ATM Tamil Romantic Novels

மோகவிழியால் எனை தைக்காதே

4. மோகவிழியால் எனை தைக்காதே
 
தங்கமீனாவை பார்த்ததிலிருந்து கிருஷ்ணாவுக்குள் ஏதோ ஒரு வித காதல் மோகம் தோன்றியதோ என்னவோ.. பெண்களை வெறுப்பவன் தங்கமீனாவை பார்த்ததும் அவன் மனம் பித்தாய் தடுமாறிப்போனது என்னவோ உண்மைதான்.. 
 
அதன் தாக்கம் தான் இப்போது பெண்ணவளின் இதழில் ரேகையை அழிக்கும் அளவிற்கு முத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறான் அந்த முரட்டு மருத்துவன் உதயகிருஷ்ணா.. 
 
எந்தப் பெண்ணை பார்த்தாலும் தோன்றாத உணர்வு தங்கமீனாவை பார்த்ததும் அவனுக்குள் காதல் காற்றாட்டு வெள்ளமாய் கரைபுரைண்டோடியது.. இந்த சமயம் அவன் தன்னை மறந்து முத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறான்.
 
தங்கமீனாவிற்கு அவன் முத்தம் கொடுப்பது அவளுக்குள் தீ சுவாலை எரிவது போலிருந்தது.. “ம்ம்..ம்ம்” என்று இதழுக்குள் முணங்க ஆரம்பித்து அவன் மார்பில் கையை வைத்து குத்த.. சிக்ஸ் பேக் வைத்திருப்பவனுக்கு அவள் அடி சிறு குழந்தை அடிப்பது போல உணர்வுதான் ஏற்பட்டது..
 
மூச்சு விட முடியாமல் பெண்ணவள் அவன் மார்பில் நகத்தால் கோடு கிழிக்க.. அப்போதுதான் தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.. என்ற உணர்வு ஆண்மகனுக்கு உணர்த்த சட்டென்று அவளை விட்டுப் பிரிந்து நிற்க அவள் இதழோ தடித்து வீங்கி சிவந்திருந்தது.
 
பெண்ணவளின் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.. ஷால் கொண்டு கண்ணீரை துடைத்துக்கொண்டு மதுரையை எரித்த கண்ணகிபோல கிருஷ்ணாவை, அவள் முறைத்துப் பார்க்க.
 
அவனோ என்மீது எந்த தவறும் இல்லை.. ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் முத்தம் கொடுத்துவிட்டோம் அவளிடம் மன்னிப்பு கேட்கலாம்.. என்று எண்ணாமல் கைக்கட்டி அவளை ஏளனமாக வேடிக்கை பார்ப்பது போல பார்த்திருந்தான்.
 
அவன் தவறு செய்து விட்டு ஒரு சாரி கூட கேட்காமல் நிற்பதைக் கண்டு வெகுண்டெழுந்தவள்.. ஏன் சார் உங்ககிட்ட வேலைகேட்டு வந்த பொண்ணுக்கு இப்படிதான் முத்தம் கொடுப்பீங்களா.. உங்க அக்கா தங்கைக்கு இப்படி ஒருத்தன் முத்தம் கொடுத்தா சும்மா இருப்பீங்களா.. என்று கிருஷ்ணாவிடம் பட்டாசாய் வெடித்து பேசினாள்.
 
கதவு திறந்திருப்பதைப் பார்த்தவன் யாராவது பார்த்தால் தப்பாகி போகிவிடும் என்று எண்ணியவன் கதவை லாக் செய்துவிட்டு  அவளைப் பார்த்து “வாய மூடு” என்று அவனும், அவளுக்கு சளைத்தவன் இல்லை என்று தங்கமீனாவை அதட்டிப்  சிறுத்தையை  போல சீறினான்.
 
