றி போய்.. சோபாவில் பட்டு.. இரத்தம் வருவதைப் பார்த்ததும்.. அதற்கு மேலும் கண்ணுறப் பிடிக்காமல்.. 

வீடியோவை நிறுத்தி விட்டு.. மூச்செடுக்க சிரமப்பட்டு நின்றாள் மென்னிலா. நெற்றியெல்லாம் முத்து முத்தாக வியர்வை அரும்ப ஆரம்பித்திருந்தது. 

அவளது தாய்.. அங்கணம்.. அந்த ராட்சதர்களின் கையில்.. சுகவீனமுற்ற பலவீனமான மேனியுடன்.. என்ன பாடுபட்டிருக்கக் கூடும்? என்று எண்ணுகையில் நெஞ்சமெல்லாம் பதைபதைக்கத் தொடங்கியது அவளுக்கு. 

சட்டென கண்களும், இதயமும் ஒருங்கே கலங்க, “இந்த வீடியோவையே உன்னால பார்க்க முடியலீய்யே.. அடிவாங்கியே செத்துப் போன உன் தாய் முகம் பார்த்தேன்னா.. உன்னால தாங்க முடியாதுன்னு தான் உன்னய அவன்.. அவங்க இறுதி முகத்தைப் பார்க்க விடலை.. புரிஞ்சுக்க..” என்ற அவர் குரலில் இருந்த மன்றாட்டம் அவளை என்னமோ செய்தது. 

“இரண்டு வருஷம் கழிச்சு அவன் பக்கத்துல வந்திருக்குற உன்னய பூப் போல கவனிச்சுக்க ஆசைப்பட்டான்.. ஆனா அதுக்கு விடாம நீ முரண்டுபிடிச்ச.. அந்த பிடிவாதம்.. அவனோட முரட்டுத்தனத்த கூட்டிச்சு.. அதான் அவன் உன்கிட்ட முரடனா நடந்துக்கிட்டான்.. இந்த நெலமையில் உங்க அம்மா வந்து.. உன்னய அவங்க கூட அனுப்பிருன்னு கேட்டுக்கிட்டாங்க.. அவன் திரும்பவும் உன்னய அந்த நரகத்துல தள்ள விருப்பப்படலை.. அதனால தான் அவன் உன்னய அவங்க கூட அனுப்ப மறுத்தான்.. இது தெரியாம நீ.. அவங்க சாவுக்கு காரணம்.. அவன் தான்னு நெனச்சிட்டிருந்திருக்கேல்ல? இந்த உலகத்துல நீ தான் அவனோட உயிர்.. சுவாசம்..!! அத நீ எப்ப புரிஞ்சுக்க போற.. ”என்று கேட்க, அவளிடம் கண்ணீர் ஒன்றைத் தவிர வேறு பதிலே இல்லை.

ஆனால் இறுதியாக வாசு மாமா உரைத்த வார்த்தைகள் எல்லாம் சத்திய வார்த்தைகள். எப்பேர்ப்பட்ட சூறாவளியையும் கட்டிப்போடும் காதலுக்குள்ள வலிமையை பறைசாற்றும் வார்த்தைகள். 

அவளை தீவிரமான விழிகளுடன் பார்த்தவர், “உன்னோட போலியான காதலே… ஒரு முரடனை.. இந்தளவுக்கு மாத்துதுன்னாஆஆ.. உன் உண்மையாட காதல்.. அவனுக்கு முழுமையா கெடைச்சுதுன்னா அவனை எந்தளவுக்கு மாத்தும்??.. அதுல தான் உன் வெற்றி இருக்கே ஒழிய.. உன்னையும் வருத்தி, அவனையும் வருத்தி.. குழந்த எதிர்காலத்தையும் பாழாக்குற இந்தப் பழிவெறியில உன் வெற்றி இல்ல.. அத முதல்ல புரிஞ்சுக்க.” என்று அவர் உரைத்த, 

‘குழந்தை எதிர்காலம்’ என்ற சொற்றொடரில்.. காத்தாடியாகச் சிக்கிக் கொண்டது மடந்தையின் மனம். 

‘குழந்தையின் எதிர்காலம்’-அதைப்பற்றி அவள் அவ்வளவாக சிந்தித்தாளா என்ன? 

சரி.. ஏதோ அவள் திட்டப்படி பழிவாங்கி விட்டாளும் கூட.. அவனை ஒவ்வொரு செக்கனும் நினைவுறுத்தாட்டும், அவனால் வந்த.. அந்த குழந்தையை அவளால் வளர்க்கவும் கூடுமோ? 

பழிவெறி அதிகமாகி.. ஒரு பாவமும் அறியாத அந்தக் குழந்தையை கொல்லும் எண்ணமும் இவளுக்குள் முகிழ்த்தால்? 

அந்த எண்ணம் வந்ததும் பகீரென்றானது இதயம். 

இதுகாறும் கண்ணீரும், கம்பலையுமாக நின்ற பெண் மனதுக்குள் அவள் காதோரம் ஒலித்தது கணவன் வீட்டை விட்டு செல்லும் முன்னம், 

காதல் இழையோடும் குரலில், ‘காதல் தானடிஹ் என் மீதுனக்குஹ்?’ என்று கேட்டு விட்டுச் சென்றது ஞாபகம் வர, இதயமெல்லாம் ஒரு பொல்லாத வலி எழுந்து பரவியது அவளுக்குள். 

ஏதோ ஒரு தீர்மானம் தோன்ற, நிதானமே அற்ற வெடவெடக்கும் குரலில், “இப்போ பரிதி எங்கேஏஏ..?”என்று கேட்க, அவரது அவசரம் அறியாத வாசு மாமா அமைதியாகவே நின்றிருந்தார். 

அவரது முன்னங்கைப் பற்றி ஆட்டியவள், “ஐய்யோஓஓ.. இப்ப பரிதி எங்கே சித்தப்பாஆஆ… நான் அவர் கிட்ட உடனே போய் ஆஆகணும்… என்னய அவர்கிட்ட கூட்டிப் போங்க ப்ளீஈஈஸ்ஸ்…”என்றுரைக்க,

மென்னிலாவின் பதற்றம், ஏனோ அவரையும் அலைக்கழிப்புக்கு உள்ளாக்கியது. 

காதல் தானடி என் மீதுனக்கு? 

(பதில் விரைவில் நவில்வாள்.) 

காதல் தானடி என் மீதுனக்கு? 

[28]

 

பரிதிவேல் வீரனுக்கு என்று சொந்தமான நன்னீர் இறால் வளர்ப்புப் பண்ணை அது!! 

அங்கே தான் மென்னிலாவின் மனதுக்குள் முகிழ்த்த அத்தனை களேபரங்களுக்கும் காரணமான ஆறரையடி உயர ஆண்மகன் இருந்தான்!! 

நன்னீர் இறால் வளர்ப்புப் பண்ணையில்.. மிகப் பரந்த அளவில் கட்டப்பட்டிருந்த திறந்த வெளிக் கேணியின்.. பிராண வாயுவை அதிகரிப்பதற்காக.. இராட்சத நீர்ச்சுழலிகள் அசுர வேகத்தில் சுழன்று கொண்டிருக்க, 

பரிதிவேல் வீரனால் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த பணியாளர்கள்.. அந்த நன்னீர் இறால்களுக்கு.. தீவனம் இட்டுக் கொண்டிருந்தனர் தீவிரமாக. 

அதையும் விட தீவிரமாக வாசு மாமாவின் துணையுடன்.. கணவனின் ஆசை முகம் காண ஓடி வந்திருக்கும்.. நிறை மாத கர்ப்பிணிப் பெண்ணான மென்னிலாவின் ஜாக்கெட்..

 பதற்றத்தில் விளைந்த வியர்வையில் முற்று முழுதாக நனைந்து தெப்பமாகி இருந்தது. 

மனதினுள்ளே ‘காலம் கடந்து வந்து விட்டோமோ?’ என்ற பதற்றம் நொடிக்கு நொடி அதிகமாக.. பாதங்களோ.. மன்னவனின் இருப்பிடம் நோக்கி விரைய எத்தனித்துக் கொண்டிருந்தது. 

இதுகாறும்.. கணவனின் உண்மை அன்பை அறியாமல் நடித்த பெண்.. இன்று தான் சிசு சுமந்து நிற்பதைக் கூட பொருட்படுத்தாது கணவனைக் காண ஓடுவதைக் காண்கையிலேயே, 

வாசு மாமாவுக்குள்ளோ, ‘இந்தக் காதல் ஜோடியை சேர்த்து வைக்க.. ஏதோ தன்னால் இயன்றதை செய்து விட்டோம்’ என்று பரமதிருப்தி நிலவவாரம்பித்தது. 

பரிதிவேல் வீரன்.. திறந்த வெளி இறால் பண்ணைக்கு அருகாமையில் இருக்கும் தன் தலைமையகத்தில் இருப்பதை.. ஏற்கனவே அறிந்திருந்த வாசு மாமாவோ,

அங்கே இரு மனங்கள் ஒருமித்து ஒரு மனமாகி.. கை கோர்க்கப் போகும் தம்பதிகளுக்கு குறுக்கே ‘நந்தி’ போல நிற்க விருப்பம் கொள்ளாதவராக….

 அங்கே திறந்தவெளி கேணியின் கரையோரமே நின்று விடவே நாடினார். 

பாரிய சந்தோஷம் உடலெல்லாம் இழையோட,சிரித்தவாறே “பரிதி.. ஆஃபிஸ் ரூம்ல தான் இருப்பான்மா.. நீ போய் பாரு.. நான் இங்கன.. மேனேஜர் கூட சின்ன விஷயம் பேச வேண்டி கெடக்கு.. பேசிப்போட்டு வந்துடறேன்” என்று சொல்ல, 

ஏனோ வாசு மாமாவில் குடிகொண்ட சந்தோஷம்.. பேதையவள் உள்ளத்தில் இல்லை!! 

