13 மோகவிழியால் எனை தைக்காதே
அங்கே வந்த நர்ஸ் “ஏங்க இது ஹாஸ்பிட்டல் எத்தனை தடவை சொல்றது.. நீ உங்க ஒப்பாரிய வீட்ல போய் வச்சுங்குங்க” என்று கலைவாணியை திட்ட விட்டு போனார்.
ஈஸ்வரி தன் தாய்க்கு மருந்து கொடுத்துவிட்டு நேரமே கிளம்பி ஹாஸ்பிட்டலுக்கு வந்து விட்டாள்.. கலைவாணியின் அருகே வந்த ஈஸ்வரி.. “அக்கா சார் இப்போ எப்படியிருக்காரு”
“அவன் நல்லாயிருக்கான்மா.. இன்னிக்கு நீ, என் தம்பிய பார்த்துக்க முடியுமா.. எனக்கும், என் பையனுக்கும் கொஞ்சம் முக்கியமான வேலையிருக்கு.. ஆனா தம்பி கேட்டா அக்கா இப்பதான் வந்துட்டு போனாங்கன்னு சொல்லிடு.. பிரபுவ கேட்டா அவனுக்கு காலேஜ்ல எக்ஸாம் இருக்குன்னு போய்ட்டானு சொல்லிடுமா” என்றிட.
ஈஸ்வரிக்கு ஏன் கலைவாணி இப்படி பேசுகிறார் என்று தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.. “சரி” என்று தலையாட்டினாள் ஈஸ்வரி.
பிரபுவும், கலைவாணியும் குருமூர்த்தி அனுப்பி வைத்த காரில் திருநெல்வேலிக்கு சென்றனர்.
சின்னய்யாவுக்கு கல்யாணம் ஆகிட்டுச்சுன்னு.. என்று தெரிந்து ஊரே கிருஷ்ணாவின் வீட்டு முன் நின்றிருந்தது.
கிருஷ்ணாவின் கார் வீட்டு வாசலில் போய் நிற்க.. கிருஷ்ணாவும் தங்கமீனாவும் காரிலிருந்து இறங்கி வீட்டு வாசலுக்கு வந்தனர். “கோல்ட் உன் முகத்தை சோகமாக வைக்காத.. என் அப்பாவுக்கு இந்த ஊருக்குள் ஒரு நல்ல பெயர் இருக்கு” என்று அவன் செய்த தவறு தந்தையின் பெயருக்கு கலங்கம் வரவைத்துவிட்டது என்றெல்லாம் அவனுக்குத் தெரியவில்லை.. தங்கமீனாவின் முகம் மலர்ச்சியாக இருக்க வேண்டும்.. என்று மட்டும் விரும்பினான்.
கிருஷ்ணாவும் தங்கமீனாவும் வீட்டு வாசலில் சேர்ந்து நிற்க இருவருக்கும் சுமங்கலி பெண்கள் ஆரத்தி எடுத்தனர்.. ஊர்மக்கள் அனைவரும் ஜோடிப்பொருத்தம் அருமையாயிருக்குள்ள.. பொண்ணு ரொம்ப மூக்கும் முழியுமா இருக்கு.. என்று மூக்கின் மேல் விரல் வைத்துப்பார்த்திருந்தனர்.
ஆரத்தி எடுத்து முடித்து இருவரும் வலதுகாலை எடுத்து வைத்து வீட்டுக்குள் சென்றனர்.. வீடு கோவில் போல சுத்தமாக இருந்தது.. ஒரு பொருள் மீது கூட தூசி இல்லை.. தரையில் சாப்பாட்டு போட்டு சாப்பிடலாம் அவ்வளவு பளிச்சென்றிருந்தது.. தங்கமீனாவுக்கு ஏதோ கோவிலுக்குள் வந்தது போலிருந்தது.. வீட்டின் பிரம்மாண்டத்தை கண்டு வியந்து போனாள்.. நான் இந்த வீட்டிலா வாழப்போறேன்.. என்று அவளுக்கு ஐயம் வந்தது.
கிருஷ்ணாவோட அம்மா எங்க.. அவங்கள காணோம்.. கிருஷ்ணா தன் குடும்பத்தைப் பற்றி அவளிடம் ஏதும் கூறவில்லை அவளுக்கு எப்படி தெரியும்.. ஒரு வேளை உடம்பு சரியில்லையோ.. அதற்குத்தான் நம்மள கல்யாணம் கட்டி கூட்டிட்டு வந்திருக்காரோ என்றெல்லாம் தங்கமீனாவின் மனதில் அலை அலையாய் கற்பனைகள் தோன்றியது.. அதை கலைக்கும் விதமாக அங்கே அந்த வீட்டில் காலம் காலமாய் வேலைசெய்யும் பத்மினி பாட்டி வந்து.. “சின்னம்மா வாங்க வந்து பூஜையறையில குத்துவிளக்கேற்றுங்க” என்ற அவள் கைப்பற்றி கூப்பிட.. அவள் கிருஷ்ணாவை பார்க்க..
