ATM Tamil Romantic Novels

நெஞ்சோரம் பூத்தவளே 11

பூ  – 11

‘யாரு இந்த மருதப்பன்? எங்க அப்பா பெயரை கேட்டதும் ஏன் இந்த மனுஷன் இப்படி பதறிப்போய் கொந்தளிக்கிறாரு? இருபது வருஷத்துக்கு முன்னாடி எங்க குடும்பத்தால இவருக்கு என்ன பாதிப்பு நடந்திருக்கும்? அதுவும்… உன் அப்பன் பெரியசாமியைப் போய் கேளுன்னு சவால் விட்டுட்டுப் போறாரே!’

குழப்பங்கள் ஒருபுறம் இருந்தாலும், அடிபட்ட காலோடு தவித்த முல்லையின் முகம் மட்டும் தான் அவனது கண்ணுக்குள் வந்து போனது. தன் தந்தையிடம் பிறகு பேசிக்கொள்ளலாம், இப்போது எப்படியாவது காரை வழிமறித்து முல்லையிடம் ஒரு வார்த்தை பேசிவிட வேண்டும் என்ற தவிப்போடு புல்லட்டை இன்னும் வேகமாய் முடுக்கினான் செந்தூரன்.

முன்னால் சென்று கொண்டிருந்த காரின் பின் சீட்டில், தன் அடிபட்ட காலை அசைக்கக் கூட முடியாமல் வேதனையோடு அமர்ந்திருந்தாள் முல்லை. காதுகளுக்குள் புல்லட் வண்டியின் சத்தம் கணீர் என்று கேட்கவும், அவளது இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

காரின் பின் பக்கக் கண்ணாடி வழியே சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அங்கே, தன் புல்லட்டில் பிடிவாதமாக தங்களை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த செந்தூரனைக் கண்டதும் அவளுக்குள் பயமும் தவிப்பும் ஒட்டுமொத்தமாகத் தலைக்கேறியது.

‘ஐயோ சின்னையா!… ஏன் இப்படிப் பிடிவாதமா வண்டிக்குப் பின்னாடியே வர்றீங்க? அப்பாவுக்கு ஏற்கனவே உங்க குடும்பத்து மேல ஏதோ பெரிய கோபம் இருக்கு. இப்பவும் நீங்க பின்னாடியே வர்றதை அவர் பார்த்தா, விஷயம் இன்னும் பெருசாகிடுமே! உங்களுக்கு புண்ணியமா போகட்டும்… வண்டியை திருப்பிட்டு ஊருக்குப் போயிடுங்க சின்னையா…’ என்று மனதுக்குள் நினைத்தபடி, அவளது கண்கள் கலங்கி நனைந்தன.

முன் சீட்டில் அமர்ந்திருந்த மருதப்பன், தன்‌ நெஞ்சில் ஏறியிருந்த ஆத்திரத்தோடு கார் ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டு வந்தார். காரின் பக்கவாட்டுக் கண்ணாடியில் புல்லட் வண்டியின் பிம்பம் தெரிந்தது. உற்றுப் பார்த்தவருக்கு, பின்னாடி வருவது பெரியசாமியின் மகன் செந்தூரன் தான் என்பது புரிந்தது.

அவனது பிடிவாதமும், கார் பின்னாடியே துரத்தி வரும் துணிச்சலும் மருதப்பனின் கோபத்தை இன்னும் அடுக்களையாக மூட்டியது.

“தம்பி! வண்டியை இன்னும் வேகமா ஓட்டுப்பா…” என்று டிரைவரிடம் கடுகடுத்தவர், அப்படியே பின் சீட்டில் அமர்ந்திருந்த முல்லையின் பக்கம் திரும்பினார். அவளது கலங்கிய கண்களையும், பதற்றத்தையும் பார்த்த மருதப்பனின் குரல் இன்னும் கடினமானது.

“முல்லை! என்கிட்ட எதையும் மறைக்காம உண்மையைச் சொல்லு. வீரமலைப்பட்டி அரண்மனைக்காரனுக்கும் உனக்கும் எப்படிப் பழக்கம்? நீ வேலை பாக்குற ஸ்கூலுக்கு அவன் ஏன் வரணும்? உன்னைத் தேடி ஆஸ்பத்திரி வரைக்கும் வந்து வம்பா நிக்கிற அளவுக்கு அவனுக்கும் உனக்கும் நடுவுல என்ன பேச்சு வேண்டி கிடக்கு?” என்று மருதப்பன் அதட்டலோடு கேட்க… முல்லை பதில் சொல்ல முடியாமல் தவித்தாள்!

