ATM Tamil Romantic Novels

மோகவிழியால் எனை தைக்காதே

15 மோகவிழியால் எனை தைக்காதே
 
சாவித்ரி கண்ணில் கண்ணீர் நீர் கோர்த்து விழவா.. என்று வெளியே எட்டிப்பார்த்தது.. நான் பெத்த மகன் என்னை வீட்டுக்குள் அழைக்க மாட்டானா? தாலி கட்டிய கணவன்.. தான் செய்த காரியத்திற்கு மன்னிப்பாரா? வெளியே கேட்டின் முன் நின்று மகன் முகம் தெரிகிறதா என்று ஏங்கி  தவித்து எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தார் சாவித்ரி.
 
கிருஷ்ணா எப்போது ஊருக்கு வந்தாலும் இது போல் சாவித்ரி வந்து நிற்பது வழக்கம்தான்.. சாவித்ரியை கடந்து சென்ற சிலர் இந்தம்மா அன்னிக்கு செய்த தவறுக்கு இன்னிக்கு இப்படி நின்று பெத்த மகனை பார்க்க தவம் கிடக்குது பாவம்.. எப்படி ஜகஜோதியா வாழ்ந்த குடும்பம்.. இந்தம்மாவல ஐய்யா வாழ்க்கை ஒளி இழந்து போச்சு.. பாவம் குருமூர்த்தி ஐய்யா என்று சாவித்ரி காதுபட பேசிச் சென்றனர்.. விரக்தியாக சிரித்துக்கொண்டார். என்ன பிரச்சனை நடந்தது என்று குருமூர்த்திக்கும், சாவித்ரிக்கும் மட்டும் தான் தெரியும்.. 
 
கிருஷ்ணா கீழே இறங்கி வந்தவன் ஹாலில் பார்க்க அங்கே குருமூர்த்தி இருக்கவில்லை.. ஓ ஐய்யா ரூம்க்கு போய்ட்டாரு போல என்று எண்ணி அவர் அறைக்குப் போக கட்டிலில் கண்மூடிப்படுத்திருந்தார்.. அவரது மனக்கண்ணில் சாவித்ரியுடன் வாழ்ந்த வாழ்க்கை  அவர் கண் முன் நிழலாடிக்கொண்டிருந்தது.. அறைக்குள் வந்தவர் ஜன்னலை மூடப் போக வாசலில் சாவித்ரி நிற்பதைப் பார்த்து அவர் இதயம் ஒரு நிமிடம் நின்றுவிட்டது.. மகாராணி போல  இந்த வீட்டுக்குள் வீட்டுக்குள்  வந்தவள்  இன்று வீதியில் நிற்பதை கண்டு அவர் நெஞ்சைப்பிடிக்க.. “ஐய்யா என்னாச்சு” என்று மணி அருகே வந்து அவரின் தோளைத்தொட..
 
“அவளை இங்கிருந்து போகச் சொல்லு மணி.. கிருஷ்ணா, அவளப் பார்த்தா ரொம்ப கோவப்படுவான்” என்று கூறியவர் பெருமூச்சுடன் சாவித்ரியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். 
 
மணி குருமூர்த்திக்கு  தண்ணீரை குடிக்க  கொடுத்து  விட்டு வெளியே சென்றதும் கட்டிலில் படுத்தவர் கண்ணை மூட பல வருசம் முன்னால் நடந்தது அவருக்கு நியாபகம் வந்தது.. அந்த நாள் மட்டும் நம் வாழ்க்கையில் வராமல் போயிருந்தால் இந்நேரம் நீயும், நானும் பேரப்பிள்ளைகளோடு இருந்திருக்கலாம் சாவி.. நீயும் அங்க போயிருக்க கூடாது.. நான் சொல்லி நீ கேட்கல.. நான் என்ன செய்ய முடியும்.. ஊரார் முன் என்னாலும் எதுவும் செய்யமுடியாம போச்சு.. அதையும் மீறி நாம வெளியே போலாம்னு சொன்னேன்.. அதற்கும் நீ ஒத்துக்கல.. இப்ப நீயும், நானும் தனித்தனியா வாழுறோம்..அது மட்டுமா என்னோடப் பொண்ணு காயத்ரி.. அவள இரண்டு வயசு குழந்தையா தூங்கிட்டுப் போன.. இன்ன வர நான், என் பொண்ண எட்ட நின்னு பார்க்கும்படி செய்துட்டயே நீ.. என்று கண்ணைமூடி அவரது நினைவலைகளை ஒவ்வொன்றாக அசைப்போட்டார்.
 