“பத்து பாட்டி நான் வராம என் பொண்டாட்டிய எங்க கூட்டிட்டுப்போறீங்க” என்று தங்கமீனாவின் கைப்பிடித்து கூட்டிச்சென்றான்.. எப்படியும் கொஞ்ச நேரத்தில் கலவரம் வெடிக்கும் என்று அவனுக்கு தெரிந்து விட்டது.. கொஞ்ச நேரம் சந்தோசமாக இருந்து கொள்ளலாமென்று தங்கமீனாவின் கைப்பற்றிக்கொண்டு பூஜையறைக்கு சென்று அவளை விளக்கேற்றச் சொல்ல.. அங்கே அவர்கள் குலதெய்வம் அங்காளம்மன் சிலையிருக்க கண்மூடி பிராத்தனை செய்து எல்லார்க்கும் பாதகம் இல்லாம நடக்கணும்.. எந்த பிரச்சனையும் பெரிசா வரக்கூடாது.. கடவுளே என் மாமா அருளுக்கு சீக்கிரம் குணமாகி என்னை விட நல்லா பொண்ணா அவருக்கு கிடைக்கணும்.. என்று கும்பிட்டவள் அங்கேயிருந்த பெரிய இரண்டு குத்துவிளக்கிலும் விளக்கேற்றினாள்.
இருவருக்கும் பால் பழம் கொடுத்து ஆடைமாற்றச் சொன்னார் பத்மினி.
“பாட்டி.. ஐய்யா இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துடுவாரு.. அப்புறம் மாத்திக்கிறோம்” என்று சோபாவில் உட்கார்ந்தவன் வீட்டை சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தவளின் கையை பிடித்து தன்அருகே அமரச்செய்து அவள் தோள் வளைத்துப்பிடித்து தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு “எப்படி இருக்கு எங்க வீடு” என்றானே பார்க்கலாம்.
அவளுக்கோ..அவன் தலையில் கல்லை தூக்கிப்போடலாம் என்றிருந்தது.. நானே எங்கம்மாவுக்கு இந்நேரம் எல்லாம் தெரிந்திருக்கும்.. என்ன பாடுபடுவார்களோவென்று நெஞ்சுல பாரத்தோடு இருக்கேன்.. உங்களுக்கு கிளுகிளுப்பு கேட்குதோ அவனை எரிச்சலாய் முறைத்துப்பார்க்க.
“ஏய் ரொம்ப முறைக்காதடி.. இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் வந்து நம்மள திட்டப்போறாங்க.. என்னை கொஞ்ச நேரம் உன் கூட ரொமான்ஸ் பண்ண விடுடி” என்று அவள் காதோரம் மீசையை உரச.
“ச்சே தள்ளிப்போங்க” கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாம.. என்னோட தவிப்பை புரிச்சுக்கலையே” என்று கிருஷ்ணாவை தள்ளிவிட்டாள்.
“என்னடி தாலி கட்டின புருசனை தள்ளிவிடுற” என்று அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து அப்படியே கழுத்து வளைவில் முகம் புதைக்க.
“கிருஷ்ணா” என்று குருமூர்த்தியின் குரல் கேட்டு முகத்தை இறுக்கமாக வைத்து மனைவியை விட்டு பிரிந்து எழுந்து நின்றான்.
தங்கமீனாவோ பயத்தில் எச்சில் விழுங்கி கால்கள் நடுக்கத்துடன் எழுந்து நின்றாள்.
“ஐய்யா எதுவாயிருந்தாலும் என்னை திட்டுங்க.. நான் தான் இவள கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணினேன்” என்று நெஞ்சை நிமிர்த்தி நின்றான்.
குருமூர்த்தி மெல்ல நடந்து கிருஷ்ணாவின் அருகே வந்து அவன் முகத்தை உற்றுப்பார்த்து “ஏன் தம்பி இப்படியொரு தப்பான காரியத்தை பண்ணின” என்று அவன் கன்னத்தில் ஓங்கி அறைய.. அவர் அடியை புன்னைகையுடன் வாங்கினான் கிருஷ்ணா. வீட்டில வேலைசெய்யும் அனைவரும் வாயடைத்துப்போய் நின்றனர்.. இதுவரை கிருஷ்ணாவை குருமூர்த்தி ஒரு முறை கூட அதட்டி பேசியதில்லை.. இன்று அவனை அடித்ததும் அனைவரும் கரண்ட் ஷாக் அடித்ததது போல அதிர்ந்து நின்றிருந்தனர்.
