ATM Tamil Romantic Novels

16 மோகவிழியால் எனை தைக்காதே

16 மோகவிழியால் எனை தைக்காதே
 
ஈஸ்வரி, பரிமளாவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வர.. அவரை பரிசோதித்த டாக்டர்.. “ஈஸ்வரி, உங்கம்மாவுக்கு நுரையீரல் புல்லா சளி கட்டிக்கிடக்கு.. இனி கொஞ்ச நாள்தான்” என்று கூற.. அவளுக்கு கண்ணீர் ஆறாய் பெருகி வந்தது.. 
 
“டாக்டர் அம்மாவ காப்பாத்த முடியாதா” கேட்கும்  போதே அவளுக்கு தொண்டை அடைத்தது
 
“நுரையீரல் முழுவதும் அரிச்சு போயிடுச்சு” என்று கூறிய டாக்டர் பரிமளாவுக்கு தற்போது  எடுத்த எக்ஸ்ரேவை காட்ட அதில் இருந்ததை பார்த்து அவள் கண்ணை மூடிக்கொண்டாள்.
 
“இன்னும் ஒரு மாசம் தாங்குவாங்க.. இப்பவே ஹாஸ்பிட்டல தங்கியிருந்து டீரிட்மெண்ட் பார்த்தா இன்னும் ஒரு மாசம் கூடுதலா இருப்பாங்க அவ்ளோதான்” என்று கூற..
 
“அப்ப இப்பவே அம்மாவ பெட்ல அட்மிட் பண்ணுங்க டாக்டர்”
 
“ஓ.கே ம்மா உங்கம்மா மயக்கத்துல இருங்காங்க மயக்கம் தெளியட்டும் வார்டுக்கு கூட்டிட்டு வரேன்.. அதுவரை நீ வெளியில வெயிட் பண்ணுமா” என்றதும் ஈஸ்வரி வெளியே சென்று விசிட்டரி நாற்காலியில் தலைசாய்த்து அமர்ந்தாள்.
 
பரிமளா தன்னைவிட்டு இன்னும் இரண்டு மாதத்தில் போய் விடுவார் என்பதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.. தாயும், தந்தையும் மகிழ்ச்சியால் வாழ்ந்த வாழ்க்கை திரும்ப வராதா என்று ஏக்கம் கொண்டாள் பேதை பெண்..அது நடக்காதே என்று கண்ணீர் வெள்ளம் கரைபுரண்டோடியது.
 
மொட்டை மாடியில் நின்றிருந்தவனை பத்மினி பாட்டி கீழேயிருந்து கிருஷ்ணா தம்பி என்றழைக்க..
 
மொட்டை மாடிக்கதவை சாற்றிவிட்டு கீழேயிறங்கினான்..
 
கிருஷ்ணா கீழே  வந்ததும்.. “தம்பி அந்தப் பொண்ணு சாப்பிடாம படுத்திருச்சு.. இந்தாங்க இந்த சப்பாத்திய கொண்டு போய் கொடுங்க.. தட்டுல கேசரி வைச்சிருக்கேன்.. நம்ம வீட்டுக்கு முதன்முதலா வந்திருக்கப் பொண்ணு ஸ்வீட் சாப்பிடனும்” என்றிட..
 
“ம்ம்” என்று தலையசைத்து சென்றான்.
 
தட்டுடன் மேலே செல்ல குளித்து விட்டு வேறு சேலைக்கு மாறி தலை முடியில் ஈரம் சொட்டச் சொட்ட கட்டிலில் உட்கார்ந்திருந்தாள்.
 
“இப்படியே தலையை துவட்டாம அப்படியே ஈரத்தோட இருந்தா சளி பிடிக்காதா.. அறிவு கெட்ட இவ எல்லாம் என்ன மெடிக்கல் படிச்சாலோ தெரியல” என்று தட்டை பக்கத்து டேபிளில் வைத்து விட்டு வாட்ரோப் திறந்து டவல் எடுத்து தங்கமீனாவின் தலையை துவட்டிவிட அப்படியே சிலையாக உட்கார்ந்திருந்தாள்.. 
 