அப்பாவின் அந்த ஆக்ரோஷமான கேள்விக்கு முன்னால் அவளது வாய் ஒட்டுமொத்தமாக அடைத்துப் போனது. ‘சின்னையா எனக்கு பாதுகாப்பு கொடுத்தாரு, நேத்து ராத்திரி கூட வீட்டு வாசல்ல வந்து நின்னாரு’ என்ற உண்மையைச் சொன்னால், அப்பா இப்போதே காரை நிறுத்திவிட்டு செந்தூரனிடம் சண்டைக்குப் போய்விடுவார் என்ற பயம் அவளை வாட்டியது.

தந்தையின்  கோபமான பார்வை தன் முகத்தையே துளைத்துக் கொண்டிருக்க, முல்லை தன் கைகளை இறுக்கமாகப் பிசைந்தபடி, ஜன்னல் பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டு மௌனமாக விம்மினாள். அவளது தவிப்பும், பதிலளிக்காமல் அழும் அந்த மௌனமும் மருதப்பனுக்கு இன்னும் எரிச்சலை ஊட்டியது.

 

“கேக்குறேன்ல முல்லை… வாய் திறந்து சொல்லு! அவன் யாருன்னு தெரிஞ்சுதான் பேசினியா, இல்ல அவன் அரண்மனை வாரிசுன்னு தெரிஞ்சும் என்கிட்ட மறைச்சியா? என்கிட்ட உண்மையைச் சொல்லப் போறியா இல்லையா? நான்  ஊருல யார்கிட்டயும் அதிகம் பேச்சு வைச்சுக்க கூடாதுனு தானே உன்னை அனுப்பி வைச்சேன்?” என்று மருதப்பன் காரின் உள்ளே கத்த…

அதேநேரம், பின்னாடி புல்லட்டில் வந்து கொண்டிருந்த செந்தூரன், காரின் வேகத்திற்கு இணையாக தன் வண்டியை முந்தப் பார்ப்பது சைடு மிரரில் தெரிந்தது.

கார் விறுவிறுவென வந்து மருதப்பனின் வீட்டு வாசலில் நின்றது. வண்டி நின்ற அடுத்த விநாடியே முன் சீட்டில் இருந்து இறங்கிய மருதப்பன், பின் கதவைத் திறந்து முல்லையின் பக்கம் வந்தார்.

அவளுக்கு காலில் அடிபட்டு நடக்க முடியாமல் தவிப்பது அவரது மனதைக் குடைந்தது. உள்ளுக்குள் அரண்மனை வாரிசின் மீதான ஆத்திரமும் பதற்றமும் எரிமலையாய் கொதித்துக் கொண்டிருந்தாலும், பெத்த மகள் என்ற பாசம் அவரைத் தடுத்தது. அவசரப்பட்டு அவளை இழுக்காமல், அவளது கையை மிகவும் மெதுவாக பிடித்து காரில் இருந்து இறக்கினார்.

“மெதுவா கால் வச்சு வாம்மா…” என்று குரலில் பாசத்தைக் காட்டினாலும்,அவரோட முகம் கோபத்தில் இறுகிப்போய்த்தான் இருந்தது.

அவளைத் தாங்கிப் பிடித்தபடி மிகவும் மெதுவாக வீட்டுக்குள் கூட்டிக்கொண்டு போனார். ஹால் சோபாவில் அவளைப் பத்திரமாக உட்கார வைத்தவர், அதற்கு மேல் தன் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்…

“இப்போ சொல்லு முல்லை! அந்தப் பையன் எதுக்கு உன்னைத் தேடி ஆஸ்பத்திரிக்கு வரணும்? இப்போ கார் பின்னாடியே எதுக்கு உன்னை பின்தொடர்ந்து வரணும்? அவனுக்கும் உனக்கும் அப்படி என்ன பழக்கம்?” என்று மருதப்பன் தன் நெஞ்சுக்குள் எரியும் கோபத்தோடு அதிகாரக் குரலில் கேட்க…

முல்லை பயத்தில் தன் கைகளை இறுக்கமாகப் பிசைந்து கொண்டு, “அப்பா… அது… நான்… நான் சின்னையாவை…” என்று மேற்கொண்டு வார்த்தை வராமல் திக்கித் திணறிப் பேச ஆரம்பிக்கும் போதே…

வீட்டின் நிலைப் படியைத் தாண்டி கம்பீரமாக உள்ளே நுழைந்தான் செந்தூரன்!

அவளது பதிலை எதிர்பாராமல் நேராக சோபாவுக்கு அருகில் வந்தவன், மருதப்பனின் கோபப் பார்வையை சற்றும் சட்டை செய்யாமல், முல்லையின் முகம் நோக்கி தன் பார்வையைத் திருப்பினான். அவனது கண்களில் அவளுக்கான தவிப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.

