ATM Tamil Romantic Novels

2 காதல் கண்ணாளனே

“கேசவா” என்று அவன் உயிர் நண்பன் பாலாவின் குரல் தன் அறைக்கு வெளியே கேட்டதும்

“வரேன் இருடா” கால் வழிய விட்டிருந்த பட்டு வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு வெளியே வந்தான்.

அவன் பின்னே மெதுவாய் நடந்து வந்தாள் மலர்விழி

“வாடா என் உயிர் நண்பா! நீதானே இந்த சீமாட்டியை தேடி பிடிச்சு எனக்கு பொண்டாட்டி ஆக்கியிருக்க” என்ற நெருப்பு குமிழாய் விழுந்தான்

“அடேய் இப்ப எதுக்கு வானத்துக்கும் பூமிக்குமாய் தாம் தூம்னு குதிக்குற. ஆமான்டா நான்தான் மலர்விழியை தேடிப்பிடிச்சு அம்மாகிட்ட் மலர்விழியை நம்ம கேசவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா அவன் வாழ்க்கை வசந்தமா மாறும்” என்று அவன் அடுத்த வார்த்தை பேசும்முன்

“என் வாழ்க்கை விளங்காம போறதுக்கு இவளை கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கேன் இவளை பார்க்க பார்க்க எனக்கு உடம்பெல்லாம் பத்திக்கிட்டு எரியுது” என்றான் ஆக்ரோசத்தில் முழங்கினான்

“ஏண்டா மலர்விழி முகத்தை பார்த்து தானே அவ கழுத்துல தாலி கட்டின அப்பவே எனக்கு இவ பிடிக்கலைனு எழுந்துக்கவேண்டியது தானே ” என்று பாலா முகம் சுளித்தான்

“காலையில நான் மட்டும் இவ கழுத்துல தாலி கட்டாம எழுந்திருந்திருந்தா, அம்மா தினம் தினம் அழுதுகிட்டேயிருப்பாங்க. அடுத்து… மணவறை வரைக்கும் வந்து, ஒரு பொண்ணோட கழுத்துல தாலி கட்டாம போய்ட்டான், இந்த பொண்ணோட சாபம் இவனை சும்மா விடாதுனு, என் சொந்தம் முழுக்க என்னை திட்டி தீர்ப்பாங்க. எனக்கு சாபம் கொடுத்தா, நான் தாங்கிப்பேன். ஆனா என்னை மட்டும் கடைசி வரை காதலிச்ச என் தேவதை கீர்த்தி… அவ எனக்கு குட்டி தேவதையை கொடுத்துப் போனவ என் குழந்தைக்கு இனி அம்மா கிடைக்காதுனு யாரும் சாபம் கொடுக்கக் கூடாதுனு தான், இவ கழுத்துல தாலி கட்டினேன்! ஆனா இவ… இவ என் நிம்மதியை கெடுக்க வந்த பிசாசு!” என்று இதழ் துடிக்க அழுகையோடு நின்றிருந்தவளை நோக்கி பல்லைக் கடித்தான் கேசவன்.

“போதும்டா! அந்தப் பொண்ணை வார்த்தையால சாகடிக்காதே. அந்தப் பொண்ணு ஏற்கனவே ஒரு வாழ்க்கையை இழந்து, வேதனையில துடிச்சுக்கிட்டே இனியாவது வாழ்க்கை நல்லா இருக்கும்னு நம்ம வந்திருக்கா … நீ மீண்டும் அவளை காயப்படுத்தாதே,” என்று மருமகளுக்காக பரிந்து பேசினார் மகேஷ்வரி.

ஆனால் கேசவன் பற்களை கடித்துக் கொண்டு “அம்மா… இவளைப் பற்றி உங்களுக்கு முழுசா தெரியல!
தினமும் பார்த்து தான் நாம சாப்பிடணும். ஏனா, இவ சாப்பாட்டுல விஷம் வச்சு கொல்ல கூட தயங்கமாட்டா! காய்ந்து விழுந்தவன்

“என்னை ஏமாத்திட்டு போனதுக்கான தண்டனை நான் கொடுக்க முடியலன்னு கவலைப்பட்டுக்கிட்டிருந்தேன்.
ஆனா கடவுள் எனக்கு நல்ல ஒரு சான்ஸ் கொடுத்திருக்காரு. அதை நான் தவற விடமாட்டேன்.
இவளுக்கு நரகம் என்னனு காட்டப்போறேன்!” என்று மலர்விழி மீது இருந்த வெறியால்,
சண்டை சேவலாய் சீறி, புயலாய் அங்கிருந்து வெளியேறினான் கேசவன்.