தலைமுடியை துவட்டி விட்டு கிளிப்பெடுத்து வர.. கிருஷ்ணாவை தீயாக முறைத்து அவன் கையிலிருக்கும் கிளிப்பை வாங்கி மயில் தோகையாய் விரிந்திருக்கும் தலைமுடியை கிளிப்போட்டு அடக்கி விட்டு படுக்க படுத்தாள்.
 
“ஏய் கோல்ட் என் மேல கோபம் இன்னும் போகலையா.. நான், நீ ஓவரா வாய் பேசினத்துக்கு தான் அடிக்க கையை ஓங்கினேன். என்னை மன்னிச்சுடு கோல்ட்.. உன்னோட பாசத்துக்கு மட்டும்தான் நான் அடிமையாய் இருப்பேன்.. என்னை தப்பான கண்ணோட்டத்துல பார்க்காத கோல்ட்.. என்னை நம்பு.. நான் உன்ன உயிருக்கு  உயிரா லவ் பண்ணுறேன்” என்று அவன் உண்மையை பேச.. 
 
இவளோ முட்டாள்தனமாய்.. “என்கிட்ட பொய் பேசாதீங்க” என்று வேதாளமாய் முருங்கை மரம் ஏறினாள்.
 
கிருஷ்ணாவிற்கு கோவம் உச்சிக்கு ஏற.. பல்லைக்கடித்து பொறுத்துக்கொண்டு “சரி என் மேல கோவமாவேயிரு.. ஆனா இப்போ நீ சாப்பிட்டாகணும்” என்று தட்டை எடுத்து அவளுக்கு சப்பாத்தியை ஊட்ட அவள் வாயை மூடிக்கொண்டாள்.. 
 
மயிலே மயிலேனா இறகு போடாது என்று அவனது ஸ்டெயிலில் சாப்பாத்தி ஊட்டினான்.. அவன் சாப்பிட்டு அவன் வாயிலிருந்த சப்பாத்தியை அவள் வாய்க்குள் கடத்தியிருந்தான் உதயகிருஷ்ணா.. அப்படியே அவளையும் சாப்பிடவைத்தான்.
 
அவள் மறுக்க மறுக்க சாப்பாத்தியை தன் வாய் கொண்டு அவள் வாயில் நிரப்பிவிட்டான்.. தங்கமீனாவோ இன்னும் வீம்பாக இருந்தாள்.. அவள் வீம்பு கிருஷ்ணாவிடம் செல்லுபடியாகாது என்று சிறு பேதை தங்கமீனாவுக்கு தெரியவில்லை.. சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீரை தொட்டு அவள் இதழை வருடி துடைத்துவிட முகத்தை திருப்பினாள்.. விடுவானா அந்த மோகக்கார மருத்துவன்.. முகம் திருப்பியவளை தன் முகம் பார்க்க வைத்தான்..
 
அவள் மையிட்ட கண்களை காதலுடன் மோகப்பார்வை பார்த்தான்.. அவள் வில் போன்ற புருவத்தை விரல் கொண்டு நீவி விட்டான்.. அவன் கைகள் அவளை அணைக்கச்சொல்லியது.. அவன் இதழோ அவள் இதழை வலிக்க வலிக்க முத்தமிடச்சொல்லியது.. கழுத்தில் மீசை கொண்டு உரசி விளையாட வேண்டுமென அவன் மீசை துடித்தது.. பிரச்சனையெல்லாம் பெட்ரூம்க்கு வெளியே இருக்க வேண்டுமென்று நினைப்பவன் கிருஷ்ணா.. வீட்டில் அவனது அறைக்கு மட்டும் ரிமோட்டால் கதவை லாக் பண்ணும் முறை வைத்திருந்தான்.. கதவை ரிமோட் மூலம் லாக் செய்து விட்டு அவளிடம் தன் ஆளுமையை ஆரம்பித்தான்.
 
“கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா உங்களுக்கு.. இப்போ எனக்கு விருப்பம் இருக்கா இல்லையான்னு கேட்கமாட்டிங்களா?”  
 
“நான் தொடும்போது நீ அக்சப்ட்தான பண்ணின.. இப்ப என்னடி உனக்கு வந்துச்சு” என்று பல்லைக்டிகத்தான்.
 
அவன் முகம் அருகே இருக்க.. அவனது மூச்சுக் காற்று அவள் முகத்தில் பட்டுக்கொண்டிருக்க.. இவளோ அந்த மூச்சுக்காற்றில் பலகீனமாகி அவன் முகத்தை பார்த்து “ஹா உங்களுக்கு என்னோட அம்மா காலையில் என்கிட்ட பேசினது நினைவில்லையா.. அவங்க அவமானப்பட்டு போனது என் கண்ணு முன்ன நிற்குது.. நான் இப்போ உங்க கூட எப்படி குலைய முடியும் ஹான்” என்று கண்ணீர் வடித்து.. “நான் என்ன மனநிலையில இருக்கேனு கூட தெரியாமல் என்னை ஆளத்துடிக்கும் உங்கள எனக்குப் பிடிக்கல” என்று பேச அவளது மார்புகூடு மேல கீழே என்று ஏறி இறங்க..
 
“ஏய் இப்ப நான் உன்ன முழுசா எடுத்துக்க போறதில்ல.. உன்னை அப்படியே கட்டி அணைச்சுக்கணும்.. இப்படி கழுத்தில் முகம் புதைக்கணும்.. காலோடு கால் சேர்த்து பிணைச்சுக்கணும்.. உன் மார்பில முகம் தேய்க்கணும்” என்றுதான் என்னோட ஆசை.. அதைவிட உன்னோட பாசம் காதலா எனக்கு வேணும்டி.. என்று கூறியவனின் வழக்கமான மோகப்பார்வைக்கு கண்டுட்டுதான் போனாள் தங்கமீனா.. 
 
ஆண்மகனின் கைகள் அவள் மேனியில் மெதுவாக படர விட.. உதடு கடித்து தலை குனிந்தாள்.. அவள் கடிக்கும் உதட்டை தன் உதடு கொண்டு கடித்து சுவைக்க எண்ணினான்.. எண்ணியதோடு இல்லாமல் அவளை அப்படியே கட்டிலில் சரிய விட்டு சிறிது நேரம் இதழில் முத்தாடினான்.. அவள் இதழில் வரும் தேன்அமுதம் போதுமென்றே தோணவில்லை அவனுக்கு.. 
 
அவள் மூச்சுவிட சிரமம் பட அவள் இதழ் விட்டு பிரிய மனமில்லாமல் பிரிந்து அவள் மயில் தோகையாய் விரிந்திருக்கும் கூந்தலுக்குள் முகத்தை நுழைத்துக் கொண்டு வாசம் பிடித்து “ஏய் கோல்ட் என்ன ஷாம்பு யூஸ் பண்ணுற வாசமா இருக்கு”. என்று அவள் கூந்தலை கைகள் கொண்டு வருடி விட்டான்.. 
 
