ATM Tamil Romantic Novels

நிலா நேசம் வானளவு

 நேசம் 22

 

வெளியே  குளிர் அதிகமாக இருந்ததால்..ஜன்னல் கண்ணாடியில் பனித்துளிகள் படர்ந்திருந்தன.

வீட்டுக்குள் ஆருஷ் மட்டும் அந்த அமைதியை உடைத்து ஓடிக்கொண்டிருந்தான்.

 

“டேடி… ஸ்டோரி சொல்லு…”

என்று விக்ரமின் மடியில் ஏறி அமர்ந்தான்.விக்ரம் சிரித்தான்.

“என்ன ஸ்டோரி சொல்லட்டும்…?”

“பிரின்சஸ் ஸ்டோரி…”

என்று ஆருஷ் கூறினான்.

விக்ரமின் பார்வை தன்னையும் அறியாமல் வெண்ணிலாவின் மீது விழுந்தது.”ஒரு அழகான பிரின்சஸ் இருந்தாளாம்…”என்று தொடங்கினான்.

கிச்சனில் இருந்து வந்த வெண்ணிலா அவனை பார்த்தாள்.

“அவளுக்கு ஒரு முட்டாள் பிரின்ஸ் கிடைச்சானாம்…”என்று சொல்லி ஆருஷின் தலைமுடியை கலைத்தான்.வெண்ணிலாவின் உதட்டில் அறியாமல் சிரிப்பு வந்தது.

பல வருடங்களுக்கு பிறகு…

அவன் சிரிக்க வைப்பதை பார்த்தாள்.

இரவு ஆக…

ஆருஷ் தூங்க அடம்பிடித்தான்.”நான் டேடி கூட தான் தூங்குவேன்…””இல்ல மூன் கூட…”என்று இரண்டுபேரையும் மாறி மாறி பார்த்தான்.இறுதியில்…

“ரெண்டு பேரும் வாங்க…”

என்று கட்டளை போட்டான்.

விக்ரமும் வெண்ணிலாவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

சிறிய தயக்கம். இருவருக்கும்பிறகு…

ஆருஷுக்காக சம்மதித்தனர்.

படுக்கையில்…நடுவில் ஆருஷ்.ஒரு பக்கம் விக்ரம்.மறுபக்கம் வெண்ணிலா.சில நிமிடங்களில் ஆருஷ் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.ஆனால்…

விக்ரமுக்கும் வெண்ணிலாவுக்கும் மட்டும் தூக்கம் வரவில்லை.

அறை முழுவதும் இருள்.

நைட் லேம்ப் வெளிச்சம் மட்டும்.

விக்ரம் மெதுவாக திரும்பி பார்த்தான்.வெண்ணிலாவும் விழித்திருந்தாள்.இருவரின் கண்களும் சந்தித்தது.

ஒரு நொடி…பழைய நினைவுகள் எல்லாம் திரும்பி வந்தது.பழி வாங்க வேண்டும் என்று அவளை வலுக்கட்டாயமாக தாலி கட்டி தூக்கி கொண்டு வந்தான்.. இந்த 

திருமண பந்தத்தில் இணைந்தான்..தன்னை அறியாமல் அவள் மேல் உள்ள காதலை காட்ட தெரியாமல்  தான் அவளை தன் கைக்குள்ளேயே வைத்திருக்க நினைத்தான்..இரவு முழுக்க அவளுடன் கலந்த நாட்கள்.. சில சமயம் விடிந்து கூட முடிக்க முடியாமல் தொடரும்..அவன் போதை அவளானால்..அவளை தன் நெஞ்சில் போட்டு கொண்டு தூங்கிய இரவுகள்.எல்லாம் நினைவுக்குவந்தது.வெண்ணிலாவை மெதுவாக பார்க்க அவள் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

இதயம் வேகமாக துடித்தது.

 

தூக்கத்தில் இருந்த ஆருஷ் திடீரென்று புரண்டு படுத்தான்.

சிறிய கை ஒன்று விக்ரமின் மீது.

மற்றொரு கை வெண்ணிலாவின் மீது.இருவரையும் இணைத்தபடி.

அதை பார்த்த விக்ரமின் கண்கள் கலங்கின.

 

“நம்ம புள்ள…”

என்று மெதுவாக சொன்னான்.