மலர்விழியோ “நான் ஏற்கனவே பல முறை நரகத்துல கொடுக்கற தண்டனையை அனுபவிச்சு வந்தவ கேசவ் .
நீ கொடுக்கற தண்டனை எனக்கு புதுசா இருக்காது கேசவ்…” விரக்தி சிரிப்புடன் நின்ற தன்னை பாவமாய் பார்த்த பாலாவை பார்த்து “அண்ணா… கேசவ்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப்போறேனு எனக்கிட்ட சொல்லாம விட்டீங்க!” என்று குற்றம் சாட்டும் பார்வை செலுத்தினாள்.

“நீ அவனை விட்டு போன நிமிஷம் முதல், அவன் பட்ட வேதனையை உன்கிட்ட இப்ப கோபமா கொட்டிட்டு போறான் மலர்விழி

“நீ கொடுத்த காயத்துக்கு மருந்தாக கிடைச்சவள் கீர்த்திதான். அந்தப் பொண்ணு அவனை காப்பாத்தி, அவ பக்கம் இழுத்து, அவனோட வாழ்க்கையை இனிக்கச் செய்து நாலு வருஷம் கேசவ் கூட வாழ்ந்தவ.
ஆனா… ஒருநாள் திடீர்னு கீர்த்தி மயங்கி விழுந்தாள். ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிக்கொண்டு ஓடினான் கேசவன்.
அங்கே டாக்டர் ப்ரைன் ட்யூமர், அது கூட லாஸ்ட் ஸ்டேஜ். காப்பாத்த முடியாது சொல்லிட்டாரு .. அவன் நொடிஞ்சு போனான். அப்போ தியா ஒரு வயசு குழந்தை… கீர்த்தியை எத்தனை ஹாஸ்பிட்டல் கூட்டிப்போனாலும், கடைசியில் அவளை காப்பாத்த முடியாம போச்சு. கடைசியாக கீர்த்தி கேசவோட பழைய காதலை பற்றி சொல்லுங்கனு என்கிட்ட கேட்டுச்சு.. நான் உங்க காதலை பத்தி சொன்னேன்.. நீ எங்க இருக்கனு கேட்டா .. நான் உனக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருஷத்திலேயே உ ன் புருஷன் இறந்துட்டாரு சொன்னேன்.

அதுக்குப் பிறகு கீர்த்தி நீ கேசவனோட மனைவியா நீ வந்தால் அவன் வாழ்க்கை பசுமையாய் மாறும்னு உன்னை தேடி பிடிச்சு என் கேசவ் மாமாவுக்கு கல்யாணம் பண்ணி வைங்க அண்ணா.. என் குழந்தையை கண்டிப்பா மலர் பார்த்துப்பாங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு.. இந்த விசயம் கேசவ் மாமாவுக்கு சொல்ல கூடாதுனு அழுதுகிட்டு என்கிட்ட சத்தியம் வாங்கிட்டா.. அதனால்தான் நம்ம பிரெண்ட்ஸ் சர்க்கிள் மூலமா உன்னைத் தேடிப்பிடிச்சு, கேசவனோட உன்னை கல்யாணம் பண்ணி வச்சேன். என்னோட கடமை முடிஞ்சுருச்சு. ஆனா… நீ அவனோட மனசுல மீண்டும் இடம் பிடிக்க முடியுமா, முடியாதானு
எனக்கு தெரியலமா” என்று சொல்லிவிட்டு, விளையாடிக் கொண்டிருந்த தியாவைத் தூக்கி வந்தான் பாலா.

“இந்தா… இனிமே தியா உன்னோட பொறுப்பு,” என்று குழந்தையை மலர்விழியிடம் கொடுத்து, அங்கிருந்து நெஞ்சம் கனத்தபடி நடந்தான் பாலா

தியா குட்டி கண்களை சுழட்டி, தலையை சாய்த்து “நான் உங்களை சித்தினு கூப்பிடவா? இல்ல அம்மானு கூப்பிடவா? ஏன்னா… பக்கத்து வீட்டு பாட்டியம்மா நேற்று, நாளைக்கு உனக்கு சித்தி வந்துருவான்னு சொல்லியிருந்தாங்க. ஆனா மகி பாட்டி, நாளைக்கு நம்ம வீட்டுக்கு உனக்கு அம்மா வரப்போறாங்கன்னு சொல்லியிருந்தாங்க. அப்போ… நான் உங்களை எப்படி கூப்பிடணும்?” சின்ன முகத்தில் தோன்றிய குழப்பம், மலர்விழியின் இதயத்தை அம்புபோல் குத்தியது.