“இப்போ கால் வலி எப்படி இருக்கு முல்லை?” என்றவன், அவள் காலை ஒரு முறை பார்த்து விட்டு அவளது பதிலை எதிர்பாராமல், அப்படியே சட்டென்று திரும்பி மருதப்பனின் கண்கள் நிலைகுத்தும்படி நேருக்கு நேர் ஏறிட்டுப் பார்த்தான்.

“மாமா! நீங்க கேக்குற கேள்விக்கு அவகிட்ட பதில் இல்லை, என்கிட்ட இருக்கு. நான் உங்க பொண்ணு முல்லையை விரும்புறேன்! எனக்கு அவளை ரொம்பப் பிடிச்சிருக்கு… முல்லைக்கும் என்னைய பிடிச்சிருக்கு. இதுல மறைக்கிறதுக்கு எதுவுமே இல்லை. முறைப்படி எங்க வீட்டுல வந்து உங்ககிட்ட பொண்ணு கேட்கப் போறேன். அதுக்கு முன்னாடி… நீங்க எங்க அப்பாவோட பேரை கேட்டதும் எதுக்காக இப்படி பதறிப்போய் கோபப்படுறீங்கன்னு எனக்கு தெரிஞ்சாகணும்!” என்று பிடிவாதமாக கேட்டுவிட்டு, மருதப்பனின் பதிலுக்காக நெஞ்சை நிமிர்த்தி நின்றான் செந்தூரன்.

தன் வாழ்க்கையையே அடியோடு சாய்த்த அரண்மனை பெரியசாமியின் மகன் தன் மகளை காதலிக்கிறேன் என்று தன் வீட்டுக்குள்ளேயே வந்து, அதுவும் தன்னை மாமா என்று உரிமையோடு நெஞ்சை நிமிர்த்தி சொல்வதைக் கேட்ட மருதப்பனுக்கு, தலைக்கு ஏறிய கோபத்தில் ஒட்டுமொத்த உலகமே ஒரு நொடி சுழல்வது போல் இருந்தது!

“யாரடா மாமான்னு கூப்பிடுற? ஒழுங்கு மரியாதையா என் வீட்டை விட்டு வெளியே போயிருடா!” என்று ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற மருதப்பன், பாய்ந்து வந்து செந்தூரனின் சட்டையைப் பிடித்து உலுக்கினார்.

இந்த நேரம் வேற யாராவது செந்தூரனின் சட்டையைப் பிடித்திருந்தால், அவர்களை இந்நேரம் உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பான் வீரமலைப்பட்டி வாரிசு. ஆனால், முன்னால் நிற்பது தன் காதலியின் தந்தை என்ற ஒரே காரணத்திற்காக அவன் தன் கோபத்தை அப்படியே விழுங்கினான்.

அவனது  கண்கள் லேசாகச் சிவக்க, மருதப்பனின் கையைப் பிடித்து விலக்காமல், தன் குரலை மட்டும் சற்றே தளர்த்திப் பேசினான்.

“கையை எடுங்க மாமா… காதலிக்கிறது ஒன்னும் குத்தம் இல்லையே! முல்லையை என் மனசுக்குப் பிடிச்சுப்போய் இருக்கு, அதான் நேர்ல வந்து உங்ககிட்டயே கேக்குறேன். உங்க பொண்ணை எனக்கு கட்டிக் கொடுங்க மாமா… காலம் முழுக்க அவளை கண் கலங்காம வச்சுக் காப்பாத்த என் உடம்புலயும் மனசுலயும் தெம்பு இருக்கு!” என்று தன் நெஞ்சில் இருக்கும் உண்மையை அப்பட்டமாக எடுத்துரைத்தான் செந்தூரன்.

ஆனால், மருதப்பனோ அரண்மனை என்ற பெயரைக் கேட்ட வெறியிலும், பழைய நினைவுகளின் ஆத்திரத்திலும் எதையும் கேட்கும் நிலையில் இல்லை.

“நிறுத்துடா! உன் அப்பனைப் போல அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்பட்டுத் திரியுறவன் வீட்டுக்கு என் பொண்ணைக் கொடுக்க முடியாது! உன் அப்பன்… ஒரு உயிரை அநியாயமா எடுத்தவன்டா! அவன் வீட்டுக்கா என் பொண்ணை அனுப்பி வைப்பேன்? இந்த நிமிஷம் இங்க நின்னு பேச உனக்கு எந்த அனுமதியும் கிடையாது… வெளியே போடா!” என்று கத்திய மருதப்பன், செந்தூரனின் கையைப் பிடித்து ஆக்ரோஷமாக வாசலுக்கு வெளியே தள்ளி, கதவை ‘டொம்’ என்று சாத்தி தாழ்ப்பாள் போட்டார்.