அவர் கண்மணிகள் இரண்டும் உருள்வதைப் பார்த்த கிருஷ்ணா.. ஐய்யா இன்னும் தூங்கல போல என்ன யோசனையா படுத்துருக்காரு என்று குருமூர்த்தியின் அருகே சென்று கட்டிலில் அமர்ந்து.. “ஐய்யா” என அவர் தோளைத்தொட.
 
கண்ணைத்திறந்தவர் கிருஷ்ணாவை பார்த்ததும் “எப்ப தம்பி வந்த ” என்று ஜன்னலை பார்த்துக்கொண்டே கேட்க.. 
 
“ஐய்யா இப்ப நான் உங்களை செக் பண்ண வந்தேன்” என்று ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் மாட்டிக்கொண்டு அவர் ஹாட்பீட்டை செக் பண்ண அது சீராக இயங்கியது..  வெகு நாட்கள் கழித்து மனைவியை பார்த்ததால் இன்று ஏனோ அவர் மனம் நிம்மதி அடைந்தது.. 
 
“நார்மலா இருக்கு சாப்பிட்டங்களா” என்றதும் 
 
“இப்பதான் நீ வரும் முன்னே சாப்டேன் தம்பி” என்று கூறிவயர் 
“கிருஷ்ணா உன் அம்மாவ நீ மன்னிக்க மாட்டியா?” என்று கேட்டு மகனை கெஞ்சும் பார்வை பார்க்க.. 
 
“ஐய்யா வேற எதாவது சொல்லுங்க நான் கேட்குறேன்.. அவங்கள மட்டும் என்னால மன்னிக்க முடியாது.. என்னை தனியா தவிக்க விட்டு போனாங்கள்ள.. இப்ப அவங்க தவிக்கட்டும்” கழுத்தில்  மாற்றியிருந்த  ஸ்டெதஸ்கோப்பை கழட்டினான்
 
“தம்பி எல்லாம் என்னாலதான்.. நான் மட்டும் அன்னிக்கு அவளுக்கு சாதகமா நடக்கலையே என்மீதும் தப்பிருக்கே தம்பி.. என்னை ஏத்துக்கிட்ட நீ.. அவள ஏத்துக்கலையே.. ஐய்யா ப்ளீஸ் இப்ப எதுவும் பேசவேணாம்” என குருமூர்த்தி சாப்பிடும் மாத்திரையை எடுத்து அவருக்கு கொடுக்க வாங்கி போட்டுக்கொண்டார்.
 
வெளியே சென்ற மணி கேட்டின் அருகே சென்று “அம்மா சீக்கிரம் கிளம்புங்க.. கிருஷ்ணா தம்பி..  ஐய்யா அறைக்கு போயிருக்கு உங்களைப் பார்த்தா வம்பா போய்டும் இங்கிருந்து போயிடுங்க” என்று மெதுவாக சாவித்ரியிடம் கூறிக்கொண்டிருந்தார்.
 
கிருஷ்ணா.. குருமூர்த்திக்கு மாத்திரையை கொடுத்து விட்டு அவர் கண்மூடியதும் குளிர் காற்று வீச ஜன்னலை மூடப் போக.. சாவித்ரியிடம், மணி பேசுவது கண்டு கடும் கோபத்துடன் வெளியே வந்தான்.
 
“மணி, என் பிள்ளைய பார்க்க கூட உரிமை எனக்கில்லையா.. என் முகம் பார்க்கக் கூட விரும்பல அவன்.. ஒவ்வொரு நாளும் நான் படற வேதனை கொஞ்சம் நஞ்சம் இல்லை” என அவர் பெருங்குரலெடுத்து அழ..
 
