ATM Tamil Romantic Novels

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

3.கல் இதயம்

 

 

அப்பா என்னால அவரை கல்யாணம் பண்ணிக்க முடியாது..நா படிக்கணும்..ப்ளீஸ்..ப்பா..என்று அழுகையுடன் நிறை கூற

 

என்னடி நீயும் உங்க அக்கா மாதிரி எவன் கூடயாச்சும் ஓடி போக போறியா ..

 

மம்ம்மா..நீயும் என்ன ஏன் மா இப்படி அசிங்கமா பேசுற..

 

அப்போ கல்யாணத்துக்கு சம்மதிக்க வேண்டித்தான..

 

 

பார்வதி நமக்கு ரெண்டு பொண்ணுமே நம்மளுக்காக யோசிக்க மாட்டாங்க  இல்ல டி..என்று வேதனையில் கூறியவர் முகம் நிறையை ஏதோ செய்ய அப்பா நா நா எனக்கு சம்மதம்..கல்யாணம் பண்ணிக்குறேன்..ஆனா நா படிக்கணும் இது மட்டும் எனக்காக மாப்பிளை வீட்டுல பேசுங்க ப்ளீஸ்..என்று நிறை கூறவும் கண்டிப்பாம்மா அதுக்கு நா பொறுப்பு என்று நாளை மகளின் திருமணத்தை நடத்த முடிவு செய்தார்..

 

அதே சமயம் சென்னையில் அந்த அரண்மனை போன்ற வீட்டில் ஒருவனின் கர்ஜிக்கும் சத்தம் கேட்டது..ஆம் அது நம் நாயகன் இளவேந்தன் தான்…யாரை கேட்டு கல்யாணம் பேசிட்டு வந்துருக்கிங்க..ஐம் நாட் இன்டர்ஸ்டேட்.. உடனே மேரேஜ் ஸ்டாப் பண்ணுங்க..என்று திருமணம் வேண்டாம் என்று கூறவும் ..,ராஜேந்திரன் சரி தம்பி அப்போ உனக்கு சேர வேண்டிய சொத்துக்கள் எல்லாம் இதோ உன்னோட தம்பி ஈஸ்வர்க்கு போய்டும்…

 

பரவாயில்லை டாட்..அதை விட அதிகமா சம்பாதிச்சுட்டேன்..ஐ டோன்ட் நீட்.. என்றான் நக்கலாக..

 

 

அப்போ உன்னால ஈஸ்வர் கல்யாணம் நின்ன பின்னாடி நிம்மதியா இரு..

 

க்ரேஸி…அதுக்கும் நா மேரேஜ் வேண்டாம்னு சொல்வதற்கும் என்ன காரணம்..என்றான்

 

மூத்த பையன் இருக்கும் போது சின்னவனுக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணோம்..அவனோட மாமனார் இப்போ மேரேஜ் நிறுத்த சொல்லிட்டாரு..

 

 

வாட் டேட்.. குழப்பாதிங்க..

 

 

உனக்கு ஏதோ பிரச்சனை இருக்கு  நீ கல்யாணம் பண்ண யோசிக்க்கிற ன்னு  ஏதோ பெரிய ரீசன் இருக்குன்னு நினைக்கிறாங்க..அது தா மேரேஜ் பண்ணலன்னும் உனக்கு குறை யா இருக்க போய்தான் பொண்ணு தரலன்னு  யாரோ பொண்ணு வீட்டில சொல்லிருக்காங்க.. உன் தம்பிக்கும் ஏதாச்சும் குறை இருக்கும் டாக்டர் கிட்ட  செக் பண்ணுனு சொல்றாங்க ….இதுக்கு பதில் என்னால சொல்ல முடியாது..அதா கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டான்…ரொம்ப காதலிச்சுட்டான் போல அந்த பொண்ணு ..உனக்காக வேண்டாம்னு தூக்கி போட்டுட்டான்.. ஆனா நீ..

 

ப்ச் நா என்ன பண்ணனும்..

 

ஒன்னும் பண்ண  தேவ இல்ல..நீ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டா எல்லா பிரச்சனையும் சரி ஆகிடும்..