வெண்ணிலா அமைதியாக இருந்தாள்.சில நொடிகள் கழித்து…

“அவன் தினமும் உங்க போட்டோவை கட்டிப்பிடிச்சுதான் தூங்குவான்…”

என்று மெதுவாக சொன்னாள்.

விக்ரமின் இதயம் நின்றது போல இருந்தது.

 

“என்ன டி சொல்ற .?”என்றான் வார்த்தைகள் திக்கியது..

.

“ம்ம் ஆமா டேடி எப்போ வருவாங்கன்னு கேட்பான்…”

அவளது குரல் நடுங்கியது.

 

“அவனுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம எவ்வளவு நைட்  அழுதிருக்கேன்னு எனக்குத்தான் தெரியும்…”

 

விக்ரமின் கண்களில் மீண்டும் கண்ணீருடன் கோபம் உன்னால தான் டி என் பிள்ளையை இத்தனை நாள் பார்க்காமல் இருந்துட்டேன்..

“சாரி நிலான்னு நான் கேட்க முடியும்.ஆனால் ஒரு சாரி எல்லாம் மறக்க வச்சுருமா .சொல்லு டி….தப்பு பண்ணிட்டேன் தான்..ஆனால் நீ என்னோட புள்ளைய கண்ணுலயே காட்டாம வச்சு கொடுமை படுத்திருக்க…..”இப்போ என்னடி உன் கால் ல விழனுமா என்று அவள் பாதத்தை பிடித்து அந்த மெத்தென்ற பிஞ்சு விரலில் முத்தமிட

 

ஸ்ஸ்ஸ் ஆஆ என்ன பண்றிங்க..எழுந்திரிங்க..அவள் காலில் விக்ரமின் கண்ணீர் பட வெண்ணிலாவும் அவனை இறுக்கி அணைத்து கொண்டாள்..இந்த இறுகிய அணைப்பு அவளே தொடுவது எல்லாம் விக்ரமிற்கும் வெண்ணிலாவிற்கும் ஒரு இதமான மன நிலையை கொடுத்தது.

 

விக்ரம்  கண்களை மூடினான்.

“சில காயங்களுக்கு சாரி மட்டும் போதாது நிலா…”என்னோட காயத்துக்கு நீ தான் மருந்து..உன்னோட காயத்துக்கு நான் தான் மருந்து ஆனால் நீ சொல்ற வரை உன்னை தொட மாட்டேன்..நீ என்னோட உயிர் டி..உன்னை வதைச்சு எனக்கு எந்த சுகமும் வேண்டாம்..நீ மன்னிக்க கூட வேண்டாம் வெண்ணிலா ஆனால் என்கூடவே இரு..இல்ல நான் இங்க இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலைனா நான் போய்டுறேன்..

 

அவள் அவன் கைகளை பிடித்து கொண்டு எந்த பதிலும் கூறாமல் தூங்குங்க..குட் நைட் என்று சொல்லி விட்டு ஆருஷிற்கு அருகே படுத்து கொண்டாள்..

விக்ரம் அவளை பார்த்தான்.

“நீங்க திரும்பி வந்தது ..”

“எனக்கு சந்தோஷமா இருக்கு…”

அந்த வார்த்தையை கேட்ட விக்ரமின் கண்களில் நம்பிக்கை ஒளிர்ந்தது.

மூன்று வருடங்களாக மூடியிருந்த கதவு…கொஞ்சம் கொஞ்சமாக திறக்க ஆரம்பித்திருந்தது.

நடுவில் ஆருஷ் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தான்.

அறியாமல்…தன் அம்மாவையும் அப்பாவையும் மீண்டும் ஒன்றாக சேர்த்துக் கொண்டிருந்தான்…

 

அடுத்த நாள் காலை விக்ரமின் மொத்த குடும்பமும் லண்டன் வந்து இறங்கியது..

 

ஈஸ்வர மூர்த்தி விஜயா துருவ் ராகவன் மதியழகி என அனைவரும் வந்தனர். 

 

 

வெண்ணிலாவின் கண்கள் உடனே கலங்கின.

 

“அத்தை… அம்மா ஆஆ நீங்க எல்லாம் எப்போ வந்தீங்க…? இவர் சொன்னாரா…? 

