ATM Tamil Romantic Novels

மெல்ல மெல்ல காதல் வருதே

 

2.

 

சக்கரவர்த்தி க்ரூப்ஸில் சந்தியா வேலைக்கு சேர்ந்து இன்றோடு இரண்டு வாரம் ஆகி விட்டிருந்தது. நாட்கள் வேகமாக நகர்ந்தன.இங்கு வந்ததில் இருந்து அவள் தெரிந்து கொண்டது மாறன் சக்கரவர்த்தி மிகவும் கண்டிப்பானவன் வேலை விஷயத்தில்…பிற பெண்களிடம் தேவை இல்லாமல் பேச மாட்டான் என்பது வரை தெரிந்து வைத்திருந்தாள்..…

 

சந்தியாவும் தன் திறமையால் அவன் நம்பிக்கையை மெதுவாக சம்பாதித்துக் கொண்டிருந்தாள்.

அன்று காலை…தன் கேபினில் அமர்ந்து கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்த மாறன், இன்டர்காம் மூலம் சந்தியாவை அழைத்தான்.

“சந்தியா… என் கேபினுக்கு வாங்க.”

 

ஓகே சார் என்று அவள் உள்ளே வந்தாள்.

 

சார்.

 

“இன்னைக்கு ஒரு முக்கியமான கிளையன்ட் மீட்டிங் இருக்கு. நீங்களும் என்கூட வரணும்.”

 

“நானா சார்?”நான் எதுக்கு சார் என்று தயங்கினாள்..

 

“யெஸ். இந்த ப்ராஜெக்ட் டீடெயில்ஸ் முழுக்க உங்களுக்கு தெரியும் தான.”

 

எஸ் சார் பட் என்று யோசித்தவள் .”

 

சந்தியா நான் உங்க பாஸ்.நான்  சொன்னா வேலை செய்றது உங்க கடமை.அதுக்கு தான் சம்பளம் வாங்குறீங்க புரியுதா..என்று அவன் சொன்னதும் கொஞ்சம் வலித்தது அவளுக்கு.சரி என்று ஒத்துக்கொண்டாள்..

 

ஒரு மணி நேரம் கழித்து…

மாறனின் கருப்பு நிற கார் நகரின் பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டல் முன் வந்து நின்றது.

இருவரும் உள்ளே சென்றனர்.

மீட்டிங் ஹாலில் ஏற்கனவே கிளையன்ட்கள் காத்திருந்தனர்.

மாறனை பார்த்ததும் அனைவரும் மரியாதையாக எழுந்து நின்றனர்.

 

“வெல்கம் மிஸ்டர் மாறன்.”

“தேங்க்யூ.”மாறன் கைகுலுக்கினான்.

அப்போது வயதான ஒருவர் சந்தியாவை பார்த்துவிட்டு சிரித்தார்.

 

“ஓ… உங்க ஒய்ப்  கூட வந்திருக்காங்க போல.”

என்று சொன்னவர் சிரித்தபடி மாறனை பார்த்தார்.

 

“உங்க மனைவி ரொம்ப அழகா இருக்காங்க மிஸ்டர் மாறன்..ரெண்டு பேருக்கும் பொருத்தம் அருமையா இருக்கு..ஏன் எங்களை இன்வைட் பண்ணல..

 

அவர் சொன்னதும் சந்தியாவின் இதயம் துடிப்பதை நிறுத்தியது போல இருந்தது.அவள் அதிர்ச்சியுடன் மாறனை பார்த்தாள்.

அறையில் இருந்த சிலரும் அவர்களை ஆர்வமாக பார்த்தனர்.

மாறனோ முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல்,

 

“நோ..,ஷீ இஸ் மை ஸ்டாஃப் இந்த ப்ரொஜெக்ட் டீம் மெம்பர்.

 

அவன் கூறியதும் சந்தியாவுக்கு ஏனோ நிம்மதியும்… தெரியாத ஏமாற்றமும் ஒன்றாக வந்தது.

 

“ஒஹ் ஓகே ஓகே .. ஐயம் சாரி.

 

“இட்ஸ் ஓகே.”

என்று சொல்லிவிட்டு மாறன் மீட்டிங்கை தொடங்கினான்.