“மணீஇஇஇ” என்று கத்தி  அங்க என்ன பண்றீங்க.. அவங்கள அவங்க வீட்டுக்குப் போகச் சொல்லுங்க.. அவங்கள அவங்க வீட்டு ஆளுங்க தேடுவாங்க.. இங்க வந்ததது தெரிஞ்சா அவங்களுக்குத்தான் பிரச்சனை” என்று புறம்கைகட்டி நின்றவனை அந்த இருட்டிலும் கண்குளிர இரசித்துப்பார்த்தார் சாவித்ரி.
 
“அம்மா கிளம்புங்க.. இன்னும் நீங்க நின்னா அதுக்கும் கோபப்பட்டு கத்துவாரு” என்று மணி பதமாகக் கூற.. 
 
சாவித்ரியின் கால்கள் அங்கயிருந்து நகர முடியவில்லை.. இன்னும் கொஞ்ச நேரம் என் பையனை பார்த்துக்குறேன் மணி.. என்று அவன் கோப்படும் அழகை கூட கண் கொட்டாமல் பார்த்திருந்தார்.. மகன் மீது இவ்வளவு பாசம் வைத்திருப்பவர் அன்று ஏனோ அவனை தவிக்க விட்டுப் போனார் என்று தெரியவில்லை.
 
கதவை  அடித்துச் சாற்றி சென்றான் கிருஷ்ணா.. இப்ப என்ன என்மேல கரிசனம் வைத்து பார்க்க வந்திருக்காங்க.. என்று கொதித்தெழுந்து.. இப்போது அவன் அறைக்குச் சென்றால் தங்கமீனா தன்னிடம் ஏதாவது பேசி இன்னும் தன் சினத்தை அதிகப்படுத்துவாள்” என்று எண்ணி மொட்டை மாடிக்குச் சென்றான்.
 
லேசாக குளிர் வீச.. வானில் இருந்த நிலா வெளிச்சம் அவனுக்கு பழைய நியாபத்தை கொடுத்தது.. இதே நிலா வெளிச்சத்தில் சாவித்ரி கிருஷ்ணாவுக்கு நிலாச் சோறு ஊட்டியது அவனின் நியாபகத்துக்கு வந்தது.. இன்னும் அந்த அமுது சாப்பாடு அவன் இதழில் தித்திப்பாய் இருந்தது.. அம்மா அம்மாவென்று சாவித்ரியின் முந்தானையைப் பற்றி வீடெல்லாம் ஊர்வலம் வந்தது அவன் கண்முன் இன்னும் தோன்றி மறைந்தது.. 
 
“ஏன் சாவிம்மா என்னை விட்டுப் போன ஐய்யாவுக்கும், உனக்கும் பிரச்சனை இருக்கலாம்.. நீ என்னை நினைச்சு பார்க்கமா என்னை மட்டும் விட்டுட்டு காயுவ மட்டும் கூட்டிட்டுப்போயிட்ட.. ஒரு முறை என்னை வந்து பார்த்தியா நீ.. நான் ஸ்கூல் முடிச்சு வீட்டுக்கு வந்தப்ப உன்ன காணோம்னு எப்படி துடிச்சுப் போய் அழுதிருப்பேன் 
 
இன்னிக்கு நீங்க துடிக்கறது என்னாலயும் பார்க்க முடியலம்மா என்று எதற்கும் கலங்காதவன்.. எத்தனை பேரை ஆபத்து கட்டத்தில் இருந்து காப்பாத்திய மருத்துவன் இன்று கண் கலங்கி வானத்து நிலவை கைகட்டிப் பார்த்திருந்தான்.. அவனுக்கு புகைவிடும் பழக்கம் எல்லாம் இல்லை.. மருத்துவன் ஆயிற்றே சில ஒழுங்கங்கள் அவனாக ஏற்படுத்திக்கொண்டான்.. குருமூர்த்தியின் வளர்ப்பில் எந்த கெட்டபழக்கங்களும் அவனுக்கு ஏற்படவில்லை.. அவனுக்கு நண்பர்கள் விரல்விட்டு எண்ணிவிடலாம்.. மொத்தத்தில் கிருஷ்ணா தாய் பாசம் கிடைக்காமல் ஏங்கி தவிக்கும் ஆண்மகன்..
 