“தப்பு பண்ணிட்டு என்னையவே மிரட்டுறீங்க.. நாங்க ஏழைங்கன்னு என்னை என்ன வேணா பண்ண நினைக்காதீங்க.. உங்க மிரட்டலுக்கு நான் பயப்படமாட்டேன்.. இப்ப நடந்ததை நான் வெளியே போய் உதய கிருஷ்ணா டாக்டர் பொறுக்கி போல எனகிட்ட நடந்துகிட்டாருன்னு சொன்னேன் வைங்க உங்க ஹாஸ்பிட்டலுக்கு சீல் வச்சிடுவாங்க” என்று அவன் முன்னே விரலை நீட்டி பேசி எரியும் விளக்கில் எண்ணையை ஊற்றியது போல அவன் கோபத்தை தூண்டினாள்.
 
அவன் முத்தம் கொடுத்தது தவறுதான்.. ஆனால் கிருஷ்ணாவோ பெரும் ஈகோ பிடித்தவன்.. தான் நினைத்தது நடக்கணும்.. என்று எண்ணுபவன் அதுதான் முத்தம் கொடுக்கணும்னு தோணியதும் கொடுத்துவிட்டான். கதவை லாக் செய்துவிட்டு அவளிடம் சாரி கேட்கலாம் என்றிருந்தவனை அவனை வார்த்தையால் ஊசி குத்துவது போல பேச.. அவனுக்கு கோபம் தலைக்கேற.. அவளை இழுத்து அவனது அறையில் பெரியதாய் போடப்பட்டிருந்த சோபாவில் தள்ளி அவள்மேல் படர்ந்து.. “பொறுக்கி டாக்டர் எனக்கு முத்தம் கொடுத்துட்டாருன்னு போய் சொல்லுடி” என்று அவள் இதழை ஆக்ரோசமாய் ஆக்கிரமித்தான்.
 
அவளோ திமிறத் திமிற அவன் முத்த வேகம் அதிகரித்தது.. அவள் இதழை இறுக்கமாக வைக்க அவன் பொல்லா நாவு கொண்டு பூவையவளின் பூ இதழை திறந்து பெண்ணவளின் நாவோடு முத்த போர் புரிந்தான்.. அவனது கைகள் அவளது இளமை பிரதேசத்தில் தொடப் போக.. தன் பலமெல்லாம் திரட்டி அவன் மோகம் கிளர்ந்திருந்த சமயம் அவனை தள்ளிவிட்டு எழுந்து நின்று “அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டு போயா நீயுமாச்சு, உன் வேலையுமாச்சு.. என்று வீராப்பாக பேசி பைலை எடுத்துக்கொண்டு உன்னைப் பத்தி போலீஸ் ஸ்டேசன்ல கம்ப்ளைண்ட் கொடுக்க போறேன்” என்று கதவை திறக்கப் போக.. அவன் ரிமோட் கொண்டு கதவை லாக் செய்து..
 
“ஏய் உன்னை நான் சின்னப் பொண்ணுன்னு சாதாரணமா எடை போட்டேன்.. பரவால எனக்கு ஈக்குவலா சண்டை போடுற.. என்னை எதிர்க்குற தைரியம் உனக்கு இருக்கு சோ.. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்.. எங்கப்பாவும் என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி போர்ஸ் பண்றாரு.. சோ அந்தப் பொண்ணு நீதான்.. உங்க வீட்ல சாம்ராட் சார் வந்து பேசுவாரு” என்று அவளருகே போக.
 
யோவ்.. யோவ்.. பொறுக்கி டாக்டர் என் பக்கம் வந்த” என்று பேக்கிலிருந்த தற்காப்புக்கு வைத்திருந்த குட்டிக் கத்தியை எடுத்து கிருஷ்ணாவை குத்துவது போல வைத்து.. உன்னை போல பொறுக்கியை நான் கல்யாணம் பண்ண மாட்டேன்.. இங்க வேலைக்கும் வரமாட்டேன்” என்று சண்டைக்காரியாய் நிற்பவளின் துணிச்சலைக் கண்டு வியந்து போனான் அந்த நெட்டைகொக்கு மருத்துவன்.
 
