ATM Tamil Romantic Novels

சந்தித்த வேளை 6

அத்தியாயம் 6
இப்படியே  இரண்டு வருடங்கள் ஓ டியது நிறுவனம் மிகவும் நட்டப்பட் டது ராமலிங்கம் திணறிவிட்டார். அதே நேரம் மணியரசியும் ராமலிங் கமும் ஜோசியரை பார்க்க சென்ற னர்.ஜாதகத்தை பார்த்த ஜோசியர் சிலவற்றை கூறியவர் கல்யாணம் பண்ணா மாற வாய்ப்பு இருக்கு அதுவும் ஆறு மாசத்துக்குள்ள பண்ணனும்.

பொண்ணு குறிப்பிட்ட  நட்சத்திர த்தை கூறியவர் இதுல இருந்தா குடும்பமும் தொழிலும் அமோகமா வரும்னு சொல்லி அனுப்பினார்.

இதைக் கேட்ட இருவருக்கும் சந்  தோஷமாக இருந்தாலும் இப்படிப்ப ட்ட பெண் கிடைப்பது கஷ்டம் அ ல்லவா ஒரு மாதம் அலைந்து திரிந் தார்கள். அவன் அதிர்ஷ்டம், அதே ஜோசியரிடம் வந்தனாவின் ஜாத கம் வந்து  சேர்ந்தது.

ஜோசியர் கால் செய்து ராமலிங்கத் திடம் நீங்க எதிர்பார்த்த ஜாதகம் வந்து இருக்கு பொண்ணோட வீட் டுக்கு சென்று பாருங்கள் என்று அனைத்தையும் கூறி அனுப்பி வைத்தார்.

ராமலிங்கமும் மணியரசியும் சந் தோஷத்துடன் மேகநாதன் வீட்டிற் கு சென்றனர். வீட்டை பார்த்ததும் இருவரும் சற்று தயங்கி நின்றனர். பின் பார்த்து பேசிக் கொள்ளலாம் என்று அவர்கள் பசுபதிக்கு சொல் லாமல் வந்திருந்தனர்.

முன்கூட்டியே வருகிறோம் என்று சொல்லி இருந்ததால் முன்னேற்பா ட்டோடு இருந்தனர் வந்தனா வீட்டி னர். ஜாதகம் பொருந்தி வந்ததால் இருவரும் சுமூகமாக பேசி முடிவெ டுத்து இருந்தனர்.

வந்தனாவை மணிக்கு மிகவும் பி டித்து விட்டது. ராமலிங்கம் மனை வி முகத்தில் மகிழ்ச்சியை பார்த்த தும்,  மற்ற விஷயங்களை பேசினா ர். வந்தனாவிடம் பசுபதி புகைப்ப டம் காட்டப்பட்டது. வேண்டாம் என்று சொல்வதற்கு ஒரு குறையும் இரு க்கவில்லை.

அவளின் தாய் தகப்பன் பார்த்து செய்யும் திருமணம், ஒருபோதும் தப்பாக போகாது என நினைத்தவ ள் சரி என கூறியிருந்தாள். வந்த னா ஆதவிடம் கூறினாள்.

அக்காவின் முகம் மலர்ச்சியை பா ர்த்தவன் சரியென தலையாட்டி னான். ஆனால் அவனுக்கு பெரி தான பிடித்தம் ஏற்படவில்லை பசுபதி மீது.
***********************************
இங்கு பசுபதி வீட்டில், பசுபதி விஷ யம் கேள்விப்பட்டவன் தாம் தூம் என குதித் தான். யாரை கேட்டு சம் மதம் பேசிட்டு வந்தீங்க..,எனக்கு கல்யாணம் பண்ற ஐடியா இப்ப இ ல்ல என் மனசுல யாரு இருக்கா ன்னு தெரிஞ்சும் இப்படி பண்ணி ட்டு வரீங்கன்னா.. உங்களை என் ன பண்றது சொல்லுங்க.. ஒழுங்கு மரியாதையா கல்யாணத்த நிறுத் திட்டு வாங்க..,

இல்லன்னா நான் இப்பவே வீட்ட விட்டு வெளியே போறேன்னு இரா மலிங்கத்திடம் மணியரசியிடமும் கோபமாக கத்திக் கொண்டு இருந்தான்.