 கணவனின் உண்மை அன்பை அறிந்து..கணவனை நெஞ்சோடு அணைக்கப் போகிறவள் மாதிரியா அவள் முகம் விகசித்துக் கிடந்தது?? 

இல்லவே இல்லை.. மாறாக ஒரு பதற்றம்!!

 உடல் முழுக்க ஒரு துணுக்கம்!! 

ஏதும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கக் கூடுமோ? என்ற மனதின் எதிர்மறையான கேள்வி.. இவற்றுடனேயே தான்.. வாசு மாமா சொன்ன அலுவலக அறை நோக்கி விரைந்தாள் மென்னிலா. 

அவள் நடந்து சென்ற ஒற்றையடி பாதையின் இருமருங்கிலும் உயர்ந்தோங்கி தென்னை மரங்கள் அவை பாட்டுக்கு வளர்ந்திருக்க, புல்வெளியும் பசுமையும் என இரண்டற இருந்த அவ்விடம் அவளுக்கு கொஞ்சமேனும் இரசிக்கவில்லை. 

அவள் நெஞ்சு நிறை ஆவல் எல்லாம்.. கணவனின் சூரிய வதனம் காணவேண்டும் என்பதேயாம். 

இவளுக்கோ எதிர்பார்த்திராத விதமாக.. அந்த அவசரமான நேரத்தில்.. அடிவயிற்றில்.. ஒட்டுமொத்த பாரமும் ‘சுருக்’கென்று.. பூமியை நோக்கி இறங்க முற்படுவது போல ஒரு தோற்ற மயக்கம் தோன்ற, 

அதனால் எழுந்த வலியில்.. இதயத்தின் துடிப்பை யாரோ ஒரு செக்கன் தடைப்படுத்தினாற் போன்று.. நின்று வந்தது மூச்சு!! 

இடுப்பை பிடித்துக் கொண்டு.. மூச்செடுக்க சிரமப்பட்ட படி.. அவள் வாய் திறந்து.. ஸ்தம்பித்துப் போய் நின்றதெல்லாம் சொற்ப நாழிகைகள் தான். 

அவளுள் எழுந்த அந்தக் கொடூர வலியைக் காட்டிலும்.. கணவனைப் பார்த்தாகி விடவே வேண்டும் என்ற உந்துதல் பிறக்க.. அவனது அலுவலக அறை நோக்கி விரைந்தாள் மென்னிலா. 

அவனது அலுவலக அறை திறந்து தான் இருந்தது. 

இரு கைகளையும் அந்த நவீன ரக கதவுநிலையில் வைத்துத் தாங்கிப் பிடித்த வண்ணம், புயல் வேகத்தில் உள்நுழைந்தவளின் கண்கள்.. அறையில் இருக்கும் தன் கொண்டானையே பரபரப்புடன் தேடியது. 

அப்படித் தேடிய போது.. பெண்ணவள் இதயம் அடைந்த வலி.. அது எழுத்தில் சொல்லுந் தரமன்று. 

அவளது கண்கள்.. தன் கொண்டானைக் கண்டு கொண்டன;மேசைக்குப் பின்னாடி அமர்ந்து… அவள் சமைத்து அனுப்பியிருந்த மதிய உணவை.. சாவதானமாக.. சாந்தமான முகத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அவன்!! 

அவனது சூரிய வதனத்தில்.. இவளைப் போன்ற பதற்றம் இல்லை ;கலவரம் இல்லை ;களேபரமும் இல்லை!!

அவன் முகம்.. அந்த ஆகாயச் சூரியனைப் போல தெளிந்திருந்தது!! 

கணவனை உயிர் கரைய, ஊன் உருகத் தேடி வந்தவள்.. அவனைக் கண்டதும் ஆசுவாசம் எய்துவது தானே இயல்பு? 

ஆனால் அவளுக்கோ.. அவனைக் கண்டதும், அதுவும் நிதானமாக.. அவள் சமைத்த உணவை உண்ணும் கணவனைக் கண்டதும், 

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒரு நடுக்கம் எழுந்து பரவலானது. 

அவள் கண்கள்.. இறுதியாக அவன் வாய்க்குள் தள்ளி.. மென்ற அந்த கடைசிக் கவளத்திலேயே நிலையாய் பதிந்து நின்று விட்டிருந்தது. 

ஒரு நிமிடம் பூமி சுழல மறுத்த நிலை அவளுக்கு!! 

பூக்கள் தேன் சுரக்க மறுத்த நிலை அவளுக்கு!! 

இன்னும் ஏன் வீசும் காற்றும், அலை கடலும் நிசப்தித்த பயங்கர மனநிலை அவளுக்கு!! 

எல்லாமே கை மீறிப் போன உணர்வு வர… கண்களில் நீர் ததும்ப.. தன் கொண்டானையே நிராதரவாகப் பார்த்திருந்தாள் மென்னிலா. 

அவன் இதயம் வெகுவெகு சாந்தமாக இருக்க, அவள் இதயமோ, ‘தவறு செய்து விட்டோமே?’என்று நிசப்தமாக அலறியடித்துக் கொண்டிருந்தது. 

அமைதியாக சாப்பிட்டு முடித்து விட்டு எழுந்தவன், அலுவலக அறையிலேயே இருந்த வாஷ்பேஸனில் கை அலம்பிக் கொண்டே அவளை நாடி வந்தவனின் விழிகள் என்றும் இல்லாமல் சிவந்து இருந்தது. 

அவன் கோபப்படும் போதும், அவள் மீது தாபம் கொள்ளும் போது கூட அவனது விழிகள் சிவந்திருக்கின்றன தான். 

ஆனால் இன்று அவன் கண்கள் காட்டும் சிவப்பு?

 அது எஞ்ஞான்றும் அவள் பார்த்திராத சிவப்பு!! 

வெற்றியை அவளுக்குப் பரிசளித்து விட்டுத் தோல்வியை ஏற்கும் இயலாமை நிறைந்த சிவப்பு!! 

மீண்டும் தன் மேசையை நாடி நடந்து வந்தவன், தாழ்ந்த குரலில், எதையோ இழந்தவன் போல, 

“நீ வர மாட்டேன்னு நெனச்சிக்கிட்டேன் ஆண்டாளுஹ்.. ஆனா நீ வந்ததே போதும்..”என்றவன்,வேஷ்டி பாக்கெட்டுக்குள் கையிட்டு, 

ஒளி ஊடுருவாத சின்ன பாட்டிலை வெளியே எடுத்தான். 

அந்த பாட்டில்.. அந்தச் சின்ன பாட்டிலை.. அவன் கையில் கண்டதும் உலகமே சுற்றிப் போய்.. தரை நழுவுவது போல இருந்தது அவளுக்கு. 

அவன் கையில் இருக்கும் பாட்டில் ‘ஸ்ட்ரிக்னின்’ என்று அறியப்படும், ரொம்பவும் கொடூரமான விஷமருந்து பாட்டில்!! 

தொல்லை தரும் எலிகளைக் கொல்வதற்காக உபயோகிக்கப்படும் பாட்டில்!! 

பரிதியைப் பழிவாங்க.. வழிகள் தேடித் தேடி சோர்ந்து போன.. இதயத்தில் கருணை ரணத்துப் போன.. வன்னிலா செய்த செயலது தெரியுமோ? 

அவனை இத்தனை நாளும் பழிவாங்க முடியாத தோல்வியை ஒத்துக் கொள்ள மனமற்று, தன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற நாடி.. 

தன் கையால் சமைத்த உணவில்.. போலியான காதல் கலந்தனுப்பியிருந்தால் பரவாயில்லை. 

ஆனால் இவள்??.. விஷத்தையும் சேர்த்துத் தானே கலந்தனுப்பியிருந்தாள்?? 

முற்பகல் வேளையில்.. தன் பணியிடம் நோக்கி கணவன்.. தான் சமைத்த உணவுக் கூடையுடன் சென்று சேர்ந்திருப்பான் என்றெண்ணிய வண்ணம் மங்கை.. தன் அறைக்குள் நுழைய, 

அறையில்.. முத்தொன்றை கையில் வைத்துக் கொண்டு, போகாமல் பற்பல கேள்விகள் கேட்டு அசரடித்த கணவனை.. அவள் அவசரமாக..கிளப்பி விட நாடியதும் இதனால் தானே? 

‘தின்னட்டும்!! தின்னுட்டு செத்துத் தொலையட்டும்!! இன்றோடு அவள் வன்மமும் தொலையட்டும்’ என்று தானே எண்ணியிருந்தாள் குரூரி?? 

சமையலறை பேன்ட்ரி கபோர்ட் மூலையில்.. வீட்டுப் பணியாளர்கள் கூட அறியாமல்.. தன் வேலையை செவ்வனே செய்து முடித்து விட்டு.. சத்தமேயில்லாமல் உறங்கிக் கிடந்த எலி மருந்து பாட்டில் எப்படி இவன் கையில்?? 

எல்லாமே கையை மீறிப் போனதும்.. அவள் உடலில் இருந்த ஜீவனும் கொஞ்சம் கொஞ்சமாக போய்க் கொண்டிருந்தது அவளுக்கு. 

கண்களிலே வெறித்த பார்வையுடன் ஓடி வந்து.. கொண்டானின் கையில் இருந்த பாட்டிலை பட்டென்று பிடுங்கிக் கொண்டவள், 

‘இது அவள் உபயோகித்த பாட்டில் தானா?’ என்று ஆராய்ந்து ஊர்ஜிதப்படுத்திக் கொண்டவளாக, 

திக்கித் திணறிய குரலில், “பரிதீஈஈ.. இஇ.. இது எப்படி உன் கையில?..”என்று கேட்க, 

அப்போதும் அவளைப் போன்ற பதற்றம் அவனில் இல்லவே இல்லை!! 

