ATM Tamil Romantic Novels

மோகவிழியால் எனை தைக்காதே

17 மோகவிழியால் எனை தைக்காதே

அருளிற்கு காலையில் விழிப்பு வந்ததும் பிரபு, அருளுக்கு காலை கடன்களை முடிக்க உதவு புரிந்தான்.. “மாமா டீ வாங்கிட்டு வந்திடுறேன்” என்று எழும்ப கதவு திறந்து கையில் ப்ளாஸ்க்குடன் வந்தாள் ஈஸ்வரி.

“சார் அம்மாவுக்கு காபி வாங்கிட்டு வர போனேன்.. அப்படியே உங்க ரெண்டு பேருக்கும் வாங்கிட்டு வந்தேன்” என்று காபியை இருவருக்கும் ஊற்றிக்கொடுத்தாள்.. 

“ரொம்ப தேங்க்ஸ்க்கா” என்றான் பிரபு.

அருளிற்கு, ஈஸ்வரியை பார்த்தவுடன் அவனுக்கு ஏதோ தான் தவறு செய்வதாக தோன்றியது.. நான்.. இந்தப் பொண்ண பார்த்ததிலிருந்து ஏனோ என்னோட மனம் தாறுமாறா இருக்கு.. இனி இந்தப் பொண்ண இங்க வரச்சொல்லக்கூடாது.. என்னோட தங்காக்கு நான் துரோகம் செய்தமாதிரி ஆகிவிடும்.. 

ஆனால் தங்கமீனாவுக்கு கல்யாணம் நடந்துவிட்டது என்று அருள் அறிந்தால் என்ன பாடுபடுவானோ என்று தெரியவில்லை.. இப்போது பிரபு முன்னால் ஈஸ்வரியை ஏதாவது சொன்னால் அவள் மனம் கவலைப்படும்.. என்று எண்ணியவன் பிரபு வெளியே சென்றபிறகு அவளிடம் பேசிக்கொள்ளலாம்.. என்று அமைதியாக அவள் நீட்டும் காபியை விரல் படாமல் வாங்கிக்கொண்டான்.. 

எப்போதும் ஈஸ்வரியை பார்த்தால் அவனது முகத்தில் புன்னகைகீற்று அடங்கியிருக்கும்.. இன்று ஈஸ்வரியை பார்த்து அருள் புன்னகை செய்யவில்லை.. அதற்கே ஈஸ்வரியின் முகம் வாடிப்போனது.. அருள் சார்க்கு உடம்பு ரொம்ப முடியலையோ.. அதான் நம்மள பார்த்து சிரிக்கல போல என்று எண்ணிக்கொண்டு அவளும் ஒரு டம்ளரில் காபி ஊற்றிக்குடிக்க ஆரம்பித்தாள்.

காபியை குடித்து முடித்ததும்.. காபி கப்பை வாங்கிக்கொண்டு “சார் நான் அம்மாக்கு டிபன் வாங்கப் போறேன்.. உங்களுக்கும் வாங்கி வரட்டுமா?” அருள் என்ன சொல்லுவான்  அவன் முகம் பார்த்திருந்தாள்.

“இல்லம்மா.. எனக்கு எங்கக்கா சாப்பாடு கொண்டு வந்திருவாங்க.. நீங்க உங்களுக்கு மட்டும் வாங்கிக்கோங்க” என்று முகத்தை கொஞ்சம் இறுக்கமாக வைத்துக்கொண்டு கூற.. 

அருள் பேசிய வார்த்தைகள் ஈஸ்வரியின் மனதில் தன்னை நிராகரிப்பது போல தோன்றியது

“ச..சரிங்க சார்” என்று பிளாஸ்கை எடுத்துக்கொண்டு வேகமாக வெளியே சென்றவள் பரிமளா இருந்த அறைக்குள் சென்று பிளாஷ்க்கை வைத்துவிட்டு வாஷ்ரூம்க்குள் சென்று சார் ஏன் என்கிட்ட சிரித்துப் பேசல.. நாம ஏதோ தப்பு பண்ணிட்டோமா.. இல்ல அவர்கிட்ட பணம் கேட்டிருவோம்னு நம்மள அவாய்ட் பண்ணுறாற.. என்று அவள் மனம் அனலிலிட்ட புழு போல துடித்தது.. கண்ணீரும் வந்து விட.. நான் இனிமேல் அவங்ககிட்ட டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணனும்.. அவங்க எனக்கு முதலாளி.. அதைவிட அவங்களுக்கும், நமக்கும் என்ன சம்பந்தம்.. என்று முகம் கழுவி வெளியே வந்து டிபன் வாங்கிக்கொண்டு பரிமளாவிற்கு கொடுத்து அவளுக்கு காலையில் கொடுக்க வேண்டிய மாத்திரைகளை கொடுத்து முடித்தாள்.. பரிமளா காலையிலிருந்து மகள் முகம் சரியில்லாமல் இருக்கறதப் பார்த்து.. 

