22 மோகவிழியால் எனை தைக்காதே
அருள்.. ஈஸ்வரியின் கையில் மோதிரம் போட்டு விட்ட அன்றைக்கே ஒரு புதியதாக கட்டிய வீட்டை வாங்கிவிட்டான்.
புதுவீட்டில் இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே வரச்சொன்னார் கலைவாணி..
வீட்டினுள் நுழைந்ததும் பூஜையறையில் விளக்கேற்றச் சொல்லி விட்டு.. இருவருக்கும் பால் பழம் கொடுத்து முடித்தவுடன் தம்பதி சகிதமாக சேர்ந்து பால் காய்ச்சினர்..
கலைவாணியை புதுவீட்டிலேயே இருக்க வேண்டும்.. என்று அன்பு கட்டளையிட்டான் அருள்.. பிரபுவுக்கு இப்போது வேலை கிடைத்திருக்கும் பேங்க் இருக்குமிடம் புதுவீட்டுக்கு பக்கமாக இருப்பதால் பிரபுவிற்கு டபுள் ஒ.கே. ஆனது.
மதிய விருந்து கலைவாணி செய்து வைத்திருக்க.. அனைவரும் சாப்பிட்டு முடித்து இருவரையும் ஓய்வெடுக்கச் சொல்லியிருந்தார் கலைவாணி.. இருவரும் தனித்தனி அறையில் ஓய்வெடுத்தனர்.
மாலையில் பக்கத்திலிருக்கும் அம்மன் கோவிலுக்குப் போய்விட்டு வந்தனர்.. அன்றிரவு பிரபுவை நேரேமே தூங்கப்போக சொல்லியிருந்தார் கலைவாணி.
ஈஸ்வரிக்கு தன் அறையில் வைத்து அவளுக்கு மெலிதாக மேக்கப்போட்டுவிட்டார் கலைவாணி..
குங்கும நிறத்தில் சில்க் காட்டன் புடவையும், தொடுத்து வைத்த சந்தன முல்லையை ஈஸ்வரியின் தலையில் சூட்டிவிட்டு.. “ஈஸ்வரி தம்பி மனசு கோணாத நடந்துக்கோம்மா.. உனக்கு நான் அதிகம் சொல்ல வேண்டியது இல்லனு நினைக்குறேன்” என்று அவளுக்கு திருஷ்டி எடுத்து சமையல்கட்டுக்கு சென்றவர் சுண்ட காய்ச்சிய பாலை டம்ளரில் எடுத்து வந்து ஈஸ்வரியிடம் கொடுத்தார்.
பாலை கையில் வாங்கும் முன் கலைவாணியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டவளின் கண்ணில் கண்ணீர் நிற்காமல் வர.. அவள் அம்மாவை நினைத்து அழுகிறாள் என்பதை புரிந்து கொண்டு .. “ஈஸ்வரி உன்னோட அம்மா அப்பா இல்லனு அழுகாதே.. அவங்க உன்னோட வயித்துல பையன் பொண்ணா பிறப்பாங்கடா” என்று ஈஸ்வரியின் கண்ணீரை துடைத்து விட்டார்..
கலைவாணி கூறியதை கேட்டு “அம்மா நிஜமா என்னோட அம்மாவும் அப்பாவும் பிள்ளையா பிறந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்” என்று விசும்ப சுவரில் மாட்டிருந்த கடிகாரத்தில் பெல் அடித்தது..
“பார்த்தியா ஈசு பெல் அடிக்குது.. எல்லாம் நல்லது நடக்கும் அருள் காத்திருப்பான் நீ கிளம்புடா” என்று பாலை அவள் கையில் கொடுத்து அனுப்பிவைத்தார்.
அருளின் அறைக்கு போகும் போது அம்மா அப்பா சீக்கிரம் என்கிட்டே வந்துருங்க என்று மனதில் நினைத்துக்கொண்டு சென்றாள்.
பாலை வாங்கி மாடியிலிருந்த அருள் அறைக்குள் சென்றாள்.. முதலிரவு என்றாலே பெண்களுக்கு பயம் இருக்கும்.. ஈஸ்வரிக்கு மட்டும் விதிவிலக்கா என்ன.. அருளை பற்றி முன்னமே அறிந்திருந்தாலும் அவனுடன் தனியாக இருக்கணுமே.. என்று ஒரு வித அச்சத்துடன் அறைக்குள் நுழைந்தாள்.. கட்டிலில் மல்லிகை சரங்கள் தொங்க.. ரோஜா இதழ்கள் மெத்தையில் தூவி இருந்தது.. அறையில் மலர்களின் வாசனை வீசிக்கொண்டிருந்தது.. வளையல் ஓசையில் நிமிர்ந்து பார்த்தான் அருள்.. அவனுக்கும் இது புதுவித உணர்வுதானே..