வீட்டுக்குள் சோபாவில் அமர்ந்திருந்த முல்லை, கதறி அழுதபடியே எழுந்து வர முயன்றாள்.

 

“அப்பா! ஏன்ப்பா சின்னையாவை இப்படித் தள்ளிவிட்டீங்க? அவர் ரொம்ப நல்லவருப்பா… என்னை எத்தனையோ கெட்டவங்ககிட்ட இருந்து காப்பாத்தியிருக்காரு. எனக்கு அவர் வேணும்ப்பா!” என்று நெஞ்சு உருக தேம்பித் தேம்பி அழுதாள் முல்லை.

பெரியசாமியின் மகன் என்று தெரிந்தும், தன் மகள் அவனுக்காகப் பரிந்து பேசி, எனக்கு அவன் வேணும் என்று கதறுவதைக் கேட்ட மருதப்பன் நெஞ்சில் சுருக்கென்று தைத்த வலியோடு, அப்படியே அதிர்ச்சியில் சிலையாக உறைந்து போய் நின்றார்!

முல்லையின் அழுகைச் சத்தமும், அவளது தவிப்பும் மருதப்பனின் நெஞ்சை என்னவோ செய்தது. சிலையாக உறைந்து நின்றவர் மெதுவாக தன் பார்வையை மகள் பக்கம் திருப்பினார். கோபத்தால் சிவந்திருந்த அவரோட கண்கள் இப்போ கடந்த கால வலியால் கலங்கியிருந்தன.

நெஞ்சுக்குள் இருபது வருடங்களாக பூட்டி வைத்திருந்த பாரம் தாங்காமல், மெல்ல நடந்து வந்து முல்லையின் அருகில் அமர்ந்தவர். மகளது  இரு கைகளையும் தன் கைகளுக்குள் இறுக்கமாகப் பொத்திக் கொண்டார்.

“முல்லை! அழாதம்மா… நீ நல்லவன்னு சொல்ற  செந்தூரனோட அரண்மனை, பரம்பரை, ஊருக்கு வேணா தர்மபிரபுக்களா வாழலாம். ஆனா, அவங்க கௌரவத்துக்குப் பின்னாடி ஒரு நேர்மையான உசுரோட ரத்தம் உறைஞ்சு கிடக்கு! இன்னைக்கு நீ தாய் இல்லா பிள்ளையா நிக்கிறியே… உன் அம்மாவோட சாவுக்குக் காரணமே அந்தப் பாவி பெரியசாமியும், அவனோட அரண்மனைப் பங்காளிகளும் தான்!” என்று மருதப்பன் வெடித்தார்.

தந்தையின்  வாயில் இருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டதும் முல்லைக்குத் தூக்கி வாரிப்போட்டது. நெஞ்சு படபடவென அடிக்க, அழுகை சட்டென்று நின்றுபோக, அதிர்ச்சியில் கண்கள் விரிவடைய தந்தையை  வெறித்துப் பார்த்தாள்.

 

“அ… அப்பா… என்னப்பா சொல்றீங்க? அம்மா சாவுக்கு அரண்மனைக்காரங்க தான் காரணமா?” என்று முல்லையின் குரல் நடுக்கத்தில் தழுதழுத்தது.

மருதப்பன் தன் பார்வையை தூரக் கூரை நோக்கித் திருப்பி, இருபது வருடப் பழைய நினைவுகளுக்குள் மூழ்கினார்.

“ஆமா முல்லை… உன் அம்மா மரகதம் இந்த ஊருக்கு நேர்மையான கிராம நிர்வாக அலுவலரா வேலை பார்த்தா. ஊர் நிலம், பட்டா மாறுதல், அரசாங்க நிதிப் பங்கீடுன்னு எல்லாத்துலயும் நடந்த பெரிய முறைகேடுகளை தன்  முயற்சியால கண்டுபிடிச்சா. ஆனா, அந்தப் பெரிய முறைகேட்டுக்கு நடுவுல நின்னது யாரு தெரியுமா?  அரண்மனை பெரியசாமியோட சொந்தப் பங்காளி சின்னக்கண்ணு!

விஷயம் பெரியசாமிக்குத் தெரிஞ்சதும், அவரே நேர்ல வந்து உன் அம்மாகிட்ட பேசினாரு. எனக்கு இன்னமும் அது அச்சு அசலா ஞாபகம் இருக்கு முல்லை…” என்று மருதப்பன் சொல்லச் சொல்ல, இருபது வருடங்களுக்கு முந்தைய அந்தக் காட்சி முல்லையின் கண் முன்னே விரிந்தது.