 

 

ஒஹ் காட்..இப்போ என்ன மேரேஜ் பண்ணிகனும் அவ்வளவு தான.. பண்ணிக்கிறேன்..உங்களுக்காக இல்ல என் தம்பிக்காக..பட் ஒரு கண்டிஷன் 

 

திருமணத்திற்கு ஓகே சொன்னத்துக்கே பெரியது..என்ன கேட்டாலும் பன்றேன் சத்தியம்..அதுக்கு முன்னாடி அங்க தன் பொண்ண நினச்சு வேதனையில் இருக்கிற சிவரமனிடம் இவன் ஒத்துக்கொண்டதை கூற வேண்டும் என்ற பரபரப்பில் ஓடி விட்டார்..

 

திருமண நாள் அன்று.

 

டேய் என்னடா நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இப்ப வந்து கல்யாணம் வேண்டாம் என்று அடம் பிடிக்கிற இது தப்பு டா நேரம் ஆயிட்டு இருக்கு சீக்கிரம் இந்த முகூர்த்த டிரஸ் மாத்திக்கிட்டு வா”

 

என்று அவனது தாயார் கற்பகம்  கத்திக் கொண்டிருக்க ஆனால் அவனோ எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தான்..

 

 

ராஜேந்திரன் என்ன வென்று கேட்கவும்..அந்த பொண்ணு மூணு வருஷம் மட்டும்  எனக்கு மனைவியா இருந்தா போதும்..அது மட்டும் இல்ல எனக்கு டிவோர்ஸ் ஆகுற வரை அவள் நம் வீட்டில் தான் இருக்கணும் ஆனா என் அறையில் இருக்க கூடாது..இதுக்கு சம்மதம் என்றால் தாலி கட்டுறேன் என்றான்..

 

 

டேய்.. என்ன டா சொல்ற..

 

 

ம்ம்மா சும்மா இருங்க..நானே பேசிக்கிறேன்..

 

நீ ஏதும் சொல்ல வேண்டாம்..அந்த பொண்ணோட அப்பாகிட்ட உன்னோட கண்டிஷன் எல்லாம் சொல்லிட்டேன்..மூணு வருஷத்துக்கு அப்புறம் நீ நினைச்ச மாதிரி டிவோர்ஸ் வாங்கிக்க..என்று ராஜேந்திரன் வெளியில் சென்று விட்டார்..

 

 

அவர் கூறவில்லை .திருமணமான உடன் நிறை கண்டிப்பாக அவன் மனதை மாற்றிவிடுவாள்.. இவனும் இது போல பினாத்திக்கொள்ள மாட்டான் என்று மனதில் நினைத்து நிறை அப்பாவிடம் கூறிவிட்டேன் போல சொல்லிவிட்டார்..நிறைக்கு அவன் கூறியதை கூறாமல் விட்டது தான் தவறு..இனி நடப்பது அனைத்தும் விதியே..

 

மங்கள வாத்தியங்கள் முழங்க ஐயர் மந்திரங்கள் ஓத சுபமூகூர்த்த நேரத்தில் தான் அருகில் தேவதையின் அம்சமென அமர்ந்த நிறையின் கழுத்தில் தன் ஆண்மை நிறைந்த இரு நீண்ட கரங்களினால் பொன் தாலியை அவள் கழுத்தில் கட்டி திருமதி நிறைநிலாஇளவேந்தனாக மாறினாள்..

 

நிறை அப்பா உன்னை சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சுட்டேன்னு நினைகதம்மா..

 

நீ இப்போ  போக போற வீடு உன் வீடும்மா…. உன் புருஷன் தான் உனக்கு எல்லாம் அது மட்டும் இல்ல உன்னைய படிக்க வைக்கிறேன்னு சொல்லிட்டாரு..நீ நினைச்சா மாதிரி படிக்கலாம்.., என்று அவளுக்கு சில பல அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தனர்..நிறை கண்ணில் கண்ணீர் நிக்காமல் வந்து கொண்டிருந்தது..அதை எல்லாம் ஓரம் தள்ளி விட்டு இனிமே அப்பா அம்மாவுக்கு சுமையா இருக்க கூடாது..இவரை பத்தி ஏதும் தெரியாது.., எப்படி என்று அவன் உருவமே பயத்தை கொடுத்தது..திருமணம் முடிந்த அன்று இரவு இளவேந்தன் மற்றும் நிறைக்கு முதல் இரவு ஏற்பாடு செய்யப்பட்டது.. இளவேந்தன் தாம் தூம்னு குதித்து விட்டான்..பிறகு நிறையிடம் நீ படித்து முடித்த பின் ஒரே அறையில் தங்கி கொள்ளலாம் என்று கூறி விட்டதாக கற்பகம் கூறவும்..,ஏதேதோ பயத்தில் இருந்தவள் அவன் இவ்வாறு கூறியதும் மனதில் நிம்மதியுடன் அவருக்கு நன்றி சொல்லணும் என்று நினைத்து கொண்டு படுத்து விட்டாள்..

