15.கல்
வேந்தன் முகம் கோபத்தில் கடுகடு என்று இருந்தது.. காரில் அமைதியாக அமர்ந்து கொண்டாள் நிறை..ஏதாவது பேசினால் வாய் இடம் மாறி போய்விடும் என்று இருந்தாள்..அவள் வீட்டை தாண்டி கார் சென்று கொண்டிருந்தது..
வண்டிய நிறுத்துங்க…என்னோட வீடு தாண்டி போட்டுயிருக்கிங்க..
ஏன் என்கூட வர மாட்டியா..அவன் கூப்பிட்டதும் போய் பேச தெரியுதுல டி…நா என்ன புலியா..கடிச்சா திங்க போறேன்…பசிச்சாலும் உண்ண தின்கிற ஐடியா இப்போதைக்கு எனக்கு இல்லை..பேசாம வாய மூடிட்டு வா..
பசி வயிற்றை கிள்ளவும்..அவன் கையை சுரண்டி கூப்பிட்டாள்..
என்ன என்றான் கோபமாக
வயிற்றை தடவி காட்டவும்..
ஊமை பாஷை தெரியாது டி..ஒழுங்கா வய தொறந்து பேசு..என்கிட்ட வாங்காத
நீங்கதான பேசாம வான்னு சொன்னிங்க..
அப்படியே என் பேச்சை கேக்குற மாதிரி தான்..என்று பேச போக அவன் முகத்துக்கு அருகே வந்து அவன் கண்களை பார்த்து வாயை கை வைத்து மூடியவள்
அவன் மீது உள்ள பயத்தில் கோப படாதீங்க அத்தான்..எனக்கு பசிக்குது
மதியம் சாப்பிடல..இப்போ பசிக்குது..பசில காது வேற கேட்கலை..சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு கோப படுங்க ப்ளீஸ்த்தான்…என்று குழந்தை போல முகத்தை வைத்து கொண்டு கேட்டாள்..
ஹேய் ஒரு நிமிஷம்.., என்னனு கூப்பிட்ட..
அத..அது..வந்து
ம்ம்ம் என்ன டி சொல்ல போறியா இல்லையா..
அத்தான்னு..சாரி தெரியாம
கேட்கலை சத்தமா கத்தி சொல்லு என்றான் ..
அத்தான் ன்னு கூப்பிட்டேன்..
ம்ம்ம் நல்லா இருக்கு டி..இனிமே அப்டியே கூப்பிடு என் பப்பாளி..என்று அவள் பண் போன்ற மென்மையான கன்னத்தில் முத்தமிட்டு அவளை பார்த்தான்..நிறை அவன் கொடுத்த ஷாக்கில் அதிர்ந்து போய் நின்றாள்..
அவள் கெஞ்சியதை பார்க்க அவனுக்கு இரக்கம் சுரக்காமல் ஹார்மோன்ஸ் தாறுமாறாக ஏறி இறங்கியது..அவளை அப்படியே மடி மீது தூக்கி அமர வைத்தவன் பின் முதுகில் அவன் முகத்தை தேய்க்க அந்த நெருக்கம் ஏதோ செய்தது..நிதானமாக அவளை திருப்பி அமர வைத்து பார்த்து நிறை கண்களையும் அவள் இளஞ்சிவப்பு உதட்டை பார்க்க கள் குடிக்க ஆசை கொண்டான்..கழுத்துக்கு கீழ் பார்த்தவன் அப்பப்பா அதில் தாராளம் கண்டு மெய் மறந்து அவள் பட்டு உடல் அவன் மீது உரச அவளுக்கே உரிய சந்தன நறுமணத்தை உள்ளிழுத்து அந்த மோன நிலையை அனுபவித்தான்..
நிலமை உணர்ந்து விலகியவளின் கண்களில் முத்தம் இட்டு.., இனிமே அத்தான்னே கூப்பிடு..
அவள் இந்த கிறுக்கு திடீர்னு ஏன் இப்படி பேசுது..ஏதோ கோவில் கூட்டிட்டு போய் வேப்பிலை அடிக்கணும்..என்ற மனநிலையில் இருந்தாள்..
இளவேந்தன் ஹோட்டல் முன்னாடி நிறுத்தினான்..
