ATM Tamil Romantic Novels

6.மோகவிழியால் எனை தைக்காதே

 

கிருஷ்ணா அணைத்ததும்.. துள்ளி விலக பார்க்க அவன் அணைப்பிலிருந்து விலக முடியுமா என்ன?அவனது பிடியோ உடும்பு பிடியாக இருக்க.விடுங்க சார்.. அப்புறம் நான் சத்தம் போடுவேன்..என்று அவள் வாயை திறக்க அவளை தன்புறம் திருப்பியவன் அவள் இதழை லபக்கென்று கவ்விக்கொண்டான் மாயகிருஷ்ணன்.

 

சிறு பேதையவளோ இடுக்கு சந்தில் மாட்டிக்கொண்ட பூனைக்குட்டி போல அவனிடம் வகையாக மாட்டிக்கொண்டாள் பூவைதளிர்.. ஜவ்வுமிட்டாய் போல அவள் இதழை கடித்துச் சுவைத்தான்..

தங்கமீனாவின் மனதில் ஏண்டா ஆப்ரேசன் தியேட்டருக்குள்ள பண்ணுற காரியமா இது.. அதுவும் உங்க அப்பாவுக்கு ஆப்ரேசன் நடக்கப் போகுது நீ இங்க என்கூட குஜால் பண்ணுற.. நீயெல்லாம் மனுச ஜென்மமா.. என்று அவள் நெஞ்சுக்கூடு ஏறி இறங்க.

 

அவள் இதழை விட்டுப் பிரிந்து ஆமாடிஎனக்கு எங்க முத்தம் கொடுக்க தோணுதோ அங்க வச்சு உனக்கு முத்தம் கொடுப்பேன்.. ஆனா இடம் ஏவல் பார்த்துதான் கொடுப்பேன்கவலைபடாத என அவள் மனதில் எண்ணியதை கூறி பப்பாளிக்கன்னத்தில் அழுத்த முத்தமிட்டு வா போகலாம்.. என்று ஆப்ரேசன் நடக்கும் இடத்திற்குச் சென்றான்.

 

அச்சோ இந்த நெட்டக்கொக்குகிட்ட இனிமே நாம தனியா மாட்டக்கூடாது.. வகை தொகை வச்சு செய்யுறான்.. என்று தான் கொண்டு வந்த ஆடையை மாத்திக்கொண்டு கலைந்து கிடந்த தலை முடியை ஒதுக்கி விட்டு ஆப்ரேசன் நடக்கும் இடத்திற்கு வந்தாள்.. ஆனால் அவளுக்கு அங்கே தன்னை எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பது போல தோன்ற சாம்ராட் சார் பக்கத்தில் போய் நின்று கொண்டாள்.

 

குருமூர்த்திக்கு ஆப்ரேசன் செய்ய ஆரம்பித்தனர்.. ஹாஸ்பிட்டலில் இதய மருத்துவ டாக்டர் இருந்தாலும் லண்டனிலிருந்து அவனுக்கு தெரிந்த ஸ்பெசலிஸ்ட் கார்டியோ டாக்டரை வரவழைத்திருந்தான்..

 

அவனது முகம் இறுகியிருந்தது இப்போது.. சற்று முன் தன்னிடம் சஞ்சாரம் செய்தவன் இவனா என்று கூட தங்கமீனாவுக்கு சந்தேகம் வந்தது.. சுற்றியிருக்கும் டிரைனிங் நர்ஸஸ் ஆப்ரேசன் செய்வதை கவனித்தனரோ,இல்லையோ கிருஷ்ணாவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.. இந்த நெட்டக்கொக்குக்கு இத்தனை ரசிகர் பட்டாளமா?பெயரு கிருஷ்ணான்னு வச்சா இப்படித்தான்.. என்று இதழ் சுளித்து ஆப்ரேசன் நடப்பதை கவனிக்கத் தொடங்கினாள்.

 

சில மணிநேரத்தில் ஆப்ரேசன் முடிய லண்டனிலிருந்து வந்திருந்த கார்டியோலஜிஸ்ட்சக்ஸஸ்என்று கட்டை விரலை உயர்த்த.. இதழ்விரித்து புன்னகைத்த கிருஷ்ணாதேங்க்ஸ் டாக்டர் நான் கூப்பிடதும் நீங்க வந்தது எனக்கு சந்தோசம்என்றான்.

 

என்னோட ஹாஸ்பிட்டல நீயூரோ பேசண்ட்க்கு எவ்ளோ கிரிட்டிக்கல் பொசிசன்ல இருந்தாலும் அவங்களுக்கு நீ வந்து டிரீட்மெண்ட் கொடுத்து ஆப்ரேசனும் முடித்து கொடுத்துட்டு வர.. நான் இந்த உதவிகூட உனக்கு செய்ய மாட்டனா யங் பாய்.. அப்புறம் எப்போ கல்யாண சாப்பாடு போட போறஎன்று அவன் தோளில் தட்ட.

 

ஆடை மாற்றி வந்த தங்கமீனாவை பார்த்து கண்ணை சிமிட்டிசீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுறேன் சார்..என்றான்.

 

ஓ.கே கிருஷ்ணா எனக்கு ப்ளைட்டுக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன்என்றதும்..

 

எகைன் தேங்க்யூ டாக்டர்என்று அவரை வழியனுப்பி வைத்தான் கிருஷ்ணா.

 

சாம்ராட்.. குருமூர்த்தியை ஐ.சி.யூவிற்கு மாற்றினார்.. தங்கமீனாவை,குருமூர்த்தியின் பக்கத்திலேயே இருக்க வைத்தார்.. அவர் கண் விழித்ததும் போன் பண்ணச் சொல்லி அவரின் பேசண்டை பார்க்கச் சென்றார் சாம்ராட்.