குழந்தையின் அப்பாவித்தனத்தில் இருந்த அந்தக் கேள்வி, அவளுக்கு பதிலளிக்க முடியாத வலியாக மாறியது.

இவ்வளவு நேரமும், தன்னவன் கொடுத்த சாட்டைப் பேச்சுக்களில் மனம் துடித்துக் கொண்டிருந்த மலர்விழி,
சின்ன பாப்பாவின் அமுத குரலைக் கேட்டு மெய்மறந்து அவளைப் பார்த்தாள்.

“பாப்பாவுக்கு எப்படி கூப்பிடணும்னு தோணுதோ… அப்படித்தான் கூப்பிடு…” என்று சொல்லிக்கொண்டே, தன்னுடைய நடுங்கும் உதடுகளை குழந்தையின் புசுபுசு கன்னத்தில் வைத்தாள்.
அந்தச் சின்ன முகத்தில் முத்தம் பதித்தவுடன், மலர்விழியின் கண்கள் அறியாமலே நனைந்தது .

“நா… நான் உ… உங்களை அம்மானு கூப்பிடுறேன்,” என்று தோளை குறுக்கிக் கொண்டு சிரித்தாள் தியா.

“அ… அப்போ… என்னை அம்மானு கூப்பிடு…” என்று மலர்விழி இதழைக் கடித்து, அழுகையை அடக்கிக்கொண்டாள்.

எத்தனை நாள்களாக என்னை அம்மா என்று கூப்பிட ஒரு குழந்தை இருந்தால் போதும் என்று தன் மனம் துடித்தது. கடவுளிடம் எத்தனை முறை குய்யோ முறையாகக் கதறியிருப்பாள் மலர்விழி .. இப்போது அந்த ஆசை சிறிய பாப்பாவின் வாய் வழியாக நிறைவேறியதை உணர்ந்தவுடன், அவளது இதயம் தாங்காமல் நனைந்து விட்டது.

இதோ… இப்போது அவளுக்கு தாய்மை அடையாமலேயே, அம்மா என்ற ஸ்தானம் கிடைக்கப்போகிறதே!
“பெற்றால்தான் பிள்ளையா?” என்று உள்ளத்தில் கேட்டுக்கொண்டாள்

என்னவனின் குழந்தை… என்னை நம்பி, தன்னிடம் ஒப்படைத்துவிட்டு சொர்க்கலோகத்துக்குச் சென்ற அந்த மகரராசியின் குட்டி தேவதை, இது என் குழந்தை… என் வாழ்க்கைக்காக கடவுள் அருளிய வரம்…” என்று நூறு முறை மனதிற்குள் சொல்லிக்கொண்டு, அந்தச் சின்ன முகத்தை மலர்விழி மீண்டும் மீண்டும் பார்ப்பதை நிறுத்த முடியவில்லை.

“அ… அம்மா…” என்று தியா அழைத்த அந்தச் சிறிய நொடியிலேயே, மலர்விழியின் உள்ளத்தில் ஆயிரம் ரெக்கைகள் முளைத்து, வானத்தின் எல்லையற்ற நீலத்தில் பறக்கும் பறவையாய் ஒரு உச்சமான ஆனந்தம் பொங்கியது.

அம்மா என்ற அந்த ஒரு சொல்லுக்காகவே எத்தனை நாள்கள் ஏங்கி, இரவுகள் முழுவதும் கண்ணீரோடு விழித்திருக்கிறாள். அந்த ஏக்கத்தின் அனைத்தையும் அடைத்து, தியாவின் இனிய குரலில் விழுந்த “அம்மா” என்ற அழைப்பு, மலர்விழியின் இதயத்தில் பூமாலை தூவியது போல இருந்தது.