அவளுக்கு பத்திக்கொண்டு வந்தது.. பேசாமல் படுத்திருந்தாள்.. அவளின் சூழ்நிலையை அவன் அறிந்து கொண்டு அவன் எண்ணியபடி அவள் கழுத்தில் மீசையால் உரசி.. கழுத்தில் செல்லக்கடி கடித்தும்.. குட்டி குட்டி முத்தம் வைத்தும் அவளை ஆராய்ச்சி செய்தான் மருத்துவன்.. அவள் எதிர்வினை காட்டாதிருக்க.. அவள் மார்பில் குழந்தையாய் முட்டி முகம் தேய்த்து விளையாடி இடுப்பு சேலையை விரல்கொண்டு நகட்டி.. இச்சு இச்சு முத்தம் கொடுத்தான் காதலாய்.. அவள் காலை தன் காலோடு சேர்ந்து பிணைத்துக்கொண்டான்.. இப்போது ஏதாவது அவனிடம் முரண்டு பிடித்தால் அவனுக்கு கிறுக்கு பிடித்து காட்டு மிராண்டியாய் நடப்பானென்று எண்ணி அவளும் அமைதியாய் அவன் கொடுக்கும் இன்ப அவஸ்தைகளை இதழ்கடித்து பொறுத்துக்கொண்டாள்.. மீறினால் அவனிடம் இன்னும் தன் எதிர்ப்பை காட்டினால் அவன் கோபத்துக்கு ஆகாரமாய் தன்னை எடுத்துக்கொள்வானென்று கண்ணை இறுக மூடிப்படுத்துக்கொண்டாள். 
 
அவள் செயல் கண்டு உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு அவனது கிருஷ்ண லீலைகளை நிறுத்திவிட்டு “ஏய் கோல்ட் நாம எர்லி மார்னிங் சென்னை கிளம்பணும் சீக்கிரம் எழுந்திடு” என்று அவளை இறுக அணைத்துகொண்டு அவனும் உறங்கிவிட்டான். 
 
பரிமளாவை, அருள் இருக்கும் ஐ.சி.யுவிற்கு பக்கத்து வார்டில் தான் அட்மிட் செய்தனர்.. கண்ணைமூடி அமர்ந்திருக்கும் ஈஸ்வரியிடம் “ஏங்க உங்கம்மா ஐ.சி.யு பக்கத்துல இருக்க வார்டுல படுக்க வச்சிருக்கோம்.. அவங்க உங்களத்தான் கேட்குறாங்க.. வாங்க” என்றதும்.. 
 
“இதோ வரேன்ங்க சிஸ்டர்” என்று பரிமளா இருக்கும் அறைக்குச் சென்றாள்.. அங்கே அவர் இருமிக்கொண்டிருக்க உடனே அவரை தாங்கிப்பிடித்து நெஞ்சை நீவிவிட பரிமளாவிற்கு இப்போது கொஞ்சம் இருமல் மட்டு பட்டது.. 
 
“என்னால நீ ரொம்ப சிரமப்படற ஈஸு” என்று அவர் கண்ணீர் விட..
 
“ம்மா பேசமா படுங்க” என்று அவருக்கு குடிக்க இருமல் மருந்தை கொடுத்தாள்.. 
 
“இன்னும் எத்தனை நாளுடி இந்த மருந்தை நான் குடிக்கறது” என்று அவள் நீட்டிய மருந்தை வாங்கிக்குடித்துவிட்டு படுத்துக்கொண்டார்.
 
பரிமளா தூங்கிவிட ஈஸ்வரிக்கு தாய் இறந்து விடுவார் என்று எண்ணியே அவளுக்கு உறக்கம் வரவில்லை.. எழுந்து பார்க்க பரிமளா உறங்கிக்கொண்டிருக்க கதவு திறந்து வெளியே வந்தாள்.. அருள் இருந்த ஐ.சி.யுவை பார்க்க.. இப்ப உள்ள போலாமா அச்சோ அருள் சார் தூங்கியிருப்பாரு இப்ப போய் அவரை டிஸ்டர்ப்ப பண்ண வேண்டாம் என்று எண்ணியவளோ.. அடுத்த கணமே தூங்கினா என்ன? அவரோட அக்கா வந்தாங்களான்னு கூட நாம போன் பண்ணி கேட்கல.. என்று கவலைப்பட்டவள் தூங்கினா போய் பார்த்துட்டு மட்டும் வந்திடலாம் என்று எண்ணி ஐ.சி.யு கதவு திறந்து சென்று பார்க்க அருள் தூங்கிக்கொண்டிருந்தான்.. 
 