மாறாக மனைவி கையிலிருந்த பாட்டிலைப் பிடுங்கி எடுத்தவன், அதனைச் சூழ தன் கர்ச்சீப்பால் துடைத்து விட்டுக் கொண்டே, 

சோர்ந்த குரலில், “வ்விடு ஆண்டாளு.. உன் கைவிரல் அடையாளம் தெரியக் கூடாதுன்னு தான்.. நான் அதை துடைச்சிட்டிருக்கேன்.. ஏன்னா நான் செத்தப்புறம்.. இது ஒரு கொலைன்னு விசாரணையில் தெரியக்கூடாது இல்லையா??..” என்று அவன் இறுதியாக சொன்ன அந்த வார்த்தையில்.. உயிரோடு மரித்தாள் மங்கை. 

‘நான் செத்தப்புறம்.. இது ஒரு கொலைன்னு விசாரணையில் தெரியக்கூடாது இல்லையா??..’ – அப்படியானால் என்ன அர்த்தம்?? 

நீ கொண்டவனின் உணவில் விஷத்தைக் கலந்திருப்பதை அவன் அறிந்திருக்கிறான் என்று தானே அர்த்தம்!! 

காலம் கடந்து.. தன் தவறை உணர்ந்து ஓடி வந்த மங்கை.. அசம்பாவிதத்தை தடுத்து நிறுத்த முன்னாடி.. கணவன் விஷத்தை உட்கொண்டு விட்டான் என்று தானே அர்த்தம்!! 

எல்லாவற்றுக்கும் மேலாக, இறுதியில், அவன் செத்த பிறகாவது ‘போலீஸ், கோர்ட், கேஸ்’ என்று அவள் அலையாமல்.. நிம்மதியாக இருக்கட்டும் என்று அவன் விரும்புகிறான் என்று தானே அர்த்தம்!! 

நில்லாமல் கண்ணீர் வழிய, உண்மையான காதலுடன் இதயத்தில் இருந்து, “மா.. மாஆஆஹ்..”என்று அழைத்தது தான் தாமதம்!! 

அவளது விழிகளையே நிராதரவாகப் பார்த்துக் கொண்டே,சட்டென தன் காதுகளைப் பொத்திக் கொண்டான் அவன். 

முன்பெல்லாம் அவளது செவ்வாய் திறந்து ‘மாமா’ என்றழைக்கும் இனிய அழைப்பு, இப்போதெல்லாம் கசந்து விட்டிருந்தது அவளுக்கு. 

கண்கள் ஒரு வித விட்டேற்றித் தனமான இயல்பை அடைய, சீறும் குரலில், வாய் திறந்தவன்

“ப்போஓஓதும் ஆண்டாளுஹ்!!!.. இதுஹ்.. வரை நீ நடிச்சது எல்லாம் ப்போஓஓதும்!!.. இதுவரை நான்… இழந்.. துதுஹ் தவிச்சது எல்லாம் ப்போஓஓதும்!! ..தயவுஹ் செஞ்சுஹ்.. இனிமேலும் நடிக்காதேஹ்….” என்று சொல்ல, 

விதிர் விதிர்த்துப் போய் நிமிர்ந்து கணவனைப் பார்த்தாள் மங்கை!! 

எ.. என்ன சொல்கிறான் கணவன்? ந.. நடிப்பு என்றா சொன்னான்??? அப்படியானால் அவள் ஆடிய நாடகத்தை.. முன்பிருந்தே அறிந்து வைத்திருந்திருக்கிறானா இந்தத் தூயவன்?? 

ஆம், தூய அன்பை சுமந்திருக்கும் காதலனுக்கு, அவள் காட்டும் உண்மை அன்புக்கும், போலி நடிப்புக்குமா வித்தியாசம் உறைக்காமல் போகும்? 

அவனது வெள்ளை சட்டை.. அன்று அதிமிதமாக வியர்த்து.. அவனது பரந்து விரிந்த மார்போடு ஒட்டி உள்பெனியனின் வரிவடிவம் கூட தெரியலானது அந்த வியர்வையில்!!! 

அவனோ வலி சுமந்த முகத்துடன், தன் இதயத்தை சுட்டிக் காட்டியவனாக, 

நா தழுதழுக்க, “ந்நீ… எ.. எ.. என்கிட்ட நடிக்கும் போஹ்.. தெல்லாம் நாஆஆன் அடைஞ்ச்சஅஅ… வ்வேதன.. அந்த வ்வலீஈஈ… அது க்கொடூஊஊரமானது!!.. அந்த வ்வலி எனக்கு மட்டும் தான் தெரியும் ஆண்டாளுஹ!!..”என்றவனுக்கு, 

உள்ளே.. கைகளும், கால்களும் கொஞ்சம் கொஞ்சமாக நடுக்குறத் தொடங்கியது. 

அவன் உட்கொண்ட ஆலகால விஷம் தான்.. சிறுகச் சிறுக அதன் வேலையைக் காட்டத் தொடங்கியதோ? 

அப்படித்தான் போலும்! 

இறுதியாக அவள் முகத்தை.. இமைக்காமல் கண்களுக்குள் நிரப்பிக் கொள்ள நாடினானோ? என்னவோ? இமைக்கவே இல்லை பரிதி. 

இமைக்காமல்.. தன் ஆசைப்பெண்ணின் முகத்தை.. வெறித்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, தோல்வியை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளும் திருப்தி பாவம்.. அழகாக அவன் முகத்தில் பரவுவது அப்பட்டமாகத் தெரிந்தது. 

உயிர் போகும் இறுதித் தருவாயில்… இதுகாறும் அவன் சுமந்த வேதனையை எல்லாம்.. மனம் விட்டு.. சொல்லிவிட நாடியவன், 

“ந்நி.. ந்நீஈஈ… என்னய்யஅஅ.. ப்பழி.. ப்பழிவாங்கணும்னு துடிச்சதூஊஊ.. .. அதுக்காக என் கூட நெருங்கிப் பழகுற மாதிரி நடிச்சதூஊஊ… ..என.. எனக்கு.. எ.. எஹ்… எதுவுமே தெரியாதுன்னு நெனச்சிட்டிருக்கீய்யாஆ?… நீ நடிச்சது எல்லா.. மேஹ்.. தெரியும் ஆண்டாளுஹ்…”என்ற போது.. அவனது இதயத்தின் வலியை.. தெளிவாகவே அவன் கண்கள்.. அன்று பிரதிபலித்துக் கொண்டிருந்தது. 

எல்லாவற்றையும் மனைவியிடம் கொட்டிவிட வேண்டும் என்று இதயம் துடிக்க, உடல் தான் அவனது வேகத்துக்கு இணையாக இயங்கிட மறுத்தது. 

எப்போதும் வலிமையை உணரும் பரிதி.. தன் காதல் தோற்றுப் போன வலியில்.. கொஞ்சமாக சோர்வை உணர்ந்து கொண்டிருந்தான். 

இருந்தாலும் கடினப்பட்டு வாய் திறந்தவனின் முகம்.. அன்று இயலாமைக்கு அறிகுறியாக இருள் அடைந்திருந்தது. 

நெஞ்சில் தோன்றிய வலியில், நெஞ்சை நீவி விட்டுக் கொண்டே, 

அடிபட்ட சின்னக்குழந்தை.. தாய் தன்னைத் தேற்ற மாட்டாளா? என்று ஏக்கத்துடன் பார்க்குமே.. அது போல தன் மென்னிலாவைப் பார்த்தவன், 

“சுஹ்…. சுறாஹ்… மீன் தாக்கினஹ் அன்னைக்குஹ்…. ஹாஸ்பிட்டல் விட்டு.. ந்… நா… நான் உன்னய.. த்தேடி வீட்டுக்கு வந்தப்போ.. ‘மாமாஆஆ’ன்னு என்னய ஆசையா வந்து கட்டிப்பிடிச்சேல்ல?? அப்பவே உன் நடிப்பு எனக்கு தெரிஞ்சி… ருச்சுஹ்… ஆண்டாளு”என்று சொல்ல, 

இத்தனை காலமும்.. அவனால் கண்டுபிடிக்கவே முடியாத ‘கனகச்சிதமான நடிப்பு’ என்று அவள் எண்ணியிருந்த எண்ணம் தகர்ந்து போனது. 

தன் போலியான அன்பை எண்ணி.. காலம் கடந்து.. வெட்கியது அவள் மனம்!! 

அவள் மேல் எத்தனை நுண்ணியக் காதல் கொண்டிருந்தால்.. அவனும் கூட.. இது ‘போலியான நடிப்பு.. காதல் அல்ல’ என்பதை ஆரம்பம் முதலே உணர்ந்திருக்க வேண்டும்?? 

அவன் விழிகளில் கடைசித் தருணத்திலும் ஒரு நப்பாசை வந்து போக, “ ஆ.. ஆ… ஆனால் என்.. னஹ்? .. என் காக்.. காதல் உன்னய ம்மாத்தும்.. என் பழைய ம்மென்னிலாவ.. என் கிட்ட திரும்ப க்கொண்டுஹ்.. வ்வந்து சேர்க்கும்னு நெனச்சேஹ்ஏஏன்!!.. ஆனால் கடைசிவரை என் நெ.. னப்புஹ்.. நெனப்பாகவேஹ் போயிருச்சுஹ்.. “என்றவன் கவலையுடன் விழிகள் தாழ்த்திக் கொண்டான். 

நெஞ்சு மத்தியில்.. யாரோ சம்மட்டி கொண்டு அடித்தாற் போன்று.. திடீர் வலியெழுந்து சுருக் சுருக் என்று தைக்கும் வலி நிமிடத்துக்கு நிமிடம் அதிகமாகுவது போல இருக்க.. தாங்க முடியாமல்.. நெஞ்சை வலியுடன் பிடித்துக் கொண்டான் பரிதி. 