 

 

நிலா நீ நம்ம வீடுகாவது வந்துருக்கலாம்..இத்தனை நாள் எவ்வளவு வலிய அனுபவிச்சியோ..அம்மா அப்பா மேல கோபமா ….

 

கோபம் அவர் மேல மட்டும் இல்ல… அத்தனை பேர் மேலயும் இருக்கு. அன்னைக்கு நான் வீட்டை விட்டு வெளியே போறப்போ ஒரு வார்த்தை கூட ‘போகாதே’ன்னு யாரும் சொல்லல. அந்த வேதனை இன்னும் மறக்கல…”என்று உடைந்த குரலில் சொன்னாள்.

 

விக்ரமின் அம்மா மெதுவாக அவள் அருகில் வந்தார்.

“நீ எங்க மேல கோபத்துல இருப்பன்னு தெரியும் மா. அதுக்காக உன்னையும் என் புள்ளையோட வாழ்க்கையையும் சரி பண்ண வரல. என்னோட பேரக்குழந்தையை பார்க்கத்தான் வந்துருக்கோம். நீ வர சொன்னா வீட்டுக்குள்ள வருவோம்… இல்லன்னா இப்படி வெளியே நின்னு எங்க பேரனை பார்த்துட்டு போயிடுறோம்…”

அவர் பேசும்போதே குரல் தழுதழுத்தது.அதை கேட்ட வெண்ணிலாவின் மனம் கொஞ்சம் இளகியது.அவள் மடியில் இருந்த சிறியவன், தாத்தா பாட்டியை பார்த்து சிரித்தான்.

 

“பாட்டி…”

என்று மழலை மொழியில் சொல்லியதும் விக்ரமின் அம்மாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.”அய்யோ… என் ராஜா…”

என்று அவசரமாக அவன் அருகில் மண்டியிட்டு அமர்ந்தார்.இத்தனை வருடங்களாக பார்க்க முடியாமல் தவித்த பேரனை நேரில் பார்த்த அந்த நொடி, அவரால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

 

வெண்ணிலா அவர்களை அமைதியாக 

பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

அப்போது விக்ரமின் அப்பா ஈஸ்வரமூர்த்தி மெதுவாக சொன்னார்.

 

“நீ எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கன்னு இப்போ புரியுது மா. நாங்க செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்க கூட எங்களுக்கு தகுதி இல்ல. ஆனா இந்த குழந்தைக்கு தாத்தா  பாட்டி உறவு கிடைக்காம போயிடக்கூடாது…”அந்த வார்த்தைகள் வெண்ணிலாவின் இதயத்தை தொட்டன.

 

சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவள் மெதுவாக கதவை திறந்து,”வெளியே ஏன் நிக்கறீங்க…? உள்ளே வாங்க…”

என்று சொன்னாள்.அந்த ஒரு வார்த்தையை கேட்டதும் விக்ரமின் அம்மா விஜயா  உடைந்து அழுதார்.

 

“ரொம்ப நன்றி மா…”

என்று சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார்.

தொலைவில் நின்று இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விக்ரம், ஒரு சிறிய புன்னகையுடன்,

 

அடுத்து வந்த நாட்கள் எல்லாம் ஆருஷ் தன் தாத்தா பாட்டி கூடவே ஐக்கியமாகிவிட்டான்..

 

 

மதியழகி மெதுவாக வெண்ணிலாவின் கையைப் பிடித்தார்.”வெண்ணிலா… நீயும் மாப்பிள்ளையும் சந்தோசமா இருக்கணும்..அவர் உன்னோட கோபம் எல்லாத்தையும் தாங்கிப்பாரு ..இன்னைக்கு கொஞ்சம் வெளியே போயிட்டு மனசு விட்டு பேசிட்டு வாங்கம்மா…”

 

வெண்ணிலா குழப்பமாக

“எதுக்கும்மா இப்போ?”

 

“எதுக்கா…? இந்த வீட்டுக்குள்ள நீ ஒரு இடத்துல… அவர் ஒரு ஓரத்துல… இப்படியே இருக்கீங்க. கணவன் மனைவி மாதிரி இல்ல, அந்நியங்க மாதிரி இருக்கிறதை பார்க்கவே மனசு கஷ்டமா இருக்கு.”

அந்த வார்த்தைகள் கேட்டு வெண்ணிலா தலைகுனிந்தாள்.