ராமலிங்கம் ஏண்டா பசுபதி இப்படி கத்துற ரெண்டு வருஷமா நாங்க உன்னை எதுவு மே கேட்கலையே அந்த பொண்ணு கிடை ச்சிரும் னு தானே நம்பிகிட்டு இருந்தோம். ஆ  னா அந்த பொண்ணுக்கு கல்யா ணம் ஆயிடுச்சு நீதாண்டா ஒரு நாள் சொல்லி ஓனு அழுத…,

சரி தேறி வரட்டும்னு நாங்களும் எதுவும் கேட்காமல் விட்டு வச்சோ ம். உனக்கும் வயசு ஏறிட்டே போகு து உனக்கு பின்னாடி குந்தவை இ ருக்கா இது உனக்கு தெரியுமா? தெ ரியாதா? கம்பெனியும் நஷ்டத்தில் போயிட்டு இருக்கு இன்னும்  கொ ஞ்ச நாள்ல இழுத்து மூட வேண்டி யது தான்.

என்னாலயும் எவ்வளவுதான் இழு த்து பிடிக்க முடியும்னு சொல்லு எ னக்கும் வய தாகிட்டே போகுது பேர ன் பேத்திய பார்க்க எனக்கும் ஆ சை இருக்கும் இல்ல வீடே ரெண்டு வருஷமா களையிழந்து போய் இருக்குடா.

இப்பதான் ஒரு நல்ல விஷயம் கூடி வரப் போகுது உனக்கு ஏத்த பொ ண்ணுடா அவ, ஒரு முறை அவள போய் பார்த்து பேசிட்டு வா, உனக் கே அவளை பிடிச்சுடும் என்றார்.

உடனே மணி, ஆமா பசுபதி பொ ண்ணு அழகா லட்சணமா இருக்கா எனக்கு ரொம்ப.. பிடிச்சு போச்சு தெ ரியுமா.. கட்டிக்கோடா பசுபதி தாலி பாக்கியம் கூட கெட்டின்னு ஜோசி யர் சொன்னாரு பா என்றவரை முறைத்துப் பார்த்தான் பசுபதி.

இராமலிங்கம் ஏண்டா அவளை முறைக்கிற அவ சொன்னதுல என் ன தப்பு இருக்கு உனக்கு ஒன்னும் ஆகிட கூடாதுனு ஒரு தாயா அவ பதறுதுல ஒன்னும் தப்பில்லையே என்றார்.

பசுபதி அப்பா ப்ளீஸ் ஏன் யாரும் என்ன புரிஞ்சிக்க மாட்றீங்க எனக் கு விருப்பமில்லைன்னு சொல்லி யும் ஏன் என்ன கட்டாய படுத்துறீ ங்க.., நீங்களே பொண்ணு வீட்ல போய் இந்த சம்மதம் வேணாம் இத் துடன் நிறுத்திக்கலாம்னு சொல்லி ட்டு வந்துடுங்க.  இனி என் லைஃப் ல என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் என்றவன், மேலே செல்ல அடி எடுத்து வைத்தான்.

ராமலிங்கம், பசுபதி நில்லு நீ இந்த கல் யாணத்தை பண்ணிக்க தான் வேணும் இதுல ஏன் கௌரவமும் அடங்கி இருக்கு என்றார். பசுபதி உங்க கௌரவத்துக்காக எல்லாம் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது முடிஞ்சா குந்தவைக்கு கல்யாணம் பண்ணுங்க, என்றவ ன் மேலே ஏறினான்.

ராமலிங்கம்,  அவன் பேச்சைக் கே ட்டவர் அப்படியே நெஞ்சை பிடித் துக் கொண்டு சோபாவில் சாய்ந்து விட்டார். மணி, என்ன ங்க?! என்ன ஆச்சி உங்களுக்கு என்ன பாருங்க.

குந்தவை ஆம்புலன்ஸ்க்கு போன் பண் ணு, அப்பா மயங்கிட்டாரு… அச்சோ! என் னங்க…, என்னாச்சுங்  க கண்ணை திறந்து பாருங்க என அழுதார்.

குந்தவை ஓடி சென்று தண்ணீர் கொண் டு வந்தாள். பசுபதி ராம  லிங்கம் கீழே சா ய்ந்தவுடன் அப்பா என்ன ஆச்சுப்பா எந்திரிங்க என  அவரின் கன்னத்தில் தட்டினான். கண் திறக்கவில்லை தண்ணீரும் தெளித்துப் பார்த்தார்கள், அப்போ தும் கண் திறக்கவில்லை.

பசுபதிக்கு பதட்டம் சுற்றிக் கொண் டது மணி, ஒரு படி மேலே சென்று பசுபதி உன் அப்பாக்கு ஏதாவது ஆச்சுன்னா அடுத்த நிமிஷம் என் ன உசுரோட பார்க்க முடியாது அவ ர் இல்லாத உலகத்துல வாழ்ந்து நா ன் என்ன பண்ண போறேன் என ஓவென அழுதார்.