கணவனின் வலியைத் தாங்கமாட்டாது.. கண்ணீரோடு அவள் ஓரடி எடுத்து முன்னே வைக்க, தன் நெஞ்சை தானே நீவி விட்டுக் கொண்டவன், அவளை ‘அருகே வராதே’ என்பது போல செய்கையும் செய்யலானான். 

போலியான நடிப்புக்காக.. அவளை அருகில் ஏற்ற.. அந்த உன்னதப் பரிதி.. இன்று உண்மைக் காதல் பிறந்து நிற்கும் மென்னிலாவை.. வேண்டாம் என்று உதறித் தள்ளுகிறான்!! 

இது தான் விதியாடும் புதிராட்டம் என்பதுவோ? 

மூச்செடுக்க சிரமம் கொண்டவனாக,தன் ஆண்டாளை ஈனப்பார்வை பார்த்தவன், 

“ஒர்..உஹ்…தடவஹ் நடிச்சவன்.. எல்லாஹ். தடவ.. யும் நடிக்கி..ஹ்..றான்னு நினைச்சி..ட்டேல்லஹ்..? இது தான் என் த..ப்புக்குஹ்.. கிடைச்சஹ்.. மிக..ப்பெரிய தண்டனஹ்..!!” என்றவன் தன் தப்பை உணர்ந்தவனாகவே சொன்னான். 

மெய்யாலுமே இதைத் தவிர… அவன் செய்த துரோகத்துக்கு தண்டனையும் ஏது?? 

காதலிக்கும் போது நடித்தவன்.. அவள் அன்புக்கு துரோகம் செய்தவன்.. இன்று மனம் திருந்தி நின்று காதல் செய்ததையும் கூட நடிப்பு என்று பெண்ணவள் எண்ணினாளாயின்.. அது தானே கொடும் தண்டனை?? 

மென்னிலாவால் அன்று ஏனோ பேச முடியாத நிலையில்.. இதழ்களில் மானசீகமாக ஒரு பூட்டு போடப்பட்டிருக்க, இன்று அவன் தன் மனத்தை விளக்கும் நாளாகிப் போனது!! 

இத்தனை நாளாக அனைத்தும் தன் கனகச்சிதமான நடிப்பின் ‘வெற்றி’ என்று இறுமாப்பில் சுற்றியவளுக்கு, 

அது அனைத்துமே.. கணவன்.. அவள் ‘வெற்றியைக்’ காண வேண்டும் என்பதற்காக செய்த தியாகம்.. அழகான காதல் விட்டுக்கொடுப்பு என்று உண்மை உணர்ந்த போது… 

ஒற்றை வசனத்தில் தெளிவுறுத்துவதாயின், 

‘காலம், கடந்து விட்டிருந்தது!!’

கண்களில் அவளுக்கான காதல் அப்போதும் கூட மலையளவு கொட்டிப் போயிருக்க, இத்தனை காலமும் அவன்.. அவளிடம் மானசீகமாக சந்தித்த தோல்விளை எல்லாம் அடுக்கிக் கொண்டே போனான் அவன். 

கணவனாக சொல்லும் வரை உண்மை நிலவரம் அறியாத பெண்ணவளும், கணவன் எடுத்துரைத்த வேளையில்.. கௌதமன் சாபம் கொண்ட அகலிகை போல கல்லாய் சமைந்து தான் நின்றாள். 

தன் நெற்றியில் அரும்பிய அதீத வியர்வையை உள்ளங் கைகளால் துடைத்துக் கொண்டே, 

அலைப்புறுதல் மீதூறும் குரலில், “என்னமாஆஆஆஹ்வ்.. வதுஹ் பண்ணிப்போட்.. உஹ்.. என் காக்.. காதல நிரூபிக்கணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு சுத்துவ்.. வேன் ஆண்டாளுஹ்!!.. உன்னோட சின்னச் சின்ன சந்தோஹ்… சந்தோஷங்களையும் நிறைவேத்தோ.. ணுமுன்னு.. ஆசையா இருப்பேஏஏன்!! … ஆஆ.. ஆனா அதையெல்லாம் பண்ணிப் போட்… ட பொறவும்… இப்பயாச்சும், ‘காதல் தானடி என் மீஈஈதுனக்கூஊஹ் ?’ன்னு இரகசியமா.. ஆஆ.. உன்…. உ.. உன்னய பார்ப்பேன் ஆண்டாளுஹ்!!.. ஆனா.. . ந்நீ..!!‘இதுவும் நடிப்பு தான்’னு உ.. உன்.. உன்னயும் மீறி..எ.. என்னய பார்க்குற பார்வையில….என் சந்தோஷம் போச்சுஹ் ஆண்டாளுஹ்!! ” என்று சொல்ல, 

சர்வ நிச்சயமாக அதைக் கேட்டு வியந்து தான் போனாள் அவள். 

அவளது சின்னச் சின்ன சந்தோஷங்களையும் நிறைவேற்றிய அவளது கணவன்.. அதன் பின்னர் அவளின் மனநிலை அறிய நாடி.. இரகசியமாக பார்வை பார்த்திருக்கிறானா?? 

அவளது சின்னச் சின்ன நுண்ணிய உணர்வுகளையும் கூர்ந்து கவனித்திருப்பவன்.. எப்பேர்ப்பட்ட காதலன்?? 

அவனது காதலின் தரமும் எத்தகையதாக இருக்கவும் வேண்டும்? 

என்ன தோன்றியதோ? இதுவரை தள்ளி நின்றே உரையாற்றியவன்.. ஆற்றாமை தாங்காமல் விரைந்து வந்து.. அவளைப் பட்டென்று இழுத்து.. தன் நெஞ்சாங்கூட்டுக்குள் ஆழப் புதைத்துக் கொண்டான். 

அவன் இதயப்பக்கத்தில்.. திடுதிப்பென்று தலையை புதைத்துக் கொள்ள வழியேற்பட்ட மங்கைக்கு.. எப்போதும் சீராகத் துடிக்கும் கணவனின் இதயம்… 

இன்று அமைதியாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு விட்டு விட்டுத் துடிப்பது புரிந்தது; கூடவே அவள் செய்த மா பாதகத்தின் விளைவு தான் இது என்றும் புரிந்தது. 

கணவன்.. அவளது குரூரச் செயலால்.. கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறான்!! 

அவளால்!! எல்லாம் இந்த கொலைகாரியால்!! அவள் மீதே அவளுக்கு வெறுப்பு தோன்ற.. இதழ்களைக் கடித்துக் கொண்டு கண்ணீர் வழிய..கணவனின் மார்போடு சாந்தமாக ஒதுங்கி நின்றாள் மென்னிலா. 

காதல்ப் பெருக்கில் அவன் அவ்வாறு செய்தது எல்லாம் ஓரிரு நாழிகைக்குத் தான். பின் அவளைப் பட்டென்று தன்னிலிருந்தும் விலக்கியவன், 

 அவளது கன்னத்தை ஏந்தியவனாக, அதிமிதமாக உணர்ச்சி வசப்பட்ட குரலில், 

“அஹ்.. அன்னை.. க்கு ந்நீ… ந்நீ.. கர்.. கர்ப்பமாஹ்.. இருக்குற மேட்டர சொல்லிஹ்.. ஆ.. ஆ.. ஆயிரத்து நூறு கோடி ரூபா டென்.. டென்.. டரை இல்லாமலாக்கினதா சந்தோஷப்பட்டுட்டு இருக்கேல்லஹ்??.. நம்.. நம்மஹ்.. குழந்தய விடஹ் எனக்கு பெரிய சந்தோஷம்.. வ்வவே.. ற எதுலஹ்… கிடைக்கும்…மாஹ்? உன் வெறுப்பயும் மீறிஹ்.. ந்நாஆஆ… உ.. உன்.. உன் கிட்ட நெருங்க காரணம். ஏஏ….. நமக்குள்ள ஒரு குழந்த வந்துட்டா.. உன் மனசு மாறும்னு எதிர்பார்த்துத் தாஆஆன். ஆனால் ?ந்நீஈ… எ.. என்னய புரிஞ்சிக்கிட்டது அவ்வளவுஹ் தானாஆஆஹ்?? டென்டர் கை விட்டுப் போறது தான் உன் சந்தோஷம்னா.. என் இழப்பு.. இழப்பாஆஆஹ் தெரியவேயில்ல ஆண்டாளுஹ்.. ”என்றவன் விழிகளில் பட்டென்று ஒரு தீவிரம் ஏறிப் போயிருந்தது. 

அப்படியானால் அன்று அவளது நாடகம் அறிந்து.. அவளுக்கு சந்தோஷத்தை பரிசளிக்க நாடி.. வேண்டுமென்றே தான் அவளோடு வீட்டில் தங்கியிருந்திருக்கிறானா அவன்??

 கணவன்.. குழந்தை மீது வைத்திருக்கும் அன்பில் ஏங்கியது அவள் மனம்!! 

அவளில் இருந்து கைகளை விடுவித்துக் கொண்டவன், வேதனையுடன்.. மிக மிக நிதானமான குரலில், 

“அன்னை.. க்கு மாட்டுவ.. ண்டிஹ் போட்டியப்பஹ்.. மாட்டுக்கிட்ட… இ.. யிருந்து உன்னய காப்பாத்த ஏற்பா.. டு பண்ணது எல்லாம் நடிப்பாஹ்.. இருக்.. இருக்கலாம்.. ஆனால் கடல்லஹ்?? .. கடல்ல சுறா மீன்கிட்ட யிருந்து உன்னய காப்பாத்தினது எப்படி நடிப்பாஆஆஆகும் ஆண்டாளுஹ்??..எ.. என் இரண்டு விர.. ல் ப்.. போச்சுஹ்… உன.. உனக்காஆக.. அத.. அது கூட நடிப்பாஆஆஆஹ்…?? அதை நீ ஒருதடவ கூட யோசிக்கஹ்.. வேயில்லைல?” என்று அவன் சொன்னது, அவள் சற்றேனும் சிந்தித்துப் பார்க்காத உண்மை!! 

