ATM Tamil Romantic Novels

நிலா நேசம் வானளவு

5.நேசம்

 

நிலா அறைந்ததும்..விக்ரம் கோபத்தில் அவளை இழுக்க தடுமாறி அவன் மீது விழுந்தாள்..

 

பொண்ணுங்க கிட்ட எப்படி நடக்கணும்னு சொல்லி கொடுக்கலையா பொறுக்கி போல நடந்துக்கீறிங்க என்று அவனை சாடி விட்டு செல்ல அவளை கோபத்தில் தொடர்ந்து போக துருவ் இடையே வந்து பையா..ப்ளீஸ் ரிலாக்ஸ்..எல்லாரும் நம்மள பாக்குறாங்க..ப்ளீஸ் அண்ணா..

 

ஏய் ஒரு பொண்ணு இவ்வளவு பேர் முன்னாடி என்ன அடிச்சுட்டு மன்னிப்பு கூட  கேக்காம என்னைய மதிக்காம போறா..அவளை சும்மா விட சொல்றியா..

 

பையா இப்போ ஏதாவது நீங்க பண்ணா அது நமக்கு பிரச்சினை ல முடியும்.. முதல்ல வீட்டுக்கு போலாம்..அப்புறம் என்ன பண்ணலான்னு யோசிக்கலாம்..

 

 

கோபத்தில் காரை ஸ்டார்ட் செய்தவன் வாகனம் படு வேகத்தில் சென்றது..விட மாட்டேன் இத்தனை பேர் மத்தியில் என்னை அடிச்சுட்டு எவ்வளவு திமிரோடு போறா ..இவளை சும்மா விட கூடாது..ஏன் இந்த விக்ரம் கிட்ட மோதினோம்னு யோசிக்க வைக்கல நா விக்கிரமாதித்யா இல்ல டி..

 

 

 

என்ன நினைச்சுட்டு இருக்கான் இந்த விக்ரம்..திமிரா பேசிட்டு இருக்கான்.. இவன் முகத்துல முழிக்கிறதே பாவம்..முதல்ல இந்த ஸ்டேட் விட்டு கிளம்பனும் என்று அடுத்த நாள் காலை அவசரம் அவசரமாக பேக்கை தூக்கி கொண்டு  வீட்டை விட்டு வெளியே செல்ல ஒரு கார் இடை மரித்து நின்றது..அதில் இருந்து விக்ரமை பார்த்ததும் ஒரு நொடி ஜர்க்காகி நின்றாள்..பின்  கோபத்தில் அவனை தாண்டி செல்ல முயன்றாள்..

 

மீண்டும் தன் கரங்களால் இடை மரித்து ..,வெண்ணிலா உங்க கிட்ட பேசணும்..ஒரு பைவ் மினிட்ஸ் டைம் கொடுங்க..

 

நீங்க என்கிட்ட பேச என்ன இருக்கு சார்.. என்று நடந்தாள் ..

 

விக்ரம்..,பின்னிருந்து நா மன்னிப்பு கேக்கணும் வெண்ணிலா உங்க கிட்ட..என்றதும் அவள் நடை நின்றது…வெண்ணிலா விக்கரமை பார்க்க அவன் முகத்தில் ஏதோ குற்ற உணர்ச்சி தெரிந்தது..சரி என்று அருகில் உள்ள காஃபி ஷாப்பில் அமர்ந்து இருவரும் பேச தொடங்கினர்..

 

மிஸ்..வெண்ணிலா என்னோட கோபத்தால் உங்க கிட்ட மோசமா நடந்துகிட்டேன்.. அன்னைக்கே மன்னிப்பு கேட்டுறுக்கணும் பட் நா கேக்க முன் வராதது என்னோட தப்பு தான்..என்று உணர்ந்து பேசினான்..

 

 

 

இவன் பேசுறது எப்படி நம்புறது.. என்று அவன் முகத்தை பார்க்க எதுவும் கண்டு பிடிக்க முடியவில்லை அவளால்..

 

பண்றது எல்லாம் பண்ணிட்டு மன்னிப்பு ன்னு ஒரு வார்த்தையில் எல்லாம் முடிஞ்சு போய்டுமா..

பக்கத்து வீட்டில் உள்ள எல்லாரும் அசிங்கமா பேசி நா ஊற விட்டு வந்தது தான் மிச்சம்..

 

உன் திமிற்கு அதெல்லம் பத்தாது டி என்று மனதில் நினைத்து கொண்டு வெளியில் அதே குற்றம் உணர்ச்சி மிகுந்த முகத்தை வைத்து கொண்டிருந்தான்..

 

 

 

சாரி வெண்ணிலா இப்போ நீங்க எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் எத்துக்குறேன்..

