ATM Tamil Romantic Novels

மோகவிழியால் எனை தைக்காதே

2. மோகவிழியால் எனை தைக்காதே
 
“இப்பவாவது கல்யாணத்துக்கு சம்மதிச்சய ராசா.. ரொம்ப சந்தோசம் கிருஷ்ணா” என்று மகனை அணைத்துக்கொண்டார் குருமூர்த்தி.
 
“பர்ஸ்ட் உங்க ஆப்ரேசன் நல்லபடியா முடியட்டும் ஐய்யா.. கல்யாணத்தப்பத்தி அப்புறம் யோசிக்கலாம்” என்று கிருஷ்ணா நழுவப் பார்க்க.
 
“கிருஷ்ணா என்கிட்ட நீ தப்பாட்டம் ஆட நினைக்காதய்யா” என்று பக்கத்தில் கைக்கட்டி நின்ற மணியிடம்.. 
 
“மணியா நீ இப்பவே நம்ம ஜோசியருக்கு போன் போட்டு அடுத்த வாரம் வீட்டுக்கு வரச் சொல்லிடு.. அப்படியே தரகருக்கும் போன் போட்டு வரச்சொல்லிடு” என்று மூச்சு விடாமல் பேச..
 
“ஐய்யா நீங்க ஸ்ட்ரைன் பண்ணக் கூடாது” தந்தையின் நெஞ்சை நீவி விட்ட கிருஷ்ணா.. 
“மணி அண்ணா இப்போதைக்கு யாருக்கும் போன் பேசாதீங்க” என்று கட்டளையிட..
 
தந்தை, மகன் இருவரும் மாத்தி மாத்தி சொல்ல..
 
மணியண்ணாவுக்கு தலை சுற்றிக்கொண்டு வந்தது.
 
“மணியா நான் சொல்றது கேளு” என்று நெஞ்சை பிடிக்க.
 
“நர்ஸ் மாத்திரை கொண்டு வாங்க” என்று குரூமூர்த்தி தூங்குவதற்காக மைல்டு டோஸ் மாத்திரையை குருமூர்த்தியின் கையில் கொடுத்தான்.. 
 
“மாத்திரை வேண்டாம்” என்று சிறு பிள்ளை போல அவர் முகத்தை தூக்கி வைக்க.
 
“ஐய்யா” என்று கிருஷ்ணா குரலை உயர்த்த..
 
“கொடு மாத்திரையை” என்று வாயில் போட்டதும் சிறிது நேரத்தில் குருமூர்த்தி தூங்கி விட தந்தையின் நெற்றியில் முத்தம் வைத்து. 
 
“மணி அண்ணா ஐய்யாவ பார்த்துக்கோங்க. எனக்கு பேசண்ட் வெயிட் பண்ணுறாங்க.. நான் மதியம் வந்து பார்க்குறேன்” என கிளம்பிவிட்டான் அவனது அறைக்கு.
 
கலைவாணி காலையில் எழும்புவதற்குள் முன்பே தங்கமீனா எழுந்து குளித்து முடித்து வாசல் தெளித்து கோலமிட்டு ஹாலிலிருந்த சாமிபடத்துக்கு பூவைத்து முடித்து காலை சமையலை கவனிக்கத்துவங்கினாள்.. 
 
தங்கமீனாவுக்கு சிறுவயதிலேயே சமையலை கத்துக்கொடுத்திருந்தார் கலைவாணி.. கலைவாணிக்கு சமைப்பதை விட தங்கமீனா சமைப்பதில் தான் ருசி அதிகம் என்று பிரபு சப்புக் கொட்டி சாப்பிடுவான்.
 
குடிகாரன் கணவன் இறந்து விட்டானென்று கலைவாணி கவலைப்படவில்லை.. இனி இரண்டு பிள்ளைகளையும் கரை சேர்க்க வேண்டுமே என்ற கவலை அவரது மனதை வாள் கொண்டு அறுப்பது போலிருந்தது.. இரவெல்லாம் இருபிள்ளைகளை பற்றி நினைத்து வெம்பிக்கொண்டிருந்தவர் அதிகாலையில்தான் உறங்கினார்.
 
சட்டென விழித்துப் பார்க்க மணி ஏழாகியிருந்தது.. பிரபு கூட எழுந்து குளித்து காலேஜ் கிளம்பிக்கொண்டிருந்தான்.
கொண்டையை போட்டு எழுந்த கலைவாணி பாயை சுருட்டி ஓரமாக வைத்துவிட்டு குளியலறை சென்று முகம் கழுவி வந்து சமையல்கட்டை எட்டிப்பார்க்க தங்கமீனா சமையலை முடித்துவிட்டாள்..
 