சுறாவை திட்டமிட்டு.. அவளைத் தாக்க ஏற்பாடு பண்ணவும் அவனால் முடியுமோ?

 பரந்த கடலில் அவளுக்கு வந்த ஆபத்தை அவள் அபிமானம் பெற வேண்டி.. எப்படி ஏற்படுத்தவும் முடியும்? ஆபத்திலிருந்து சொல்லி வைத்தாற் போன்று காக்கவும் முடியும்??

அந்த கணம் தன்னுயிரை துச்சமாக மதித்து.. இன்னுயிர் காத்த அவன் தூய அன்பை அறியாமல் போனது மாதுவின் எத்தனைப் பெரிய துரதிர்ஷ்டம்? 

அவன் தொடர்ந்து சொல்ல சொல்ல, அவன் பட்ட வேதனையில் விக்கித்து நிற்கும் படியாயிற்று மென்னிலாவுக்கு. 

அவன் விழிகளில் மௌனமாக வழிந்தது கண்ணீர். 

என்ன முரட்டுப் பரிதி அழுகிறானா? ஆம், அழுகிறான். 

அவன் அழுது அவள் பார்த்த தருணங்கள் அரிது. 

பார்வதியம்மாள்,பிள்ளைத்தாச்சியான மென்னிலாவைத் தள்ளிவிட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மென்னிலா கண் திறந்த போது.. அவன் அழுது பார்த்திருக்கிறாள் அவள். 

அதன் பின்பு இன்று தான் பார்க்கிறாள் அவள். 

அவனது அழுகை அன்றும் போல இன்றும் வலியைக் கொடுத்தது அவளுக்குள்.

தழுதழுக்கும் குரலில், “ ஒவ்வொருஹ்… ராத்திரியும் ‘மாமாஆஆ’ன்னுக்கிட்டு.. ந்நீஹ்.. என்னய கட்டிப்பிடிப்ப ஆண்டாளு.. நானும் என் மேல இருக்க அன்பினால தான்… என்னயஹ்.. என் ஆண்டாளு கட்டிப்பிடிக்கிறான்னு நெனச்சுக்கிட்டு ஆசையோஓஓட திரும்புவேஏஏன்!! … அப்ப்.. பஅஅ… உ.. உ.. உன் கண்ணுல உன்னோட நடிப்பையும்… ம்மீறிஈஈஈ ‘ ப்பழிவ்வெர்றி’ தெரியும் பாரூஊஊ… ‘என் காதல் ஒரு நாள் உனக்கு புரியும்’ன்ற நம்பிக்க போய்.. அப்பவ்.. ஏ.. செத்துடலாஆஆம் போல தோஓஓஓணும்!!! .. உன்.. மே.. ம்.. மேல என்னய அறியாமலேயே வெறுப்பு வந்துடுமோன்னு பயமாஆ. இருக்கும் ஆண்டாளுஹ்…” என்று சொல்ல, 

முதன் முதலாக கணவனின் மனக்குறை கேட்டு… விழிகள் விரிய நின்றாள் மென்னிலா. 

அவளை வேதனையும், தவிப்பும் போட்டி போட பார்த்தவன், கசந்த குரலில், , “உன்னய.. என்னால தொட ம்முடியலஹ் ஆண்டாளுஹ்!! .. உன்னய தள்ளி விட்டுட்டு ‘நீ ந்நடிக்குறது எனக்குப் ப்பிடிக்கலஅஅஅஹ்.. எனக்கு, என் பழைய ஆண்டாளு தான் வேஏஏணூஊஊம்!!’ன்னு கத்தணும் போல இருக்கும்.. ஆனா முடியலஹ்.. ஒரு தடவை உன் மனச கஷ்டப்படுத்தின என.. எனக்.. க்.. ஊஊ. .. இன்னொரு தடவை கஷ்டப்படுத்த முடியல ஆண்டாளுஹ்..”என்று அவன் போட்ட, 

ஒவ்வொரு ‘ஆண்டாளு’வும்.. அவள் இதயத்தில் சரியாகச் சென்று சேர வேண்டிய இடத்தில் தாக்கியது. 

அவளோ உள்ளிழுக்கும் மூச்சு பெரும் சிரமத்தைக் கொடுக்க, கழுத்து நரம்புக் குழி ஏறி இறங்க.. நிர்மலமான முகத்துடன் கணவனைப் பார்த்திருக்க, 

இவனோ உடல் நடுக்குறுவதைக் கூட அசட்டை செய்தவனாக, 

கண்ணீருடன், “அ.. அதஹ்.. அதனால தான், நீ என்னய கட்டிப்பி.. டிக்கும் போதெல்லாம்.. ‘ நீ சோர்ந்து போய் தெரியுறஹ்.. தூங்கு’ன்னு சொல்லி உன்னய படுக்க வைப்பேன்.. அப்பஹ்.. கூஹ.. கூட புரியலலஹ்?” என்று கேட்ட கேள்வியில் தான், 

குழந்தை சுமந்த பின்பு.. கணவன் கூடலுக்கு மறுத்த உண்மைக் காரணம் அறிந்தாள் மென்னிலா. 

பற்களைக் கடித்துக் கொண்டு, “உனக்கு என் அன்ப ப்புர்ரிய்யஹ்.. வ்வைக்க முயன்று.. த்தோத்தூஊஊத்.. தோத்தூஊஊப் போய்.. என் ம்மேலேய எனக்கு ஒரு வ்வெறுப்பூஊ!! .. க்கோஓஓபம்!!.. அத கூட வ்வெளிய காட்ட முடியலஹ்…. ஏன்னா அதையும் நீ நடிப்புன்னு நெனச்சிக்கீட்டீன்னாஆஆ.. சத்தியமாஹ்.. தாங்க முடியாது ஆண்டாளு.. அந்த வலி உனக்கு சொன்னா ப்புரியாது ஆண்டாளு.. ஏன்னா.. என் அன்பு.. உன்னய பொறுத்தவரைக்கும்.. உனக்கு அது நடிப்பூஊஊ….” என்றவனுக்கு, 

ரூபங்கள் எல்லாம் இரண்டிரண்டாகத் தெரியவாரம்பிக்க, அது விஷத்தின் வீரியம் என்பது அறியாமல்.. 

சிந்தும் கண்ணீரின் மாயை என்று எண்ணிக் கொண்டான் மாயவன். 

அதனால் கண்களை அழுந்த துடைத்துக் கொண்டே நிமிர்ந்தவன், “நேத்துஹ் ராத்திரீஈஈஹ்.. .. நீ இந்த விபரீத முடிவுஹ்.. எடுக்க முன்னாடி..என்னோட ஒட்டுமொத்த காதலையும் அழகான கூடல்ல காட்டி.. உன் மனச மாத்திரலாம்னு நினைச்சே.. ன்.. ஆனா காதலை விட ‘ப்பழிவ்வெர்றி’… உ.. உஉஉ.. உன் கண்ணஹ் மறைச்சுருச்சில்லஹ்?”என்று கேட்க அவளிடம் பதில் தான் ஏது? 

ஆம், அந்த அழகிய கூடலை அவளால் மறக்கவும் கூடுமோ?

 ஒவ்வொரு தீண்டலுக்கும் ‘பிடிக்கிறதா? வலிக்கிறதா?’ என்று காதலுடன் ஆராய்ந்து ஆராய்ந்து.. அவன் பரிசளித்த அழகிய கூடல் அல்லவா அது? 

அவன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. 

அவனது காதலை விட, பழிவெறி அல்லவா அவளை ஆக்கிரமித்துக் கொண்டது. 

கண்கள் இருட்டிக் கொண்டு போன அந்த நொடியிலும், மரணத்துக்கு அஞ்சாமல் காதலோடு, 

புன்சிரிப்பு சிந்தியவன், “எங்கேஏ.. இந்த ப்பழிவ்வெர்றி.. ஆட்டத்துல.. ஒர்.. உ.. ப்.. பாவமும் அறியாத.. என் குழந்தையையும் இழுத்து விட்டிருவியோன்னு பயந்தேன்.. உனக்கு அப்படியான எண்ணம் கடைசி வரை வரவேயில்லை.. ரொம்பஹ் நன்றிஹ் மென்னிலா..” என்றவன், 

இதுவரை சொன்ன ‘ஆண்டாள்’ என்னும் நாமம் உச்சரிக்காது போனமை, அவனது அந்நியத்தனத்தை உணர்த்த, அது பெரிதும் வலியைக் கொடுத்தது அவளுக்கு. 

அவள் மூச்செடுக்க சிரமப்படுவதையும்.. அலட்சியமாக துறந்தவள், இரு கைகளையும் அழுந்த மூடிக் கொண்டு அடிக்குரலில் இருந்து,

 “ந்நாஆஆன் நிலாஆஆ இல்லை… ஆண்டாளூஊஊ.. பரிதியோட ஆண்டாளூஊஊ..!!” என்று ஆற்றாமையில் கத்தினாள் அவள். 

அவனோ.. இரண்டிரண்டாகத் தெரியும் அவளைப் பார்த்துக் கொண்டே வலியுடன் சொன்னான், 

“தெரி.. தெ.. ஞ்சோ.. தெரியா.. மலோஹ்.. மெ.. மென்.. மென்னிலா உடலுக்குள்ள.. என் ஆண்டாளு குடியிருந்தா..ஆனா.. என் ஆண்டாளு இப்ப இல்லஹ்..”என்று.

கணவனின் நிராகரிப்பு ஒருபுறம் வலிக்க, 

இவ்வுலகில் நடக்கும் களேபரம் அறியாத குழந்தையும்.. அடிவயிற்றில் கொடுத்த இறக்கத்தின் வேதனை ஒருபுறம் வலிக்க, உதட்டை வருத்தத்தில் கடித்துக் கொண்டே கணவனைப் பார்த்தாள் அவள். 

ஒருவகையில் பார்த்தால் இருவர் வலியும் ஒன்று. 