 

கிருஷ்ணா ஐ.சி.யுவிற்குள் நுழைய அங்கே தங்கமீனா குருமூர்த்திக்கு பி.பி செக் பண்ணிக்கொண்டிருந்தாள்..

 

ம்ம்.. திறமையான பொண்ணு தான் நீ தாடையை நீவிக்கொண்டு கிருஷ்ணாவோட வொய்ப்னா சும்மாவா.. என்று தங்கமீனாவை மெச்சிக்கொண்டு அவளருகே சென்றும்க்கும்என்று தொண்டையை கனைக்க..

 

சார் நா.. நான் சாருக்கு பி.பி சரியா இருக்கான்னு பார்த்தேன்

 

ம்ம்என்று அவளை உரசிக்கொண்டு தந்தையின் அருகே வந்தவன் அவருக்கு ஹார்ட் பீட் எப்படியிருக்கு என்று செக் செய்ய இதயம் நார்மலாக துடித்தது..

 

சாம்ராட் உள்ளே வர அவளிடமிருந்து தள்ளி நிற்க..

 

கிருஷ்ணா அப்பாவுக்கு இப்ப எல்லாம் நார்மலா இருக்குல்ல

 

எஸ் அங்கிள் பர்பெக்ட்என்று குறுநகை புரிந்தான்.

 

கிருஷ்ணா.. சுவாதி எம்.டி படிக்க லண்டன் கிளம்புறா நான் அவள அனுப்பு வகைக்க போகணும்என்றிட..

 

என்ன அங்கிள் என்கிட்ட சுவாதி லண்டன் போறத சொல்லவே இல்லையேஎன்று நெற்றியை தேய்க்க..

 

சுவாதிக்கு போகணும்னு சொன்னா நானும் சரின்னு சொல்லிட்டேன்.. உன்கிட்ட போன்ல பேசுறேன்னு சொல்லிட்டாப்பாஎன்றதும்..

 

ஓ.கே.அங்கிள் நானே சுவாதிகிட்ட பேசுறேன்.. நீங்க கிளம்புங்கஎன்று சாம்ராட்டை அனுப்பி வைத்தான்.

 

குருமூர்த்தியின் கண்கள் லேசாக அசைய..டாக்டர் உங்க அப்பாக்கு நினைவு வந்திடுச்சு

 

சட்டென்று அவன் திரும்பி பார்க்க கிருஷ்ணாவும்,தங்கமீனாவும் சேர்ந்து நிற்க.. கணவன்  மனைவி போல  அவர் கண்ணுக்கு  தெரிய அவரது கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது.. இந்த காட்சியை காணத்தானே நான் தவம் கிடந்தேன் என்று அவர் இதயம் நிம்மதியடைந்தது.

 

ஐய்யா என்னதிது உங்க கண்ணுல தண்ணிவருதுஎன்று தன் கைக்குட்டையை எடுத்து குருமூர்த்தியின் பக்கம் போய் உட்கார்ந்து அவர் கண்ணீரைத் துடைத்துவிட்டு..

 

ஐய்யா இப்போ உடம்பு எப்படியிருக்கு.. எங்காவது பெயின் இருக்கா சொல்லுங்கஎன்று தந்தையின் கையை எடுத்து நெஞ்சில் வைத்துக்கொண்டு கேட்க..

 

கொஞ்சமா இங்க வலிக்குது தம்பிஎன்று இதயம் இருக்குமிடத்தை தொட்டுக்காட்ட..

 

அடுத்த நொடிதங்கமீனா அந்த மருந்தை எடுங்கஎன்று ஆர்டர் போட அவன் கேட்ட மருந்தை எடுத்து கிருஷ்ணாவின் கையில் கொடுக்க..

 

மருந்தை ஊசியில் செலுத்தி குருமூர்த்திக்கு போட்டு விட்டுஐய்யா இன்னும் கொஞ்ச நேரத்துல வலி குறைஞ்சுடும் தூக்கம் வரும் தூங்குங்கஎன்று தந்தையின் நெற்றியில் முத்தமிட்டான்.

 

கிருஷ்ணாவின் செயலை ஆச்சர்யத்துடன் வாய்பிளந்து பார்த்திருந்தாள் தங்கமீனா.

 

அதே நேரம் மற்றொரு நர்ஸ் ஐ.சி.யூவிற்குள் உள்ளே வந்துடாக்டர் பேசண்ட் வெயிட்டிங்என்று கிருஷ்ணாவிடம் கூற..

 

நான் அப்புறம் வரேன் ஐய்யாஎன்று கூறிவிட்டு..

 

தங்கமீனா ஐய்யாவ விட்டு எங்கயும் நகர கூடாதுஎன் பனிஸ்மென்ட் தெரியுமல்ல.

 

ம்ம் தெரியும் சார் வேலையை விட்டு தூக்கிடுவிங்கதானஎன்று அவள் கண்ணை உருட்டி சொல்ல..

 

இல்ல அது மத்தவங்களுக்கு.. ஆனா உனக்குஎன்று அவள் பக்கம் போய் நின்று அவள் காதருகே சென்றுதௌசன்ட் கிஸ் கொடுத்துடுவேன்.. என்று அவள் கலசம் தொட்டு சென்றான்

 

கிருஷ்ணாவின்   செய்கையில் பேச்சற்று நின்றாள் தங்கமீனா.