“ஈஸ்வரி என்னடாமா அம்மாவுக்கு ஏதாவது ஆகிடும்னு பயப்படறியா” என்று அவளைக் கேட்க..

“அம்மா” என்று பரிமளாவை கட்டிக்கொண்டு.. “உனக்கு எதுவும் ஆகாதும்மா” என்று தாயை சமாதானம் செய்தாள்.

அருளிற்கு சாப்பாடு கொண்டு வந்த கலைவாணி அருளிற்கு சாப்பாடு போட்டுக்கொடுக்க தட்டை வாங்கியவன்.. ஈஸ்வரியிடம் பேசியது நினைவிற்கு வர.. அச்சோ அந்தப் பொண்ணுக்கிட்ட நாம ஹார்சா பேசிட்டோமோ.. என்று வருத்தமும் அடைந்தான்.. 

மறுநிமிடம் தங்கமீனாவின் நினைவுவர.. இதுவும் சரிதான் என்று சாப்பிட ஆரம்பித்தான்.. அவனால் சரியாக சாப்பிடமுடியவில்லை.. கலைவாணி வருத்தப்படுவார் என்று சாப்பிட்டு முடித்து.. “அக்கா தங்கா ஹாஸ்பிட்டல் வந்துட்டாளா.. என்ன வந்து இன்னும் பார்க்கலையே” என்று போனை எடுத்து அவளுக்கு போன் போட்டான்.. போன் ரிங்காகிக்கொண்டே இருந்தது.. எடுக்கவில்லை.. கலைவாணிக்கு பயம் ஏற்பட்டது.. எங்கே தம்பிக்கு உண்மை தெரிந்துவிடுமோயென்று நினைத்தவர்.. 

“அருள் அவ ஹாஸ்பிட்டல் வந்துகிட்டு இருப்பா.. நீ அப்புறம் பேசு” என்றிட.. மனமில்லாமல் மீண்டும் ஒரு முறை போன் போட்டான்.

தங்கமீனா குளியறைக்குள் சென்றதும் கிருஷ்ணாவும் அறைக்குள் இருக்கும் மற்றொரு குளியறைக்குள் சென்று குளித்து வெளியே வந்து கண்ணாடி முன் நின்று தலைவாரிக்கொண்டிருந்தான்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு பால்கனிக்கு சென்று மறைந்து விட்டான் மாயகிருஷ்ணா..

தங்கமீனா ஈர தலைமுடியை டவலால் கொண்டை போட்டு ப்ளவுஸ் பாவாடையுடன் வெளியே வந்தவள்.. கிருஷ்ணா இல்லையென்று புடவையை கட்ட ஆரம்பித்து மாராப்பு போடும் போது அவளின் கையைப் பிடிக்க தங்கமீனாவோ அதிர்ச்சியில் மராப்பை நழுவ விட அவளின் கோபுர அழகுகள் அவனின் கண்ணுக்கு விருந்தாக்க.. அவளை மேலிருந்து கீழ்வரை  லேசர் கண்ணால் அளவெடுக்க.. அவனுக்குள் ஆண்மை விழித்துக்கொண்டு பேயாட்டம் போட அப்படியே அவளை இறுக அணைத்துக்கொண்டு.. “ஏய் என்ன கொல்றடி கோல்ட்” என்று அவள் கன்னத்தோடு கன்னம் தேய்தான்.. அவனின் குறுந்தாடி அவளுக்குள் கிளர்ச்சியை தர.. அவனை அணைக்காமல் கையை இறுக்கி வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தாள்.

“ஏய் கோல்ட் என்னையும் அணைச்சுக்கோடி” என்று சொல்லியதோடு நிற்காமல் அவள் இரு கைகளையும் எடுத்து அவனை கட்டிப்பிடிக்க வைத்தான்.. அவன் கைகள் அத்துமீறி பந்து கோளங்களில் முகம் தேய்த்து அங்கும் இங்கும் புரட்ட அவளுக்கு அவஸ்தையோ  அவஸ்தை.. “என்னங்க ப்ளீஸ் எனக்கு இன்னும் டைம் வேணும்” என்று அவள் கண்ணீர் விட.