அந்த மகிழ்ச்சித் துளிகள் அடங்காமல் பெருக்கெடுத்து, கண்ணீரின் நதியாக அவளது கண்களில் வழிந்தது.
மலர்விழி தியாவைத் தழுவிக்கொண்டவளின் மார்புக்குள், முன்பு எப்போதும் நிறையாத வெற்றிடம் இப்போது நிரம்பியிருந்தது.

“அம்மா… ஏன் அழுறீங்க? பசிக்குதா அம்மாவுக்கு?” என்று தியா, தன் சிறிய விரல்களால் மலர்விழியின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அப்பாவித்தனமாகக் கேட்டாள்.

சின்ன கரங்கள் கண்ணீரைத் துடைத்த நொடியிலே, மலர்விழியின் இதயம் உருகிப் போனது.

“பாப்பாவுக்கு பசிக்குதா?” என்று மலர்விழி கேட்டவுடன்,

“ஆமா… பசிக்குது!” என்று குட்டி சிரிப்போடு தன் வயிற்றைத் தடவிக் காட்டினாள் தியா.

“அம்மா உனக்கு சாப்பாடு ஊட்டட்டுமா?” என்று பாசமாய் அவளைத் தலையசைத்து கேட்டுக் கொண்டே,
சமையல்கட்டையைக் எட்டிப்பார்த்தாள் மலர்விழி.

அவளது கண்களில் இன்னும் கண்ணீர் துளிகள் மிளிர்ந்துகொண்டிருந்தாலும்,
உள்ளம் நிறைந்த தாய்ப்பாசம் அந்தச் சின்ன கேள்வியில் கலந்து வழிந்தது.

எங்கே மறுபடியும் தனது மூத்த மருமகள் கீர்த்தி தன் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்துவிட்டாளோ என்று தன்னை கிள்ளிப்பார்த்துக்கொண்டார் மகேஷ்வரி .

குழந்தையின் பசி முகம் கண்டு உணவு கொடுத்து விடுவாள் தியாவை பெற்ற தாய் கீர்த்தி. இப்போது தியா பசிக்குது என்ற கேட்ட அடுத்த நொடி குழந்தையை தூக்கிக்கொண்டு செல்லும் மலர்விழியை கண்டதும் மகேஷ்வரிக்கு மனதில் இருந்த மனச்சுமை பெரிதாய் இறங்கிவிட்டது.

மகேஷ்வரிக்கு ஆஸ்துமா இருக்கிறது. தன்னை அத்தை அத்தை என்று காலை சுற்றி வந்த மருமகளை காலன் எனும் கொடிய அரக்கன் பாதியில் அபகரித்து சென்றதை தாள முடியாமல் அவதிப்பட்டவர் ஒரு வயது தாண்டிய தியாவை பார்த்துக்கொள்ள முடியாமல் தவித்துத்தான் போனார்.

குழந்தையை பார்த்துக்கொள்ள கேர் டேக்கர் பலரை வேலைக்கு அமர்த்தினான் கேசவன். ஆனால் அவர்கள் கேசவன் முன்னே குழந்தைக்கு பாசம் காட்டி அவன் சென்றதும் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தை அரட்டி மிரட்டி சாப்பிட வைப்பதை மகேஷ்வரியால் பொறுத்துக்கொள்ள முடியாமல் கேர்டேக்கரின் சண்டை பிடித்து விடுவார்.

யாராலும் குழந்தையையும் மகேஷ்வரியையும் பார்த்துக்கொள்ள முடியவில்லை. தன் அன்பு மனைவி இறந்த துக்கத்திலிருந்து மீண்டு வராமல் தத்தளிப்பவனுக்கு தாயையும் மகளையும் கவனிக்க முடியாமல் திண்டாடினான்.

தாயின் ஏக்கத்தில் தியாவுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போய்விடும். அவன் ஆபிஸ் போன் பத்தாவது நிமிடம் குழந்தைக்கு உடம்பு முடியல என்று போன் செய்து விடுவார் மகேஷ்வரி. ஆபிஸுக்கும் வீட்டிற்கும் காரில் அலைந்து திரிந்து மனஉளைச்சலுக்கு ஆளானான் கேசவன்

மகன் கஷ்டப்படுவதை பார்க்க முடியாத மகேஷ்வரியோ “கேசவா நீ நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டா இப்படி நீ அல்லாட வேண்டி இருக்காதுப்பா என்ற அன்னை முறைத்து மட்டுமே செல்வான்.