 

வேலைக்கு வந்த முதல் நாளே தன்னிடம் அத்து மீறும் கிருஷ்ணாவை எப்படி சமாளிப்பது என திக்குமுக்காடினாள் பாவை.

 

தன் குடும்பத்தை எண்ணிவள் சமாளித்துத்தான் ஆகணும்.. என்று பெருமூச்சுவிட்டு குருமூர்த்தியின் அருகே அமர்ந்தாள்.

 

ஒரு மணி நேரத்தில் மீண்டும் கண்விழித்த குருமூர்த்தி.. பக்கத்தில் உட்கார்ந்திருந்த தங்கமீனாவை திரும்பி பார்த்துஅம்மாடி பொண்ணுஎன்று அழைக்க.

 

சார் உடம்புக்கு என்ன பண்ணுதுஎன்று பதறி அவர் அருகே சென்று அவரது கைப்பிடித்து பி.பி செக் பண்ணி பார்க்க.. அது சீராக இருக்க.. செக் பண்ணி முடித்துஇப்ப பெயின் குறைஞ்சுதா சார்என்று அவர் நெற்றியை தடவி விட.

 

என் பொண்ணு போல தெரியுற கண்ணு.. நீ எப்ப எங்க வீட்டுக்கு வருவன்னு ஆவலா இருக்குஎன்று ஆனந்தப்பட்டு கூற.

 

நான் எதுக்கு உங்க வீட்டுக்கு வரணும் சார்

 

உன்னை,என் பையன் கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ வந்துதான ஆகணும்

 

அச்சோ இப்ப இவருகிட்ட நான் முடியாதுன்னு சொன்னா ஐய்யாவோட ஹெல்த்துக்கு ஏதாவது ஆகிடும்என்று எண்ணியவள்..

 

உங்க உடம்பு சரியாகட்டும் சார் அப்புறம் பேசிக்கலாம்என்று மலிப்பி பதில் கூறினாள்.

 

குருமூர்த்திக்கு இயற்கை உபாதை வர.. அவருக்கு தங்கமீனாவிடம் கூற சங்கோஜம் ஏற்பட அவர் உடல் நெளிக்க.. மணியின் பங்காளி வீட்டில் இறப்பு நிகழ்ந்து விட அவர்  ஊருக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் நேரிட்டது. மணி  இருந்தால் இன்னேரம் அவரே குருமூர்த்திக்கு உதவியாக இருப்பார்.. இப்போது என்ன செய்வது என்று யோசித்தவர்..

 

மருமகளே என் பையன் கிருஷ்ணாவ கூப்பிட முடியுமா?”என்று தயங்கி கேட்க.

 

சார் உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும் சொல்லுங்க நான் செய்யுறேன் உங்க பொண்ணா நினைச்சுங்குங்க” என்று அவர் பக்கம் போக.. கதவை திறந்து வேக எட்டு வைத்து கிருஷ்ணா சரியாக உள்ளே வர.. குருமூர்த்திக்கு நிம்மதியாக இருந்தது.

 

மருமகளே!! என் பையன் வந்துட்டான்.. இனி அவன் பார்த்துப்பான் நீ கொஞ்சம் வெளிய இரு

 

அவ எதுக்கு வெளியே போகணும் ஐய்யா

 

சாருக்கு யூரின் போகணும் போல.. நான் ஹெல்ப் பண்றேன்னு  சொன்னேன்.. ஆனா அவரு மறுத்துட்டாரு.. நீங்க சரியான நேரத்துக்கு வந்துட்டீங்க அதான்என்று தங்கமீனா கூறியதும் பெண்ணவள் மீது ஆண்மகனுக்கு இன்னும் ஆசை பெருகியது. உதடு குவித்து முத்தம் கொடுத்து நீ வெளிய இரு என்று தங்கமீனாவை அனுப்பி வைத்து தந்தைக்கு பணிவிடை செய்தான் கிருஷ்ணா.

 

மணி ஐந்து ஆகிவிட கிருஷ்ணாவிடம் சென்றுசார் நான் கிளம்புறேன்என்று அவன் முன் வந்து நின்றாள்.

 

குருமூர்த்தியின் முன்னாள் அவனால் சில்மிஷம் செய்ய முடியவில்லை..ஒ.கே கிளம்புங்க அதுக்கு முன்ன என் ரூமுக்கு வந்துட்டு போங்கஎன்று தந்தையை பரிசோதித்து முடித்தான்.

 

ஒரு நர்ஸை வரவைத்து அப்பா கூட கொஞ்ச நேரம் இருங்க நான் இப்ப வரேன்.. என்று கூறிவிட்டு குருமூர்த்தியிடம் தலையசைத்து சென்றான்.

 

என் பையன் சந்தோசமா இருந்தா சரி என்று மனதில் மகிழ்ச்சி கொண்டார் குருமூர்த்தி..

 

அந்நேரம்55வயதில் மதிக்கத்தக்க ஒரு பெண்ணும்20வயதில் ஒரு பெண்ணும் ஐ.சி.யுவின் வாசலில் நின்றிருந்தனர்.. கிருஷ்ணா வெளியே வருவதைக் கண்டு ஒதுங்கி மறைந்து நின்றனர்.. கிருஷ்ணாவை கண்குளிரப் பார்த்து கண்ணிர் விட்டார் அந்தப் பெண்.

 

கிருஷ்ணா அவன் அறைக்கு போனதும் பம்பிக்கொண்டு அவன் அறைக்குச் சென்றாள் தங்கமீனா.