“என்ன கண்ணு அம்மாவ எழுப்பி இருக்கலாம்ல.. நீ ஒருத்தியே சமையல் பண்ணியா” என்று மகள் பக்கம் நின்று பதுவுசாக தோளை தொட.
 
“அம்மா நீ அசதியா தூங்கிட்டிருந்த உன்னை எழுப்ப மனசில்ல அதான் நான் சமைச்சிட்டேன்” சமைத்ததை எடுத்து வந்து ஹாலில் வைத்து விட்டு 
 
“பிரபு சாப்பிட வாடா” என்று தம்பியை அழைக்க
 
“இதோ வரேன்க்கா” என்று காலேஜ் கிளம்பி வந்தவனைப் பார்க்க.. பிரபு போட்டிருந்த சட்டை கசங்கியிருப்பதைக் கண்டு அவள் மனம் பதைபதைத்தது..
 
இத்தனைக்கும் பிரபு சட்டையை நீவி நீவித்தான் போட்டான்.. விலை மலிவு சட்டை சுருங்கிப்போனது.. தங்கமீனாவின் பார்வையின் அர்த்தம் புரிந்த பிரபு “அக்கா நேரமாச்சு சாப்பாடு போடு” என சட்டையை இழுத்து விட்டு சாப்பிட உட்கார்ந்தான்.
 
மகன் காலேஜ் போது தான் முன்னே நிற்க வேண்டாமென கலைவாணி சமையல்கட்டில் பாத்திரங்களை மெதுவாக கழுவிக்கொண்டிருந்தார்.
 
“ம்மா.. இங்க வாயேன்”
 
“என்ன மீனு நான் பாத்திரம் கழுவி வைத்துட்டு வரேன்”
 
“ஒரு நிமிஷம் வாம்மா” என்று சமையல்கட்டுக்கே சென்று கலைவாணியை அழைத்து வந்தாள்.
 
“ம்மா.. நீ பிரபுக்கு சாப்பாடு போடும்மா”
 
கலைவாணி தயங்கி நிற்க.
 
“என்னாச்சும்மா ஏன் அப்படியே சிலை போல நிற்குற” என தாயின் தோளைப் பற்ற..
 
“கண்ணு என் கையில வளையல் போடாமயிருக்கேன்.. ஆம்பிள பிள்ளைகளுக்கு சாப்பாடு போடும்போது கையில வளையல் இல்லாம போடக்கூடாது” என்று கூறும் போது அவர் கண்களில் சிறுதுளி கண்ணீர் எட்டிப்பார்த்தது.
 
பிரபு எழுந்து தாயின் பக்கம் வந்து அவரை சேரில் உட்கார வைத்து “ம்மா எனக்கு சாப்பாடு போட என்ன சம்ரதாயம் வேண்டி கிடக்கு” என்று கலைவாணியின் கண்ணீரை துடைத்துவிட..
 
தங்கமீனா.. கலைவாணி கழட்டி வைத்திருந்த வளையல்களை எடுத்து அவர் கைகளில் போட..
 
“மீனுக்குட்டி என்ன பண்ணுற.. உன்னோட அப்பா என்னதான் குடிகாரனா இருந்தாலும்.. அவர்  வெறுப்பு இருந்தாலும் அவர் இறந்ததும் வளையல்கள் போட கூடாதும்மா” என்று விசும்ப..
 
“ம்மா.. என்ன பேசுறீங்க.. நீங்க அப்பாவ கல்யாணம் பண்ணின பிறகுதானா வளையல் போட்டீங்க.. சின்ன வயசுலயிருந்து கையில வளையல் போட்டீங்கதான.. அதனால வளையல் போட்டா தப்பு இல்ல.. ஊர்ல ஏதாவது பேசுவாங்கனு நீ எதையும் மனசுல போட்டு குழப்பிக்காதீங்க.. நாம நமக்காக வாழ்வோம்” என கலைவாணியின் கைகளில் வளையலை போட்டுவிட்டு
 
“இப்ப தம்பிக்கு சாப்பாடு போடுங்க” என்று மென்நகையுடன் கூறியவள்.. 
 
“பிரபு உன் சட்டையை கழட்டித்தா”
 
“ஏன்க்கா?”
 
“கொடுடா” என்று போலியாக கோவித்துக்கொள்ள..
 
“அக்கா சட்டை கசங்கல” என சட்டையை நீவிக்கொள்ள..
 