 

மீட்டிங் வெற்றிகரமாக முடிந்தது.அங்குள்ள ஒருவன் சந்தியாவை பார்த்து செம்ம ஸ்ட்ரக்சர்..ஹாய் சந்தியா நீங்க  பிரீ ண்ணா இந்த வீகெண்ட் _____இடத்துக்கு  போய் என்ஜாய் பண்ணிட்டு வரலாம்..நீங்க டிவோர்ஸ்ட் ன்னு கேள்வி பட்டேன்.. பட் யூ ஆர் ____சி பிகர்…இது என் நம்பர் எப்போனாலும் கால் பண்ணுங்க..என்றான் ஒருவன்.. இப்போ பிரச்சனை செய்தால் அது கண்டிப்பாக மாறன் சார பாதிக்கும் என்று நினைத்தவள் வார்த்தைகளை கடித்து துப்பினாள்..

 

“சாரி சார் என்னோட செருப்பை இப்போ கழட்டி அடிக்க முடியாது..எனக்கு நேரம் இல்லை..நீங்களே உங்க செருப்பை கழட்டி அடிச்சுக்கோங்க..

 

ஏய்.. நான் யாருன்னு தெரியாம என்கிட்ட பேசாத..

 

நாட் இன்டர்ஸ்ட் சார்..என்று கூறினாள்.உன்னோட சீப் ஆன வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காத..மாறன் சார் காக தான் பொறுமையா இருக்கேன் இல்ல இங்கேயே உன் சங்க அறுத்து போட்டுருவேன் டா நாயே…

 

ஏய்…யாரை டி அடிப்பேன்னு சொன்ன..உன்னை இந்த இடத்தை விட்டு வெளிய போக விட்டாதான டி என்று அவளின் டாப்ஸை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயல அவள் அவனை தள்ளி விட …சத்தம் கேட்டு மாறன் ஓடிவந்து சந்தியாவை பார்க்க அவள் கை பக்க சுடிதார் கிழிந்து இருந்தது அவளை அப்படியே அனைத்து கொண்டான்..அவன் கோர்ட் கழட்டி அவளுக்கு போர்த்தி விட்டவன்..சந்தியாவை அவன் அடிக்க கை ஒங்க..மாறன் அவன் கையை பிடித்து கொண்டு செல்வத்தை கீழே தள்ளி விட்டு வாட் இஸ் திஸ்..

 

மிஸ்டர் மாறன் இவ இனிமே இந்த ப்ரொஜெக்ட்ல வேலை பார்க்க கூடாது..

 

வாட் ..

 

ஆமா இவளோட நடத்தை சரி இல்லை..எனக்கு பிடிக்கல..

 

நடத்தை சரி இல்லனா கேன்சல் பண்ண வேண்டியது தான்..சந்தியா அதிர்ச்சியாகி மாறனை பார்க்க அவங்கள பத்தி எனக்கு நல்லா தெரியும் நீ ஒரு உமனைசர்ன்னு தெரியும்..இந்த ப்ரொஜெக்ட் எனக்கு வேண்டாம்..

 

அங்கிருந்த அனைவருக்கும் மாறன் அப்படி சொன்னதும் கோவத்தில் செல்வதை பிடித்து திட்டி வெளியே அனுப்பி விட்டனர்..

 

சாரி மிஸ்டர் மாறன் ..அவர் இனிமே  நம்ம ப்ரொஜெக்ட்ல இருந்து எடுத்துறலாம்..ப்ளீஸ் உங்களோட டை அப் வச்சிகணும்னு ரெண்டு வருஷமா காத்துட்டு இருந்த ப்ரொஜெக்ட்..

 

ஓகே பட்.. இது மாதிரி தனியா நாம மீட்டிங் வைக்க வேண்டாம்..ஆபிஸ் ல வச்சுக்கலாம்.நம்ம கூட இருக்கவங்களுக்கு நாம தான் பாதுகாப்பு..

 

 மாறன் சந்தியாவை அழைக்க அவனுடன் சென்று விட்டாள்..

 

 

வெளியே வந்த இருவரும் காரில் ஏறினர்..ட்ரைவிங்கில் கவனமாக இருந்த மாறன் 

“என்னாச்சு சந்தியா ஏன் அமைதியா வரீங்க?