 

 

அவன் கூறியதை கேட்டவள்.., தவறை உணர்ந்து கேட்பவனுக்கு மன்னிப்பு கொடுப்பதே நல்ல மனிதனின் அழகு என்று நினைத்து சரி ஆதி சார்…நீங்க பன்னது மன்னிக்க முடியாத குற்றம் தான் ஆனா செஞ்ச தப்ப உணர்ந்து பேசுறீங்க அதுவே உங்கள் தவறை மன்னிக்க வச்சுரும்..

 

இருவரும் சிறிது நேர அமைதிக்கு பின்..இப்போவும் நீங்க வேலைய விட்டு போக போறீங்களா..நீங்க இங்கேயே கண்டினியூ பண்ணுங்க..எனக்காக ப்ளீஸ்..

 

சிறிது யோசித்தவள் ..வேண்டாம் ஆதி சார்..எனக்கு கொஞ்சம் யோசிக்கணும் நா ஊருக்கு போய்ட்டு திரும்ப வறேன்..

 

இவ ஊருக்கு போனா நா எப்படி இவளை ரிவெஞ் எடுக்க முடியும்..அதோட அவ அண்ணனோட லேண்ட் ரெஜிஸ்ட்ரேஷன் வேற இருக்கு..சரி ஓகே நானும் வறேன்..நானும் ஊருக்கு வர வேண்டிய வேலை இருக்கு..அண்ட் உங்க வீட்டுல உள்ள எல்லார் கிட்டயும் மன்னிப்பு கேக்கணும்னு ஆசைப்படறேன்..என்கூடவே வந்துருங்க..

 

 

நோ நோ..வேண்டாம்..ஆதி நா பார்த்துக்குறேன்..அதுமில்லாம டிக்கெட் போட்டுட்டேன்.. நா கிளம்புறேன்..

 

அவன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஆட்டோ பிடித்து  ரயில் நிலையம் சென்று விட்டாள்..

 

அவ்வளவு எளிதில் அவளை விட்டு விடுபவனா விக்ரம் ..போகும் வழியில் வேண்டுமென்றே நிறைய தடங்களை உண்டு பண்ணினான்..

 

 

ஒருகத்த ஆரம்பித்தாள் வெண்ணிலா..ஒஹ்..காட் டைம் ஆயிட்டே இருக்கு இப்போ இவ்வளவு ட்ராபிக் ல நா எப்படி போவேன் என்று கூறிக்கொண்டே இருந்தாள்.. 

 

ஆட்டோ ஓட்டுநர் ஹிந்தியில் இதுக்கு மேல ஆட்டோ போகாது ம்மா..என்று அந்த நகரத்தின் எல்லையில் இறக்கி விட்டுவிட்டு “.நீங்க வேற வண்டி பார்த்து போங்க..இங்க கலவரம் நடக்கும் போல இருக்கு…

 

இப்போது ரயில் நிலையதிற்கும் செல்ல முடியாது அவள் தங்கியிருந்த  வீட்டிற்கும் செல்ல முடியாது போனது..நடு காட்டில் இறங்கி நடப்பது போல நடந்தாள்..இரண்டு பக்கமும் காடு போல  நடுவில் ரோடு அதில் வெண்ணிலா மட்டும் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாள்.. 

 

திடீரென ஒரு நான்கைந்து பேர் கொண்ட கும்பல் வெண்ணிலாவை நெருங்கியது..

 

மச்சி குட்டி நல்லா வெண்ணையில் செஞ்ச மாதிரி பள பளன்னு இருக்கா டா..தூக்கிட்டு பொய் ஒரு மாசம் வச்சு ம்ஹூம் வருஷம் புல்லா அனுபவிக்கலாம் போலயே டா..என்று பேசிக்கொண்டே அவளிடம் வந்து கையை பிடித்து இழுக்க அவர்களிடம் இருந்து ஓடினாள்.. 

 

நில்லு டி..ஓடாத என்று ஒருவன் துரத்த பயத்தில் கண் மண் தெரியாமல் ஒரு வீட்டின் உள்ளே சென்று  விட்டாள்..

 

டேய்.. அவளை இன்னைக்கு பிடிச்சே ஆகணும் டா..அனுபவிச்சு வச்சுக்கலாம்னு நினைச்சேன் இல்ல அவளை கொன்னு இந்த ஆத்துல வீசனும் தேடுங்க டா என்று ஒருவன் கத்த.. புத்தர் மறைவில் நின்ற வெண்ணிலாவுக்கு சர்வமும் அடங்கியது..அவர்கள் தேடி வெண்ணிலா கிடைக்கவில்லை என்று சென்று விட்டனர்..