 

தங்கமீனா உள்ளே சென்றவுடன்  அவளை கட்டியணைத்துரொம்ப தேங்க்ஸ் நான் உன்கிட்ட இப்ப பேசணும்.. நான் உன்ன மேரேஜ் செய்ய நினைச்சது உன்னோட அழக கண்டு இல்ல.. எல்லார் மேல நீ வச்சிருக்க அன்பு தான்.. முதல் நாள் நான் உன்ன  பார்த்தப்ப நீ அந்த அடிப்பட்ட பையனுக்காக என்கிட்ட சண்டை போட்டது பிடிச்சிருந்தது.. அப்பவே உன்ன,எனக்கு பிடிச்சுப் போச்சு.. நான் எப்பவும் முகத்துக்கு நேராத்தான் பேசுவேன்.. பொய் பேசுனா எனக்கு பிடிக்காது.. இப்பவே என்னைப் பத்தி உனக்கு எல்லாம் தெரியணும்.. நான் பாசத்துக்கு மட்டும்தான் கட்டுப்படுவேன்என்று அவளை தூக்கிக் கொண்டு சோபாவில் அமர்ந்து அப்பாவுக்கு உடம்பு சரியானதும் அடுத்த வாரம் எங்க குலதெய்வக் கோவில்ல நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம்.. என்று அவள் கழுத்தில் முகம் புதைத்து குட்டிக் குட்டி முத்தம் கொடுத்தான்.

 

கிருஷ்ணா பேசுவது மீனாவுக்கு புரிந்தாலும் அவள்,அருளைத்தான் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறாள்.. இப்போது அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை..

 

கலைவாணி.. கிருஷ்ணாவை திருமணம் செய்து கொள்ள விரும்பமாட்டார்.. அவருக்கு அருளை தான் தனக்கு திருமணம் செய்து வைக்க கனவு காண்கிறார்.. அதை மீனா கலைக்க விரும்பவில்லை.. ஒரு பக்கம் கிருஷ்ணாவின் காதல்,மறுபக்கம் அருளின் காதல்,தாயின் பாசம்.. தம்பியின் வேலை என்று ஆயிரம் யோசனையில் தங்கமீனா இருக்க..

 

என்ன எனக்கு பதில் சொல்லு கோல்ட்.. என்று அவள் இதழில் முத்தமிட்டு கேட்க..

 

டாக்டர் நான் எங்க மாமா அருளைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்என்று அவள் வார்த்தையை சொல்லிக்கூட முடிக்கவில்லை.. அதுவரை அவளிடம் மென்மையாக நடந்து கொண்டவன் அவள் கூறிய பதிலில் கோவம் உச்சிக்கு ஏற கதவை லாக் போட்டு சோபாவில் அவளை சரித்து அவள் இதழில் வன்மையாக முத்தமிடத்துவங்கினான்.. அவள் இடையில் அவன் விரல் எனும் உளி கொண்டு செதுக்க ஆரம்பித்தான்.

 

7. மோகவிழியால் எனை தைக்காதே
 
 
கிருஷ்ணா வெறி கொண்டவன் தங்கமீனாவின் இதழை பிய்த்து எடுத்துவிடுவான் போல அப்படியொரு வன்மம் அவனிடம்.. அவள் அருளை கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொல்லியதை தாங்கமாட்டாமல் அவளிடம் வன்மையை காட்டிக் கொண்டிருக்கிறான். 
 
மருத்துவனுக்கு இதழ் முத்தம் போதவில்லை போல இதழை விட்டு கழுத்துக்கு தாவ தங்கமீனாவுக்கோ  பயத்தில் தொண்டைக்குழி ஏறி இறங்குவதை கண்டவன் அவளை தன்னிடமிருந்து தள்ளி விட்டு எழுந்தவன் பின்னந்தலை முடியை கோதி தன் கோவத்தை தணிக்க முனைந்தான்.
 
கீழே விழுந்த பெண்ணவள் தட்டுத்தடுமாறி மெல்ல எழுந்து கதவின் பக்கம் போக
 
“ஏய் எங்க போறடி” என்று கிருஷ்ணா அதட்ட.. இன்னும் ஏதாவது செய்து விடுவானோ என்ற அச்சத்தில் அப்படியே நின்று விட்டாள் தங்கமீனா.
 
தனது நீள காலால் இரண்டே எட்டில் தங்கமீனா நின்ற இடத்திற்கு வந்தவன் அவளை தன் புறம் திரும்பி தனது நெருப்பு விழிகளால் அவளை சுட்டுப் பொசுக்க.. பெண்ணவள் தலைகுனிந்து கொள்ள.. அவள் கன்னத்தை அழுந்தப்பிடித்து.. “ஏய் என் வாழ்க்கையில ஒரு முறை நான் ஆசைப்பட்டது கிடைக்காம போச்சு.. மறுமுறையும் நான் ஆசைப்பட்டத அடையாம விடமாட்டன்டி.. நீ உன் மாமா கூட மணவறை போய் உட்கார்ந்தாலும் கடைசி நேரத்துல  நான் கட்டுற தாலிதான் உன் கழுத்துல ஏறும்” என்று அவன்  அழுத்தி பிடித்திருந்த அவள் கன்னத்தை விட்டு கதவை திறந்து வெளியே சென்றான்.
 
இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் மடிந்து உட்கார்ந்து ஓவென்று கதறினாள் தங்கமீனா.
 
கலைவாணி தங்கமீனாவுக்கு போன் போட போனை எடுத்துப் பார்க்க கலைவாணியின் எண்ணைக் கண்டு கண் துடைத்து “ஹலோ அம்மா” 
 
“கண்ணு நேரமாச்சு இன்னும் வரல..அதான்   போன் போட்டேன்”
 
“இதோ கிளம்பிட்டேன்மா” என்று பேக்குடன் வெளியே வந்தாள்.
 