அதற்குள் ஆம்புலன்ஸ் வந்து விட் டிருந்தது. பசுபதி இராமலிங்கத்தை தூக்கி கொண்டு போய் ஆம்புலன் சில் ஏற்றினான். விரைவாக சிகிச் சை அளிக்கப்பட்டது.

ராமலிங்கத்திற்கு மயில்ட் அட்டாக் வந்திருப்பதாக டாக்டர் கூறியிருந் தார். மணியரசி இதை கேட்டதும், கத்தி கதறி அழுது மயங்கி விட்டா ர். குந்தவை சின்ன பெண் அவளு ம் அழுது கொண்டே இருந்தாள்.
ஒரு வாரம் மருத்துவமனையில் இ ருந்து விட்டு சிகிச்சை பெற்று, பிற கு வீடு திரும் பினார் ராமலிங்கம்

பசுபதி,மனம் உடைந்து போனான். பசுபதி அவன் அறையில் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் விட்டத்தை பார்த்தபடி படுத்துக் கொண்டிருந்தான். சில மணி நேர ங்களுக்கு பிறகு குந்தவை கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள்

குந்தவை,  அண்ணா என அழைத் தாள். பசுபதி,  சொல்லு குட்டி என் றான். குந்தவை, அண்ணா.. அப்  பாக்கு சரியாகிடும்ல அம்மா சரியா சாப்பிடவே மாட்டேங்கிறாங்க, என் கிட்டயும் யாரும் பேச மாட்டேங்கி றாங்க, வீடே மாறிப்போச்சு அண் ணா என அழுதாள்.

பசுபதி எழுந்து அமர்ந்தவன் அதெ ல்லாம் ஒன்னும் ஆகாது குட்டி அ ண்ணா அப்படி எல்லாம் உங்கள விட்டுடு வேணா சொல்லு என்றா ன். குந்தவை இல்லை என தலை யாட்டினாள்.பசுபதி சிரித்தவன் எல்லாம் சரியாகிடும் குட்டி,இப்ப நீ பயப்படாம போய் படு என்றவன் யோசித்து முடிவெடு த்தவனாய் தன் அப்பாவின் பார்க்க சென் றான்.

*********************************

இங்கு ஆதவ் வீட்டில் ஆதவ், அக் கா உனக்கு மாப்பிள்ளை பிடிச்சிரு க்கா என கேட்டான். இது இந்த வார த்தில் மட்டும் 15-வது முறை அவன் கேட்கிறான்.ஏனோ அவன் மனம் இந்த திருமணத்தில் ஒப்பவில்லை மனம் கடலலை போல் ஒரு நிலை யாக இல்லை. வந்தனா ஏன்டா தடி  யா இப்படி கேக்குற ஏன் உனக்கு பிடிக்கலையா கல்யாணத்தை நிறுத்திடவா என கேட்டாள்.

இல்லக்கா வேணா உனக்கு கல்யா ணம் நடந்து  நீ நல்லபடியா வாழ்ந் தா எனக்கு சந்தோஷம்தான் என அவள் தோளில் சாய்ந்தான்.

வந்தனா, இப்பலாம் பெரிய மனுஷ ன் மாதிரி பேசுற டா  இது அம்மா அப்பா ஆசைக்காகத்தான் எனக் கும் நம்ம வீட்டை விட்டு போக மன சே இல்ல தெரியுமா.. உங்க எல்லா ரையும் ரொம்ப மிஸ் பண்ணுவே ன். அதுவும் என் செல்ல தம்பிய ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவே ன் என அவன் தாடையை பிடித்து செல்லம் கொஞ்சினாள்.

ஆதவ் அப்ப அவரை வீட்டோட மா ப்பிள்ளையா வர சொல்லிடலாம் ப்ராப்ளம் சால்வ், உனக்கும் வருத் தம் இருக்காது, எப்படி உன் தம்பி யோட ஐடியா என காலரை தூக்கி  புருவத்தை உயர்த்தி கூறினான்.

வந்தனா, சிரித்தவள்,போடா சேட் டை பிடிச்சவனே, என அவன் தோ ளில் அடித்தாள் அவனும்  சிரித்த வன் வாங்க அக்கா தூங்க போலா ம் என விடைபெற்றனர் இருவரும்

தொடரும்

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

2 thoughts on “சந்தித்த வேளை 6”

  1. Many of these shoes feature fabrics that offer support without compromising on aesthetics.
    shoes combining comfort and utility [url=https://www.flatzshoes.com/uncategorised/shoes-that-balance-comfort-and-versatility]https://flatzshoes.com/uncategorised/shoes-that-balance-comfort-and-versatility/[/url]

Leave a Reply to Vithya.V Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top