மதியழகி தொடர்ந்தார்.

 

“நாங்க சாகுறதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா, குடும்பமா வாழ்றதை பார்க்கணும் வெண்ணிலா. அதுதான் எங்களோட ஆசை.”அப்போது அருகில் வந்த  விக்ரம் …

 

“அத்தை…” என்று ஏதோ சொல்ல வந்தவனை கை காட்டி நிறுத்தினார் மதியழகி.

 

“மாப்பிள்ளை, உங்க மேல எனக்கு எந்த கோபமும் இல்ல. ஆனா உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் இப்படி வீணா போகக் கூடாது. நடந்தது நடந்துடுச்சு. இனிமேலாவது ஒருத்தருக்கொருத்தர் மனசு விட்டு பேசுங்க.”விக்ரமின் பார்வை வெண்ணிலாவைத் தீண்ட. வெண்ணிலாவும் அவனைப் பார்த்தாள்.இருவரின் கண்களும் ஒன்றோடொன்று பேசிக்கொண்டன.

அதை கவனித்த மதியழகியின் முகத்தில் சிறிய நிம்மதி தெரிந்தது.

“சரி… இன்றைக்கு எங்கயாவது வெளியே போயிட்டு வாங்க. கோயில், கடற்கரை, ஹோட்டல் எதுவா இருந்தாலும் பரவாயில்லை. ஆனா ரெண்டு பேரும் சேர்ந்து போங்க.”

 

“அம்மா…” என்று வெண்ணிலா தயக்கத்துடன் அழைத்தாள்.

“இது அம்மாவோட ஆசைடா.”அங்கு வந்த விஜயாவும் இது எங்க எல்லாரோட ஆசையும் தான்.வெண்ணிலாவால் மறுக்க 

முடியவில்லை.

விக்ரம் மெதுவாக,

 

“வா நிலா… கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வரலாம்…”

 

 

 

 

மூன்று  வருடங்களுக்கு பிறகு, அந்த குரலில் இருந்த மென்மையை உணர்ந்த வெண்ணிலாவின் இதயம் சற்று துடித்தது.மறுக்காமல் மெதுவாக தலையசைத்தாள்.

அதைப் பார்த்த விஜயா , மதியழகியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மின்னியது.

 

 கொஞ்சம் கொஞ்சமா என் பொண்ணோட வாழ்க்கை மீண்டும் மலரணும்…” என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டார்.

 

 

 

 

விக்ரம் காரின் முன் கதவைத் திறந்து வைத்தான்.

 

“ஏறு நிலா…”

வெண்ணிலா ஒரு நொடி தயங்கினாள். பிறகு எதுவும் பேசாமல் காரில் ஏறினாள்.

 

விக்ரமும் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை கிளப்பினான்.

சில நிமிடங்கள்…இருவருக்கும் இடையில் அமைதி மட்டுமே.

காரில் ஓடிய மென்மையான பாடல் கூட அந்த அமைதியை உடைத்து கொண்டு இருந்தது..

 

விக்ரமின் பார்வை அவ்வப்போது வெண்ணிலாவை நோக்கி சென்றது.

ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

அந்த முகத்தில் முன்பு இருந்த குறும்பும்,சிரிப்பு இல்லை…

எத்தனை காயங்கள் அந்த இதயத்தில் இருக்குமோ என்று நினைத்தவனுக்கு மனம் வலித்தது.

 

“நிலா…”

மெதுவாக அழைத்தான்.

வெண்ணிலா திரும்பவில்லை.

“ம்ம்ம்…”

“எங்கே போகலாம்?”

“எங்கேயாவது…”

 

அதற்கு மேல் அவளிடம் இருந்து வார்த்தைகள் வரவில்லை.

விக்ரம் பெருமூச்சு விட்டான்.

“இப்பவும் என் மேல கோபமா இருக்கியா…?”

இந்த முறை வெண்ணிலா 

 

அவனைப் பார்த்தாள்.

“இல்ல…”

“பொய்.”

“நிஜமாதான்.”

“அப்படின்னா ஏன் என்கிட்ட பேச மாட்டேங்கிற?”நான் உன்கிட்ட வந்தாலும் தவிர்க்கிறது எல்லாம் எனக்கு வலிக்குது டி..உனக்கு அப்படி இல்லையா””?