பிரபு பக்கத்து பெட்டில் படுத்து உறங்கியிருந்தான்.. அருள் பக்கத்தில் போய் நின்று பார்க்க.. அவன் கருமணிகள் அசைவது கண்டு இன்னும் இவரு தூங்கலையா.. என்று எண்ணி இன்னும் பக்கத்தில் போய் பார்க்க.. அருள் சட்டென்று கண்ணைத் திறக்க.. பெரும்மூச்சுவிட்டு நெஞ்சைப்பிடித்து நின்றாள்.
 
அருளிற்கு தூக்கம் வராமல் கண்ணை மூடிப்படுத்திருந்தான்.. கதவு திறக்கும் ஓசை கேட்டது.. ஆனால் நர்ஸ் யாராவது வந்திருப்பாங்கன்னு நினைத்திருந்தான்.. அவன் முகம் பக்கம் ஏதோ நிழலாடுவது போலிருக்க கண்ணை  திறந்து பார்த்தான்.. எதிரே ஈஸ்வரி நின்றிருக்க.. அவன் நெற்றி இடுங்க “என்னம்மா இந்த நேரத்துல வந்திருக்க” என்று ஐயப்பட்டு கேட்க.
 
அவளுக்கு பயத்தில் நா எழும்பவில்லை.. “அ..அது வந்து சார் எங்க அம்மாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லாம போச்சு.. டாக்டர் அட்மிட் பண்ணணும்னு சொல்லிட்டாங்க.. பக்கத்து அறையில தான் அட்மிட் ஆகியிருக்காங்க.. நான் தூக்கம் வராம எழுந்து வெளியே வந்தேன்.. அப்படியே உங்கள பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்” என்று பேசி முடிக்க.
 
“உன்கூட யாராவது வந்திருக்காங்களா” என்று கேட்டு படுத்திருந்தவன் எழுந்து உட்கார்ந்தான்.. 
 
பிரபு காரில் போன கலைப்பில் அசந்து உறங்கிக்கொண்டிருந்தான்.. இருவரும் மெல்லத்தான் பேசிக்கொண்டிருந்தனர்..
 
“யாரும் வரல சார்” என்றாள்  வெறுமையாக 
 
“சொந்தக்காரங்க யாரும் இல்லையா” இவனுக்குத்தான் அக்கா குடும்பம் உசிராக இருக்காங்க அந்த நினைப்பில் கேட்டுவிட..
 
“சொந்தகாரங்க இருக்காங்க ஆனா காசு இருக்க மட்டும்தான் சொந்தம்.. எங்க கிட்ட காசு இல்லைன்னு தெரிந்ததும் எங்கே அவங்கிட்ட நாங்க காசு கேட்போமென்று எல்லாரும் காணாம போய்ட்டாங்க” என்று விரக்தியாக சிரித்தாள்.
 
அவளின் கவலை படிந்த முகம் பார்க்க முடியாதவன் “இனி அப்படி பேசாத.. உனக்கு நானும், எக்காக்கா குடும்பமும் துணையா இருப்போம்.. எங்களை சொந்தமா நினைச்சிக்கோ” என்று அவளிடம் ஆறுதலாக கூற.. 
 
“நீங்க பேசறது எனக்கு ரொம்ப சந்தோசம் சார்.. யாருமில்லா காட்டுல என் அம்மாவும், நானும் இருக்கோம்னு நினைச்சேன்.. ஆனா உங்க நட்பு எனக்கு ஒரு ஊன்று கோலா இருக்கு” என்று லேசாக இதழ் விரித்து புன்னகைத்தாள்.
 