 

“ஒண்ணும் இல்ல சார்.”

 

“நீங்க பொய் சொல்லும்போது கண்களை நேரா பார்க்க மாட்டீங்க.”

சந்தியா அதிர்ச்சியாக அவனை பார்த்தாள்.

 

“சார்…?”

“மீட்டிங்ல நடந்ததை நினைச்சுட்டு இருக்கீங்களா?”

 

நீங்க மட்டும் வரலான்ன இன்னைக்கு நான் என்று ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள்…எங்க போனாலும் இந்த மேரேஜ், டிவோர்ஸ் இதை தாண்டி யாரும் என்னை பார்க்க மாட்டாங்களோன்னு தோணுச்சு.”மாறனின் பார்வை ஒரு நொடி அவள் மீது திரும்பியது.

 

“ஏன் அப்படி சொல்றீங்க?”

சந்தியாவின் கண்கள் சற்றே கலங்கின.

 

“ஏன்னா…ஒரு  பொண்ணா தனியா வாழறது  தான் ரொம்ப  கஷ்டம் ..அதுலயும் டிவோர்ஸ் ஆன பொண்ணுனா எல்லாரும் தப்பான பார்வையில் பாக்கிறாங்க..

 

ம்ம்ம் உங்க மனசு ரொம்ப காயப்பட்டிருக்கு சந்தியா சில காயங்கள் வாழ்க்கை முழுக்க இருக்கும். ஆனா அதுக்காக வாழ்க்கையே நின்னு போகாது.”

அந்த வார்த்தைகள் நேராக சந்தியாவின் இதயத்தை தொட்டன.

 

மீட்டிங்ல நடந்தது  பற்றி யோசிக்காதீங்க.”அவள் அமைதியாக பார்த்தாள்.”உங்க வாழ்க்கையை ஒரு வார்த்தையால யாராலும் அளக்க முடியாது.”சந்தியாவின் கண்கள் கலங்கின.பல வருடங்களாக யாரும் அவளிடம் சொல்லாத வார்த்தைகள் அவை.

 

சந்தியா நீங்க உங்க வீட்டுக்கு போங்க நாளைக்கு ஆபிஸ் வந்தா போதும்..

 

அவள் மௌனமாக தலை அசைத்து விட்டு சென்றாள்.. அந்த இரவு முழுவதும் அவளுக்கு வேதனையை அளித்தது..

 

 

அடுத்த நாள் சந்தியா வேலைக்கு போகமலே இருந்தாள்.. தோழி உமா கேட்டும் எந்த பதிலும் கூறாமல் வயிறு வலி ன்னு பொய் சொல்லிவிட்டு இருந்தாள்..

 

ஆனால் அன்று இரவே மாறன் சக்கரவர்த்தி சந்தியாவுக்கு போன் செய்தான்..

தெரியாத நம்பரில் இருந்து கால் வரவும் அதை கண்டு கொள்ளாத சந்தியா…,மீண்டும் மீண்டும் வர போன் ஆன் செய்து காதில் வைத்தாள்.. 

 

ஹலோ.., அந்த குரல் மாறனின் ஆண்மை மிகுந்த குரல்..

 

சந்தியா..

 

சா…சார்..நீங்களா..இது நீங்க எனக்கு என்று தினறியவள்…

 

 

நீங்க இன்னைக்கு ஆபிஸ் ஏன் வரல..நீங்க காரணம் நிறைய வச்சிருக்கலாம் சந்தியா என்னோட ப்ரொஜெக்ட் முடிச்ச பிறகு நீங்க ரிலீவ் ஆகிக்கோங்க….எனக்கு இது போல இரரெஸ்பென்ஸா இருந்தா பிடிக்காது..

 

 

 

சாரி சார்..என்று கூறியவள் அவன் அவ்வாறு கூறியதும் அடுத்த நாள் ஆபிஸ் வந்து விட்டாள்.. அலுவலக வேலைகள் முடிந்து அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

சந்தியாவும் தன் மேசையை சுத்தம் செய்து விட்டு கிளம்ப தயாரானாள்.

வெளியே இடி மின்னலுடன் கனமழை கொட்ட ஆரம்பித்தது.

கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்த சந்தியா சற்று பெருமூச்சு விட்டாள்.

 

“அய்யோ… இப்போ எப்படி போறது.இந்த மழை வேற இப்படி பெய்ஞ்சுட்டே இருக்கே..அவள் வழக்கமாக பஸ்ஸில் தான் ஹாஸ்டலுக்கு செல்வாள்.ஆனால் இந்த மழையில் பஸ் ஸ்டாப் வரை கூட நடந்து செல்ல முடியாத நிலை.

 

 மழை கொஞ்சம் கூட குறையவில்லை.

தன் ஷாலை எடுத்து தலையில் போட்டு கொண்டு  வெளியே செல்ல முயன்றாள்.அப்போது…

 

“சந்தியா…”

என்ற குரல் கேட்டது.திரும்பிப் பார்த்தாள்.மாறன்.

 

“இன்னும் கிளம்பலையா?”

 

“கிளம்பணும் சார்… மழை கொஞ்சம் நிக்கட்டும்னு வெயிட் பண்றேன்.”

மாறன் வெளியே பார்த்தான்.

 

“இந்த மழை சீக்கிரம் நிற்கிற மாதிரி தெரியலையே..

 

“பரவாயில்லை சார்… நான் போயிடுவேன்.

 

“எப்படி போவீங்க..

 

“பஸ் வந்துரும் சார்..இன்னும் கொஞ்ச நேரத்துல.”அவள் சொல்லி முடிப்பதற்குள் இந்த மழையில பஸ்ஸுக்காக நின்னு நனைஞ்சு காய்ச்சல் வர போகுது?”

 

சந்தியா அமைதியாக நின்றாள்.

“வாங்க… நான் டிராப் பண்றேன்.”

அவள் உடனே மறுத்தாள்.

 

“இல்ல சார்… நான் பார்த்துக்கறேன்.”

மாறன் புருவத்தை உயர்த்தினான்.

“இது ஆபீஸ் டைம்ல நான் பாஸ் ஆ கொடுக்கிற ஆர்டர் இல்ல. ஒரு நல்ல ப்ரெண்ட் ஆஹ் சொல்றேன்.”

 

சந்தியாவுக்கு என்னசொல்வது என்று தெரியாமல் 

 

“சரி சார்.”இருவரும் காரில் ஏறினர்.

வெளியே மழை வேகமாக பெய்துக் கொண்டிருந்தது.சாலையில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன.

 

மாறன் டிரைவ் செய்து கொண்டிருந்தான்.

சந்தியா ஈரத்தில் நனைத்திருந்த  முகத்தையும் துடைத்து கொண்டே ஜன்னல் வழியாக மழைத்துளிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

திடீரென்று..

ஒரு சிறிய பெண் குழந்தை சாலையோரத்தில் மழையில் நனைந்தபடி பூக்கள் விற்றுக் கொண்டிருப்பதை பார்த்தாள்.

“சார்… ஒரு நிமிஷம் காரை நிறுத்த முடியுமா?”மாறன் காரை ஓரமாக நிறுத்தினான்.சந்தியா அவசரமாக இறங்கி அந்த குழந்தையிடம் சென்றாள்.சில பூக்களை வாங்கியதோடு மட்டுமல்லாமல்…

தன் பையில் இருந்த சிறிய துண்டு துணியை எடுத்து குழந்தையின் தலையை துடைத்தாள்.

 

“இப்படி மழையில நிக்காதடா…”

என்று அன்பாக கூறினாள்.

அந்த குழந்தை சிரித்தது.

அதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மாறனின் முகத்தில் அறியாத ஒரு புன்னகை தோன்றியது.சந்தியா மீண்டும் காரில் ஏறினாள்.

 

“சாரி சார்…”உங்க டைம் வேஸ்ட் பண்ணிட்டேன்.”

 

இல்ல.

அவன் சற்று சிரித்தான்.

எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சது.

 

என்ன சார்?

 

நீங்க நல்ல ஸ்டாஃப்ன்னு நினைச்சிருந்தேன்…சந்தியா கேள்வியாக பார்த்தாள்..நல்ல மனசும் உங்களுக்கு இருக்கு.