 
அங்கே ஐ.சி.யுவின் முன்னே கிருஷ்ணாவின் சத்தம் இடிமுழக்கம் போல கேட்டது.
 
என்னாச்சு இவருக்கு யார பார்த்து இவன் இப்படி காயுறான்.. என்று அங்கே எட்டிப்பார்க்க.. கையில் பேக்குடன் கண்ணில் கண்ணாடியுடன் நேர்த்தியாக கட்டிய காட்டன் சேலையில் அந்த பெண்மணி கிருஷ்ணாவை கெஞ்சும் பார்வையில் பார்த்திருந்தார்.. அவர் பக்கத்தில் நின்றிருந்த தன் வயதையொத்த பெண் டாப்பும் லெக்கின்ஸ்சும் போட்டிருந்தாள்.
 
அவர்கள் இருவரையும் பார்த்து “வெளியே போங்க.. நானும் என் அப்பாவும் நிம்மதியா இருக்கறது உங்களுக்குப்  பிடிக்கலையா” என்று சிறுத்தையை போல சீறினான் கிருஷ்ணா.. குருமூர்த்தியை வைத்திருந்தது தனி ஐ.சி.யுவினால் அங்கே அவர்கள் மூவரைத்தவிர வேறு யாரும் இல்லை.
 
ஐ.சி.யுவின் கதவு இடுக்கில் மணியண்ணா எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார்.. அவரது பங்காளி வீட்டு காரியம் முடிந்ததும் ஊரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து விட்டார்.. குருமூர்த்தி உறங்கிக்கொண்டிருந்தார்.
 
கிருஷ்ணா அறைக்குச் சென்றிருந்த சமயம் குருமூர்த்தியை பார்த்துவிடலாம் என்று எண்ணி அந்த பெண்மணி ஐ.சி.யுவிற்குள் நுழையும் முன்னே தடுத்து நிறுத்தி அவரிடம் வார்த்தையை நெருப்பு போல அள்ளி வீசிக்கொண்டிருந்தான்.. அந்தப் பெண்மணி தப்பு செய்து விட்டார்.. அதனால் அதற்கு தண்டனையாக கிருஷ்ணா பேசும் வார்த்தைக்கு பதில் பேச்சு பேசமுடியாமல் தவித்துப்போய் நின்றிருந்தார்.
 
 
 
“கண்ணா ஒரு முறை அவரை பார்த்துக்கிறேனே” என்று மீண்டும் ஒருமுறை கிருஷ்ணாவிடம் மன்றாடினார்.. பக்கத்திலிருந்த பெண்ணோ.. “அம்மா வாங்க போலாம் நமக்கு இந்த ஜென்மத்துல அவரப் பார்க்க  முடியாது போல” என்று அவள் கண்ணீருடன் கூற.. 
 
கிருஷ்ணா அந்தப் பெண்ணை கண் கலங்கிப் பார்த்தான்.. இது எப்படி சாத்தியம் அடுத்தவங்களை அழவிட்டு பார்க்கிறவன் அந்தப் பொண்ணு கண்ணீரை பார்த்து இவன் கண்ணுல தண்ணீர் கட்டுது.. என்று மூவரையும் விடாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
 
கண்ணீரை சுட்டு விரலால் துடைத்து ஐ.சியு.விற்குள் சென்று விட்டான்.
 
சிறிது நேரம் நின்றவர்கள் ஐ.சி.யுவை பார்த்துக்கொண்டே அவ்விடத்தை விட்டு வெளியேறி ஹாஸ்பிட்டலுக்கு வெளியே சென்றனர்.. யார் இவர்கள் என்று அறிந்து கொள்ள அவர்கள் பின்னே ஓடினாள்.. 
 
ஐ.சி.யுவிற்குள் சென்ற கிருஷ்ணா.. மணியிடம், “அண்ணா அப்பாகிட்ட அவங்க வந்து போனத சொல்லக்கூடாது” என்று சொல்லி வைத்தான்.
 
“இல்ல தம்பி நான் சொல்லல” என்று அவரும் தலையாட்டினார்.
 
அவர்கள் போய் விட்டனரா என்று ஐ.சி.யுவின்  அறையிலிருந்த ஜன்னல் வழியே பார்த்தான்.. விலக கூடிய பந்தமா அவர்கள்.. அவன் மனம் அவர் பின்னே சென்று அந்தப் பெண்மணியை பார்க்கத்தூண்டியது.
 
 
 
“ஆன்ட்டி கொஞ்சம் நில்லுங்க” என்று மூச்சரைக்க அவர்கள் பக்கம் போய் நின்றாள் தங்கமீனா.
 
“யாருமா நீ” என்று புன்னகையுடன் கேட்க.
 
அவர் முகத்தை பார்த்தால் சாந்தம் குடிகொண்டிருந்தது.. இவர்கிட்ட போய் அந்த நெட்டக்கொக்கு எரிஞ்சு விழுது என்று எண்ணியவள்.. 
 
“ஆன்டி நீங்க குருமூர்த்தி சார பார்க்க வந்தீங்களா”
 
“ஆமாம்” என்று அந்த பெண்மணி முகம் வருந்திக் கண்ணீர் விட்டு தலையசைக்க..  
 
பக்கத்திலிருந்த சின்ன பெண்ணோ.. தாய் அழுவதைக் கண்டு அவளும் அழுக.. தங்கமீனாவிற்கு இருவரையும் பார்த்து அழுகை வந்தது.
 