 

சார்.. அந்த பொண்ணு ஒரு கெஸ்ட் ஹௌஸ் பக்கம் போய்டிச்சு..

 

ம்ம் ஓகே நா சொல்ற வரை யாரும் வெளில வர கூடாது..பணம் உங்களுக்கு வந்து சேரும்..

 

வெண்ணிலாவை  பார்த்த ஒருவன் டேய் ங்க பாரு அந்த பொண்ணு ங்க இருக்கா..,என்றதும் அவளை பிடிக்க வந்தவர்களை கண்ட வெண்ணிலா எதிரே வந்த ஒருவனை பார்க்காமலே  கட்டி கொண்டு..,சார் சார் ப்ளீஸ் சேவ் மீ..என்று அவன் சட்டை பிடித்து அழ ..

 

வெண்ணிலா அழாதிங்க..ப்ளீஸ்….என்று அவளை அணைத்தவாறு கூறியவன் விக்ரமே தான்  ..அவனை அங்கு கண்டதும் முதலில் திகைத்து பின் பயம் போய் விட்டது வெண்ணிலாவுக்கு..

 

அவனை விடாமல் கட்டிக்கொண்டு நின்றவள் ஆதி ப்ளீஸ் என்னை விட்டு போகத்திங்க பயமா இருக்கு..

 

இருங்க நா போய் பாக்குறேன் என்று துப்பாக்கியிணை லோட் செய்து அவளைவர அனைத்து கொண்டே சுற்றி முற்றி பார்க்க அங்கிருந்த ரவுடிகளும் ஓடி விட்டனர்..

 

அவளை வீட்டினுள் அழைத்து வர இருவரும் ஒரு சேர கால் எடுத்து வைக்க தோட்டத்து பூக்கள் எல்லாம் அவர்கள் மீது விழுந்தது..

 

இருங்க வெண்ணிலா என்று சோபாவில் அமர வைத்து விட்டு  குடிக்க தண்ணீர் கொடுக்க அதை வாங்கி மடமட வென குடித்தவள்..

 

தேங்க்ஸ்  ஆதி..நீங்க மட்டும் இப்போ வரல நா நா என்று திக்கி பேசிய வண்ணம் என் மானம் போயிருக்கும்..தேங்க் யூ .

 

யாரரா இருக்கும் ..இப்படி உங்கள் குறி வச்சி தொரத்தி வராங்க..

 

அது அந்த சதாசிவமோட ஆட்களாதான் இருப்பாங்க..அதுல ஒருத்தன் அந்தாலு பேர சொன்னான்..

 

ஓகே நீங்க அது பத்தி பயப்படாதீங்க.. நா பார்த்துக்குறேன்..

 

 

நீங்க ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு போனீங்க..

 

அந்த ஆட்டோ அண்ணா பாதியிலே இறக்கி விட்டுட்டு போய்ட்டாங்க..

 

ஓகே வேற ஏதும் வண்டி ஏறி போகாம இங்க என்ன பண்றிங்க வெண்ணிலா..உங்க பேக் எங்க 

 

வண்டி தேடி மெய்ன் ரோட் வரும்போது தான் அந்த ரௌடிங்க கிட்ட மாடிக்கிட்டேனே..என்னோட திங்ஸ் போன்  எல்லாம்  அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன்.. 

 

இட்ஸ் ஓகே நிலா..மார்னிங் எடுத்துக்கலாம்..

 

நா வீட்டுக்கு போன் பண்ணி சொல்லணும்

 

 

இந்தாங்க உங்க அண்ணா இந்தர்  பேசுறாங்க..பேசிடுங்க அப்புறம் எப்போ பேச முடியுமோ என்றான் வஞ்சகமாக அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் வெண்ணிலா  இல்லை ..

 

வீட்டில் அழைத்து கூறியதும் அங்கு ராகவனும் மதியழகியும் ஏன் இந்தர் கூட இதை எதிர்பார்க்கவில்லை..அவனால் தான் இந்த ஊரை விட்டே சென்றாள்.. இப்போது அவன் பாதுகாப்பில் இருப்பது ஏதோ தவறாக பட்டது ரேணுகாவுக்கும் மதியழகிக்கும்

 

 

ஏங்க.. நீங்களும் இந்தரும்  இப்போவே கிளம்பி வெண்ணிலாவை வீட்டுக்கு கூப்பிட்டு வாங்க..ஏதோ சரி இல்லை மனசு பதட்டமா இருக்கு..ஏற்கனவே அந்த பையன் நம்ம வெண்ணிலா கிட்ட தப்பா நடந்துகிட்டான்.. இப்போ அவன் பாதுகாப்பில் இருப்பது ஏதோ சிங்கத்திடம் ஆடு சரண் அடைந்தது போல இருக்கு..