ஆனால் அதை சிறிதும் வெளிக்காட்டாமல்.. “நீ ரொம்ப அதிகமா பேசறடி.. நீ எப்படியும் என்கிட்ட வந்து வேலை கொடுங்கன்னு கேட்கத்தான் போற.. நான் உன்னை கல்யாணம் பண்ணாம விட மாட்டேன்.. அடுத்தவாரம் உன் கழுத்துல நான் தாலி கட்டியே தீருவேன்டி” என்று அவளை இறுக அணைத்துக்கொண்டான்..
 
“டேய் விடுடா பொறுக்கி.. நெட்டை கொக்கு” என்று இப்போது சத்தம் போட ஆரம்பித்தாள்.. கிருஷ்ணாவுக்கு தான் இப்படி ஏன் அவளிடம் நடந்துக்கொள்கிறேன் என்று அவனுக்கு தெரியவில்லை.. 
 
  தங்கமீனாவை பார்த்ததிலிருந்து வம்பு செய்ய வேண்டுமென அவன் மீசை துடிக்கிறது.. அவள் இளமை கோலத்தை ஆசையாய் வருட தோன்றியது.. விட்டால் இப்பவே அவள் கழுத்தில் தாலிகட்டி அவளிடம் தன் பிரம்மச்சர்யத்தை முடித்து விடலாம்.. என்று அவனுக்குள் எண்ணம் பீறிட்டெழுந்தது..
 
அவனது இறுகிய அணைப்புக்குள் புறாக்குஞ்சு போல நசுங்கி கிடந்தவளுக்கு விடுதலையளிக்க.. ஆப்ரேசனுக்கு நேரமானது.. என்று சாம்ராட் ..கிருஷ்ணாவின் போனுக்கு அழைக்க.. தங்கமீனாவுக்கு விடுதலை கிடைத்தது.. கிருஷ்ணா அவளை விட்டதும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ரிமோட் எடுத்து கதவை திறந்து வெளியே ஓடினாள் தங்கமீனா.
 
ஓடும் அவளை பார்த்திருந்தவன் இதழ் வளைத்து சிரித்து.. “உன்னை விடமாட்டேன் குயிலு எனக்கு, உன்னை ரொம்ப பிடிச்சிருச்சுடி உன்னை அடையாம விடமாட்டேன் கோல்ட்பிஷ்” என்று அவளுக்கு செல்லப்பெயர் கூட வைத்துவிட்டான்.. போன் மீண்டும் மீண்டும் அடித்துக்கொண்டிருக்க போன் ஆன் செய்து “சொல்லுங்க அங்கிள்” என்றான்.
 
“கிருஷ்ணா ஆப்ரேசனுக்கு டைம் ஆச்சுப்பா”
 
“ஹாங்.. இதோ வரேன் டாக்டர்” என்று போனை அணைத்தவன் இரண்டே நிமிடங்களில் ஆப்ரேசன் தியேட்டருக்குள் இருந்தான்.. 
 
ஹாஸ்பிட்டலை விட்டு வெளியே வந்த தங்கமீனாவிற்கு கால்கள் நடக்கவே முடியவில்லை.. என்னதான் தைரியமான பெண்ணாயிருந்தாலும் ஒரு ஆண்மகன் வேலை கேட்டுப் போன இடத்தில் அத்துமீறி நடந்தால் யாருக்கும் பதட்டம் இருக்குமல்லவா.. சற்று நடந்ததையே எண்ணிக்கொண்டு வந்தவள்.. 
 
இனி இந்த ஹாஸ்பிட்டல் பக்கமே தலைவைத்து படுக்கக் கூடாது.. என்று எண்ணி பஸ்ஸில் ஏறினாள்.. ஆனால் அடுத்த நாளே தங்கமீனா, கிருஷ்ணாவின் மருத்துவமனைக்கு வேலைக்கு போகவேண்டிய கட்டாயம் இருக்கும் என்பது அவளுக்கு தெரியவில்லை.
 