அவளுக்கு பிடித்த பாவ் பாஜி ,மட்டன் கரி தோசை ஆம்லெட் எல்லாம் அவளுக்கு பிடித்த உணவுகளாக ஆர்டர் போட்டிருந்தான்…இருந்த பசியில் அனைத்தையும் சாப்பிட்டு கொண்டிருந்தாள்.. வேந்தன் சாப்பிடாமல் இருக்கவும் ஏன் என்னையே பார்த்துட்டு இருக்கீங்க…
அவன் சாப்பிடாமல் இருப்பதை பார்த்தவள் தன் பிளேட்டில் இருந்து அவனுக்கும் ஊட்டி விட்டு சாப்பிட்டாள்..அவனுக்கு வயிறு நிறைந்ததோ இல்லையோ மனதில் நிம்மதி கொடுத்தாள் அவன் மனையாள்…
அவளுக்கு அது ஒரு விஷயம் இல்லை..ஆனால் அவனுக்கு அது ஏதோ இறகை போல் மனதை லேசாக்கியது..சோறு வாங்கி கொடுத்தே இவளை கரெக்ட் பண்ணிறலாம் போலயே..என்று அவன் தாடியை சொரிந்துவன்..
பில் பே பண்ணிட்டு வறேன் கார்ல போய் உக்காரு..காரின் அருகே நின்று எதேச்சையாக வேந்தனை பார்க்க தொலைவில் நின்று போன் பேசும் போது அவன் நெடிய உருவமும் திடகாத்திரமான இரு தோள்களும்..,தன்னை மட்டுமே வட்டமடிக்கும் கண்கள்..,அவன் ஆண்மை ததும்பும் முகம் பெண்ணவளை ரசிக்க செய்தது..அவனையே பார்த்து கொண்டிருந்தவள்…,அவன் என்ன ..,வேற ஏதாச்சும் சாப்பிட வேணுமா டி என்று உதடு அசைவில் கேட்க..,வேண்டாம் என்று தலை ஆட்டியவள் கண்கள் மீண்டும் அவன் பக்கம் இழுவிசை போல இழுத்தது…அவனுக்கு தெரியாமல் சைட் அடித்தாள் என்று தான் சொல்ல வேண்டும்..வேந்தன் காரில் சாய்ந்து அங்கே விளையாடி கொண்டிருந்த சிறு குழந்தைகளை பார்த்து கொண்டிருந்த நிறையை ஏக்கத்துடன் பார்த்தான்..நக கண் கூட அழுக்கில்லாத வெண்மை நிற பதுமை போல் அல்லவா இருக்கிறாள்..இடை தாண்டிய கூந்தல் களைத்து விளையாட மனம் ஏங்கியது…கருவிழி இரண்டும் என்னை கொள்ளுகிறதே என்று பார்த்து கொண்டிருந்தான்..தினமும் இவள் மடியில் செத்து காலையில் மீண்டும் இவளாலே நான் உயிர் பெற வேண்டும் என்று நினைத்து நிறையை ரசித்த வாறே வந்து சேர்ந்தான்..
இருவரும் ஒருவரை ஒருவர் ரசித்தனர் ..ஆனால் வெளியில் மட்டும் முறைத்த மேனிக்கே திரியும் கேஸ்கள்..
கொஞ்ச தூரம் நடக்கலாமா..இங்க பக்கத்துல பீச் இருக்கு ஜில்லுன்னு காத்து வரும்..
ம்ம் வா..என்று அவள் சொல்லாமலே கையை இறுக பிடித்து கொண்டு நடந்தான்..கொஞ்சம் நேரம் மனதில் இருவரும் எதை பற்றியும் யோசிக்காமல் தங்கள் இணைகளை ரசித்தபடி நடந்தனர்….
நிலா இங்க வா..இந்தா உனக்கு ..
என்னது..,அவன் நீட்டிய குல்பி ஐஸ் பார்த்தவள்..ஹேய்ய்.. சூப்பர் எனக்கு இது ரொம்ப பிடிக்கும்..உங்களுக்கு வாங்கலையா
இல்ல நீ சாப்பிடு..என்று அவள் கைகளில் வடித்து அதை ருசித்து சாப்பிட சாப்பிட மூச்சு வாங்கி நின்றான்..நண்டை அடக்க முடியாமல் தவித்தான்..ஐயோ ..அவஸ்தையா இருக்கே..இவ வேற இப்படி சாப்பிட்டு என்னைய ரேப் பண்ண வைக்கமா விட மாட்டா போலிருக்கே..
என்ன சொன்னிங்க கேட்கல..
அது உனக்கு இப்படி சாப்பிட புடிக்குமா டி..
ம்ம் ஆமாத்தான்..என்று நாக்கை சுற்றி அந்த முழு குல்பி யும் சாப்பிட்டு முடித்தவள்..துடைக்க அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து கர்சீப் எடுத்து துடைத்தாள்..உயர் அழுத்தம் கூடி போய் நின்றான் கன்னி கைகள் தீண்ட சுக வேதனை ஆகி விட்டது..கண்களை மூடி கொண்டு அதை அனுபவித்தவன்..என்ன சத்தமே இல்ல..