அவளது இதயம் ஒரு நொடி துடித்தது.மாறன் பார்வையை சாலையில் பதித்துக் கொண்டான்.

 

அவன் மனம் முழுக்க அந்த மழையில் நின்று குழந்தையை ஆதரித்த  சந்தியாவின் முகம்தான் இருந்தது…ஏனோ அவளை வேறொருத்தியாக பார்க்க முடியவில்லை..

 

ரொம்ப தேங்க்ஸ் சார்..சார் அப்புறம் இந்த பூவை உங்க ஒய்ஃப் கிட்ட கொடுத்துருங்க..

 

 

 

“ம்ம்… கொடுத்துடலாம். ஆனா பொண்டாட்டி இல்லையே… எங்க போய் கொடுக்கிறது?”

என்ற மாறனின் பதிலில் சந்தியா திடுக்கிட்டு அவனை பார்த்தாள்.

 

“ஐயோ… சாரி சார்… உங்களுக்கு கல்யாணம் ஆயிருக்கும் என்று நினைச்சேன்…”

மாறன் சிரித்து கொண்டே”பரவாயில்லை சந்தியா..

 

வெளியே மழைத்துளிகள் கார் கண்ணாடியை தட்டி சிதறிக் கொண்டிருந்தன.

சந்தியா கையில் இருந்த மல்லிகைப்பூவை பார்த்தாள்.

“அழகான குடும்பம் இருக்கும்… மனைவி இருப்பாங்க… குழந்தைகள் இருப்பாங்க…”என்று அவள் மனதில் உருவாக்கி வைத்திருந்த மாறனின் வாழ்க்கை, ஒரு நொடியில் வேறொரு வடிவம் எடுத்தது.

அவன் முகத்தை திரும்பிப் பார்த்தாள்.எப்போதும் கம்பீரமாகவும், யாரையும் நெருங்க விடாதவனாகவும் தெரிந்த அந்த  கண்களில் ஒரு  தனிமை தெரிந்தது.

அந்த தனிமை ஏனோ அவள் மனதை தொட்டது..சிறிது நேரத்தில் ஹாஸ்டல் முன் கார் நின்றது.

 

“தேங்க்ஸ் சார்…”

 

மாறன் தலையசைத்தான்.

அவள் காரிலிருந்து இறங்கி ஹாஸ்டலுக்குள் செல்ல ஆரம்பித்தாள்.மழை இன்னும் தூறிக் கொண்டிருந்தது.வாசல் அருகே நின்று திரும்பிப் பார்த்தாள்.

மாறனின் கார் இன்னும் அங்கேயே இருந்தது.அவள்  உள்ளே சென்றதை உறுதி செய்த பிறகுதான் அவன் காரை கிளப்பினான்.அதை பார்த்த சந்தியாவின் உதடுகளில் அறியாமல் ஒரு புன்னகை மலர்ந்தது.

 

“இவ்வளவு அக்கறையா…?”

என்று மனதில் தோன்றிய கேள்விக்கு பதில் தெரியவில்லை.

அதே நேரம் காரை ஓட்டிக் கொண்டிருந்த மாறனின் மனதிலும் சந்தியாவின் சிரிப்புதான் ஓடிக் கொண்டிருந்தது.மழையில் நனைந்த அந்த முகம்…குழந்தையின் தலையை துடைத்த அந்த அன்பு…

கலங்கிய கண்களுக்கு பின்னால் மறைந்திருந்த வலி…

எல்லாமே அவன

 

“ஏன் இப்போ அவளை மட்டுமே யோசிக்கிறேன்…?”என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டவன், பதில் கிடைக்காமல் சிரித்துக் கொண்டான்..இருவரின் மனதிலும், காதலின் முதல் விதை அமைதியாக விழுந்திருந்தது…

 

 

 

மாறனின் கார் இருளை கிழித்துக் கொண்டு நகர்ந்துக் கொண்டிருந்தது.ஆனால் அவன் மனம் மட்டும் அமைதியாக இல்லை.

சந்தியாவின் கலங்கிய கண்கள்…

“டிவோர்ஸ் ஆன பொண்ணுனா எல்லாரும் தப்பான பார்வையில பாக்குறாங்க…”என்ற அவளின் வார்த்தைகள் அவன் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது.

