ATM Tamil Romantic Novels

மோகவிழியால் எனை தைக்காதே

19 மோகவிழியால் எனை தைக்காதே

 

 

எழுந்திருடா தங்கா எனக்கு எல்லாம் தெரியும்.. என்று சொன்னவனது குரலில் அத்துணை வருத்தம் பொதிந்திருந்தது.

 

“மாமா எல்லாத்துக்கும் நான் தான் காரணம் மாமா.. உன்கிட்ட எல்லாத்தையும் நான் சொல்லியிருக்கணும்” என தலையில் அடித்துக்கொண்டு அழுது கரைந்தாள்.. அப்பவும் கிருஷ்ணாதான் காரணம் என்று அவள் மனம் சொல்லவிரும்பவில்லை.. தானும் தான் கிருஷ்ணாவுடன் இளைந்திருந்து உண்மையே! என்று அவள் மனம் தினம் தினம் மருகிப்போனது அவளுக்கு மட்டுமே தெரியும்..

 

“விடுடா இனி நடந்ததை மாத்த முடியாது.. நீ சந்தோசமா இருந்தா எனக்கு அதுவே போதுமென.. தனது முழு வருத்தத்தையும் அவன் மனதில் போட்டு புதைமணலாய் புதைத்துக்கொண்டு தங்கமீனாவின் மனம் புண்படக்கூடாது” என்று வெளியே அவள் முன்பு சிரித்தபடி அமர்ந்திருந்தான்.

 

“என்னை மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லு மாமா.. ப்ளீஸ் அப்ப தான் என்னால நிம்மதியா இருக்கமுடியும்” என்று கையெடுத்து கும்பிட்டு நின்றாள்.

 

“டேய் நீ, என் அக்கா பொண்ணுடா என்கிட்ட போய் நீ மன்னிப்பெல்லாம் கேட்காத.. எனக்கு தர்மசங்கடமாயிருக்கு” என்று அக்கா மகள் என்ற உரிமையிலும்.. அவள் அழுவதை தாங்கமுடியாமலும் தவித்துப்போய் தங்கமீனாவை தோளோடு அணைத்துக்கொண்டான்.. இதுவரை இருவரும் தொட்டு கூட பேசாமல் இருந்தவர்கள் இன்று அக்கா மகளாய்.. அவனும் தாய்மாமனாய் நடந்து கொண்டனர்.

 

“நீ எப்பவும் என்னோட செல்ல தங்காதான்டா.. மன்னிப்புன்னு பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாம் தங்கா.. நீ, கிருஷ்ணா சாரோடு சந்தோசமா வாழ்க்கைய தொடங்குடா.. நீ குடும்பமா வாழறத இந்த மாமா பார்த்து சந்தோசப்படுவேன்” என்று சொல்லும்போது அவனுக்கு கண்ணீர் வந்தது..

 

“யாரு மாமா சொன்னா உனக்கு”என்று கேவியபடி அருள் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

 

“நானே கண்டுபிடிச்சேன்டா.. அப்படின்னு சொல்லமுடியாது.. ஒவ்வொரு முறையும் நீ என்னோட இருக்கும்போது கிருஷ்ணா சாரோட பார்வை உன் மேல தான் இருக்கும்.. அந்த பார்வையே எனக்கு பாதி சொல்லிடுச்சுடா.. ரெண்டு பேருக்கும் ஏதோ இருக்குன்னு எனக்கு சந்தேகம் வந்துச்சு”

 

அவரு நான் நார்மல்னு தெரிந்ததும்.. அன்று நைட் ரவுண்ட்ஸ் வந்தவன்

 

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”

 

“சொல்லுங்க சார்”

 

“தங்கமீனாவுக்கு என் மேல காதல் இருக்கு.. ஆனா உங்க மேல பாசம் இருக்கு.. காதலா, பாசமா என தெரியாம அவ குழம்பிக்கிடந்தா.. அதான் நான் அதிரடியா அவளுக்கே தெரியாம கடத்திட்டுபோய் அவ கழுத்துல தாலி கட்டிட்டேன்.. நீங்க எனக்கு என்ன தண்டனை வேணா கொடுங்க.. என்னோட கோல்ட் சுத்த 24 கேரட்டை விட தங்கமானவ அவள எதுவும் தப்பா நினைச்சிராதீங்க” என்று எல்லா உண்மையும் சொல்லிட்டு கெத்தா நின்னாரு.