அருளிற்கு சட்டென்று இருமல் வர தன் பக்கத்திலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தர அவளும் வர..இருவரது விரல்களும் தீண்ட அருளின் தேகத்தில் மீண்டும் மின்சாரம் பாய்ந்தது.. சே என்னது மானங்கெட்ட மனம் என்று தன்னைத் தானே நொந்தவன் “நீ கிளம்புமா.. உங்கம்மாவ போய் பாரு.. என்ன உதவினாலும் என்கிட்ட தயங்காம கேளு” என்று பணம் உதவியென்று கூறாமல் பொத்தாம் பொதுவாக கூறியதும்..
 
“ரொம்ப நன்றி சார்” என்று கிளம்ப..
 
“ஒரு நிமிஷம் நில்லு” என்றதும்..
 
அவள் திரும்பி பார்த்து புருவம் உயர்த்த.. 
 
“இனி சார்னு கூப்பிடாத.. அன்னியமா தெரியுது”
 
“அப்ப அண்ணானு கூப்பிடவா” என நாக்கை கடித்து கொண்டாள்
 
“ஏதே அண்ணாவா” என்று அவள்  கூறியதை  கேட்டு சிரிப்பு வர அதை இதழுக்குள் அடக்கிக்கொண்டு “என்னை நிறைய பேர் அண்ணானு கூப்பிடுறாங்க.. அதனால நீ.. அருள்னு சொல்லு” என்றான்.
 
“அச்சோ நான் பேரு சொல்லி எல்லாம் கூப்பிட மாட்டேன்ப்பா.. நீங்க சம்பளம் கொடுக்கற முதலாளி என் அவளின் முட்டை  கண்ணை விரித்து பார்த்தாள்
 
“சரி நீ அருள் சார்னு கூப்பிடு” என்று பெருமூச்சுவிட்டான்.
 
ஈஸ்வரி கழுத்தில் செயின் டாலரை திருகிக்கொண்டு “சார் போய்ட்டு வரேன்” என்று கதவு திறந்து பரிமளா இருக்கும் அறைக்குச் சென்றாள்.
 
காலையில் முதலில் கண்விழித்தது கிருஷ்ணாதான்.. அவன் கேடய மார்பில் பால்மனம் மாறாத சிறு குழந்தை போல இதழ் பிழந்து உறங்கும் தங்கமீனாவை பார்த்து அவள் இதழுக்குள் குடிபோக வேண்டுமென்று எண்ணியதும்.. அதே நேரம் புகுந்துகொண்டான் அவள் இதழுக்குள்.. மலருக்குள் தேன் உண்ட வண்டாய் குடைந்தான் அவள் இதழை.. தூக்கத்திலிருந்தவளுக்கு அவனின் ஆழ்ந்த முத்தம் கனவில் கொடுப்பது போலிருக்க சட்டென்று கண்விழிந்தாள் பதுமை.. அது கனவல்ல நிஜம் என்பதை அறிந்து.. அவன் மார்பில் கைவைத்து தள்ள பார்க்க இரும்பு குண்டை தள்ளமுடியுமா என்ன? இப்பவும் அவளது சிரமத்தை பார்த்து அவனாக விலகினான்.. மீண்டும் இதழில் ஆழப்புதைந்து முத்தெடுத்து விட்டுத்தான் அவளை விலக்கி விட்டான். 
 
அவன் விட்டதும் கூண்டில் வைத்திருந்த பறவையை திறந்து விட்டாள் எப்படி பறக்குமோ அது போல அவன் அன்பெனும் காதல் அணைப்பு சிறையிலிருந்து விடுபட்டு கட்டிலிலிருந்து இறங்கி வேக எட்டு வைத்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
 

1 thought on “16 மோகவிழியால் எனை தைக்காதே”

  1. Check out our new game on [url=https://alo-789.com/]alo789 com[/url], to try your luck and win big prizes!
    Thanks to an intuitive design, alo789 is accessible to new players who want a hassle-free experience.

Leave a Reply to alo789_tcoi Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top