 

இருபது வருடங்களுக்கு முன்னால்…

 

அரசு அலுவலகத்தின் சிறிய மேஜையில் இருந்த அரசாங்க கோப்புகளை தீவிரமாக சரிபார்த்துக் கொண்டிருந்தார் முல்லையின் அம்மா மரகதம். அப்போது அலுவலக வாசலில் அரண்மனை கார் வந்து நின்ற சத்தம் கேட்டது. உள்ளே கம்பீரமாக நுழைந்தார் பெரியசாமி.

அரண்மனைப் பெரிய மனிதர் தன் அலுவலகத்திற்குள் வந்ததும், மரகதம் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றார். “வாங்க ஐயா… என்ன இந்தப்பக்கம்?” பெரியசாமி நிதானமாக  நாற்காலியில் அமர்ந்து, மரகதத்தை நேருக்கு நேர் பார்த்தார். “மரகதம்மா… நீங்க நேர்மையான அதிகாரிங்கிறது இந்த வட்டாரத்துக்கே தெரியும். ஆனா, இப்போ நீங்க கையில் எடுத்திருக்கிற கூட்டுறவு நில முறைகேடு ஃபைல்ல… என் பங்காளி சின்னக்கண்ணுவோட பேரும் சம்பந்தப்பட்டிருக்கு. உண்மை வெளில வந்தா எங்க அரண்மனை கௌரவமே கப்பலேறிடும். எனக்காக அந்த  ஃபைலை மட்டும் கொஞ்சம் மூடி வைக்க முடியுமா?” என்று நேரடியாகவே கேட்டார்.

மரகதம் சற்றும் தயங்காமல், “ஐயா, நீங்க ஊருக்குப் பெரியவங்க… உங்க மேல எனக்கு மதிப்பு இருக்கு. ஆனா, அரசாங்க நிலத்தை ஏழை ஜனங்களுக்குச் சேரவிடாம உங்க பங்காளி பண்ணியிருக்கிற முறைகேடு சாதாரணக் குத்தம் இல்லைங்க ஐயா.  என் கடமையிலிருந்து நான் தவற முடியாது. ஃபைல் ஏற்கனவே மேலதிகாரிகளுக்கு போகத் தயாரா இருக்கு. இதை என்னால மாத்த முடியாதுங்க ஐயா!” என்று கறாராக மறுத்துவிட்டார்.

பெரியசாமி ஒரு நிமிடம் மௌனமாக மரகதத்தைப் பார்த்தார். அவரது முகம் இறுகினாலும், “உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு மரகதம்மா. ஆனா, என் பங்காளிங்க சும்மா இருக்க மாட்டாங்களேங்கிறது தான் என் கவலை. பார்த்து நடந்துக்கோங்க…” என்று எச்சரிக்கையான தொனியில் சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

மருதப்பனின் குரல் மீண்டும் ஆத்திரத்திலும் வேதனையிலும் நடுங்கத் தொடங்கியது.

“பெரியசாமி அன்னைக்கு நேரடியா வந்து பேசியும் உன் அம்மா கேட்கல. விஷயம் பெரியசாமிக்கு மிஞ்சி அவனோட பங்காளி சின்னக்கண்ணு கைக்குப் போச்சு. உண்மை வெளில வந்தா தங்களுக்கு ஜெயில் தண்டனை நிச்சயம்னு தெரிஞ்சதும், அந்தப் பாவிங்க சதித் திட்டம் தீட்டுனாங்க. ஒருநாள் ராத்திரி உன் அம்மா டவுனுக்கு போயிட்டு வரும்போது, ஆட்களை வச்சு  லாரியை விட்டு உன் அம்மா மேல மோதி… அவ உசிரையே எடுத்துட்டானுங்க! அந்தப் பாவிங்க அவ உயிரையே அப்படியே முடிச்சு விட்டுட்டானுங்கடி!”

ஊருக்குள்ள அது சாதாரண ரோடு விபத்துன்னு பேசி முடிச்சிட்டாங்க. அரண்மனை அதிகாரமும் போலீஸும் சேர்ந்துகிட்டு அதை விபத்துன்னு‌ கேஸை முடிச்சது மட்டுமில்லாம, என் மேல இல்லாத பழியை சுமத்தி என்னை இந்த ஊரை விட்டே துரத்தினானுங்க!” மருதப்பனின் கண்ணில் இருந்து இரு துளிக் கண்ணீர் கன்னத்தில் வழிந்தோடியது.

“பெரியசாமிக்கு முழுசாத் தெரியாம அவனோட பங்காளி சின்னக்கண்ணு செஞ்ச சதிதான் உன் அம்மாவோட மரணம்! அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல உன் அம்மா உசிரு பிரிஞ்சு கிடக்கு… அப்போ உனக்கு வெறும் மூணு வயசு தான் முல்லை! அம்மாவுக்கு என்னாச்சு ஏதாச்சுன்னு கூடத் தெரியாம, ‘அம்மா… அம்மா…’ அவ சேலையை பிடிச்சு நீ அழுதுகிட்டே இருந்த கண்ணு!” என மருதப்பன் தன் நெஞ்சைத் தட்டி தட்டி விம்மினார்.