பஸ்ஸை விட்டு இறங்கி வீட்டிற்குள் செல்ல.. கலைவாணி வீட்டின் பின்புறத்தில் துணிகளை துவைத்துக்கொண்டிருந்தார்..
 
குளியலறைக்குள் சென்று முகத்தில் தண்ணீரை அடித்து அடித்து முகம் கழுவினால்… அவன் முத்தம் கொடுத்த இடமெல்லாம் தண்ணீர் பட்டு எரிய ஆரம்பித்தது அவளுக்கு.. ஸ்ஸ் என்று முணங்கிக்கொண்டு நெட்டக்கொக்கு உன்ன என்னை பண்ணுறேன் பாருடா.. என்று அவனை கரித்துக்கொண்டவள்..
 
 குளியலறையிலிருந்து வெளியே வந்து உதட்டில் ஆயிட்மெண்ட் போட்டு கட்டிலில் கண்மூடி படுத்துக்கொண்டாள்.. ஆனால் அவளுக்கு தூக்கம் தூரப்போனது.. 
 
கலைவாணி துவைத்து முடித்து வீட்டுக்குள் வர.. தங்கமீனாவின் செருப்பு இருப்பதைப் பார்த்தவர் “மீனுக் குட்டி வந்துட்டியா கண்ணு” என்று அவள் அறைக் கதவை திறந்து உள்ளே சென்றார்.. 
 
தங்கமீனா உறங்கியது போல கண்ணைமூடி பெட்சிட்டால் முகம் பாதி மூடி படுத்துக்கொண்டாள்.
 
“மீனு.. மீனு” என்று அவள் பக்கத்தில் உட்கார்ந்து அவளைத் தொடப் போக.. 
 
எங்கே உதடு வீங்கியிருந்தது கண்டு அம்மா வருத்தப்படுவாங்க.. என்று கவலைகொண்ட தங்கமீனா போர்வையை போர்த்தியபடியே “ம்மா ரொம்ப டயர்டா இருக்கு நான் கொஞ்ச நேரம் தூங்குறேனே” என்று மெல்ல கண்ணை திறந்து பேச.
 
“என்னடி வேலைக்கு போன இடத்துல ஏதாச்சும் சொல்லிட்டாங்களா என்ன” என்று தாய்மனம் பதற..
 
“இல்லம்மா வெயில்ல வந்தேன்ல அதான் கொஞ்சம் தலைவலிக்குது தூங்கி எழுந்தா சரியாப்போகும்” என்று போர்வையை போர்த்திக்கொண்டாள்.
 
“சரி கண்ணு நீ தூங்கு நான் மதியம் உனக்கு சாப்பிட சாதம் வைக்க போறேன்” என்று கிளம்பிவிட.
 
“அப்பாடா” என்று மூச்சு விட்டுக்கொண்டவள் உண்மையில் தலைவலிக்க ஆரம்பிக்க.. நாம அம்மாகிட்ட நான் அந்த ஹாஸ்பிட்டலுக்கு வேலைக்குப் போகல.. வேற ஏதாவது ஹாஸ்பிட்டல்ல வேலை பார்க்குறேன்.. என்று சொல்லிடணும்.. என்று எண்ணி  கண்ணை மூடி படுத்துக்கொண்டாள்.. ஆனால் அதற்கு கிருஷ்ணா விடமாட்டான்… என்று தங்கமீனா அறியவில்லை.
 
ஆப்ரேசனை முடித்து வெளியே வந்த கிருஷ்ணா தந்தையை பார்க்க போக.. “கிருஷ்ணா நில்லுப்பா நானும் அப்பாவ பார்க்க வரேன்” என்று அவன் முன்பு வந்து நின்றார் சாம்ராட்.
 
“வாங்க அங்கிள் நானும் உங்ககிட்ட பேசணும்னு இருந்தேன் பேசிட்டே போகலாம்” என்று அவன் நடக்க ஆரம்பிக்க அவன் வேகத்துக்கு நடக்க முடியாமல் ஓடினார் சாம்ராட்.
 