“நான் உங்களை கூட்டிட்டுப் போறேன் வாங்க” என்று அவர்கள் கைப்பிடிக்க.. தங்கமீனாவின் போன் சிணுங்கியது… வேறு யாருமல்ல சாட்சாத் கிருஷ்ணாதான்.. 
“அவங்ககிட்ட நின்னு  என்ன பேசுற.. இனி ஒரு நிமிஷம் அங்க நிக்க கூடாது.. வீட்டுக்கு போ என்றான் அதிகாரமாக.. அவன் பேசுவது அந்த பெண்மணிக்கும் கேட்க.. 
 
இந்தப் பொண்ணு நம்ம கூட பேசி திட்டு வாங்குது.. நம்மனால யாருக்கும் சிரமம் ஏற்படக் கூடாது.. என்று மகளை கூட்டிக்கொண்டு அவர்கள் வந்த காரில் ஏறினார் அந்த பெண்மணி.
 
இதோ கிளம்புறேன் டாக்டர் என்று கிருஷ்ணாவிடம் பேசிவிட்டு திரும்ப அவர்கள் இருவரும் காரில் ஏறுவதைப் பார்த்து இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருந்தேனா.. யாருன்னு விபரம் கேட்டா தெரிஞ்சிருக்கும்.. நெட்டக்கொக்கு கெடுத்துருச்சு.. சரி நாளைக்கு காலையில குருமூர்த்தி சார கேட்டா தெரிஞ்சுடும் என்று பெரும்மூச்சு விட்டு இரண்டடி நடந்திருப்பாள்.. அவள் முன்னே பைக்கை நிறுத்தி இறங்கினான் அருள்.
 
கலைவாணி.. தங்கமீனா வர நேரமாகிவிட்டதென அருளுக்கு போன்போட்டார்.. “சரிக்கா நான் போய் கூட்டிட்டு வரேன்” என்று கிளம்பி வந்துவிட்டான்.
 
“அக்கா.. நீ வரலன்னு எனக்கு போன் போட்டுச்சு அதான் உன்னை கூட்டிட்டுப்போக வந்தேன்.. ஏன் இன்னிக்கு இவ்ளோ லேட்டாச்சு” புருவம் தூக்கி  கேட்க
 
“ஹா.. அது இன்னிக்கு பர்ஸ்ட் டேல அதான் லேட் மாமா” 
 
“ம்ம் சரி பைக்குல ஏறு நான் உன்னை வீட்ல விடுறேன்” என்றதும்.. 
 
“மாமா இந்த நேரம் நீங்க பிஸியாயிருப்பீங்கள்ள.. நான் பஸ்ல போய்க்குறேன்” என்று அவன் பைக்கில் ஏறாமல் இரண்டு அடி எட்டு வைத்தாள்.
 
அருளுக்கு ஆறு மணியிலிருந்து ஏழு மணிவரை அவனிடம் வேலை செய்யும் டிரைவர்கள் அவனிடம் கணக்கு சொல்லும் நேரம்.. அந்த நேரத்தில் போன் கூட எடுக்க மாட்டான்.
 
தங்கமீனா இன்னும் வீட்டுக்கு வரலைன்னு கலைவாணி அவனுக்கு போன் போட்டு சொல்ல அனைத்து வேலைகளையும் பாதியிலேயே நிறுத்தி வைத்து வந்து விட்டான்.
 
தங்கமீனாவை கைப்பற்றி நிறுத்தி “உன்னை விட எனக்கு எந்த வேலையும் பெரிசு இல்ல.. நீதான் எனக்கு முக்கியம் பைக்குல ஏறு புள்ள” என்று அதட்டலாக பேச.. சுற்றியிருப்போர் இருவரையும் ஒரு மாதிரி பார்த்துவிட்டு போக.. தங்கமீனா அமைதியாக பைக்கில் ஏறி பைக்கின் ஓரத்தில் அமர்ந்தாள்.
 
மேலே நின்றபடி அருள் பேசுவதையும்.. அதற்கு அவள் பதில் சொல்வதையும் பார்த்தவனுக்கு பற்றிக்கொண்டு வந்தது கிருஷ்ணாவுக்கு.. ஓ.. இவன்தான் உன்னோட மாமனா.. பார்த்துக்குறேன் என்று கையை மடக்கி டேபிளிலில் குத்தினான்.
 
போகும் வழியில் தங்கமீனாவிடம் “ஏதாச்சும் வேணுமா தங்கா” 
 
“எனக்கு எதுவும் வேணாம் மாமா” என்று அவள் மறுப்பு கூறினாலும் வண்டியை இடையில் நிறுத்தி பழச்சாறு வாங்கிக்கொடுத்து கூட்டிச்சென்றான் வீட்டுக்கு.. 
 
வண்டியில் போகும் போதே அவனுக்கு போன் வந்து கொண்டேயிருக்க தங்கமீனாவை வீட்டு வாசலில் இறங்கிவிட்டு சென்றான் அருள்.
 
சுவாதியை அழைத்துக்கொண்டு அமெரிக்கா செல்ல ஏர்போட்டுக்கு சென்றார் சாம்ராட்.. போகும் வழியில் “சுவாதி.. கிருஷ்ணா கிட்ட போன் பண்ணி பேசிடு.. நீ சொல்லன்னு அவன் பீல் பண்ணக்கூடாது..அவங்க ஹாஸ்பிட்டல நீ  டிரைனிங் எடுத்திருக்க” என்று காரை ஓட்டியபடியே மகளை திரும்பிப் பார்க்க.
 
சுவாதியின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியிருந்தது..
 