 

வீட்டில் உள்ள அனைவரிடமும் நேரத்தை  செலவு செய்தாள்.. கற்பகமும் ராஜேந்திரனும் தங்கள் பெண் போல பார்த்து கொண்டார்கள்..

 

இந்த மூன்று வருடமும் அவன் வருவான் போவான் ஆனால் தனக்கு மனைவி என்று ஒருத்தி இருப்பதையே மறந்திருந்தான்..அவள் தான் படிப்பு முடிந்ததும் வாழ்க்கையை ஆரம்பிக்க சொன்ன அவன் மீது மலை அளவு காதல் வந்து தொலைத்தது..இரண்டாம் ஆண்டு படிக்கும் போது அவனுக்காக சமைக்க கற்று கொண்டாள்.. இளவேந்தன் வரும் நேரம் எல்லாம் அவள் செய்த உணவுகளையே விரும்பி உண்பான்..வீட்டில் அதிக நேரம் இருக்க மாட்டான்..அவனை காண்பதே தன் வாழ்வின் லட்சியம் என்று நாட்களை கத்தினாள்..அவனை ஒர கண்ணால் காண்பது ,அவன் சாப்பிட்ட தட்டில் உணவருந்துவது..என்று காதல் கோமாளியானாள்..

 

அவன் இல்லாத நேரம் அவன் அறைக்கு சென்று பார்ப்பாள்..அங்கு  தங்கள் கல்யாண போட்டோவை பெரிதாக போட்டிருப்பான்..அவனது ஆடைகள் முதல் செருப்பு வரை பார்த்து பார்த்து சுத்தம் செய்து வைப்பாள்..அவன் எந்த நேர்ம் எதுக்கு பார்வையை மாற்றுவான் என்பது நிறைக்கு அத்துபடி..

இவளுக்கே சில நேரம் இது என்ன மாதிரியான உணர்வு என்று தெரியாமல் இருப்பாள்..ஈர்ப்பு என்று நினைத்திருக்க அது காதல் என்று உரைக்க ஒரு சம்பவம் நடந்தது..ஒரு நாள் இளவேந்தன் வந்த கார் ஆக்சிடெண்ட் ஆகி விட்டது என்று கூறவும் துடித்து போனாள்..அழுது கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள்.. இளவேந்தன் நல்ல படியாக வீட்டிற்குள் வரவும் அழுதுகொண்டே ஓடி சென்று அவனை அனைத்து கொண்டாள்.. முதன் முதல் அணைப்பு அதுவும் பெண்ணவள் இதயம் துடித்து தான் போனது..அனைவரும் அங்கிருக்க சாரி கொஞ்சம் பயந்துட்டேன்.. உங்களுக்கு ஏதும் இல்லையே..

 

அவன் நிறையை விட்டு விலகி ம்ம் பெட்டர்..நோ மோர் இஸ்ஸுஸ் ….என்று உடனே லண்டன் சென்று விட்டான்..

 

அன்று தான் உணர்ந்தாள்..இது வெறும் ஈர்ப்பு இல்ல..,காதல் என்று ..மனதில் அவனிடம் காதலை கூற நினைக்கும் போது வெளிநாடு சென்று விட்டு இன்று தான் அதுவும் அவர்களின் திருமண நாள் அன்று வந்தும் வரதாததுமாக டிவோர்ஸ் நோட்டீஸ் தரவும் தன் மனதில் கட்டிய காதல் கோட்டை சுக்கு நூறாக உடைந்து விட்டது..