தியா மூன்று வயதானதும் பள்ளியில் சேர்த்து விட்டான். அங்கே தான் புதிதாய் கேசவனுக்கு மீண்டும் பிரச்சனை வந்தது

அங்கே குழந்தைகள் தாயுடன் வருவதை கண்டு தியாவே “ப்பா எனக்கு அம்மா இல்லையே! என்று குழந்தை முகம் சுருக்கி அழத்துவங்கியது. குழந்தைக்காகவே மறுமணத்துக்கு மனதை கல்லாக்கிக்கொண்டு சம்மதித்தான் கேசவன்.

மலர்விழி கைகளில் தயிர் சாதத்தை பிசைந்து, தியாவுக்கு ஊட்டி கொண்டு “உங்களுக்கு என்ன சாப்பிட பிடிக்கும்?” என்று மெதுவாகக் கேட்டாள்.

“எ… எனக்கு பூரி பிடிக்கும். அப்புறம் சாக்லேட்… நிறைய பிடிக்கும்!”
என்று குட்டி கைகள் விரித்து காட்டினாள் தியா.

“அப்படியா? ஆனா நிறைய சாக்லேட் சாப்பிட்டா நாக்குல கீரிப்பூச்சி வந்திடுமே ?” என்று மலர்விழி மெல்ல சிரித்தாள்.

தியா உடனே தலையைக் குலுக்கி, சின்ன சிரிப்புடன், “ஆனா நான் அப்பா கன்னத்துல முத்தம் குடுத்து , சாக்லேட் கேட்டா… உடனே பெரிய பாக்ஸா வாங்கிட்டு வருவாங்கம்மா!” என்று புன்னகையுடன் சொல்லிக் கொண்டே, மலர்விழி ஊட்டிய தயிர் சாதத்தை சாப்பிட்டு முடித்துவிட்டாள்.

“ஆமா முத்தம் கொடுத்தா உங்க அப்பா என்ன கேட்டாலும் வாங்கி தருவாரு” என்று சிரித்தாள் மகளை பார்த்து

மகேஷ்வரியோ இருவருக்கும் கண்ணு பட்டு விடக்கூடாது நைட் மருமகளுக்கும் பேத்திக்கும் சுத்திப்போடணும் என்று மனதில் நினைத்துக்கொண்டு சோபாவில் சாய்ந்தவர் பலநாள் கழித்து நிம்மதியாக உறங்கிவிட்டார்.

அன்று மாலை காமாட்சி மலர்விழியிடம் சில அறிவுரைகளை கூற

“நான் பார்த்துக்குறேன்மா உங்க பாரத்தை இறங்கி வச்சிட்டீங்கள்ள இனி என்னை பத்தி கவலைப்படாதீங்க” என்றவள் அவள் பக்கம் நின்ற மகேஷ்வரியிடம் “அத்தை நைட்டுக்கு என்ன சமைக்கட்டும்” என்று அக்மார்க் மருமகளாக மாறிவிட்டாள்.

“இனிக்கு நான் சமைக்குறேன்மா நீ ரெஸ்ட் எடு” என்ற மாமியாரை வெடுக்கென நிமிர்ந்து பார்த்தவள்

“நான் என்ன புது பொண்ணா அத்தை நீங்க ரெஸ்ட் எடுங்க” என்று முந்தானை இடுப்பில் சொருகிக்கொண்டு வேலையை பார்க்கத்தொடங்கினாள் மலர்விழி.

காமாட்சியோ “முதல் வாழ்க்கையில என் பொண்ணு நரக வேதனையை அனுபவிச்சிட்டா சம்பந்தி நாங்க நல்ல குடும்பம்னு நம்பி அந்த பாவிக்கு பொத்தி பொத்தி வளர்த்த பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சோம் கல்யாணம் ஆன நாளே என் பொண்ணை மண்டையில கட்டு போட வச்சிட்டாங்க” என்று முந்தானையை வாயில் வைத்துக்கொண்டு குமுறினார் காமாட்சி

“அம்மா… முடிஞ்ச கதையை மீண்டும் பேசினா, அதால ஒரு நயா பைசா பயனும் கிடையாது. உங்களுக்கு சப்பாத்தி போட்டு வச்சிருக்கேன்… சாப்பிட்டுட்டு நீங்க கிளம்புங்க.” என்றதும்…

“ஏன்மா அம்மா இன்னிக்கு ஒருநாள் நம்ம வீட்டுல இருக்கட்டும்” என்றார் மகேஷ்வரி

“இல்லங்க சம்பந்தி… நான் கிளம்புறேன்,” என்று பெருமூச்சு விட்டுக் கிளம்பத் தயாரானார் காமாட்சி.