“அம்மா இறந்தது கூடத் தெரியாம அழுதுகிட்டே இருந்த அந்த மூணு வயசுப் பச்சை புள்ளையை… உன்னைத்தான் நெஞ்சோட அணைச்சுத் தூக்கிக்கிட்டு, இந்த ஊர்லயும் இருக்க முடியாம, தலைக்கு மேல செய்யாத பழியையும் சுமந்துகிட்டு அநாதையா நான் ஊரை விட்டு வெளியே வந்தேன்! அன்னைக்கு உன்னைத் தூக்கிட்டு அலைஞ்ச அலைச்சல் எனக்குத் தான் தெரியும் முல்லை. அப்படி தன் கௌரவத்துக்காக நேர்மையா வாழ்ந்த என் பொண்டாட்டியோட உயிரை எடுத்தவன் வீட்டு வாரிசு தான் இந்தச் செந்தூரன்! என் உசுரே போனாலும் அந்த அரண்மனை வாசற்படியை உன்னை மிதிக்க விடமாட்டேன்!” என்று மருதப்பன் வேதனையோடு கத்த…

தந்தை கூறிய உண்மைகளின் அதிர்ச்சியிலும், அப்பாவின் கண்ணீரிலும் முல்லை ஒட்டுமொத்தமாக உடைந்து போய், அப்படியே சோபாவில் சாய்ந்து கதறி அழுதாள்.

செந்தூரனின் காதுகளில் “உன் அப்பன் ஒரு உயிரை அநியாயமா எடுத்தவன்டா!” என்ற வார்த்தைகள் அவனது நெஞ்சுக்குள் சம்மட்டியால் அடிப்பது போல ஒலித்துக் கொண்டே இருந்தன.

தன்  தந்தை பெரியசாமி ஊருக்கே நியாயம் சொல்லும் பெரிய மனிதர். அவர் எப்படி ஒரு உசிரை எடுக்க முடியும்? சும்மா பரம்பரை கெளரவம், அரண்மனைப் பெருமை என்று தன்னை மிரட்டுவாரே தவிர, ஒரு உசிரை எடுக்கக் கூடிய மனிதர் அவர் அல்லவே! இதில் ஏதோ பெரிய உண்மை மறைந்திருக்கிறது என்பதை அவனது மனம் ஆழமாக உணர்ந்தது.

தன் கைகளை இறுக்கமாகக் குவித்துக்கொண்டு ஒரு நிமிடம் யோசித்தவன், விறுவிறுவென புல்லட்டை நோக்கி நடந்தான். வண்டியை சட்டென்று ஸ்டார்ட் செய்து, அரண்மனையை நோக்கி வண்டியைத் திருப்பினான். தன் குடும்பத்தின் மீது விழுந்த பழிக்கு அவனது அப்பா காரணமா? அல்லது பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா? என்று துப்புத் துலக்க, அவனது புல்லட் காற்றில் சீறிப் பாய்ந்தது!

146 thoughts on “நெஞ்சோரம் பூத்தவளே 11”

  1. nuevos casinos online EspaГ±a, [url=http://altaim.cafe24.com/promociones-rapidas-para-depositos-aumenta-tu/]http://altaim.cafe24.com/promociones-rapidas-para-depositos-aumenta-tu/[/url] – Los Гєltimos casinos online EspaГ±a estГЎn tomando la industria del juego por gran interГ©s. Ofrecen juegos innovadores y promociones.

  2. Online Casino UK, [url=https://mijalflamenco.com/step-by-step-guide-to-seybet-casino-registration-8/]https://mijalflamenco.com/step-by-step-guide-to-seybet-casino-registration-8/[/url] is emerging as a favored destination for gamblers. With the development of technology, users can explore a huge assortment of games from the comfort of their abodes.

  3. Андрей Нехаев — один из самых авторитетных SEO-экспертов Рунета с более чем десятилетним опытом продвижения сайтов в Google и Яндекс. Специалист обеспечивает комплексный вывод бизнеса в ТОП поисковой выдачи, снижает стоимость лида до 40% за счёт точной настройки Яндекс.Директ и глубокого поведенческого анализа. На сайте https://andrey-nekhaev.ru/ можно ознакомиться с реальными кейсами, заказать SEO-консалтинг и изучить авторские книги-бестселлеры, включая «SEO для Яндекс» и «Быстротоп 2.0», ставшие практическими руководствами для тысяч маркетологов.