 

“என்னை விட கிருஷ்ணா உன்னை நல்லா பார்த்துப்பாருன்னு நம்பிக்கை வந்துச்சு.. நீ, என் பொண்டாட்டிங்கிற எண்ணத்தை அந்த நிமிசமே என்னோட மனசுல இருந்து அழிச்சுட்டேன்டா.. எனக்கு தாங்க முடியலைதான்.. உயிர் போற வலி இருந்துச்சு.. அப்பவே அவர்மேல கோவம் வந்துச்சு.. உன் கழுத்துல தாலி கட்டிட்டாரேடா.. அவர என்னால ஒண்ணும் செய்யமுடியலை.. நீ அவருக்கு சொந்தம்டா.. எனக்கு வெறும் அக்கா பொண்ணு மட்டும் தான்… உனக்கு இனி எந்த நேரத்திலும் எந்த பிரச்சனை ஆனாலும் இந்த தாய்மாமா உனக்கு துணையா இருப்பேன்டா” என்று அவளை விட்டு விலகினான்.

 

கலைவாணி உள்ளே வந்தவர் “இவ செய்து வந்த தப்புக்கு இவ கூட பேசாத அருள்.. இவள நான் தலைமுழுகிட்டேன்” என்று அவர் சொன்னவுடன் அருளுக்கு எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை.. “அக்கா வாய மூடு இன்னொரு முறை என்னோட தங்காவ தலைமுழுகிட்டேன் சொன்ன நான் உன்வீட்டு வாசப்படி மிதிக்க மாட்டேன்” என்று கோபத்தோட பேச.

 

“உன் குணம் யாருக்குடா வரும் உன்னோட அருமை இந்த கழுதைக்கு தெரியலடா தம்பி” என்று கண்ணீர்விட ஆரம்பித்தார்..

 

“அம்மா என்னை மன்னிச்சுடும்மா.. ப்ளீஸ் ஒருமுறை என்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டுப் போ” என்று கலைவாணி காலையும் பிடித்துக்கொண்டாள்.

 

“எழுந்திருடி.. முதல.. என்னால உன்னை மன்னிக்க முடியாது.. என் தம்பி போல உன்ன உடனே மன்னிக்க முடியாது.. வீட்டுக்கு வேணா வந்துட்டு போ.. அதுவும் என்னோட தம்பிக்காக” என்று எங்கோ பார்த்துக்கொண்டு கூறினார்..

 

கலைவாணிக்கு.. தங்கமீனாவை எவ்வளவு பிடிக்குமென்று கலைவாணியால் தங்கமீனாவை வெறுக்க முடியாது என்றும் அவனுக்குத் தெரியும்.. தன்னை திருமணம் செய்யவில்லை என்ற ஆத்திரத்தில்தான் தங்கமீனாவை தலைமுழுகுறேன் என்று மகளை பேசக்கூடாத வார்த்தையை வீசிவிட்டார்.

 

கிருஷ்ணா ஓபியில் பிசியாக இருந்தான்.. அருள்… “நான் கிருஷ்ணா சாரை பார்த்துட்டு வரேன்” என்று கலைவாணியிடம் கூற.

 

“இப்ப என்ன அருள் அவர்தான இன்னிக்கு டிஸ்ஸார்ஜ்னு  சொல்லியிருக்காரு.. அப்போ அவங்க தான் உன்ன வந்து பார்க்கணும்”

 

“ரமேஷ் டாக்டர் காலையில வந்து என்னை பார்த்துட்டு போய்ட்டாரு.. கிருஷ்ணா சார் பெரிய டாக்டர் அவரு இனி வர மாட்டாரு” என்று கலைவாணிக்கு புரிய வைக்க.

 

“பொல்லாத பெரிய டாக்டர்” என்று முகத்தை கோணினாள்..

 

அந்து நேரம் “அருள் சார்.. உங்கள கிருஷ்ணா டாக்டர் வரச்சொல்றார்” என்று நர்ஸ் வந்து சொல்ல..

 

“நான் வரல” என்று கலைவாணி நின்றுகொண்டார்.. அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றான் அருள்.

 

அருளும், கலைவாணியும் கிருஷ்ணாவின் அறைக்குள் செல்ல கிருஷ்ணாவும், தங்கமீனாவும் சேர்ந்து நின்றிருந்தனர்.. அவர்கள் இருவர் ஜோடிப்பொருத்தத்தைக் கண்டு அருளிற்கு சந்தோசம்தான். இன்று தங்கமீனா பட்டுப்புடவையில் கழுத்தில் கிருஷ்ணா கட்டிய மஞ்சள் தாலியில்.. தலை நிறைய மல்லிகைப்பூவுடன் நின்றிருந்தாள்.