ஆனால், மகள் மனம் வாடக்கூடாது என்ற எண்ணத்தில், இரண்டு சப்பாத்தி சாப்பிட்டு, தண்ணீர் குடித்துவிட்டு,
“நான் சொன்னது நினைவிருக்கட்டும், மலரு…” என்று மெதுவாக மகளின் தோளில் கை வைத்து அழுத்தினார் .

“நான் உங்க வீட்டுக்கு வர மாட்டேன்மா! நீங்க கிளம்புங்க. உங்க மருமகள் நீங்க எப்போ வருவீங்க, எப்போ உங்களை சமைக்கச் சொல்லலாம்னு காத்திருக்காங்க… போங்க,” என்றாள் மலர்விழி, இதழை கடித்தபடி அழுகையை அடக்கிக்கொண்டு.

அதே நேரத்தில், ஹாலில் பேத்தியுடன் மகிழ்ந்து பேசிக்கொண்டிருந்த மகேஷ்வரிக்கு இவர்களுடைய குடும்பப் பிரச்சனை குறித்து ஒன்றும் தெரிய வாய்ப்பில்லை.

கண்ணீரை துடைத்துக்கொண்டு ஹாலுக்குள் வந்த காமாட்சியோ, நெஞ்சை நெருக்கும் பெருமூச்சுடன்,
“என் பொண்ணு… உங்க பொண்ணா பார்த்துக்குவீங்கனு நம்பிக்கையில்தான் நான் கிளம்புறேன்,”
என்று சொன்னபடி கைகளை இணைத்து கும்பிட்டாள்.

“கையை இறங்குங்க, சம்மந்தி … மலர்விழி எங்க வீட்டுக்கு மறுபடி வந்த தேவதை. அவளை நான் கொண்டாடிப் பார்த்துக்கறேன். நீங்க கவலைப்படாம போங்க,” என்று புன்னகையுடன் சொன்னார்.

அந்த வார்த்தைகள் காமாட்சியின் உள்ளத்தை நிம்மதி நிறையச் செய்தது. மனநிறைவுடன் தலை ஆட்டி, அமைதியாக கிளம்பினார் காமாட்சி.

குழந்தையை மடியில் போட்டு தூங்கவைத்துக் கொண்டிருந்தாள் மலர்விழி.

“ஏம்மா மலரு… தியாவை என்கிட்ட கொடு. நான் என்கூட படுக்கவச்சிருக்கேன்,” என்று மடியில் உறங்கிக்கொண்டிருந்த தியாவை எடுக்க முனைந்தார் மகேஷ்வரி.

“தியா என்னோட இருக்கட்டும் அத்தை… நீங்க தூங்குங்க,” என்று சொன்ன மலர்விழி, தியாவை மார்பில் சாய்த்துக்கொண்டு அறைக்குள் சென்றாள்.

மகேஷ்வரியோ, “இனி நடப்பவையெல்லாம் நல்லதாய்தான் நடக்கணும்…” என்று நீண்ட நெடிய மூச்சுடன் தன் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.

அந்த நேரத்தில், தள்ளாடும் கால்களோடு வந்து கதவைத் திறந்தான் கேசவன்.

23 thoughts on “2 காதல் கண்ணாளனே”

  1. The Minotaurus ICO referral system is paying off big; got extra tokens from invites. $MTAUR’s utility in power-ups makes it more than hype. This project’s got legs.
    mtaur token

  2. A person necessarily assist to make critically posts I would state. That is the very first time I frequented your web page and thus far? I amazed with the analysis you made to make this particular post incredible. Excellent job!

  3. Good website! I truly love how it is simple on my eyes and the data are well written. I am wondering how I could be notified whenever a new post has been made. I have subscribed to your feed which must do the trick! Have a great day!

  4. You can definitely see your enthusiasm in the work you write. The world hopes for even more passionate writers like you who are not afraid to say how they believe. Always follow your heart.

  5. Thanks , I’ve recently been searching for info approximately this subject for a while and yours is the best I have came upon till now. However, what concerning the conclusion? Are you certain about the source?

Leave a Reply to fdertolmrtokev Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top