அவள் கண்ணீர் அவன் கன்னத்தில் விழ.. ஓ நான் தொடுவது பிடிக்கலையா பிடிக்கலயா என்று கோபம் கொண்டு அவளை விலக்கிவிட்டு “சீக்கிரம் கிளம்பி வா ஹாஸ்பிட்டல் போகணும்.. என்று டிரஸ்ஸிங் அறைக்குள் சென்றவன் ஐந்தே நிமிடத்தில் கிளம்பி சிலையென நின்றிருந்த தங்கமீனாவை தாண்டி கீழே சென்றான்.

என்னோட நிலைமைய இவரு புரிஞ்சுக்க மாட்டாரா? எப்ப பார்த்தாலும் என்மேல வந்து உரசிக்கிட்டு.. என்று அவனை வசைபாடிக்கொண்டே சேலையை கட்டி முடித்து ஹாலுக்கு வந்தாள்.. அங்கே கிருஷ்ணா உணவருந்திக்கொண்டிருந்தான். “வாம்மா நீயும் வந்து சாப்பிடு” என்று தங்கமீனாவை கூப்பிட்டார் பத்மினி பாட்டி.

“பசிக்கல பாட்டி” என்றதும்.. அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தான் கிருஷ்ணா.. அவன் பார்த்த பார்வையில் அவளது கால்கள் தானாக டைனிங் டேபிளுக்கு வந்தது.. “சாப்பிடு” என்று கண்ணால் சைகை செய்ய… சாப்பிட அமர்ந்ததும்.. தம்பி இந்த பொண்ணை பார்த்ததும் பொட்டிப் பாம்பா அடங்கி உட்கார்ந்திடுச்சு.. கில்லாடி பையன்தான்.. என்று கிருஷ்ணாவை மெச்சி கொண்டவர் தங்கமீனாவுக்கு இட்லியை வைத்து சட்னி ஊற்றினார்.. கிருஷ்ணா சாப்பிட்டு முடித்து போனில் “நர்ஸ் இப்ப வந்துடுவாங்கல” என்று யாரிடமோ கேட்டுக்கொண்டிருந்தான்.. 

“வந்திடுவாங்க சார்” என்றதும் போனை அணைத்துவிட்டான்.

குருமூர்த்தி எழுந்து குளித்துவிட்டு வர.. “பாட்டி ஐய்யாவுக்கு டிபன் வைங்க” என்று கூற.. 

“நீ சொல்லலன்னா எனக்கு சாப்பிட தெரியாதா” என்று மகன்மேல் இருக்கும் கோபத்தில் அவனிடம் பேசாமல் டைனிங் டேபிள் சென்றார்.. 

தங்கமீனா சாப்பிட்டு முடித்திருந்தாள்.. கிருஷ்ணா பேசியது அவள் காதுக்கும் கேட்டது.. “மாமா இப்ப எப்படி இருக்கு உடம்பு” என்று கேட்டுக்கொண்டே அவருக்கு இட்லிவைத்து சாம்பாரை ஊற்றினாள்.

“பைன் மா.. உன்னை அவன் தொந்தரவு செய்தானா” என்று அப்பாவை போல் பாசமாக கேட்டார்.

முதலில் புரியாது முழித்தவள்.. “இல்ல மாமா” என்று தலையாட்ட.. 

“என்னை அப்பான்னு கூப்பிடுடா.. அவன் ஏதாவது திருகுதாளம் செய்தா என்கிட்ட சொல்லு.. நான் பார்த்துகிறேன்” என்று ஹாலில் இருக்கும் கிருஷ்ணாவுக்கு கேட்கும்படி சத்தமாகப் பேசினார்..

“அப்பா நாங்க இப்ப ஹாஸ்பிட்டலுக்கு கிளம்புறோம்ப்பா.. அங்க அருள் மாமா டிஸ்ஜார்ஜ் ஆகும் போது அவர்கிட்ட உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்கணும்” என்று கூறும் போதே அவளுக்கு கண்ணீர் வந்தது.