அந்தப் பாசத்தை தங்கமீனாவிடம் கண்டான்.. தங்கமீனாவை பார்த்ததும் அவள் முகத்தை உற்றுப்பார்த்தானே காதலால் அல்ல.. பாசத்தால்.. ஆம் அவளை ஏற்கனவே ஒருமுறை பார்த்திருக்கிறான் கிருஷ்ணா.
 
கிருஷ்ணாவை ஒருமுறை வெளியூர் கேம்பிற்கு அவனை தலைமை தாங்க அழைத்திருக்க.. காரில் செல்லும் பொழுது டிராபிக் ஜாம் ஏற்பட்டது.. ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தான்.. அவ்வழியே கண் தெரியாத குழந்தைகள் ரோட்டை கடந்து சென்று கொண்டிருந்தனர்.. காரை விட்டு இறங்கி நின்று பார்த்தான். அங்கே தங்கமீனா குழந்தைகளை கை  பிடித்து மறுபுறம் நிற்கும் வேனில் ஏற்றிவிட உதவி செய்து கொண்டிருந்தாள் 
 
அப்போது முன்னால் நின்ற கார் டிரைவர் ஒரு சிலர் ஹாரன் அடிக்க.. அந்த குழந்தைகளுக்கு உதவிக்கொண்டிருந்த தங்கமீனா காரின் முன்னே சென்று “சார் உங்களுக்கு என்ன அவசரம் கண்தெரியாத குழந்தைகள் ரோடு கிராஸ் பண்ணுறாங்க கொஞ்சம் நேரம் பொறுங்க..இல்ல ரொம்ப அவசரம்னா சொல்லுங்க.. நான் அந்தக் குழந்தைகள நிறுத்தி வைக்குறேன்.. நீங்க போங்க” சிறு கோபத்துடன் கூற.. அந்தக் கார் டிரைவர் மௌனமாக இருந்துவிட்டார்.
 
“சின்னப் பொண்ணு இந்தக் குழந்தைகளுக்கு உதவி செய்யுறா”என்று தங்கமீனாவையே பார்த்திருந்தான்.. அதற்குள் குழந்தைகள் அனைத்தும் ரோட்டை கிராஸ் செய்து விட.. அதில் ஒரு குழந்தையை வாரி அனைத்து முத்தம் கொடுக்க.. அந்தக் குழந்தையும் அவளுக்கு திருப்பி முத்தம் கொடுத்தது.. இந்தப் பாசம் எனக்கும் கிடைக்குமா என்று ஆசைப்பட்டான் கிருஷ்ணா.. அதுதான் அவள் மேல் காதலாக வளர்ந்தது கிருஷ்ணாவுக்கு.. ஆனால் அவன் காதலை.. காமம் என்று நினைத்துவிட்டாள்.. காதலில் வரும் காமத்திற்கு ஆயுசு கெட்டி என்பதை தங்கமீனாவுக்கு யார் சொல்வது.. இந்த நிமிடம் வரை அவள் கிருஷ்ணாவுக்கு தன்தேகம் மேல் மட்டுமே காதல்.. என்று நினைத்திருக்கிறாள் அறியா பெண் பேதை.
 
கலைவாணியும், பிரபுவும் ஐ.சி.யுவிற்குள் நுழைய அங்கே பழனி அருளிற்கு சாப்பிட உதவிக்கொண்டிருந்தான்.. அவர்கள் வந்ததும் “அண்ணே ஆபிஸுக்கு நான் போகணும்.. வண்டிக்கெல்லாம் டீசல் போட்டு வைக்கணும்” என்று பழனி கிளம்பிவிட..
 
“அக்கா இப்ப உனக்கு தலைவலி போயிருச்சா.. நைட்டு நீ வீட்டுக்கு போயிடு பிரபு மட்டும் இங்க இருக்கட்டும்.. ஏற்கனவே உனக்கு ஹாஸ்பிட்டல்னா ஒத்துக்காது .. ஆமா தங்கா எங்க அவள காலையிலிருந்து இங்க நான் பார்க்கலையே” என்று அவன் எதார்த்தமாக கேட்க.. அழுகை முட்டிக்கொண்டு வந்தது கலைவாணிக்கு.. அப்படியே அணைபோட்டு நிறுத்திக்கொண்டு “தம்பி அவளுக்கு ஏதோ இன்னிக்கு முக்கியமான ஆப்ரேசனாம் அதான் அவ உன்னை பார்க்க வரல” என்றதும்.
 