“இப்ப கழட்டி கொடுக்க போறீயா? இல்லியா” என்று அதட்டல் போட.
 
“டேய் தங்கமீனா உன்னை அடிச்சாலும் அடிச்சுபுடுவா போல கழட்டி கொடு என்ன பண்றா பார்ப்போம்”
 
ஏனென்றால் அவர்கள் வீட்டில் அயன் பாக்ஸ் ரிப்பேர் ஆகி ஒருவாரம் ஆகியது.. இப்போ தங்கமீனா என்ன செய்யுறா என்று இருவரும் ஆவலாகப் பார்க்க.
 
பிரபு சட்டையை தங்கமீனாவிடம் கழட்டிக்கொடுக்க
சட்டையை வாங்கியவள் அயர் பண்ணும் டேபிளில் போட்டு சமையல்கட்டுக்கு போனவள் கையில் சுடுதண்ணீரைக் கொண்டு சுருக்கம் உள்ள இடத்தில் தண்ணீரை தெளித்து பின் சொம்பு நிறைய சுடுதண்ணீர் நிரப்பி மெதுவாக சுருக்கம் உள்ள இடத்தில் தேய்க்க.. சுருக்கம் போனது.. “சுருக்கம் போயிருச்சு பிரபு” என்று சந்தோசத்தில் பிரபுவின் பக்கம் திரும்ப..
 
பிரபு சாப்பிட்டு முடித்தவன் அவளது அறிவுக் கூர்மையை எண்ணி அவளை பாராட்டுவது போல “ஆஹா.. என் அக்காவுக்கு உடம்பெல்லாம் மூளைதான்” என்று தங்கமீனா கையிலிருந்து சட்டையை வாங்கி போட்டுக்கொண்டான்.
 
அப்போது வீட்டுக்குள் நுழைந்த அருள்.. கலைவாணியின் தோற்றம் கண்டு “அக்கா” என்று ஓடி அணைத்துக்கொண்டு கண்ணீர் விட்டான்..
 
அருள்.. கலைவாணியின் சித்தப்பா மகன்.. டிராவல்ஸ் வைத்திருக்கிறான். கலைவாணியின் கணவன் இறந்த சமயம் அவன் வெளியூர் வாடகைக்கு சென்றுவிட்டான்.. இப்போது தான் விசயம் தெரிந்தவுடன் பறந்து வந்து விட்டான்.
 
“மாமா அம்மா இப்பத்தான் அழுகையை நிறுத்துச்சு நீ வந்து மறுபடியும் அழுக வைக்காத” என்று பிரபு, அருள் தோளை தொட்டான்.
 
கண்ணை தொடைத்து எழுந்தவன் தங்கமீனாவை ஒரு பார்வை பார்த்து புன்முறுவலுடன் “எப்படி தங்கா இருக்க” என்று தங்கமீனாவிடம் கேட்க.
 
“நான் நல்லாயிருக்கேன் மாமா” என்று தலைகுனிந்தாள்..
 
அருளுக்கும், தங்கமீனாவுக்கும் கல்யாணம் பேசி வைத்திருந்தனர்.
 
தங்கமீனாவின் அப்பா இறந்ததால் இப்போதைக்கு பண்ணமுடியாமல் போனது.
 
தங்கமீனாவுக்கும், அருளை கண்டால் மாமா என்ற முறையில் பிடிக்கும்.
 
அந்த இடத்தில் நிலவும் மௌனத்தை உடைக்கும் பொருட்டு “மாமா என்னை காலேஜ்ல ட்ராப் பண்ணுறீங்களா” என்று பிரபு அருளிடம் கேட்க.
 
“இதோ போலாம்டா” என்று கூறிய அருள் பார்வை இன்னும் தங்கமீனாவை விட்டு அகலவில்லை.
 
“மாமா நான் கிளம்பட்டுமா.. நீங்க இப்போதைக்கு வரமாட்டிங்க போல” என பேக்கை எடுத்துக் கொண்டு வெளியே போக.
 
“இருடா வரேன்” என்று கூறிய அருள்
 
அமைதியாக  நின்ற கலைவாணியிடம் “வரேன்க்கா” என்று தலையசைத்து
 
தலை குனிந்தேயிருந்த தங்க மீனா நிமிர்ந்து   பார்க்க  “வரேன் புள்ள.. உனக்கு புது சுடிதார் வாங்கியாத்திருக்கேன்.. நைட் கொண்டு வரேன்” என்று கண்ணை சிமிட்டி மீனாவிடம் கூற அவளோ  மீண்டும்  தலை குனிந்து கொண்டாள்.
 
