ATM Tamil Romantic Novels

19 மோகவிழியால் எனை தைக்காதே

20 மோகவிழியால் எனை தைக்காதே
 
கிருஷ்ணா தன்னுடைய காரிலேயே வீட்டுக்கு போகலாம் என்று அருளிடம் கூறிவிட்டான்.. கிருஷ்ணா காரில் ஏற.. அருள் பின் சீட்டில் அமர போக.. “அருள் முன்ன வந்து உட்காருங்க.. கூறியவன் கோல்ட் பின்னாடி உட்கார்ந்துக்குவா” என்று சொல்லும் முன்னே தங்கமீனா பின் சீட்டில் போய் உட்காரப் போனாள்.. இருவரின் மனதிலும் எண்ணங்கள் ஒத்துப் போவதை எண்ணி அருள் ஆனந்தப்பட்டான்.
 
அருள் முன்சீட்டில் ஏறியதும்.. கிருஷ்ணா காரை எடுத்தான்.. தங்கமீனாவின் வீட்டுக்கு அவளிடம் வழி கேட்காமல் அவளது வீட்டிற்கு செல்லும் வழியில் சரியாகச் சென்றான்.. 
 
தங்கமீனாவை பார்த்த அன்றே.. அவளது அட்ரஸ் முதல் கொண்டு அவளது குடும்பத்தைப் பற்றி விசாரித்து தெரிந்து வைத்துக்கொண்டான் கிருஷ்ணா.
 
வீட்டின் முன்னே காரை நிறுத்த.. கிருஷ்ணா அட்ரசை முன்னமே தெரிந்து வைத்திருப்பான்.. என்று அருளும் புரிந்து கொண்டு அமைதியாய் அமர்ந்திருந்தான்.. “என்ன அருள்.. உங்க வீட்டுக்கு நான் முன்ன பின்ன வந்ததில்லை.. எப்படி உங்க வீட்டுக்கு சரியாய் வந்தேன்னு நீங்க கேட்க மாட்டீங்களா”
 
“நீங்க இவ்ளோ நாள் கண்டுபிடிக்காம இருந்திருந்தான் ஆச்சரியம் சார்” என்று சிரித்தவன் கார் கதவு திறந்து வாசலுக்கு வந்தான்.. தங்கமீனாவின் வீடு சாதாரண தொகுப்பு வீடு தான்.. கிச்சன் ஹால் பெட்ரூம் கொண்ட என்று சிறிய வீடுதான்..  
 
கிருஷ்ணாவின் வீட்டின் அளவில் ஒரு பங்கு கூட இல்லை.. தங்கமீனாவும் காரைவிட்டு இறங்கி நிற்க.. வீட்டில் அக்கம் பக்கம் இருப்பவர்கள் கப்பல் போல காரில் வந்திறங்கிய தங்கமீனாவை கண்டு.. “ம்ம்.. தங்கமீனா மனுசுக்கு நல்ல பெரிய இடமாத்தான் கிடைச்சிருக்கு.. என்ன அருள் தான் இவ பின்னாடி சுத்தி ஏமாந்து போய்ட்டான்.. இந்த குட்டி இப்படி அருள ஏமாத்திபுட்டாளே” என்று தங்கமீனா காதுபட பேச.. அவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.. கிருஷ்ணா பல்லைக்கடித்து தங்கமீனாவின் கைப்பற்றி தன்னுடன் அணைத்துப் பிடித்து நிறுத்திக்கொண்டான்.
 
அருள்.. தங்கமீனாவை பேசியவர்களை பார்த்து முறைத்துவிட்டு  “உங்க வேலையை பார்த்துட்டுப் போங்க.. எப்படா அடுத்தவன் வீட்ல பிரச்சனை வரும்னு வரிஞ்சு கட்டிட்டு வந்திடவேண்டியது” என்று சத்தம் போட.. ஒருத்தரும்  அங்கே நிற்கவில்லை  அனைவரும் சென்று விட்டனர்.
 
அலுத்து கொண்டிருந்த தங்கமீனாவின் பக்கம் சென்று “தங்கா நம்ம ஊர் மக்களப் பத்தி உனக்குத் தெரியும்ல.. எதுக்கு அழுகிற.. கண்ணை துடை” என்று கூறியவன் வீட்டுக்குள் செல்ல.. கலைவாணி அனைத்தையும் கேட்டபடிதான் கண்ணீருடன் நின்றிருந்தார்..
 