கண்களை திறந்து பார்த்தவன் அருகில் நிறை இல்லை.. பீச்சில் நடந்து கொண்டிருந்தாள்..
அங்க சூடா சோளம் வேக வச்சு மேல சில்லி சால்ட் எல்லாம் போட்டு வித்துட்டு இருப்பான் ..வாங்க போலாம்.
வீட்டுக்கு போலாமா டி..உடம்பு ஒரு மாதிரி இருக்கு..ஐயோ காய்ச்சலா..என்று தொட்டு பார்க்க உடம்பு கொதித்து..,அவனுக்கிருப்பது பருவகாய்ச்சல்..அவளோ பீவர் வந்துருச்சு போல ..வீட்டிற்கு கூட்டிட்டு போய் மருந்து தரணும் ஊசி போடனும்ன்னு என்று நினைத்து அவனை பத்திரமா கூட்டிட்டு வந்தாள்..
ஐயோ..,என்னால தான் காய்ச்சல் வந்துறுச்சு..
சரி டி வீட்டுக்கு போறேன்.. மார்னிங் நா ஆபிஸ் வர நேரம் ஆகும் காலைல ஆட்டோ பிடிச்சு வந்துரு..என்று கிளம்பி விட்டான்..
ஐயோ அத்தானுக்கு காய்ச்சளோட எப்படி வீட்டுக்கு போவாங்க..நம்ம வீட்டுக்காச்சும் கூட்டிட்டு வந்துருக்கலாம்..பத்து மணி போல வேந்தனுக்கு கால் செய்தாள் நிறை..,கால் எடுக்கவே இல்ல..இடையில் பிசி வேறு என்று வரவும் யாருக்கு பேசுறார்..கால் எடுக்க மாட்டேங்குறாரே..
மீண்டும் அவனே கால் செய்தான் நிறைக்கு..ஒரே ரிங்கில் உடனே அட்டேன் செய்தவள் என்ன டி கால் பண்ணிருக்க…
யார்ட்ட பேசிட்டு இருந்திங்க..
அது ஊ ஊ ஊ
சொல்லுங்க யாருத்தான் பேசிட்டு இருந்தாங்க உங்க கூட இவ்வளவு நேரம்..நா கால் பண்ணிட்டே இருந்தேன் எடுக்க வே இல்ல….என்றாள் ஒரு கோபத்துடன்
அவளை நினைத்து சிரித்துக்கொண்டே உன் மாமியார் தான் பண்ணாங்க..என்னோட கசின்க்கு மேரேஜ்ன்னு ஊருக்கு போறாங்களாம்..
ஓ ஓ ஓ சரி சரி சாப்டிங்களா..இப்போ எப்படி இருக்கு. அவள் அக்கறை அவனுக்கு சிரிப்பு தான் வந்தது..
டேப்லெட்ஸ் போட்டு படுத்தேன் ..தூங்கிட்டேன்..இனிமே தான் ஏதாச்சும் செஞ்சு சாப்பிடணும் ..
சாந்தியம்மா இல்லையா..
யாரும் இல்லை..வெளில ஆர்டர் போட்டுக்குறேன்..
உங்களுக்கு ஹோட்டல் புட் சாப்பிட புடிக்காதே என்றாள்..
வேற யார் இருக்கா …,எனக்கு பார்த்து பார்த்து செய்ய நானே செஞ்சுக்குறேன் என்று ஆஆஆ என்றான்.
என்னாச்சு..பதறினாள்..
சுடு தண்ணி வச்சேன் ..கைல சுட்டிருச்சு..
ஹையோ என்றானது..
மார்னிங் லேட் ஆகும் நா வரதுக்கு..நீ கேப் புக் பண்ணி வந்துரு டி..கொள் கொள் என்று இரும..நிறைக்கு மனதில் இருப்பு கொள்ளவில்லை..நிஜமாகவே உடம்பு முடியாம இருக்கிறார் போல..,நிறை கிளம்பிவிட்டாள்..
தன் கையால் செய்த உணவுகள் முதற் கஷாயம் வரை செய்து எடுத்து கொண்டு அவனுக்கு பிடித்த கொத்தமல்லி சட்னி நாக்கிற்கு சுவையாக செய்து எடுத்துட்டு போனாள்..
அவன் நீ எனக்கு வேண்டாம் போ என்று சொன்னதில் இருந்து அவர்கள் குடும்பத்துடன் உள்ள தொடர்பையே துண்டித்தாள்.. ராஜேந்திரன் மட்டும் அடிக்கடி பார்த்துவிட்டு செல்வார்..
இன்று தன்னவனுக்கு சுகமின்மை காரணம் இருக்க எல்லா கோபத்தையும் விட்டு விட்டு அவன் வீடு தேடி சென்றாள்..