தலைவன்.. இந்த உலகை விட்டே செல்லும் வலியை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். 

தலைவியோ.. இந்த உலகத்துக்கு ஓர் உயிரை அழைத்து வரும் வலியை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள். 

அவன் கடைசியாக தன் இறுதியாசை சொன்னான். அதிலும் கூட அவள் பற்றிய அக்கறையே மிகுந்திருந்தது. 

“என் குழந்த ஆணோஹ்.. பெண்ணோஹ்.. ….என்னோட ஒரே ஆச.. என் குழந்தைக்கு.. தன்னோட அம்மா ஒரு ‘கொலைகாரி’ன்னு கடைசிவர தெரியக்கூடாதுஹ்.. ன்றதுஹ்.. தான்.. ஆனா அப்பாஆஹ்.. ஒ.. ர்.. ‘ஒரு துரோகி’ன்னு சொல்லிச் சொல்லி வளர்.. க்கோணும்.. கண்.. ஹ்ணு முன்னாடி இல்லாத அப்பாவ விட.. கண்ணு முன்னாடி இருக்கற.. அம்மா ‘கொலைகாரி’ன்னு தெரிஞ்சா.. என் குழந்த மனச அது பாதிக்கும் ஆண்டாளுஹ்!! அதான்…. என் குழந்தக்கு என் மேல வர்ற வெறுப்பு.. அப்பா அன்புக்கான தேடல, ஏக்கத்த இல்லாமலாக்கும்.. குழந்த உன்னய அதிகம் நேசிக்கும்..” என்றுரைக்க, அதற்கு மேலும் அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க முடியவேயில்லை. 

தாவிச் சென்று கட்டியணைத்து, ‘போதும் மாமா.. போதும்’ என்று சொல்லி, முகம் நிறைய முத்தம் வைக்க அல்லாடுகிறது மனம்!! 

ஆனால் உடல் தான் ஒத்துழைக்க மறுக்கிறதே!!

தலைப்பிரசவம் அல்லவா? 

என்னவென்றே தெரியாத ஒருவகை திரவம்.. கால்களுக்கிடையில் வழிந்தோட உடைந்திருப்பது பனிக்குடம் என்பது கூட தெரியவில்லை பேதைப் பெண்ணுக்கு. 

அதை சொல்லக் கூட முடியாதளவுக்கு… கீழுதட்டைக் கடித்து வலி பொறுத்துக் கொண்டு கணவனையே வலியுடன் பார்த்திருந்தாள் பெண். 

அவளுக்கு தற்போது உண்மை எல்லாம் புரிந்தது. 

வீட்டிலிருந்து கிளம்பி வரும் முன்னம்.. அறையில் வைத்து அவன் நிராசையுடன் பேசிய அத்தனை பேச்சுக்கும் காரணம் புரிந்தது இன்று அவளுக்கு. 

மனைவி தனக்காக பரிசளித்த மரணத்தை ஏற்க நாடியா.. அவன் காதலோடு அத்தனைப் பேச்சுக்களையும் சொன்னான்??

அவன் உயிர் நீத்த பின்.. உலகுக்கு வரப் போகும் குழந்தை முகம் காணாமலேயே செல்லப் போகிறோமே என்ற தவிப்புடனா, அவளிடப் ‘குழந்தய பார்த்துக்க ஆண்டாளு’ என்றான்??

இறுதியில், ‘எப்ப வருவீங்க மாமான்னு கேட்க மாட்டீங்களா?’ என்று நப்பாசையுடன் கேட்டதோடு நில்லாமல், 

சென்றவன் திரும்ப வந்து அவளை அணைத்து, ‘காதல் தானடி என் மீதுனக்கு?’என்றும் கேட்டது இதனாலா?? 

ஆனால் அந்தக் கேள்விக்கு அவள் பதிலிறுக்க முனைந்த கணம்.. அவளது முகத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு, 

அவள் முகத்தில் தோன்றிய அலட்டல் முகபாவனை.. கொடூர வலியையே இதயத்தில் கொடுத்தது!! 

அதனால் தான் அவளை மேற்கொண்டு பேசவிடாமல்.. அவள் வாயை மூடி, ‘வேண்டாம்’ என்று மறுத்தவன்.. வலியோடு திரும்பினான்!! 

அவனது நடத்தைக்கான சகலதும்.. அந்த கணம்.. புரிய.. அதை வாய் விட்டு சொல்ல முடியாமல்.. அவளது உயிர் ஜீவன்.. அவளை இம்சித்துக் கொண்டிருந்தது. 

திடகாத்திரமாக.. ஆரோக்கியமாக இருக்கும் வேளை என்றால் மனைவியின் உடலியல் மாற்றங்களை அவன் நிமிடத்தில்.. அவள் வாய் விட்டு சொல்லாமலேயே ஊகித்திருப்பான். 

அவனுக்கும் கூட மனைவியின் உடல் உபாதைகளை அறிய முடியாதளவுக்கு, 

அவன் அருந்திய விஷம்.. இரத்தத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து.. அவன் தலையை சுற்றச் செய்ய.. அவன் தன் இறுதி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்தான். 

மரணத்தை வரவேற்கும் இறுதி நொடியிலும் கூட, புன்னகைத்த முகமாகவே சொன்னான் அவன்,

  “ந்நாஆஆ.. நான் சாஹ்.. குறதைத் தாஆஆன்.. விரும்புறேன்னாஹ்.. அதஹ்.. சந்தோஷம ஏத்துக்கிடு.. றேஏஏன்.. என் மேல.. ந்நீஈஈ.. வ்வைச்சி இருக்க.. க்க பழிவெறி.. தீரோணுமு.. ன்னாஆஆ.. ந்நசெஆஆஆத்துப்.. போப்போ.. ஓஓகணும்.. அம்புட்டு தானே? போறேன்.. செத்துப் போறேன்..” என்று. 

அவளது உண்மை முகத்தை உறுதியாக பார்க்க முடியாதளவுக்கு இரட்டை விம்பங்கள் தெரிய.. கண்களை இறுக்கி மூடித் திறந்து மனைவி முகத்தை கண்களில் நிரப்ப முயன்றவன் தோற்றான். 

விஷத்தின் வீரியத்தில்.. அவள் முகத்தை பார்க்கவே முடியாமல் போனது அவனுக்கு. 

அவனே அறியாமல்.. அவனது மூக்கிலிருந்து வழியவாரம்பித்தது கடுஞ்சிவப்பு நிற இரத்தம்!! 

ஆகையால் அவளது பழைய சிரித்த முகத்தை.. கற்பனை செய்து.. இறுதியாக மனக்கண் முன் இருத்திக் கொண்டவன், 

அவளுக்கு புறமுதுகிட்டவனாகத் திரும்பி, “ந்நீஈஈ… என் கூட போ.. போப்.. போலியா வாழ்ந்த இந்த வாழ்க்கையேஏஏஹ்… உண்மையானதுன்னுஹ்.. நினைச்சுக்கிட்டே செத்துப் போறேஏஏன் .. நீ என் கூட சிரிச்சுப் பேசின.. நினைவுகள சுமந்துக்கிட்டு செத்துப் போறேஏஏன்..” என்று சொல்ல, 

சிசு சுமந்து நிற்கும் பெண்ணவளுக்கோ அதற்கு மேலும் முடியவில்லை. 

கால்கள் நின்ற இடத்தை விட்டும் நகர மறுக்க, நின்ற இடத்திலேயே வலியில் தரையிலேயே இரண்டாக மடிந்து அமர்ந்தவள், இடுப்பைப் பிடித்துக் கொண்டு உயிர் போகும் உச்சஸ்தாயியில், 

“மாமாஆஆஆஆ… வலிக்குதூஊஊ… மாமாஆஆஆஆ..” என்றது தான் தாமதம், அந்தக் குரலில் சர்வமும் கலங்க திரும்பியவன், 

தன் மரண வலியைக் கூட துச்சமாக தூக்கியெறிந்து விட்டு, அவளருகே ஓடி வந்தான் பரிதிவேல் வீரன். 

அவள்.. வலியில்.. நிறுத்தி நிறுத்தி மூச்சு வாங்கியவளாக, கணவனின் சட்டைக் காலரைப் பற்றிக் கொண்டே வலியில் முணக, 

சரிவரத் தெரியாத… மனைவியை.. அவள் படும் வலியைக் கேட்க மாட்டாது… இறுகக் கட்டியணைத்துக் கொண்டவன், “ஆண்டாளுஹ்?? .. என்னாச்சு ஆண்டாளுஹ்??..”என்று தான் கேட்டான். 

அத்தனை வலியிலும் தன் மனமாற்றத்தை.. கணவனிடம் சொல்லிவிட நாடி.. துடிக்கிறது உள்ளம்.ஆனால் முடியாமல் போகுமளவுக்கு, 

அடிவயிற்றில் எழுந்த வலி அதிகமாகிக் கொண்டே போனது. 

இருப்பினும் மூச்சுக்கு திணறிய படி வாய் திறந்தவள், “உங்.. கஹ்… கா.. காதஹ்.. காதல் எனக்கு தெரியலஹ் மாஹ்மாஹ்.. பு.. புனர்வாழ்வு மையம், பேக்ட.. ர்.. இ…. என்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்க.. லாமே மாமாஹ்!! ” என்று சொல்ல, 

தன்னவள் உண்மை அறிந்து விட்டாள் என்று வியக்கும் நேரம் இதுவல்ல என்பது புரிய, அவளை சட்டென கையில் தூக்கிக் கொண்டவனுக்கு, 

அவள் பின்னந்தொடையைத் தொட்ட போது கைகளில் பட்ட ஈரம்.. அவனுக்கு.. அது எப்படியான இக்கட்டான நேரம் என்பதை பறைசாற்றிக் கொடுத்தது. 