 

சிக்னலில் கார் நின்றபோது ஸ்டீயரிங்கில் கை வைத்தபடியே கண்களை மூடினான்.”இவ்வளவு வலி உள்ளுக்குள்ள வச்சுட்டு எப்படி இவ்வளவு சாதாரணமா சிரிக்கிறா…?”

என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

 

ஹாஸ்டல் அறையில் படுக்கையில் அமர்ந்திருந்தாள் சந்தியா.

கையில் இன்னும் அந்த மல்லிகைப்பூ இருந்தது.

அதை பார்த்தவளுக்கு தெரியாமல் புன்னகை வந்தது.

“உங்க வாழ்க்கையை ஒரு வார்த்தையால யாராலும் அளக்க முடியாது…”

 

மாறன் சொன்ன வார்த்தைகள் அவள் மனதில் ஒலித்தன.

பல வருடங்களாக யாரிடமிருந்தும் கிடைக்காத மரியாதை… பாதுகாப்பு…அனைத்தையும் இன்று ஒரே நாளில் உணர்ந்திருந்தாள்.

அவனை பற்றியே நினைக்கிறோம் என்று உணர்ந்தவள் 

 

“என்னடி சந்தியா… உனக்கு என்ன ஆச்சு…?”என்று தன்னையே கேட்டு கொண்டாள்…

 

அடுத்த நாள் காலை…

வழக்கத்தை விட சீக்கிரமாகவே அலுவலகத்திற்கு வந்திருந்தாள் சந்தியா..லிஃப்ட்டில் நின்றபடி யோசனையில் இருந்தவள் திடீரென கதவு திறந்த சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தாள்.உள்ளே நின்றிருந்தவன்…

மாறன் சக்கரவர்த்தி.இருவரின் கண்களும் ஒரு நொடி சந்தித்துக் கொண்டன.

 

“குட் மார்னிங் சார்…”

“குட் மார்னிங் சந்தியா…”

என்றான் அவன்.

இரண்டு சாதாரண வார்த்தைகள் தான்..

 

 

அது அன்றைய பொழுதின் தொடக்கத்தை இனிமையாக்கியது..

 

 

 

 

 

84 thoughts on “மெல்ல மெல்ல காதல் வருதே”

  1. Mellstroy Casino, [url=https://bergmantransportbv.nl/cropped-auto2-e1420288321589-jpg/]https://bergmantransportbv.nl/cropped-auto2-e1420288321589-jpg/[/url] предлагает разнообразный выбор развлекательных автоматов. Каждый любитель азартных игр найдет что-то подходящее для себя. Также, команда работает непрерывно. В Mellstroy Casino успехи будут наилучшим образом увеличены.

  2. А вы сами так пробовали?
    roulette not on gamstop live, [url=https://www.pleasesellmycar.ca/roulette-not-on-gamstop/uk-roulette-not-on-gamstop-your-guide-to-playing/]https://www.pleasesellmycar.ca/roulette-not-on-gamstop/uk-roulette-not-on-gamstop-your-guide-to-playing/[/url] offers players an exciting opportunity to enjoy their favorite game without restrictions. Using innovative platforms, enthusiasts can indulge in thrilling live sessions. Whether you’re a novice or a pro, roulette not on gamstop live offers an engaging environment filled with chances to win. Take part in the action and discover new possibilities available at your fingertips. Don’t miss out on the fun!

  3. Betandreas kazino platformasД±dД±rm, [url=http://podolog.webk.eu/betandreas-dman-mrclri-dunyasnda-bir-addm-ond/]http://podolog.webk.eu/betandreas-dman-mrclri-dunyasnda-bir-addm-ond/[/url] mГјasir qazanc xЙ™tlЙ™ri ilЙ™ oyunГ§ulara ilk dЙ™fЙ™ tЙ™klif tЙ™qdim edir. Bu sistem sГјrЙ™tli mЙ™blЙ™Дџ Й™mЙ™liyyatlarД±nД± yerinЙ™ yetirir. Д°stifadЙ™Г§i rahata uyДџun seГ§imlЙ™r edЙ™ bilЙ™r. Betandreas kazino platformasД±dД±rm onu imkanД± verir. AЕџkar olunan bonuskodlar ilЙ™ bЙ™xtinizi sД±namaq taktikasД±dД±r.