பிரபுவை காலேஜ்லில் விட சென்றான் அருள்.
 
கலைவாணி குளித்து விட்டு வந்தவர் தனது கீ-பேட் போனில் சாம்ராட்க்கு போன் போட.. முதலில் அவர் போன் எடுக்கவில்லை..
 
மீண்டும் போன் போட ஹலோ.. “சொல்லு கலைவாணி உன் வீட்டுக்காரர் இறந்துட்டாருன்னு கேள்விப்பட்டேன்” அவர் வருத்தப்பட்டு கேட்க
 
“ஆமாய்யா குடிச்சு குடிச்சு குடல் வெந்து போச்சு.. எங்களை தனியா தவிக்கவிட்டு அவர் போயாச்சு?” என்று விசும்ப..
 
“விடும்மா நாங்கெல்லாம் இருக்கோம்.. உன்னை கவனிக்காம இருப்போமா.. உன் பொண்ண இன்னிக்கு ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்திடு..அப்ப நான் போனை வைக்கட்டுமா” என்றிட..
 
“ஐய்யா நான் இன்னும் பதினைந்து நாளு வெளியில வரக்கூடாது”
 
“என்னம்மா நீயி.. இன்னும் பத்தாம்பசலி போல பேசுற”
 
“சரி உன் விருப்பம்.. நம்ம ஹாஸ்பிட்டல் அட்ரஸ் உன்பொண்ணுகிட்ட எழுதிக்கொடுத்துவிடு.. அவ தனியா வந்திடுவால்ல”
 
“என் பொண்ண தைரியமா வளர்த்திருக்கேன் ஐய்யா.. அவள  ஆட்டோ பிடிச்சு அனுப்பி வைக்கிறேன்”
 
“சரிமா நான் போனை வைக்குறேன்” என்று அணைத்துவிட்டார்.
 
கலைவாணிக்கு மனது நிறைந்து போனது.. தன் பிள்ளைக்கும் வேலை கிடைத்துவிட்டது.. தன் கஷ்டம் எல்லாம் தீர்ந்து போகும் என்று சந்தோசம் கொண்டார்.
 
கடைக்கு சென்றிருந்த தங்கமீனா வீட்டுக்குள் வர கலைவாணியின் முகத்தில் தெரிந்த சந்தோசத்தைக் கண்டு “என்னம்மா.. உன் தம்பி வந்துட்டாருன்னு உன் முகத்துல பொலிவு வந்துருச்சு”
 
“ஆமாடி என் தம்பி வந்ததுல சந்தோசம் தான்.. ஆனா அதை விட உனக்கு வேலை கிடைச்சிடுச்சுங்கிற ஆனந்தம்டி எனக்கு” என்று சாம்ராட்டிடம் பேசியதைக் கூற.
 
தங்கமீனாவிற்கு படித்தவுடன் தனக்கு வேலை கிடைச்சிருச்சு.. என்று மகிழ்ச்சியடைந்தாள்.
 
“ம்மா.. இன்னிக்கே என்ன வரச்சொல்லிட்டாங்களா” என்று மீன் விழிகளை விரித்து ஆச்சரியத்துடன் கேட்க.
 
“ஆமாடி போய் வேற நல்ல டிரஸ் போட்டு கிளம்பு” என்று மகளை அறைக்கு அழைத்துச் சென்று அவளிடமிருக்கும் புது துணியை எடுத்து போடச் சொல்லி கூட்டிட்டு வந்தாள்.
 
ஹாலுக்கு வர அருள்.. பிரபுவை காலேஜில் விட்டு வந்து நின்றான்..
 
“தம்பி நம்ம மீனுகுட்டிக்கு ஹாஸ்பிட்டல வேலை கிடைச்சிருச்சு..  அதான் அவ கிளம்பியிருக்கா.. நல்லவேளை நீ வந்துட்ட.. இல்லைனா ஆட்டோலதான் புள்ளைய அனுப்பியிருப்பேன்.. அவ திரும்பி வர வரைக்கும் மடியில நெருப்பை கட்டியிருக்கணும்” என்று அவர் புலம்ப.
 
“ம்மா இனி நான் தினம் தனியா தான் வேலைக்குப்போகணும்.. எதுக்கு கவலைப்படுற.. நான் பஸ் பிடிச்சு போய்க்குவேன்” 
 
“ஏன் புள்ள இந்த மாமா கூட வரமாட்டியா” என்று அருள் ஆயாசமாக கேட்க.
 
“இல்ல மாமா ஊருக்குள்ள நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க” என்று பெரிய மனுசி போல பேச..
 