அந்த கேள்விக்கு வெண்ணிலா சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.

பிறகு மெதுவாக…

 

 

“பேசுற அளவுக்கு நமக்குள்ள என்ன இருக்கு விக்ரம்…?”அவள் கேட்ட கேள்வியில் இருந்த வேதனை அவனை சுட்டெரித்தது.

 

“நான் தப்பு பண்ணேன் நிலா…”

“அதை நான் மறுக்கல.”

 

“ஆனா…”

“சில காயங்கள் ஆறிடும் விக்ரம். சில காயங்கள் ஆறினாலும் தழும்பு இருக்கும்.”விக்ரமின் கைகள் ஸ்டியரிங்கை இறுகப் பற்றின.

“என்னால முடிஞ்ச அளவுக்கு அந்த தழும்பையும் மறக்க வைக்க முயற்சி பண்றேன்.”

வெண்ணிலா அவள் அமைதியாக வெளியே பார்த்தாள்.சில நிமிடங்களில் கார் கடற்கரையை அடைந்தது.மாலை நேரம்.

கடல் அலைகள் கரையை முத்தமிட்டுக் கொண்டிருந்தன.

விக்ரமும் வெண்ணிலாவும் மணலில் நடக்க ஆரம்பித்தனர்.

இடைவெளி விட்டு..திடீரென்று ஒரு சிறுவன் ஓடி வந்துவெண்ணிலாவை மோதினான்.அவள் தடுமாறி கீழே விழப் போனாள்.

 

“நிலா!”

விக்ரம் உடனே அவளின் இடுப்பை பிடித்து ஒரே இழுப்பில் அவளை தன்னருகே இழுத்துக்கொண்டான்.

 

வெண்ணிலா அவன் மார்பில் சாய்ந்திருந்தாள்.விக்ரமின் கை இன்னும் அவள் இடையை தாங்கியபடி இருந்தது.இருவரின் கண்களும் சந்தித்தன.

 

மூன்று  வருடங்களுக்கு பிறகு…

அவ்வளவு நெருக்கத்தில்.

வெண்ணிலாவின் இதயம் வேகமாக துடித்தது.விக்ரமுக்கும் அதே நிலை.

“பார்த்து நடக்க மாட்டியா டி..?” என்று மெதுவாக கேட்டான்.

 

 

அவன் கண்ணில் அக்கறை மட்டுமே.

வெண்ணிலா உடனே விலகினாள்.

ஆனால் அவள் விலகிய பிறகும் விக்ரமின் மனம் அவளை விடவில்லை.”நிலா நீ இன்னும் எவ்வளவு தூரம் போனாலும்… நீ மட்டும் தான் என்னோட உலகம்…” என்று கூறினான்..வெண்ணிலா அவனை பார்த்து வேண்டாம்னு துரத்தி விடும் போது தெரியலையா என்றாள் கோபமாக.. கடல் காற்றில் வெண்ணிலாவின் முடி முகத்தில் விழுந்தது.அதை ஒதுக்க முயன்றவளை பார்த்த விக்ரம் கியூட் ஆஹ் இருக்கா..ம்ம்ம் பக்கத்துல போனாலே ஏதேதோ பேசிட்டு போறா..இவளை எப்படி பழைய படி மாத்துறது.. என்கிட்ட பேசவே தயங்குறா..விக்ரமா நீ ரொம்ப பாவம் டா..சொந்த பொண்டாடிய கரெக்ட் பண்ண முடியாம தவிக்கிற..

கடற்கரையில்  இருவரின் மனதிலும் ஏதோ மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

 

 

 

 

 

“நிலா… உனக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும்ல…?”

 

என்று திடீரென கேட்டான் விக்ரம்.

வெண்ணிலா ஆச்சரியமாக திரும்பிப் பார்த்தாள்.

 

“இப்போ எதுக்கு அதை கேட்குறீங்க…?”

“சும்மா…”

“இன்னும் ஞாபகம் இருக்கா…?”

அந்த கேள்வியில் ஆச்சரியமும், சிறிய மகிழ்ச்சியும் கலந்திருந்தது.

விக்ரம் சிரித்தான்.”உன்னைப் பற்றி மறக்குற அளவுக்கு நான் மெமரி லாஸ் பேஷண்ட்  இல்ல.”