 

அம்மா..அவங்க ஊர்ல விக்ரம் பெரிய பிசினஸ் மென்..அன்னைக்கு நடந்ததுக்கு நா அவன் மேல கோவத்துல தான் இருக்கேன்..பட் இப்படி ஒரு சூழ்நிலையில் நம்ம நிலவுக்கு அவனை தாண்டி எந்த பாதுகாப்பும் எவனாலயும்  கொடுக்க முடியாது..அவரை தாண்டி எந்த ஆபத்தும் நம்ம வெண்ணிலவுக்கு வராது..அதுவும் இல்லாம இப்போ பெரிய ஜாதி கலவரம் நடக்குது ரெண்டு நாள் கழிச்சு அவரே கூட்டிட்டு வரேன்னு சொல்லிருக்காரு பயப்பட வேண்டாம்.ம்மா..

 

 

நாளைக்கு அந்த சதாசிவம் மேல கம்ப்ளெய்ண்ட் கொடுக்கணும்.. இப்படியே விட்டா நாளைக்கு உயிர் போற அளவு ஆபத்து கொடுப்பான்..வாய்ப்பிருக்கு என்று பேசி கொண்டிருக்க..

 

 

 

அதே நேரம் மும்பையில் உள்ள வீட்டில்  இஃப் யூ டோன்ட் மைண்ட் என்னோட சிஸ்டர் ட்ரெஸ் இதுல இருக்கு போடுக்கங்க.. உங்க முதுகு பக்கம் ட்ரெஸ் கிளிச்சுருக்கு..அதை கவனித்தவள் அந்த முள் செடி இழுத்து விடுருச்சு போல.

 

எதுலயுமே கவனம் வேணும் மிஸ் வெண்ணிலா..என்றான் 

 

ஓகே சாப்பிட போலாம் என்று அவள் குளித்து பிங்க் நிற ஸ்கர்ட் அண்ட் ஒயிட்  டாப்ஸ் போட்டு விட்டு ஈர தலையில் நீர் வடிய இயற்கை அழகோடு விக்ரமோடு டைனிங் டேபிளில் அமர்ந்து உணவு உண்டு விட்டு அவன் அறைக்கு அருகில் இருந்த அறையில் தங்க வைக்க பட்டாள்..

 

 

தொடர்ந்து அந்த பகுதியில் கலவரம் தொடர்ந்தது..

 

5 thoughts on “நிலா நேசம் வானளவு”

  1. Вы ошиблись, это очевидно.
    One of the crucial attractions of 1xbet online casino, [url=https://clearwatercashgroup.com/exploring-the-exciting-world-of-online-slots-5/]https://clearwatercashgroup.com/exploring-the-exciting-world-of-online-slots-5/[/url] is its wide selection of games. Participants can enjoy video slots, casino classics, and live options, ensuring every individual finds something they love.

  2. Отличный топик
    Playing variations in online casinos is both entertaining and convenient. Casino Online Games, [url=https://www.sylva-plast.it/experience-the-thrill-at-betfoxx-casino-sportsbook-4/]https://www.sylva-plast.it/experience-the-thrill-at-betfoxx-casino-sportsbook-4/[/url] offer a variety of choices, from slot machines to classic games. With offers, players can enhance their experience and elevate their chances of winning. Every spin and deal brings unique possibilities, making it a dynamic adventure. Join the fun and explore the world of online gaming today!

  3. Какие нужные слова… супер, отличная идея
    online casinos, [url=https://de.trustpilot.com/review/tethercasinosites.com]casinos de tether[/url] offer players the possibility to test various activities from the comfort of their home. With advanced technology, players can engage with their favorite games anytime.

  4. Many players seek bonus spins in the universe of online casinos. One of the best options is free spins no deposit casino, [url=http://www.pleasesellmycar.ca/janeaustenfestival/the-ultimate-guide-to-free-30-spins-no-deposit/]http://www.pleasesellmycar.ca/janeaustenfestival/the-ultimate-guide-to-free-30-spins-no-deposit/[/url], which allows players to win without any financial risk. It’s a great way to explore new games and likely earn real cash. Many casinos offer thrilling promotions that include such spins. Step into the exciting world of gaming!

  5. I dag vælger mange spillere at udforske udlandscasino for at finde nye chancer. casino udenlandsk, [url=http://onesupport.dk/spil-casino-uden-om-rofus-dit-ultimate-guide-til/]http://onesupport.dk/spil-casino-uden-om-rofus-dit-ultimate-guide-til/[/url] tilbyder forskellige af tilbud som pokerspil. Mange vælger den eksotiske stemning, som disse steder præsenterer. Uanset om du deltager i turneringer, er oplevelsen uovertruffen.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top