 

அருளிற்கு மனதில் ஒரு ஓரத்தில் சிறு வலி இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு “டாக்டர் என்ன வரசொன்னிங்களாம்” என்றான் புன்னகையுடன்.

 

“மாமா என்னை ஆசிர்வாதம் பண்ணு” என்று தங்கமீனா, அருளின் காலில் விழ.

 

“நல்லாயிருடா” என்று தங்கமீனாவை ஆசிர்வாதம் செய்து அவள் கல்யாணத்துக்கு வாங்கி வைத்திருந்த ஆரத்தை எடுத்து கிருஷ்ணாவிடம் “சார் இது நான், தங்கமீனாவுக்கு, நான் வாங்கிச் வைச்சது.. அவளுக்கு கொடுக்கிற தாய்மாமன் சீரா நினைச்சு அவ கழுத்துல போட்டு விடுங்க” என்றான்..

 

புன்னகையுடன் அருள் கொடுத்த ஆரத்தை வாங்கிய கிருஷ்ணா தங்கமீனாவின் கழுத்தில் போட்டுவிட்டு கண் சிமிட்டினான்.

 

“கிருஷ்ணா சார் எங்க வீட்டுக்கு எப்போ வரப்போறீங்க”

 

கலைவாணி, அருளை பார்த்து முறைக்க..

 

கம்முனு இரு என்று கண்ணால் செய்கை செய்தான்.

 

“கூப்பிட வேண்டியவங்க கூப்பிடலையே அருள்” என்று கலைவாணியை பார்த்தான் கிருஷ்ணா..

 

“அக்கா கிருஷ்ணா சார கூப்பிடு” என்று கலைவாணியின் காதில் கிசுகிசுத்தான் அருள்.

 

“மறுவீட்டுக்கு வாங்க” என்று கோவத்தை மறந்து அருளிற்காக கூப்பிட்டார்.

 

“இப்ப எனக்கு ஆப்ரேசன் இருக்கு நாளைக்கு வரோம்” என்றான்..

 

“நான் எங்கம்மா வீட்டுக்கு போய்ட்டு வரட்டுமா” என்று கேட்டுவிட்டாள் தங்கமீனா.. தனியாக இருக்கம்போது கேட்டால் அனுப்ப மாட்டான்.. என்று இப்போதே கேட்டுவிட்டாள்.

 

அவள் கேட்டதும் கிருஷ்ணாவிற்கு சுறு சுறுவென கோபம் வந்தது.. இப்போது கோபத்தைக் காட்டினால் அது சரிவராது.. என்று எண்ணியவன்.. “ம்ம் போயிட்டு வா” என்று முகத்தை இளக்கமாக வைத்துக் கூற.

 

இருவருக்கும் தனிமை கொடுக்க எண்ணி அருளும், கலைவாணியும் வெளியே சென்றனர்.. அவர்கள் சென்றதும் தங்கமீனாவை அள்ளிக்கொண்டு அறைக்குள் சென்று சோபாவில் அப்படியே உட்கார வைத்து “ஏய் என்னடி என்ன விட்டு போறேன்னு சொல்ற.. நேத்து சொன்னியே என் குடும்பத்துக்கிட்ட இருந்து பிரிச்சுட்டேனு.. இப்ப உன் குடும்பத்துக் கூட சேர்த்து வச்சிட்டேன்.. இப்ப ஹேப்பியா” என்று அவள் தலையில வைத்திருந்த பூவை வாசம் பிடித்து மோக மூச்சுடன் அவள் கழுத்தில் ஈர முத்தம் கொடுத்தான்.. அவளை பேசவிடவில்லை.. அவன் கரம்மொன்று அவள் கொடியிடையை வருடிக்கொண்டிருக்க.. அவன் இதழ்கள் அவள் முன் அழகில் வட்டமிட்டு.. அப்படியே அவளை சோபாவில் சரித்து அவள் இதழில் முத்தமிடத்துவங்கினான்..

 

அவளது கையை இன்று அவனது பின் சிகைக்குள் நுழைய விட்டாள்.. அவளது ஒத்துழைப்பு அவனுக்கு இன்று கிளர்ச்சியூட்டியது.. ஆழ்ந்த முத்தமிட்டு நாவோடு செல்லப் போர் புரிந்தான்.. தன்னை குடும்பத்துடன் சேர்த்து வைத்துவிட்டான்.. என்ற சந்தோசத்தில் அவளும் இன்று அவனுடன் இயைந்து முத்தமிட்டாள்.. அவனோ, அவளின் மாராப்பை கீழே சரிய விட்டு அல்வா பழத்தில் இருந்த முந்திரியை ஆடைக்கு மேலாக கடித்துவிட பெண்ணவள் உதடுகடித்து கண்மூடினாள்.