தங்கமீனாவை குருமூர்த்தி திரும்பி பார்க்க அவள் கழுத்தில் கிருஷ்ணா கட்டிய தாலியை இறுகப்பிடித்து நின்றிருந்தாள்.. ஒருபக்கம் குருமூர்த்தியின் மனதில் நிம்மதி வந்தது.. தன் மனைவியை போல அல்லாமல் தங்கமீனா, தன்மகன் கட்டிய தாலியை கெட்டியாக பிடித்திருப்பதைக் கண்டு அவள், கிருஷ்ணாவை விட்டு பிரியமாட்டாளென்று உறுதியாக நம்பி இருந்தார்.
“அம்மாடி தங்கமீனா இங்கவா” என்றதும்..
கிருஷ்ணாவை ஒரு முறை திரும்பி அவள் பார்க்க.. அவன் “போ” என்று கண்ணசைவு கொடுக்க.
மெல்ல நடந்து குருமூர்த்தியின் அருகில் சென்றாள்.
“உனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கலன்னா இப்பவே சொல்லிடு உன்னோட அம்மாவ வரச்சொல்லியிருக்கேன்.. அவங்க வந்ததும் உன்னை அனுப்பி வச்சிடறேன்” என்று கிருஷ்ணாவை பார்த்துக்கொண்டே கூற.
கிருஷ்ணாவோ புன்னகை அரும்பிய முகத்துடன் புறம்கை கட்டி நின்றிருந்தான்.
தங்கமீனா அமைதியாக நிற்க.. “நேத்து நான் உன்னை என் பையன கல்யாணம் செய்ய சம்மதம் கேட்டேன் .. நீ இல்லனு சொன்னல .. இப்ப இவன் கட்டாய தாலி காட்டிட்டான் என்ன பண்ண போற.. என்னம்மா சிலை போல இருக்க வாய் திறந்து பேசு” என்றார் குருமூர்த்தி.. கழுத்தில் தாலி கட்டிய பிறகு நான் வாழமாட்டேன் என்று அவளால் கூற முடியவில்லை.
“எனக்கு இந்தக் கல்யாணம் ஓ.கே தாங்க சார்” என்று கூறி முடிக்கவில்லை.
தங்கமீனாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார் கலைவாணி.. பிரபு, தங்கமீனாவின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போய் நின்று விட்டான்.
“அம்மா” என்று அவள் கலைவாணியை அணைக்கப் போக..
“அப்படியே தள்ளி நில்லுடி.. பணப்பகட்ட பார்த்ததும் என் தம்பி உனக்கு கிள்ளுக்கீரையா போய்ட்டானா” என்று அவளை வார்த்தையால் சவுக்கடி கொடுத்தார் கலைவாணி.
வீட்டில் வேலை செய்பவர்களை கிருஷ்ணா கண்ணசைவில் போக சொன்னான்.. தான் இதுவரை தந்தையிடம் அடிவாங்கியது ஒன்றும் அவனுக்குப் பெரிதாக தெரியவில்லை.. ஆனால், தன் மனைவி மற்றவர் முன்பு அவமானப்படக்கூடாதென்று எண்ணி அனைவரையும் வெளியே போகச் சொன்னான்.
அனைவரும் சென்று விட என் தம்பி அருளுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும் சொல்லுடி சிறுக்கி மவளே.. இப்படியொரு காரியத்தை செய்ய உனக்கு எப்படி மனசு வந்துச்சு என்று அவள் கன்னத்தில் அறைய இம்முறை கிருஷ்ணா கலைவாணியின் கையை பிடித்துக்கொண்டான்.
“கைய விடுங்க என்னை பொண்ணு செய்த தப்புக்கு அவள எனக்கு அடிக்க உரிமையிருக்கு” என்று அவன் கையை விடச்சொல்ல
“உங்களுக்கு உங்க பொண்ண அடிக்க உரிமை இல்லனு இங்க யாரும் சொல்லல.. முதல்ல அமைதியா நான் சொல்றத கேளுங்க” என அழுத்தமாக கிருஷ்ணா கூற
“நீங்க சொல்றத நான் கேட்க வரல தம்பி.. என் பொண்ண நான் கூட்டிட்டு போக வந்திருக்கேன்” என்று கிருஷ்ணாவிடம் பேசிக்கொண்டே தங்கமீனாவை பார்த்தார் கலைவாணி.
தங்கமீனாவோ தாலிக்கயிறை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.. அவள் செய்கையில் முகம் சுளித்து “நீ என்னை இப்படி ஏமாத்துவனு நினைக்கலடி” என்று வாய் முணகினார்.
“அம்மா என்னை மன்னிச்சுடும்மா” என்று கலைவாணியின் காலில் விழ..