கிருஷ்ணாவை உயிருக்குயிராக விரும்பியிருக்கிறாள்.. எப்படி மறக்கமுடியும் அவளால்.. அவன் இன்னொருத்தியை விரும்புகிறான் என்று தெரிந்ததும் அவள் மனது புழுவாய் துடித்துப்போனது.. என்றாவது தன் காதலை அவனிடம் சொல்லி அவன் தன்னை ஏற்றுக்கொள்வான் என்று மலைபோல் நம்பியிருந்தாள்.. அதை சுக்கு நூறாக உடைத்துவிட்டான்.. ஒருவேளை சுவாதி, கிருஷ்ணாவிடம் தன் காதலை கூறியிருந்தாள்.. அவளுக்கு தகுந்த பதிலை கூறியிருப்பான்.. இப்போது மனம் முழுவதும் அவனை நிரப்பிக்கொண்டு காரில் கண்ணீருடன் தந்தை கூப்பிடுவது கூட காதில் விழாமல் அமர்ந்திருந்தாள் சுவாதி.
 
 
 
காரை ஓரமாக நிறுத்தி “சுவாதி ஆர் யு. ஓ.கே” என்று அவள் கையை பிடிக்க.. 
 
“அப்பா என்னால கிருஷ்ணாவ மறக்க முடியல” என்று சாம்ராட் தோளில் சாய்ந்து கொள்ள.. 
 
“சுவாதி நான் நேத்து உன்கிட்ட என்ன சொன்னேன்.. எல்லாத்தையும் மறந்திடு.. அதுவே நமக்கு மனநோயா மாறிடும்.. இப்ப நீ அமெரிக்கா போற.. அங்க கிருஷ்ணாவவிட பெஸ்டா வேற ஒருத்தன் உனக்கு கிடைப்பான்.. உன் லவ்வுக்கு அப்பா எப்பவும் சப்போர்ட்” என்று மகளின் நெற்றியில் முத்தம் கொடுத்து அவளை ப்ளைட்டில் ஏற்றிவிட்டார்.
 
குரூமூர்த்தி கண்விழித்தும் அவருக்கு ஏதோ நெருங்கியவர்கள் வந்து போனது போல அவர் ஆழ்மனது சொல்ல.. பக்கத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்த மணியை பார்த்தவர்.. “மணி எப்ப வந்த ஊர்லயிருந்து.. காரியம் எல்லாம் முடிஞ்சுதா” 
 
“முடிஞ்சுதுகய்யா.. போன மாசம் பெரியப்பா கீழ விழுந்தவர்.. அடுத்த நாள்  அகாரம் இல்ல..  சாப்பாடு தண்ணி சாப்பிடாம  உயிர் போயிடுச்சு” என்று சற்று கவலைப்பட்டு கூற.. மணியின் பெரியப்பாதான் இறந்தது.. குருமூர்த்திக்கு சிநேகிதரும் கூட..
 
“உன் பெரியப்பா நல்ல மனிதர்.. எனக்கு உடம்பு நல்லாயிருந்திருந்தா இந்நேரம் நானும் அவர் இறுதிச் சடங்கில் கலந்திருப்பேன்” என்று வருத்தப்பட்டு மணியிடம் பேசிக்கொண்டிருக்க.
 
 
 
கிருஷ்ணா வாஷ்ரூம் சென்றிருந்தான்.. குருமூர்த்தி கண்முழிக்கும் போது அவன் முகம் வாட்டமாக இருந்தால் தந்தைக்கு சந்தேகம் வரும் என்று எண்ணியவன் முகம் கழுவி வந்தான்.
 
“மணி ஊர்லயிருந்து யாராவது என்ன பார்க்க ஹாஸ்பிட்டலுக்கு வந்தாங்களா” 
 
மணி வாய் திறக்கவில்லை.. எதாவது உளறிவைத்து கிருஷ்ணாவிடம் வாங்கி கட்டிக்கொள்ள கூடாதென்று பசை போட்டு ஒட்டிக்கொண்டது போல பேசாமல் அமர்ந்திருந்தார்.
 
“மணி நான் கேட்குறேன் நீ பேசாம இருக்க” என்று குருமூர்த்தி சற்று குரலை உயர்த்த..
 
டவலால் முகத்தை துடைத்துக்கொண்டு வந்தவன் “யாரும் வரல ஐய்யா.. நம்மளை பத்தி அவங்களுக்கு என்ன அக்கறை பாதியில போனவங்க வரவா போறாங்க” என்று இறுகிய முகத்துடன் கூறினான்.
 
குருமூர்த்தியின் மனதிற்குள் எப்படியும் எனக்கு ஆப்ரேசன் செய்தது அவர்களுக்கு தெரிந்திருக்கும் கண்டிப்பா வந்திருக்கணும்.. மகனைப்பற்றி தெரியுமல்லவா அவருக்கு.. வந்திருந்தாலும் அவர்களை ஏதாவது சொல்லியிருப்பான்.. அவங்க திரும்பி போயிருக்கணும்.. என்று அமைதியாக கண்ணை மூடி படுத்துக்கொள்ள.
 
 
 
“ஐய்யா” என்று குருமூர்த்தியின் நெற்றியை தொட.. அவரின் கண்களில் கண்ணீர் நீர்கோர்த்து வெளியேறியது.
 
 
“ஐய்யா நான் ஒருத்தன் இருக்கும்போது நீங்க அழக்கூடாது.. அப்புறம் நான் உங்கள நல்லபடியா பார்த்துக்கலைன்னு அர்த்தம்” என்று சொன்னவனின் குரலில் அத்துணை வருத்தம் ஓடியது.