“அம்மாடி இனிமேல் உன்னோட கண்ணுல தண்ணி வரக்கூடாது.. இந்த வீட்டோட மருமக எந்த காரணத்துக்காவும் அழக்கூடாது.. இந்த வீட்டோட கௌரவத்தை உன்கிட்ட ஒப்படைக்குறேன்.. அதற்கு நீ பங்கம் வராம பார்த்துக்கணும்” என்று தங்கமீனாவிடம் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தார்.

குருமூர்த்தியை கவனிக்க வந்த நர்ஸிடம் தந்தையின் உடல்நிலை பற்றி அவரிடம் கூறிவிட்டு.. “ஐய்யா நாங்க கிளம்புறோம்” என்றிட தலையை மட்டும் ஆட்டினார்.. 

தந்தை பேசவில்லை என்ற வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று விருப்ப பட்டு பெரும்மூச்சுடன் தங்கமீனாவிடம் குருமூர்த்தியின் காலில் விழ கண்ணசைத்து அவர் காலில் விழுந்தான்.

தங்கமீனாவும் அவரது காலில் விழ.. ரெண்டு பேரும் நல்லாயிருங்க.. “அடுத்த வருசம் எனக்கு பேரனோ, பேத்தியோ பெத்துக்கொடுத்திடுமா” என்று தங்கமீனாவின் தலையில் கைவைத்து ஆசிர்வாதம் செய்ய.. 

“நான் ரெடியாயிருக்கேன் உங்க மருமககிட்ட இன்னொருமுறை நல்லா சொல்லுங்க… நான் சென்னைக்கு கிளம்புறேன்.. உடம்ப ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க ஐய்யா” என்று கூறிக்கொண்டிருக்க.. அவனது போன் சிணுங்க ஆரம்பிக்க.. போனை எடுத்து பேசிக்கொண்டே வெளியே சென்று காருக்குள் ஏறி அமர்ந்தான்.

“மீனும்மா.. கிருஷ்ணா முரடன்தான் நான் இல்லைன்னு சொல்லல.. அவன் ஏன் இப்படி இருக்கான்னு உனக்கு கொஞ்ச நாள் போக போக தெரியும்.. நீ கிளம்புமா” அவள் தலையை வருடி கொடுத்தார்

“மாமா.. அத்தை போட்டோ ஒண்ணு கூட இல்லையே” என்று தயங்கி கேட்க.

“நீ ஊருக்கு போய்ட்டு வாம்மா வந்தபிறகு சொல்லுறேன்” என்று அவள் தலையை தடவிக்கொடுக்க.

“சரிப்பா” என்று வெளியே வந்து காருக்குள் ஏறி அமர.. காரை வேகமாக ஓட்டினான் கிருஷ்ணா.. 

அவன் வண்டியோட்டுவதைக் கண்டு பயந்தவள் “மெதுவா போங்க” என்று மெல்ல பேச..

“பர்ஸ்ட் சீட் பெல்ட் போடுடி” என்று பல்லைக் கடித்தான்.

நீங்க சொன்னா நான் கேட்கணுமா.. என்று ரீதியில் தங்கமீனா அமர்ந்திருக்க..

காரை வளைவில் சட்டென்று திரும்ப.. கிருஷ்ணா தோள் மீது போய் சாய்ந்தாள்.. சாய்ந்தவள் சட்டென்று விலகி வந்து சீட் பெல்ட் போட்டு அமர்ந்து கொண்டாள்..

தங்கமீனாவை கவனிக்காதது போல  வண்டியோட்டிக்கொண்டிருந்தான்.. அருள் போன் போட்டு அழுத்துவிட்டான்.. கடைசிமுறையா போட்டு பார்க்கலாம்.. என்று போன் போட..

கடவுளே இந்த முறையும் அவ போன் எடுக்கக் கூடாது.. என்று நினைத்தார் கலைவாணி.

தங்கமீனாவின் போன் ரிங்காக போனை எடுத்துப்பார்க்க அதில் அருளின் எண்ணைக் கண்டதும் ஏசி காரிலும் அவளுக்கு வியர்த்துப்போனது.. எடுக்கவா, வேண்டாமா என்று கையை பிசைந்து கொண்டிருந்தாள் தங்கமீனா.

“போன்ல அருள்தான அட்டன்ட் பண்ணி பேசு”என்று போனை எடுத்து ஆன்செய்து ஸ்பீக்கரில் போட்டான்.

போன் ஆன் ஆனதும்.. “தங்கா என்ன புள்ள மாமாவை  பார்க்க நீ வரவேயில்லை” என வருத்தப்பட்டு பேச

அவளுக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.. “மதியம் வந்திடுவோம்னு சொல்லு” என்று உதடசைத்தான் கிருஷ்ணா..