“அக்கா.. நம்ம வீட்டுப் பொண்ணு வெளியே மாப்பிளையோட நிற்குறா.. அவங்களை காக்க வைக்கிறது நல்லா இல்ல.. அவங்களுக்கு ஆரத்தி எடு” என்று கூற.. கலைவாணியோ அப்படியே நின்றார்.. அவர் வீடு வந்ததும் பக்கத்து வீட்டுக்காரர்கள் உன் பொண்ணு யாரையோ பணக்காரன கல்யாணம் பண்ணிக்கிட்டாளாமே.. என்று அவளை கேள்வி கேட்டு துளைத்து எடுத்தார்கள்.. அவர்களுக்கு என்ன பதில் கூறுவது என்று கஷ்டப்பட்டது கலைவாணிக்குத்தானே தெரியும்.. இப்போது பேசினால் எல்லாருக்கும் அவமானம் தான் என்று எண்ணி கண்ணை துடைத்துக்கொண்டு சமையல்கட்டுக்கு சென்று ஆரத்தி கரைத்து வந்து ஹாலில் நின்றிருந்த அருளிடம் “நீயும் வா” என்றிட “ஏன்க்கா.. உனக்கு மாப்பிள்ளைய பார்த்தா பயமாயிருக்கா” 
 
“எனக்கு என்னடா பயம்.. நான் ஏதாவது ஏடா கூடமா பேசிடுவேன் அதான் உன்ன வரச்சொல்லுறேன்” என்று அருளையும் வாசலுக்கு கூட்டிச்சென்றாள்.
 
கிருஷ்ணாவும், தங்கமீனாவும் சேர்ந்து நிற்க ஆரத்தி எடுத்து இருவரின் நெற்றியிலும் பொட்டு வைத்து “உள்ள போங்க” என்று பொத்தாம் பொதுவாக கூறி ஆரத்தியை வெளியே ஊற்றச் சென்றார் கலைவாணி.
 
கிருஷ்ணா.. தங்கமீனாவின் கையை விடாமல் பிடித்துக்கொண்டே சென்றான்.. அவளுக்குத்தான் இம்சையாகிப்போனது.. “கையை விடுங்க” என்று மெல்ல கூற.. அங்கே அருள் நின்றிருந்ததால் மெல்ல கையை விடுவித்தான்.. அப்பாடா என்று பெருமூச்சு விட்டாள் தங்கமீனா.
 
ஹாலில் உள்ள நாற்காலியில் உட்கார்ந்தான்.. எந்த நேரமும் ஏசியில் இருந்து பழகியவன் இங்கே அந்த வசதியெல்லாம் அவன் எதிர்பார்க்கவில்லை.. அவனுக்கு வேர்த்துக்கொட்டியது.. கைக்குட்டையால் துடைத்துக்கொண்டு குறுநகையுடன் அமர்ந்திருந்தான்.. அருள் அத்துனையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான்.. தங்காவோட வாழ்க்கை நல்லபடியத்தான் அமைந்திருக்கு.. என்று சந்தோசப்பட்டான்..
 
கிருஷ்ணாவிற்கு போன் வர.. “டாக்டர் ஆப்ரேசனுக்கு டைம் ஆச்சு” என்றிட..
 
“இதோ இன்னும் 20 மினிட்ஸ்ல வந்துடுவேன்” என்று போனை வைத்துவிட்டு அருகில் நின்ற தங்கமீனாவை தேடினான்.
 
அவளோ கிருஷ்ணா போன் பேசும்போதே அவள் அறைக்குச் சென்றுவிட்டாள்.. 
அருள் பக்கத்தில் கிருஷ்ணாவிற்கு பலகாரம் வாங்கி வரச்சென்றுவிட்டான்.. கலைவாணி கிச்சனுக்குள் காபி போட சென்றிருக்க.. தங்கமீனா எங்க காணோம்.
எல்லாரும் எங்க போனாங்க என்று யோசிக்க ஒரு அறை திறந்திருக்க அதில்தான் தங்கமீனா இருக்கணும்.. என்று யூகித்தவன்.. “கோல்ட்” என்று கதவை தள்ள அப்போதுதான் அவள் குளியலறையிலிருந்து வெளியே வந்தாள்.
 
“ஹேய் கோல்ட் எனக்கு ஆப்ரேசனுக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன்” என்று கதவை பார்த்தவன் சட்டென்று கதவு பக்கம் வந்து கொஞ்சமாக மூடி வைத்துவிட்டு  தங்கமீனாவை இறுக அணைத்து.. அவளின் கன்னத்தில் முத்தமிட்டு “ஹேய் இதுவரை நான் தான உனக்கு நிறைய முறை முத்தம் கொடுத்திருக்கேன்.. இப்ப எனக்கு ஒரு முத்தம் கொடு” என்று அவன் கன்னத்தைக் காட்டி நின்றான் புதுக்காதலன் போல.. சில சமயம் அவன் தங்கமீனாவிடம் பண்ணும் அலிச்சாட்டியமெல்லாம் சிரிப்பாய் இருந்தது கிருஷ்ணாவுக்கு..
 