“ஓ!!” என்றான் ஸ்ருதி குறைந்த குரலில்.. அவளை தினமும் பார்த்துவிடுவான்.. நேற்றிரவு கூட அவள் தூங்கும் அழகை கண்சிமிட்டாமல் பார்த்திருந்தானே!.. 
 
“சரிக்கா நாளைக்கு என்னை பார்க்க வந்துடுவாளா?” 
 
“ஹா.. வருவா வருவாப்பா” என்று இப்போதைக்கு சமாளித்து வைத்தாள்.
 
பிரபு முகம் வெளிறிப் போயிருக்க.. அவன் பேசாமல் அமைதியாக நின்றிருந்ததை பார்த்த அருளிற்கு சந்தேகம் வலுத்தது.. 
 
“என்ன பிரபு ஏதோ யோசனையா இருக்க.. ஆமா பேங்க்கு பணம் கட்டிட்டியா” என்று கேட்கும் போதே கதவு திறந்து உள்ளே வந்தார் பார்மஸியில் வேலை செய்யும் நபர்..
 
“சார் உங்க பணப்பையை நீங்க மருந்து வாங்கும்போது அங்கேயே வச்சிட்டு வந்துட்டீங்க” என்று பிரபுவின் கையில் பணம் இருக்கும் பையை கொடுக்க.. அவனுக்கு ஏதோ மாயாஜாலம் நடந்தது போலிருந்தது.. நான் மருந்து வாங்கும்போது என் பாக்கெட்டில் தான் பணம் இருந்துச்சு.. அங்க பணத்தை பாக்கெட்டை விட்டு எடுக்கவில்லையே.. என்று யோசித்தவன் பார்மசி நபர் நிற்க ரொம்ப “தேங்க்ஸ்ங்க” என்றதும் அவர் சென்றுவிட.
 
“ஏண்டா என் தம்பி இரா பகலா கஷ்டப்பட்டு பாடுபட்ட பணத்தை நீ அஜாக்கிரதையா தொலைச்சுகட்ட பார்த்தியே” என்று ஆத்திரத்தில் பிரபுவை கத்த ஆரம்பித்தார் கலைவாணி.
 
“அக்கா சத்தம்போடாத இது ஹாஸ்பிட்டல்” என்று கலைவாணியை அதட்டியவன்.. “என்ன பிரபு நாலு பேர் வந்து போற இடம் இது கேர்புல்லா இருக்க வேணாமா” என்று பிரபுவை கடிந்து கொண்டான்.
 
“மாமா நான் பத்திரமாதான் வச்சிருந்தேன் எப்படி பணம் காணாம போச்சோ தெரியலை” என்று அவன் வருத்தப்பட..
 
“சரி சரி பணம் கிடைச்சிருச்சுல்ல.. முதல் வேளையா நாளைக்கு போய் கட்டிரு” என்று சொல்லிவிட்டு 
 
“அக்கா எனக்கு தூக்கம் வருது.. நீ வீட்டுக்கு கிளம்பு பிரபு இருக்கட்டும்.. நீ காலையில வா” என்று தூக்கத்திற்கு சென்றான்.
 
அருள் தூங்கியதும் “எதுவும் தம்பிக்கிட்ட சொல்லிடாத” என கண்சாடை காட்டி சென்றாள் கலைவாணி.
 
உங்க லைக்ஸ் தான் எனக்கு பூஸ்ட் பிரண்ட்ஸ்
 

3 thoughts on “மோகவிழியால் எனை தைக்காதே”

  1. Machen Sie Ihren Kindern oder Enkeln eine Freude und lesen Sie ihnen die echten Klassiker vor. Abseits der weichgespülten Filmversionen bieten die Originaltexte viel Gesprächsstoff. Eine Grimms Märchen PDF ist schnell heruntergeladen und bietet Stoff für hunderte von gemeinsamen Vorlesestunden. https://grimmsmarchenpdf.site/ Grimms Fairy Tales Ebook

  2. Try your luck with [url=https://jilispins-casino.com]jilispin login[/url] and win a big prize today!
    To sum up, jili spin effectively blends new technology, safety, and enjoyment.

Leave a Reply to Lathasivakumar Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top