“அங்கிள் இன்னிக்கு காலையில ஒரு பொண்ணு வேலை கேட்டு வந்துச்சே அந்த பொண்ண நாளையலிருந்து வேலைக்கு வரச்சொல்லிடுங்க.. அண்ட் அந்த பொண்ண நான் கல்யாணம் பண்ணலாம்னு நினைக்குறேன்.. அப்பாவ பார்த்துக்க ஒரு ஆள் வேண்டுமே அதுவும் ஒரு நர்ஸா எனக்கு ஒரேகல்லுல ரெண்டு மாங்கா அடிச்சது போலிருக்கும்” என்று தோளை குலுக்கி கேஷுவலாக கூற. அதிர்ந்துவிட்டார் சாம்ராட்.
 
சுவாதி கிருஷ்ணாவை விரும்பவது அவருக்கு மறைமுகமாக தெரியும்.. அவளை எம்.டி படிக்க வைத்து கிருஷ்ணாவை மருமகனாக ஆக்க ஆசைப்பட்டார்.. இப்போது இப்படியொரு குண்டை போடுவான் என்று அவர் நினைக்கவில்லை.. அவர் நடை தடைபோட
 
“அங்கிள் என்னாச்சு ஏன் நின்னுட்டீங்க.. நீங்க அப்பாகிட்ட இந்த விசயத்தப்பத்தி பேசணும்.. அண்ட் அந்த பொண்ணு வீட்ல பேசி சம்மதம் வாங்கணும்” என்று ஆர்டர் போடுவது போல சொல்ல..
 
கிருஷ்ணா என்ன பேசினாலும் அதற்கு தலையாட்டுபவர் இன்றும் அவன் பேசியதற்கு தானாக தலையாடியது.
 
“தேங்க்ஸ்” என்று குருமூர்த்தியின் இருந்த அறைக்குள் செல்ல.. அங்கே அவர் மாத்திரை சாப்பிட அடம்பிடித்துக்கொண்டிருந்தார்.
 
கிருஷ்ணாவை பார்த்ததும் இன்னும் முறுக்கிக்கொண்டார்.. மணி மாத்திரையை கையில் வைத்துக்கொண்டிருந்தார்.
 
“மணியண்ணா ஐய்யா சாப்பிட்டாரா” என்று தந்தையை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு கேட்க
 
“ம்ம் சாப்பிட்டாரு தம்பி.. ஆனா மாத்திரை சாப்பிடலை.. நீங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கணும்னு அடம்பிடிக்கிறார்” என்றிட
 
“ஐய்யா நான் கல்யாணம் பண்ணிக்குறேன்” என்று மகன் கூறுவதை கேட்ட குருமூர்த்தியின் கண்களில் ஒளி தோன்றியது. பின்னே இத்தனை நாளாய் கல்யாணம் வேண்டாம் என்று பிடிவாதம் பிடித்தவன் இன்று கல்யாணத்துக்கு சரியென்று சொன்னதும் திக்குமுக்காடிப்போனார் குருமூர்த்தி..
 
“என்ன தம்பி நான் ஆப்ரேசன் பண்ணிக்கமாட்டேனு பொய் சொல்றீயா” என்று மகன் மீது நம்பிக்கையில்லாமல் சந்தேகக் கண் கொண்டு கேட்க.
 
“குருமூர்த்தி சார் உங்க பையன் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னது உண்மைதான்.. பொண்ணு எனக்கு வேண்டப்பட்ட பொண்ணுதான்” என்று உள்ளுக்கு தன்மகளின் காதல் கருகியதை மறைத்துக்கொண்டு கிருஷ்ணாவின் குடும்பதிற்கு விசுவாசத்துடன் அவரிடம் சிரித்தபடி  கூற.
 