வேதனை இழையோட, அவளை கடினப்பட்டு பார்க்க முயன்றவன்,வழிந்த கண்ணீர்.. அவளது கழுத்தில் விழுந்து வழிந்தோடலானது. 

உடல் நடுங்கினாலும் அவளை அப்போதும் இறுக்கிப் பிடித்திருந்தவன், 

“சுறா மீன்.. தாக்குதல்ல இருந்து உன்னய காப்பாத்தினதையேஹ்… நடிப்புன்னுஹ்.. நெனக்குற ந்நீஈஈ…என்னோட இரண்டு வருஷ பிராயச்சித்தத்தையும் நடிப்புன்னு.. சொல்லிட்டீன்னாஆஆஆ…அந்த பயமே என்னய சொல்ல விடல ஆண்டாளுஹ்!! என்னைக்காவது ஒரு நாள் உன் மனசு மாறினதும்.. உண்மைய சொ.. ல்ல.. லாம்னு காத்துட்டிருந்.. தேன்.. உ.. உனக்கு தாஹ்… ன் எ.. எஎஎன் அன்பு.. புரியவேயில்.. ”என்றவன் வசனத்தை முடிக்கக் கூட இல்லை.. குரல் நடுங்கவாரம்பித்திருந்தது. 

மனதில் ஒரு திடத்தைக் கூட்டிக் கொண்டு, நிமிடம் தாமதியாமல்.. ஓடினான் தன் வெளியை நோக்கி. 

இறுதித் தருவாயை எண்ணிக் கொண்டிருக்கும் ஆண்மகனுக்கு, மூக்கில் இருந்து இரத்தம் வழிவதோ உடல் அசதியோ அணுவளவு கூட பொருட்டாகத் தெரியவேயில்லை.

அவனுயிர் கொடுத்தாவது.. அவளுயிர் காக்க வேண்டும் என்ற வெறி மட்டுமே.. அவனது இதயத்துடிப்பை இன்னும் நிறுத்தாமல் துடிக்கச் செய்து கொண்டிருந்தது. 

மூக்கில் இரத்தம் வழிய வழிய.. கர்ப்பிணி மனைவியையும் தூக்கிக் கொண்டு ஓடி வரும் பரிதியைக் கண்டு, நிலைமையின் தீவிரம் புரிந்த வாசு மாமாவும், 

எந்த கேள்வியும் கேளாமல், சட்டுப்புட்டென்று ஓடிச்சென்று வண்டியை எடுக்க, 

மாமாவுக்கு மானசீகமாக நன்றி கூறிக் கொண்டே மனைவியுடன் பின் சீட்டில் அமர்ந்தான் அவன். 

வாசு மாமா காரில் காட்டிய அசுர வேகத்தில் வெகு சீக்கிரமாகவே மருத்துவமனை வந்தடையக் கிடைத்தது.. மெய்யாலுமே தெய்வாதீனம் தான். 

தலை சுற்றலோடு, கண்கள் தெளிவற்ற நிலை.. இதயத்தில் ஓர் வலி!! 

கை, கால்களில் ஓர் துணுக்கம்.. மூச்செடுக்க சிரமம்.

 இது எல்லாவற்றுக்கும் மேலாக , மூக்கிலே வேறு குபுக்கென்று எட்டிப் பார்த்திருக்கும் இரத்தம்!! 

இரத்தத்தை ஏந்திச் செல்லும் நாடி நாளங்களில் மனைவி ஆசையாக கலந்த விஷம்.. தீவிரமாகப் பரவி விட்டிருக்கிறது என்பதற்கு இதைத் தவிர வேறென்ன சான்று வேண்டும்?? 

அப்போதும் கூட.. இடுப்பைப் பிடித்துக் கொண்டு, வலியில் அலறும் மனைவியைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனை பிரசவ அறை வாயில் பக்கம் வரை.. ஓடிச் சென்றவன்,

 சிற்றூழியர்கள்.. நிலைமையின் தீவிரம் உணர்ந்து.. டிராலியுடன் வர.. அவளை அதில் படுக்க வைத்தவனுக்கு, சாவைப் பற்றிய கவலை ஒரு சிறிதும் இருக்கவில்லை.

இறுதியாக அவள் பிரசவ அறைக்குள் நுழைய முன்னம்.. அவளைக் கொத்தோடு தூக்கி.. நெற்றியில் கண்கள் மூடி.. கண்ணீர் துளியொன்று மௌனமாக வழிய..மீசை அதரங்கள் குத்தக் குத்த.. அழுந்த முத்தம் வைத்த பின்னரே தான்.. அவளை லேபர் ரூமிற்குள் அனுப்பினான் பரிதி. 

மனைவியின் வலி சுமந்த முகத்தை.. இறுதியாக காணக்கூடிய நிலைமையில் அவன் பார்வை இல்லையே..என்ற வேதனை அவனை அலைக்கழிக்க, பழைய நினைவுகள் எல்லாம் சிந்தையில் விரியலானது. 

தாலி கட்டிய மறுநாளே பழிவெறி மீதூற.. கோயில் தெரு முன்னாடி தள்ளி.. அவளின் தாலி பறித்த போது.. அவளது வலி சுமந்த முகம் ஞாபகம் வர, 

உடலில் ஜீவனற்றது போல.. மூர்ச்சையற்று மயங்கி.. அங்கேயே வீழ்ந்தான் பரிதி. 

காதல் தானடி என் மீதுனக்கு?

(பதில் விரைவில் நவில்வாள்.) 

 

 

 

69 thoughts on “காதல் தானடி என் மீது உனக்கு!-26, 27 &28(விஷ்ணுப்ரியா)”

  1. Нужна, где заказать санитарную книжку в городе Пермь официально и без волокиты? На [url=https://klinika-zdorovya-no1.ru]https://klinika-zdorovya-no1.ru[/url] можно сделать медкнижку нового образца по цене от 1700 ? или перевыпустить действующую — от 1000 ?. Справки настоящие и официальные, возможна доставка курьером на дом. Всё удобно: оформить заявку на сайте, внести оплату и ждать доставку — без посещения поликлиники и очередей. Подробнее на сайте — санитарная книжка Пермь, без ожидания, скидка на продление.

  2. чувствую у меня будет то же самое, трек получил но он нихуя не бьется, а что ответил то? я оплатил 3 февраля и трек походу тоже левый ТС обьясни и мне ситуацию
    https://lirnafo.ru
    Закажу посмотрим я сам надеюсь что магазин хороший-проверенный

  3. Ищете лучший выездной бар? Посетите сайт bar-vip.ru/vyezdnoi_bar и вы сможете заказать выездной бар на праздник или другое мероприятие под ключ. Зайдите на страницу, и вы узнаете, что вас ожидает — от огромного выбора напитков до участия в формировании меню. Есть опция включить в меню авторские рецепты, а также получить услуги выездного бара для тематических вечеров с нужной атрибутикой, декором и костюмами. И это далеко не всё! Все детали — на сайте.

  4. Хотите быстро и безопасно обменять криптовалюту на наличные в Нижнем Новгороде? NNOV.DIGITAL фиксирует курс, работает по AML и проводит большинство сделок за 5 минут. Пять офисов по городу, выдача наличными или по СБП. Узнайте детали и оставьте заявку на https://nnov.digital/ — менеджер свяжется, зафиксирует курс и проведёт сделку. Premium-условия для крупных сумм от $70 000. Надёжно, прозрачно, удобно. NNOV.DIGITAL — ваш офлайн обмен с “чистой” криптой.

  5. Подбираете качественные детали для дорожно-строительной техники? Поставим качественные узлы на трактора ЧТЗ Т-130/Т-170 и бульдозер Б-10 (свой цех ремонта), автогрейдера ЧСДМ — ДЗ-98, ДЗ-143, 180, ГС 14.02/14.03, К 700 (ЯМЗ, Тутай), погрузчики марок АМКАДОР, МКСМ, МТЗ, ЮМЗ, Урал, КРАЗ, МАЗ, БЕЛАЗ, краны и экскаваторы, ЭКГ, ДЭК, РДК. Карданные валы — стандартные и на заказ. Нажмите «Оставить заявку» на https://trak74.ru/ — подберем и быстро отгрузим по России!

  6. Популярный сайт «HackerLive» предлагает воспользоваться услугами продвинутых и опытных специалистов, которые в любое время взломают почту, узнают пароли от социальных сетей, а также обеспечат защиту ваших данных. При этом вы сможете надеяться на полную конфиденциальность, а потому о том, что вы решили воспользоваться помощью хакера, точно никто не узнает. На сайте https://hackerlive.biz вы найдете контактные данные программистов, хакеров, которые с легкостью возьмутся даже за самую сложную работу, выполнят ее блестяще и за разумную цену.

  7. какое на**й в\в !!?? совсем рехнулись чтоли ? Я не знаю за качество их 2-дпмп, но если он не бодяженный и качественный, то 5мг интрозально хватит чтоб тебя колбасило 2-3 суток ! Никто по ходу у чемикала его ещё не пробовал – отзывов нету…
    https://rudpexfe.ru
    попробуйте установить скайп.

  8. Obtaining financial support is vital for a startup’s growth.
    building effective team [url=https://www.timetobuiseness.com/how-to-build-an-effective-team-for-your-new-business#building-effective-team]https://timetobuiseness.com/how-to-build-an-effective-team-for-your-new-business/[/url]

  9. Капельница как способ борьбы с запоем – это проверенный подход, который используют специалисты по зависимости для детоксикации организма. Выездной нарколог из медицинского центра предлагает лечение без лишних вопросов, обеспечивая максимальную приватность для клиента. Выезд врача на дом позволяет оперативно начать лечение и восстановление организма, что особенно актуально для людей с зависимостями. Нарколог на дом клиника Во время терапии применяются инфузионные растворы, которые уменьшают проявления абстиненции и предотвращают осложнения. Опытный нарколог на выезде предоставляет возможность проводить лечение в домашних условиях, что исключает стресс от нахождения в медицинском учреждении. Это – эффективное восстановление от запоя, которое предоставляет возможность начать новую жизнь без алкоголя.