தங்கமீனாவுடன் வாழ ஆசைப்பட்டவன் அது இல்லையென்று தெரிந்து தன் மனதை மாற்றியிருக்கிறான்.. ஈஸ்வரியின் மீது காதல் அரும்ப தொடங்கியிருக்கிறது.. அவளுடன் தனிமையில் இருப்பது அவனுக்கும் ஒருவித படப்படப்பை கொடுத்தது.. அதை மறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.. இனி ஈஸ்வரிதான் தனக்கு எல்லாமுமே என்று எண்ணியிருந்தான்.
“க்கும்.. கலைவாணி அம்மா பால் கொடுத்துவிட்டாங்க” என்று பாலை டம்ளரை அவன் முன் நீட்ட.. அவள் கைகள் சிறது நடுக்கத்தான் செய்தது.
ஈஸ்வரியின் நடுக்கத்தை அவதானித்தவன் அவள் கையில் இருந்த பாலை வாங்கி டேபிளில் வைத்துவிட்டு “இப்ப எதுக்கு உன்னோட கை நடுங்குது” என்று அவளது கையைப் பற்றி தன் பக்கம் உட்கார வைத்தான்.
அருள் பக்கம் போய் அவனோடு உரசுமாறு அமர்ந்ததும் இப்போது அவளுக்கு பேச கூட நா எழும்பவில்லை.. வாயை திறந்தால் காற்றுதான் வந்தது.
“இ.இல்ல” என்று தலையை குனிந்து கொண்டாள்.. அவள் தலையில் வைத்திருந்த முல்லைபூவின் வாசம் அவனை கிறங்கச் செய்தது.. அவளது அச்சத்தைப் போக்க எண்ணியவன் பாலை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்..
“அருள் நீ.. நீங்களே எல்லா பாலையும் குடிக்கக் கூடாது.. எ.எனக்கும் கொஞ்சம் கொடுக்கணும்” என்று எப்படியோ திக்கி திணறி பேசிவிட்டாள்.
“அப்படியா” என்று உதடு மடித்து சிரித்தவன் மீதிபாலை அவளுக்கு கொடுத்தான்.. இப்போதே எல்லாம் நடக்க வேண்டாமென்று எண்ணிவிட்டான்.. அவள் பாலை குடித்ததும் டேபிளில் டம்ளரை வைத்து விட்டு திரும்ப.. அவளது இதழ் ஓரத்தில் பால் ஒட்டியிருக்க.. அதை கவனித்த அருள் அவன் விரல் கொண்டு அவள் இதழை துடைத்துவிட ஆணின் முதல் ஸ்பரிசம் அவளுக்குள் புதிதாய் உணர்ச்சிகள் மொட்டு விட்டு அரும்பியது.. அவள் கால் விரல்கள்களை நிலத்தில் ஊன்றிக்கொண்டு உடம்பு நடுக்கத்துவங்கியது.. அவளைப் பார்க்க பாவமாக இருந்தது அருளிற்கு.. இதழிலிருந்து விரலை எடுத்துக்கொண்டான்.. “ஏன்” என்று அவன் முகம் பார்த்தாள் பெண்ணவள்.
“என் கூட தனியா இருக்க உனக்கு பயமாயிருக்கா.. நான் நல்ல பிள்ளைமா” என்று அவனுக்கு பாராட்டு பத்திரம் வாசித்துக்கொண்டான்.
“நாம தான் முன்னமே பேசியிருந்தோம்ல கொஞ்ச நாள் கழிச்சு வாழ்க்கையை ஆரம்பிப்போம்னு.. எதுக்கு இப்படி என்னைப் பார்த்து நடுங்குற” என்று அவளின் மருதாணி போட்ட கையை எடுத்து அவன் கையோடு சேர்த்து வைத்துக்கொண்டான்.
“எனக்கு தூக்கம் வருதுங்க நான் தூங்கட்டுமா” என்று அவள் தலைகுனிந்தே கேட்க.
ஈஸ்வரி இப்போ உன் மனசு அம்மா அப்பா இல்லனு வருத்தம் படும்.. நான் அப்பாவ அம்மாவா ஒரு நல்ல நண்பனாகவும் இருப்பேன்.. நீ என்கிட்ட எதையும் மறைக்க வேணாம்.. எதுனாலும் என்கிட்டே கேளு என் சக்திக்கு முடித்த அளவு நன் செய்வேன் என்று அவள் நெற்றியில் முட்டினான்..