“என்னை தொடக்கூட உனக்கு உரிமையில்லடி என் பொண்ணு செத்துப்போயிட்டானு நினைச்சுகுறேன்” என்று வாசலைபார்த்து திரும்ப.
“ஒரு நிமிசம் நில்லுங்க” என்று கிருஷ்ணாவின் குரலில் கலைவாணியின் கால்கள் நிற்க..
“உங்க பொண்ணு மேல தப்பில்ல.. நான் அவள கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக் கூட்டிவந்தேன்.. எல்லாம் தப்பும் என்மேல தான்” என்றதும்
கலைவாணிக்கு தன் வளர்ப்பில் பெருமிதம்தான் தோன்றியது.. ஆனால் அந்நொடியே என் மகளாயிருந்தா சொந்தம் இல்லாத வேறொருவனை தன் கழுத்தில் தாலி கட்ட அனுமதித்திருக்கக்கூடாது என்று எண்ணி..
“நீங்க தப்பு செய்தா அந்த தப்புக்கு என்பொண்ணு உடந்தையா இருந்திருக்கா” என்று விசும்பிக்கொண்டிருக்கும் தங்கமீனாவை முறைத்து பார்த்தபடி கூற.
“அம்மா என்னை மன்னிச்சுடு.. நான் உன் கூட வர.. மாமாக்கிட்ட நான் வந்து மன்னிப்பு கேட்பேன்”
“ஏய் பெத்தவயிறு பத்திக்கிதுடி.. நீ அங்க வந்து என் தம்பி உசிரை எடுத்துராதடி.. நீ நல்லாயிருப்ப” என்று கண்ணீருடன் தங்கமீனாவை பேச
அதுவரை அமைதியாய் நின்றிருந்த குருமூர்த்தி கலைவாணியிடம் சென்று “அம்மா என் பையன் உங்க பொண்ணு கழுத்துல தாலி கட்டினான்.. அதை இனி மாத்த முடியாது.. அது ஜென்ம பந்தம் இன்னார்க்கு இன்னார்ன்னு ஈசன் எழுதி வைத்துவிட்டான்.. நீங்க சொன்னாலும் நான் சொன்னாலும் எதுவும் மாறி நடக்காது.. பொண்ணையும் பையனையும் மன்னிச்சு ஆசிர்வாதம் பண்ணும்மா”
“இல்ல! இல்ல! நான் ஆசிர்வாதம் பண்ண மாட்டேன்.. இங்க இன்னும் கொஞ்ச நேரம் நின்னேன்னா.. என் பொண்ணுக்கு நானே சாபம் விட்டிருவேன்” என்று கண்ணீருடன் வெளியே போய் விட்டார்
“பிரபு” என்று தம்பியை தாவி அணைத்துக்கொண்டாள் தங்கமீனா
“அக்கா ஏன்க்கா இப்படி பண்ணின.. அருள் மாமா பாவம்க்கா” என்று அவனும் கூற.
“டேய் நீயாவது என் நிலைமையை புரிஞ்சுக்கடா” என்று தம்பியிடம் கதற
“சரிக்கா பத்திரமா இரு” என்று கூறிவிட்டு கிருஷ்ணாவை முறைத்து சென்றான்.
அப்படியே பளிங்குதரையில் மடிந்து உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள் தங்கமீனா.

https://onespotsocial.com/joselduranar
[url=https://1xbet-mirror.site/]1xbet[/url] 1xbet login, 1xbet official site, 1xbet website, 1xbet site login, 1xbet access, 1xbet online, 1xbet login today, 1xbet working site, 1xbet mirror, 1xbet working mirror, 1xbet new mirror, 1xbet mirror today, 1xbet no block, 1xbet mobile, 1xbet mobile version, 1xbet app, 1xbet account, 1xbet online betting
CM88
weight loss steroids clenbuterol
References:
postheaven.net
References:
Fair To Go casino rocket cashback mobile app
References:
Casino maryland
References:
https://verde-casino-no-deposit-bonus-codes.online-spielhallen.de/
References:
Mgm casino
References:
https://casino-royal.online-spielhallen.de/
References:
Göttingen
References:
https://bluvegas-casino.online-spielhallen.de/
References:
Darmstadt
References:
https://pino-casino.online-spielhallen.de/
References:
Mönchengladbach
References:
https://casino-spiele-kostenlos-ohne-anmeldung.online-spielhallen.de/
References:
Münster
References:
https://online-casino-promotion-codes.online-spielhallen.de/
References:
Global gaming expo
References:
https://graph.org/Woo-Casino-Login-04-27
References:
Tdu2 casino
References:
https://tripleoggames.com/employer/payid-casino-australia-minimum-deposit-my-review-2026/