9 thoughts on “”

  1. Попробуйте свои силы в [url=https://aviator-1win-registration.ru]1 win aviator[/url], и испытайте удачу в уникальном игровом процессе!
    Платформа предлагает удобный интерфейс и множество уникальных функций.

  2. สล็อตเว็บตรง
    เกมสล็อตออนไลน์ ตัวเลือกยอดนิยม ในยุคปัจจุบัน.
    ปัจจุบันนี้ เกมสล็อต ออนไลน์ จัดเป็น หนึ่งในเกมที่ได้รับความนิยมสูงสุด ในตลาดเกมออนไลน์ ด้วย รูปแบบการเล่นที่เข้าใจง่าย ไม่ซับซ้อน และ ให้ความสนุกทันที ทั้งผู้เล่นใหม่และผู้เล่นเดิม เกมสล็อต ก็เหมาะสม สำหรับการเล่นในระยะยาว.

    ทำไม สล็อต ถึงได้รับความนิยม .
    เกมสล็อตออนไลน์ มีข้อดีหลายประการ เช่น เล่นง่าย ไม่ต้องใช้ทักษะซับซ้อน, มีธีมหลากหลาย และกราฟิกสวยงาม, สามารถเริ่มต้นด้วยเงินน้อย และ มีโบนัส พร้อมระบบฟรีสปิน. ดังนั้น เกมสล็อต จึงถือเป็น เกมยอดนิยม ของผู้เล่นจำนวนมาก.

    ความหมายของ สล็อตเว็บตรง .
    สล็อตตรง หมายถึง การเล่นสล็อตผ่านเว็บผู้ให้บริการโดยตรง โดยไม่ผ่านเอเย่นต์ ซึ่งช่วยให้ระบบมีความเสถียร. จุดเด่นของสล็อตเว็บตรง ประกอบด้วย เข้าเกมได้ไว, ความปลอดภัยสูง, ผลเกมยุติธรรม และ มีสิทธิพิเศษเพิ่มเติม. นักเล่นส่วนใหญ่ จึงเลือก เว็บตรง เพื่อความมั่นใจ.

    ทดลองเล่นสล็อต pg ก่อนเล่นจริง .
    สำหรับผู้เล่นที่ต้องการทดลอง สามารถเลือก ทดลองเล่น pg ก่อนตัดสินใจ ซึ่งเป็นระบบทดลอง ที่ไม่ต้องใช้เงินจริง. การทดลองเล่น ทำให้ผู้เล่น เข้าใจรูปแบบเกม, รู้จักฟีเจอร์โบนัส และ เลือกเกมที่เหมาะสมได้ เหมาะสำหรับมือใหม่ รวมถึงผู้ที่ต้องการเปรียบเทียบสล็อต.

    pg slot คืออะไร .
    PG Slot คือเกมสล็อต จากค่าย Pocket Games Soft ซึ่งมีชื่อเสียง ด้านคุณภาพเกม. ข้อดีของ PG Slot คือ ภาพสวย คมชัด, เล่นบนมือถือได้เต็มรูปแบบ, ระบบลื่นไหล และ โบนัสน่าสนใจ. ด้วยเหตุนี้ pg slot จึงมีผู้เล่นเพิ่มขึ้น ในหลายประเทศ.

    บทสรุปโดยรวม .
    การเล่นสล็อต สล็อต ผ่าน สล็อตเว็บตรง พร้อมกับ ทดลองเล่นสล็อต pg และ รวมถึงเกมของ pg slot ช่วยให้การเล่นมีความมั่นใจและสนุกมากขึ้น เหมาะสำหรับการเล่นระยะยาว.

  3. [url=https://pokerdomcasino-play.site/]покердом[/url] покердом казино, покердом вход, покердом зеркало, покердом кз, покердом скачать, казино покердом, покердом официальный сайт, покердом официальный сайт вход, скачать покердом, покердом официальный, покердом играть, покердом казахстан, покердом регистрация, сайт покердом, покердом отзывы, покердом онлайн, покердом зеркало рабочее

  4. Try your luck in an exciting game [url=https://77-ace.com/]77 ace game[/url] and win big prizes!
    The distinct characteristics of 77ace differentiate it from competing technologies.

  5. [url=https://1xbet-login.site/]1xbet[/url] 1xbet login, 1xbet official site, 1xbet website, 1xbet site login, 1xbet access, 1xbet online, 1xbet login today, 1xbet working site, 1xbet mirror, 1xbet working mirror, 1xbet new mirror, 1xbet mirror today, 1xbet no block, 1xbet mobile, 1xbet mobile version, 1xbet app, 1xbet account, 1xbet online betting

  6. Подбираю советы по доступным направлениям с direct рейсами из Еревана и Ташкента в Европу. Больше всего интересны доступные варианты с лоукостами и горячими авиабилетами из Москвы, Праги и Берлина – желаю понять вопрос, куда на самом деле бюджетнее всего улететь и какие аэропорты целесообразнее выбирать в Болгарии, Польше и Чехии.

    Путешественникам, которые тоже в разведке, настоятельно советую ознакомиться на самые экономичные авиабилеты из Москвы и прочие известные маршруты через [url=https://lowcostpro1.ru]дешевые авиабилеты из ташкента[/url] . Там легко обнаружить цены на билеты в Литву, Норвегию, Грецию и даже Доминикану, а также ознакомиться про аэропорты Израиля, ОАЭ и Англии. Был бы благодарным за рекомендации по низкобюджетным перевозчикам и проверенным доступным вариантам!

Leave a Reply to 신촌 에이스 Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top