 

அவனோ மாராப்பை எடுத்துப்போட்டு விட்டு அவள் கன்னத்தில் முத்தமிட கண்திறந்து பார்த்தாள்.. “உன் மாமாவுக்கு ஒரு கல்யாணத்தை சீக்கிரம் பண்ணிவிட்டு உன்னை முழுசா எடுத்துக்குறேன்” என்று கண் சிமிட்டினான்.

 

தங்கமீனாவுக்கு இப்போது கிருஷ்ணாவின் மீது காதல் அதிகரிக்கத்துவங்கியது.. இருவரும் எழுந்து வர.. “ஏய் கோல்ட் டிரஸ் சரி பண்ணுடி” அவளோ தன் புகுந்த வீட்டுக்குப் போகும் சந்தோசத்தில் இருந்தாள்.. ஆடையை சரிசெய்து விட்டு வெளியே வந்தாள். அவள் முகத்தில் இருக்கும் பூரிப்பைக் கண்ட அருளிற்கு இப்போதுதான் நிம்மதியும் தோன்றியது..

 

(ரீடர்ஸ்  நீங்க எல்லாரும் அருள் எப்படி இப்படி டக்குன்னு விட்டுக்கொடுத்தான்னு நினைக்கலாம்.. அவனது நேச்சர் அப்படி.. தங்கமீனா சந்தோசம்தான் அவனுக்கு முக்கியம்.. அதனால் அவனது காதலை தியாகம் செய்தான்.)

 

ஈஸ்வரியின் அம்மா.. பரிமளாவின் உடல்நிலை மோசமானது.. மருத்துவ செலவுக்கு அருள் முழுதாக தொகை கட்டிவிட்டான்.. அவன் எப்போதும் அனைவருக்கும் பணம் கொடுத்து உதவுவான்..

கலைவாணி வீட்டுக்கு முன்னே சென்றுவிட்டார்.. பிரபு பேங்கிற்கு பணம் கட்டிவிட்டு அதன் வேலையாக சுற்றிக்கொண்டிருந்தான்.. அருளை அழைத்துச்செல்ல பழனி வந்துவிட்டான்.

 

“அண்ணே.. ஈஸ்வரி அக்காவோட அம்மாவ பார்த்துட்டு போலாமா” என்றதும்.

 

“ம்ம்” என்று தலையாட்டியவன் பரிமளா இருந்த ஐ.சி.யுவின் முன் சென்றனர்.. அங்கே தன்னந்தனியாக கண்மூடி நாற்காலியில் அமர்ந்திருந்தாள் ஈஸ்வரி.

 

அருளிற்கு. ஈஸ்வரியை அந்த நிலையில் பார்க்கும்போது வருத்தமாகத்தான் தோன்றியது.. அவளருகே சென்ற பழனி, “அக்கா அருள் சார் வந்திருக்காங்க” என்று கூற கண்திறந்து பார்த்து “வாங்க “சார் என்றவள் கண்ணில் ஆயிரம் கவலை இருந்தது.. அதை அருளும் கவனிக்கத்தான் செய்தான்.

 

“அம்மாவுக்கு இப்போ எப்படியிருக்கு”

 

“மூச்சு மட்டும்தான் வந்துட்டிருக்கு சார்” என்று ஷாலை வாயில் வைத்து கேவி அழுக.

 

ஈஸ்வரிக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று அருளிற்கு தெரியவில்லை.. “உங்க சொந்தக்காரங்க யாராவது இருந்தா வரச்சொல்லுமா”

 

“இல்ல சார் யாரும் வரமாட்டாங்க” என்றவளின் கண்ணில்  கண்ணீர் கடகடவென வர.

 

“பழனி.. நீ, ஈஸ்வரி கூட இரு.. நான் கேப் பிடித்து வீட்டுக்குப் போறேன்”

 

கிருஷ்ணா அருளுக்கு போன் போட்டு “எங்க இருக்கீங்க தங்கமீனாவை கூட்டிட்டு வரேன்”

 

அருள் அவன் இருக்கும் இடத்தை கூற கிருஷ்ணாவும், தங்கமீனாவும் அருள் நின்றிருந்த  இடத்திற்கு வந்தனர்.