“அதெல்லாம் முடியாது.. உங்களுக்கு ஆப்ரேசனுக்கு நேரமாச்சு.. அதுவுமில்லாம கதவு திறந்திருக்கு.. அம்மா கிச்சன்ல இருக்காங்க.. மாமாவும் வெளியே போனவங்க உள்ள வந்தா என்ன நினைப்பாங்க… நான் மாட்டேன் போங்க” என்று பிகு பண்ண..
 
“சரி நீ கொடுக்காட்டி பரவால.. நான் முத்தம் கொடுத்துக்குறேன்” என்று அவள் ரோஜா இதழில் வண்டாய் தேன் எடுக்க ஆரம்பித்தான்.. 
 
அவன் இதழ் செய்யும் ஜாலத்தில் அவள் கைகள் தானாக அவன் சிகைக்குள் நுழைத்துக்கொள்ள.. அவனுக்குள் ஆசையெனும் திரியை தூண்டிவிட்டாள்.. சிலநொடிகள் நிமிடங்கள் ஆனது.. சட்டென்று சுயம் வந்தவன் அவள் இதழை விட்டுப் பிரிந்து அவள் முகம் பார்த்து “ஐ.லவ்.யுடி கோல்ட்” என்று கண்சிமிட்டி அவள் நெற்றியில் முத்தமிட்டு “வரேன்” என்று வெளியே செல்ல..
 
“என்னங்க நைட்டுக்கு வந்துடுறீங்களா” என்று கூறிவிட்டு உதடுகடித்து கதவு நிலவை பிடித்து நின்றாள்.
 
“நைட்டுக்கு வந்தா எனக்கு என்ன தர.. அவள் முகம் பக்கம் போய் கன்னம் உரசி காதோரம்” நின்று சரசமாக கேட்க.
 
தங்கமீனாவோ வெட்கித்தலை குனிந்து நிலம் நோக்கி குனிந்து கொண்டாள். அவள் பால் நிற முகமோ குங்கும நிறத்தில சிவந்து போனது.
 
தங்கமீனாவின் கன்னத்தை விரல் கொண்டு நிமிர்த்தி “கோல்ட் ஆப்ரேசன் எந்த டைம்க்கு முடியும்னு சொல்ல முடியாது.. மிட் நைட் கூட ஆகும்டா.. முடிச்சவுடன் வர ட்ரைப் பண்ணுறேன்.. பட் இன்னிக்கு மட்டும் தான் நீ இங்க இருக்கணும்.. நாளைக்கு நாம ஊருக்கு போகப்போறோம்.. அங்க உன்ன ஒரு இடத்திற்கு கூட்டிட்டு போகப்போறேன்” என்று அவளை இறுக அணைத்து கன்னத்தில் முத்தமிட்டே அவளை விலக்கி விட்டான் உதய கிருஷ்ணா.
 
அறையிலிருந்து வெளியே வர அருள் அப்போதுதான் கைநிறைய பலகாரங்களுடன் வீட்டுக்குள் வந்தான்.
 
“அருள் டைம் ஆச்சு நான் கிளம்புறேன்” என்று வாட்சை பார்த்தபடி வெளியே போக எத்தணிக்க.
 
கலைவாணியும் காபியுடன் சமையல்கட்டிலிருந்து ஹாலுக்கு வந்தார்.
 
அதற்குள் கிருஷ்ணாவிற்கு போன் வந்து கொண்டேயிருந்தது.
“சார் காபி சாப்ட்டு போகலாம்” என்று அவன் வாங்கி வந்த பலகாரங்களை டேபிளில் வைத்தான்.
 
“சாரி என்ன தப்பா நினைக்காதீங்க அருள்.. நான் இன்னொருமுறை வந்து சாப்பிடுறேன்” என்று கூறிவிட்டு தங்கமீனாவை பார்த்து கண்சிமிட்டி தலை அசைத்து சென்றான்.
 