  10. это самый ровный магаз братцы!!!) работаю с ними целый год, не разу даже нервы не потрепали) !!! конспирация на высоте, качество наилучшее!продован самый добрый и общительный аах) ну вы поняли! единственное жалко не разу проб бесплатных не получал(((
    https://fradul.ru
    Знакомые делали, получалось что-то похожее на старый Juh.

  11. Приветствую! я получал последний раз недели две назад, заказывал уже много раз и скоро сделаю очередной заказ в этом магазине!!!
    Купить онлайн кокаин, мефедрон, амф, альфа-пвп
    chemica l-mix.com,объявитесь на соседнем форуме(СпФН),вас там ОООООООчень заждались..!

  12. Получил свой заказ,дошло довольно быстро, спасибо chemical-mix.com , за нормальный вес и хорошию работу !
    https://ximora.ru
    Ну я совершенно не понимаю,как можно держать сайт в таком несоответсвии с реальностью?Пароль от админки забыли,чтоли?Сколько клиентов забило,пытаясь пробиться через мыло,которое до сих пор указано?Ппц полный.

  13. или кто то прикалывается?
    Приобрести MEFEDRON MEF SHISHK1 GASH MSK
    Если хотите подешевле – вам СЃСЋРґР°. Если Р¶Рµ располагаете финансами – штудируйте ветки доверенных магазинов, есть селлеры РєСѓРґР° более ответственные Рё стоящие. Лично СЏ РЅРµ планирую дальше сотрудничать СЃ этим магазином. Спасибо Р·Р° внимание.

  14. kraken darknet market kraken onion, kraken onion ссылка, kraken onion зеркала, kraken рабочая ссылка onion, сайт kraken onion, kraken darknet, kraken darknet market, kraken darknet ссылка, сайт kraken darknet, kraken актуальные ссылки, кракен ссылка kraken, kraken официальные ссылки, kraken ссылка тор, kraken ссылка зеркало, kraken ссылка на сайт, kraken онион, kraken онион тор, кракен онион, кракен онион тор, кракен онион зеркало, кракен даркнет маркет, кракен darknet, кракен onion, кракен ссылка onion, кракен onion сайт, kra ссылка, kraken сайт, kraken актуальные ссылки, kraken зеркало, kraken ссылка зеркало, kraken зеркало рабочее, актуальные зеркала kraken, kraken сайт зеркала, kraken маркетплейс зеркало, кракен ссылка, кракен даркнет

  15. Всех благ
    https://dolzakj.ru
    ой заказ 10007466 жду четвертую неделю слышал только завтроки что трек забьется и все получиш но так не чего и не получил.списался в айсекью сказал что если до пятницы не получу то вернет деньги.буду держать в курсе.надеюсь с возвратом вранья не будет

  16. Клиники предлагают реабилитацию зависимых, которая включает терапию зависимости и консультации психолога. Процедура кодирования также выступает популярной методом, способствующей снизить тягу к алкоголю. Круглосуточные клиники обеспечивают конфиденциальное лечение и консультации нарколога, что дает возможность пациентам чувствовать себя комфортно и безопасно. вывод из запоя круглосуточно Адаптация в обществе и поддержка после лечения — необходимые элементы, способствующие успешной интеграции в общество. Помощь в борьбе с алкоголизмом в Туле становится доступным благодаря различным программам и программам, которые способствуют решению этой серьезной проблемы.

  17. Хоть скан хоть что вылаживайте, это не доказательство! доказательством для меня есть только поступление денег на счет. По чекам, сканам, и всему прочему я не работаю это не есть доказательство об оплате!
    https://zorqen.ru
    потому, что так и есть осталось не так много времени!

  18. Тусишка получается РЅРµ саморй, РЅРѕ почти самой выгодной.Метоксетамин – цена Рё качество как Рё везде. Кто РЅРµ хочет переплачивать – может брать РІСЃРµ тут.
    Купить онлайн кокаин, мефедрон, амф, альфа-пвп
    Сделал очередной заказ в этом магазине:good: всё пришло качество как всегда радует буду дальше работать с вами:good:приятно иметь дела с ответственными партнёрами:voo-hoo: процветания вашему магазину:):):)

  19. Хороший магазин,норм совместки
    https://qepzuff.ru
    а что с алхимом случилось?

  20. Один вопрос только,можно ли заказать так что бы без курьера?Самому придти в офис и забрать посылку?
    Приобрести (MEF) MEFEDRON SHISHK1 MSK-SPB | Отзывы, Покупки, Гарантии
    вобщем моя командировка в Столицу нашей родины удалась ) день переговоров и 6 дней удовльствия !!!!!

  21. https://web.facebook.com/CANDETOXBLEND

    Prepararse un control médico ya no tiene que ser una incertidumbre. Existe una fórmula confiable que actúa rápido.

    El secreto está en su mezcla, que sobrecarga el cuerpo con vitaminas, provocando que la orina oculte los metabolitos de toxinas. Esto asegura un resultado confiable en menos de lo que imaginas, con efectividad durante 4 a 5 horas.

    Lo mejor: no se requieren procesos eternos, diseñado para candidatos en entrevistas laborales.

    Miles de usuarios confirman su efectividad. Los paquetes llegan sin logos, lo que refuerza la confianza.

    Si tu meta es asegurar tu futuro laboral, esta fórmula es la elección inteligente.

  22. Добрый день! ЦЕНЫ НА MN СНИЖЕНЫ!
    https://dolzakj.ru
    Извините, если я не знаю вашу продукцию у кого мне тогда спрашивать ?

  23. kraken darknet ссылка kraken onion, kraken onion ссылка, kraken onion зеркала, kraken рабочая ссылка onion, сайт kraken onion, kraken darknet, kraken darknet market, kraken darknet ссылка, сайт kraken darknet, kraken актуальные ссылки, кракен ссылка kraken, kraken официальные ссылки, kraken ссылка тор, kraken ссылка зеркало, kraken ссылка на сайт, kraken онион, kraken онион тор, кракен онион, кракен онион тор, кракен онион зеркало, кракен даркнет маркет, кракен darknet, кракен onion, кракен ссылка onion, кракен onion сайт, kra ссылка, kraken сайт, kraken актуальные ссылки, kraken зеркало, kraken ссылка зеркало, kraken зеркало рабочее, актуальные зеркала kraken, kraken сайт зеркала, kraken маркетплейс зеркало, кракен ссылка, кракен даркнет

  24. Лечение запоя в Туле – это популярная услуга, предоставляющая пациентам получить необходимую медицинскую помощь на дому. Выездной нарколог, работающий в области наркологии, поможет справиться с симптомами абстиненции и позаботится о комфорте пациента. врач нарколог на дом Стоимость капельниц могут колебаться в зависимости от выбранной клиники и сложности лечения. Например, цена лечения алкогольной зависимости может состоять не только из прокапку, но и дополнительные антиалкогольные процедуры, а также реабилитацию пациентов с алкоголизмом. В городе Тула работают наркологические службы предлагаются как в стационарных учреждениях, так и в выездном формате. Приблизительная стоимость капельницы от запоя может составлять от 2000 до 5000 рублей. Необходимо учитывать, что стоимость лечения может зависеть от используемых препаратов и индивидуальных запросов пациента. Наркологическая служба Тулы имеет разные варианты услуг, которые могут охватывать терапию запоя и реабилитационные меры. Если обратиться к наркологу на дом, вы получите поддержку специалиста в борьбе с алкоголизмом и избавитесь от длительного лечения в клинике. Имейте в виду, что оперативное обращение за медицинской помощью может значительно уточнить процесс восстановления.

  25. Analizador Vibraciones Equilibrado Dinamico

    Balanset-1A

    El desequilibrio del rotor es la principal causa de fallas en el equipo, y con mayor frecuencia solo se desgastan los rodamientos. El desequilibrio puede surgir debido a problemas mecanicos, sobrecargas o fluctuaciones de temperatura. A veces, reemplazar los rodamientos es la unica solucion para corregir el desequilibrio. Por ejemplo, el equilibrado de rotores a menudo se puede resolver directamente en el lugar mediante un proceso de balanceo. Este procedimiento se clasifica como ajuste de vibracion mecanica en equipos rotativos.

  26. Сильно!!!5 из 5!!
    http://www.pageorama.com/?p=kucwubeub
    это самый ровный магаз братцы!!!) работаю с ними целый год, не разу даже нервы не потрепали) !!! конспирация на высоте, качество наилучшее!продован самый добрый и общительный аах) ну вы поняли! единственное жалко не разу проб бесплатных не получал(((

  27. https://www.crunchbase.com/organization/can-detox-blend

    Prepararse una prueba de orina ya no tiene que ser una pesadilla. Existe una alternativa científica que funciona en el momento crítico.

    El secreto está en su fórmula canadiense, que sobrecarga el cuerpo con vitaminas, provocando que la orina neutralice los marcadores de THC. Esto asegura un resultado confiable en menos de lo que imaginas, con ventana segura para rendir tu test.

    Lo mejor: no necesitas semanas de detox, diseñado para quienes enfrentan pruebas imprevistas.

    Miles de clientes confirman su efectividad. Los envíos son 100% discretos, lo que refuerza la seguridad.

    Si tu meta es asegurar tu futuro laboral, esta solución es la elección inteligente.

  28. Магазин работает отлично!никаких косяков и запоров пока что не было)))
    https://form.jotform.com/252506682862059
    СПб все ровно процветания магазину. Амф на 5+

  29. Работал с магазином! все норм
    https://hoo.be/agfecehah
    Я всегда делаю на растворителе для снятие лака с ногтей (без ацетона)и для огранизма менее вреден и запах нос не режет,кто нибуть может подсказать сколько МЛ растворителя на 10г АМ если делать 1к15?

Leave a Reply to Juniorstath Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top