 

“நான் உங்கள வீட்ல கொண்டுபோய் விடறேன் அருள்”

 

“சார் உங்களுக்கு ஆப்ரேசன் இருக்குனு சொன்னிங்க”

 

“இன்னும் டைம் இருக்கு அருள் அதுக்குள்ள வந்துடுவேன்.. வாங்க” போலாம் என்று கிருஷ்ணா கூறிவிட்டு பக்கத்தில் நின்ற ஈஸ்வரியை பார்த்து

 

“அருள் இந்தப் பொண்ணு உங்களுக்கு தெரிஞ்சுவங்களா” என்று கிருஷ்ணா கேட்க

 

“ஆமா தெரிஞ்சவங்கதான்”  என்றான் அருள்.

 

“அப்படியா” என்றவன் இருவரது கண்களிலும் ஏதோ ஒரு பாசத்தைக் இருப்பதாக  கண்டுபிடித்துவிட்டான்

 

“ஈஸ்வரி.. உங்கம்மாவுக்கு ஆரம்பத்துல டிரீட்மென்ட் கொடுத்திருந்தா பிழைத்திருக்க வாய்ப்புண்டு.. இப்ப கடைசி கட்டத்துல வந்திருக்கீங்க.. அதான் ஒண்ணும் பண்ண முடியலம்மா.. நீங்க கவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்” என்று ஈஸ்வரிக்கு ஆறுதல் கூறினான் கிருஷ்ணா.

 

யாரும் இல்லாத ஈஸ்வரிக்கு இப்போது கிருஷ்ணா பேசியது அவளுக்கு சிறு ஆறுதல் கிடைத்தது போலிருந்தது.. கிருஷ்ணா ப்ளான் போட்டுவிட்டான்.. அவனுக்கு துருப்பு சீட்டு கிடைத்துவிட்டது.. அருளையும், ஈஸ்வரியையும் இணைத்து வைப்பது என்று முடிவு செய்துவிட்டான்.

19 thoughts on “மோகவிழியால் எனை தைக்காதே”

  1. слежка либо за магазином либо за курьеркой https://zhongguomeishi.top Ну во-первых мы совершенно другой магазин, так что вы ошиблись веткой, и представительств в тех городах у нас нетЭто точно.

  2. Для зонирования светом натяжной потолок дает основу под споты, треки и подсветку, выбирайте сатиновое полотно, оно хорошо сочетается с современными световыми линиями, заранее решите где будет подсветка, так монтаж пройдет быстрее, интерьер станет современнее и свет распределится лучше – https://natyazhnye-potolki-moskva.ru/

  3. разобрался, поэтому и удалил сообщение до того как ты ответил ) https://gto-avto.ru есть и кристаллический и порошкообразный. разницы в эффекте нет.У меня в городе например СПСР – это самая безпалевная курьерка, а с ЕМС постоянно принимают.Так что кому как

  4. Howdy! This article couldn’t be written any better!

    Looking through this post reminds me of my previous roommate!
    He always kept talking about this. I most certainly will
    forward this information to him. Pretty sure he will have a great read.
    Thank you for sharing!

  5. hello!,I really like your writing very a lot! proportion we be in contact more about your article on AOL?
    I need a specialist in this space to solve my problem.
    May be that’s you! Having a look forward to look you.

  6. Hello, Neat post. There’s an issue together with your web site in web explorer, may test this?
    IE nonetheless is the marketplace leader and
    a large part of folks will omit your wonderful writing
    because of this problem.

  7. I’m not sure why but this website is loading extremely slow for me.
    Is anyone else having this problem or is it a issue on my end?
    I’ll check back later and see if the problem still exists.

  8. First off I want to say great blog! I had a quick question in which I’d like to
    ask if you do not mind. I was curious to find out how you center
    yourself and clear your thoughts prior to writing.
    I’ve had a difficult time clearing my mind in getting my thoughts
    out. I truly do enjoy writing but it just seems like the
    first 10 to 15 minutes tend to be lost just trying to figure out how to begin. Any ideas or tips?

    Appreciate it!

  9. Hey I am so happy I found your web site, I really found you by accident, while I was looking on Google for something else, Regardless I am here now and would just like to say cheers for
    a tremendous post and a all round thrilling blog (I also love the theme/design), I
    don’t have time to browse it all at the minute but I have saved it and also added your
    RSS feeds, so when I have time I will be back to read a
    great deal more, Please do keep up the great work.

Leave a Reply to Magog Condo - Tous droits réservés Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top