கிருஷ்ணா சென்றதும்.. “பணக்காரங்க எப்படி நம்ம வீட்டு காபியை குடிப்பாங்களா?” என்று தாடையை தோளில் இடித்துக்கொண்டு “எனக்கு சமையல்கட்டுல வேலையிருக்கு நான் கிளம்புறேன்” என்று தங்கமீனாவை ஒரு பார்வை பார்த்து “இப்ப நீ பணக்கார வீட்டு மருமகள் ஆகிட்ட நீயாவது எங்க வீட்ல சாப்பிடுவியா” என்று அவளை ஏற இறங்க பார்த்து கேட்க.
 
“அம்மா.. நான் எப்பவும் உன் மக தங்கமீனாதான்.. எந்த உசரத்திற்கு போனாலும் தலைகணம் எனக்கு இல்லைம்மா.. அவரையும் தப்பா நினைக்காத… ஒரு உசிர காப்பாத்த போறாரு “ என்று கணவனுக்காக வக்காளத்து வாங்கினாள்.
 
“பாரு அருளு அவ புருசன ஒரு வார்த்தை சொன்னதும் பொங்கிட்டு வரா” என்று அருளிடம் புகார் அளிக்க.. அக்காவுக்காக பேசுவதா.. இல்லை அக்கா மகளுக்காக பரிந்து பேசுவதா என்று குழம்பி நின்றான்.
 
“அக்கா அந்தக் காபிய எனக்கு கொடு எனக்கு தான் நீங்க பேசுதற கேட்டு மயக்கம் வருது” என்று அவன் கவலையை மறந்து அவர்களிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தான்.
 
அருள் ஹாலில் சோபாவில் படுத்து தூங்கிவிட்டான்..
 
மாலையானது பிரபு சந்தோசத்துடன் கையில் ஸ்வீட்டுடன் “அம்மா” என்று சத்தத்துடன் உள்ளே வந்தான்.
 
 
“என்னடா அரக்க பறக்க வர.. உன் மாமா நல்லா தூங்குறான் அவன எழுப்பி விடாத” என்று கையில் கரண்டியுடன் ஹாலுக்கு வந்தார்.. 
 
பிரபு போடும் சத்தத்தில் அருள் எழுந்து கொண்டான்.
 
“என்ன மாப்பிள்ளை இவ்வளவு சந்தோசம்.. பேங்க் வேலைக்கு பணம் கட்டினியே என்னாச்சு”
 
“அத சொல்லத்தான் வந்தேன் மாமா.. அதுக்கு உங்க அக்கா உன் தூக்கத்தை கெடுக்காதன்னு சத்தம் போடுது” என்று சலித்துக்கொண்டவன் கையிலிருந்த ஸ்வீட்டை நீட்டி “மாமா எனக்கு வேலைகிடைச்சிருச்சு.. அடுத்த வாரம் நான் பேங்க் வேலையில ஜாயின் பண்ணிடுவேன்” என்று முகம் நிறைய சந்தோச ஆர்பரிப்புடன் கூறிக்கொண்டிருக்க.. தங்கமீனா அறையிலிருந்து வெளியே வந்தாள்.
 
“அக்கா.. நீ எப்ப வந்த” என்று அவள் பக்கம் சென்றவன் எனக்கு பேங்க்ல வேலை கிடைச்சிடுச்சு.. என்று ஸ்வீட்டை எடுத்து அவள் வாயில் ஊட்டிவிட்டு..
 
“அருள் மாமா.. எனக்கு இந்த வேலைகிடைக்க கிருஷ்ணா சார் உதவியிருக்காரு.. பேங்க் மேலிடத்திலிருந்து எனக்கு போன் வந்துச்சு உடனே வரச்சொல்லி.. நானும் கொஞ்ச நேரத்துல அங்க போனேன்.. உங்களுக்கு டாக்டர் கிருஷ்ணாவ தெரியுமா முதலயே சொல்லியிருக்கலாம்ல.. நீங்க நெக்ஸ்ட்வீக் ஜாப்ல ஜாயின் பண்ணிக்கோங்கன்னு சொல்லிட்டாங்க அக்கா” என்று தங்கமீனாவை மகிழ்ச்சியில் அணைத்துக்கொண்டான்.

3 thoughts on “19 மோகவிழியால் எனை தைக்காதே”

  1. [url=https://pokerdomcasino1.site/]покердом[/url] покердом вход, покердом официальный сайт, покердом сайт, покердом вход на сайт, покердом доступ, покердом онлайн, покердом вход сегодня, покердом рабочий сайт, покердом зеркало, покердом рабочее зеркало, покердом новое зеркало, покердом зеркало сегодня, покердом без блокировки, покердом мобильная версия, покердом приложение, покердом личный кабинет, покердом аккаунт, покердом онлайн покер

Leave a Reply to TimothyCandy Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top