வெண்ணிலாவின் இதயம் ஒரு நொடி துடித்தது.சிறிது நேரத்தில் ஒரு சிறிய ஐஸ்கிரீம் கடை முன் காரை நிறுத்தினான்.

இரண்டு சாக்லெட் மற்றும் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் வாங்கி வந்தான்.

 

ஒன்றை அவளிடம் நீட்டினான்.

வெண்ணிலா வாங்கிக்கொண்டாள்.

“தேங்க்ஸ்…”

“எதுக்கு…?”

“எல்லாம் ஞாபகம் வச்சிருக்கிறதுக்கு…”

விக்ரம் அவளைப் பார்த்தான்.

“உன்னைப் பற்றிய விஷயத்தை நான் மறந்ததே இல்ல நிலா…”

வெண்ணிலா உடனே பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.ஐஸ்க்ரீம் சாப்பிட்டு முடிக்கவும் அவள் இதழ் ஓரத்தில் பிங்க் நிற ஐஸ் கிரீம் பட்டிருக்க அதை தன் நாவால் எடுக்க ஆசை கொண்டது விக்ரமின் மனம்..அவன் பார்வை உணர்ந்தவள் “என்ன பாக்கிறீங்க..?என்றாள்.

 

அவளை பார்த்து கொண்டே அவள் இதழை அவன் விரல் வைத்து துடைத்து அதை சாப்பிட்டான்.. அவன் தொட்டதும் கண்கள் பட்டாம்பூச்சியாக சிறகடிக்க வெண்ணிலாவின் கன்னம் சிவந்தது…முகத்தை திருப்பி கொண்டாள்..அவள் மனம் மீண்டும் பலவீனமாக ஆரம்பித்தது…

 

திடீரென்று மழை தூற ஆரம்பித்தது.

“ஆதி… மழை வருது…”

“சீக்கிரம் வாங்க காருக்குள்ள போயிடலாம்…..”என்று அவள் கையை பிடித்து ஓடினான்.இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம் இருந்து கொண்டு இருந்தது..மழைத்துளிகள் கண்ணாடியில் வழிந்தன..

வெண்ணிலா வெளியே மழையை பார்த்துக் கொண்டிருந்தாள். வெண்ணிலா குளிரில் நடுங்க தன் கோட்டை கழட்டி அவளுக்கு போட்டு விட்டிருந்தான்..அவள் கன்னம் இரண்டும் ஆப்பிள் போல சிவந்து அவனுக்கு பிடித்த அந்த உதடுகள் அவனை முத்தமிட சொல்லி உந்தியது…அவளும் பார்க்க இருக்கமாக அனைத்து மடியில் அமர வைத்து முத்தமிட்டான்.. உயிர் குடிக்கும் முத்தம் இத்தனை கால பிரிவுக்கும் சேர்த்து அவளிடம் உயிர் சக்தி பெற்று கொண்டிருந்தான்…விக்ரம் கண்களை மூடவே இல்லை .,வெண்ணிலாவை பார்த்து கொண்டே சவ்வு மிட்டாய் போல சப்பி சுவைத்தான்..முகம் முழுவதும் முத்தம் மட்டுமே கொடுத்து அவளை பார்க்க அவன் நெஞ்சில் சாய்ந்து இத்தனை ஆண்டு வலிகளுக்கு ஆதரவாக அவன் மேல் சாய்ந்து கொண்டாள்..அவளை இறுக்கி அணைத்து கொண்ட விக்ரம் எதுவும் பேசாமல் அவளை அனைத்திருந்தான்…

 

“நிலா…”

 

“ம்ம்…”

“ஒரு கேள்வி கேட்கலாமா டி…?”

“கேளுங்க…”

 

“இந்த மூணு வருஷத்துல… ஒரு தடவையாவது நினைச்சியா இல்ல என்னை மறந்துட்டியா டி…?”

அந்த கேள்வியில் வெண்ணிலாவின் பதில் கண்களில் கண்ணீராக மின்னியது.

 

விக்ரம் அதற்கு மேல் கேட்கவில்லை..

இரவு பதினொரு மணி போல வீட்டிற்கு வரவும் வீட்டில் எல்லோரும் தூங்கிவிட்டனர்.