  4. Эта блестящая идея придется как раз кстати
    najlepsie slovenske online casino, [url=http://www.markettheme.com/demo/products/874763761/]http://www.markettheme.com/demo/products/874763761/[/url] – NajlepЕЎie slovenskГ© online casino ponГєka hrГЎДЌom ЕЎirokГЅ vГЅber hier, atraktГ­vne bonusy a prehladnГ© rozhranie. HrГЎДЌi mГґЕѕu vyuЕѕiЕҐ vzruЕЎenie z hrania z pohodlia domova. SГєЕҐaЕѕe o vГЅnimoДЌnГ© vГЅhry ДЌakajГє na kaЕѕdГ©ho!

  5. Ваша мысль просто отличная
    Парфюмерия оптом, [url=https://1citywomen.ru/zdorove/stradaete-ot-gajmorita-i-zastoyax-v-pazuxax-vospolzovavshis-etoj-texnikoj-massazha-vse-kak-rukoj-snimet-ne-poverila-poka-ne-isprobovala-na-sebe/]https://1citywomen.ru/zdorove/stradaete-ot-gajmorita-i-zastoyax-v-pazuxax-vospolzovavshis-etoj-texnikoj-massazha-vse-kak-rukoj-snimet-ne-poverila-poka-ne-isprobovala-na-sebe/[/url] – это отличный выбор для предпринимателей, желающих предоставить качественные ароматы своим клиентам. Разнообразие парфюмерии радует, а удобные условия сбыта помогут увеличить прибыль.

  6. Casino Sites Not on Gamstop, [url=https://losowanie.dev.zemestudio.pl/discover-new-non-gamstop-casino-sites-for-an-28/]https://losowanie.dev.zemestudio.pl/discover-new-non-gamstop-casino-sites-for-an-28/[/url] offer players a chance to enjoy a diverse range of games without the restrictions imposed by Gamstop. These sites provide a varied gaming experience with thrilling bonuses and promotions. Many players search for options outside of Gamstop to improve their gaming satisfaction. Casino Sites Not on Gamstop ensure a safe and secure environment for gaming, making it easy to enjoy beloved games.

  7. Nordic Bet Official, [url=https://www.borcianicase.it/nordic-bet-2026-registrering-ungdommelig-spaending-i-sportsvaeddemal/]https://www.borcianicase.it/nordic-bet-2026-registrering-ungdommelig-spaending-i-sportsvaeddemal/[/url] tilbyder et unikt spilplatform for brugere. Her kan du nyde mange sportsbeter og tilbud. Oplev de nyeste funktioner og casinospil. GГҐ ikke glip af chancen for at tjene hos Nordic Bet Official!

  8. Uruguay cuenta con numerosos casinos, pero para gozar realmente de la vivencia, es fundamental elegir los mejores casinos Uruguay, [url=https://feliperibeirovascular.com.br/doencas/mejores-casinos-en-uruguay-guia-completa-para-apostadores-1473293000/]https://feliperibeirovascular.com.br/doencas/mejores-casinos-en-uruguay-guia-completa-para-apostadores-1473293000/[/url]. Estos ofrecen juegos de alta calidad y ofertas atractivas.

  9. JB Casino, [url=https://headwearspecialistsfiji.com/jb-casino-overview-a-comprehensive-guide-to-your/]https://headwearspecialistsfiji.com/jb-casino-overview-a-comprehensive-guide-to-your/[/url] offers an incredible adventure for players. With thrilling games and bountiful bonuses, everyone can find something to enjoy. The intuitive interface makes navigating the site a breeze. Join JB Casino today and discover endless fun!

  10. BC Game apk, [url=https://jntradingsolution.com/hash-game-official-mirror-an-innovative-gaming/]https://jntradingsolution.com/hash-game-official-mirror-an-innovative-gaming/[/url] оснащен особенные функции для людей, обеспечивая приобретать криптовалюту на платформе онлайн. Удобный интерфейс упрощает процесс развлечений, что влечет свежих пользователей. Скачайте BC Game apk и ознакомьтесь к увлекательному миру игр!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top