  4. Creating engaging reports for instagram, [url=https://konkurs.kalendarzrolnikow.pl/discover-the-best-instagram-unfollow-app-for-2023/]https://konkurs.kalendarzrolnikow.pl/discover-the-best-instagram-unfollow-app-for-2023/[/url] is essential for reviewing your account’s performance. By employing various tools, you can acquire insights on subscribers and content. This helps in improving your strategy.

  5. The website, Vanuatu Passport Cost Website, [url=https://rplus-tantei.com/2026/06/06/complete-guide-to-vanuatu-passport-cost-and-application-process/]https://rplus-tantei.com/2026/06/06/complete-guide-to-vanuatu-passport-cost-and-application-process/[/url], provides crucial data about costs concerning obtaining a Vanuatu passport. Investigate the solutions are available today!

  6. Online Casino, [url=https://www.livogledelse.dk/?p=27873]https://www.livogledelse.dk/?p=27873[/url] – Online Casino предоставляет участникам уникальную возможность испытать азарт РІ комфортном формате. Разнообразный выбор РёРіСЂ, щедрые Р±РѕРЅСѓСЃС‹ Рё шанс играть РІ любое время делают Online Casino популярным среди любителей азартных развлечений.

  7. casinos online sin licencia EspaГ±a, [url=https://www.storiedaerebor.it/limites-flexibles-para-apuestas-como-mejorar-tu/]https://www.storiedaerebor.it/limites-flexibles-para-apuestas-como-mejorar-tu/[/url] – Los plataformas de azar online sin licencia EspaГ±a han ganado renombre en los Гєltimos aГ±os. Aunque ofrecen promociones atractivos, la ausencia de regulaciГіn puede traer peligros para los jugadores. Es vital investigar antes de apostar.

  8. In the domain of Casino Online Games, [url=https://blend1047.com/explore-the-exciting-world-of-slots-islands-casino-12/]https://blend1047.com/explore-the-exciting-world-of-slots-islands-casino-12/[/url], players can explore a variety of exciting options. Starting with slots to table games, each offers individual experiences. The excitement of winning captures players engaged and keen for more. Join Casino Online Games today!

  9. pg slot
    ปฏิวัติวงการสล็อตออนไลน์ปี 2026: เทคโนโลยีใหม่กับอนาคตของ iGaming

    วงการเกมสล็อตออนไลน์ยังเติบโตอย่างแข็งแกร่งในปี 2026 ผ่านการนำเทคโนโลยีสมัยใหม่มาปรับปรุงแพลตฟอร์มอย่างต่อเนื่อง

    การเข้าถึงเกมสามารถทำได้ตลอดเวลาผ่านอุปกรณ์หลากหลายประเภท โดยสามารถเชื่อมต่อได้จากทุกที่

    สล็อตออนไลน์ยุคใหม่

    เกมสล็อตในปัจจุบันได้รับการพัฒนาให้มีกราฟิกสามมิติ ระบบเสียงคุณภาพสูง และฟีเจอร์โบนัสที่ซับซ้อนมากขึ้น

    เกมจำนวนมากมาพร้อมระบบแจ็คพอตสะสมและฟีเจอร์พิเศษต่าง ๆ ส่งผลให้ประสบการณ์โดยรวมมีความสมจริงและน่าสนใจยิ่งขึ้น

    Direct API มีความสำคัญอย่างไร

    Direct API เป็นรูปแบบการเชื่อมต่อข้อมูลแบบตรงระหว่างผู้ให้บริการและเกม ช่วยลดความล่าช้าในการส่งข้อมูลและเพิ่มเสถียรภาพของระบบ

    ข้อดีของการเชื่อมต่อแบบ Direct API ได้แก่

    ลดความหน่วงของระบบ
    รองรับทราฟฟิกสูง
    ส่งข้อมูลแบบเรียลไทม์
    ลดโอกาสเกิดปัญหาระบบ
    เพิ่มความยืดหยุ่นในการพัฒนา

    เทคโนโลยีนี้มักทำงานร่วมกับ Cloud Infrastructure ที่สามารถขยายทรัพยากรได้ตามปริมาณผู้ใช้งาน

    ระบบ RNG และความโปร่งใส

    RNG เป็นระบบสุ่มผลลัพธ์ที่ใช้ในเกมสล็อต

    แต่ละรอบการเล่นจึงเป็นอิสระจากกันและไม่สามารถคาดเดาผลลัพธ์ล่วงหน้าได้

    ระบบ RNG มาตรฐานต้องผ่านการรับรองจากองค์กรภายนอก เพื่อยืนยันความโปร่งใสและความเป็นธรรมของเกม

  10. Извиняюсь, но это не совсем то, что мне нужно.
    roulette not on gamstop, [url=https://sport.chibchadigital.com/2026/04/21/online-roulette-without-gamstop-discover-the/]https://sport.chibchadigital.com/2026/04/21/online-roulette-without-gamstop-discover-the/[/url] offers players the chance to enjoy an exhilarating gaming experience without restrictions. Gamblers can explore various selections and strategies in authentic casinos. This liberty makes for an stimulating way to test luck and skill.