“எவன் பேசுவான்” என்று சட்டையை மடக்கிக்கொண்டு சீறி வர.
 
“இந்தா இந்த கோவம் தான் உனக்கு எதிரி மாமா” என்று அருளை முறைத்து  பார்த்து விட்டு
 
“ம்மா நான் கிளம்புறேன்” என்று வெளியே வர.
 
“தங்கமீனாவை தாண்டி வந்தவன் அவளுக்கு முன்னே நின்று என்கூட நீ பைக்குல வர.. எவன் பேசுவான்னு நான் பார்க்குறேன்”பைக்கை ஸ்டார்ட் செய்து உர் உர்ரென்று முறுக்கினான்.
 
“மீனுகுட்டி இதென்ன விளையாட்டு அம்மா சொல்றேன்.. நீ.. மாமா கூட போ” என்று மகளை சிறு அதட்டல போட.
 
வேறு வழியில்லாமல் பைக்கில் ஏறினாள் தங்கமீனா.
 
பைக்கை மெதுவாக ஓட்டியவன்.. மிரரில் தங்கமீனாவை சைட் அடித்துக்கொண்டே வண்டியை ஓட்டினான்.
 
தங்கமீனா பைக்கின் கம்பியை இறுகப்பிடித்து அருள் மேல் மோதாமல் உட்கார்ந்தாள்.
 
“ஏன்புள்ள நான் உன்ன கட்டிக்க போறவன் தான.. என் மேல உன் கைப்பட்டா ஒண்ணும் தப்பு ஆகாது” என்று மீசையை முறுக்கி அவளிடம் வம்பு பேச.
 
“மாமா கல்யாணத்துக்கு முன்னே நாம ரெண்டு பேரும் ஒட்டி உரசிக்கறது எனக்கு பிடிக்கல” என்று முகம் சுளித்துப் பேச
 
“சரிபுள்ள உன் விருப்பம் போல இரு.. கல்யாணத்துக்கப்புறம் வச்சுக்கிறேன்” என்று விஷமாக நகைத்தான்.
 
அதற்குள் ஹாஸ்பிட்டல் வந்து விட.. பைக்கிலிருந்து இறங்கியவள் “மாமா நான் போய்ட்டு வரேன்” என்று திரும்ப.
 
“வேலை முடிச்சதும் எனக்கு போன் போடு நான் வந்து கூட்டிட்டு போறேன்” என்றதும்.
 
“இல்ல மாமா நான் பஸ்ல வந்துக்குறேன்” என்று ஷாலின் நுனியை திருக.
 
“இங்க பாரு புள்ள.. அவள் தோள் பற்றி  நீ போன் பண்ணுற” என தங்கமீனாவை செல்லமாக மிரட்டிச்சென்றான்.
 
“இந்த மாமாக்கு கிறுக்கு பிடிச்சிருக்கு” என்று தோளை நீவிவிட்டு அவள் வாழ்க்கை பயணம் இனி மாறப்போவது தெரியாமல் ஹாஸ்பிட்டலுக்குள் உள்ளே அடி எடுத்து வைத்தாள் தங்கமீனா.
 
ரிசப்சன் சென்று சாம்ராட் சார பார்க்கணும்.. என்று கூற
அவர்கள் சாம்ராட் இருந்த அறைக்கு போகச் சொல்ல.. ஹாஸ்பிட்டலின் பிரமாண்டத்தை சுற்றிச் சுற்றி பார்த்துக்கொண்டே சென்றவள் ரவுண்ட்ஸ் பார்த்து வந்த உதய கிருஷ்ணா மீது மோதிவிட.. ஏதோ இரும்பின் மீது மோதிய போலிருக்க.. மெல்ல நிமிர்ந்து அவளது இமைகளை மயில் தோகை விரிப்பது போல திறந்து பார்த்தாள்.
 
உதய கிருஷ்ணா.. அவளை சூரியன் போல எரிக்கும் பார்வை பார்த்திருந்தான்.
 
தங்கமீனாவை  சூரியன் போல எரிக்கும் பார்வை பார்த்திருந்தான் உதய கிருஷ்ணா.. 
 
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பிரண்ட்ஸ்.. இந்த வருடம் அனைவரும் நினைத்தது நடக்கட்டும்
 
பிரண்ட்ஸ் உங்க லைக்ஸ் தான் எனக்கு பூஸ்ட்
 
7 thoughts on “மோகவிழியால் எனை தைக்காதே”

Leave a Reply to JfBSfQdIUFSzKMvZM Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top