அவள் கண்களில் கண்ணீர் தாரையாய் வழிய
“எதுக்கு இப்ப அழுகுற” அவள் கன்னம் தாங்கி கேட்க
“நீங்க எனக்கு கிடைக்க எத்தனை ஜென்மம் புண்ணியம் செய்தேனு தெரியல” என்று தேம்பி கொண்டு தோளில் சாய்த்தாள்
அவள் வருத்தத்தை போக்க எண்ணி.. “ஏய் அழுதே நம்ம முடித்துவிடும் போல.. அழுமூச்சி பொண்ணு கொஞ்சம் சிரிங்க” அவளது மனதை மாற்ற வைத்து சிரிக்க வைத்தான்.
நான் ஒன்னும் அழுமூச்சி இல்ல என்று அவள் கண்ணீரை சட்டையில் துடைக்க.
“ஈஸ்வரி, என்னோட முகத்தைப் பார்க்க மாட்டியா.. நான் என்ன டிரஸ் போட்டிருக்கேன்னு கூட நீ பார்க்கல.. “நான் நல்லாயிருக்கேனானு பார்த்து சொல்லிட்டு தூங்கு” என்று அவளிடம் வம்பு செய்தான் ஆண்மகன்.
“இதென்ன வம்பாப் போச்சு.. இவரு என்கிட்ட விளையாண்டு பார்க்குறாரு போல” என்று மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்..
பட்டு வேட்டி சட்டையில் ஆண்மைக்குரிய இலக்கணத்துடன் கன்னக்குழி விழ சிரித்து ஈஸ்வரியை மயக்கும் பார்வை பார்த்திருந்தான்.. “இதுக்கு தான் நான் உங்களப் பார்க்காம தலைகுனிந்திருந்தேன்.. “உங்கக் கண்ணு என்னை என்னமோ பண்ணுது.” என்று தனக்குள் பேசிக்கொள்கிறேன் என்று நினைத்து வாய்விட்டு உளறிவிட்டாள்.
“ஏய் ஈஸ்வரி.. என்னோட கண்ணு என்ன பண்ணுதுன்னு சொல்லு சொல்லு” என்று அவனது கன்னம் தாங்கி கேட்டான்.
“அச்சோ எனக்கு வெட்கமாயிருக்கு” என்று திரும்பி அமர்ந்துகொண்டாள்.
அருளின் மூச்சுக்காற்று ஈஸ்வரியின் வெற்று முதுகில் பட அவளுக்கு தொண்டைக்குள் எச்சிலை விழுங்கி நீளமாக மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டாள்.
ஈஸ்வரியின் தோள்பட்டையில் முகம் பதித்து “ஏய் ரிலாக்ஸா இரு.. நமக்குள்ள இப்போதைக்கு எதுவும் நடக்காது.. அதுவும் உன்னோட அனுமதியில்லாம என்னோட சுண்டுவிரல் கூட படாது.. பயப்படாத” என்று அவளை தன்புறம் திரும்பினான்.. அவளின் பால் வண்ணம் நிறம் முகம் செவ்வானமாய் சிவந்து போனது..
“இப்ப நான் ஐ.லவ். யூ சொல்ல போறேன்.. நீயும் ஐ.லவ்.யூ சொல்லணும்”
“நான் மாட்டேன்ப்பா” என்று அவள் தலையாட்ட.. அவளது காதில் இருந்த ஜிமிக்கியும் ஆடியது.. ஜிமிக்கிக்கு முத்தம் கொடுக்க ஆசைப்பட்ட மனதை கடிவாளம் போட்டு அடக்கிக்கொண்ட அருள்..
“இல்ல நீ சொல்லித்தான் ஆகணும்.. நான் பர்ஸ்ட் சொல்லுறேன்” என்று மல்லிகைப்பந்தை எடுத்து அவள் முன்பு நீட்டி “ஐ.லவ்.யூ ஈஸ்வரி” என்று அவளுக்கு கொடுக்க..
மல்லிகைப்பந்தை வெட்கப்பட்டு வாங்கிக்கொண்டாள்.. அவள் கையை மெல்லப் பிடித்து முதல் முத்தம் அவளது கைக்கு கொடுத்து.. “இப்ப நீ ஐ.லவ்.யூ சொல்லு” என்று அவள் கையை பிடித்தபடி கேட்க.
“அச்சோ எனக்கு வெட்கமாயிருக்கு நான் சொல்லமாட்டேன்” என ஒரு கையால் முகத்தை மூடிக்கொண்டாள்.
“நீ ஐ.லவ்.யூ சொல்லாம நான் உன்ன தூங்கவிடமாட்டேன்” என்று அடம்பிடிக்க.
“என்ன வம்பா போச்சு உங்களோட” என்று சிணுங்கினாள்.
“அதெல்லாம் தெரியாது நீ சொல்லணும்” என்று அவளுடன் தோளோடு தோள் உரசி உட்கார்ந்தான்.