  11. Welcome to the Vanuatu Passport Price Website, [url=https://hoshavitality.com/vanuatu-passport-price-comprehensive-guide-and-insights/]https://hoshavitality.com/vanuatu-passport-price-comprehensive-guide-and-insights/[/url], where one can find details about pricing associated with obtaining a passport from Vanuatu. Discover various options and criteria to assist you in your journey.

  12. casinos online nuevos, [url=http://www.shitara-trail.jp/%e6%9c%aa%e5%88%86%e9%a1%9e/189377.html]http://www.shitara-trail.jp/%e6%9c%aa%e5%88%86%e9%a1%9e/189377.html[/url] – Los sitios online nuevos han crecido mucha notoriedad en los Гєltimos tiempos. Ofrecen descuentos atractivas y diversiones innovadores. AdemГЎs, la esencial del usuario se optimiza continuamente.

  13. In the realm of Casino Online, [url=http://tuparejaal100.com/2026/06/09/explore-the-exciting-world-of-spin-million-casino-2/]http://tuparejaal100.com/2026/06/09/explore-the-exciting-world-of-spin-million-casino-2/[/url], players are able to experience a variety of games. Including slot machines to table games, choices abound for everyone. Participating in online casinos adds adventure to the gaming experience.

  14. проржался норм
    Online casinos offer a variety of gaming experiences, and non gamstop roulette sites, [url=http://social.clikearte.com.ar/2026/04/20/exploring-online-roulette-not-on-gamstop-289491371/]http://social.clikearte.com.ar/2026/04/20/exploring-online-roulette-not-on-gamstop-289491371/[/url] are a great option for players seeking excitement. These platforms provide unique features and selections. Enjoy playing different roulette variants without restrictions, enhancing your gaming experience. Non gamstop roulette sites cater to those looking for freedom and flexibility in their gameplay, making them a top choice for enthusiasts. On these sites, you can discover new strategies and methods. Don’t miss out on the thrill and potential to win big!

  15. ทดลองเล่นสล็อต pg
    อนาคตของสล็อตออนไลน์ในปี 2026: วิวัฒนาการของ API ในอุตสาหกรรม iGaming

    วงการเกมสล็อตออนไลน์ยังเติบโตอย่างแข็งแกร่งในปี 2026 ด้วยการพัฒนาเทคโนโลยีที่ช่วยยกระดับทั้งประสิทธิภาพ ความเสถียร และประสบการณ์ของผู้ใช้งาน

    การเข้าถึงเกมสามารถทำได้ตลอดเวลาผ่านอุปกรณ์หลากหลายประเภท โดยสามารถเชื่อมต่อได้จากทุกที่

    สล็อตออนไลน์ยุคใหม่

    เกมสล็อตสมัยใหม่มาพร้อมกราฟิก 3 มิติ ระบบเสียงที่สมจริง และโบนัสที่หลากหลายกว่าเดิม

    หลายเกมใช้ระบบ Progressive Jackpot และกลไกพิเศษที่ช่วยเพิ่มความหลากหลายในการเล่น ทำให้รูปแบบการเล่นมีความหลากหลายมากกว่าเดิม

    Direct API มีความสำคัญอย่างไร

    Direct API เป็นรูปแบบการเชื่อมต่อข้อมูลแบบตรงระหว่างผู้ให้บริการและเกม ช่วยลดความล่าช้าในการส่งข้อมูลและเพิ่มเสถียรภาพของระบบ

    ข้อดีของการเชื่อมต่อแบบ Direct API ได้แก่

    ลด Latency
    รองรับผู้เล่นได้จำนวนมาก
    ส่งข้อมูลแบบเรียลไทม์
    เพิ่มความเสถียรในการให้บริการ
    เพิ่มความยืดหยุ่นในการพัฒนา

    เทคโนโลยีนี้มักทำงานร่วมกับ Cloud Infrastructure ที่สามารถขยายทรัพยากรได้ตามปริมาณผู้ใช้งาน

    ระบบ RNG และความโปร่งใส

    Random Number Generator ทำหน้าที่กำหนดผลลัพธ์แต่ละรอบแบบสุ่ม

    แต่ละรอบการเล่นจึงเป็นอิสระจากกันและไม่สามารถคาดเดาผลลัพธ์ล่วงหน้าได้

    RNG ที่มีคุณภาพจะได้รับการตรวจสอบจากหน่วยงานที่เกี่ยวข้อง เพื่อรับรองว่าระบบทำงานอย่างยุติธรรม

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top