 

 

விஜயா முழித்திருந்து ஆருஷை தூங்க வைத்து கொண்டு இருந்தார்..தூங்கிய ஆருஷை தூக்கிக்கொண்டு அறைக்குள் வந்தான்.அங்கே வெண்ணிலா படுக்கையை சரி செய்து கொண்டிருந்தாள்.விக்ரம் மெதுவாக ஆருஷை படுக்க வைத்தான். குழந்தை ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிவிட்டான்.அறையில் அமைதி…

விக்ரமும் வெண்ணிலாவும் மட்டும்.

இருவரும் பேசாமல் நின்றனர்.

மூன்று வருட பிரிவு…

ஆயிரம் வார்த்தைகள்…

 

.”நான் மட்டும் உன்கூட இருந்திருந்தா இந்தளவு நீ ரொம்ப கஷ்டப்பட்டிருக்க. மாட்ட இல்ல..”அந்த ஒரு வார்த்தையில் அவள் மனம் உடைந்தது.இத்தனைவருடங்களில்…முதல் முறையாக…தான் அனுபவித்த வலியை அவன் உணர்ந்தது போல தோன்றியது.அவள் பார்வையை திருப்பிக்கொண்டாள்.கண்களில் கண்ணீர் வழிந்தது.விக்ரம் மெதுவாக அருகில் வந்தான்.

 

“நிலா…”

“உன்ன நான் ரொம்ப மிஸ் பண்ணேன் டி…””நீ இல்லாத இந்த மூன்று வருஷ வாழ்க்கை நரகமா இருந்துச்சு டி…”வெண்ணிலாவின் இதயம் வேகமாக துடித்தது.

அவள் தன்னையே சமாளிக்க முடியவில்லை..விக்ரம் அவளது கையை  பிடித்தான்.அந்த தொடுதலில்…மூன்று வருடங்களுக்கு முன் இருந்த காதலை உணர்ந்தாள்..

விக்ரமின் கண்களில் காதல் மட்டுமே இருந்தது.

 

 

10 thoughts on “நிலா நேசம் வானளவு”

  1. Non-Gamstop Casinos, [url=https://kechbureau.ma/?p=71857]https://kechbureau.ma/?p=71857[/url] – Non-Gamstop Casinos offer players a chance to try a diverse range of betting choices. Such casinos present flexibility in betting without restrictions.

  2. Hello les gars, j’ viens échanger un petit ressenti
    sur cette mode récente concernant les jeux instantanés. Sincèrement,
    je suis en train d’ regarder plusieurs de
    avis plinko quelques dernières semaines puis il
    s’avère que c’est incroyable de constater à quel point
    cette logique demeure cool. Régulièrement, je me retrouve à dire qu’ profiter d’ un code plinko fait nettement toute la
    distinction pour rester bien plus sur la durée loin de se
    vider son compte, surtout lorsque l’on vise les gros multiplicateurs aux
    extrémités. À ce propos, j’ ai trouver cette incroyable
    page concernant le plinko france avis qui décortique très bien les aspects du plinko casino.
    À mon expérience, ce mode démo reste vital préalablement à chaque vraie mise pour bien bien sentir cette physique
    de la bille. Est-ce que quelqu’un auraient déjà parvenu de taper un x1000 récemment ?
    Sinon, quelle devient le réglage de rangees de piquets préféré afin de stabiliser
    le enjeu ? Hâte de vous lire ici dans les réponses !

  3. Sinceramente a menudo he notado que el universo de las plataformas
    online en España está creciendo muchísimo.

    He estado muchos tiempos probando varias páginas
    y me parece que la calidad ha mejorado mucho.
    Suelo buscar portales donde la fiabilidad sea la prioridad, y debido a ello pienso que es valioso leer una casino spinmama antes de lanzarse,
    ya que así evitas problemas absurdos. Personalmente, bastantes sitios ofrecen oro y moro sin embargo luego no todos
    cumplen realmente. Un segundo detalle que me llama la
    atención es la variedad de juegos que sacan todas las
    etapas, si bien a veces pienso que se parecen demasiado. Como cierre, lo que
    queremos todos es un tiempo de entretenimiento tranquilo y con suerte ganar algún beneficio.

    ¿Habéis visitado la gente de por aquí recientemente algún sitio que
    sea vuestro favorito por sus promociones? ¿Qué opináis
    sobre las actuales reglas en España?