 

 

 

 

 

 

இன்று இந்த நிலைமைக்கு யார் வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்..என்னுடன் திருமணம் ஆன பிறகு கூட இவர் என்னை நேசிக்க வில்லையா..நா அவர் அளவிற்கு அழகில்லையா என்று கண்ணாடி முன் நின்று பார்க்க செதுக்கி வைத்த சிலை போல அழகு..அழுது அழுது சிவந்த வீங்கிய முகம்..அந்த கலங்கிய  கண் அழகிற்கு சாம்ராஜ்யங்களே விழும்..மாசு மறு அற்ற களங்கம் இல்லாத முகம்..அப்படி இருந்தும் ஏன் தன்னை நிரகரிக்கிறான் என்று மனதில் வேதனையோடு படுத்தவள் அவனிடம் இருந்து வாங்கிட்டு வந்த ஏ. டி. எம் கார்டை பார்த்தாள்.. மனதில் என்ன வேண்டான்னு சொல்லிட்டு அந்த கோண மூஞ்சு காரி கூட சுத்த பாக்கிறியா டா வேந்தா.., உண்ண என்ன பண்றேன்னு பாரு டா நெட்டை கொக்கு என்று ஒரு முடிவெடுத்து கண்களை துடைத்து விட்டு நிம்மதியாக உறங்கினாள்..

 

வீட்டிற்கு வந்த ராஜேந்திரனும் கற்பகமும் அங்கு பார்த்த கோலத்தில் தங்களை மறந்து சிலையென நின்றனர். 

4 thoughts on “கல்லுக்குள் இதயம் வைத்தாய்”

  1. Флуд??? Я высказал свое мнение! Или это запрещено?[/QUOTE] https://simpleblissfullife.com салют бразы ) добавляйте репу не стесняйтесь всем удачи))jte тут брал кто?Как качество?К скольки делать?

  2. Hello There. I found your weblog the use of msn. That is a really
    neatly written article. I’ll make sure to bookmark it and return to learn extra of your useful information. Thanks for the post.

    I will certainly return.

  3. Για να είμαι ειλικρινής, τον τελευταίο καιρό έχει γίνει σαφές ότι
    το συγκεκριμένο στυλ παιχνιδιού έχουν αλλάξει ριζικά
    την εμπειρία μας. Παλιότερα όλοι εστίαζαν μόνο σε κλασικά φρουτάκια, αλλά σήμερα το γνωστό plinko casino game κυριαρχεί
    παντού επειδή παρέχει μια ιδιαίτερη αγωνία.
    Προσωπικά πιστεύω ότι η δυνατότητα να δοκιμάσεις την έκδοση
    casino plinko είναι το σωστό στάδιο για να μπορέσει
    κανείς να καταλάβει τις πιθανότητες χωρίς
    φόβο. Ακόμη, μου φαίνεται ότι οι μπάλες του plinko παρουσιάζουν μια ρεαλιστική συμπεριφορά
    που σε κρατάει μέχρι την τελευταία στιγμή.
    Έχω την απορία αν ένα εξελιγμένο plinko
    app είναι σε θέση να κάνει το παιχνίδι πολύ πιο σταθερό σε σχέση με την έκδοση για pc.
    Εν κατακλείδι, όλα βρίσκονται στην έξυπνη διαχείριση αλλά και μέσα από τα plinko demo που προσφέρονται την ευκαιρία για δοκιμές.
    Εσείς ποια ακριβώς στρατηγική εφαρμόζετε την ώρα που ρίχνετε οι μπάλες; Λέτε ότι
    υπάρχει ένα σύστημα ή μήπως
    όλα είναι αποκλειστικά θέμα τύχης; Θα χαρώ να ακούσω
    τις σκέψεις σας και ορισμένες δικές σας αναλύσεις! https://securityholes.science/wiki/%CE%A0%CF%8E%CF%82_%CF%84%CE%BF_plinko_casino_game_%CF%80%CE%B1%CF%81%CE%B1%CE%BC%CE%AD%CE%BD%CE%B5%CE%B9_%CE%BA%CE%BF%CF%81%CF%85%CF%86%CE%B1%CE%AF%CE%BF_%CF%83%CF%84%CE%B7%CE%BD_%CE%95%CE%BB%CE%BB%CE%AC%CE%B4%CE%B1:_%CE%A3%CF%85%CE%BC%CE%B2%CE%BF%CF%85%CE%BB%CE%AD%CF%82_%CE%BA%CE%B1%CE%B9_plinko_demo

  4. For those following the latest updates on this situation, I found a very detailed report and live coverage here:

    [URL=https://youm7.online]Check it out here[/URL]

    The updates are quite fast there. Worth checking.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top