“ஆப்படியா..அப்ப எனக்கு இப்பவே ஆப்ரேசன் பண்ண ஏற்பாடு பண்ணு கிருஷ்ணா.. நான் சீக்கிரம் சரியாகி மருமகள பார்க்க போகணும்” என்று சிறு பிள்ளை போல துள்ளிக்குதித்தார். ஆனால் கிருஷ்ணாவை கல்யாணம் செய்வதற்கு மருமகளான தங்கமீனாவின் சம்மதம் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது என்பதை குருமூர்த்திக்கு யார் சொல்வது.
 
குருமூர்த்திக்கு மாத்திரை கொடுத்து அவரை தூங்க வைத்துவிட்டு “அங்கிள் நாளைக்கு ஐய்யாவுக்கு ஆப்ரேசன் பண்ணும்போது தங்கமீனா அங்கேயிருக்கணும்” என்று ஆர்டர் போல கூறிவிட்டு அவனறைக்கு சென்றான்.
 
அன்றிரவு சுவாதியிடம் கிருஷ்ணா தன்னிடம் பேசியதை கூற.. அவள் கண்களில் நீர் கோர்த்தது.. “அழாத சுவாதி உன் மனுசுல கிருஷ்ணா மேல காதல் இருந்தா போதாது.. அவன் மனதிலும் காதல் இருக்கணும்.. 
 
“ஆனா அவன் தங்கமீனாவ கல்யாணம் பண்ண ஆசைப்படறானே டாடி.. போயும் போயும் நம்ம வீட்டு காய்கறி விற்குற பொண்ண போய்  கல்யாணம் பண்ணுறேனு சொல்றாரு கிருஷ்ணா.. என்னை ஏன்ப்பா கிருஷ்ணாவுக்கு பிடிக்காம போச்சு ” என்று அவள்  குரல் நலிந்து  போய்  சாம்ராட்டிடடம் கேட்க
 
“சுவாதி நீ தப்பா யோசிக்குற.. காய்கறி விற்கிறவங்க பொண்ணு தங்கமீனாவ சொல்றது தப்புமா” என்று மகளை அதட்டி விட்டு.. “உன்னை எம்டி படிக்க வைக்க யூஸ் அனுப்ப போறேன்.. ரெடியாகியிரு இந்த வாரம் கடைசியில நீ போக வேண்டியிருக்கும் என்று கட் அட் ரைட்டாக சொல்லிவிட்டார் சாம்ராட். இங்கேயிருந்தால் மகள் மனம் வாடும் என்று மகளை அமெரிக்கா அனுப்ப திட்டுமிட்டுவிட்டார்.
 
சாம்ராட் கலைவாணிக்கு போன் போட்டு “நான் நாளைக்கு காலையில உன்வீட்டுக்கு வரேன்மா.. முக்கியமான விசயம் பேசணும்.. அப்புறம் நம்ம தங்கமீனாவுக்கு வேலை கன்பார்ம்.. நானே வந்து கூட்டிட்டு போறேன்” என்று போனை வைத்துவிட்டார்.
 
கலைவாணி மகளுக்கு வேலைகிடைத்துவிட்டது.. என்று மகிழ்ச்சியிலிருந்தார்.
 
தங்கமீனா காலையில் மருத்துவமனைக்கு வேலைக்கு போவாளா?
 

4 thoughts on “மோகவிழியால் எனை தைக்காதே”

  1. Moin Mitstreiter!

    Neulich bin ich auf ein Casino namens Pistolo bemerkt.

    Bin zufrieden.

    Reichlich Auswahl, faire Bedingungen, freundlicher Service.

    Wer mag: [url=https://casinopistolo.de.com/]Pistolo[/url]

    Druecke die Daumen 🙂

  2. Immerse yourself in a fascinating world [url=https://new-aviator-game.com/]aeroplane game money[/url] and experience your passion right now!
    In thrilling rounds, players have the opportunity to win substantial amounts or risk it all.

  3. Try your luck in [url=https://jilispin-login.com]jili casino[/url] and enjoy exciting slots from Jili!
    Jili Spin persistently advances with modifications that elevate the user experience.

Leave a Reply to aviator_bken Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top