“மா.மாமா மதியம் உங்கள வந்துப் பார்க்குறேன்” என்றதும் போனை அணைத்துவிட்டான் கிருஷ்ணா.

“ஏன் போனை ஆப் பண்ணிங்க நான் இன்னும் பேசி முடிக்கல  என்று அவனை முறைக்க.. 

“இதுக்கு மேல நீ பேசினா அருளிற்கு சந்தேகம் வரும்.. உனக்கு பேசத்தெரியாது வாயை மூடிட்டு உட்காரு”. என்று காரை ஓட்டுவதில் கவனம் ஆனான்.

அருள்.. தங்கமீனா போனை வைத்ததும் “இரண்டு வார்த்தை தான் என்கிட்ட பேசினா.. அதுக்குள்ள போன் கட் பண்ணிட்டா” என்று யோசித்துக்கொண்டிருந்தான்.. ஆனால் ஈஸ்வரி, அருள் பேசியதை  எண்ணி மருகிக்கொண்டிருந்தாள்.

மதியம் ஆக ஆக அருள், தங்கா என்னை பார்க்க வந்திருவா என்று ஆவலாக இருந்தான்.. காரை மருத்துவமனை வளாகத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தினான் கிருஷ்ணா.. தங்கமீனாவின் இதயம் எகிறி குதித்துவிடும் போல் இருந்தது.. மாமாவ பார்த்து என்ன பேசப்போறோம்.. என்று அச்சப்பட்டு அப்படியே இறங்கமால் உட்கார்ந்திருந்தாள்..

தங்கமீனாவின் முகத்தில் ஏற்படும் கலவரத்தை அவதானித்தவன் “கோல்ட் அருள்கிட்ட நம்ம கல்யாணம் நடந்ததை நான், அவன் கிட்ட பேசும் வரை நீ எதையும் உளறி வைக்காத.. என்று அவள் கையைப் பிடித்துக்கொள்ள..

“எனக்கு ரொம்ப கில்டியா இருக்குங்குங்க.. நான் தப்பு செய்துட்டேன்.. எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம்” என்று முகம் விசும்ப ஆரம்பித்தாள்.

“ஏய் அழாதடி.. தப்பு செய்த எனக்கு அதை சரிபண்ணவும் தெரியும்” என்று அவள் இதழில் ஆழப்புதைந்து அவள் இதழை மென்று தின்று விட்டு அவளை விட்டு விலகி.. “வாழ்நாள் முழுவதும் உனக்கு முத்தம் கொடுத்துட்டேயிருக்கணும்” என்று காரைத் திறந்து ஹாஸ்பிட்டலுக்குள் சென்றான். 

கிருஷ்ணாவுக்கு கல்யாணம் ஆனது ஹாஸ்பிட்டலுக்கு தெரியவர.. கிருஷ்ணாவின் பின்னே நடந்து வந்த தங்கமீனாவை பார்த்து “ஒருவாரத்துல டாக்டரை கைக்குள்ள போட்டுகிட்டா” என்று அவள் காதுபட பேச.. கிருஷ்ணாவின் மீது அளவில்லா கோபம் வந்தது தங்கமீனாவுக்கு.. 

அவனது அறைக்கதவை திறந்து கொண்டு வேகமாகச் சென்றவள்.. “இப்ப ரொம்ப திருப்தியா உங்களுக்கு நீங்க எனக்கு முன்னதானே நடந்து வந்தீங்க.. இங்க ஒர்க் பண்ணுற ஸ்டாப் என்னைப் பத்தி என்ன வார்த்தை பேசினாங்கன்னு கேட்டீங்களா.. அதைக் கேட்டு என் மனசு எவ்ளோ பதறுச்சு தெரியுமா” என்று அவள் முகம் பொத்தி அழ.. 

அவள் முன்பு நர்ஸ் யூனிப்பார்மை போட்டான் கிருஷ்ணா.. “இந்த டிரஸ்ஸ போட்டுகிட்டு ரெடியாகி வா.. அருளை பார்க்க போலாம்” என்றிட..

“நான் என்ன பேசுறேன்.. நீங்க சம்பந்தமில்லாம என்ன பேசிட்டிருங்கீங்க” என்று அவள் சீற.