நிலத்தில் கால் விரலால் கோலம் போட்டுக்கொண்டே மெல்ல இதழ் திறந்து “ஐ.ஐ.லவ்.யூ” என்று சொல்லி சட்டென்று கட்டிலில் சென்று படுத்துக்கொண்டாள்.
“ஏய் ஈஸ் என்னடி ஐ.லவ்.யூனு சொல்லி படுத்திட்ட ஒரு முத்தம் கித்தம் கொடுக்க மாட்டியா”
“நீங்க தான் நாம கொஞ்சநாள் கழிச்சு ஆரம்பிக்கலாம்னு சொன்னிங்க” என்று படுத்தபடியே பேச.
“அடியேய் மொத்தமா இல்லைனாலும் ஒரு முத்தம் கூட கொடுக்க வேண்டாம்னு நான் சொல்லல” என்று அவளுடன் நெருங்கிப்படுத்தான்.
அவள் உடல் நெளிய ஆரம்பித்தாள்.. “அய்யோடி என்ன சும்மா தொட்டதுக்கே இப்படி நெளியுற” என்று அவளைத் தாண்டி அவள் பக்கம் போய் படுத்து அவளது முகத்தைப் பார்க்க உதடு நடுங்க அவனைப் பார்த்தாள்.. அவளது இதழ் நடுக்கத்தைப் போக்க தன்இதழ் கொண்டு அவள் இதழை மூடினான் அருள்.. மென்மையான முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தான்.. இருவருக்கும் முதல் முத்தம் காலம் முழுக்க அதை நினைத்திருக்க வேண்டுமே.. அதனால் பூவுக்கு ஒத்தடம் கொடுப்பது போல அவள் இதழில் முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தான்.. அவள் பூமேனி நடுங்க அவளை விட்டுப் பிரிந்து “இன்னிக்கு இந்த முத்தம் போதும்” என்று கண்ணடித்து மெல்ல அணைத்துக்கொண்டு படுத்துவிட்டான்.. அவன் அணைப்பில் கோழிக்குஞ்சு போல அணைந்து கொண்டாள் ஈஸ்வரி..

https://mogehe7060.forum-box.com/t33-1xBet-Promo-Code-In-Nigeria-2026-1XBRO200-Bonus.htm#p86
https://kerux2.wpenginepowered.com/tulips-calvin-spring-resurrection/comment-page-551/#comment-1985846
https://yuneecpilots.com/members/bertcormier.50121/#about
https://www.wikidot.com/user:info/xbetvip2026
https://www.tumblr.com/1xbetvip2026
Погружайтесь в захватывающий мир [url=https://aviator-igra-5.ru/]aviator игра[/url] и испытайте удачу в игре на деньги!
Все транзакции защищены шифрованием, а данные игроков находятся под надежной защитой.
[url=https://title-balcony.site/]The Title Balcony Nai Yang is a modern beachfront condominium in Phuket, located directly by the coastline in the Nai Yang area[/url] is a modern beachfront condominium in Phuket, located on the coast in the Nai Yang area.
The Title Balcony Nai Yang stands out as a sleek, modern beachfront condominium in Phuket, positioned right by the shoreline in the Nai Yang area . This condominium offers breathtaking views of the Andaman Sea features awe-inspiring views of the Andaman Sea. The location is perfect for those who want to wake up to the sound of waves great for anyone who loves to begin their day with the soothing sound of waves. The Title Balcony Nai Yang is designed to offer a luxurious lifestyle built to deliver a high-end lifestyle .
Superb post however I was wondering if you could write a litte more on this topic?
I’d be very grateful if you could elaborate a little bit further.
Bless you! https://Paratus.wiki/index.php/Nettoyage_H%C3%83%C2%B4telier_:_La_Propret%C3%83%C2%A9_Des_Chambres_Et_Des_Espaces_Publics_Pour_Le_Confort_Des_Clients
Way cool! Some very valid points! I appreciate you penning this write-up and also the rest of the
site is extremely good.
It’s the best time to make some plans for the future and it is time
to be happy. I have read this post and if I could I want to suggest you few interesting things or tips.
Perhaps you can write next articles referring to this article.
I wish to read more things about it!
789win.com
My developer is trying to persuade me to move to .net
from PHP. I have always disliked the idea because of the
costs. But he’s tryiong none the less. I’ve been using
Movable-type on several websites for about a year and am concerned about switching to another platform.
I have heard very good things about blogengine.net. Is there a way
I can import all my wordpress posts into it? Any help would be greatly appreciated!
wonderful points altogether, you just won a emblem
new reader. What would you suggest about your publish that you simply made a few days ago?
Any sure?