  4. To be fair, I have noticed that the digital casino scene has truly shifted so much lately.
    It is no longer regarding only those old-school slots, however more concerning that total player vibe along
    with the software supporting it. Throughout the latest sessions, one encountered that finding access to
    solid playjohnny homepage info is that primary factor for
    staying secure while exploring some playjohnny casino review since that vast range of platforms could act somewhat
    overwhelming to start with. I additionally reckon how this speed of cashouts reveals a player pretty much all they want should know concerning the brand’s actual integrity.
    Does others think that video dealer options are more engaging than regular digital games, and is the thrill simply some sales trick to hold us around for more time?
    I’d love to know the ideas about the topic!

  5. Greetings! I’ve been reading your web site for some time now
    and finally got the courage to go ahead and give you a shout out from Atascocita Texas!
    Just wanted to tell you keep up the fantastic job!

  6. Wow, superb blog structure! How lengthy have you ever been blogging for?
    you make blogging glance easy. The overall look
    of your site is wonderful, let alone the content material!

  7. Ich muss sagen, bemerke ich oft auf, jene Qualität von den Anbieter ist massiv gesteigert.

    Einst wirkte die Szene etwas echt mühsam, jedoch aktuell bietet es Zocken wirklich massig größeren Genuss.

    Gerade wenn ein Spieler bei spino gambino casino
    aktiv ist, erkennt der User direkt jenen Mehrwert bezüglich der Technik sowie jener Quoten. Mein Eindruck ist, dass manche Leute diesen Startbonus völlig ignorieren wobei
    jenes einem einen massiven hilfreichen Boost gibt. Ich setze stets deutliche Budgets, da lediglich extrem bleibt jene Sache auch angenehm.
    Was glaubt das Forum meine Einschätzung? Achtet der Spieler mehr hinsichtlich der Präsentation oder sind den Usern die Regeln im bedeutendsten?

  8. Χαιρετώ τους συναδέλφους παίκτες, ήθελα να γράψω ορισμένες παρατηρήσεις για το τοπίο στο gaming αυτές τις μέρες.
    Πρώτα απ’ όλα, βλέπω πως οι υπηρεσίες στη συγκεκριμένη πλατφόρμα spinmama ελλάδα έχει εξελιχθεί πολύ,
    ειδικά σε ό,τι έχει να κάνει με το
    spinmama casino, που εξασφαλίζει τρομερή εμπειρία στα παιχνίδια.
    Θεωρώ επιπλέον πως η διαδικασία στις συναλλαγές είναι πλέον το σημαντικότερο μέτρο για
    τους χρήστες, επειδή δεν υπάρχει παίκτης που
    δεν σκοπεύει να περιμένει μέρες για το υπόλοιπό του.
    Μια άλλη άποψη είναι πως το καζίνο spinmama προσφέρει
    σοβαρή σημασία στους κανόνες, πράγμα που εξυπηρετεί πολύ στο να
    μην υπάρχουν ασάφειες. Έχω την απορία, τα μέλη εδώ τι γνώμη κρατάτε για τις τρέχουσες κριτικές για το spin mama; Παράλληλα, έχετε
    δει συγκεκριμένη σύστημα που να σας βγήκε ικανοποιητικά τελευταία;
    Θα ήταν καλό να μοιραστείτε τις δικές σας απόψεις για να ανταλλάξουμε ενδιαφέρουσες κουβέντες και να προστατευτούμε όλοι μαζί!

  9. Honestly, I’ve seen over the past months that the whole dynamic of online games is starting to get much highly immersive compared to just a few years ago.
    It is no longer just around hitting the start key, but more concerning
    the real story plus discovering those right settings which honestly suit
    the personal way of playing. Personally,
    I’ve discovered the fact that visiting bigbass remains one truly solid way to
    remain current on latest releases, since we all know,
    no one wants to waste a budget on glitchy platforms.
    A key thought remains how the risk factor might stay the real game-changer, so I should always calculate
    those dangers prior to jumping all into the action. Tell me, do all of you think the fact that today’s systems have become better now,
    and does the difficulty simply getting more challenging in order to score the really huge win? Myself, I
    would be happy to read your thoughts on this since we need
    to group as one to win against those casinos!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top