“ஏய் நான் சொன்னதக் கேட்கணும்”

“உங்ககிட்ட மனுசங்க பேசமுடியாது.. ஒரு பொண்ணோட உணர்வுகள புரிஞ்சுக்க முடியாது” என்று சொல்லி  முடிக்க வில்லை.. அவள் கன்னத்தை அழுந்தப்பிடித்து.. “இனி ஒருமுறை என்கிட்ட இதுபோல பேசி.. என்னை மிருகமாக்காத… டிரஸ் சேன்ஞ் பண்ணிட்டு வா நான் வெயிட் பண்ணுறேன்” என்று வெளியேவந்தான்.

பேண்ட், சர்ட் மாற்றி வெளியே வந்தாள்.. அவள் தாலி போட்டிருப்பது அருளிற்கு தெரியக்கூடாது.. என்று தான் அவளை யூனிப்பார்ம் போட வைத்தான்.. அவள் வெளியே வர.. அங்கே அவளை கேலி செய்த பெண்.. “சார் சார் நான் இனிமேல் அப்படி பேசமாட்டேன்.. என்னைய வேலையை விட்டு தூக்கிராதீங்க” என்று கெஞ்சிக்கொண்டிருந்தாள்.. 

“ரெடியா போலாமா” என்று அந்தப் பெண் அவனிடம் கெஞ்சுவதை கவனியாமல் தங்கமீனாவிடம் கேட்க..

தங்கமீனா.. அந்தப் பெண்ணை பார்த்து பரிதாபப்பட்டு கிருஷ்ணாவின் அருகே சென்று “இவங்கள  திரும்ப வேலையில் சேர்த்துக்கலாம்” என்று கூற..

கதவருகே சென்றவன் “அடுத்தவங்கள பத்தி வெட்டியா பேசாம வேலையப் பாருங்க.. இந்த தடவை என் வொய்ப் சொன்னதால விட்டேன்.. அடுத்த முறை யார் சொன்னாலும் கேட்க மாட்டான் இந்த கிருஷ்ணா.. என்னைப் பத்தி உனக்கு தெரியும்னு நினைக்கிறேன்” என்று எச்சரிக்கை விடுத்துச் சென்றான்.

தங்கமீனா வெளியே செல்ல.. அந்தப் பெண் அவளிடம் மன்னிப்பு கேட்டாள்…

“யாரையும் தப்பா பேசும் முன் யோசித்துப் பேசுங்க” என்று சென்றுவிட்டாள் தங்கமீனா.

ஐ.சி.யுவின் கதவருகே சென்றவள் அறைக்குள் செல்ல அவள் கால்கள் நடுங்கியது.. மெல்ல கதவு திறந்து உள்ளே செல்ல அருளின் முகம் பிரகாசமானது.. 

“தங்கா என்ன புள்ள நேத்து புல்லா என்னப் பார்க்க வரல” என்று முக பொலிவுடன் கேட்க.

கலைவாணி.. தங்கமீனா உள்ளே வந்ததும் அவளைப் பார்த்து முறைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

“மாமா” என்று அருளின் பக்கம் செல்ல.. அவள் கையைப் பிடித்து அவனது கைக்குள் வைத்துக்கொண்டான் அருள்.

அதே நேரம் கதவுதிறந்து உள்ளே வந்தான் கிருஷ்ணா.

 

7 thoughts on “மோகவிழியால் எனை தைக்காதே”

  1. [url=https://zerkalo-1xbet.online/]1xbet[/url] 1xbet login, 1xbet official site, 1xbet website, 1xbet site login, 1xbet access, 1xbet online, 1xbet login today, 1xbet working site, 1xbet mirror, 1xbet working mirror, 1xbet new mirror, 1xbet mirror today, 1xbet no block, 1xbet mobile, 1xbet mobile version, 1xbet app, 1xbet account, 1xbet online betting

  2. Find out all about the possibilities[url=https://newtown-apk.com/]newtown[/url] and get access to the best deals right now.
    Newtown APK is gaining popularity among mobile gamers.

  3. Immerse yourself in the world of excitement and winnings with[url=https://valorslots.com/]valor slots[/url],where every spin brings pleasure and a chance to win a big jackpot.
    Valor Casino stands as a premier destination for gaming enthusiasts seeking excitement and luxury.

  4. Try your hand at online games on [url=https://125-win.com]125win slot[/url] and win big prizes!
    The support team is responsive and knowledgeable, resolving queries efficiently.

Leave a Reply to newtown_fben Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top